Posts Tagged ‘கிருத்துவ சதிகள்’

தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (1)!

மார்ச் 5, 2014

தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (1)!

 

TELC-church-concil-2010

TELC-church-concil-2010

ரூ. 500-600 கோடிகள்  சொத்துக்களின்  அதிபதியாக  இருக்கும்  தமிழ்  மதப்பிரச்சார  லூதரன்  சர்ச்: தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் [The  (TELC)] என்பது சொஸைடி பதிவு சட்டத்தின் கீழ் 1919ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சங்கம் ஆகும்[1]. இதைக் கூட “தமிழ் சுவிசேஷ லூதரன் திருச்சபை” என்று அதிக மரியாதையுடன் தான் தமிழ் ஊடகங்கள் செய்திகளில் குறிப்பிட்டு வருகின்றன. “எவாஞ்சலிஸம்” என்றாலே மதப்பிரச்சாரம், மதமாற்றம் என்ற பொருளில் தான் கிருத்துவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், அதை தமிழில் இவ்வாறு திருத்தி பொருள் கொடுத்து உண்மையினை மறைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதற்கென 1,08,850 கூட்டங்கள், 113 பகுதிப்பிரிவுகள் பத்து மாவட்டங்களில் உள்ளன. இதற்காக பல கமிட்டிகளில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதன் கீழ் 9 உயர்நிலைப்பள்ளிகள், 128 நடுநிலைப்பள்ளிகள், 2 முதியவர் இல்லங்கள், 28 அனாதை இல்லங்கள், ஒரு மருத்துவமனை, ஒரு கல்லூரி, 2 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் என உள்ளன. ஆரம்பகாலத்திலிருந்தே சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த சர்ச்சில் ஏகப்பட்ட சண்டை-சச்சரவுகள், வழக்குகள் இருந்து வந்துள்ளன. கிருத்துவ பாதிரிகள், பிஷப்புகள் மற்ற மதத்தலைவர்கள் எவ்வாறு தொடர்ந்து குற்றங்களை செய்து வருகிறர்கள் என்ற விவரங்களை www.christianityindia.wordpress.com தளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். இப்பொழுது 2010 முதல் 2014 வரை நடந்துள்ள நீதிமன்ற வழக்குகள் மற்றும் இந்த சர்ச்சின் வெளித்தோற்ற கொண்டாட்டங்கள் முதலியவற்றை கவனிக்கும் போது, என்னமாக நாடகம் ஆடுகிறார்கள் என்று தெரிகிறது.

 

TELC - 2010 - Committee

TELC – 2010 – Committee

நிலமோசடியில்  இன்னுமொரு  பிஷப்: 4 கோடி    ரூபாய்    மதிப்புள்ள  நிலத்தை  வெறும்   40 லட்சம்   ரூபாய்க்கு  விற்றுள்ளதாக  குற்றச்சாட்டு! (செப்டம்பர் 2010): பெரம்பூரில் உள்ள TELCக்கு சொந்தமான ஒரு சொத்து ரூ40 லட்சத்திற்கு விற்கப்பட்டது, ஆனால், பதிவாளர் அலுவகத்தில் ரூ.68 என்று காண்பிக்கப்பட்டது[2]. 2010களில் ஒரு மனையின் மதிப்பு ரூ. 1 கோடி என்றுள்ளது. ஆனால், இம்மனையின் அளவு 3300 sq.ft[3]. ஆகும், எனவே, நிச்சயமாக குறைந்த அளவில் விற்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.  இந்த விசயத்தில் தான் மார்டின் (பிஷப்) மற்றும் சார்லஸ் (செயலாளர்) இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது தெரிகிறது. நிருபர்களிடம் மார்ட்டின் கூறியதாவது:  “சபைக்கு சொந்தமான  4  கோடி  ரூபாய்  மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு  விற்றுள்ளனர்.   இதற்கு  சபையின் ஆலோசனைக்குழு  அனுமதி  அளித்திருந்தாலும்,  விற்பனையில் மோசடி  நடந்துள்ளது. சபைக்கு சொந்தமான பள்ளிகளில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு  பதவி  உயர்வு,  இடமாறுதல் ஆகியவையும்,  பிடிக்காதவர்களை  பழிவாங்கும்  நோக்கிலும், குருமார்களை  மரியாதை  குறைவாக  நடத்தியும்  வருகின்றனர். எனவே,  நிர்வாகக்குழுவை கலைத்து  விட்டேன். சபையின் அலுவலகத்தையும்  பூட்டி விடுமுறை  விட்டு விட்டேன். ஏற்கனவே  நிர்வாகக்குழு, பல  இடங்களை  மோசடியாக விற்றுள்ளதாக  புகார்  உள்ளது. எனக்கு  ஆபத்து  ஏற்படும் என்பதால்  கலெக்டரிடமும்,  போலீஸிலும்  புகார்  செய்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார். இதுமாதிரியான பரஸ்பர குற்றச்சாட்டுகள் உள்ளன. திரு ஜே. கனகராஜ் (ஓய்வு) நீதிபதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டதாக தீர்ப்பில் சொல்லப்பட்டது[4].

