Posts Tagged ‘கொலை’

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [3]

நவம்பர் 28, 2018

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [3]

John Chau -illegal entry-body not traceable

ஜெருசலேத்திற்குச் சென்று அடிப்படைவாதியாகி விட்டானா?: ஒரு கிருத்துவ சுற்றுலா நிறுவனம், ஜான் சௌ ஜெருசலத்திற்கு ஆகஸ்ட் 2015ல் சென்றிருந்த போது, “ஹோலோ காஸ்ட்டிலிருந்து தப்பித்தவன்” [holocaust survivor] ஒருவனை சந்தித்துப் பேசியதாக சொல்கிறது[1]. அதாவது யூதர்களை ஜெர்மானிய நாஜிப் படை துன்புருத்திய போது, அந்த குரூர தண்டனைகளிலிருந்து தப்பித்தவனுடன் பேசிய போது, கடவுளின் மகிமையை உணர்ந்து கொண்டானாம். “இந்த புனித யாத்திரை எனது கண்களை முழுவதும் திறந்து விட்டது. எனக்கு உண்மையினை உணர்த்தி விட்டது. இப்பொழுது ஏசு இருந்திருந்தால், என்னுடைய வயது தான் இருந்திருக்கும்,” என்றெல்லாம் விவரித்து அந்த சுற்றுலா நிறுவனத்தின் இணைதளத்தில் பதிவு செய்தான்[2]. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக-இணைதளங்களிலும், தனது ஜெருசலேம் பிரயாண புகைப்படங்கள் முதலியவற்றை போட்ட்டுள்ளான். இப்படி பட்ட விசுவாசமான ஊழியனைக் கொன்றுவிட்டதால், சில மிஷினரி நிறுவனங்கள் பொங்கி அறிக்கை விட்டன[3]. வில்லியம் ஸ்டார்க் [William Stark, ICC’s regional manager] அமைப்பின் சார்பில் சொன்னது –  “நாங்கள் அமெரிக்க மிஷனரி இந்தியாவில் கொலை செய்யப்பட்டதற்கு மிகவும் கவனமாக இருக்கிறோம்……இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றெல்லாம் சொல்லியிருக்கிறது[4].

John Chau -rejected by sentinel

சென்டினல் தீவு மக்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது: கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது. சென்டினல் மக்களை இதுவரை சந்தித்த ஒரே நபர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். கடந்த 1960களில் அங்குச் சென்றுவந்துள்ளார். அப்போது 90 பழங்குடிவரை வாழ்ந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு, சென்டினல் இன மக்களின் மக்கள் தொகை 40 என்று தெரியவந்தது[5]. இப்படி ஊடகங்களில் மாறுபட்ட விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. உலகின் மற்ற இடங்களுடனும் நபர்களுடனும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறையிடம் மீனவர்கள், ‘சென்டினல் தீவில், ஜான் தரையிறங்கியவுடன், அங்கிருந்த பழங்குடியினத்தவர்கள், அவரை வில் மற்றும் அம்பு கொண்டு தாக்கினர். அதன் பிறகு அவரை நாங்கள் பார்க்கவில்லை‘ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளது தெரிய வந்தது[6].

Pauline Hanson supports Sentinelese tribe's 'beautiful' culture, immigration policy

மானுடவியலாளர் டி.என். பண்டிட் கூறுவது[7]: நார்த் சென்டினல் தீவுக்குள் வெற்றிகரமாகத் தனது குழுவினர் 20 பேருடன் சென்றுவந்தவர் மானுடவியலாளர் டி.என். பண்டிட். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. அவர் சென்டினல் பழங்குடிகள் குறித்துக் கூறியதாவது: அந்தமானில் உள்ள இந்திய மானுவியல்துறையில் பணியில் இருந்தபோது கடந்த 1967-ம் ஆண்டு 20 பேர் கொண்ட குழுவாக நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றோம். நாங்கள் சென்றநேரம் யாரும் இல்லை என்பதால், காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் வரை நடந்தோம். அங்கு 18 குடிசைகள் வரை கட்டப்பட்டு இருந்தன. ஒரு குடிசையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. யாரே சிலர் சமையல் செய்து கொண்டிருந்து. மீன்களும், மாமிசத்தையும் தீயில் வாட்டிக்கொண்டிருந்தனர். பழங்களும் அந்த வீட்டில் இருந்தன. அவர்கள் எந்த உடையும் அணியவில்லை, இலைகளையும், மரத்தின் குச்சிகளையும் கோர்த்து ஆடைகளாகத் தயார் செய்திருந்தனர். ஆனால், நாங்கள் இருந்த ஒருமணிநேரத்தில் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. ஆனால், நார்த் சென்டினல் மக்கள் வருவதை அறிந்து நாங்கள் மீண்டும் படகில் ஏறிக்கொண்டு, அவர்களின் அம்பு வராத தொலைவுக்கு நின்று கொண்டு, தேங்காய்களையும், சில சமையல் பாத்திரங்களையும் தூக்கிவீசினோம். அவர்களுடைய மொழி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதைப் புரிந்துகொள்ள முடியாது. நான் பார்த்தவரை 90 வரை பேர் வாழ்ந்திருப்பார்கள். கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது .சென்டினல் பழங்குடிமக்களைப் பொறுத்தவரை வெளியில் இருந்து வருபவர்கள் யாரையும் கைதிகளாகப் பிடிப்பதில்லை. தங்கள் பகுதிக்குள் வரும் மக்களை எச்சரிக்கிறார்கள், யாரையும் கொல்வதில்லை. யாருடைய இடத்தையும் ஆக்கிரமிப்பதில்லை. அவர்கள் கேட்பதில்லொம் “ எங்களைத் தனியாக விடுங்கள்” என்பது மட்டும்தான். வெளியுலக மக்களின் வருகையை அவர்கள் சிறிதுகூட விரும்பவில்லை. இவ்வாறு பண்டிட் தெரிவித்தார்[8].

Sentinel satans strongghold

மர்மங்கள் விலகுமா?:  இருப்பினும், அவனைப் பற்றிய பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லாமல் இருக்கின்றன:

  1. ஜான் சௌ இறப்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள்-உண்மைக்கள் ஏன் மறைக்கப் படுகின்றன? சட்டங்களை மீறி அவன் அங்கு எப்பட்டி சென்றான்?
  2. ஜான் சௌ இறந்தது அந்தமான் போலீஸுக்குத் தெரியவில்லை, ஆனால், அவனது தாயாரின் ஈ-மெயில் மூலம் அமெரிக்க தூதரகம் அறிந்திருக்கிறது.
  3. அந்தமான் போலீஸ், பிறகு ஏழு மீனவர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது, ஏனெனில், அவர்கள் தான் ஜானை அங்கு அழைத்துச் சென்றனராம்!
  4. சென்டினல் தீவில் பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தவர்கள்இருக்கிறார்கள், யாரும் அங்கு செல்லக் கூடாது என்ற நிலை.
  5. கடவுள் தான், எங்களை கடற்கரை காவலர்கள் மற்றும் இதர கண்காணிப்பாளர்களிலிருந்தும் மறைத்துக் கூட்டிச் சென்றார், என்றான் சௌ!
  6. நீரால் பாதிக்கப்படாத பைபிளை ஜான் சௌ எடுத்துச் செல்ல, அதில் அம்பு தைத்ததாம், ஆனால், இவன் தான் இறந்து விட்டானாம்!
  7. யாரிந்த ஜான் சௌ? ஊரைச் சுற்றுபவன், உல்லாசி, சுற்றுலா பயணி, கால் பந்து ஆடுபவன், அரைகுறை மருத்துவன், கிருத்துவ மிஷினரி.
  8. ஜெருசலேம் யாத்திரைச் சென்று, பக்தியில் மூழ்கி, ஊறி தானே ஏசு கிறிஸ்து [அவருக்கும் அதே வயது] என்று சொல்லிக் கொண்டானாம்!
  9. அப்படியென்றால், இனி சாத்தான் தான் தரிசனம் தரவேண்டும், ஆமாம், அந்த சென்டினல் தீவை சாத்தானின் இருப்பிடம் என்றான்!
  10. ஜான் சௌ உடல் கிடைக்கவில்லை, அவனது தாயார் அவன் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்! உயிர்த்தெழுந்து வரலாமோ?

 

© வேதபிரகாஷ்

28-11-2018

John Chau -Satanic sentinel

[1] Times of Israel, American missionary killed in India ‘grasped the humanity of Jesus’ in Israel, By TOI STAFF and AGENCIES, 22 November 2018, 12:01 pm

[2] https://www.timesofisrael.com/american-missionary-killed-in-india-grasped-the-humanity-of-jesus-in-israel/

[3] South China Morning Post, Why are they so angry’: US man John Allen Chau, killed by remote Sentinel Island tribe, was trying to convert them to Christianity, Novemver 24, 2018.

[4] https://www.scmp.com/news/asia/south-asia/article/2174420/why-are-they-so-angry-us-man-john-allen-chau-killed-remote – comments

[5] என்டிடிவி.தமிழ், அமெரிக்க சுற்றுலா பயணி அந்தமான் தீவில் கொலைதிடுக்கிடும் பின்னணி!, Edited By Debanish Achom | Updated: November 21, 2018 12:48 IST

[6] https://www.ndtv.com/tamil/an-american-tourist-was-killed-by-a-protected-tribe-in-the-andaman-and-nicobar-islands-1950929

[7] தமிழ்.இந்து, நார்த் சென்டினல் தீவில் எத்தனைப் பழங்குடியினர் வசிக்கிறார்கள்?– அங்கு சென்றுவந்த மானுடவியலாளர் சொல்வது என்ன?, Published : 26 Nov 2018 16:33 IST; Updated : 26 Nov 2018 16:33 IST

[8]  https://tamil.thehindu.com/india/article25597513.ece

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (2)

பிப்ரவரி 26, 2018

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (2)

Joseph Hospise- Vaiko statement - 25-02-2018

2018ல் முழித்துக் கொண்ட அரசியல்வாதிகள்: இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்  பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “பாலேஸ்வரம் கருணை இல்லம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை  எடுக்க வேண்டும்”என்று வலியுறுத்தி உள்ளார். இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜூன் சம்பத் தலைமையில் செங்கல்பட்டு டிஎஸ்பியிடம் நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.  இதுகுறித்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் கருணாகரன் என்பவர் கூறும்போது, இந்தக் கருணை இல்லம் மர்மமாகவே இருக்கிறது.  இறந்தவர்களின் உடல்களை எரிக்காமல், புதைக்காமல் அப்படியே அழுக விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக புகார்  அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்போதாவது அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்[1].

Joseph Hospise- Vaiko - seeman, statement - 25-02-2018

வைகோ அறிக்கை – 25-02-2018: வைகோ[2], “இந்தச் செய்தியை அறிந்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர். இதை அறிந்து, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட .தி.மு.. அவைத் தலைவர் ஜி.கருணாகரன், காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.. தொண்டர் அணி துணை அமைப்பாளர் தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர். ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்ம பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது[3]. எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பிணக்குவியல்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; மேலும் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”, என்று கூறியுள்ளார் [4].

bones-sold-from-dead-bodies-dinakaran-21-02-2018

நாம் தமிழர் கட்சி சீமானின் அறிக்கை: இதே போன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[5]:- பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லமானது முறையான அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இறக்கும் முதியவர்களின் சடலங்களை அடக்கம் செய்யாது சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடிவிடுகிற வடிவில் அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையானது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்து இருக்கிறது. அங்குள்ள முதியவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் எலும்புகளை இவ்வறைகளில் வைக்கப்பட்டு, எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் இக்கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை மீட்க வேண்டும். நடைபெற்ற மரணங்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். வெளிநாடுகளை போல தமிழக அரசே முதியோர் இல்லங்களை நிறுவ வேண்டும்[6]. சரி அப்படி என்ன எலும்புகளில் விசயம் உள்ளது என்று பார்த்தால், கீழ்கண்ட விவரங்கள் வெளிவருகின்றன.

Joseph Hospise- Vaiko - seeman, statement - 26-02-2018-DT

எலும்பு, எலும்பு பவுடர் முதலியவற்றின் உபயோகம்: தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது. படித்ததும், “உவ்வே’ என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள “பகீர்’ தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது[7].

Bone export- illustrative figure

எலும்பு பவுடரின் விலை, ஏற்றுமதி: மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[8].

Joseph Hospise- banner with names

ஜோசப் எலும்பு வளாகத்தை பாராட்டி எழுதியுள்ள கட்டுரைகள், எடுக்கப் பட்டுள்ள வீடியோக்கள்: இத்தனை விவகாரங்கள் இருந்தாலும், உண்மையினை அறியாமல், பாராட்டி “கீற்று” போன்ற இணைதளத்தில், கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன[9]. புலன் விசாரணை ஜார்னலிஸம் என்றெல்லாம் பேசுகின்ற காலத்தில், “மனிதநேயம்” போர்வையில் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது[10]. இன்றைக்கு மாற்றி எழுதப்படுமா என்று பார்க்க வேண்டும். அதேபோல பாராட்டும் வீடியோக்களும் உள்ளன. இப்பொழுது தான், இந்த விவகாரங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சேர்ந்துள்ளன. இன்றைக்கு, மறுபடியும் விஜயம் செய்து வீடியோவை எடுத்து உண்மையினை காட்டுவார்களா அல்லது மாற்றுவார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

26-02-2018

Human skeleton parts - rate fixed

[1] தி.இந்து, பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல், எலும்புக்கூடு விற்பனை; பாதாள அறையை சோதிக்க வேண்டும்: வைகோ, Published :  25 Feb 2018  18:07 IST; Updated :  25 Feb 2018  18:34 IST.

