Posts Tagged ‘கிருத்துவம்’

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [1]

நவம்பர் 28, 2018

ஜான் ஆலன் சௌவின் ரகசிய நுழையும், சென்டினலில் கொலையுண்ட மர்மம், மறைக்கப் படும் விவரங்கள் [1]

Location sentinel

26/11 நேரத்தில் வரும் செய்தியும், கிருத்துவ மிஷினைகளும்: சமீபத்தில் ஒரு லிருத்துவ மிஷனரி இளைஞன் சென்டினல் தீவில், அத்துமீறி நுழைந்ததால், கொல்லப்பட்டதைக் குறித்த செய்திகள், உலகம் மற்றும் இந்திய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளக வெளிவந்தன. முழு விவரங்கள் தெரியாமல் இருந்தாலும், ஆங்கில ஊடகங்களில் வந்தவற்றை வைத்து அரைகுறை விசயங்களை செய்திகளாக போட்டன.கிருத்துவ ஊடகங்கள் அவன் ஏதோ ஒரு பெரிய தியாகத்தை செய்து விட்டான், மதத்திற்காக உயிர் துறந்தான் என்ற ரீயிலிருந்து, இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள், பலியிடப் படுகிறார்கள் என்ற வரை நீட்டிக்க முயன்றனர்.. ஆனால், திடீரென்று வேகமாக எழுந்த அதே நிலையில், அப்படியே அடங்கி விட்டது. இதுதான் வியப்பாக இருக்கிறது. 26/11 விவகாரத்தில் கூட, ஒரு அமெரிக்க கிருத்துவ மிஷினரி மாட்டிக் கொண்டான். அதாவது, ஊடக அலுவலகங்களுக்கு, தாங்கள் இங்கெல்லாம் தாக்கப் போகிறோம் என்ற இ-மெயில்கள் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மூலம் அனுப்பப் பட்டது அறிந்து சென்றபோது, அது அந்த அமெரிக்க கிருத்துவ மிஷினரியின் இடமாக இருந்தது. உடனே, அமெரிக்க அரசு அவனை அப்படியே தூக்கிச் சென்று விட்டது, அச்செய்தியும் அமுக்கப் பட்டது. இப்பொழுதும் அதெ 26/11 நேரத்தில், இச்செய்தி வந்து அடங்கி விட்டது போல தோன்றுகிறது.

Andaman tribes killed missionary - 21-11-2018.Tamil news cutting.2

சட்டங்களை மீறி ஜான் ஆலன் சௌ சென்டினல் தீவுக்கு சென்றது: அந்தமானில் உள்ள பல்வேறு தீவுகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் பழங்குடியின மக்கள் தனிமையாக வசிக்கும் 29  தீவுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட யாரும் செல்லக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இந்திய அரசே அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. மேலும், அங்கே சுற்றூலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது[1].   இந்நிலையில் சாகசங்களில் ஆர்வம் கொண்ட அமெரிக்காவை சேர்ந்த ஜான் அலன் சாவ் [John Allen Chau] என்ற இளைஞன் அந்தமான் சென்றுள்ளான். பலமுறை இந்தியா வந்துள்ள அவன், அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு தடையை மீறி ரகசியமாக செல்ல விரும்பினான். உள்ளூர் மீனவர்களுக்கு அதிக பணம் கொடுத்து அவர்கள் உதவியுடன் படகில் கடந்த நவம்பர் 14 ந்தேதி 2018, புதன் கிழமை அன்று வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல முயன்றான். பணத்திற்கு ஆசைப்பட்டு, மீனவர்கள் அலனை தீவில் இறக்கி விட்டு சென்று விட்டனர். அதற்கு பிறகு நடந்தது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