 

லுத்தரன் சர்ச் தேர்தல் திருச்சி

லுத்தரன் சர்ச் தேர்தல் திருச்சி

கிருத்துவக்  குழுக்களின்  பரஸ்பர  புகார்கள், வழக்குகள் (மேஜூன் 2010): எச். ஏ. மார்ட்டின் மற்றும் இ. டி. சார்லஸ் இருவரிடையே, சர்ச் விவகாரங்களில் உள்சண்டை இருந்து வந்தது. மே 2010ல் T.E.L.C என்ற சொஸைடிக்கு சிலர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஆனால், 14-09-2010 தேதியிட்ட ஒரு ஆணை மூலம், அச்சங்கத்தின் தலைவராக உள்ள பிஷப்பே எல்லா அதிகாரங்களையும் கொண்டார்.  இதனால், O.S.No.1001 of 2010 என்ற எண்ணில் திருச்சி கூடுதல் அமர்வு உபநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். பூட்டப்பட்ட [at Tranquebar House, Melapudur, Trichirappalli] அலுவலகத்தைத் திறக்கக் கோரி, போலீஸ் கமிஷனருக்கு ஆணையிடவும் கேட்டுக் கொண்டனர்[5]. இதற்குள், இவர்கள் பூட்டப்பட்ட அலுவலகத்தில் 14-11-2010 அன்று நுழைந்து உள்ள ஆவணங்களை அழித்துவிட்டனர் என்று எதிர்புகார் கொடுக்கப்பட்டது. இப்பிரச்சினைகள் டிவிசெனல்களிலும் காட்டப்பட்டன. இவ்விவரங்கள் வெளியாகியுள்ள நீதிமன்ற வழக்கு ஆவணங்களிலும் பதிவாகியுள்ளன[6].

 

சார்லஸ் மற்றும் மார்ட்டின் 2012

சார்லஸ் மற்றும் மார்ட்டின் 2012

பிஷப்  மார்ட்டினின்  புகார் (அக்டோபர்   2010): தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பிஷப் மார்ட்டின், “எங்கள் திருச்சபையில் கலவர அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் செகரட்டரி ஏவிய கொலைக் கூலிப் படையால் எனக்குக் கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. என் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறையிடமும் புகார் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருச்சபை, தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. கல்லூரிகள், பள்ளிகள், தேவாலயங்கள் என சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இந்தத் திருச்சபைக்கு உண்டு. கேரளம், அந்தமான், பாண்டிச்சேரி, ஆந்திராவில் விரிந்து பரந்துள்ள இந்த திருச்சபையின் தலைமையிடம் திருச்சியில் உள்ளது. அங்குதான் இந்த உயிர்ப்பயமும் ஊழல் குற்றச்சாட்டும்!  “கொலைக் கூலிப் படை” எனும்போது, தமிழகத்தில் அந்த அளவிற்கு மக்கள் மாக்களாக மாறிவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது.

 

திருச்சபை வழக்குகள்

திருச்சபை வழக்குகள்

என்ன  நடக்கிறது  உங்கள்  திருச்சபையில்? – நிருபர்கள்  கேட்டார்களாம்: “என்ன நடக்கிறது உங்கள் திருச்சபையில்?” -பிஷப் மார்ட்டினிடம் கேட்டோம். “ஜனவரி மாதம் நடந்த பிஷப் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன்செயலாளர் சார்லஸின் அக்கா கணவர் ஸ்டீபன் சுந்தர்சிங் என்னை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்றார். பிஷப்பாக நான் ஜெயித்து தேர்வு பெற்றேன். ஆனால் நிர்வாகக் கமிட்டிக்கு வெற்றி பெற்றவர்கள் அத்தனைபேரும் செயலாளர் சார்லஸ் ஆட்கள். என்னிடம் கேட்காமலே, எங்கள் குருமார்கள் 140 பேரில் 78 பேரை ஒரேநாளில் இட மாற்றம் செய்துவிட்டார் சார்லஸ். சென்னை புரசைவாக்கத்தில் மேகலா தியேட்டர் அருகில் 3300 சதுர அடி இடத்தை 4 கோடிக்கு விற்றுவிட்டு 40 லட்சம் கணக்கு காட்டினார்கள்[7]. இதனால் அந்த கமிட்டியைக் கலைத்தேன். அதனால்தான் தினம் தினம் குத்துவேன், வெட்டுவேன் என யார் யாரோ கொலை மிரட்டல் விடுகிறார்கள்என் அலுவலக பூட்டை உடைத்து ஆக்குபை செய்துகொண்டார்கள். விபரீதமும் கலவரமும் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால்தான் புகார் கொடுத்தேன்” என்கிறார் பிஷப் மார்டின்.  இவ்வாறு புகார் கொடுத்தவர்கள் வெளியில் ஒற்றுமையாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள் என்பதனையும் கவனிக்க வேண்டும்.

 

