Posts Tagged ‘சங்கரன் கோவில்’

நரிப்பையூரில் நரி போல நுழைந்த “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, 30 பெண்களை பலாத்காரம் செய்த கொலைகார பாதிரி!

ஒக்ரோபர் 6, 2016

நரிப்பையூரில் நரி போல நுழைந்த “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, 30 பெண்களை பலாத்காரம் செய்த கொலைகார பாதிரி!

narippaiyur-ramanathapuram-tamilnadu

நரிப்பையூரில் நரி போல நுழைந்த மில்லன் சிங்: நரிப்பையூர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராமநாதபுரம் தெற்கு பகுதியில் கடைசியில் இருக்கின்ற கடற்கரையை ஒட்டிய ஒரு கிராமம். இது காலாடி வட்டாரத்தைச் சேர்ந்த ஊராட்சியாகும். இங்கு மீன் பிடித்தல் மற்றும் பனைத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான கடல் நீரைக் குடிநீராக மாற்றும் ஆலை இங்கு செயல்பட்டு வருகிறது. இப்படி அமைதியாக இருந்த ஊரில் தான், “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, மில்லன் சிங் என்பவன் பிரச்சினையை ஆரம்பித்தான் போலும். இந்த ஆள் இப்பொழுது, சங்கரன்கோவில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சங்கரன்கோவில் பகுதி இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உடலை எரித்ததாக பாதிரியார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்[1]. இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. இருவரும் காவேரிபாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்கிறது தி.இந்து[3].

sayalkudi-bus-standமாற்று திறனாளி பாதிரியார்[4]: நெல்லை அருகில் உள்ள மானூர் உக்கிரன்கோட்டையை சேர்ந்த பாண்டியன் மகன் மிலன்சிங் (Millan Singh  வயது 46). மாற்றுத் திறனாளியான இவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் உள்ள நரிப்பையூரில் ஜீவனுள்ள தேவ சபையின் பாஸ்டராக / பாதிரியாராக இருந்து வந்தார். ஒரு சர்ச் நடத்தி வருகிறார் என்கிறது தி.இந்து[5]. இவருடைய மனைவி ஜீவிதா (40). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த காசிநாராயணன் மகள் காந்திமதி (30) என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.4½ லட்சம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு அவருக்கு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளார். பல நாள்களாகியும் அவர் வேலை வாங்கித்தரவில்லையாம். “அப்பாய்ன்ட்பென்ட் ஆர்டர்” இல்லையென்றால், காந்திமதி பாஸ்டர் மிலன்சிங்கிடம் பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டாராம்[6]. அப்போது அவர் சங்கரன்கோவில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வருமாறும், அங்கு வைத்து பணத்தையும், நகையையும் தருவதாகவும் கூறினாராம். இதையடுத்து 5-10-2016 புதன்கிழமை அன்று காலை காந்திமதி சார் பதிவாளர்அலுவலகம் அருகே வந்து நின்றாராம்[7]. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காந்திமதியை தொடர்பு கொண்ட பாதிரியார் மிலன்சிங், சங்கரன்கோவிலில் வேலைக்கான ஏற்பாடு செய்திருப்பதாக கூறி காரில் அவரை அழைத்து சென்றார். அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு காரில் இருந்த காந்திமதியை சாலையில் உருட்டி விட்டு மிலன்சிங் தப்பிச் சென்றார்[8]. மாற்றுத் திறனாளி என்றால், இத்தகைய மாற்றுத் திறமைகள் எல்லாம் அதிகமாக இருக்கின்றன போலும்.

m-singh-christian-priest-raped-30-women-tamil-murasu-06-10-2016சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைப்பு: காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிலன்சிங்கை கைது செய்து, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் குறித்து போலீசார் நடத்தியபோது, பல்வேறு பெண்களிடம் அவர் பழகி வேலை வாங்கித் தருவதாக பலகோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாகவும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்கோவில் டவுன் போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுச் செய்தனர். அவரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு, அவரை போலீஸ் காவலில் எடுத்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

m-singh-christian-priest-raped-30-women-dinakaran-06-10-2016கிருஷ்ணகிரி கடத்திச் சென்று கொலை செய்து உடலை எரித்ததாக திடுக்தகவல்கள்: அப்போது, கடந்த ஜனவரி மாதம் வேலை தேடி வந்த இளம்பெண்ணிடம் நகை, பணத்தை பெற்றுக் கொண்டு, அவரை கிருஷ்ணகிரி கடத்திச் சென்று கொலை செய்து உடலை எரித்ததாக ‘திடுக்’ தகவலை மிலன் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மிலன்சிங் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஜெ.டி. நகரை சேர்ந்த ஞானம் மகள் அன்புச்செல்லம் (24). ஜி. அன்பு ஸ்டெல்லா [ G. Anbu Stella] என்கிறது தி.இந்து இவர், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது, வீரிருப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் தனியார் மில்லில் காவலாளியாக இருந்துள்ளார். காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறியதை நம்பி, 2 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை அன்புச்செல்லம் கொடுத்தாராம். அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாராம்.

