Posts Tagged ‘குழந்தை கடத்தல்’

“மதர் தெரசா” நிறுவன கன்னித்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை!

ஜூலை 7, 2018

“மதர் தெரசா” நிறுவன கன்னித்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை!

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-4

நிர்மல் ஹிருதய், மதர் தெரசா, சேவை, நோபெல் பரிசு, முதலியன: “மதர் தெரசா” / “அன்னை தெரசா” பற்றி அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கற்பழிப்பாளிகளுடம் அதிகம் தொடர்பு வைத்திருந்தாலும், அவரைப் பாராட்டித் தான் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றம் எழுந்த போது, கண்டுகொள்ள வில்லை. அவர் செய்த சேவைக்குப் பாராட்டி, நோபெல் பரிசும் கொடுக்கப் பட்டது. இந்திய அரசு “பாரத்ன் ரத்னா” விருதும் கொடுத்தது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் / அன்னை தெரசா காப்பகம் செயல்பட்டு வரும் குழந்தை காப்பகத்தில், குழந்தைகளை விற்ற பிரச்னையில் இரண்டு கன்னியாஸ்திரிகளை போலீசார் கைது செய்தனர்[1]. ராஞ்சியில் உள்ள இந்த அறக்கட்டளை காப்பகம், திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே தாயான சிறுமிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது[2]. “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” என்பது கவனிக்கத் தக்கது. “கன்னித்தாய்கள்” எப்படி, எவ்வாறு உருவாக்கப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த காப்பகத்தில் 11 கர்ப்பிணி சிறுமிகளும், 75 மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். இந்த சிறுமிகளுக்கு பிறந்த மூன்று குழந்தைகளை தலா ரூ.50,000 க்கு அறக்கட்டளை தலைவி கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் சேர்ந்த விற்பனை செய்ததாக புகார் எழுந்தது[3].

Nirmal Hridhay - baby selling - 06-07-2018

சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்மற்றும்கன்னித்தாய்கள்உருவாக்கப் படுவது எப்படி, ஏன்?: “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” மற்றும் “கன்னித்தாய்கள்” என்றால், இளம்பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள், ஏமாற்றப் படுகிறார்கள் என்று தெரிகிறது. கர்ப்பமான பெண்களை காப்பாற்றி, குழந்தைகளை பெற வைக்கின்றன என்றால், அத்தகைய, முறையும் மறைமுகமாக ஊக்குவிக்கப் படுகிறது என்றாகிறது. கத்தோலிக்கக் கிருத்துவத்தில், பெண் கர்ப்பமானால், அபார்சன் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை மற்றும் சட்டம் உள்ளது. ஏனெனில்,, அவ்வாறு அபார்சன் செய்யப்பட்டிருந்தால், மேரிக்கு, ஏசு குழந்தை பிறந்திருக்காது. அதனால், இந்த கத்தோலிக்க நிறுவனங்கள் இவற்றை இற்றையியல் ரீதியிலும் ஊக்குவிக்கின்றன. குழந்தைகள் இல்லா தம்பதியினர் சிலர், பதிவுசெய்து காத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது[4]. இதையடுத்து, கடந்த ஆறு மாத காலமாக இந்தக் காப்பகத்தை குழந்தைகள் நல வாரிய அமைப்பினர் கண்காணித்து வந்துள்ளனர்[5].