Martin Bishop 2009 The Hindu photo

Martin Bishop 2009 The Hindu photo

சார்லஸ்  தரப்பில்  குற்றச்சாட்டு   (அக்டோபர் 2010): திருச்சபை வளாகத்திற்குள் போலீஸ் படையுடன் நுழைந்த கோட்டை .சி. சீனிவாசனிடம் பேசினோம். சார்லஸ் குரூப்பை இங்கிருந்து வெளியேற்றிவிட்டோம். அந்த குரூப் பயன்படுத்திய வாகனங்களையும் கைப்பற்றிவிட்டோம். இனி கலவரம் ஏற்படாதுஎன்றார் .சி. தலைமறைவாக இருக்கும் திருச்சபை செயலாளர் சார்லஸை தொடர்பு கொண்டோம். “நிர்வாகக் குழுவைக் கலைப்பதற்கு பிஷப்புக்கு அதிகாரம் இல்லை. பழனி கோர்ட்டில் நாங்கள் இடைக்காலத் தடை வாங்கி விட்டோம். எல்லா பத்திரங்களும் அவரிடம்தானே இருக்கும்அவருக்குத் தெரியாமல் நாங்கள் மட்டும் எப்படி சொத்துக்களை விற்க முடியும்தனது சொந்தக்காரர்களுக்கு போஸ்டிங் போட வேண்டும். நிறைய பங்கு பணம் வேண்டும் என்று கேட்டுத்தான் இப்படியெல்லாம் செய்கிறார் பிஷப்என்கிறார் சார்லஸ். “தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பிஷப்பும் செகரட்டரியும் நெருங்கிய உறவினர்கள் தான். அவர்களே ஒருவருக்கொருவர் சேற்றை வாரிப் பூசிக்கொண்டு கலவரச் சூழலை உண்டாக்கி எங்களைக் கவலைப்பட வைக்கிறார்களே’ என்று லுத்தரன் கிறிஸ் தவர்கள் புலம்புகிறார்கள். உள்ள பிரச்சினையத் திசை மாற்ற மாநாடுகள், விழாக்கள் என்று போட்டி குழுக்கள் நடத்தினார்கள்.

 

© வேதபிரகாஷ்

05-03-2014


[1] The Tamil Evangelical Lutheran Church (TELC) was registered as a Society under the Societies Registration Act, 1860, in the year 1919. It is stated that one of the objects of the formation of the Society was to care for the salvation of its members. But, the institution is now plunged into so much of litigation in various Courts across the State to such an extent that its own salvation has become a big question mark.

[2] தினமலர், லுத்தரன் திருச்சபை நிர்வாகக்குழு கலைத்துபிஷப் அதிரடி நடவடிக்கை, செப்டம்பர் 16, 2010,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85822

[3] One example cited by the Bishop/President is about a property in Brick Kiln Road, Perambur, comprising of land measuring an extent of 3300 sq.ft. The property was sold for Rs.40.00 lacs and the sale deed shows that even the Sub Registrar valued the property at Rs.68.00 lacs. It is common knowledge that one ground of land in that locality (2400 sq.ft.) costs not less than Rs.1.00 crore. Therefore, I have no doubt in my mind that if that property had been their private property, the elected members of the Church Council would not have sold the same for Rs.40.00 lacs.

[4] RT.REV.DR.H.A.MARTIN & ANOTHER V/S THE TAMIL EVANGELICAL LUTHERAN CHURCH REP. BY ITS SECRETARY & OTHERS, decided on Tuesday, December 14, 2010.
[ In the Madras High Court (Madurai Bench), CRP (MD) Nos.2385 & 2386 of 2010 & Cont.P.(MD) Nos.643 & 681 of 2010. ]

http://www.lawyerservices.in/RtRevDrHAMartin-and-Another-Versus-The-Tamil-Evangelical-Lutheran-Church-rep-By-its-Secretary-and-Others-2010-12-14

நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன் – ரஷ்யாவில் பிறந்து, ஜெருசலேத்தில் குடியேறியவர்!

ஏப்ரல் 28, 2013

நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன் – ரஷ்யாவில் பிறந்து, ஜெருசலேத்தில் குடியேறியவர்!

Yeshua Ben Maryam Al-Masih

ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்தவர் வியாசேஸ்லவ் (49), தான் கடவுளின் மைந்தன், “மேசியா” என்று நினைத்துக் கொண்டு பெயரை மாற்றியுள்ளாராம்[1]. ஏனெனில் அவன் எப்பொழுதும் “பரிசுத்த ஆவி”யுடன் பேசிக்கொண்டு இருப்பானாம்[2]. அதனால் ஏசுவைப் போல தானும் ஜெருசலேம் சென்றால், அவ்வாறே மாறிவிடலாம் என்று நினைத்துக் கொள்கிறானாம். ஏசுவைப் போலவே தலைமுடு வளர்த்துக் கொண்டு, உடையை அணிந்து கொண்டு, பொது இடங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தனது பெயரை 4 முறை மாற்றி, குடும்பப் பெயர், தனிப்பெயர் முதலியவற்றைச் சேர்த்து பாஸ்போர்ட்டிலும் பதிவு செய்துள்ளார்.

Photo1011

அங்கு வந்து பதிவு செய்யும், போது, இருந்த பெண் அதிகாரி “என்ன பெயரை இப்படி எழுதியிருக்கிறீர்களே”, என்ற கேட்டபோது, “நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன்”, என்று உறுதியாக சொன்னானாம். Photo1008

இம்முறை, அவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் தனது பெயரை ‘யஷுவா பென் மர்யம் அல்-மசி’ (Yeshua Ben Maryam Al-Masih) என்று மாற்றிக் கொண்டுள்ளார், அதாவது யூதராக பதிவு செய்துள்ளார். மேற்கண்ட எபிரேய பெயருக்கு தமிழில் ‘மேரியின் மகனும் கிருஸ்துவுமான இயேசு’ என்று பொருள்[3]. Photo1010இந்த தகவலை வெளியிட்ட உள்ளூர் செய்தி நிறுவனம், ‘வியாசேஸ்லவ் எப்போதுமே சுவிசேஷம் பற்றி பேசி வந்தார்[4]. Photo1015

ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் ஏசு கிருஸ்து வாழ்கிறார்” என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டது. இயேசு கிருஸ்து என்று பெயர் மாற்றிக் கொள்வதால், ஜெருசலேம் நகருக்கு புனிதப் பயணம் செல்லவும், இஸ்ரேல் நாட்டின் குடிமகனாகவும் வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் கருதி இருக்கக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது[5]. Photo1012