[2]

http://tamil.thehindu.com/tamilnadu/article22850402.ece

[3] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17

[4] https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/26081742/1147767/Vaiko-and-Seeman-assertion-Murders-in-the-mercy-home.vpf

[5] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17

[6] https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/26081742/1147767/Vaiko-and-Seeman-assertion-Murders-in-the-mercy-home.vpf

[7] தினமலர், எலும்பு பவுடர் ஏற்றுமதி, Jan 3, 2010.

[8]http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?print=1&news_id=6152&ncat=&archive=1&showfrom=1/3/2010

[9] கலிவரதன்,ஒரு இல்லம்அதில் வாரத்திற்கு 5 மரணம், 02 நவம்பர் 2012.

[10] http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/21855–5-

 

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வது – கிருத்துவ மரண திருவிளையாடல்கள் (2)

பிப்ரவரி 22, 2018

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வதுகிருத்துவ மரண திருவிளையாடல்கள் (2)

Dead bodies smuggled -enquiry-Thomas

பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு: இதை தொடர்ந்து, கண்ணாடி உடைப்பில் ஈடுபட்ட குரும்பறை கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (50), தாஸ் (42), சிலம்பரசன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுனர் ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு அவரை அனுப்பினர். இந்நிலையில் 21-02-2018 அன்று காலை 8 மணியளவில் ஆர்டிஒ ராஜூவ், மதுராந்தகம் டிஎஸ்பி மதிவாணன், மருத்துவ அலுவலர் உமாதேவி, மாசு கட்டுபாட்டு வாரியம், வருவாய் துறை, போலீசார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணை மாலை 4 மணியளவில் முடிவடைந்தது.  விசாரணைக்கு பிறகு, ஆர்டிஓ ராஜூ கூறுகையில், “துறைரீதியான அலுவலர்கள் 3 நாட்களுக்கு விசாரணை செய்து அறிக்கை தயார் செய்வார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.  இச்சம்பவத்தால், கலெக்டர் பொன்னையா உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

Dead bodies smuggled -Dainakaran, 20-02-2018

எலும்பை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் சொல்கின்றனர்:  இதற்கிடையே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜிக்கு மனநல பிரிவு டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட கருணாகரன் கூறியதாவது: “சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் மலையடிவாரப் பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதன் செயல்பாடு மர்மமாக உள்ளது.  இந்த கருணை இல்லத்தில் இறந்தவர்களின் உடல்களை கிடங்கில் அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் வைத்துவிட்டு அழுகி உடல் பாகங்கள் சிதைந்த பிறகு எலும்பை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் சொல்கின்றனர்[1]எங்கிருந்தோ அழைத்துவரப்படும் முதியவர்களை சில காலம் வைத்திருந்து இறந்தவுடன் இங்கேயே அழுக விடப்படுகிறது[2]நோய்வாய்ப் பட்டவர்கள் உடல்கள் எரிக்கப்படுவதாலும், அழுக விடப்படுவதாலும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவி சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுபோன்று அதிக அளவில் நடைபெறுவதால் சுற்றுச் சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்மந்தமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே, உடனடியாக ஆய்வு செய்து இந்தக் கருணை இல்லத்தை தடை செய்வதுடன், நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

Dead bodies smuggled -Jain Joseph

கருணை இல்லத்தை நிர்வகித்து வரும் தாமஸ் தலைமறைவு: இதையடுத்து இன்று காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜீவ், உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி மற்றும் சமூக நலத்துறையினர் என சுமார் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர்[3]. அசம்பாவிதம் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அங்குள்ள முதியவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, சரியான உணவுகள் வழங்கப்படுகின்றனவா, இறந்து விட்டால் அவர்களை எப்படி புதைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன[4]. மேலும் கருணை இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகிறார்கள்[5]. மனநலம் பாதிக்கப்படாதவர்களை வேறு இல்லத்திற்கு கொண்டு செல்ல ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்[6]. இந்த நிலையில் கருணை இல்லத்தை நிர்வகித்து வரும் தாமஸ் தலைமறைவாகி இருப்பதாக சொல்கிறார்கள்.

Dead bodies smuggled -enquiry-Daily Thanthi, 21-02-2018

தொண்டு நிறுவனத்தின் தாளாளர் பாதிரியார் கூறியதாவது[7]: கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்றோர், முதியோர்களுக்காக தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு.  பொருளாதார சிக்கலால் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வண்டியில், காய்கறி மூட்டைகள், முதியவர்கள்  ஏற்றிவரப்பட்டனர் என பாதிரியார்  கூறினார்[8]. இவர் சப்பைக் கட்டுவது, அவர்களது கொடிய செயலே காட்டி விட்டது. தாமஸ் தலைமறைவானது அதனை மெய்ப்பிக்கிறது. அங்கிருக்கும் பிணம் பாதுகாக்கும் பெட்டி-போன்ற-அறை [ multi-tier vault] வங்கி லாக்கர் / அடுக்கறை போன்று இருக்கிறது[9]. அவை மறுபடியும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. அதை வைத்திருக்க அனுமதி உள்ளதா என்று தெரியவில்லை.

Saint Joseph,oldage-cremation-vault

இந்த இல்லத்திற்கு உண்டான லைசென்ஸே சில மாதங்களுகு முன்னர் காலாவதி ஆகியிருந்தது. 13 வருடங்களுக்கு ஒரு முறை, அந்த பிணப்பாதுகாப்பு பெட்டிகள் அப்புறப்படுத்தப் படவேண்டும் என்றுள்ளது. ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இறந்த பிணங்களுக்கு “இறப்பு சான்றிதழ்” பெறப்பட்டதா என்று கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது[10]. இவையெல்லாம் செய்யப்படவில்லை என்றால், சம்பந்தப் பட்ட தமிழக அரசு துறைகள் அவற்றில் வேலை செய்யும் ஊழியர்கள், அதிகாரிகள் முதலியோரின் ஊழல் தனமும் வெளியாகிறது. ஆக, கிருத்துவக் கொலை குரூரமும், ஊழல் பயங்கரமும் சேர்ந்து, நூற்றுக்கணக்கான பிணங்களுடன் விளையாடிருக்கிறது என்று தெரிகிறது. பிறகு, மனித உறுப்புகள், எலும்புகள், துகள்கள் எங்கு பிரிக்கப்படுகின்றன, தயாரிக்கப் படுகின்றன, என்று தெரியவில்லை. ஆக, இதற்கெல்லாம் காரணமாக இருப்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்வது சாதாரணமான விசயம் என்றாலும், சட்டம் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். வழக்கம் போல, சில நாட்களில் அச்செய்தியை அப்படியே மறந்தும் விடுவார்கள்.

© வேதபிரகாஷ்

22-02-2018

Dead bodies smuggled. enquiry -Vikatan, 21-02-2018

[1] தினகரன், உத்திரமேரூர் கருணை இல்லத்தில் ஆதரவளிப்பதாக தெரிவித்து முதியவர்களை கொன்று எலும்புகள் விற்பனை, 2018-02-22@ 01:43:16.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=378110

[3] விகடன், முதியவர்கள் கடத்தப்படுவதாக எழுந்த சர்ச்சை! தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு!, பி.ஜெயவேல், Posted Date : 19:20 (21/02/2018); Last updated : 19:20 (21/02/2018)

[4] https://www.vikatan.com/news/tamilnadu/117110-state-revenue-department-officials-raid-at-kanchipuram-orphanage-over-various-allegations.html

[5] தி.இந்து.தமிழ், இறந்தவர் சடலத்துடன் முதியவர்களை அழைத்துச் சென்றதால் சர்ச்சையில் சிக்கிய கருணை இல்லம்: 6 துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு, Published :  22 Feb 2018  07:23 IST; Updated :  22 Feb 2018  07:23 IST.

[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22821834.ece

[7] தினத்தந்தி, காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு பாதிரியார் விளக்கம் , பிப்ரவரி 21, 2018, 04:39 PM

[8] https://www.dailythanthi.com/News/State/2018/02/21163922/Vegetable-cart-The-body-was-taken-awayAccidental-event.vpf

 

[9] Indian Express, Questions over hospice with room for dead, By Express News Service  |   Published: 22nd February 2018 04:06 AM;  Last Updated: 22nd February 2018 04:06 AM

[10] They were surprised to find that the hospice did not just take care of the destitute elderly, but also had a multi-tier vault for storing corpses. The vaults appeared like bank lockers. After a certain number of years, the vaults were reused. While it is unclear if the hospice management obtained permission to build the vault, what raised concern among officials was the lack of monitoring on whose bodies were deposited there and how the remains were processed. The home’s licence expired a few months ago and its application for renewal has not yet been approved. “We raised concern about the absence of supervision on how the home handles bodies. We don’t even know if they obtain death certificates before depositing the corpses in the vault,” said a health department official. While rules mandate that the remains in the vault be cleared only once in 13 years, local residents claimed the management had been clearing them every few months. A representative of the home said they were open to a probe.

http://www.newindianexpress.com/cities/chennai/2018/feb/22/questions-over-hospice-with-room-for-dead-1777033.html

பாதிரி தற்கொலை விவகாரத்தை அந்நிய கிருத்துவ இணைதளங்கள் பிரச்சினையாக்கும் போக்கு.

ஜனவரி 22, 2018

பாதிரி தற்கொலை விவகாரத்தை அந்நிய கிருத்துவ இணைதளங்கள் பிரச்சினையாக்கும் போக்கு.

Pastor Gideon Periyaswamy suicide or murder 20-01-2018

பாதிரிரைப் பற்றிய விவரங்கள் வேறுபடுகின்றன: அடையாளச்சேரியில், கிறிஸ்துவ பாதிரியார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், என்ற செய்தி தினமலரில் மட்டும் தான் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதனை, அந்நிய கிருத்துவ இணைதளங்கள் ஊதி பெரிதாக்க முயல்வதாகத் தெரிகிறது. சென்னை அடுத்த, ராஜாகீழ்பாக்கத்தைச் சேர்ந்த, வேலு மகன் ராமமூர்த்தி என்கிற கிதியோன், 44, என்று தினமலர் கூறுகிறது[1]. ஆனால், இறந்தவரின் நெருங்கிய நண்பர் கூறுவது[2], “பெயர்: கிடியோன் பெரியசாமி வயது: 43; கிராமம்/சர்ச்/வசிக்கும் இடம்: அடையாளச்சேரி, கூவத்தூர் அருகில் (2 கி.மீ தொலைவில்), காலப்பாக்கம்; சர்ச்: மகநீயம்.” அவரது அக்கா பெயர் மல்லிகா என்றுள்ளது. ஆகவே, இந்துவாக இருந்து மதம் மாறியிருக்கலாம். சர்ச்சின் பெயர், “மகநீயம்” என்பதும் இது வரைக் கேள்விப் படாத, விசித்திரமாக இருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்னர், இந்துவாக இருந்தவர், கிருத்துவனாக மாறினாராம்[3].

The-body-of-Pastor-Gideon-Periyaswamy-of-Maknayeem-Church-in-Tamil-Nadu-India.-Morning-Star-News

கொலையா, தற்கொலையா?: தற்போது, கூவத்துார் அடுத்த, அடையாளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை அருகில், சில ஆண்டுகளுக்கு முன், குடிசையில், தேவாலயம் ஏற்படுத்தி, மதபோதகராக இருந்து வந்தார்[4]. இந்நிலையில், 20-01-2018 அன்று, காலை 9:00 மணிக்கு, அங்கு பணிபுரியும் சிறுமி, தேவாலயத்தை துப்புரவு பணி செய்ய, சென்றபோது, பாதிரியார் துாக்கில் தொங்கி, இறந்து கிடந்ததை கண்டார். ஆனால் பாஸ்டரின் நெருங்கிய கூட்டாளி என்று ஒருவர், “சனிக்கிழமை உபவாச நாள் ஆகும். அதனால், ஜபத்திற்கு வர ஆரம்பித்தனர். ஆனால், கதவு வெளிப் பக்கம் பூட்டப் பட்டிருந்தது. இது அசாதாரணமாக இருந்தது. ஆகவே, நிலைமை வித்தியாசமாக இருந்ததால், குழுவினர், கதவைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கு, அப்பாதிரி தூக்கில் தொங்குவதைக் கண்டனர். கயிறை அகற்றிப் பார்த்த போது, நாக்கிலும், கழுத்தைச் சுற்றி ரத்தம் கட்டியிருந்தது தெரிந்தது. உடலில் வேறெந்த ரத்தக் கறையும் காணப்படவில்லை. கைவிரலில் அணிந்திருந்த மோதிரம் காணவில்லை. மற்றபடி, செல்போன் உட்பட எல்லா பொருட்களும் அப்படியே இருந்தன. இரண்டு அல்லது மூன்று பேர் கழுத்தை கயிற்றால் நெறித்து இரவில் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும்,” என்று தெரிவித்ததாக, இரு கிருத்துவ இணைதளம் வெளியிட்டுள்ளது[5].