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-5

குழந்தைகள் விற்கப்படுவது பற்றிய புகார்: முன்பு, கிருத்துவ நிறுவனங்கள் “அடாப்சன்” / தத்தெடுப்பது என்ற முறையில், குழந்தைகளை அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய தம்பதியருக்கு கொடுக்கப் பட்டு வந்தன்ன. அவையே சட்டங்களை மீறுவதாக இருந்தன. தெரசா மிஷினரீஸ் ஆப் சேரிடி 2015ல் “அடாப்சன்” முறை குழந்தை விற்பனையை நிறுத்திக் கொண்டது. தனியான, விவாகரத்து பெற்ற அல்லது பிரிந்து வாழும் பெற்றோரிடத்திலிருந்து, அதாவது பெண், தாயஐடமிருந்து குழந்தையைப் பெறுவது சுலபம் என அரசு அறிவித்த முறையை ஏற்க மறுத்தது[6]. உண்மையில் குழந்தைகள் வளர்க்கப் பட்டு, வேளையாட்களாக பயன்படுத்தப் பட்டனர். மேலும், “பிடோபைல்கள்” தமது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, இக்குழந்தைகள் வளர்க்கப் பட்டன. அப்பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்து, உச்சநீதி மன்றத்திற்கு வழக்குகளாக மாறிய போது, சர்ச்சுகளின் பெயர் கெட்டுவிடும் என்பதால், இத்தகைய “குழந்தை விற்கும்” வேலையை ஆரம்பித்துள்ளனர் போலும்.  மேலும் “கல்யாணம் ஆகாத தாயார்” எனும்போது, மறைமுகமாக அல்லது இறையியல் ரீதியில், புணர்ச்சிகள், செக்ஸ்-உடலுறுவுகள் எல்லாம் அனுமதிக்கப் படுகின்றனவா போன்ற கேள்விகளும் எழுகின்றன.

Missionaries of charity sell babies - 05-06-2018

காப்பகத்தில் சோதனை, விசாரணை, கைது: ஆகவே, புகார் பெற்ற இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் காப்பகத்தில் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[7]. அப்போது, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு இல்லாததையடுத்து, காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையின் தாயார் எடுத்துச்சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில், பெற்றோர்களிடம் குழந்தை இல்லை எனத் தெரிய வந்தது. ஜார்கன்டை சேர்ந்த மூன்று மற்றும் உபியைச் சேர்ந்த ஒன்று என நான்கு குழந்தைகளை கடத்தி விற்றது தெரிந்தது[8].இதையடுத்து, அனிமா உட்பட காப்பகத்தைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்[9]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெரசா நிறுவன பெஇய ஆட்கள் – பிஷப், முதலிய கத்தோலிக்க சாமியார்களுக்குத் தெரியாமல், இவையெல்லாம் நடக்க முடியாது. காப்பகத்தில் உள்ள ஆவணங்கள், ரிஜிஸ்டெர்கள் முதலியன ஒழுங்காக எழுதப்பட்டு, கண்கானிக்கப்பட்டு, சாரிபார்த்து வந்திருக்க வேண்ண்டும். ஆகவே, அனைத்தையும் மீறி இவ்வாறு ஒன்றிற்கும் மேலாக குற்றம் நடக்க முடியாது.

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-3

கொன்சிலியா தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டு வந்தது: இதனையடுத்து, கொன்சிலியா மற்றும் அவரது உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரியையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையில்லாத 3 தம்பதிகளுக்கு இந்த குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் முகவரிகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதிமா திவாரி என்ற பெண்கள் உரிமை வாரிய உறுப்பினர்[10], “சாதாரண சோதனையிலேயே, இரு குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது………பிறகு அனிமா இந்த்வர் காணாமல் போன குழந்தையை மே 14, 2018 அன்று குழந்தை கேட்ட தம்பதியினரிடம் கொடுக்கப்பட்டது….இது போல பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன…” ஜூலை.1 2018 அன்று சில வரைமுறைகளை  முடித்துக் கொள்ள அழைல்லப்பட்டார்கள்[11]. அப்பொழுது தான் விவகரங்கள் வெளிப்பட்டன. மேலும் விற்பனை என்பதில் தான், அபாயகரமான சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியன வருகின்றன.