millan-singh-christian-priest-raped-30-women-the-hindu-06-10-2016அன்பு ஸ்டெல்லா இளம்பெண் கர்ப்பம்: படிப்பை முடித்த அன்புச்செல்லம் நெல்லை அருகில் உள்ள தருவையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, ஜே.டி.நகர் பகுதிக்கு மத பிரசாரத்துக்கு சென்றபோது, என்னை தனியாக சந்தித்த அன்புச்செல்வம், தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை தெரிவித்தார். அந்த வாலிபரிடம் பணம், நகையை வாங்கித் தருமாறு என்னிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறிய நான், அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றதை நம்பி, ரூ.2 லட்சம் கொடுத்தார். பின்னர், அவரை எனது மனைவி ஜீவிதாவுடன் தர்மபுரி பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு முயற்சி செய்வதாக கூறினேன். என்னிடம் நெருங்கி பழகினார். அவருடன் உல்லாசமாக இருந்தேன். அவர் கர்ப்பிணியானார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், தனனை திருமணம் செய்து கொள்ளுமாறு நச்சரிக்கத் தொடங்கினார். ஆனால் அவர், மறுத்ததோடு அன்புசெல்லத்தை கொலை  செய்ய திட்டம் தீட்டினார். இதற்கு பாதிரியார் மனைவி ஜீவிதாவும் உடந்தையாக இருந்தார்[9].

milam-singh-christian-priest-raped-30-women-tamil-murasu-06-10-2016அன்பு ஸ்டெல்லா கடத்திக் கொலை: இதனால், அவரை நானும், எனது மனைவியும் காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்து, உடலை எரித்தோம். முகத்தை தவிர உடல் பகுதி முழுவதும் எரிந்து விட்ட நிலையில் காவேரிபாக்கம் நான்குவழிச்சாலையில் உடலை வீசிவிட்டு, சங்கரன்கோவில் பகுதிக்கு திரும்பி வந்து விட்டோம். இதனிடையே அன்புசெல்லத்தை காணவில்லை என அவரது தந்தை ஞானம், குருவிகுளம் போலீசில் புகார் செய்தார்.  இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு  குருவிகுளம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சங்கரன்கோவில் வந்து மிலன்சிங் மனைவி ஜீவிதாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை  காவேரிபாக்கத்திற்கு அழைத்து சென்றனர்[10]. இதனால், காந்திமதியை மோசடி செய்த வழக்கில் இப்போது சிக்கி கொண்டுள்ளேன், என தெரிவித்துள்ளார். இளம்பெண்ணை எரித்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக, மிலன்சிங்கின் மனைவி ஜீவிதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில், கடந்த 3.1.2016–ம் தேதி அன்புச்செல்லத்தை காணவில்லை என, தந்தை ஞானம் நெல்லை மாவட்டம் குருவிகுளம் போலீசாரிடம் புகார் செய்திருந்தது தெரிய வந்தது. அந்த போலீசார் மூலம் அன்புச்செல்லம் புகைப்படத்தை பெற்று, காவேரிபாக்கம் போலீசாருக்கு சங்கரன்கோவில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

milam-singh-christian-priest-raped-30-women-dinakaran-06-10-2016மனைவியிடம் விசாரணை: 05-10-2016 அன்று அந்த புகைப்படத்தையும், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் முகமும் ஒத்துப் போனதாக காவேரிபாக்கம் போலீசார் தெரிவித்தனர். பின்னர், அந்த போலீசார் சங்கரன்கோவில் வந்து நேற்று 05-10-2016 அன்று மாலையில் மிலன்சிங்கின் மனைவி ஜீவிதாவை விசாரணைக்காக காவேரிபாக்கம் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் அன்பு ஸ்டெல்லாவை கொன்றது, இத்தம்பதியர் தான் என்று ஊர்ஜிதம் ஆனது. ஜீவிதா, தன் கணவனுக்கு துணையாக இருந்ததும் தெரிய வந்தது. இப்படி ஒரு பெண்ணே பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது திகைப்பாக இருக்கிறது. மேலும், சர்ச், பாஸ்டர், ஊழியம் போன்றவற்றையும், இதற்காக உபயோகப்படுத்தியது, மேலும் ஆச்சரியமாக இருக்கிறது.

