Posts Tagged ‘குழந்தை காப்பகம்’

“மதர் தெரசா” நிறுவன கன்னித்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை!

ஜூலை 7, 2018

“மதர் தெரசா” நிறுவன கன்னித்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை!

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-4

நிர்மல் ஹிருதய், மதர் தெரசா, சேவை, நோபெல் பரிசு, முதலியன: “மதர் தெரசா” / “அன்னை தெரசா” பற்றி அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கற்பழிப்பாளிகளுடம் அதிகம் தொடர்பு வைத்திருந்தாலும், அவரைப் பாராட்டித் தான் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றம் எழுந்த போது, கண்டுகொள்ள வில்லை. அவர் செய்த சேவைக்குப் பாராட்டி, நோபெல் பரிசும் கொடுக்கப் பட்டது. இந்திய அரசு “பாரத்ன் ரத்னா” விருதும் கொடுத்தது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் / அன்னை தெரசா காப்பகம் செயல்பட்டு வரும் குழந்தை காப்பகத்தில், குழந்தைகளை விற்ற பிரச்னையில் இரண்டு கன்னியாஸ்திரிகளை போலீசார் கைது செய்தனர்[1]. ராஞ்சியில் உள்ள இந்த அறக்கட்டளை காப்பகம், திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே தாயான சிறுமிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது[2]. “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” என்பது கவனிக்கத் தக்கது. “கன்னித்தாய்கள்” எப்படி, எவ்வாறு உருவாக்கப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த காப்பகத்தில் 11 கர்ப்பிணி சிறுமிகளும், 75 மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். இந்த சிறுமிகளுக்கு பிறந்த மூன்று குழந்தைகளை தலா ரூ.50,000 க்கு அறக்கட்டளை தலைவி கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் சேர்ந்த விற்பனை செய்ததாக புகார் எழுந்தது[3].

Nirmal Hridhay - baby selling - 06-07-2018

சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்மற்றும்கன்னித்தாய்கள்உருவாக்கப் படுவது எப்படி, ஏன்?: “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” மற்றும் “கன்னித்தாய்கள்” என்றால், இளம்பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள், ஏமாற்றப் படுகிறார்கள் என்று தெரிகிறது. கர்ப்பமான பெண்களை காப்பாற்றி, குழந்தைகளை பெற வைக்கின்றன என்றால், அத்தகைய, முறையும் மறைமுகமாக ஊக்குவிக்கப் படுகிறது என்றாகிறது. கத்தோலிக்கக் கிருத்துவத்தில், பெண் கர்ப்பமானால், அபார்சன் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை மற்றும் சட்டம் உள்ளது. ஏனெனில்,, அவ்வாறு அபார்சன் செய்யப்பட்டிருந்தால், மேரிக்கு, ஏசு குழந்தை பிறந்திருக்காது. அதனால், இந்த கத்தோலிக்க நிறுவனங்கள் இவற்றை இற்றையியல் ரீதியிலும் ஊக்குவிக்கின்றன. குழந்தைகள் இல்லா தம்பதியினர் சிலர், பதிவுசெய்து காத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது[4]. இதையடுத்து, கடந்த ஆறு மாத காலமாக இந்தக் காப்பகத்தை குழந்தைகள் நல வாரிய அமைப்பினர் கண்காணித்து வந்துள்ளனர்[5].

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-5

குழந்தைகள் விற்கப்படுவது பற்றிய புகார்: முன்பு, கிருத்துவ நிறுவனங்கள் “அடாப்சன்” / தத்தெடுப்பது என்ற முறையில், குழந்தைகளை அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய தம்பதியருக்கு கொடுக்கப் பட்டு வந்தன்ன. அவையே சட்டங்களை மீறுவதாக இருந்தன. தெரசா மிஷினரீஸ் ஆப் சேரிடி 2015ல் “அடாப்சன்” முறை குழந்தை விற்பனையை நிறுத்திக் கொண்டது. தனியான, விவாகரத்து பெற்ற அல்லது பிரிந்து வாழும் பெற்றோரிடத்திலிருந்து, அதாவது பெண், தாயஐடமிருந்து குழந்தையைப் பெறுவது சுலபம் என அரசு அறிவித்த முறையை ஏற்க மறுத்தது[6]. உண்மையில் குழந்தைகள் வளர்க்கப் பட்டு, வேளையாட்களாக பயன்படுத்தப் பட்டனர். மேலும், “பிடோபைல்கள்” தமது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, இக்குழந்தைகள் வளர்க்கப் பட்டன. அப்பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்து, உச்சநீதி மன்றத்திற்கு வழக்குகளாக மாறிய போது, சர்ச்சுகளின் பெயர் கெட்டுவிடும் என்பதால், இத்தகைய “குழந்தை விற்கும்” வேலையை ஆரம்பித்துள்ளனர் போலும்.  மேலும் “கல்யாணம் ஆகாத தாயார்” எனும்போது, மறைமுகமாக அல்லது இறையியல் ரீதியில், புணர்ச்சிகள், செக்ஸ்-உடலுறுவுகள் எல்லாம் அனுமதிக்கப் படுகின்றனவா போன்ற கேள்விகளும் எழுகின்றன.