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-6

11 கர்பமாகியுள்ள பெண்கள் அரசு நிருவனத்திற்கு மாற்றப்பட்டனர்: 06-07-2018 ஆன்று, தனுஶ்ரீ சர்கார், CWC அங்கத்தினர், “இங்கிருந்த 11 கர்பமாகியுள்ள பெண்கள் கருணா காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். நிர்மல் ஹிருதய் காப்பகத்தில் செயபடும் அப்பிரிவிற்கு சீல் வைத்துள்ளோம். மற்ற பிரிவுகள் எங்கள் அதிகார வரம்புகளுக்குள் வரவில்லை. இருப்பினும் மூடுவதற்கு முயற்சி செய்வோம்,” என்றார். தொடர்ந்து அவர் கூறியது, “ஹீனு என்ற இடத்தில் உள்ள, நிர்மல் சிசு பவனிற்கு, 70 குழந்தைகள் மாற்றப்படும். ஆனால், அதுவும் இவர்கள் [மிசினரீஸ் ஆப் சேரிடீஸ்] கட்டுப்பாட்டில் வருகிறது. ஒரு பிரிவில் குற்றம் நடந்துள்ள நிலையில், இன்னொரு பிரிவை நம்ப முடியாது…….எந்த குழந்தையும் / மைனாரிடி உதவி எதிர்நோக்கினார், எங்களுக்குத் தெரியப் ப்டுத்த வேண்டும். ஆனால், அவர்கள் ஏன் சட்டங்களை மதிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை……..எல்லோரும் பின்பற்றும் போது, இவர்களும் பின்பற்ற வேண்டும்,” என்றார்[12]. அதாவது, மறைமுகமாக இங்கு அவர் தனது இயலாமையை எடுத்துக் காட்டியதுடன், சர்ச்சின் அதிகாரம், பணபலம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றின் முன்பாக சாதாரண மக்கள், அரசு ஊழியர்களரொன்றும் செய்ய முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மேலும், கத்தோலிக்க சர்ச் இறையியல் ரீதியில் அத்தகைய உடலுறவு, கர்ப்பம், குழந்தை பெறுதல், பெற்றெடுத்தல், வளர்த்தல், விற்றல் முதலியவற்றை செய்தாலும், அதே இயலாமை தன்மையில் அடங்க நேரிடும் போது, குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

வேதபிரகாஷ்

07-07-2018

Nirmal Hridhay - baby selling - 06-07-2018-7

[1] தினமலர், குழந்தை விற்பனை: கன்னியாஸ்திரி கைது, Added : ஜூலை 07, 2018 06:32.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=2056735

[3] மாலைமலர், அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தில் குழந்தைகள் விற்பனை – 2 கன்னியாஸ்திரிகள் கைது, பதிவு: ஜூலை 07, 2018 02:41

[4] https://www.maalaimalar.com/News/National/2018/07/07024154/1174935/2-at-Mother-Teresa-charity-arrested-over-alleged-baby.vpf

[5] விகடன், அன்னை தெரசா காப்பகத்தில் குழந்தை விற்கப்படுவதாகப் புகார்! – கன்னியாஸ்திரிகள் கைது, ராம் பிரசாத், Posted Date : 13:15 (06/07/2018)Last updated : 13:15 (06/07/2018)

[6] The Missionaries of Charity stopped organising adoptions in India in 2015 saying they disagreed with government rules that made it easier for single, divorced, and separated people to adopt children. Kujur said his organisation had directed that the credentials of every home run in the state should be checked. “We hear that babies are being sold in other homes as well and are determined to put a stop to it.” https://www.thesun.co.uk/news/6707282/mother-teresa-india-charity-sold-babies-shelter-nuns-arrested/

[7] https://www.vikatan.com/news/india/129943-mother-teresa-charity-home-sold-babies-in-jharkhand.html

[8] புதியதலைமுறை, 4 குழந்தைகளை கடத்தி விற்றதாக கன்னியாஸ்திரிகள் கைது, Web Team, Published : 06 Jul, 2018 12:02 pm

[9] http://www.puthiyathalaimurai.com/news/india/48004-ranchi-staffer-from-mother-teresa-s-missionaries-of-charity-shelter-arrested-for-selling-a-child.html

[10] Scoll, Jharkhand: Missionaries of Charity staff member and nun arrested for allegedly selling a baby, by Scroll Staff, Published Yesterday · 09:42 pm

[11] https://scroll.in/latest/885446/jharkhand-missionaries-of-charity-staff-member-and-nun-arrested-for-allegedly-selling-a-baby

[12]  “As per the law, any minor child in need of care and protection should first be produced before the committee,” she said. However, why the Missionaries of Charities have not been following rules and regulations and the CWC could only now point out. Had all been faithful enough to law of the land, they must have followed”.

 

கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!

மே 25, 2010

கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!