30–க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி[11]: பாதிரியார் மிலன்சிங், இதே போல், நெல்லை, பாளை, அம்பை, வி.கே.புரம் பகுதியில்  வேலை வாங்கித் தருவதாக 30–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகள், பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நெல்லை மாவட்டம் குருவிகுளம் போலீசார், பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மிலன்சிங்கை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவரிடம் ஏமாந்த பெண்கள் குறித்த பட்டியலும் தாயாரிக்கப்பட்டு வருவதாகவும், வேறு எந்த பெண்ணையாவது அவர் கொலை செய்திருக்கிறாரா? என்றும் தீவிர விசாரணையில் தான் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[12].

© வேதபிரகாஷ்

06-10-2016

[1] நெல்லை.ஆன்லைன், சங்கரன்கோவில் பெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் கைது : 30 பெண்களை ஏமாற்றியது அம்பலம், புதன் 5, அக்டோபர் 2016 6:52:26 PM (IST)

[2] http://www.nellaionline.net/view/31_126301/20161005185226.html

[3]  Kaveripakkam police arrested Millan Singh and Jeevitha.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/pastor-arrested-for-sexual-assault-murder-of-woman/article9190369.ece

[4] தினத்தந்தி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சங்கரன்கோவில் இளம்பெண்ணை கடத்தி கொலை செய்து உடலை எரித்த பாதிரியார் உடந்தையாக இருந்த மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை, பதிவு செய்த நாள்: செவ்வாய், அக்டோபர் 04,2016, 9:44 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 1:00 AM IST.

[5] Millan Singh (46), a differently abled preacher from Ukkirankottai near Manur, was running a church at Narippaiyur in Ramanathapuram district.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/pastor-arrested-for-sexual-assault-murder-of-woman/article9190369.ece

[6] தினமணி, மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம், நகை மோசடி: சங்கரன்கோவிலில் பாஸ்டர் கைது , By DIN  |   Last Updated on : 22nd September 2016 07:47 AM.

[7] http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/sep/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2568829.html?pm=378

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/04214414/Kidnapped-young-woman-KillPastor-burnt-body.vpf

[9] தினகரன், பெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் 30 பேரை ஏமாற்றி பலாத்காரம்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல், Date: 2016-10-05@ 16:55:45.

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=250496

[11] தமிழ்முரசு, வேலை வாங்கி தருவதாக மோசடிபெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் 30 பேரை ஏமாற்றி பலாத்காரம்; போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல், 10/5/2016,  3:09:39 PM.

http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98760

[12] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98760

 

சர்வேஸ்வரன் கோவில் – சங்கரன் கோவில் வட்டம், சேர்ந்தமரம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்-கோவில் விவகாரம் (2)

நவம்பர் 29, 2013

சர்வேஸ்வரன் கோவில் – சங்கரன் கோவில் வட்டம், சேர்ந்தமரம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்-கோவில் விவகாரம் (2)

இப்பிரச்சினையைப் பற்றிய விவரங்கள் முதல் பதிப்பில் காணலாம்[1]. இங்கு நடக்கும் செயல்களில் இரு குறிப்பிட்ட வடிவத்தை, முறையை, அமைப்பைக் கவனிக்க முடிகிறது. இங்கு கிருத்துவ-இந்துக்களிடையே மட்டுமல்லாது, முஸ்லிம்களிடையேயும் பிரசினை ஏற்பட வாய்ப்புள்ளது. கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இந்துக்களின் மீது தான் தங்களது குறியை வைத்துள்ளார்கள். தங்களது எண்ணிக்கையை வளர்க்கத்தான், எல்லாவிதங்களிலும் செயல்பட்டு வருகிறார்கள்.