Missionaries of charity sell babies - 05-06-2018

காப்பகத்தில் சோதனை, விசாரணை, கைது: ஆகவே, புகார் பெற்ற இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் காப்பகத்தில் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[7]. அப்போது, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு இல்லாததையடுத்து, காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையின் தாயார் எடுத்துச்சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில், பெற்றோர்களிடம் குழந்தை இல்லை எனத் தெரிய வந்தது. ஜார்கன்டை சேர்ந்த மூன்று மற்றும் உபியைச் சேர்ந்த ஒன்று என நான்கு குழந்தைகளை கடத்தி விற்றது தெரிந்தது[8].இதையடுத்து, அனிமா உட்பட காப்பகத்தைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்[9]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெரசா நிறுவன பெஇய ஆட்கள் – பிஷப், முதலிய கத்தோலிக்க சாமியார்களுக்குத் தெரியாமல், இவையெல்லாம் நடக்க முடியாது. காப்பகத்தில் உள்ள ஆவணங்கள், ரிஜிஸ்டெர்கள் முதலியன ஒழுங்காக எழுதப்பட்டு, கண்கானிக்கப்பட்டு, சாரிபார்த்து வந்திருக்க வேண்ண்டும். ஆகவே, அனைத்தையும் மீறி இவ்வாறு ஒன்றிற்கும் மேலாக குற்றம் நடக்க முடியாது.

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-3

கொன்சிலியா தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டு வந்தது: இதனையடுத்து, கொன்சிலியா மற்றும் அவரது உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரியையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையில்லாத 3 தம்பதிகளுக்கு இந்த குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் முகவரிகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதிமா திவாரி என்ற பெண்கள் உரிமை வாரிய உறுப்பினர்[10], “சாதாரண சோதனையிலேயே, இரு குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது………பிறகு அனிமா இந்த்வர் காணாமல் போன குழந்தையை மே 14, 2018 அன்று குழந்தை கேட்ட தம்பதியினரிடம் கொடுக்கப்பட்டது….இது போல பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன…” ஜூலை.1 2018 அன்று சில வரைமுறைகளை  முடித்துக் கொள்ள அழைல்லப்பட்டார்கள்[11]. அப்பொழுது தான் விவகரங்கள் வெளிப்பட்டன. மேலும் விற்பனை என்பதில் தான், அபாயகரமான சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியன வருகின்றன.

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-6

11 கர்பமாகியுள்ள பெண்கள் அரசு நிருவனத்திற்கு மாற்றப்பட்டனர்: 06-07-2018 ஆன்று, தனுஶ்ரீ சர்கார், CWC அங்கத்தினர், “இங்கிருந்த 11 கர்பமாகியுள்ள பெண்கள் கருணா காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். நிர்மல் ஹிருதய் காப்பகத்தில் செயபடும் அப்பிரிவிற்கு சீல் வைத்துள்ளோம். மற்ற பிரிவுகள் எங்கள் அதிகார வரம்புகளுக்குள் வரவில்லை. இருப்பினும் மூடுவதற்கு முயற்சி செய்வோம்,” என்றார். தொடர்ந்து அவர் கூறியது, “ஹீனு என்ற இடத்தில் உள்ள, நிர்மல் சிசு பவனிற்கு, 70 குழந்தைகள் மாற்றப்படும். ஆனால், அதுவும் இவர்கள் [மிசினரீஸ் ஆப் சேரிடீஸ்] கட்டுப்பாட்டில் வருகிறது. ஒரு பிரிவில் குற்றம் நடந்துள்ள நிலையில், இன்னொரு பிரிவை நம்ப முடியாது…….எந்த குழந்தையும் / மைனாரிடி உதவி எதிர்நோக்கினார், எங்களுக்குத் தெரியப் ப்டுத்த வேண்டும். ஆனால், அவர்கள் ஏன் சட்டங்களை மதிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை……..எல்லோரும் பின்பற்றும் போது, இவர்களும் பின்பற்ற வேண்டும்,” என்றார்[12]. அதாவது, மறைமுகமாக இங்கு அவர் தனது இயலாமையை எடுத்துக் காட்டியதுடன், சர்ச்சின் அதிகாரம், பணபலம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றின் முன்பாக சாதாரண மக்கள், அரசு ஊழியர்களரொன்றும் செய்ய முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மேலும், கத்தோலிக்க சர்ச் இறையியல் ரீதியில் அத்தகைய உடலுறவு, கர்ப்பம், குழந்தை பெறுதல், பெற்றெடுத்தல், வளர்த்தல், விற்றல் முதலியவற்றை செய்தாலும், அதே இயலாமை தன்மையில் அடங்க நேரிடும் போது, குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

வேதபிரகாஷ்

07-07-2018

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-7

[1] தினமலர், குழந்தை விற்பனை: கன்னியாஸ்திரி கைது, Added : ஜூலை 07, 2018 06:32.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=2056735

[3] மாலைமலர், அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தில் குழந்தைகள் விற்பனை – 2 கன்னியாஸ்திரிகள் கைது, பதிவு: ஜூலை 07, 2018 02:41

[4] https://www.maalaimalar.com/News/National/2018/07/07024154/1174935/2-at-Mother-Teresa-charity-arrested-over-alleged-baby.vpf

[5] விகடன், அன்னை தெரசா காப்பகத்தில் குழந்தை விற்கப்படுவதாகப் புகார்! – கன்னியாஸ்திரிகள் கைது, ராம் பிரசாத், Posted Date : 13:15 (06/07/2018)Last updated : 13:15 (06/07/2018)

[6] The Missionaries of Charity stopped organising adoptions in India in 2015 saying they disagreed with government rules that made it easier for single, divorced, and separated people to adopt children. Kujur said his organisation had directed that the credentials of every home run in the state should be checked. “We hear that babies are being sold in other homes as well and are determined to put a stop to it.” https://www.thesun.co.uk/news/6707282/mother-teresa-india-charity-sold-babies-shelter-nuns-arrested/

[7] https://www.vikatan.com/news/india/129943-mother-teresa-charity-home-sold-babies-in-jharkhand.html