வேதபிரகாஷ்

சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி: கிருத்துவ மதபோதகர் கைது[1] (26-05-2010): தென்தாமரைகுளம் அருகே குழந்தைகள் காப்பக சிறுமியிடம் தவராக நடக்க முயன்ற கிருத்துவ மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜ்ஜோஸ் (56). மதபோதகரான இவர் தென்தாமரைகுளம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 6 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவரின் 9 வயது மகள் இந்த காப்பகத்தில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த மே 20ம் தேதி காப்பகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்ற ராஜ்ஜோஸ் அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். கடந்த 23ம் தேதி விடுமுறை நாள் என்பதால் சிறுமி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயிடம் ராஜ்ஜோஸ் நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் ஜீவராணி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி சப் இன்ஸ்பெக்டர் ராஜப்பன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணை நடந்தி மதபோதகர் ராஜ்ஜோசை கைது செய்தார்.

கத்தோலிக்க மற்றும் இதர கிருத்துவர்களின் கற்பழிப்பு ஒரேமாதிரியாக இருக்கிறது: சிறுமிகளை குழந்தைகளாக இருக்கும்போதே வளர்ப்பது, தமது பணிவிடைசெய்ய உபயோகப் படுத்துவது, அவ்வாறே பழக்கப்படுத்தியப்பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் பயன்படுத்தப் படுகிறர்கள், வன்கலவியில் ஈடுபடுத்தப் படுகிறர்கள் என்பதனை அறியாமலேயே, வருகின்ற எல்லா பாதிரிகள், பாஸ்டர்களுக்கு “பணிவிடை” செய்து வருகிறார்கள். என்றைக்காவது, இக்கதையை வெளியே யாருக்காவது சொல்லி அல்லது தெரியவரும்போதுதான் உண்மை வெளிப்படுகிறது. வில் ஹியூமிற்கு பிறகு, பல பாதிரிகள் தொடர்ச்சியாக சிக்கிவருவது திகைப்பாக இருக்கிறது[2]. கிருத்துவர்களுக்கு சென்னை ஒரு செக்ஸ் தலைநகராகி, தமிழகம் அத்தகைய காமக்களியாட்டக் கூடமாகும் போல இருக்கிறது[3]. அனாதை இல்லங்ககள், பாதிரிகள், செக்ஸ், கற்பழிப்பு, இவையெல்லாம் சேர்ந்தே நடந்து வருவது வேடிக்கையாக இருக்கிறது[4]. அதில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள் எல்லொருமே பாதிரியார்கள். இதுவரை, எந்த பாதிரியும் தண்டிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை!

வாடிகன் ஏன் செக்ஸ் விவகாரங்களை மறைக்கப் பார்க்கிறது? வாடிகன் பாலியல் குற்றவாதிகளுக்குத் துணை போவது அல்லது சட்டரீதியாக ஆதரவு கொடுப்பது வியப்பாக இருக்கலாம், ஆனால், அத்தகைய நிலை நெடுங்காலமாக இருந்து வந்துள்ளதுதான் உண்மை[5]. பத்தாயிரத்திற்கும் மேலாக அமெரிக்கக் குழந்தைகள் இந்த காமக்கொடூர பாதிரி-பிஷப்பு கோஷ்டிகளால் பாலியல் குற்றங்களுக்குட்படுத்தப் பட்டுள்ளார்கள்[6]. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ரீதியில் செயல்படும் வாடிகன் சட்டங்களை வளைக்கவேப் பார்க்கிறது[7]. இடைக்காலத்திலிருந்து, இப்பொழுது வரை, கன்னியாஸ்திரீ-பாதிரி மற்றவர்களுடனான செக்ஸ் விஷயங்கள் மேனாட்டில் தெரிந்தே இருந்து வந்துள்ளன[8]. இந்தியாவிலும் பாஸ்டர்கள், பாதிரிகள், பிஷப்புகள் தங்களது இடமாற்றங்களுக்கு ஏற்ப கன்னியாஸ்திரீக்களையும் அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்து வந்துள்ளது[9]. ஒரிஸ்ஸா விஷயத்தில் அது வெளிப்பட்டு விட்டது எனலாம். ஆனால், அந்த ஆஸ்திரேலிய பாதிரிகளால், அதிகமாகவே அசிங்கமாகி விட்டது[10]. பிறகு, தொடர்ச்சியாக, எல்லா மாநிலங்களிலும் அவர்களது செக்ஸ் விளயாட்டுகள் எல்லைகளை கடந்து விட்டன. அந்நிலையில்தான், கந்தமால் கலவரம் திசைத் திருப்பப் பட்டது[11]. ஆகையால்தான், இன்றும் இந்தியாவில் கத்தோலிக்க பிஷப் மாநாடு நடந்ததை மறைக்கவே பார்க்கிறது.