Andaman tribes killed missionary - 21-11-2018.Tamil news cutting.3

கிருத்துவ மிஷனரிக்கு செல்வதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?: ஜான் ஆலன் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று கிறித்துவ மதத்தை போதித்து வந்திருக்கிறான்.  மூன்று ஆண்டுகளில் அந்தமான் தீவுக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறான் ஆலன். நவீன கொலம்பஸ் என தன்னைக் கருதிக்கொண்ட ஆலன், செண்டினல் பழங்குடிகளுக்கு கிறித்தவ மதத்தை போதித்து, ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யப் போவதாக தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறான்.’கிறிஸ்டியன் கர்சன்’ என்ற மத அமைப்பு, ஜான் ஆலன் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜான் ஆலன் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருக்கிறது. ஜான் ஆலனோ, தான் கொல்லப்பட்டால் பழங்குடிகளை மன்னிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளான். அவனுடைய குடும்ப அங்கத்தினர்கள் உலகம் முழுக்க  கிறித்தவ மதத்தைப் பரப்பச் சென்ற போதகர்களே. அத்தகையோர், பின்னாளில் காலனி ஆட்சிகளுக்கு வழிவகுத்தார்கள். இயற்கை மற்றும் இறந்தவர்களை வணங்குவதை சாத்தானை வணங்குவதாகச் சொல்லி ஜீசஸை அறிமுகப்படுத்தி, அவர்களை ‘விடுவிக்க’ பார்த்திருக்கிறான் ஆலன்[2]. அப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்கா சென்று செவ்விந்தியர்களை திருத்துவதாகச் சொல்லி இன்று வெள்ளையர்கள் அப்பழக்குடி மக்களை கிட்டத்தட்ட அழிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்[3].

Andaman tribes killed missionary - 21-11-2018-John Allen Chau

அமெரிக்க மிஷினரிகளுக்கு இந்தியாவில் என்ன வேலை?: முன்னர் பிடோபைல், குழந்தை கற்ப்பழிப்பாளி விவகாரங்களில் நிறை பேர் மாட்டிக் கொண்டதில் அமெரிக்கர் இருந்தனர். அதாவது, மனித உரிமை, சிறுவர் உரிமை பேசும் நாட்டிலிருந்து வந்தவர் தாம் அத்தகைய நீச குற்றங்களை செய்தது. இப்பொழுது, திருட்டுத் தனமாக ஊழியம் செய்ய, சாட்டங்களை மீறி இவன் நுழைந்திருக்கிறான்.  உலகில் அமெரிக்காதான் கடுங்கோட்பாட்டு கிறித்தவ மத பிற்போக்கு நம்பிக்கைகளுக்கு இன்றும் தலைமையகமாக திகழ்கிறது. கிராமத்தில், ஊரில் இருக்கும் பெந்தகோஸ்தே, ஆவிஎழுப்பு கூட்டங்கள் அனைத்திற்கும் ட்ரெண்ட் செட்டர் அமெரிக்காதான். அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பு மக்களிடையே தோற்றுவித்திருக்கும் பதட்டம் காரணமாக அங்கே அடிக்கடி துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன. இன்னொரு புறம் இத்தகைய மதவாதிகள் மக்களை பிடித்து பிற்போக்காய் வைத்திருக்கின்றனர். தனது சொந்த நாட்டின் சாத்தானாகிய முதலாளித்துவத்தை பார்க்க இயலாத ஆலன் இங்கே அப்பாவியான பழங்குடிகளை சாத்தானாக பார்த்து பரலோகம் சென்றிருக்கிறான்.

John Chau -Satanic sentinel

சென்டினல் மக்களின் தனியுரிமை மீறி நடக்க தைரியம் எப்படி வந்தது?: அந்தமான் நிக்கோபர் பாதுகாப்புச் சட்டம் 1956ன் கீழ் இம்மக்களின் தனியுரிமையை பாதுகாத்து வருகிறது இந்திய அரசு. இந்திய அரசின் அனுமதியின்றி இப்பகுதியில் யாரும் செல்லக் கூடாது. அப்படி செல்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அவர்களை சந்திக்க விரும்புதல், உணவு, உடைகள் போன்றவற்றை தர முயற்சித்தல் போன்றவை சட்ட விரோதமாகும்.  மேலும் வடக்கு செண்டினல் தீவுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் உள் நுழையக் கூடாது என்று 1990களில் மத்திய அரசு அறிவித்தது. அப்படியிருக்க அவனே பெருமையாக சொல்லிக் கொண்டபடி, கப்பற்படை, கடற்பாதுகாப்பு போலீஸார்-ராணுவம், சுங்கம் முதலியவற்றைடெல்லாம் மீறி, எப்படி, ஏன் அவன் திருட்டுத் தனமாக நுழைந்தான்? ஆனால், அவன் நுழைந்தது, போர்ட் பிளையரில் இருக்கும் மிஷினரி, சென்னை அமெரிக்கத் தூதரகம், நண்பகள், மீனவர்கள் முதலியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆக, அத்தகைய சட்டமீறல் தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?