ஆனால் அவன் அவ்வாறே ஜெருசலேத்திற்குச் சென்று, ஒரு வீட்டில் மனைவி, மகன் உடன் வசித்துக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கும் பைபிளில் வரும் பெயர்களை வைத்துள்ளான். ஒரு கழுதையினையும் வாங்கி வைத்துக் கொண்டு, அதன் மீது சவாரி செய்து கொண்டு வருகிறான்[6], என்றும் செய்திகள் வந்துள்ளன. Photo1013உள்ளூர் மக்கள், யாத்திரிகள் அவரை தமாஷாகப் பார்க்கிறார்களாம். ஏனெனில், பண்டிகைகளின் போது, அவ்வாறு வேடமிட்டு நடித்துக் காட்டுவது சகஜமான விஷயம்தான். இருப்பினும், இவர் விஷயம் அப்படியில்லை, ஏனெனில், இவர் தம்மையே ஏசுகிருஸ்து என்று சொல்லிக் கொள்கிறார். அவ்வாறே மாறத்துடிக்கிறார். Appearing in Russin websiteஇதில் வேடிக்கை என்னவென்றால், ஏசுகிருஸ்துவும், தன்னை “மேசியா” என்றுக் காட்டிக் கொள்ள[7], இதே மாதிரி கழுதைக் குட்டி மீது உட்கார்ந்து கொண்டு, ஜெருசலேத்தில் நுழைந்தாராம்[8]. ஆனால், யூதர்கள் அவரை “ஒரு வேடதாரி, போலி” என்று சொல்லி ஒதுக்கி விட்டது[9], என்று பைபிள் கூறுகிறது. இவ்விவரங்கள் முழுவதையும் கீழ்கண்ட யூ-டியூப்பிலும் காணலாம்[10].

வேதபிரகாஷ்

28-04-2013


[5] மாலைமலர், இஸ்ரேலில்குடியேறவசதியாகஇயேசுகிருஸ்துஎன்றுபெயரைமாற்றிக்கொண்டரஷ்யர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2:19 AM IST

[8] Donkeys and mules were used by important persons and kings in the Old Testament (for example, Judg 10:4; 12:14; 2 Sam 13:29; 18:9), including David himself (1 Kings 1:33), but the contrast in this context in Zechariah 9 is between the warhorses (v. 10) and the donkey on which the king rides (v. 9) is a striking image of humility.

[9] Accursed – Margin, “Anathema” (ἀνάθημα anathēma); see the Acts 23:14 note; Romans 9:3 note; compare 1 Corinthians 16:22Galatians 1:8-9. The word is one of execration, or cursing; and means, that no one under the influence of the Holy Spirit could curse the name of Jesus, or denounce him as execrable and as an impostor.

இரண்டு போப்புகள் பிரச்சினை – ஒரு போப் மற்றும் இன்னொரு முந்தைய போப் – இருதுருவங்களா?

ஏப்ரல் 6, 2013

இரண்டு போப்புகள் பிரச்சினை – ஒரு போப் மற்றும் இன்னொரு முந்தைய போப் – இருதுருவங்களா?

Power Struggle in the Vatican

போப்பின் தேர்வைப் பற்றி பலவித விமர்சனங்கள் வந்துள்ளன[1]. வாடிகனில் நடந்து வரும் செக்ஸ்-பணம் முதலிய ஊழல்கள் தான் காரணம் என்று விஷயங்கள் வெளி வந்தன[2]. நாளைக்கு போப்பாக தகுதி கொண்ட கார்டினல்களே[3] அத்தகைய விவகாரங்களில் ஈடுபட்டதும் தெரிவிக்கப்பட்டது[4]. போப்பிற்கு சர்வ-அதிகாரம் இருந்தாலும், வாடிகன் எப்படி அவரை ஆட்டிப் படைக்கிறது என்பதும் தெரியவந்தது[5]. ஒரு போப் இருக்கும் போது, பதவி விலகினாலும், அவர் வாடிகனிலேயே தங்கியிருக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட போப்பிற்கு இணையாக, பழைய போப்பிற்கும் மரியாதைகள் சம்பிரதாய முறைப்படிக் கொடுக்கப்பட வேண்டிய நிலையில், புதிய போப் பழைய போப் தனது போட்டியாளர் அல்லது தனது அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பார் என்று எண்ணக்கூடும், அந்நிலையும் வரும். ஏன்டி-போப் (antipope), எதிர்-போப், எதிரி-போப் என்ற முறையில் தேந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற நிலையும் உருவாகும்[6].