குழந்தை கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பாதிரியார் கைது[12] (22-05-2010): கிருஷ்ணகிரி: குழந்தை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாதிரியாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் ஒரு பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரியில், கடந்த 18ம் தேதி 2010, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பேரிகையை சேர்ந்த ராமக்கா என்பவரது நான்கு மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற, கிருஷ்ணகிரி தனலட்சுமி மற்றும் சென்னையை சேர்ந்த கிரிஜா, அவரது கணவர் ஆட்டோ டிரைவர் சிவன் மற்றும் ராணி ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அல்போன்ஸ் சேவியர்குழந்தை கடத்தல் கும்பலின் தலைவன்: முன்பே குறிப்பிட்டபடி, கிருத்துவர்களுக்கு அந்த பெயர்களை வைத்தாலே அந்த குணம் வந்துவிடும் போல இருக்கிறது. அதாவது, டான் பாஸ்கோ[13] உண்மையில் ஒரு ஃபிடோஃபைல் (குழந்தைக் கற்பழிப்பாளி), ஆனால் கிருத்துவர்கள் அப்படியே அவன் ஒரு குழந்தைக் காப்பாளி மாதிரி ஆக்கிவிட்டனர். பிரான்ஸிஸ் சேவியர் கோவாவில் இந்துமக்களை கொன்ரு குவிக்க மததண்டனை அமூல் (இன்குயுஸிஷன்) என்ற கொடிய காரியத்தைச் செய்தவன். அதே மாதிரித்தான் இந்த சேவியரும், செல்வமும் குழந்தைகளை வேட்டையாடுகின்றனர்.

ராஜரீக மக்கள் கட்சியும், குழந்தைகள் கடத்தலும்: அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2009 டிச., 4ம் தேதி, கிருஷ்ணகிரி ஆர்.எஸ்., லட்சுமிபுரத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த செல்வராஜ் மகன் தேவா (3) என்ற சிறுவனை, தனலட்சுமி கடத்தி சென்று கிரிஜாவிடம் கொடுத்தது தெரிந்தது. தனிப்படை போலீசார் சென்னை சென்று நடத்திய விசாரணையில், சென்னை பெரம்பூர் இரும்பூளியூர் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் (48), குழந்தை கடத்தல் கும்பலுக்கு தலைவராக இருந்தது தெரிந்தது. மேலும் இவர், “ராஜரீக மக்கள் கட்சி’ என்ற கட்சியை, ஓராண்டுக்கு முன் துவங்கி, கட்சியின் தலைமை செயலராக தன்னை அறிவித்து, கட்சிக்கு தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் நிர்வாகிகளை தேர்வு செய்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும் தெரிந்தது.

அல்போன்ஸின் காதலி கிரிஜாயும் உடந்தை: குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியான, பெரம்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கிரிஜா, ராஜரீக மக்கள் கட்சியின் பெரம்பூர் பகுதி மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கிரிஜாவுக்கும், அல்போன்ஸ் சேவியருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது[14]. கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி, கிருஷ்ணகிரியை சேர்ந்த சிறுவன் தேவாவை, தனலட்சுமி கடத்தி சென்று, தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோவில் வந்த சிவா, கிரிஜா மற்றும் ராணியிடம் கொடுத்துள்ளார். சிறுவன் தேவாவை, கிரிஜா அல்போன்ஸ் சேவியரிடம் கொடுத்துவிட்டு, முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். தேவாவை, அல்போன்ஸ் சேவியர், ராஜரீக மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலரான திண்டிவனம் இரட்டணியை சேர்ந்த பாதிரியார் செல்வம் (37) மூலம்,செஞ்சி தாலுகா, தேவதானப்பேட்டையை சேர்ந்த மாட்டு வியாபாரி மணி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

பாதிரி செல்வம் ஓட்டம்: இதையடுத்து, தேவதானம்பேட்டை சென்ற தனிப்படை போலீசார், மணி வீட்டில் இருந்த சிறுவன் தேவாவை மீட்டனர். மணி மற்றும் சிறுவனை விற்பனை செய்த பாதிரியார் செல்வம் ஆகியோர் தலைமறைவாகினர். மீட்கப்பட்ட சிறுவன் தேவா, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். குழந்தை கடத்தல் கும்பலின் தலைவராக செயல்பட்ட அல்போன்ஸ் சேவியரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.