Pastor Didiyon committed suicide 21-01-2-18

முதலில், “புதிய தலைமுறையில், இச்செய்தி வெளிவந்ததாகவும், பிறகு, அது காணப்படவில்லை, ஏன்?; தினமலர் கூறுவதாவது, அச்சிறுமி, அப்பகுதியினரிடம், இதுகுறித்து, தெரிவித்தார். இது குறித்து, அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருமுன், அப்பகுதியினர் உடலை துாக்கிலிருந்து அப்புறப்படுத்தி, கீழே கிடத்தி வைத்தனர். போலீசார் வர தாமதமானதால், பகல், 12:30 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த, மாமல்லபரம் போலீஸ் டி.எஸ்.பி., சுப்பாராஜூ, மதுராந்தகம் டி.எஸ்.பி., மற்றும் போலீசார் விரைந்தனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது. முதலில், “புதிய தலைமுறை”யில், இச்செய்தி வெளிவந்ததாகவும், பிறகு, அது காணப்படவில்லை என்று, மேற்குறிப்பிட்ட பாதிரியின் நண்பர் குறிப்பிடுகின்றார்[6].

Pastor-Gideon-Periyaswamy-in-white-at-church-celebration.-Morning-Star-News

இது அங்கிருக்கும், நூற்றுக் கணக்கான சர்ச்சுகளுக்குள் இருக்கும் பிரச்சினையா, தனிமனித பிரச்சினையா என்று தெரியவில்லை: பாதிரியின் நண்பர் கூறுவதாவது, “இப்பாதிரிக்கு முன்னரே அடிக்கடி மிரட்டல்கள் வந்துள்ளன. கொலை மிரட்டல்களும் இருந்துள்ளன. முன்னர் மத அடிப்படைவாதிகள் சர்ச்சின் கூரையை சேதப்ப்டுத்தினர். இன்னொரு முறை, கிராமப் பஞ்சாயத்திலுரும் வரும் தண்ணீர் சப்ளையையும் துண்டித்தனர். ஆழ்துளை கிணறையும் அப்புறப்படுத்தினர். பலமுறை அவரை அடித்துள்ளனர். மேலும் மதமாற்றம் விசயமாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது,” என்றெல்லாம் அடுக்குகிறார்[7]. ஆனால், இதெல்லாம் அந்த, “கிருத்துவர்கள் ம்த தண்டனைக்குள்ளாகிறார்கள்” என்ற இணைதளத்தில் உள்ளதே தவிர மற்றபடி வெறெங்கும் எந்த செய்தியும் காணப்படவில்லை. மேலும், அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்திருப்பின், சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்கலாம், புகார் கொடுக்கலாம். ஆனால், எதுவுக் காணப்படவில்லை. ஆகவே, இது அங்கிருக்கும், நூற்றுக் கணக்கான சர்ச்சுகளுக்குள் இருக்கும் பிரச்சினையா, தனிமனித பிரச்சினையா என்று தெரியவில்லை.

Pastors commit suicide, Morning star, Hyderabad

பாதிரியாரைப் பற்றிய முன்னுக்கு முரணான விவரங்கள்: பாதிரியாரை ஒரு தரப்பினர் எதிர்த்து வந்ததாகவும், அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை, என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அப்பகுதியினர் வாக்குவாதம் செய்தனர். “கைவிரலில் அணிந்திருந்த மோதிரம் காணவில்லை. மற்றபடி, செல்போன் உட்பட எல்லா பொருட்களும் அப்படியே இருந்த,.” என்று அவர் நண்பர் குறிப்பிட்டதை கவனிக்கவும். ஆனால், யார் அந்த “ஒரு தரப்பினர்” என்று குறிப்பிடப் படவில்லை. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதே கோரிக்கையை, வலியுறுத்தி, செங்கல்பட்டிலும் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து, அவரது அக்கா மல்லிகா அளித்த புகாரை அடுத்து, அணைக்கட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Pastors commit suicide, British Pakistan Christians, 21-01-2018

அந்நிய கிருத்துவ இணைதளங்களின் விசமத்தனம்: இந்திய ஊடகங்களில், இவ்விசயம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருப்பினும், அயல்நாட்டு கிருத்து இணைதளங்கள், இதனை, வகுப்புவாத-மதவாத ரீதியில் திரிபு விளக்கம் கொடுத்து வருகின்றன[8]. வில்சன் சௌத்ரி, ஆங்கில-இந்திய கிருத்துவ சங்கத்தின் தலைவர் [Wilson Chowdhry, Chairman of the British Asian Christian Association] தனை இந்து-கிருத்துவ விவகாரம் போன்று சித்தரித்திருப்பதும் திகைப்பாக உள்ளது[9]. இன்னொரு இணைதளம் ஏதோ மர்மக் கதை போன்று, இவர் சொன்னார்-அவர் சொன்னார் என்ற ரீதியில் கதை விட்டுள்ளது[10]. உள்ளூர்-இந்திய கிருத்துவர்கள் இவ்வாறு அயல்நாட்டு, கிருத்துவ இணைதளங்களுக்கு, விசயங்கள் கூறுகிறார்கள்[11] என்றால், பிரச்சார ரீதியில் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் என்ன போன்ற கேள்விகளும் எழுகின்றன. “உள்ளூர் இந்துக்கள் அவர் மதமாற்றம் காரியங்களில் ஈடுப்பட்டிருப்பதை விரும்பவில்லை,” என்று நண்பர் குறிப்பிட்டதாக, ஒரு இணைதளம் கூறுகிறது[12]. அப்படியென்றால் என்ன காரணம் என்பதனை கண்டறிய வேண்டும். மக்கள் விரும்பாத அளவிற்கு, கிருத்துவர்கள் அடாவடி காரியங்கள், மற்றவர்களை பாதிக்கும் காரியங்கள் முதலியவை என்ன செய்து வருகிறார்கள் என்று அவர்கள் தாம் பரிசீலினை செய்து கொள்ள வேண்டும். அயல்நாட்டில் இருந்து கொண்டு, விவகாரங்களைத் தெரிந்து கொள்ளாமல், விசமத்தனமான பொய்களை அவிழ்த்து விடக் கூடாது. மேலும் சர்ச்சுகளில் இருக்கும் பிரச்சினைகள், போட்டி-பொறாமைகள், முதலியவை தற்கொலை எண்ணங்களை வளர்க்கிறது[13]. இறையியல் ரீதியான அடிப்படைவாத எண்ணங்களும் தற்கொலைக்கு காரணமாகின்றன, என்று கிருத்துவர்களே ஒப்புக் கொள்கின்றனர்[14].

© வேதபிரகாஷ்

22-01-2018

Pastors commit suicide, why

[1] தினமலர், அடையாளச்சேரியில், பாதிரியார் தற்கொலை, பதிவு செய்தநாள்:  ஜன 21, 2018  04:04.

[2] Name: Gideon Periyaswamy, Age: 43, Village/Ministry/Residing at: Adaiyalacherry, near Koovathur (2km distance), Kalpakkam, Church Name: Maknayeem.

[3] A convert from Hinduism 25 years ago, Pastor Periyaswamy was single and served as pastor in Adayachery for more than 12 years, his close friend, pastor Azariah Reuben, told Morning Star News.

https://morningstarnews.org/2018/01/pastor-found-dead-tamil-nadu-india/

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1942900

[5] Saturday was a day of ‘prayer and fasting’. As the congregation made their way to the Church, they found Pastor’s house locked from the outside, which was very unusual. As the situation seemed very odd, the members opened the house to find Pastor dead and hanging by a rope around his neck. They removed the rope to find a blood clot around the throat and neck area, where the rope had fatally strangled him. There were no other traces of blood on his body. A gold ring that was on his finger was missing. All other belongings remained untouched, including his mobile telephone. It appears that he might have been first strangled with a rope, by two or more people causing his death in the night. http://persecutionrelief.org/pastor-murdered/

[6] This event was covered by “Puthiya Thalaimurai TV” and telecasted briefly. However, the news has now been pulled off the air. http://persecutionrelief.org/pastor-murdered/

[7] Pastor had been receiving frequent death threats. Earlier, religious fundamentalists had vandalized the roof of the Church. Another time, they had cut the water supply that was provided from the Village Panchayat, removed the bore well, beat and threatened him on many occasions, accusing him of converting people to Christianity. http://persecutionrelief.org/pastor-murdered/

[8] Britishpakistanichristians.org, Indian pastor tortured, beaten and then hung to death from rafters of his church, 21-Jan-2018

[9] https://www.britishpakistanichristians.org/blog/indian-pastor-tortured-beaten-and-then-hung-to-death-from-rafters-of-his-church

[10] Morning Star News, Pastor Found Dead in Tamil Nadu, India, By Our Southern India Correspondent , January 21, 2018

[11] https://morningstarnews.org/2018/01/pastor-found-dead-tamil-nadu-india/

[12] “The local Hindus were not happy with growing Christianity,” Pastor Reuben said. “They had several times tried to stop the ministry.”

https://morningstarnews.org/2018/01/pastor-found-dead-tamil-nadu-india/

 

[13] Sarah Eekhoff Zylstra, Why Pastors Are Committing Suicide, NOVEMBER 23, 2016

[14] ndeed, a 2013 LifeWay survey found that 48 percent of self-identified evangelical, fundamentalist, or born-again Christians believe prayer and Bible study alone can overcome mental illness.

https://www.thegospelcoalition.org/article/why-pastors-are-committing-suicide/

ஏசுகிருஸ்து நான் தான் என்று அமெரிக்காவில் அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – அமெரிக்க செய்திகள் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறதா? (2)

நவம்பர் 23, 2017

ஏசுகிருஸ்து நான் தான் என்று அமெரிக்காவில் அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – அமெரிக்க செய்திகள் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறதா? (2)

Charles Manson - Mother, father

சார்லஸ் மான்சனின் பெற்றோர், வளர்ப்பு, சிறுவயது குற்றங்கள் முதலியன: சார்லஸ் மான்சன், சார்லஸ் மடோக்ஸ் [Charles Maddox] என்பவனுக்கு 1934ல், திருமணம் ஆகாத 16-வயது இளம் பெண் மூலம் பிறந்தான். பிறகு வளர்ப்பு தந்தை  வில்லியம் மான்சனின் [William Manson] கடைசி பெயரை, தன் பெயருடன் சேர்த்துக் கொண்டான். சிறு வயதிலிருந்தே வளர்ப்பு சரியாக இல்லாததால், திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டான். இதனால் பிடிபட்டு, சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப் பட்டான். 1946ல், தனது 12வது வயதில் டெர்ரி ஹௌட் [Terre Haute, Indiana] என்ற இடத்தில் இருந்த பையன்களுக்கான கிபால்ட் பள்ளியில் [Gibault School for Boys] சேர்க்கப்பட்டான். ஆனால், அடுத்த 20 வருடங்களில் திருட்டுகளில் ஈடுபட்டதால், பலமுறை சீர்திருத்த பள்ளிகளில் அடைக்கப் பட்டு, குற்றங்களுக்காக சிறையிலும் அடைக்கப்பட்டான். 1987ல் சிறையில் அளித்த பேட்டியிலும், இவ்விவரங்களைக் கூறியுள்ளான். 1967ல் வந்த அவன், 32 வயதில் பாதிகாலம் சிறையில் கழித்தான்.

20-year-old Charles Manson on his wedding day with ex-wife, Rosalie Jean Willis-newsweek

பல திருமணங்களும், 18- பெண்களுடன் வாழ்தலும்: இரண்டு முறை திருமணம் செய்து கொண்டான். ஜனவரி 1955ல் முதல் திருமணம் ரோஸாலி ஜீன் வில்லிஸ் [Rosalie Jean Willis] என்பவளுடன் நடந்தது[1]. ஆனால், தோல்வி தான். 1958ல் விவாகரத்தானது. பிறந்த மகனும் விபத்தில் இறந்து விட்டான். இரண்டாவது திருமணம் லியோனா கான்டி ஸ்டீவன்ஸ் [Leona “Candy” Stevens] என்பவளுடன் 1959ல் நடந்தது, ஆனால், 1963ல் விவாகரத்தானது[2]. 2014ல் மூன்றாவது திருமணம் நடந்ததாக சொல்லப்பட்டது. தான் சாமியார் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, 18-பெண்களுடன் வாழ ஆரம்பித்தான்.  போதை மருந்து, தாரளமான செக்ஸ், போன்றவற்றுடன் இருந்த அவனிடத்தில் வாழாவெட்டிகள், திசைத் தவறிய பெண்கள் அடைக்கலமாகினர்[3]. இதனை அவன் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டான்[4].

Charles Manson books sold-Susan Atkins

ஏசுகிருஸ்துவும் சாத்தானும் சேர்ந்த அவதாரம் என்று சொல்லிக் கொண்டது: எசு கிருஸ்து மற்றும் சாத்தான் இரண்டும் கலந்தவன் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டான். கருப்பு சர்ச் போன்ற சாத்தான் கிரியைகளை செய்தான், ரத்தத்தை சுவைத்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டது. சூஸன் அட்கின்ஸ், சாத்தானின் குழந்தை, கடவுளின் குழந்தை [Child of Satan, child of God] போன்ற புத்தகங்கள் கூட வெளியிடப்பட்டன. இருத்துவத்தைப் பொறுத்த வரையில், ஆன்டி-கிரைஸ்ட் [Anti-Christ] என்ற தத்துவம் இல்லாமல், கடவுளின் தன்மையினைப் புரிந்து கொள்ள முடியாது போன்ற இறையியலை வளர்த்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே, சாத்தான், ஆதாம்-ஏவாளை பாவம் செய்யத் தூண்டியது, அதனால், அந்த முதல் ஆதாம் செய்த பாவத்தை தான், இரண்டாவது ஆதாமான ஏசு வந்து, தனது ரத்தத்தினால், அப்பவத்தைத் தீர்க்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், ஆதாம்-ஆவாள் நிர்வாணத்தில் இருந்ததினால், நிர்வாணம் புனிதமாகக் கருதப் படுகிறது. ரத்தம் குடிப்பது, மாமிசம் சாப்பிடுவது என்பதுதான், ரொட்டி மாமிசமாகவும், சாராயம் ரத்தமாகவும் மாறுவதாக, யூகேரிஸ்டில் விசுவாசித்து புசிப்பது. உண்மையில் எசுவின் சதை மற்றும் ரத்தத்தைக் குடிப்பது தான் அந்த சடங்கு. ஏசுவின் உடலுக்கு பதிலாக ஒருபெண்ணை பலியிட்டு அவளது உடலை-ரத்தைத்தைப் புசிப்பது, கருப்பு சர்ச்சின் சடங்காக இருக்கிறது. இதைத்தான் திரைப்படங்களில் காட்டி வருகிறார்கள்.