சேர்ந்தமரம்அருகேஇந்து, கிறிஸ்தவகோயில்களில்தொடர்திருட்டு: சேர்ந்தமரம் அருகேயுள்ள தன்னூத்து கிராமத்தில் வனமூர்த்தியம்மன் கோயில் அருகே ஊற்றடிமாடசாமி கோயிலும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி குருசாமி பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டி சென்றார். வழக்கம் போல் நேற்று காலை வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த சுமார் அரைபவுன் கொண்ட தங்க தாலி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.மேலும் இக்கோயிலில் இருந்த இரண்டு உண்டியல்களையும் உடைத்து அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருந்த ஊற்றடி மாடசாமி கோயிலில் இருந்த உண்டியலையும் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் நாட்டாண்மை முருகேசன் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார்.இதே போன்று ஆண்டிநாடாரூரில் உள்ள ஆரோக்கிய அன்னதேவ ஆலயத்திலும் ஜன்னல் வழியாக சென்று பீரோவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டதாக சேர்ந்தமரம் பங்குதந்தை அந்தோணி வியாகப்பன் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார். இந்த இருவழக்குகளையும் போலீசார் வழக்குபதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. இதெல்லாம் கூட, ஏதோ திட்டமிட்டு இப்பகுதில் செய்து வருவது போலத்தான் தெரிகிறது.

பஸ்பதேஸ்வரரானவரணாட்சிமலைசிவபெருமான்:    “”சாமி… மத்த இடங்கள்ல எப்படியோ தெரியாது… தண்ணீர் வசதி சுமாரான எங்க பூமியில ரெண்டு போக வெள்ளாமை கிடைக்குதுன்னா, அதுக்குக் காரணமே நாங்க குலதெய்வமா வழிபடுற பஸ்பதேஸ்வரரான வரணாட்சி மலை சிவபெருமான் தான்.”-சிவபெருமானின் மலைக் குகைக் கோவில் இருக்கும் மேற்கு காட்டு திசைப் பக்கம் வணங்கி, நமக்குப் பாதையைக் காட்டினார்கள்- நெல்லை மாவட்டத்தின் சுரண்டைப் பக்கமுள்ள திருமலாபுரம் பஞ்சாயத்துத் தலைவரான ரமேஷும் அவரது நண்பரான ரத்தினமும்.

கி.பி.ஏழாம்நூற்றாண்டில்பல்லவ அரசன் கட்டிவைத்துள்ள குடவரைக் கோவில்: கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்டு வந்த பல்லவப் பேரரசன் தென்பகுதிக்கு வந்தபோது, கும்பம் போன்று அமைந்திருந்த வரணாட்சி மலையைப் பார்த்திருக்கிறான். அடிப்படையில் சிற்பக் கலையில் ஆர்வம் கொண்ட பல்லவச் சக்கரவர்த்தி, மலையைக் குடைந்து சிவலிங்கம், நந்தீஸ் வரர், விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்களைக் குகையிலேயே வடித்தான். மேலும் ருத்ரதாண்டவம் புரியும் சிவபெருமானின் வடிவங்களை உணர்ச்சி நரம்புகள் புடைக்க தத்ரூபமாக தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு குகைக் கோவிலில் அமைத்தான். மக்கள் நடமாட்ட மில்லாத- மரங்களடர்ந்த மலைக்குகையில் அமைக்கப்பட்ட இந்த சிவன் ஆலயம், காலப்போக்கில் மக்களின் பார்வைபட்டு வழிபாட்டுத் தலமானது. நெல்லை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலைக் கோவிலின் அருகில்தான் ஊடறுத்துச் செல்லுகிறது சேர்ந்தமரம்- கடையநல்லூர் சாலை. வெகுகாலம் கவனிப்பாரின்றிக் கிடந்த இந்த குகைக் கோவில் சில காலத்துக்குமுன் அடையாளம் காணப் பட்டு வழிபடப்பட்டு வந் தது. மக்கள் வழிபாட்டின் மூலம் இவ்வாலயம் அரசின் கவனத்துக்கு வந்தது.

இந்தியதொல்பொருள்ஆய்வுத்துறையின் கீழ் வந்த கோவில்: கோவிலைச் சுற்றி வேலி அமைத்து, குகைக் கோவிலைத் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்த இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறை, “மலைப்பக்கம் அத்துமீறவும் கூடாது. மலைக் கோவிலை மாற்றி அமைக்கவோ புதுப்பிக்கவோ கூடாது’ எனவும் தொல்பொருள் துறையின் 1958-ஆம் வருட விதியைச் சுட்டிக்காட்டித் தடை போட்டது. “அரிய கலைப்படைப்புகள் கொண்ட இந்த ஆலயம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. இங்கே அத்துமீறுவோர் தண்டனைக்குள்ளாவார்கள்’ என்று எச்சரித்தது. ஆலயம் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதையடுத்து, மனம் புழுங்கிய திருமலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 23 கிராம மக்களும் தங்களுக்குள் வழிபாட்டு கமிட்டி ஒன்றை அமைத்துக் கொண்டு நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்கள்.