[8] புதியதலைமுறை, 4 குழந்தைகளை கடத்தி விற்றதாக கன்னியாஸ்திரிகள் கைது, Web Team, Published : 06 Jul, 2018 12:02 pm

[9] http://www.puthiyathalaimurai.com/news/india/48004-ranchi-staffer-from-mother-teresa-s-missionaries-of-charity-shelter-arrested-for-selling-a-child.html

[10] Scoll, Jharkhand: Missionaries of Charity staff member and nun arrested for allegedly selling a baby, by Scroll Staff, Published Yesterday · 09:42 pm

[11] https://scroll.in/latest/885446/jharkhand-missionaries-of-charity-staff-member-and-nun-arrested-for-allegedly-selling-a-baby

[12]  “As per the law, any minor child in need of care and protection should first be produced before the committee,” she said. However, why the Missionaries of Charities have not been following rules and regulations and the CWC could only now point out. Had all been faithful enough to law of the land, they must have followed”.

 

ஸ்டீபன் ஜோசப், “லிட்டில் ஏஞ்சல்’ காப்பகம் நடத்தி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால் 14 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

திசெம்பர் 29, 2016

ஸ்டீபன் ஜோசப்,லிட்டில் ஏஞ்சல்காப்பகம் நடத்தி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால் 14 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

stephen-george-jailed-for-14-years-28-12-2016

லிட்டில் ஏஞ்சல்என்ற பெயரில் ஒரு காப்பகம் நடத்தி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஸ்டீபன் ஜோசப்: கிருத்துவப் பாதிரிகளின் காமக்களியாட்டக் குற்றங்களுக்கு, இப்பொழுது தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நாசரேத் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த / 8 பேரை பலாத்காரம் செய்த  காப்பக உரிமையாளருக்கு நெல்லை கோர்ட்டில் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கூட ஒரு எஸ்.சி மாணவி புகார் கொடுத்ததால் தான் வழக்கு பலமாகி, பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிகிறது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிராமத்தை சேர்ந்தவர் ராசையா மகன் ஸ்டீபன் ஜோசப் (வயது 55)[1]. இவர் அந்த பகுதியில்  2003ம் ஆண்டு முதல் இங்கு, “லிட்டில் ஏஞ்சல்’ என்ற பெயரில் ஒரு காப்பகம் நடத்தி வந்தார்[2]. இந்த காப்பகத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தங்கி இருந்து படித்து வந்தனர். கடந்த 2012–ம் ஆண்டு இங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 பேர் தங்கி இருந்தனர். இந்த மாணவ, மாணவிகள் 1–வது வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர். இவர்களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை காப்பக நிர்வாகி ஸ்டீபன் ஜோசப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[3].

20_01_2012_007_006-stephan-joseph-2012ஜனவரி 2012ல் நடந்த விவகாரங்கள்[4]: சிறுமிகளுக்கு அடிக்கடி “செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்துள்ளார். ஆனால், சிறுமிகள் பயந்துகொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்த்துள்ளனர். அதாவது, அவர்கள் மிரட்டுப் பட்டு, வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. மேலும், இதெல்லாம், ஹொடர்ந்து நடைப்பெற்று வருவதால், வேறுவிதமாக யோசிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இதனிடையே, தூத்துக்குடி எம்.ஜி.ஆர்., நகர் ராஜன், 35, மகள் சுபாவிடம்,12, (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஸ்டீபன் ஜோசப், சில்மிஷத்தில் ஈடுபட்டார்.  இது குறித்து போனில் அவர் தந்தையிடம் தெரிவிக்க, காப்பகத்திற்கு வந்த ராஜன், ஸ்டீபன் ஜோசப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தலையில் கம்பியால் தாக்கினார். இதில், மண்டைஉடைந்து படுகாயமடைந்த ஸ்டீபன் ஜோசப்பிற்கு, நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டது. “சுபா, அவரது தம்பி அரையாண்டுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், அவர்களைக் கண்டித்தேன். அந்த ஆத்திரத்தில் அவர்களது தந்தை, தன்னை கொலைவெறியுடன் தாக்கினர்”, ஸ்டீபன் ஜோசப் நாசரேத் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ராஜனை போலீசார் கைது செய்தனர்[5]. அதாவது, பாதிரி தனது குற்றத்தை மறைத்து விசயத்தை, இப்படி திசைத்திருப்பியுள்ளான். இதிலிருந்தே, கைதேர்ந்தவன் என்று தெரிகிறது.

liitle-angels-orpanageஜனவரி 2012ல் நடந்த விவகாரங்கள்காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது: தர்மபுரிமாவட்டம் அரூரைச்சேர்ந்த மற்றொரு 15 வயது சிறுமியும், காப்பகத்தில் தனக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து கொடுமைப்படுத்தியதாக, ஸ்டீபன் ஜோசப் மீது, புகார் அளித்தார். கடந்த 18.1.2012 அன்று காப்பகத்தில் தங்கி இருந்து படித்த 2 மாணவிகள் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் முத்து நாயகத்திடம் புகார் மனு அளித்தனர்[6]. அந்த புகார் மனுவில், ‘‘எங்களை ஆபாச கேலி வார்த்தை பேசி ஸ்டீபன் ஜோசப் பாலியல் தொல்லை கொடுக்கிறார். எங்களால் இருக்க முடியவில்லை. எங்களது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வெளியே செல்ல முடியவில்லை. தினந்தோறும் பாலியல் தொல்லை கொடுப்பதால் படிப்பை பாதியில் விட்டு செல்ல விரும்புகிறோம். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கூறியிருந்தனர்[7]. எந்த அளவுக்கு, அவன், இந்த இளம்பெண்களைத் துன்புருத்தியிருந்தால், அவர்கள் புகார் செய்திருப்பார்கள்என்பதையும் கவனிக்கலாம்.