Charles Mansen, illegitimate son-drank blood--vedaprakash

ஏசுவுடன் ஒப்புமைப் படுத்திக் கொண்டு, தானே ஏசு என்று பாவித்துக் கொண்டது: திருமணம் ஆவதற்கு முன்பே, தான் பிறந்ததால், தன்னை ஏசு என்றே நினைத்துக் கொண்டான். மேலும், தான் தந்தையறியாத பிள்ளையாக இருந்ததால், தாயின் மீது வெறுப்பாக இருந்தான். ஹோல்வியுற்ற திருமணங்கள் பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. அதுவே, பிறகு பெண்களின் மீதான துவேசமாக மாறியது. ஹிருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, போட்டியாக இருந்தவர், கருப்பு இனத்தவர், சிறைவாசத்தின் போது அவர்களுடன் இருக்க வேண்டியதாயிற்று. அது கருப்பின மக்களின் மீது வெறுப்பை உண்டாக்கியது. அமெரிக்காவை யூதர்கள் மறைமுகமாக ஆதிக்கத்தில் வைத்திருப்பதால், அவர்கள் மீதும் வெறுப்பை வளர்த்ய்துக் கொண்டான்.. தன்னை ஏசு கிறிஸ்துவின் அவதாரம் என்று மான்சன் தன் சீடர்களை நம்பவைத்தான். இதற்காக போதை மருந்துகளை பயன்படுத்தினான். இதன் மூலம் தன் சீடர்களான மத்தியவர்க்க பெண்கள், இளைஞர்கள் மீது அதிகாரம் செலுத்தினான். அவனது குரூரம், பயங்கரம், கொலைகள் மூலம், தீயமுறையில் பிரபலம் பெற்றதால், அவனைப் பற்றிய செய்திகள், புத்தகங்கள் என்று வேறு வெளிவந்தன. வின்சென்ட் பக்லியோசி [Vincent Bugliosi] என்ற அரசு தரப்பு வக்கீல், இவனைப் பற்றி அதிக விவரங்களை 2015லேயே கொடுத்தார்.

Charles Manson - Tate slayings-1

1968 இனவெறி போராட்டம் அவனது கொலைகளைத் தூண்டியது: 1960 களின் பிற்பகுதியில் கலிஃபோர்னியாவில் பலவந்தமாக வலுக்கட்டாயமாக இளைஞர்களைக் கொண்டுவந்தார்.அவர் தனது “குடும்பத்தை” அழைத்தார், அவர்கள் இறுதியாக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள ஸ்பஹன் பண்ணையில் ஒன்றாகக் குடியேறினர். 1968ல் நடந்த இனவெறி கலவரங்கள், கருஞ்சிறுத்தை போராட்டம் முதலியவற்றிற்கு பிறகு, உலக அழிவுக்கான, அர்மகெட்தான் வராப்போகிறது என்று உணர்ந்து கொண்டான். எல்.எஸ்.டி போதை மருந்துடன், மெஸ்மரிஸம் செய்து, தனது சீடர்களை அடிமையாக வைத்திருந்தான். எசு கிருஸ்து மற்றும் சாத்தான் இரண்டும் கலந்தவன் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டான். முந்தைய அக்கூட்டத்தின் உறுப்பினர், பார்பாரா ஹோட் [Barbara Hoyt] என்பவள் அவனை தான் கடவுள் என்றே நம்பியதாக ஒப்புக் கொண்டாள். பீட்டில்ஸ் என்ற பாட்டுக் குழுவினர், தன்னுடன் பேசுவதாகக் கூறிக் கொண்டான். 1968ல் பீடில்ஸ் ஆல்பம் வெளி வந்தபோது, கருப்பினத்தவர் எழுவர் என்றும், அதனால், வெள்ளை ஆதிக்கம் அழியும் என்றும் கூறினான். கலிபோர்னியாவுக்கு சென்றபோது, ஹின்மான் [Hinman] என்ற இசை ஆசிரியரைச் சந்தித்தான். அவர், அவனை பீச் பாய்ஸ் புகழ் டென்னிஸ் வில்சனுக்கு [Dennis Wilson of the Beach Boys] அறிமுகப்படுத்தி வைத்தார். வில்சன், டெர்ரி மெல்சர் [Terry Melcher] என்ற தயாரிப்பாளருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்வழியாகத்தான் பொலான்ஸ்கி, டேட் முதலியோருடன் தொடர்பு ஏற்பட்டது.

Charles Manson - victims killed-Sunday News, 10-08-1969

பன்முக வளர்ச்சியில் உருவான குற்றவாளி: குடும்பம் உருவாகத் தொடங்கிய சமயத்தில், மேன்சன் ஒரு வேலையில்லாத முன்னாள் குற்றவாளி ஆவார், அவர் பல்வேறு விதமான குற்றங்களுக்கு திருத்தம் கொண்ட நிறுவனங்களில் பாதி வாழ்க்கை செலவிட்டார்.படுகொலைகளுக்கு முன்னர், அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் இசைத் தொழிலின் முதுகில் ஒரு பாடகர்-பாடலாசிரியராக இருந்தார், முக்கியமாக டென்னிஸ் வில்சன் , டிரம்மர் மற்றும் பீச் பாய்ஸின் நிறுவன உறுப்பினர் ஆகியோருடன் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி.மேன்சன், ” ஹெலட்டர் ஸ்கெல்டர் ” என்று அவர் அழைத்ததை நம்பினார், இது ஒரு பெயரிடப்பட்ட பீட்டிலின் பாடல் ஒன்றில் இருந்து வரவிருக்கும் அபோகாலிப்டிக் ரேஸ் போரை விவரிக்க ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டது. அந்த கொலைகள் யுத்தத்தை ஊடுருவ உதவும் என்று அவர் நம்பினார். அவரது புகழ் ஆரம்பத்திலிருந்தே, ஒரு பாப் கலாச்சாரம்அவரைச் சுற்றி உருவானது, அதில் அவர் இறுதியில்  பைத்தியம்,  வன்முறை  மற்றும்  கொடூரமான  ஒரு சின்னமாக ஆனார். மேன்சன் பின்னர் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அவரை எழுதிய மற்றும் நிகழ்த்திய பாடல்களின் பதிவுகள் வணிக ரீதியாக வெளியிடப் பட்டன. பல்வேறு இசைக்கலைஞர்கள் அவரது பாடல்களில் சிலவற்றை மூடினார்கள் .

Susan Atkins, Leslie Van Houten and Linda Kasabian leave court after being arraigned in 1969. The three members of the Manson family had been charged with murder. AP Photo

அமெரிக்க செய்திகள் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறதா?: நவநாகரிகமான அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே, இத்தகைய நிலை என்றால், மற்ற நாடுகளின் நிலை என்ன என்பதை கவனிக்கலாம். கிருத்துவ மதத்திற்கு, குறிப்பாக பல்வேறு கிருத்துவ குழுமங்களுக்கு, உரிமை, சலுகை முதலியவைக் கொடுக்கப் பட்டிருப்பதால், அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் போலும். போர்னோகிராபியே ஏற்க்கப்பட்டுள்ள அச்சமூகத்தில் இத்தகைய குற்றவாளிகள் இருப்பது விசித்திரமாக இல்லை, ஆனால், இந்தியாவின் எதிர்காலம் நினைத்தால் தான், பயமாக இருக்கிறது. சந்தை பொருளாதார, அமெரிக்க-இந்திய கூட்டு எதிர்பார்க்கும் இந்நேரத்தில் அமெரிக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும்ல் இத்தகைய செய்திகள் வெளிவருவதும், எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. இவனது இறப்பையும், மதத்திற்க்காக இறந்தவன், தியாகி போன்று சித்தரிக்கப்படும் நிலையும் உண்டாகலாம்.

© வேதபிரகாஷ்

23-11-2017

Charles Manson - childhood shattered

[1] Newsweek, Who was Charles Manson married to? Meet the women cult leader had romanced with, by Stav Ziv, 20-11-2017 at 10:59 AM USA.

[2] http://www.newsweek.com/who-was-charles-manson-married-meet-women-cult-leader-had-romances-716883

[3] TheHindu, Helter-skelter-On the legacy of Charles Mansion, November 22, 2017 00:02 IST: Updated  22, 2017 00:08 IST

[4] http://www.thehindu.com/opinion/editorial/helter-skelter-on-the-legacy-of-charles-manson/article20628787.ece

ஏசுகிருஸ்து நான் தான் என்று அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – இரண்டாவது வரவு முடிந்து விட்டதா? (1)

நவம்பர் 23, 2017

ஏசுகிருஸ்து நான் தான் என்று அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – இரண்டாவது வரவு முடிந்து விட்டதா? (1)

Charles Mansen, jesus christ

ஊடகக்காரர்களினால் பிரபலமடைய செய்யப் பட்ட தீர்க்கதரிசி: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மத வழிபாட்டு தலைவன் மற்றும் தன்னை தானே இயேசுவின் அவதாரம் என கூறிக்கொண்ட சார்ல்ஸ் மேன்சன் (83) 19-11-2017, ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்துள்ளான்[1] என்று ஒரே ஒரு தமிழ் ஊடகத்தில் சிறியதாக செய்தி வந்தது. தமிழில், “தி இந்து”வின் இன்றுதான் சுருக்கமாக செய்தி வந்துள்ளது. இதுவும் அமெரிக்க ஊடகங்களில் வந்த செய்திகளின் சுருக்கமான தொகுப்பு என்று தெரிகிறது. “உடலை யாரிடம் ஒப்படைப்பது, எரிப்பதா புதைப்பதா என்று போலீஸார் குழம்பி நிற்கிறார்கள்,” என்றபோது, அத்தகைய நிலை ஏன் என்று வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அவன் தன்னையே ஏசு என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவன் என்பதால், புதைக்கப் படத்தான் போகிறான். கிருத்துவன் இல்லை என்றாலும், எரிக்கப்படப் போவதில்லை. “நெருங்கிய உறவினர்கள் யாரேனும் முன்வந்தால் ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் காவல் துறையினரே அவரை ‘நல்லடக்கம்’ செய்ய வேண்டியதுதான்,” என்று “தி.இந்து”கூறியுளளது தமாஷாக உள்ளது. இயக்குநர் குவெண்டின் டாரன்டினோவின் அடுத்த படம் சார்லஸ் மேன்சன் பற்றியதாக இருக்கும் என்று சில மாதங்களுக்கு அனுமானமாகப் பேசப்பட்டது[2]. இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேன்சன் பாத்திரத்துக்கு லியனார்டோ டி காப்ரியோ, டாம் க்ரூஸ், பிராட் பிட் என்று முக்கிய நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன! என்ற தோரணையில் “தி இந்து” தமாஷை விவரித்துள்ளது.

Charles Manson books sold-

குற்றவாளியின் கதையினையும் காசாக்கிய ஊடகக்காரர்கள்: கலிபோர்னியா சிறைகளில் 1969லிருந்து 48 வருடங்களாக ஒன்பது ஆயுட் தண்டனைகளை அனுபவித்து வந்தான்[3]. 12 முறை அவனுக்கு பரோல் மறுக்கப்பட்டது. அமெரிக்க சமுதாயத்தை உலுக்கியது அவது, வாழ்க்கை, சித்தாந்தம், பாப் கலாச்சாரம், யூதவிரோதம், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான எதிர்த்தன்மை, பெண்கள் வெறுப்பு மற்றும் கொலைகள், மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் முதல் சட்டமேதைகள் வரை, அவனது வாழ்க்கை, மேசன் குடும்பம் முதலியவற்றை அலசி பார்த்தனர். ஆனால், இவையெல்லாமே, பொதுவாக அமெரிக்காவில் இருக்கும் இனவெறியாளகளின் சித்தாந்தத்தை ஒத்துப் போவதாகவே உள்ளது. கு கிளக்ஸ் கிளேண் [Ku Klux Klan] என்ற இயக்கத்தின் சித்தாந்ததமும் இப்படித்தான் இருந்தது, இருந்து வருகின்றது. நியோ பாசிஸம், இனவெறி என்றெல்லாம் விவாதித்தாலும், அவனது தாக்கம் குறையவில்லை என்றே ஆகிறது. எழுத்தாளர்கள், டிவி-மற்ற ஊடகக்காரர்கள் அவனை வைத்து நன்றாகவே வியாபாரம் செய்தனர். மற்ற இதே போன்ற கொலைகளுக்கு இவனது தாக்கம் தான் என்றும் சொல்லப்பட்டது.ஆனால், இந்திய ஊடகங்கள் இப்பொழுது தான் அவனைப் பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது.