மலைக்கோவிலில்மக்கள்வழிபாடுநடத்ததடைகிடையாது: கண் திறந்த நீதியரசர் மலைக் கோவிலில் மக்கள் வழிபாடு நடத்த தடை கிடையாது என்று தீர்ப்பு வழங்கினார். “இது எங்க ளுக்கு மறுஜென்மம் கிடைத்தது போன்றது” என்கிறார்கள் இப்பகுதி மக்கள். “சர்வேஸ்வரன் உயிர்த்துடிப்பாய் நிற்கும் மலையோடு வடிக்கப்பட்ட சிலை பராமரிப் பின்றி காணப்படுவது எங்களுக்கு வேதனையான மனக்குறை” என்கிற தலைவர் ரமேஷும் ரத்தினமும், “பராமரிப்பு உரிமையை மக்களுக் குக் கொடுத்திருந்தால் இன்று நிலைமையே வேறு. எனினும் பூஜைக்காக ஒரு குழுவை ஏற்படுத்தி சிறப்பாகப் பூஜை செய்து வருகிறோம். கார்த்திகை மற்றும் சிவனுக்கே உரிய பிரதோஷ நாள் பூஜைகளையும் எங்கள் பொறுப்பிலேயே நடத்துகிறோம். அந்த சமயங்களில் சுரண்டை, சேர்ந்தமரம், வலசை, கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள அத்தனை நகர, கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுகிறார்கள். எங்களுக்கு செழிப்பைத் தந்த அந்த சர்வேஸ்வரன் மக்களின் வாட்டத்தையும் போக்கு கிறான்” என்று சொல்லிவிட்டு பிரதோஷ பூஜையில் தீவிரமானார்கள். இங்கு பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ள நிறைய பக்தர்கள் வருவதன் காரணம் என்னவென்று சில பக்தர்களிடம் கேட்டபோது, அவர்கள் உணர்வுபூர்வமாக விவரித்தார்கள். “பொதுவாக எல்லா சிவாலயங்களிலுமே பிரதோஷ வழிபாடு சிறப்பானது தான். ஆனால் இங்கே சிவபெருமான் ருத்திரமூர்த்தியாகவும் சிவலிங்கமாகவும் அமைந்திருக்கிறார். இது வேறு எங்குமில்லாத உலக அதிசயம். அதனால் இங்கு பிரதோஷ வழிபாடு மேலும் சிறப் பானதாக இருக்கிறது” என்றவர்கள், பிரதோஷ வழிபாடு தோன்றிய நிகழ்வையும் உணர்ச்சிப்பெருக்கோடு சொன்னார்கள்.

வரணாட்சிமலைசிவன்கோவில்புராணம்: “தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானின் அனுமதி பெறாமலேயே பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முனைந்தனர். அப்போது கயிறாகப் பயன்படுத்தப்பட்ட வாசுகி என்னும் பாம்பு வலியும் வேதனையும் பொறுக்க மாட்டாமல் ஆலகால விஷத்தைக் கக்கியது. அதன் காரணமாக உலகமே தாங்க முடியாத வெப்பமயமானது. துடித்துப் போன தேவர் களும் அசுரர்களும் சிவபெருமானைச் சரண டைந்து அபயம் வேண்டி நின்றார்கள். மனமிரங்கிய சிவபெருமானும் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தானே உட்கொள்ள, அதுகண்டு மிரண்டுபோன உமையவ ளான பார்வதி தேவி சிவனின் தொண் டையை இறுகப் பற்றி விஷம் தொண்டைக்குக் கீழே செல்லாமல் தடுத்தாள். அதனால் விஷமானது சிவபெருமானின் தொண்டையிலேயே தங்கி விட்டது. அதன் காரணமாக சிவபெருமான் மயக்க முற்றுவிட, அனைவரும் செய்வதறியாமல் பதைபதைத்தார்கள். அனைவரும் சிவனைத் துதித்தார்கள். அப்போது சமய சஞ்சீவியாக வந்த நந்தீஸ்வரர் சிவனின் மயக்கத்தைத் தெளிவிக்க, பிறகே கண் விழித்த எம்பெருமான் அனைவரின்மீதும் கருணைப் பார்வையைப் பதித்தார். உலகைக் காக்க விஷம் உண்ட பெருமான் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்த வேளைதான் பிரதோஷ வேளை. பிரதோஷத்தின்போது சிவபெருமானுக்கும் நந்தீஸ்வரருக்கும் நடக்கும் பூஜையில்- சர்வேஸ் வரன் கண் திறக்கும் வேளையில் பரமனின் பார்வை நம்மீது பதிய வேண்டும்; ஜென்ம சாபல்யம் அடைய வேண்டும் என்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் அலையடிக்கிறது. கர்மசிரத்தையோடு வழிபடுவதுதான் சிறப்பான அம்சம்” என்றார்கள் மெய்சிலிர்க்க.