Pope anti-pope

ஏன்டிபோப் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாரா?: முன்பு, 1294ல் பெயிட்ரோ டி மர்ரோன்  (Pietro da Morrone) என்ற துறவி, செலஸ்டைன் V (Celestine V) என்று பெயரிடப்பட்டு, போப்பாக்கப்பட்டார். இருப்பினும் அவருக்குக் கீழிருந்த கார்டினெல்கள் அவர் சொல்வதை அதையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருக்கும் போது, ஆறே மாதங்களில் பதவியை ராஜினாமா செய்தார். போனிவேஸ் VIII (Boniface VIII) என்பவர் போப் ஆனார். ஆனால், செலஸ்டைன் V, தனக்கு சம்பிரதாயங்கள் மற்றும் இதர விவகாரங்களில் போட்டியாக இருக்க நேரிடும் என்று, இறக்கும் வரையில், அவரை மாளிகையிலேயே சிறைவைத்தார். அதேப் போன்ற நிலை இப்பொழுதுள்ளதாக, வாடிகன் அதிகாரிகள் மற்ற துறவிகள் நினைக்கிறார்கள். ஏன்டி-போப் (antipope) என்றால், போலியானவர், ஏமாற்றுப் பேர்வழி (impostor) என்றாகும்[7]. இப்பொழுது கூட, பெனிடிக்ட்டிற்கு கீழிருந்த கார்டினெல்கள், அவரின் பேச்சைக் கேட்கவில்லை. செக்ஸ் மற்றும் பணம் கையாடல்-வாடிகன் வங்கி ஊழல்[8] நாறிவிட்டன. செக்ஸ் விஷயத்தில் தாராளமாகவே இருந்தார்கள். அதனை பெனிடிக்ட்டும் ஓரளவிற்கே கண்டித்து விட்டுவிட்டார் என்பது அனைவரைக்கும் தெரிந்த விஷயமாகி விட்டது. அந்நிலையில், “வாடிகன் சூழ்நிலையில்” விலகுவதைத் தவிர வேறுவழியில்லை.

Pope-Benedict-XVI-Francis-at-St-Peters

இரண்டு போப்புகள் ஒரேநேரத்தில் இருக்க முடியாது: இரண்டு தலைச்சிறந்த இறையியல் வல்லனர்கள் போப் பெனிடிக்டை சந்திந்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஏனெனில், போப் என்பவர் என்றுமே பதவி விலக முடியாது அல்லது ராஜினாமா செய்ய முடியாது என்படு அவர்களது வாதம். சுருக்கமாக சொன்னால், ஒரு போப் உயிரோடு இருக்கும் போது, அடுத்தவர் போப்பாக முடியாது. ஆனால், 1990களில் போப் இரண்டு பாதிப்புகளினின்று (mild strokes) தப்பியுள்ளார். அவரது தந்தை மற்றும் சகோதரி அத்தகைய உபாதைகளினால் இறந்துள்ளனர். பாதுகாப்பிற்காக ஆஸ்பிரினை தினமும் சாப்பிட்டு வந்தார். இதனால், கால்மூட்டி வலியும் (osteoarthritis in his knees) இருந்து வருகின்றது. மேலே ஏறுவதற்கு, நகரும் படிகட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[9]. மேலும் இவ்வாறு ஒரு வயதான, முதியவரான, தள்ளாடும் போப்பை உலகத்திற்குக் காட்ட நேரிடும் போது, கிருத்துவர்கள் லாயக்கற்ற ஒருவரைத் தலைவராக வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமும் எழக்கூடும். ஏனெனில் இன்றை நவீன காலகட்டத்தில், இளைஞர்களைக் கவர, இளைமைத் தோற்றம் கொண்ட, அனைவரையும் அடக்கிக்கி ஆளக்கூடிய அதாவது தனது கட்டுக்குள் வைத்திருக்கும் போப்பைத்தான் கிருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Pope-Protest-Signs

இரண் டு போப்புகளுக்கு வேலை பார்க்கும் ஒரே பிஷப்பு: ஆர்ச்பிஷப் ஜியார்ஜ் கியான்ஸ்வின் (Georg Gaenswein) இப்பொழுதும் பெனிடிக்கிற்கு அந்தரங்க காரியதரிசியாக உள்ளார். ஆனால், முறைப்படி அவர் போப்பின் வீட்டிற்கு தலைவர் மற்றும் காவலாளி ஆவர். இப்பொழுதைய போப், வேறொருவரை நியமிக்கமாட்டார், என்ற பட்சத்தில், இவர் இரண்டு எஜமானகளுக்குக் கீழ் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏதாவது காரணத்திற்காக பெனிடிக்ட் வெளியே சென்றால், வாடிகனில் அவருக்கு எல்லோரும் மரியாதைக் கொடுக்கத்தான் செய்வார்கள். ஒரு நேரத்தில், இரண்டு போப்புகளும் வெளியே வந்து விட்டால், சங்கடம் தான்.

Pope-with-other-believers-Islamic

ஆன்டிகிரைஸ்ட் என்றும் சொல்கின்ற நிலை: போப் பெனிடிக் [Pope Benedict XVI (Joseph Ratzinger)] ஏன்டி-போப் (antipope), போலியானவர், ஏமாற்றுப் பேர்வழி (impostor) என்றாகும் என்று சொல்லும் நிலையில், இன்னொரு அடிப்படைவாத பாப்டிஸ்ட் சர்ச், இவரை ஆன்டிகிரைஸ்ட் என்று வெளிப்ப்டையாகவே எடுத்துக் காட்டி கூறியுள்ளது[10]. ஏனெனில், அத்தகைய ஏன்டி-போப் ஜெர்மனி நாட்டிலிருந்து வருவார்[11] என்று தீர்க்க தரிசனம் சொல்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்[12]டீதெல்லாம் அவர்களுக்குள் உள்ள பிரச்சினை என்று இக்காலகட்டத்தில் விட்டுவிட முடியாது. ஏனெனில், கத்தோலிக்க-கத்தோலிக்கர் அல்லாத போர்கள், சண்டைகள் முதலியவற்றைக் கூர்ந்து கவனித்தால், எப்படி அவர்கள் அந்த சாக்காக வைத்துக் கொண்டு மற்ற மதத்தினரைக் கொன்றுக் குவித்துள்ளார்கள் என்பது தெரியவரும்.