Charles Mansen, jesus christ-vedaprakash

எசுவின் இரண்டாவது வருகை, ஏசுவின் அவதாரம் முதலியவற்றை வைத்து பிரச்சாரம் செய்தது:  அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னமரிக்க நாடுகளில், ஏசு வருகிறார், இரண்டாவது வருகையை எதிர்பார்த்திருக்க வேண்டும், அப்பொழுது, தீர்க்க தரிசனங்களின் படி பல தீயவை ஏற்படும்.யுத்தங்களில் மக்கள் இறப்பார்கள்; கொடிய-விசித்திர நோய்களால் பலர் சாக நேரிடும்; பூகங்கள் நிகழ்ந்து, நகரங்கள் புதைந்து விடும்; வெள்ளப்பெருக்கு ஏற்படும்; கடலால், உலகமே நீரில் மூழ்கி விடும்; ஆகவே, விசுவாசிகள் அவரது வருகைக்காக காத்திருக்க, ஆயத்தமாக வேண்டும், இப்படி, பிராச்சாரம் செய்து வருவது தெரிந்த விசயமே. இந்தியாவில் கூட அத்தகைய கூட்டங்கள் அதிகமாகவே இருந்து வருகின்றன. உலகம் அழியப் போகிறது, சாகத் தயாராக இருங்கள் என்று கத்திக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். இவற்றை அறிந்து கொண்டுதான், இவனும் அதே தோரணையில் பிரச்சாரத்தை செய்தான். இவன் அதன்படியே ஒரு தனி வழிபாட்டுக் குழுவின் தலைவராக இருந்து, பலரை தனது கட்டுக்குள் வைத்திருந்தான்[4].

Charles Manson - victims killed

சாரலஸ் மான்சன் எப்படி கொலைகளை நடத்தி வைத்தான்: அதன்படியே, தீர்க்கதரிசனங்களை மெய்ப்பிக்க, சடங்குகள் மூலம், மேலும் நம்பிக்கையை வளர்க்க திட்டம் போட்டான். அதன் விளைவு தான், பெண்களின் கொலை. தனது சூஸன் அட்கின்ஸ் [Susan Atkins], பாட்ரிஸீயா கெரின்விங்கில் [Patricia Krenwinkel], சார்லஸ் வாட்சன் [Charles Watson] மற்றும் எஸ்லி வேன் ஹூடன் [Leslie Van Houten] என்ற சீடர்களை தொடர் கொலைகள் செய்ய சொல்லி வலியுறுத்தியவன்[5]. இவரின் இயக்கம் “மான்சன் குடும்பம்”என்று அழைக்கப்பட்டது[6]. கடந்த 1960–ம் ஆண்டு முதல் 1970–ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் தொடர் படுகொலைகளை செய்தது, லாஸ் ஏஞ்சலிஸ் நகரம், ஏன் அமெரிக்காவையே நடுங்கி கலங்க வைத்தவன்[7]. அவர்கள் அந்த 1969-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 9ம் தேதி படுகொலைகள் ஆரம்பித்தன[8]. அவர்கள் கொலை செய்தவர்களில் –

  1. ஹாலிவுட் நடிகையான ஷாரோன் டேவும் [Sharon Tate] ஒருத்தி. கொலை செய்யபடும்போது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
  2. ஜே செப்ரிங் [Jay Sebring]என்ற சிகை அலக்கார வல்லுனர்,
  3. பெரிய பணக்காரி [Abigail Folger]
  4. வொஜிசிக் பிரைகோஸ்கி என்ற எழுத்தாளர் [Wojciech Frykowski]
  5. ஸ்டீவன் பேரன்ட் [Steven Parent] என்ற குடும்பப் பொறுப்பாளரின் நண்பர்.

ஆனால், அந்தக் கொலைகளில் திருப்தியடையாத மேன்சன், ‘எப்படிக் கொலை செய்வது?’ என்று காட்டுவதற்காக, அடுத்த நாள் இரவு தானே ஆறு பேரை அழைத்துச் சென்று தன் விருப் பப்படி இருவரைக் கொலைசெய்ய வைத்தார். அடுத்த நாள் மாலை [10-08-1969], கீழ்கண்டவர்கள் அவர்களது இல்லத்தில் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டனர்[9]:

  1. சூப்பர் மார்கெட்டின் பொறுப்பாளர் [Leno LaBianca ]
  2. ரோஸ் மேரி [Rosemary] அவரது மனைவி.

இக்கொலைகளை செய்ய அவன் ஆணையிட்டாலும், தான் அதில் ஈடுபடவில்லை[10]. கொலைகளில், பிணங்களின் மீது 169 கத்திக் குத்துகள் மற்றும் குண்டு காயங்கள் இருந்தன. “பன்றி” என்ற வார்த்தை ரத்ததினால், அவர்களது வீடுகளின் சுவர்கள் மற்றும் கதவின் மீது எழுதப்பட்டிருந்தன[11].இப்படி மொத்தம் ஒன்பது பேரைக் கொடூரமாகக் கொன்றது இந்தக் கும்பல். மேன்சன் சிறையில் இருந்தாலும், அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாகப் பெண்கள் கொலை வெறியுடன்தான் அலைந்தார்கள். 1975-ல் அப்போதைய அதிபர் ஜெரால்டு ஃபோர்டைச் சுட்டுக்கொல்ல லைனெட் ஸ்க்யூக்கி ஃப்ரோம் எனும் மேன்சன் சிஷ்யை முயற்சிசெய்தது பரபரப்பான செய்தியானது[12].

Charles Manson - Tate slayings blamed Hippes

மரண தண்டனை நீக்கப்பட்டதால், தண்டனைகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது: ஜூன் 16, 1970 அன்று, மான்சன் மற்றும் அவனது கூட்டாளிகள் சூஸன் அட்கின்ஸ் [Susan Atkins], பாட்ரிஸீயா கெரின்விங்கில் [Patricia Krenwinkel] மற்றும் எஸ்லி வேன் ஹூடன் [Leslie Van Houten] லாஸ் ஏஞ்சலிஸுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணையின் போதே, நெற்றில்யில் + குறியிட்டு, அவர்கள், நீதி மன்றத்தில் பாடுவது, ஆடுவது, கத்துவது, என்று கலாட்டா செய்தனர். அதாவது, தம்முடைய நிலைப்பாட்டை தாராளமாக வெளிப்படுத்தினர். அவற்றை நீதிமன்றத்தில் தடுக்கவில்லை. மற்ற குற்றங்களுக்காக சிறையில் இருந்த அட்கின்ஸ், என்றவன் கொடுத்த வாக்குமூலத்தில், பல உண்மைகள் வெளி வந்தன. செக்ஸ், கூட்டு செக்ஸ், பலருடன் செக்ஸ், போதை மருந்து உபயோகம், மூளை சலவை என்று பல பிரயோகங்கள் இருந்தது தெரிய வந்தது. உலகத்தையே அச்சத்தில் உறையக் கூடிய குரூரக் குற்றத்தை அவர்கள் செய்ய விரும்பினர், என்றாள். மான்சன் முதலில் மரண தண்டனை அளிக்கப்பட்டது, ஆனால், அது நீக்கப்பட்டதால், தண்டனைகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

23-11-2017

Charles Manson - Polanski-Sunday News, 10-08-1969

[1] தமிழ்.நியூஸ்.காம், தன்னை இயேசுவின் அவதாரம் என கூறிக்கொண்டவர் மரணம்!, By  Jey  -November 21, 2017

[2] தி.இந்து, ஒரு நிமிடக் கட்டுரை: சார்லஸ் மேன்சன் எனும் சாத்தான்!, வெ.சந்திரமோகன், 23 Nov 2017  10:49 IST; 23 Nov 2017  10:49 IST

[3] http://tamilgossip.com/2017/11/21/american-mass-killer-charles-manson-died-83-years-old/

[4] The Conversation, How cult leaders like Charles Manson exploit a basic psychological need, April 14, 2016 8.05pm AEST Updated November 21, 2017 9.22am AEDT

[5] https://theconversation.com/how-cult-leaders-like-charles-manson-exploit-a-basic-psychological-need-57101

[6] The Atlantic Daily, The real cult of Charles Manson, by Sophie Gilbert, November 20, 2017.

[7] https://www.theatlantic.com/entertainment/archive/2017/11/the-real-cult-of-charles-manson/546206/

 

[8] CNN, Charles Manson, leader of murderous ’60s cult, dead at 83, By Steve Almasy and Brandon Griggs, Updated 0424 GMT (1224 HKT) November 21, 2017

[9] http://edition.cnn.com/2017/11/20/us/charles-manson-dead/index.html

[10] The Hindu, Cult leader and convict Charles Manson dies aged 83, LosAngeles, November 20, 2017 11:49 IST; Upadated November,2017 12:10 IST

[11] http://www.thehindu.com/news/international/cult-leader-and-convict-charles-manson-dies-aged-83/article20564968.ece

[12] http://tamil.thehindu.com/opinion/columns/article20672800.ece

அன்பு ஸ்டெல்லா கொலை வழக்கும், சம்பந்தப்பட்ட நரிப்பையூர் பாதிரி மிலன் சிங்கும், மனைவி ஜீவிதாவும்!

ஒக்ரோபர் 8, 2016

அன்பு ஸ்டெல்லா கொலை வழக்கும், சம்பந்தப்பட்ட நரிப்பையூர் பாதிரி மிலன் சிங்கும், மனைவி ஜீவிதாவும்!

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-1

அன்பு ஸ்டெல்லாவுக்கு ரசு மருத்துவ மனையில் வேலை வாங்கித் தருவதாக வாக்களித்த பாதிரி: திருநெல்வேலியை குருவிகுளம் அருகே உள்ள செவல்குளம் ஜோசப் தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் ஞானையா [Gnaniah], ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன தனது மகள், அன்பு ஸ்டெல்லாவை [Anbu Stella (24)] கண்டுபிடித்து தரக்கோரி, ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்[1].  ஸ்டெல்லா, 24. பெருமாள்புரத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டே, லேப் டெக்னிஷியன் படிப்பு படித்து வந்த இவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் 10, 2015 அன்று மாயமானார். அன்பு ஸ்டெல்லா, அரசு மருத்துவ மனையில் வேலை வாங்கிக் கொடுப்பதாக சொன்ன மிலன் சிங் என்பவனுக்கு ரூ.2.75 லட்சம் கொடுக்கச் சென்ற அவள் திரும்ப வரவில்லை என்றார்.

milan-singh-pastor-murdered-stella-hc-summons-tirunelveli-sp-the-hindu-06-10-2016அன்பு ஸ்டெல்லா தந்தை ஞானய்யையாவை அலைய வைத்த போலீசார்: குருவிகுளம் போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது, திருநெல்வேலியியிலிருந்து மகள் காணவில்லை என்பதால், அங்குசென்று புகார் கொடுக்குமாறு சொல்லி அனுப்பினர். அங்கு சென்று புகார் கொடுத்த பிறகும், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதற்குள் மார்ச்.6, 2016 அன்று தான் கடத்தப் பட்டதாக அன்பு ஸ்டெல்லாவிடமிருந்து தொலைபேசி வந்தது. மார்ச்.8, 2016 அன்று தான் வீட்டில்  டைத்து வைக்கப் பட்டிருப்பதாக அன்பு ஸ்டெல்லாவிடமிருந்து தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என்று தி இந்து கூறுகிறது[2].  தேதிகளில் எப்படி வித்தியாசம் வரும் என்றூ தெரியவில்லை. ஆனால், அது உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. பிறகு விசாரித்த போது, பாதிரி கணேசன் மற்றும் ஜெயகுமார் என்பவர்களுடன் சேர்ந்து கொண்டு தன் மகளை அடைத்து வைத்ததாக தெரிந்து கொண்டார். அதனால் தான், ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்தார்.

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-205-10-2016 அன்று விசாரணைக்கு வந்த மனு: அந்த மனு தொடர்பான விசாரணை, கடந்த அக்டோபர் 5ம் தேதி 2016 அன்று நீதிபதிகள் நாகமுத்து [S. Nagamuthu] மற்றும் முரளிதரன் [M.V. Muralidaran] அடங்கிய அமர்வு முன்பு நடந்தது[3].  அப்போது, தன் மகள் அன்புஸ்டெல்லா, கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணம் அருகே கொலை செய்யப்பட்டதாகவும், தன் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, பாதிரியார் மிலன் என்பவர் கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாகவும் ஞானையா கூறியிருந்தார். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

millan-singh-confession-about-killing-stella-06-10-2016-dtஎரித்துக் கொலை சேய்யப்பட்டது யார்? காவேரிப்பட்டணம் அருகே, எர்ர அள்ளியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில், கடந்த ஆண்டு 2015 செப்டம்பரில்,  இளம் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்[4]. அவர் யார்? எந்த விவரத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், காவேரிப்பட்டணம் அருகே தன் மகள் கொலை செய்யப்பட்டதாக ஞானையா நீதிமன்றத்தில் கூறியுள்ளதால், எர்ரஹள்ளியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது அன்பு ஸ்டெல்லாவாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்த இடத்தை, நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையையும், திருநெல்வேலி சி.பி.சி.ஐ.டி., போலீசார், காவேரிப்பட்டணம் போலீசாரிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது[5].