stephen-pedophile-punished-29_12_2016_016_009

பாலியல் டார்ச்சர் அறியப்பட்டதால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட பாதிரி: எஸ்.சி சமுதாய மாணவி புகார் கொடுத்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஸ்டீபன் ஜோசப்பின் “குட்டு’ வெளிப்பட்டதால் சிறுமியர் பலர், தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் டார்ச்சர் கொடுமை குறித்து தெரிவித்தனர். அவர்களிடம், தூத்துக்குடி எஸ்.பி., ராஜேந்திரன், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகம் விசாரித்தனர். அந்த காப்பகத்திலிருந்த சிறுவர், சிறுமியர் வேறொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். அதாவது, அவனின் செக்ஸ் டார்ச்சர் புகார் உண்மையென்று அறியப்பட்டது. இதையடுத்து, அந்த காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இக்காப்பகத்தில், சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த தகராறில், இவர் தாக்கப்பட்டார். படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டீபன் ஜோசப், சிறுமி கொடுத்த புகாரில், நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அங்கு, கைதிகளுக்கான சிகிச்சை வார்டிற்கு அவர் மாற்றப்பட்டார். அதாவது, அடிதடி விவகாரத்திலும், அவனது நாடகம் வெளிபட்டுவிட்டது.

child-abuse-in-indiaஇருப்பினும் ஜாமீனில் வெளி வந்த பாதிரி: இந்த புகார் தொடர்பாக அப்போதையை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜகோபால், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோவான் ஆகியோர் காப்பகத்துக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். இதில் ஸ்டீபன் ஜோசப், 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது[8]. இதையடுத்து ஸ்டீபன் ஜோசப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். குழந்தை வதை தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், பலாத்காரம் உள்பட சட்ட விரோதமாக அடித்து துன்புறுத்துதல், பெண்ணை அவதூறாக பேசுதல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[9]. ஸ்டீபன் ஜோசப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதாவது, இங்கு விவரங்கள் சொல்லப்படவில்லை என்றாலும், அவனுக்கு, போலீஸார் உதவியுள்ளது தெரிகிறது. ஏனெனில், குற்றம் அறியப்பட்டு, காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டப் பிறகு கூட, அவனுக்கு ஜாமீன் கிடைக்கிறது, வெளியில் வருகிறான் என்றால், புரிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

29-12-2016

child-abuse-in-india-increasing

[1] தினமணி, நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை, By DIN  |   Published on : 29th December 2016 02:17 AM

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/dec/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-14-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2623656.html

[3] தினகரன், காப்பக மாணவிகள் பலாத்காரம் நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு, Date: 2016-12-29@ 01:27:34

[4] தினமலர், காப்பகத்தில் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : நிர்வாகிக்கு அடி, உதை, பதிவு செய்த நாள். ஜனவரி.20, 2012. 01.23.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=389162&Print=1

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=268796

[7] தினத்தந்தி, நாசரேத் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக உரிமையாளருக்கு 14 ஆண்டு சிறை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு, பதிவு செய்த நாள்: புதன், டிசம்பர் 28,2016, 7:37 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 29,2016, 1:30 AM IST

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/12/28193705/Sexual-harassment-to-studentsArchive-owner-14year.vpf

[9] He was arrested on January 19, 2012 following a complaint against him and booked under IPC Sections 354 (assault or criminal force to woman with intent to outrage her modesty), 342 (punishment for wrongful confinement), among others and Section 23 of Juvenile Justice Act and Section 3(1)XII of SC/ST Act.

http://indianexpress.com/article/india/orphanage-owner-gets-14-yrs-jail-for-sexually-harassing-girls-4449345/

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்-ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்-வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (3)

செப்ரெம்பர் 5, 2015

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (3)

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.4

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.4

ஆங்கில ஊடகங்கள் இதே செய்தியை வெளியிட்டுள்ள விதம்: ஆங்கில ஊடகங்கள் வழக்கம் போல இச்செய்தியை வேறுவிதமாகத்தான் வெளியிட்டுள்ளன. “65 வயதானவர் இளம்பெண்ணை கற்பழித்ததற்கு சென்னையில் கைது செய்யப்பட்டார்”, என்று தலைப்பிட்டு செய்தியைக் கொடுத்துள்ளது[1]. அதாவது, ஏதோ பெருசு, சிறுசைக் கற்பழித்தது என்ற ரீதியில் உள்ளது[2]. இந்தியன் எக்ஸ்பிரஸ், “பாதுகாப்பு இல்லத்தில் இளம்பெண் உள்

65-years old arrestred for raping girl in chennai-Sept.4, 2015, The Hindu

65-years old arrestred for raping girl in chennai-Sept.4, 2015, The Hindu

ளூரில் உருவான வில்லனால் செக்ஸ்-தொல்லைக்குள்ளானாள்”, என்று தலைப்பிட்டு செய்தி கொடுக்கிறது[3]. குழந்தை கண்காணிப்பு சமூக ஆர்வலர் ஏ. நாராயணன் அந்நிய பணத்தின் மூலம் இவ்வாறு காப்பகங்களை வைத்து, நன்றாக வியாபாரம் செய்கிறார்கள் என்றது மட்டும் தான் புதிய விசயம்[4].