வரணாட்சிமலைசிவன்கோவில்உச்சியில்புனிதலூர்துஅன்னையின்ஆலயம்கட்டப்பட்டது: வரணாட்சி மலை சிவன் கோவில் உச்சியில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது புனித லூர்து அன்னையின் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதாகவே அமைந்துள்ளது[3]. இப்படி நக்கிரனில் எழுதியுள்ளார். ஆனால், உண்மையில் கோவில் நிலத்தில் கட்டியுள்ள செய்தியை அவர் மறைத்துள்ளார் என்றே தெரிகிறது. போட்டிக்கு, தமது காலனிய ஆதிக்கத்தைக் காட்டிக் கொள்ள, சர்ச்சைக் கட்டி, இந்துக்களையும் மதம் மாற்றி, மதம் மாறிய கிருத்துவர்களை வைத்துக் கொண்டே இந்துக்களை எதிர்க்கும் அளவிற்கு, அவர்களது மனங்களில் துவேசத்தை வளர்த்திருக்கிறார்கள், இப்பொழுதும் வளர்த்துக் கொஇருக்கிறார்கள். முதலில் இதைத் தடுக்க வேண்டும்.

இந்துக்களுக்குப் போட்டியாக தேர்த்திருவிழா நடத்துவது: சேர்ந்தமரம் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய தேர்பவனி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.சேர்ந்தமரம் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய 215வது ஆண்டு திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது[4]. அன்று அசன விருந்து, சிறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாடல்பலி ஆசீர், பூண்டி வர்க்கிஸ் குழுவினரின் தியான வழிபாடு நிகழ்ச்சியும், புனித சின்னப்பர் நற்பணிமன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஆலயத்தில் 120வது ஆண்டு தேர்பவனி திருவிழாவான நேற்று 7ம் நாள் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய தேர்பவனி நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு புனித பீட்டர் நடுநிலைப்பள்ளி, புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சேர்ந்தமரம் பங்குதந்தை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இப்படி கோவில், ஆலயம் என்று சொல்லிக்கொள்வது, கொடியேற்றம், ஆலய  ஆண்டு திருவிழா, தேர்பவனி என்றெல்லாம் நடத்தப் படுவது கிருத்துவத்தில் இல்லை. இருப்பினும் அவை செய்யப்படுகின்றன என்றால், கிருத்துவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தான் அர்த்தம்.

“உள்கலாச்சார மயமாக்கல்” செயல்படுத்தப்படும் முறை: ஆகவே இப்பிரச்சினை பலவிதங்களில், உருவங்களில் ஏற்பட்டு, நிலைத்திருக்கிறது என்று தெரிகிறது. கிருத்துவர்கள் சரித்திர உண்மைகளை புரிந்து கொள்ளாமல் அல்லது சகோதர இந்துக்களுக்கு எதிராக இப்படி “உள்கலாச்சார மயமாக்கல்” என்ற ரீதியில் செய்ல்பட்டுக் கொண்டிருந்தால், மேன்மேலும் பிளவுகள் அதிகம் தான் ஆகும். கால்டுவெல் போன்றோர் இப்பகுதிகளில் முன்பு போட்டு வைத்த விஷவிதைகள் தாம், இப்பொழுது நச்சுமரமாக வளர்ந்துள்ளது. அதமன் நிழலில் வாழும் கிருத்துவர்கள் வெறியர்களாக இருந்தால், பிரச்சினை அதிகமாகத்தான் ஆகும். “சர்வேஸ்வரன்” என்று எப்பொழுதுமே ஜேஹோவாவை, ஏசுவை, கிருத்துவை கிருத்துவர்கள் என்றுமே அழைத்ததில்லை. எனவே, சர்வேஸ்வரனை வைத்துக் கொள்வோம் ஆனால், சிவனை எதிர்ப்போம், கர்த்தர் என்ற வார்த்தையை வைத்துக் கொள்வோம் ஆனால் இந்துக்களை தூஷிப்போம் என்றால் முறையாகாது.

© வேதபிரகாஷ்

29-11-2013