Pope-with-other-believers-objected

பெனிடிக்ட் ஆன்டிகிரைஸ்ட்,  சாத்தானின் உருவம் என்பதற்கான அத்தாட்சிகள்: பெனிடிக்ட் ஆன்டிகிரைஸ்ட் அல்லது சாத்தானின் உருவம் என்பதற்கான அடையாளங்கள் தேளிவாக உள்ளன என்று இவ்வாறு எடுத்துக் காட்டுகிறார்கள்[13].

“Thirteens” noted in connection with Pope Benedict XVI

 

Thirteen is the number perhaps most prominently associated with the lawless one, the first beast of Revelation 13. The number turns up in this Pope’s life, too.

 

  • He is the 265th Pope in church history. 2+6+5 = 13.
  • Written entirely in Latin: “Benedictus XVI” is thirteen characters.
  • Born and baptized on day thirteen of the first month
  • Born and baptized on day thirteen of the year
  • Elected on the first day of the thirteen day period of the Bloody Sacrifice to the Beast.
  • He appears to be described most particularly in the thirteenth chapter of Revelation
  • He appears to be modeled in the thirteenth chapter of John at “the last supper” in the dipping of the sop, as the likely baptizer (dipper) of the one Judas (the sop) represents[14].

Pope-with-other-believers-objected-by-the-orthodox

இதைத் தவிர கிருத்துவர்கள் கொடுக்கும் மற்ற விவரங்கள் அதிர்ச்சியடைவதாக உள்ளது[15]. அதாவது, இப்பொழுதைய போபையே என்று கூறுகிறார்கள், அதற்கான ஆதாரங்களாக பல புகைப் படங்களையும் கொடுத்துள்ளார்கள். விவரங்களுக்கவீந்த இணைத்தளத்தைப் பார்க்கவும்[16]. இந்தியர்களைப் பொறுத்த வரைக்கும், ஏதோ  “ஓமன்”, “எக்ஸார்சிட்”, “டா வின்சி கோட்” போன்ற படங்களை நினைவூட்டுவதாக உள்ளது. ஆனால், இந்திய கிருத்துவர்கள் நம்மை நன்றாக ஏமாற்றி வருகிறர்கள் என்று தெரிகிறது. அதாவது, இந்த விவரங்களை அவர்கள் அறிந்தும் நமக்குச் சொல்லாமல் இருக்கிறார்கள் அல்லது மூடி மறைக்கிறார்கள். அவர்களின் மதமே சாத்தானைச் சார்ந்து தான் உள்ளது எனும்போது, இவர்கள் எப்படி மற்றவர்களை “சாத்தானின் குழந்தைகளே” என்று விளிக்கிறார்கள் என்று தெரியவில்லை!

வேதபிரகாஷ்

05-04-2013


[9] Ratzinger survived two mild strokes in the early 1990s. Both his father and sister died of strokes. The pope takes aspirin as a preventive medicine. He is plagued by osteoarthritis in his knees, especially the right one. Walking is getting more difficult for him, and he now uses a rolling platform, which he mounts upon entering St. Peter’s Basilica, such as when he is wearing heavy garments.

http://www.examiner.com/article/pope-benedict-battles-prophecies-and-an-antipope-successpr

[11] Catholic priest and writer R. Gerald Culleton (20th century): “A schism of short duration is destined to break out…An antipope, of German origin, is to be set up, and finally Rome itself will be destroyed” (Culleton, p. 42).

[12] Is Pope Benedict XVI (Joseph Ratzinger) the Antichrist?  He was the first German in many years to be elected as the Pope of Rome.  Pope Benedict XVI is also of Germanic European extraction, just like Hitler.  Pope Benedict XVI was involved with Adolph Hitler’s “Hitler Youth” many years ago.

[13] The Open Scroll, Who is Pope Benedict XVI?. http://www.theopenscroll.com/popeBenedict.htm

 

இந்து கோவிலைக் கண்டு நடுங்கி சாகும் கிருத்துவர்கள்!

பிப்ரவரி 4, 2011

இந்து கோவிலைக் கண்டு நடுங்கி சாகும் கிருத்துவர்கள்!

இந்தியாவில் இருக்கும் கிருத்துவர்கள் எல்லோரும் இந்துக்களே, ஒருசில அந்நியர்களைத் தவிர. அந்நிலையில் இந்துக் கோவில்களைக் கண்டு அஞ்சி நடுங்கி சாகும் நிலைக் கண்டு வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதில் இரண்டு விஷயங்கள் வெளிப்படுகின்றன.

  1. இந்துக்களாக இருந்து, கிருத்துவர்களாக மாறிவிட்டாலும், பழைய நினைவுகள், உறவுகள், சம்பந்தங்கள் முதலியன அவர்களை உறுத்திக் கொண்டே இருக்கின்றன.
  1. கிருத்துவர்களா மாறியப் பிறகும், ஒன்றும் பிரமாதமாக, அவர்கள் நினைத்தபடி, இறையியலில் உயர்ந்ததாக எதையும் கண்டுவிடவில்லை. மாறாக, மிகவும் தாழ்வாக உள்ளவற்றைத்தான், ஏதோ சிந்தாந்த ரீதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்ற உண்மை அறிந்து கொண்டுள்ளார்கள்.