John Chau letter - plan to convert-landed

ஏழு மீனவர்கள் கைது என்றால், அவன் அங்கு சென்றுள்ளான் என்றறிந்த மற்றவ்ர்களை ஏன் வீட்டு வைத்தார்கள்?: அமெரிக்காவில் இருக்கும் வாசிங்கடனைச் சேர்ந்த 26 வயது இளைஞரன் ஆலன். சாகச பயணங்களை அதிகம் விரும்புவன். ஓரல் ரோபர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றான். வடக்கு செண்டினல் தீவில் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக அவரின் நண்பர்களிடம் கூறியிருக்கிறான். அந்த தீவிற்கு செல்லும் போது வாட்டர் ப்ரூஃப் பைபிள் வைத்திருந்தான். அப்பொழுது அங்குள்ள பழங்குடியின மக்கள் அம்புகளை எய்து தாக்கியதாக கூறப்படுகிறது[4]. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அலனை அங்கேயே விட்டு விட்டு தப்பி வந்துள்ளனர்[5]. மூன்று நாட்கள் கழித்து 17-11-2018 சனிக்கிழமை அன்று மீனவர்கள் மீண்டும் சென்று பார்த்த போது பழங்குடியின மக்கள் அலனை கொன்று மணலில் புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தமான் திரும்பிய அந்த மீனவர்கள் அலனின் நண்பரான உள்ளூர் மதபோதகரிடம் கூறியுள்ளனர். அவர் அமெரிக்காவில் உள்ள அலனின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளார். அலனின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், அந்தமான் – நிகோபர் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளது. அதன் பேரில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி அலனுக்கு உதவிய ஏழு மீனவர்களை கைது செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

28-11-2018

Sentinel near to Myanmar, Thailand

[1] விகடன், அந்தமான் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி!, சா.ஜெ.முகில் தங்கம் வெளியிடப்பட்ட நேரம்:21:20 (21/11/2018), கடைசி தொடர்பு:21:20 (21/11/2018)

[2] தமிழ்.ஒன்.இந்தியா, யார் இந்த சென்டினல் பழங்குடியினர்.. ஆச்சரியம் தரும் அந்தமான் தீவு அதிசய மனிதர்கள்!, By Vishnupriya R Updated: Tuesday, November 27, 2018, 9:54 [IST]

[3] https://tamil.oneindia.com/news/india/who-are-sentinelese-here-are-some-facts-about-them-334925.html

[4] தினத்தந்தி, அந்தமான் தீவில் அமெரிக்க இளைஞர் கொலை : உள்துறை அமைச்சகம் அறிக்கை அளிக்க பழங்குடியினத்தவர் தேசிய ஆணையம் கோரிக்கை, பதிவு : நவம்பர் 23, 2018, 07:15 AM மாற்றம் : நவம்பர் 23, 2018, 10:19 AM

[5] https://www.thanthitv.com/News/India/2018/11/23071533/1015984/US-national-John-Allen-Chau-killed-in-Andaman.vpf

ஏசுகிருஸ்து நான் தான் என்று அமெரிக்காவில் அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – அமெரிக்க செய்திகள் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறதா? (2)

நவம்பர் 23, 2017

ஏசுகிருஸ்து நான் தான் என்று அமெரிக்காவில் அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – அமெரிக்க செய்திகள் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறதா? (2)