பிரசில்லாவை கற்பழித்த ஷேக்ஸ்பியர் பாபு[15]: இது ஒரு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி லதா. இவர்களது மகள் பிரசில்லா (3). கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு செல்லும் நாட்களில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவசித்து மகன் ஷேக்ஸ்பியர் பாபு (25). என்பவரிடம் தங்கள் மகளை விட்டுச் செல்வர். ஷேக்ஸ்பியர் பாபு குழந்தை பிரசில்லாவுடன் விளையாடிக் கொண்டிருப்பார். நேற்று முன்தினம் ஷேக்ஸ்பியர் பாபு குழந்தை பிரசில்லாவை வீட்டிற்கு துõக்கிச் சென்று சிறிது நேரம் விளையாடினார். பின்னர் குழந்தையை கற்பழித்துள்ளார். மாலை வீடு திரும்பிய பெற்றோர்களிடம் குழந்தை அழுது கொண்டே கூறியுள்ளது. இது குறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் சோழதரம் போலீசார் வழக்கு பதிந்து குழந்தையை கற்பழித்த ஷேக்ஸ்பியர் பாபுவை கைது செய்து காட்டுமன்னார் கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குழந்தை பிரசில்லா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏன் குழந்தைகளை, சிறுமியரை, மைனர் பெண்களை கற்பழிக்கவேண்டும்? ஊட்டி பாதிரி அமெரிக்காவில் ஒரு டீன் ஏஜ் பெண்னை கற்பழித்து, மாட்டிக் கொண்டு, திருட்டுத்தனமாக இந்தியாவிற்கு வந்து மறைந்து கொண்டான். மதுரை மன்மத பாதிரியும் அவ்வாறே மாட்டிக் கொண்டான். சென்னையில் கூட பாதிரி அவ்வாறு கற்பழித்துள்ளான்[16]. இதெல்லாம், கிருத்துவப் பாதிரிகள், பஆஸ்டர்கள், பிஷப்புகளின் இவர்களின் வக்கிர காம மனப்பாங்கைக் காட்டுகிறது.

கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை:அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு[17], மதுரை:அரசு கூர்நோக்கு இல்லங்களில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த முகமது அனீபா தாக்கல் செய்த பொது நல மனு:என் மனைவி சபீனா யாஸ்மின் திருமணத்தின் போது மைனராக இருந்ததால், அவரது பெற்றோர் புகாரின்படி, சேலம் அஸ்தம்பட்டி கூர்நோக்கு இல்லத்தில் ஒராண்டு தங்க வைக்கப்பட்டார். அங்கு மைனர் பெண்கள், ஊழியர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவது தெரிந்தது. அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஷகீலா பானு, மைனர் பெண்களை கொத்தடிமைகளாக நடத்தினார். துப்பரவு ஊழியர் சாந்தா, ஆசிரியர் தாமரைசெல்வனும் கொடுமை செய்தனர். அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் நல வாரிய சேர்மனுக்கு புகார் செய்தனர். புகாரை விசாரிக்க ஷகீலா பானுவே நியமிக்கப்பட்டார். “எந்த கொடுமையும் இல்லை’ என சாந்தா அறிக்கை தாக்கல் செய்தார்.

பிறகு புகார் அடிப்படையில் சாந்தா, தாமரைசெல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஷகீலா பானு மேலப்பாளையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கும் மைனர் பெண்களை அவர் கொத்தடிமையாக நடத்துகிறார். சேலம், மேலப்பாளையம் கூர் நோக்கு இல்லங்களில் பாலியல் பலாத்காரம், கொத்தடிமைத்தனம் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திக் கண்ணன் ஆஜரானார்.நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச், “”சேலம், மேலப்பாளையம் கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்து துளிர் இயக்க நிர்வாகி வித்யாராவ், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என சமூக நல பாதுகாப்பு கமிஷனர், துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டது.

சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார் கைது: மீஞ்சூர், செப்.6, 2009- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

`சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்என்ற அனாதை காப்பகம்: மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

பெண்களைக் கற்பழிக்கும் சாது இம்மானுவேல்: இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித்ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.  புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கற்பழிப்பு சாது கைது:  திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேதபிரகாஷ்

26-05-2010


[1] தினமலர், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது, மே 26,2010,02:41 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=6786

[2] வேதபிரகாஷ், வில் ஹியூம்குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[3] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்: http://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

[4] வேதபிரகாஷ், http://womanissues.wordpress.com/2009/11/18/பாதிரிகள்-கற்பழித்ததாக5/

[5] Nicole Winfield (AP), AP Exclusive: Vatican details US sex abuse defense, for details, see here,

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5iH9I3NH568g_9CE-MMStuwZ3jgfAD9FO4BR02

[6] Susan Campbell, Vatican Adopts An Old And Tired Defense Strategy In Sex Abuse Case, May 18, 2010, for details, see here,

http://www.courant.com/news/opinion/courant-columnists/hc-hc-campbell-vatican-state.artmay18,0,3904617.column

[7] Greg Burke, Sex Abuse Crisis: Can You Sue The Vatican?, for details, see here,

http://liveshots.blogs.foxnews.com/2010/05/17/sex-abuse-crisis-can-you-sue-the-vatican/?test=latestnews

[8] மேனாடுகளைப் பொறுத்த வரைக்கும் பல புத்தகங்கள், திரைப்படங்கள் அதிகமாகவே வந்துள்ளன.

[9] ஒரிஸ்ஸா பாதிரிகள், பாஸ்டர்கள் விவகாரங்களில் அது வெளிப்பட்டுள்ளது. மேலும் அபயா வழக்கு, ஒரு கன்னியாஸ்திரீ எழுதிய புத்தகம் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன.

[10] செக்ஸ் டூரிஸம் போர்வையில் அதிகமாகவே விளையாடி கையும் களவுமாக ஒரிஸ்ஸாவில் பிடிபட்டனர்.

[11] கன்னியாஸ்திரீ கற்பழிப்பு என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப் பட்டு, விஷயம் வேறுமாதிரி செல்லும்போது, அமைதியாக அமுக்கிவிட்டனர். சமீபத்தில் கூட கைது செய்யப் பட்டவர்களில் ஒருவன் ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப் பட்டான்.

One gets bail in Kandhamal nun rape case

http://www.ptinews.com/news/624695_One-gets-bail-in-Kandhamal-nun-rape-case

Cuttack, Apr 24 2010 (PTI) The Orissa High Court today granted bail to Gururam Patra who was arrested last year in connection with the alleged rape of a Catholic nun in Kandhamal district.
A single judge bench of Justice C R Dash granted bail to Patra after observing that although he was leading a mob in the aftermath of Swami Laxmanananda Saraswati’s murder in August 2008, there was no evidence of his involvement in the rape case. Patra’s bail applications were earlier rejected by two local courts of the district.
The 29-year-old nun was allegedly raped by a mob at K Nuagaon village under Baliguda police station area in Kandhamal on August 25, two days after killing of the VHP leader. Patra was arrested by the Crime Branch of police last year.

[12] தினமலர், குழந்தை கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பாதிரியார் கைது, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=4451

[13] Don Bosco was a phedophile, but the Church writers had turned him into a savior of children and thus they started naming educational institutions in his name to whitewash his crimes committed in the name of Christ, Church and God of course.

[14] விடுதலை, கர்த்தரின்வேடிக்கை விளையாட்டோ! குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் கைது,  http://www.viduthalai.com/20100523/news02.html

இந்த செய்தி ஏற்கெனெவே தினமலரில் வந்ததுதான், தலைப்பை மட்டும் மாற்றி, விடுதலை போட்டுள்ளது!

[15] சேத்தியாத்தோப்பு: மூன்று வயது குழந்தையை கற்பழித்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

[16] இதைப் பற்றிய செய்திகளும் வந்துள்ளன. இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், அவர்கள் அத்தகைய முறையை தொடர்ந்து கடைபிடித்து வருவதுதான்.

[17] தினமலர், கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை:அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு, பிப்ரவரி 17,2010,00:00 IST, http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5205