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-3கொலை செய்யப்பட்டது யார் என்று ஊர்ஜிதம் செய்யப்படவில்லை: வழக்கில் பல குளறுபடிகள் இருப்பதை அறிந்த நீதிபதிகள் திருநெல்வேலி எஸ்பியை ஆஜராகும் படி உத்தரவிட்டனர்[6]. அப்போது, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் [Tirunelveli SP Vikraman] நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மிலன் சிங் மற்றும் ஜீவிதா ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ளதாகவும், விசாரணைவின் போது ஜனவரி 4, 2016 அன்று காவேரிப் பட்டினத்தைல் எரித்துக் கொலை செய்ததாக அவர்கள் கொண்டதாக கூறினர்[7]. மேலும், காணாமல் போனதாக கூறப்படும் அன்பு ஸ்டெல்லா கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமான மத போதகர் மிலன் சிங்கை கைது செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று நியூஸ்.7.டிவி கூறுகிறது[8]. கண்டு பிடத்த உடல் பரிசோதிக்கப்பட்டதா, அவ்வுடல் அன்பு ஸ்டெல்லாயுடையது என்று உறுதி செய்யப்பட்டதா என்று கேட்டபோது, இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்[9]. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசார் மிக மெத்தனமாக நடந்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்[10]. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், உரிய சோதனைகள் இருந்தாலும், அவற்றை மேற்கொள்ளாமல் இருப்பது போலீஸாரின் மெத்தனத்தையேக் காட்டுகிறது. தனால் தான் 90 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர் என்று கடிந்து கொண்டனர்[11]. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமெனவும், விசாரணை அறிக்கையை நவம்பர் 14-ஆம் தேதி 2016 நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்[12]. மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசாரும் நெல்லைக்கு சென்றுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-10-2016

millan-singh-confession-about-killing-stella-06-10-2016

[1] தினத்தந்தி, காவேரிப்பட்டணத்தில் பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.சி..டி. விசாரணை தொடங்கியது, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 3:02 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 3:30 AM IST.

[2] The petitioner also said that he received a phone call from his daughter from an unknown mobile number on March 8 and she complained of having been kept under house arrest by the pastor. Though she did not disclose the location, Mr. Gnanaiah said that enquiries made by him revealed that she was kept under illegal detention in collusion with two other people named Ganesan and Jeyakumar.

http://www.thehindu.com/news/cities/Madurai/hc-summons-tirunelveli-commissioner-sp/article9190524.ece

[3] http://www.dailythanthi.com/News/Districts/Krishnagiri/2016/10/08030229/In-the-case-of-woman-burned-to-deathCB-Started-investigation.vpf

[4] தினமலர், காவேரிப்பட்டணம் பெண் கொலையில் விசாரணை தீவிரம், பதிவு செய்த நாள்: அக் 08,2016 07:48

[5] http://m.dinamalar.com/detail.php?id=1623681

[6] The Hindu, HC summons Tirunelveli Commissioner, SP, Madurai, October 6, 2016, Updated: October 6, 2016 05:45 IST

[7] When the petition was taken up for hearing on Thursday [06-10-2016] Tirunelveli SP Vikraman informed the court that Millan and his wife Geevitha were arrested in connection with the case and Geevitha in the inquiry had informed that they had murdered Stella by torching her on January 4, 2016, at Kaveripattinam in Krishnagiri district. When the body was found, it resembled the body of Stella, claimed SP.

[8] நியூஸ்.7.டிவி, மதபோதகர் ஒருவர் இளம்பெண்ணை ஏமாற்றி படுகொலை செய்த வழக்கை சி.பி.சி..டி. விசாரிக்க உத்தரவு!, October 06, 2016

[9] dtNEXT, Shift girl missing case to CB-CID: High Court Bench, Published: Oct 07,201606:00 AM.

[10] http://www.thehindu.com/news/cities/Madurai/hc-summons-tirunelveli-commissioner-sp/article9190524.ece

[11] On hearing his replay, judges became infuriated and blamed police’s lacklustre in their investigation though there were several techniques available to ascertain identity. “Owing to this, more than 90 percent cases are not investigated properly and accused in most of the cases get acquitted. People with power and influence use the lacklustre attitude of cops to escape from such offences,” observed the judges.

http://www.dtnext.in/News/City/2016/10/07011646/Shift-girl-missing-case-to-CBCID-High-Court-Bench.vpf

[12] http://ns7.tv/ta/religious-man-arrested-nellai-killing-woman.html

கன்னியாஸ்திரி அமலாவின் கொலையில் கூடும் மர்மங்கள் – ஒரே வாரத்தில் கொலையாளி என்று இருவர் மீது குற்றஞ்சாட்டப்படல்!

செப்ரெம்பர் 24, 2015

கன்னியாஸ்திரி அமலாவின் கொலையில் கூடும் மர்மங்கள் ஒரே வாரத்தில் கொலையாளி என்று இருவர் மீது குற்றஞ்சாட்டப்படல்!

Amala murder suspect - photo released by the police

Amala murder suspect – photo released by the police

போலீஸார் இன்னொரு சந்தேகிக்கும் குற்றவாளியைக் கண்டுபித்துள்ளனர்: 17-09-2015 இரவு, மாஹேவில் நாஸர் என்பவனை பிடித்தும், அவன் தான் கொலையாளி, தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு விட்டான் என்றேல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், இப்பொழுது, இன்னொருவனை குற்றவாளி என்று போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். அமலாவைக் கொலைசெய்ததாக சந்தேகிக்கிப்படும் குற்றவாளியின் படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவன் சத்தீஸ்பாபு என்கின்ற சத்தீஸ் நாயர் (38), மற்றும் அவனது விலாசம் மேழுவத்தட்டும்கல் வீடு, குட்டிக்கோடு, முன்னாட் கிராமம், காசர்கோட் என்று தெரிவித்துள்ளனர். பார்ப்பதற்கு நாகரிகமாக, நன்றாக உடையுடுத்தி இருப்பான். கண்ணாடி அணிந்து, டீ-சர்ட்டுடன் காணப்பட்ட அவன் ஒரு இளைஞன் போன்று காணப்படுகிறான்[1]. இதுவரை மூவர், பொலீஸாரால் பிடிபட்டுள்ளனர், அதில் ஒருவர் சத்தீஸ் பாபுவின் உறவினர். செல்போன் மூலம் அவர்களை சதீஸ்பாபு தொடர்பு கொண்டான் என்பதனால், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்களது வீடுகளும் சோதனையிடப்பட்டன. கோட்டயம் எஸ்.பி எஸ். சதீஸ் பினோ, அவன் ஏற்கெனவே அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளான், கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது எங்களிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன, என்கிறார்[2].

Amala murder suspect - photo released by the police.2

Amala murder suspect – photo released by the police.2

செல்போன்களை கான்வென்டுகளிலிருந்து திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவனாம்: காலையிலிருந்தே குடிக்கும் பழக்கம் கொண்டவன். அவர் ஒரு ரௌடி, பணத்திற்காக மற்றவர்களை அடிப்பான், திருடுவதும் உண்டு. முன்னர் கூட இத்தகைய குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இவனும் மனநிலை சரியில்லாதவன் என்று சொல்லப்படுகிறது. அவனிடத்திலிருந்த மொபைல் போனை வைத்து, அவன் தான் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்த போன் கூட இன்னொரு கான்வென்டில் இருந்து திருடப்பட்டதாகும். கான்வென்டுகளை குறிவைத்து திருடி வருகிறான் என்றும் சொல்கிறார்கள்[3]. பாலாவுக்கு அருகில் பரணங்கனம் என்ற கான்வென்டிலிருந்து இரண்டு செல்போன்கள் திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றைதான் சத்தீஸ் பாபு உபயோகப்படுத்துகிறான்[4]. அப்போனிலிருந்து சில அழைப்புகளை விடுத்ததிலிருந்தும், அது அந்த கான்வென்டுக்கு அருகிலிருந்து செய்யப்பட்டது என்று கண்டு பிடித்ததால், அவன் தான் என்று போலீஸார் யூகிக்கின்றனர்[5]. கான்வென்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தனது நண்பனைப் பார்க்க அங்கு வந்ததாக போலீஸார் சொல்கின்றனர். பிறகு அவன் காணப்படவில்லை. ஆனால், அவன் போன் செய்தததிலிருந்து அவன் கோட்டயத்திற்கு அருகில் சங்கனச்சேரியில் இருப்பதாக தெரிந்தது. பிறகு ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் தான் அவனை கைது செய்ய தாமதம் ஏற்படுகிறது என்று போலீஸார் சொல்கின்றனர்[6].

Kerala nun -Amla-murdered September 2015 - Lisieux Carmelite Convent

Kerala nun -Amla-murdered September 2015 – Lisieux Carmelite Convent

சத்தீஸ் பாபு தான் கொலையாளி, ஆனால் ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை: மலையாள மனோரமா அவன் தான் கொலையாளி [Kasaragod native killed Sister Amala: Police] என்றே தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[7]. இருப்பினும் வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை[8]. கான்வென்டின் படிக்கட்டுகள் கீழே கிடைத்த மண்வெட்டி தான் கொலைசெய்ததற்கு உபயோகப்படுத்தப்பட்டது என்று போலீஸார் கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அது நன்றாக துடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எப்படி அமலாவின் முகம் மற்றும் உடல் நன்றாகத் துடைக்கப் பட்டு, வேறு உடை அணிவிக்கப்பட்டதோ, அதேபோலத்தான், இதுவும் நன்றாக துடைக்கப்பட்டுள்ளது. கான்வென்டில் உள்ளவர்கள் தாங்களே தீர்மானித்து அவ்வாறு துடைத்துள்ளனர். போலீஸார் அவ்வாறு அவர்கள் ஏன் செய்தனர், ஆதாரங்களை மறைக்கும் மற்றும் அழிக்கும் வகையில் அவர்கள் ஏன் செயல்பட்டனர் என்பதும் தெரியவில்லை. அந்த கருவியில் கைரேகைகள் இருந்தனவா, அவை யாருடையவை போன்ற விவரங்கள் தெரியவில்லை.

Nasar arrested by Mahe police- Nasar seen in the picture

Nasar arrested by Mahe police- Nasar seen in the picture

ஒரே வாரத்தில் கொலையாளி என்று இருவர் மீது குற்றஞ்சாட்டப்படல் – நாஸர் போய் சத்தீஸ் பாபு மாட்டிக் கொண்டானா?: 17-09-2015 அன்று வியாழக்கிழமை இரவு மாஹே என்ற இடத்தில் கலாட்டா செய்து கொண்டிருந்த குடித்த நிலையில் காணப்பட்ட / குடித்து கலட்டா செய்து கொண்டிருந்த[9], ஒரு 48 வயதான ஆள் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக சொன்னதால் போலீஸார் பிடித்தனர் என்று சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன[10]. அவன் மனநிலை சரியில்லாதவன், பத்தியம் என்றுகூட செய்திகள் கூறுகின்றன[11]. ஆனால், தான்தான் அமலாவைக் கொன்றதாக ஒப்புக் கொண்டு மாஹே போலீஸ் நிலையத்தில் சரண்டர் அடைந்ததாக மற்ற செய்திகள் கூறுகின்றன[12]. அவன் கோட்டயத்தைச் சேர்ந்த கே. பி. நாஸர் என்றும் தெரியவந்தது. கோட்டயத்தில் குமரகோம் என்ற இடத்தில் கடீரா மஞ்சில் என்ற இடத்தில் அவனது வீடு உள்ளது. மனநிலை சரியாத நிலையில் காணப்பட்ட, குடித்துள்ள ஒருவன் தான் முன்னதாக சொன்னதையெல்லாம் மறுத்ததாக போலீஸார் கூறுகின்றனர்[13]. அதாவது வியாழக்கிழமை சொன்னத்தை வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டானாம், என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகின்றார். ஆனால், அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை[14]. ராமாபுரத்தில் ஒரு ஆட்டோ டிரைவரை தான் கொலை செய்ததாகக் கூறிக்கொண்டானாம். மேலும், கொலை செய்யப்பட்ட அன்று கோயம்புத்தூரில் இருந்ததாக போலீஸாரின் தரப்பில் கூறப்படுகிறது[15]. இத்தகைய முரண்பட்ட செய்திகள் வருவது வினோதமாக உள்ளன.

© வேதபிரகாஷ்

24-09-2015


[1] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=356700

[2] The police team probing the murder of Sr Amala, a Catholic nun at a convent in Pala, has zeroed in on the suspected killer, identified as Satheesh Nair alias Satheesh Babu, 38, of Mezhuvathattungal House, Kuttikkott, Kasargod. Though the police had closed in on the accused, suspected to be a psychopath, he gave them the slip. Sources said Satheesh, who has a criminal background, has ties with goonda gangs in various places. According to police, the suspect was involved in similar cases in the past as well and was arrested and jailed on charge of bid to commit culpable homicide consequent to a case registered at Vadakkanchery police station. “We have concrete and clinching evidence against this man,” said S Satheesh Bino, Kottayam SP.

http://www.newindianexpress.com/states/kerala/Kerala-Police-Release-Image-of-Pala-Covent-Nun-Murder-Suspect/2015/09/24/article3044173.ece

[3] http://www.ndtv.com/kerala-news/police-claim-breakthrough-in-kerala-nun-murder-case-1221070

[4] Police said he visited a friend who was admitted in a hospital in the neighbourhood of the Convent before committing the crime. He went missing from Pala and it was found from his mobile signals that he was in Changanacherry near Kottayam after the incident. Later his mobile remained switched off. Police suspect that Satheesh Babu is a serial offender targeting convents. They cited a recent complaint filed by another convent in Bharananganam near Pala, which said two mobile phones were stolen from there and that after detailed investigation it was found that the phones were used by Babu on various occasions.

http://www.business-standard.com/article/pti-stories/police-claim-breakthrough-in-nun-murder-case-115092301342_1.html

[5] Business Standard, Police claim breakthrough in nun murder case, Press Trust of India,  Kottayam (Ker), September 23, 2015 Last Updated at 22:07 IST.

[6] http://english.manoramaonline.com/news/just-in/sister-amala-murder-culprit-identified-kerala-police-pala-conven.html

[7] Malayala Manorama online, Kasaragod native killed Sister Amala: Police, Wednesday 23 September 2015 02:44 PM IST, By Our Correspondent.