இதனால் தான், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்துக் கொண்டே இருக்கிறது. அடாடா, தேவையில்லாமல், மதம் மாறிவிட்டோமோ என்றும் நினைத்துப் பார்க்கின்றனர். மேலும், உள்கலாச்சாரமயமாக்கல்[1], கிருத்துவர்களின் போலித்தனத்தைத் தோலிருத்திக் காட்டுகிறது.

கோவில் கட்ட எதிர்ப்பு : இரு தரப்பு பிரச்னையால் பதட்டம் நீடிப்பு[2]: கும்மிடிப்பூண்டி : கோவில் கட்டுவதில் வலுத்து வரும் பிரச்னையின் ஒரு கட்டமாக, கிறிஸ்துவ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களின் செயல்பாட்டினை கண்டிக்கும் விதமாக, இந்து அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இரு தரப்பினரின் செயல்பாடுகளால் ஆரம்பாக்கத்தில் பதட்டம் நீடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், பெந்தெகோஸ்தே[3] என்ற கிறிஸ்துவ அமைப்பு இயங்கி வருகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள நொச்சிக்குப்பம், பாட்டைகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் அந்த கிறிஸ்துவ சபையில் வழிபட்டு வருகின்றனர். அந்த சபைக்கு சற்று எதிரே, வெங்கய்யா சாமி கோவிலை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நிறுவி வருகிறார்.

சர்ச்சுக்கு எதிரே கோவில் அமைந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கிறுஸ்துவ அமைப்பினர் கருதினர்: தங்கள் சபைக்கு எதிரே இந்து கோவில் அமைந்தால், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கிறுஸ்துவ அமைப்பினர் கருதினர். இதையடுத்து, கிறிஸ்துவ சபையினர் கடந்த ஆண்டு கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக கோவில் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆர்.டி.ஓ., தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. இந்துக்கள் விட்டுக் கொடுக்கும் போக்கில் இருந்தாலும், கிருத்துவர்கள் அடாவடித் தனமாக செயல்படுவது நன்றாகவேத் தெரிகிறது.

சர்ச்சுக்கு எதிரே கோவில் அமைந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றால், கோவிலுக்கு எதிரில், அருகில் எப்படி சர்ச்சுகள், மசூதிகள் கட்டப்பட்டன? இருப்பினும், கோவில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி, அதனை கண்டிக்கும் விதமாக கிறிஸ்துவ அமைப்பினர் சில தினங்களுக்கு முன், ஆரம்பாக்கம் – நாயுடுகுப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில், பிரச்னையின் நிலையை அறிந்து இந்த மாதம் 4ம் தேதி மீண்டும் ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் முனியசாமி தெரிவித்திருந்தார். சாலைமறியல் முதலியன விளம்பரத்திற்காகவே என்பது தெரிந்த விஷயமே. தாங்கள் சிறுபான்மையினர் என்ற திமிரில், மமதையில் அவ்வாறு செயல்படுகின்றனரேத் தவிர, உண்மையில் நம்பிக்கை அல்லது விசுவாசம் பெயரில் இல்லை என்பது தெரிகிறது.

இந்துக்கள் பதிலுக்கு உண்ணாவிரத போராட்டம்: இந்து கோவில் கட்ட தடையாக செயல்பட்டு வரும், கிறிஸ்துவ அமைப்பினரின் செயல்பாட்டினை கண்டித்து, இந்து அமைப்பினர், கிருத்துவர்கள் போலில்லாது, நேற்று (03-02-2011) ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் எதிரே உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டனர். வெங்கய்யா கோவில் நிறுவனர் ராஜேந்திரன், அகில இந்திய சிவசக்தி தர்ம சமிதி நிறுவன தலைவர் பாலாஜி, ஆரம்பாக்கம் வியாபாரிகள் சங்க துணை தலைவர் முருகன் உள்ளிட்ட பலரின் முன்னிலையில், 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

“JESUS NEVER FAILS” என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கோவிலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? இதனால், கிருத்துவர்கள் கருவிக் கொண்டிருக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படாதபடி, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வலுத்து வரும் பிரச்னை காரணமாக, ஆரம்பாக்கம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு காணும் நோக்கில், அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். “JESUS NEVER FAILS”[4] என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கோவிலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? என்று சிலர் வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்து விட்டனர்! சென்ற மாதத்தில் இதே மாதிரியான நிகழ்ச்சி, வேறு மாதிரி நிகழ்ந்தது.

கோவில் கட்ட எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு[5]: கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே தனியாரால் கட்டப்படவுள்ள கருப்பராயன் கோவிலை வேறு பகுதியில் கட்டக்கோரி ஊர்ப் பொதுமக்கள் ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினியிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கரட்டூர் எஸ்.பி., நகர் இரண்டாவது தெருவில் கருப்பராயன் மற்றும் முனியப்பன் கோவிலை ரங்கசாமி என்பவர், அவரது வீட்டுமனை நிலத்தில் கட்ட முயற்சி செய்து வருகிறார். வழக்கமாக ஊரின் எல்லைப் புறத்தில் கட்டப்படும், கருப்பராயன் கோவிலை ஊர் நடுப்பகுதியில் கட்டினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் கோவில் கட்டப்பட்டால், அந்த பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் செல்ல முடியும். குழந்தைகளும் அந்த பகுதியில் செல்ல அஞ்சுவர். எனவே கருப்பராயன் மற்றும் முனியப்பன் கோவிலை வேறு பகுதியில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோபி நான்கு நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் முருகேசன் மற்றும் எஸ்.பி., நகர், திலக்நகர், சாதனை செம்மல் நகர், செல்வகணபதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனிருந்தனர்.