Charles Manson - Mother, father

சார்லஸ் மான்சனின் பெற்றோர், வளர்ப்பு, சிறுவயது குற்றங்கள் முதலியன: சார்லஸ் மான்சன், சார்லஸ் மடோக்ஸ் [Charles Maddox] என்பவனுக்கு 1934ல், திருமணம் ஆகாத 16-வயது இளம் பெண் மூலம் பிறந்தான். பிறகு வளர்ப்பு தந்தை  வில்லியம் மான்சனின் [William Manson] கடைசி பெயரை, தன் பெயருடன் சேர்த்துக் கொண்டான். சிறு வயதிலிருந்தே வளர்ப்பு சரியாக இல்லாததால், திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டான். இதனால் பிடிபட்டு, சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப் பட்டான். 1946ல், தனது 12வது வயதில் டெர்ரி ஹௌட் [Terre Haute, Indiana] என்ற இடத்தில் இருந்த பையன்களுக்கான கிபால்ட் பள்ளியில் [Gibault School for Boys] சேர்க்கப்பட்டான். ஆனால், அடுத்த 20 வருடங்களில் திருட்டுகளில் ஈடுபட்டதால், பலமுறை சீர்திருத்த பள்ளிகளில் அடைக்கப் பட்டு, குற்றங்களுக்காக சிறையிலும் அடைக்கப்பட்டான். 1987ல் சிறையில் அளித்த பேட்டியிலும், இவ்விவரங்களைக் கூறியுள்ளான். 1967ல் வந்த அவன், 32 வயதில் பாதிகாலம் சிறையில் கழித்தான்.

20-year-old Charles Manson on his wedding day with ex-wife, Rosalie Jean Willis-newsweek

பல திருமணங்களும், 18- பெண்களுடன் வாழ்தலும்: இரண்டு முறை திருமணம் செய்து கொண்டான். ஜனவரி 1955ல் முதல் திருமணம் ரோஸாலி ஜீன் வில்லிஸ் [Rosalie Jean Willis] என்பவளுடன் நடந்தது[1]. ஆனால், தோல்வி தான். 1958ல் விவாகரத்தானது. பிறந்த மகனும் விபத்தில் இறந்து விட்டான். இரண்டாவது திருமணம் லியோனா கான்டி ஸ்டீவன்ஸ் [Leona “Candy” Stevens] என்பவளுடன் 1959ல் நடந்தது, ஆனால், 1963ல் விவாகரத்தானது[2]. 2014ல் மூன்றாவது திருமணம் நடந்ததாக சொல்லப்பட்டது. தான் சாமியார் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, 18-பெண்களுடன் வாழ ஆரம்பித்தான்.  போதை மருந்து, தாரளமான செக்ஸ், போன்றவற்றுடன் இருந்த அவனிடத்தில் வாழாவெட்டிகள், திசைத் தவறிய பெண்கள் அடைக்கலமாகினர்[3]. இதனை அவன் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டான்[4].

Charles Manson books sold-Susan Atkins

ஏசுகிருஸ்துவும் சாத்தானும் சேர்ந்த அவதாரம் என்று சொல்லிக் கொண்டது: எசு கிருஸ்து மற்றும் சாத்தான் இரண்டும் கலந்தவன் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டான். கருப்பு சர்ச் போன்ற சாத்தான் கிரியைகளை செய்தான், ரத்தத்தை சுவைத்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டது. சூஸன் அட்கின்ஸ், சாத்தானின் குழந்தை, கடவுளின் குழந்தை [Child of Satan, child of God] போன்ற புத்தகங்கள் கூட வெளியிடப்பட்டன. இருத்துவத்தைப் பொறுத்த வரையில், ஆன்டி-கிரைஸ்ட் [Anti-Christ] என்ற தத்துவம் இல்லாமல், கடவுளின் தன்மையினைப் புரிந்து கொள்ள முடியாது போன்ற இறையியலை வளர்த்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே, சாத்தான், ஆதாம்-ஏவாளை பாவம் செய்யத் தூண்டியது, அதனால், அந்த முதல் ஆதாம் செய்த பாவத்தை தான், இரண்டாவது ஆதாமான ஏசு வந்து, தனது ரத்தத்தினால், அப்பவத்தைத் தீர்க்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், ஆதாம்-ஆவாள் நிர்வாணத்தில் இருந்ததினால், நிர்வாணம் புனிதமாகக் கருதப் படுகிறது. ரத்தம் குடிப்பது, மாமிசம் சாப்பிடுவது என்பதுதான், ரொட்டி மாமிசமாகவும், சாராயம் ரத்தமாகவும் மாறுவதாக, யூகேரிஸ்டில் விசுவாசித்து புசிப்பது. உண்மையில் எசுவின் சதை மற்றும் ரத்தத்தைக் குடிப்பது தான் அந்த சடங்கு. ஏசுவின் உடலுக்கு பதிலாக ஒருபெண்ணை பலியிட்டு அவளது உடலை-ரத்தைத்தைப் புசிப்பது, கருப்பு சர்ச்சின் சடங்காக இருக்கிறது. இதைத்தான் திரைப்படங்களில் காட்டி வருகிறார்கள்.