[8] In spite of zeroing in on the suspect, the police have not been able to link some of the crucial evidences, like the spade which was found at the bottom of a staircase a few days into the investigation, that too cleaned up, or the decision of the convent inmates to clean the face of the victim and change her dress before informing the police, with the crime.

http://www.thehindu.com/news/national/kerala/nuns-murder-photo-of-suspect-released/article7683604.ece

[9] http://malankaranazrani.com/?p=9621

http://english.manoramaonline.com/news/just-in/sister-amala-murder-kottayam-native-arrest-mahe-police.html

[10]  http://www.khaleejtimes.com/international/india/one-held-in-nun-murder-case-in-kerala

[11] [http://www.kaumudi.com/innerpage1.php?newsid=69115

[12] According to latest reports, Nasar from Kottayam has surrendered at the Mahe Police Station claiming that he had killed Sister Amala (69), who was an inmate of Lisieux Carmelite Convent in Pala. However, the police suspect the man to be mentally unstable.

http://www.ibtimes.co.in/sister-amalas-murder-kerala-1-surrenders-what-we-know-so-far-647104

[13] A ‘mentally deranged’ man, who in a drunken state confessed to killing 69-year-old nun Sister Amala at a convent in Pala, on Friday denied whatever he said earlier, according to police.

http://english.manoramaonline.com/news/just-in/sister-amala-murder-kottayam-native-arrest-mahe-police.html

[14] During questioning, Nasar admitted to have committed a murder in Kottayam. Mahe Police then contacted Kottayam Police as they suspected Nasar was talking about Sister Amala’s death. A Kottayam Police official, who is probing the murder case, told IANS that the person was ‘mentally deranged’.”What he said last night (Thursday) has been denied by him today (Friday). A team of our officials has already left for Mahe (about 300 km from Kottayam) to look into his revelation,” said the official who did not wish to be identified.

[15] Mathrubhumi, Man who claimed to have killed nun was in Coimbatore: police, Saturday September 2015. The man, who claimed to have murdered Sr Amala at Lisieux Carmelite Convent in Pala, was in Coimbatore when the incident took place, say police sources.

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலைசெய்யப்பட்டது ஏன் (3)?

செப்ரெம்பர் 20, 2015

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு  கொலைசெய்யப்பட்டது ஏன் (3)?

Kerala nun murder - police investigation at CMC

Kerala nun murder – police investigation at CMC

புதன்கிழமை – 16-09-2015: அமலாவின் பிணத்தைக் கண்டதும், அங்கிருந்த சில கன்னியாஸ்திரிக்கள் ரத்தத்தைத் துடைத்து, ஆடைகளையும் மாற்றிவிட்டனர் என்று தெரிகிறது[1]. அதாவது, கொலை செய்யப்பட்ட பிறகு, இருக்க வேண்டிய இடத்தில் பிணம் இல்லை, கட்டில், சுவர், கதவு எல்லாம் துடைக்கப்பட்டன. அமலாவின் உடலில் படிந்திருந்த ரத்தமும் துடைக்கப்பட்டது[2]. அவ்வாறு யார் செய்யச் சொன்னார்கள், போலீஸார் வருவதற்கு முன்னர் அவ்வாறு செய்யலாமா என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியுமா-தெரியாதா என்பதெல்லாம் கேள்விக் குறியாக உள்ளது. அப்படியென்றால், கிடைத்திருக்க வேண்டிய ஆதாரங்கள் எல்லாவற்றையும் களைத்து விட்டதாக, துடைத்துவிட்டதாக ஆகிறது. அதற்குப் பிறகுதான் பொலீஸார் வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புகிறது. பிறகு கைரேகை நிபுணர்கள் வந்து, ரேகைகளை எடுத்துச் செல்கின்றனர். போலீஸார் அவர்களை ஏன் அவ்விதம் செய்தார்கள் என்று கேட்டதாகத் தெரியவில்லை. அமலா, தாமரசேரி டையோசிஸின் பிஷப், ரெமிகியஸ் இஞ்சனனியில் [Mar Remigiose Inchananiyil][3] என்பவரின் மைத்துனி என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இவர் அரசியல் செல்வாக்கும் கொண்டவர் என்பது, அவரது பேச்சுகள் மூலம் வெளிப்படுகிறது[4]. கேரளவில் நடந்து கொண்டிருக்கின்ற மதுப்பிரச்சினை போராட்டம் விசயமாக ஒமன் சாண்டி இவரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது[5].

Kerala nun murder - a nun explains what happened

Kerala nun murder – a nun explains what happened

வியாழக்கிழமை – 17-09-2015: போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் விசாரணையை முடிக்கி விட்டனர். சுவர் பெரியதாகவும், மேலே முள்வேலி போடப்பட்டிருந்ததால், வெளியே இருந்து வந்திருக்க முடியுமா என்று சந்தேகிக்கின்றனர். சில வேலைகளை செய்ய வெளியாட்கள் அமர்த்தப்பட்டிருப்பதனால், அவர்கள் யார் என்றும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மாஹே என்ற இடத்தில் கலாட்டா செய்து கொண்டிருந்த குடித்த நிலையில் காணப்பட்ட / குடித்து கலட்டா செய்து கொண்டிருந்த[6], ஒரு 48 வயதான ஆள் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக சொன்னதால் போலீஸார் பிடித்தனர் என்று சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன[7].

Nasar arrested by Mahe police

Nasar arrested by Mahe police

அவன் மனநிலை சரியில்லாதவன், பத்தியம் என்றுகூட செய்திகள் கூறுகின்றன[8]. ஆனால், தான்தான் அமலாவைக் கொன்றதாக ஒப்புக் கொண்டு மாஹே போலீஸ் நிலையத்தில் சரண்டர் அடைந்ததாக மற்ற செய்திகள் கூறுகின்றன[9]. அவன் கோட்டயத்தைச் சேர்ந்த கே. பி. நாஸர் என்றும் தெரியவந்தது. கோட்டயத்தில் குமரகோம் என்ற இடத்தில் கடீரா மஞ்சில் என்ற இடத்தில் அவனது வீடு உள்ளது. மனநிலை சரியாத நிலையில் காணப்பட்ட, குடித்துள்ள ஒருவன் தான் முன்னதாக சொன்னதையெல்லாம் மறுத்ததாக போலீஸார் கூறுகின்றனர்[10].

Nasar arrested by Mahe police- Nasar seen in the picture

Nasar arrested by Mahe police- Nasar seen in the picture

அதாவது வியாழக்கிழமை சொன்னத்தை வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டானாம், என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகின்றார். ஆனால், அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை[11]. ராமாபுரத்தில் ஒரு ஆட்டோ டிரைவரை தான் கொலை செய்ததாகக் கூறிக்கொண்டானாம். மேலும், கொலை செய்யப்பட்ட அன்று கோயம்புத்தூரில் இருந்ததாக போலீஸாரின் தரப்பில் கூறப்படுகிறது[12]. இத்தகைய முரண்பட்ட செய்திகள் வருவது வினோதமாக உள்ளன.

Kerala nun murder - the nuns in shocked condition

Kerala nun murder – the nuns in shocked condition

வெள்ளிக்கிழமை– 18-09-2015: இதனால், போலீஸார் வெள்ளிக்கிழமை மறுபடியும் மடாலயத்திற்குச் சென்று கன்னியாஸ்திரிக்களிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது ஒரு கன்னியாஸ்திரி ஒருவர், புதன்கிழமை நடு இரவு நேரத்தில், தான் தாழ்வாரத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்ததைப் பாத்ததாக சொன்னார். அவர் அந்த கான்ட்வென்டின் தலைவி அலெக்ஸ் மாரியா [ convent head Mother Alex Maria ] என்று குறிப்பிடப்படுகிறது. அவர் பெயர் ஜூலியா என்று இன்னொரு இணைதளம் (மாத்ருபூமி) குறிப்பிட்டுள்ளது[13]. சென்ற வாரத்தில் கூட அந்த கன்னிமடத்தில் யாரோ ஒருவர் (72 வயதான கன்னியாஸ்திரி), அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது[14]. அவர் பெயர் செஸிந்தா என்று கூறப்படுகிறது[15]. அவருக்கு அல்ஸிமர் வியாதி உள்ளதால், ஞாபகத்துடன் எதையும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறார் எனப்படுகிறது. டாக்டர் ரூபியா என்பவர் தன்னுடைய அறையிலிருந்து ரூ.500/- காணவில்லை என்றார்.

Kerala nun murder - the other nuns in shocked condition

Kerala nun murder – the other nuns in shocked condition

அமலாவின் அறையின் கதவின் தாழ்பாள் வெளிப்பக்கம் உடைக்கப்பட்டிருந்தது. அதனால், அவரைத் தாக்கியவர்கள் வெளியிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்றாகிறது[16].  இங்கு பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது. இவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் சொல்வதிலும் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஊடகங்கள் அவர்களது பெயர்களை மறைக்க முயல்கின்றன என்றும் தெரிகிறது. கிடைத்த கைரேகைகளில் 13 தெளிவாக இல்லை, ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது. வெள்ளிக்கிழமை மாஹேவில் கைது செய்யப்பட்ட நாஸரின் கைரேகைகளை, மடாலயத்தில் எடுத்த கைரேகைகளுடன் போலீஸார் ஒப்பிட்டுப் பார்த்தனர் என்று செய்திகள் சொன்னாலும்[17], முடிவை சொல்லவில்லை. அம்மடாலயத்தில் கடந்த காலத்தில் நடந்துள்ள சில அசாதாரண நிகழ்வுகளை விசாரிக்கப் போவதாக போலிஸார் கூறுகின்றனர்.

Pala-Kizhathadiyoor-St Josephs Church

Pala-Kizhathadiyoor-St Josephs Church

சனிக்கிழமை – 19-09-2015: மூன்று நாட்கள் விரைவாக சென்று விட்டன. பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. 19-09-2015, சனிக்கிழமை காலை 9 மணிக்கு கீழ்தடியூர் என்ற இடத்தில் உள்ள செயின்ட் ஜோசப் சர்ச்சின் கல்லறையில் அமலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது[18].

Bishop Mar Remigiose inchananiyil

Bishop Mar Remigiose inchananiyil

தாமரசேரி டையோசிஸின் பிஷப், ரெமிகியஸ் இஞ்சனனியில் முன்னிருந்து சடங்குகளை நடத்தினார். பாலாவின் பிஷப் மார் ஜோசப் கல்லரங்கட்டு, கூடுதல் பிஷப் மார் ஜோசப் முரிக்கன், ஆன்டோ ஆன்டனி எம்.பி, பி.சி. ஜார்ஜ் எம்.எல்.ஏ, பி.சி. தாமஸ் என்று பலர் கலந்து கொண்டனர்[19]. இவ்வாறு வி.ஐபிக்கள் பலர் கலந்து கொள்ள சடங்குகள் நடந்தேறின. பாவம், அமலா, ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தர ஓய்வு எடுக்கச் சென்று விட்டார். கர்த்தர் அவரை ஆசிர்வாதிப்பாராக.

The VIPs who attended the funeral

The VIPs who attended the funeral

குறிப்பு: இங்கு எடுத்தாளப்பட்டுள்ள புகைப்படங்கள் எல்லாமே கீழ் காணும் இணைத்தள வீடியோக்களிலிருந்து எடுக்கப்பட்டன[20]. அப்புகைப்படங்கள் உபயோகிப்பிற்காக அவற்றிற்கு நன்றி சொல்லப்படுகிறது[21].

© வேதபிரகாஷ்

20-09-2015

[1] Some reports claim that the inmates informed police about the incident after wiping off blood from the victim’s face and changing her dress.

http://www.newindianexpress.com/states/kerala/Sr-Amala-Death-Police-Groping-in-the-Dark/2015/09/18/article3033738.ece

[2] http://www.ibtimes.co.in/sister-amalas-murder-kerala-1-surrenders-what-we-know-so-far-647104

[3] In the year 2010 Fr. Remigius Maria Paul Inchananiyil was elected as the fourth bishop of the eparchy of Thamarassery on January 18, 2010 receiving the name Mar Remigiose Inchananiyil. On 8th of April 2010 he was consecrated the Bishop of Thamarassery by Archbishop Mar George Valiamattom and then on he took charge on the Eparchy. He received the motto ‘to be rooted and founded in love’ (Eph.3:17) as the guiding principle for his pastoral mission.

http://www.dioceseofthamarassery.org/Bishop.aspx

[4] Bishop of Thamarassery diocese, Remigius Inchananiyil, said that unlike the political parties that appear and then disappear in no time, Catholic Congress has been making its present felt in the public sphere for over a century.

http://english.manoramaonline.com/news/kerala/akcc-political-agenda-catholic-congress-against-government-policies.html

[5]  In an apparent move to pacify the Church that expressed strong reservation over government diluting the new liquor policy, Kerala Chief Minister Oommen met Thamarassery Bishop Remigiose Inchananiyil Chandy  on Dec.26 2014. and held talks with him in Kozhikode, as  the anti-liquor stir launched by the anti-liquor committee of Kerala Catholic Bishops’ Council (KCBC), chaired by Bishop Inchananiyil.

http://articles.economictimes.indiatimes.com/2014-12-27/news/57441258_1_liquor-policy-anti-liquor-stir-anti-liquor-stir

[6] http://malankaranazrani.com/?p=9621

[7] http://www.khaleejtimes.com/international/india/one-held-in-nun-murder-case-in-kerala

[8] http://www.kaumudi.com/innerpage1.php?newsid=69115

[9] According to latest reports, Nasar from Kottayam has surrendered at the Mahe Police Station claiming that he had killed Sister Amala (69), who was an inmate of Lisieux Carmelite Convent in Pala. However, the police suspect the man to be mentally unstable.

http://www.ibtimes.co.in/sister-amalas-murder-kerala-1-surrenders-what-we-know-so-far-647104

[10] A ‘mentally deranged’ man, who in a drunken state confessed to killing 69-year-old nun Sister Amala at a convent in Pala, on Friday denied whatever he said earlier, according to police.

http://english.manoramaonline.com/news/just-in/sister-amala-murder-kottayam-native-arrest-mahe-police.html

[11] During questioning, Nasar admitted to have committed a murder in Kottayam. Mahe Police then contacted Kottayam Police as they suspected Nasar was talking about Sister Amala’s death. A Kottayam Police official, who is probing the murder case, told IANS that the person was ‘mentally deranged’.”What he said last night (Thursday) has been denied by him today (Friday). A team of our officials has already left for Mahe (about 300 km from Kottayam) to look into his revelation,” said the official who did not wish to be identified.

http://english.manoramaonline.com/news/just-in/sister-amala-murder-kottayam-native-arrest-mahe-police.html

[12]  Mathrubhumi, Man who claimed to have killed nun was in Coimbatore: police, Saturday September 2015. The man, who claimed to have murdered Sr Amala at Lisieux Carmelite Convent in Pala, was in Coimbatore when the incident took place, say police sources.