ஊரின் எல்லைப் புறத்தில் கட்டப்படும், கருப்பராயன் கோவிலை ஊர் நடுப்பகுதியில் கட்டினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு: இப்படி நம்புவது பகுத்தறிவாகுமம? இல்லை அந்த மாதிரி, ஆகம சாத்திரங்கள் முதலியன இருக்கின்றனவா? இப்படியெல்லாம் கேள்வி கேட்டால், அந்த எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களின் போலித் தனம், வெளிப்பட்டு விடுகிறது. கருப்பராயன் கோவிலை இங்குதான் கட்டவேண்டும் என்றும் எங்குச் சொல்லப் பட்டிருக்கின்றது? உண்மையில், இந்துக்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளே, இவ்வாறு வேலை செய்கின்றன என்பதனை கண்டுகொள்ள வேண்டும். மேலும், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்….என்றெல்லாம் பேசுகிறவர்களும், யார் காப்புகின்றனர், யார் எதிர்க்கின்ரனர், அழிக்கின்றனர் என்பதனை அடையாளங் காண வேண்டும்.

© வேதபிரகாஷ்

04-02-2011


[1] “Inculturation” என்ற பெயரில், இந்துக்களைப் போன்று உலவி வந்து, அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் வேலைதான் இது. இது முழுக்க முழுக்க இந்திய விரோத கிருத்துவக் குழு

[2] கோவில் கட்ட எதிர்ப்பு : இரு தரப்பு பிரச்னையால் பதட்டம் நீடிப்பு, பிப்ரவரி 03,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=180303

[3] இது முழுக்க முழுக்க இந்திய விரோத கிருத்துவக் குழு. இருப்பினும், கிருத்துவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஜேஹோவா விட்னஸஸ் என்ற மற்றொரு குழு / பிர்வு, தேசிய கீதத்தை பாட மறுத்ததையும், நினைவு கொள்ளவேண்டும்.

[4] இது ஏதோ பொருளை விற்பதற்கு சமமாகும். எப்பொழுதுமே பழுதாகாது என்றால் என்ன அர்த்தம், ஒரு நேரத்தில் பழுதாகும் என்றுதானே அர்த்தம்?

[5] கோவில் கட்ட எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு, ஜனவரி 25,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=173515

சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

ஏப்ரல் 20, 2010

சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

முன்பு கடற்கரையில் இருந்த புனிதமான கபாலீஸ்வரர் கோயிலை கத்தோலிக்க மதவெறியோடு 16ம் நூற்றாண்டில் இடித்துத் தள்ளி அங்கு சாந்தோம் சர்ச் மற்றும் பிஷப் இல்லம் என்றெல்லாம் கட்டிக் கொண்டு பிழைப்பு நடத்தும் கிருத்துவக் கூட்டங்களுக்கு சில கேள்விகள்:

1. சாந்தோம் சர்ச்சை இடித்து கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டித்தருவார்களா கிருத்துவர்கள்?

2. பிஷப் இல்லத்தை இடித்துவிட்டு வெளியேறுவார்களா?

3. மறைத்து வைக்கப் பட்டுள்ள சிற்பங்களைத் திருப்பித் தருவார்களா?

4. சாந்தோம் சர்ச்சின் வராண்டாவில் இருந்த, கல்வெட்டுத்துறையினரால், 12ன் நூற்றாண்டு கல்வெட்டு என்ற்ய் படுத்துக் காட்டப்பட்ட, நடராஜர்க்கு இரவ்ல் விளக்கெரிக்க வரியில்லாமல் கொடுக்கப் பட்ட நில மானியத்தைக் குறிக்கின்ற அந்த கல்வெட்டு எங்கே?.

5. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்திலுள்ள சமஸ்கிருத கல்வெட்டு, சர்ச்சின் மேற்கு திசையில் 100 முழ தூரத்தில் கிடைத்தது.  அது எங்கே போயிற்று?

8. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வேட்டு, சாந்தோம் செமினரியின் பிரதான கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலது புறத்தில் காணப்பட்டது. இப்பொழுது சாந்தோ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கிருத்துவர்கள் கூறுகிறார்கள். அது எங்கே?

9. இதைத் தவிர, தாமரைப்பூ உருவம் பொத்தித்த சிற்பங்கள் சர்ச்சின் வலப்புற வெளியில் நேர்பகுதியில் இரண்டும், பிஷப் இல்லத்திற்கு செல்லும் வாயிலின் இருபுறபும் இரண்டு 1990 வரை இருந்தன. ஆனால்,  இன்று எல்லாமே மறைந்து விட்டன! அவையெல்லாம் எங்கே போயிற்று?

10. தொல்பொருட்துறை / அகழ்வாய்வுத் துறைகளுக்குத் தெரியாமல், அறிவிக்காமல் எப்படி அவை அப்புறப்படுத்தப் பட்டிருக்க முடியும் அல்லது மறைக்கப் பட்டிருக்கக்கூடும்?

கோயிலைப் பற்றிய உண்மைகளை, ஆதாரங்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? பின்னணி என்ன?

சரித்திரத்தையே மறைக்கும் செயலாகிறது. பிறகு எப்படி பொறுப்புள்ள சரித்திர ஆசிரியர்கள், பழங்கால கட்டிடங்களைப் போற்றவேண்டும் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஆர். முத்தையா போன்ற ஆட்கள் மௌனமாக இருக்கிறார்கள்?