Charles Mansen, illegitimate son-drank blood--vedaprakash

ஏசுவுடன் ஒப்புமைப் படுத்திக் கொண்டு, தானே ஏசு என்று பாவித்துக் கொண்டது: திருமணம் ஆவதற்கு முன்பே, தான் பிறந்ததால், தன்னை ஏசு என்றே நினைத்துக் கொண்டான். மேலும், தான் தந்தையறியாத பிள்ளையாக இருந்ததால், தாயின் மீது வெறுப்பாக இருந்தான். ஹோல்வியுற்ற திருமணங்கள் பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. அதுவே, பிறகு பெண்களின் மீதான துவேசமாக மாறியது. ஹிருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, போட்டியாக இருந்தவர், கருப்பு இனத்தவர், சிறைவாசத்தின் போது அவர்களுடன் இருக்க வேண்டியதாயிற்று. அது கருப்பின மக்களின் மீது வெறுப்பை உண்டாக்கியது. அமெரிக்காவை யூதர்கள் மறைமுகமாக ஆதிக்கத்தில் வைத்திருப்பதால், அவர்கள் மீதும் வெறுப்பை வளர்த்ய்துக் கொண்டான்.. தன்னை ஏசு கிறிஸ்துவின் அவதாரம் என்று மான்சன் தன் சீடர்களை நம்பவைத்தான். இதற்காக போதை மருந்துகளை பயன்படுத்தினான். இதன் மூலம் தன் சீடர்களான மத்தியவர்க்க பெண்கள், இளைஞர்கள் மீது அதிகாரம் செலுத்தினான். அவனது குரூரம், பயங்கரம், கொலைகள் மூலம், தீயமுறையில் பிரபலம் பெற்றதால், அவனைப் பற்றிய செய்திகள், புத்தகங்கள் என்று வேறு வெளிவந்தன. வின்சென்ட் பக்லியோசி [Vincent Bugliosi] என்ற அரசு தரப்பு வக்கீல், இவனைப் பற்றி அதிக விவரங்களை 2015லேயே கொடுத்தார்.

Charles Manson - Tate slayings-1

1968 இனவெறி போராட்டம் அவனது கொலைகளைத் தூண்டியது: 1960 களின் பிற்பகுதியில் கலிஃபோர்னியாவில் பலவந்தமாக வலுக்கட்டாயமாக இளைஞர்களைக் கொண்டுவந்தார்.அவர் தனது “குடும்பத்தை” அழைத்தார், அவர்கள் இறுதியாக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள ஸ்பஹன் பண்ணையில் ஒன்றாகக் குடியேறினர். 1968ல் நடந்த இனவெறி கலவரங்கள், கருஞ்சிறுத்தை போராட்டம் முதலியவற்றிற்கு பிறகு, உலக அழிவுக்கான, அர்மகெட்தான் வராப்போகிறது என்று உணர்ந்து கொண்டான். எல்.எஸ்.டி போதை மருந்துடன், மெஸ்மரிஸம் செய்து, தனது சீடர்களை அடிமையாக வைத்திருந்தான். எசு கிருஸ்து மற்றும் சாத்தான் இரண்டும் கலந்தவன் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டான். முந்தைய அக்கூட்டத்தின் உறுப்பினர், பார்பாரா ஹோட் [Barbara Hoyt] என்பவள் அவனை தான் கடவுள் என்றே நம்பியதாக ஒப்புக் கொண்டாள். பீட்டில்ஸ் என்ற பாட்டுக் குழுவினர், தன்னுடன் பேசுவதாகக் கூறிக் கொண்டான். 1968ல் பீடில்ஸ் ஆல்பம் வெளி வந்தபோது, கருப்பினத்தவர் எழுவர் என்றும், அதனால், வெள்ளை ஆதிக்கம் அழியும் என்றும் கூறினான். கலிபோர்னியாவுக்கு சென்றபோது, ஹின்மான் [Hinman] என்ற இசை ஆசிரியரைச் சந்தித்தான். அவர், அவனை பீச் பாய்ஸ் புகழ் டென்னிஸ் வில்சனுக்கு [Dennis Wilson of the Beach Boys] அறிமுகப்படுத்தி வைத்தார். வில்சன், டெர்ரி மெல்சர் [Terry Melcher] என்ற தயாரிப்பாளருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்வழியாகத்தான் பொலான்ஸ்கி, டேட் முதலியோருடன் தொடர்பு ஏற்பட்டது.