Padam A Narayanan, child activist

Padam A Narayanan, child activist

“டைம்ஸ் ஆப் இந்தியாவோ”, “இளம்பெண் குழந்தை பெற்றெடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, மூத்த குடிமகன் பிடிபட்டார்”, என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[5]. பால் இம்மானுவேல், சேலையூக்கு அருகில் காந்தி நகரில் நடத்திவரும் குட்செப்ஹர்ட் குழந்தை இல்லத்தில் [Good Shepherd Children’s Home at Gandhi Nagar near Selaiyur] அப்பெண் 2014ல் இருந்தாள் என்ற விசயம் உள்ளது[6]. டெக்கான் க்ரோனிகல், “14-வயது குமரியை கற்பழித்தற்காக எழுபதுகளில் உள்ளவர் பிடிபட்டார்”, என்று தலைப்பிட்டு செய்தியைக் கொடுத்துள்ளது[7]. அந்த சிறார் இல்லத்தின் பெயர் “வல்லமை தாராயோ” என்று குறிப்பிடுகிறது. அது மாம்பாக்கத்தில் நூதன்சேரியில் உள்ளது என்று போலீஸார் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளது[8]. ஏ. நாராயணன் குறிப்பிட்டதை, “பாடம்” நாராயணன் சொன்னார் என்று அதையும் சேர்த்துள்ளது. ஆனால், எல்லாமே அவர் பாதிரி என்பதை குறிப்பிடாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

Times of India news, 04-09-2015 - senior citizen held

Times of India news, 04-09-2015 – senior citizen held

கற்பழிப்புகள், பாலியல் குற்றங்கள் செக்யூலரிஸ மயக்காமாக்கப் படுகின்றனவா?: தி இந்து[9] “65 வயதானவர் இளம்பெண்ணை கற்பழித்ததற்கு சென்னையில் கைது செய்யப்பட்டார்”, எனும்போது, பெருசு, சிறுசைக் கற்பழித்தது என்ற ரீதியில் உள்ளது ஆனால், அதாவது, இப்பொழுதெல்லாம் தாத்தாக்கள் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்கிறார்கள், கற்பழிக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. அதுபோல, இதையும் எடுத்துக் கொள்ளலாம்., என்ற போக்கில் உள்ளது அதில் எங்குமே அவர் பாதிரி என்பது குறிப்பிடப்படவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ், “பாதுகாப்பு இல்லத்தில் இளம்பெண் உள்ளூரில் உருவான வில்லனால் செக்ஸ்-தொல்லைக்குள்ளானாள்”, எனும்போது, இப்பொழுது தீவிரவாதத்தை “உள்ளூர் தீவிரவாதம்” என்று குறிப்பிடுகிறார்கள். அதுபோல, இது உள்ளூர் வில்லன்களின் செக்ஸ்-குற்றங்கள் என்று சொல்கிறது போலும். “இந்தியன் மேட் பாரின் லிக்கர் [Indian Made Foreign Liquor – IMFL]/ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்நியநாட்டு சரக்கு” என்பது போல, “அந்நியநாட்டு செக்ஸ்முறைகள் இந்தியர்கள் பின்பற்றுகிறார்கள்” என்று புரிந்து கொள்ள சொல்கிறார்கள் போலும். “டைம்ஸ் ஆப் இந்தியா”, “இளம்பெண் குழந்தை பெற்றெடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, மூத்த குடிமகன் பிடிபட்டார்”, எனும்போதும், அதுசாதாரண கற்பழிப்பு செயல், அவ்வளவுதான் எபது போலுள்ளது. ஆனால், அந்த செய்தி நிருபர் டேனியல் ஜார்ஜ் ஒரு கிருத்துவர், அவர் இந்த செய்தியை வெளியிட்டிருந்தாலும், ஒரு கிருத்துவராக, விசயங்களை மறைத்தாரா அல்லது செய்தியை செக்யூலரிஸப்படுத்தியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அதாவது, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் செய்தால் செக்யூலரிஸக் குற்றம், ஆனால் மற்றவர்கள் செய்தால், அது கம்யூனல் குற்றம், அதாவது, இந்துக்கள் செய்த குற்றம்!

Zonta Research Centre, Madambakkam- Amaidhi

Zonta Research Centre, Madambakkam- Amaidhi

சர்ச் நடத்தும் பால் இமானுவேல், ஜே. பிரபுதாஸ் முதலியோர் பாதிரிகள் இல்லையா?: ஜோன்ட் மையத்தின் கல்பனா ஷண்முகம் புகாரில், ‘‘மகளிர் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான 45 செண்டு நிலம் ரூ.4½ கோடி மதிப்பு உள்ளது. இந்த தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் பால் இமானுவேல் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து குழந்தைகள் காப்பகம் மற்றும் சர்ச் நடத்தி வருகிறார். மகளிர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அங்கு சென்று நியாயம் கேட்கும்போது அவர்களை ஆட்களை வைத்து மிரட்டி அனுப்புகிறார். மகளிர் தொண்டு நிறுவன சொத்துகளை ஆக்கிரமித்து வைத்து உள்ள அவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்டு தரவேண்டும்’’ என கூறி இருந்தார்[10], என்று தெளிவாக உள்ளது. சர்ச் நடத்துவது வேடிக்கைக்காகவா இல்லை வேறெதற்காகவா என்று ஆங்கில ஊடகங்கள் தாம் தெளிவு படுத்த வேண்டும். சர்ச் மற்றும் குழந்தைகள் காப்பகம் பாலியல், செக்ஸ் மற்றும் கற்பழிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்களா? இதெல்லாம் கூட, உள்ளூர் சமாசாரங்களா? ஆகவே, கீழ்கண்டவாறு தலைப்பிட்டு ஏன் செய்திகளை வெலியிடவில்லை என்று கேட்கமுடியுமா?:

  • “சர்ச் நடத்திய பால் இமானுவேலின் தந்தை இளம்பெண்ணை கற்பழித்ததற்கு சென்னையில் கைது செய்யப்பட்டார்,
  • “சர்ச் நடத்திய பால் இமானுவேலின் தந்தை பிரபுதாஸ்” என்ற 65 வயதானவர் இளம்பெண்ணை கற்பழித்ததற்கு சென்னையில் கைது செய்யப்பட்டார்”,
  • “பாதுகாப்பு இல்லத்தில் இளம்பெண் உள்ளூரில் உருவான “சர்ச் நடத்திய பால் இமானுவேலின் தந்தை பிரபுதாஸ்” என்ற வில்லனால் செக்ஸ்-தொல்லைக்குள்ளானாள்”,
  • “இளம்பெண் குழந்தை பெற்றெடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, உருவான “சர்ச் நடத்திய பால் இமானுவேலின் தந்தை பிரபுதாஸ்” என்கின்ற மூத்த குடிமகன் பிடிபட்டார்”,

இப்படி கேள்விகள் கேட்டால் கம்யூனலிஸமாகி விடுமா? இல்லை இந்துத்துவம் என்று கூட முத்திரைக் குத்தப்படலாம். சமீபத்தில் “ராதே மா” விசயத்தில், செய்திகளையும், படங்களையும், வீடியோக்களையும் அள்ளி வீசிய ஊடகங்கள், மற்ற அதே போல குற்றங்களில் ஈடுபட்டவர்களின் விசயங்களில் ஏன் செயல்படவில்லை என்று மக்கள் கேட்க ஆரம்பித்தவுடன், குறைத்துக் கொண்டதை கவனிக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில், நித்தியானந்தாவை வைத்துக் கொண்டு, இன்றும் கிண்டலடித்து வருகின்றனர். காஞ்சி சங்கராச்சாரியாரைவும் விடுவதில்லை. இது பாரபட்சமாக இருக்கிறதே என்று சாதாரண இந்தியனுக்கு இப்பொழுது தெரிந்து விட்டதே! பிறகு, இத்தகைய அணுகுமூறையை என்ன பெயர் சொல்லிக் குறிப்பிடுவது?

வேதபிரகாஷ்

© 05-09-2015

[1] The Hindu, 65-year-old arrested for raping girl in Chennai, CHENNAI, September 4, 2015, Updated: September 4, 2015 09:13 IST.

[2]  A 65-year-old man, who was in charge of the administration of a children’s home near Tambaram, was picked up by the police on Thursday on charges of raping a teenaged girl staying there. The 14-year-old girl, who was among the children rescued from the home, had delivered a baby girl in a government hospital in the city on August 31, 2015.  When doctors at the hospital grew suspicious, they informed the police. Based on a complaint from Kalpana Shanmugham, founder of the NGO Zonta Research Centre, police arrested Prabhudass and he was remanded to custody later in the day. After the preliminary inquiry by the police, the girl said that Prabhudass, who runs the home along with his son and daughter-in-law, had raped her many times, police added. J. Prabhudass, his son, P. Paul Immanuel and daughter-in-law Jothi Plasingh (28) are out on bail, having been arrested on charges of land grabbing and intimidation in July 2015.

http://www.thehindu.com/news/cities/chennai/65yearold-arrested-for-raping-girl-in-chennai/article7613781.ece

[3] Express News Service,  Home-grown Villain Sexually Abuses Girl at Shelter Home , Posted on Sep 4, 2015 in Chennai.

[4]  http://m.newindianexpress.com/chennai/531626

[5] Times of India, Senior citizen held on rape charges two days after girl gives birth to child in Chennai, Daniel George, TNN | Sep 3, 2015, 01.45 PM IST.

[6] http://timesofindia.indiatimes.com/city/chennai/Senior-citizen-held-on-rape-charges-two-days-after-girl-gives-birth-to-child-in-Chennai/articleshow/48786403.cms

[7] Deccan Chronicle, Sexagenarian held for raping 14-year-old girl, September 04, 2015, 03.06 am IST

[8] The police arrested Prabhu Das, father of Immanuel, who runs a ‘charity home’ (Vallamai tharayo) at  Noothanchery in Madambakkam, a southern city suburb.

http://www.deccanchronicle.com/150904/nation-crime/article/sexagenarian-held-raping-14-year-old-girl

[9] The Hindu, 65-year-old arrested for raping girl in Chennai, CHENNAI, September 4, 2015, Updated: September 4, 2015 09:13 IST.

[10]  தினத்தந்தி, போலி ஆவணங்கள் மூலம் தொண்டு நிறுவன சொத்துகளை அபகரித்த 3 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூலை 06,2015, 3:46 AM IST

பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூலை 06,2015, 3:46 AM IST.

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்-ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்-வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (2)

செப்ரெம்பர் 5, 2015

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (2)