[13] Sr Julia, an inmate of the convent, made a disclosure that she had seen a stranger on the terrace of the convent on the day Sr Amala was found dead. She has informed the same to the Mother.

http://english.mathrubhumi.com/news/kerala/man-who-claimed-to-have-killed-nun-was-in-coimbatore-police-english-news-1.539705

[14] A police team on Friday again took statements from the inmates of the convent where Sister Amala was staying. An inmate told police that she found a man standing on the terrace close to midnight on Wednesday. There were reports that last week another inmate was attacked by an unidentified person. “We are looking into every aspect,” a police official said.

 http://www.ibtimes.co.in/sister-amalas-murder-kerala-1-surrenders-what-we-know-so-far-647104

[15] According to reports, Sr. Jecintha, 72, an Alzheimer’s patient, was seen injured around four days before the death of Sr. Amala. However, since she could not remember the time and cause of injury, convent authorities didn’t take it seriously.

http://www.newindianexpress.com/states/kerala/Sr-Amala-Case-Police-Quiz-Scores-Dismiss-Confession/2015/09/19/article3035368.ece

[16] The investigating team suspect that Sister Amala must have been murdered by assailants who must have come from outside. The lock of the entrance grill was found broken. The investigating team also found Rs500 stolen from the room of another nun at the convent.

[17] On Friday evening a police team left for Mahe to question Nazar. Police are also finding out whether the fingerprints obtained from the crime scene are matching with that of Nazar’s.

http://timesofindia.indiatimes.com/city/kochi/Man-owns-up-to-nuns-murder-cops-confused/articleshow/49021130.cms

[18] http://malayalamnews.indiareckoner.net/2015/09/murdered-sister-amala-to-be-buried-today/

[19] The funeral of the deceased nun  was held at the St Jude Church, Keezhathadiyoor, on Saturday morning. The   functions began at the chapel of the Carmel medical centre at  9 a.m. Thamarasseri Bishop Mar Remijiose Injananiyil solemnized the holy mass  at 10 a.m. Pala bishop Mar Joseph Kallarangattu, auxiliary bishop Mar Jacob Murikkan,  Mr Anto Antony MP, Mr P.C. George MLA and Mr P.C. Thomas among others paid their last respects when the body was placed at the chapel.

http://www.deccanchronicle.com/150920/nation-current-affairs/article/kerala-police-get-clues-nun%E2%80%99s-killer

[20] http://picsture.com/sister-amala-death-case-goes-complex-fir-18-september-2015_695819b1e.html

http://picsture.com/man-claiming-murder-of-nun-sister-amala-has-hand-in-several-other-cases-fir-18-september-2015_d580ec372.html

[21] http://picsture.com/man-claiming-the-murder-of-sister-amala-tricks-police-fir-18-september-2015_0d87880f9.html

http://picsture.com/sister-amala-death-case-goes-complex-fir-18-september-2015_695819b1e.html

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலை செய்யப்பட்டது ஏன் (2)?

செப்ரெம்பர் 18, 2015

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு கொலை செய்யப்பட்டது ஏன் (2)?

Lisieux Carmelite Convent fathers and nuns Amla murder-poilice enquiry

Lisieux Carmelite Convent fathers and nuns Amla murder-poilice enquiry

கான்வென்டைச் சேர்ந்தவர்கள் போலீஸாருடன் ஒத்துழைக்கவில்லையா?: போலீஸ் தரப்பில் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, கான்வென்டைச் சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தேவையான விவரங்களை கொடுக்கவில்லையோ என்ற தோணியில் பேசுவது தெரிகிறது. போலீஸார் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக சொல்லவில்லை என்கிறார்கள்[1]. குறிப்பிட்ட இரவன்று யாரும், சந்தேகிக்கும் முறையில் எதையும் பார்க்கவில்லை, எந்த சப்தத்தையும் கேட்கவில்லை என்கிறார்கள். பல கன்னியாஸ்திரிக்கள் இருக்கும் கான்வென்டில் எப்படி ஆளரவம் எதுவும் இல்லை என்ற நிலை இருக்கும் என்பது வியப்பாக உள்ளது. ரூ.500/- காணாமல் போனதால், திருடுவதற்கு வந்திருக்கலாமோ என்றும் யூகிக்கப்படுகிறது. ஆனால், அந்த வளாகத்திற்கு காவல் இல்லையா, பாதுகாப்பாக செக்யூரிடி / காவலாளிகள் யாரும் இல்லையா, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா இல்லையா போன்ற விவரங்களும் தெரியப்படுத்தவில்லை. ஆகவே, பணம் திருட வந்தவன், முதலில் ஒரு கன்னியாஸ்திரியிடமிருந்து ரூ.500/- திருடிவிட்டு, அம்லா அறைக்கு சென்ற நேரத்தில், அவர் விழித்திருந்ததால், அவர் கத்தாமல் இருக்க தாக்கி ஓடியிருக்கலாம் என்று ஒரு கருதுகோளை உருவாக்குவார்கள் போலிருக்கிறது. அகவே அப்படியும் செய்திகள் வருவதில் ஆச்சரியம் இல்லை.

Lisseux Carmelite Convent-nun dead Sep.2015-The Hindu photo

Lisseux Carmelite Convent-nun dead Sep.2015-The Hindu photo

ரூ 500/- திருட்டு, அம்லா கொலையில் முடிந்ததா?: நூற்றுக்கணக்கில் கன்னியாஸ்திரிக்கள் இருக்கும் கார்மெல் வளாகம் பெரியது[2]. ஆயிர ஏக்கர் கணக்கில் வளாகம் விரிந்து பரந்துள்ளது. கான்வென்டுகள் 48 இடங்களில் உள்ளன[3]. அதில் ஒன்று பாலா என்ற இடத்தில் உள்ளது[4]. அக இதில் நூற்றுக்கணக்கில் கன்னியாஸ்திரிக்கள் இருந்து வருகிறார்கள் என்று தெரிகிறது. பல பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரி என்று இருக்கும், இந்த நிறுவனம், நிச்சயமாக, ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டு வரும், பாதுகாப்பு கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கென்று பலர் பணியில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி போன்றவையும் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். 17-09-2015 அன்று நள்ளிரவில் எவனாவது வந்திருந்து, இத்தனை அட்டகாசங்கள் செய்து, கொலையும் செய்திடருக்கிறான் என்றால். அவனது உருவம் நிச்சயமாக அந்த கேமராக்களில் சீக்கிருக்கும். அனால், இவற்றைப் பற்றி மூச்சுக்கூட விடாதது வேடிக்கையாக இருக்கிறது. எனவே, நள்ளிரவில், யாரோ சுவர் ஏறி குதித்து ரூ.500/- திருட வந்தான் என்று சொல்வதே விசித்திரமானது. கான்வென்டைச் சேர்ந்தவர்கள் தாம், தெளிவாக விவரங்களை சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால், போலீஸாரும் க்கொலையைப் பற்றி யேஷ்யங்களை விதைத்து விட்டுச் சென்றுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து சென்றுள்ளதே, இதில் விவகாரம் இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. கேரளாவில், தொடர்ந்து, கிருத்துவ பாதிரிகள், பாஸ்டர்கள்,  சாமியார்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் குற்றங்களில் ஈடுபட்டுவருவது, தெரிந்த விசயமாக இருக்கிறது.

Lisieux Carmelite Convent-nuns

Lisieux Carmelite Convent-nuns

அபயாவுக்குப் பிறகு அடந்துள்ள இந்த அம்லா கொலை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: இந்த கன்னியர்மடத்தில் இதற்கு முன்பும் பல முறை கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளன. அப்போது கன்னியாஸ்திரிகளின் அறைகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தான் 17-09-2015 அன்று இரவும் மடத்திற்குள் வந்திருக்க வேண்டும், அவர்கள் பணம் எதுவும் கிடைக்காததால் கன்னியாஸ்திரி அமலாவை தாக்கி இருக்க வேண்டும் என்றும் இதில் அவர் இறந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்[5]. கன்னியாஸ்திரி அமலாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். கன்னியாஸ்திரி அமலாவை கொன்றவர்களை கண்டு பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கன்னியாஸ்திரி அமலாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை கன்னியாஸ்திரி அமலாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அருகில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் கொண்டுச் செல்லப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்ட பின்பு உடல் அடக்கம் நடக்கிறது.

Lisieux Carmelite Convent-nuns.2

Lisieux Carmelite Convent-nuns.2

அபயா முதல் அம்லா வரை – கத்தோலிக்க சர்ச்சின் நிலை: மார்ச்.27, 1992ல் 19 வயதான இளம் பெண், கன்னியாஸ்திரி ஒருத்தி, இதே போல செயின்ட் ஜோசப் குழும வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முதலில் தற்கொலை என்று சர்ச் விசயத்தை மூடி மறைக்கப் பார்த்தது. ஆனால், ஆது கொலை வழக்காகி, இரு பாதிரிகள், இன்னொரு கன்னியாஸ்திரி என்று 6 ஆண்டுகள் கழித்து கைது 2008ல் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் பெயிலில் வெளியே வந்து விட்டனர். இன்று வரை அவ்வழக்கு முடிக்கப்படவில்லை[6]. கத்தோலிக்க சர்ச் அத்தகைய எதிர்மறை விளைவு ஏற்படும் வகையில் தொடர்ந்து, ஊடகங்களில் விவரங்கள், விவாதங்கள் வருவதை-வந்துக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. வழக்குகளை எப்படியாவது முடித்துவிட வேண்டும், விசயங்கள் அமுக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்யப்பட்டு வருகின்றது. மடத்திற்குள் புகுந்து கன்னியாஸ்திரி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்[7] அவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் கவனிக்க வேண்டும்..

Abhaya murder case - the three accused

Abhaya murder case – the three accused

சர்ச் தாக்கப்பட்டாலே அலறும் கிருத்துவர்கள் இப்பொழுது அமைதியாக இருப்பதேன்?: சர்ச்சுகள் தாக்கப்பட்டபோது, கிருத்துவர்களின் உரிமைகளே பறிபோயின என்று அலறினார்கள். பிஷப்புகள் எல்லோரும் சேர்ந்து பிரதம மந்திரியிடம் மனு கொடுத்தனர். ஒரு மூதாட்டி வங்காளதேசத்து முஸ்லிம்கள் கற்பழித்தபோது, நிலைக்கு ஏற்றபடி ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், வடவிந்தியாவில் நடந்த நிகழ்சிகளைப் போல, தெற்கில் நடக்கும் போது ஏன் அத்தகைய ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், முதலியவை நடத்தப்படவில்லை, காவி-சங்கப்பரிவார் தான் காரணம் என்றெல்லாம் கூறவில்லை என்று தெரியவில்லை. மற்ற கிருத்துவத் தலைவர்களும் அமைதியாகவே இருக்கின்றனர். துடித்தெழுந்து அறிக்கைகள் விடும் ஜான் தயால் போன்றோரும் காணப்படவில்லை. நிகழ்ச்சிற்கு, நிகழ்ச்சி மாறுபடும் இந்திய சர்ச்சின் நிலைப்பாடும் விசித்திரமாக இருக்கிறது. தங்களுக்கு சாதகமாக உள்ளது, அதனால், அனைத்துலக ரீதியில் பிரபலம் ஆகலாம் அல்லது இந்துக்கள் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள், சிறுபான்மையினரை அடக்கி ஆள்கின்றனர், மதரீதியில் தொல்லைக் கொடுக்கின்றனர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். சாதகமாக இல்லை எனும் போது, இவ்வாறு இருந்து விடுகின்றனர்.

© வேதபிரகாஷ்

18-09-2015

[1] http://www.hindustantimes.com/india-news/kerala-nun-found-dead-in-convent-room-murder-suspected/article1-1391069.aspx

[2] http://www.cmcpalai.org/home/inner/22

[3] http://www.cmcpalai.org/home/convents

[4] http://www.cmcpalai.org/home/convent/2578

[5]  தினமலர், கோட்டயம் : கன்னியாஸ்திரி மர்மச்சாவு, செப்டம்பர்.17 2015.14.25.

[6] http://www.thehindu.com/todays-paper/tp-national/abhaya-murder-case-remains-a-mystery/article3249534.ece

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1344096