May-George-and-Mano-Candappa-lighting-the-oil-lamp-April 2, 2013

May-George-and-Mano-Candappa-lighting-the-oil-lamp-April 2, 2013

ஜனவரி 2014ல் மே ஜார்ஜ் இறந்தவுடன், பால் இம்மானுவேல் அபகரித்துக் கொண்டார் (2014-2015): ஜனவரி 2014ல் மே ஜார்ஜ் இறந்ததை சாதாரணமாகக் குறிப்பிட்டு, திடீரென்று, இப்பொழுது, ஊடகங்கள், “அவர் இறந்த பிறகு நூத்தஞ்சேரி பகுதியை சேர்ந்த பால்  இமானுவேல் (32) என்பவர் இந்த நிறுவனத்தை அபகரித்து கொண்டார். இதுதொடர்பாக, மகளிர் ஜோன்டா தொண்டு நிறுவன நிர்வாகி கல்பனா, சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.  புகாரில், ‘‘மகளிர் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான 45 செண்டு நிலம் ரூ.4½ கோடி மதிப்பு உள்ளது. இந்த தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் பால் இமானுவேல் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து குழந்தைகள் காப்பகம் மற்றும் சர்ச் நடத்தி வருகிறார். மகளிர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அங்கு சென்று நியாயம் கேட்கும்போது அவர்களை ஆட்களை வைத்து மிரட்டி அனுப்புகிறார். மகளிர் தொண்டு நிறுவன சொத்துகளை ஆக்கிரமித்து வைத்து உள்ள அவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்டு தரவேண்டும்,’’ என கூறி இருந்தார்[1], என்கின்றன. அப்படியென்றால், பால் இம்மானுவேல் எப்படி திடீரென்று, இந்த விவகாரங்களில் வந்தார்? பால் இமானுவேலுக்கும் ஜோன்டா மையம், அல்லது அதன் பொறுப்பாளிகள் அல்லது மே ஜார்ஜ் இவர்களுக்கு என்ன தொடர்பு? இவற்றை யாரும் எடுத்துக் காட்டுவதாக இல்லை.

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015

ஜனவரி 2014 முதல் ஜூன் 2015 வரை என்ன நடந்தது?: பால் இம்மானுவேல் “டுவிட்டரில்” தன்னுடைய படங்கள் பலவற்றை போட்டிருக்கிறார்(ன்?). குழந்தைகள், சிறுமிகள், பெண்களுடன் இருப்பது போல அப்படங்ள் உள்ளன[2]. பிப்ரவரி 2015ல், ஒருவருடைய பிறந்த நாள் என்றும் புகைப்படங்கள் உள்ளன. ஒரு வீட்டின் அறையில் உட்கார்ந்திருப்பது போல படங்கள் உள்ளன. அந்த இடம் மாடம்பாக்கத்து “ஜோன்டா அமைதி மையமா” அல்லது வேறு இடமா என்று தெரியவில்லை. மேலும் இவன் நடத்திய “குழந்தைகள் இல்லம்” அனுமதியில்லாமல் நடந்ததால் ஜூன்.2015ல் கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்திகள் கூறுகின்றன. ஜூலையில், இவன் மனைவி ஜோதி பிளசிங் (28), தந்தை ஜே. பிரபுதாஸ் (65) முதலியோருடன் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், பிரபுதாஸ் பெயிலில் வந்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில், செப்டம்பர்.2, 2015 புதகிழமை அன்று காஞ்சிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்த நாளில் கைது செய்யப்படுகிறார். ஜோன்ட் தொண்டு நிறுவன நிர்வாகி கல்பனா ஏன் சில மாதங்கள் பொறுத்திருந்து புகார் கொடுக்க வேண்டும் என்றும் புரியவில்லை. ஜனவரி 2014 முதல் ஜூன் 2015 வரை, சுமார் ஒன்றரை வருடம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

J Prabhudass arrestred for raping girl in chennai-Sept.4, 2015, Express photo

J Prabhudass arrestred for raping girl in chennai-Sept.4, 2015, Express photo

போலி ஆவணங்கள் தயாரித்த பால் இம்மானுவேல்:. கல்பனா சண்முகம் புகார் கொடுத்த தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தென் மண்டல இணை ஆணையர் அருண், பரங்கிமலை துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சேலையூர் உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் இது தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில், பால் இமானுவேல் குழந்தைகள் காப்பகம் நடத்த இடம்கேட்டு தொண்டு நிறுவன இடத்திற்கு வந்து உள்ளார். மே ஜார்ஜ் இறந்த பிறகு தொண்டு நிறுவனத்தை தன்னை நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்தது போல போலியாக ஆவணங்களை தயாரித்து தன் மனைவி ஜோதி பிளசிங் (28), தந்தை பிரபுதாஸ்(65) ஆகியோர்களை டிரஸ்ட் உறுப்பினர்களாக்கி மகளிர் தொண்டு நிறுவன சொத்துகளை அபகரித்தது தெரியவந்தது[3]. இதையடுத்து, சேலையூர் போலீசார் விசாரித்து, அம்மூவரையும் கைது செய்தனர். இதையடுத்து, குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 9 குழந்தைகளை மீட்ட போலீசார் அரசு காப்பகத்திற்கும், பெற்றோருடனும் அனுப்பினர். இந்நிலையில், இந்த தொண்டு நிறுவனத்தில் இருந்து தாயுடன் அனுப்பப்பட்ட 14 வயது சிறுமி பெண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு[4]:

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.3

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.3

இளம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது (31-08-2015, புதன்கிழமை): சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்தவர் பாமா. கணவரை பிரிந்தவர்.  இவரது மகள் சுமதி (14). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர்கள்  குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்தி வந்தனர்.  அப்போது பாமா, தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஜோதி நகரில் உள்ள காப்பகத்தில் சுமதியை சேர்த்துள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. எனவே, அந்த காப்பகத்தில் இருந்தவர்கள் அவர்களின் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல சுமதியும் தன் தாய் பாமாவுடன் வீட்டுக்கு அனுப்பி  வைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி சுமதி திடீரென வாந்தி எடுத்துள்ளார். மேலும் அடிக்கடி மயக்கம் வருவதாக தாய் பாமாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து  பாமா தன் மகளை அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அப்போதுதான் 14 வயது சிறுமி கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாமாவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன் மகளிடம் விசாரித்துள்ளார். ஆனால் ரகசியம் காத்து வந்துள்ளார்[5].இந்நிலையில்,  திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.5

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.5

கன்னித்தாயின் வயதை மறைத்தது: அப்போது பெண்ணின் வயது குறித்து  கேட்டபோது பாமா தவறான தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் வசிக்கும் செம்மஞ்சேரி  போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் பாமா மற்றும் சுமதி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் சுமதி கூறியதாவது, “நான் காப்பகத்தில்  இருந்தபோது பால் இம்மானுவேலின் தந்தை பிரபுதாஸ் (67), எனக்கு மிட்டாய் சாப்பிடுவதற்கு வாங்கி தருவார். எனக்கு துணையாக படுத்துக்கொள்கிறேன் என்று அடிக்கடி தப்பாக நடந்து கொண்டார்[6]  / என்னை பல முறை பலாத்காரம் செய்தார். வெளியே சொன்னால் காப்பகத்தை விட்டு  வெளியே விரட்டிவிடுவேன் என்று மிரட்டினார். என் தாயிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே, நான் அமைதியாக இருந்தேன். அதற்குள்  காப்பகம் மூடப்பட்டதால், என்னை என் தாயுடன் அனுப்பிவிட்டனர்”, என்றார். இதைத் தொடர்ந்து, வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் பதுங்கியிருந்த பால் இம்மானுவேல் மற்றும் பிரபுதாஸை போலீசார் பிடித்து   விசாரித்தனர். அவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். அந்த குழந்தையின் தந்தை தான் என்பதை ஒப்புக் கொண்டார்.  பின்னர் செம்மஞ்சேரி போலீசார், சம்பவம் நடந்த இடமான சேலையூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து, சேலையூர் போலீசார்  பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு  சட்டத்தில் பிரபுதாஸை கைது செய்தனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது  காப்பகம் மூடப்பட்டதால் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு தெரியவந்ததுள்ளது. இதுபோன்று எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரியவில்லை.இதுவே காப்பகம் மூடப்படவில்லை என்றால் அந்த குழந்தையும் அனாதையாக மாற்றி மூடி மறைத்து விடுவார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறினர்[7]. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

With-fake-documents3-arrested-for-property-seized-aid_SECVPF

With-fake-documents3-arrested-for-property-seized-aid_SECVPF

விசாரித்ததில், பாதிரியார் குற்றத்தை ஒப்புக் கொண்டார்: மருத்துவமனை நிர்வாகத்தினர் சிறுமியிடம் விசாரித்ததில், மப்பேடு, ‘குட் ஷெப்பர்டுசேவை இல்லத்தில், தங்கி இருந்தேன். பிரபுதாஸ், இமானுவேல்தான் எனது கர்ப்பத்திற்கு காரணம் என்றார். இதுகுறித்து, சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது: மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரியில், ‘குட் ஷெப்பர்டு’ என்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் தேவாலயம் உள்ளது. சிறுமி தெரிவித்த பெயர் கொண்ட நபர்கள், நுாத்தஞ்சேரி, மாணிக்கம் நகர் 2வது தெருவில், போலி ஆவணம் மூலம், குழந்தைகள் காப்பகம் நடத்தியதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள். மே மாதம், ஜான் என்பவருக்கு சொந்தமான இடத்தில், போலி ஆவணம் மூலம், காப்பகம் நடத்தி வருவதாக, கல்பனா என்பவர் அளித்த புகாரால், கடந்த ஜூலை 5ம் தேதி.2015, மேலே குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். கைதுக்கு பிறகு, காப்பகத்தில் இருந்த, ஒன்பது குழந்தைகள், அரசு காப்பகத்திற்கும், பெற்றோருடனும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒருவர் தான் இந்த சிறுமி. சிறுமியின் தகவலையடுத்து, பாதிரியார் பிரபுதாசை கைது செய்தோம்[8]. விசாரித்ததில், பாதிரி யார் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரது பாதுகாப்பில் சிறுமி இருந்தபோது, பூப்பெய்தி உள்ளார். விவரம் தெரியாத அந்த சிறுமியை, பாதிரியார் பிரபுதாஸ், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி, காப்பகத்தை விட்டு வெளியேறி, தற்போது குழந்தை பெற்று உள்ளார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பாதிரியாருக்கு, மரபணு சோதனை நடத்த உள்ளோம்[9]. ஒரு சிறுமியை மட்டும் பலாத்காரம் செய்துள்ளாரா அல்லது காப்பகத்தில் தங்கியிருந்த மற்ற குழந்தைகளையும் பலாத்காரம் செய்தாரா என, சோதனையில் தெரியவரும்’ என்றார்.

வேதபிரகாஷ்

© 05-09-2015

[1]  தினத்தந்தி, போலி ஆவணங்கள் மூலம் தொண்டு நிறுவன சொத்துகளை அபகரித்த 3 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூலை 06,2015, 3:46 AM IST

பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூலை 06,2015, 3:46 AM IST.

[2] https://twitter.com/paulimmanuel10/media

[3] http://www.wikinewsindia.com/tamil-news/dinakaran/crime-dinakaran/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=165110

[5]  தினகரன், அனுமதியின்றி நடத்திய ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு ப்;எண் குழந்தை பிறந்தது: அரசு மருத்துவமனை டாக்டர்கள் அதிர்ச்சி; தொண்டு நிர்வாகியின் தந்தை கைது, செப்டம்பர்.4, 2015, 0058.32.

[6] http://www.maalaisudar.com/newsindex.php?id=48869%20&%20section=19

[7]  மாலைச்சுடர், சிறுமியை தாயாக்கிய முதியவர், Thursday, 03 September, 2015   03:31 PM

[8] தினமலர், சிறுமியை பலாத்காரம் செய்த சேவை இல்ல பாதிரியார் கைது, செப்டம்பர்.4, 2015, 03.20.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1334124