Charles Manson - victims killed-Sunday News, 10-08-1969

பன்முக வளர்ச்சியில் உருவான குற்றவாளி: குடும்பம் உருவாகத் தொடங்கிய சமயத்தில், மேன்சன் ஒரு வேலையில்லாத முன்னாள் குற்றவாளி ஆவார், அவர் பல்வேறு விதமான குற்றங்களுக்கு திருத்தம் கொண்ட நிறுவனங்களில் பாதி வாழ்க்கை செலவிட்டார்.படுகொலைகளுக்கு முன்னர், அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் இசைத் தொழிலின் முதுகில் ஒரு பாடகர்-பாடலாசிரியராக இருந்தார், முக்கியமாக டென்னிஸ் வில்சன் , டிரம்மர் மற்றும் பீச் பாய்ஸின் நிறுவன உறுப்பினர் ஆகியோருடன் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி.மேன்சன், ” ஹெலட்டர் ஸ்கெல்டர் ” என்று அவர் அழைத்ததை நம்பினார், இது ஒரு பெயரிடப்பட்ட பீட்டிலின் பாடல் ஒன்றில் இருந்து வரவிருக்கும் அபோகாலிப்டிக் ரேஸ் போரை விவரிக்க ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டது. அந்த கொலைகள் யுத்தத்தை ஊடுருவ உதவும் என்று அவர் நம்பினார். அவரது புகழ் ஆரம்பத்திலிருந்தே, ஒரு பாப் கலாச்சாரம்அவரைச் சுற்றி உருவானது, அதில் அவர் இறுதியில்  பைத்தியம்,  வன்முறை  மற்றும்  கொடூரமான  ஒரு சின்னமாக ஆனார். மேன்சன் பின்னர் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அவரை எழுதிய மற்றும் நிகழ்த்திய பாடல்களின் பதிவுகள் வணிக ரீதியாக வெளியிடப் பட்டன. பல்வேறு இசைக்கலைஞர்கள் அவரது பாடல்களில் சிலவற்றை மூடினார்கள் .

Susan Atkins, Leslie Van Houten and Linda Kasabian leave court after being arraigned in 1969. The three members of the Manson family had been charged with murder. AP Photo

அமெரிக்க செய்திகள் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறதா?: நவநாகரிகமான அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே, இத்தகைய நிலை என்றால், மற்ற நாடுகளின் நிலை என்ன என்பதை கவனிக்கலாம். கிருத்துவ மதத்திற்கு, குறிப்பாக பல்வேறு கிருத்துவ குழுமங்களுக்கு, உரிமை, சலுகை முதலியவைக் கொடுக்கப் பட்டிருப்பதால், அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் போலும். போர்னோகிராபியே ஏற்க்கப்பட்டுள்ள அச்சமூகத்தில் இத்தகைய குற்றவாளிகள் இருப்பது விசித்திரமாக இல்லை, ஆனால், இந்தியாவின் எதிர்காலம் நினைத்தால் தான், பயமாக இருக்கிறது. சந்தை பொருளாதார, அமெரிக்க-இந்திய கூட்டு எதிர்பார்க்கும் இந்நேரத்தில் அமெரிக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும்ல் இத்தகைய செய்திகள் வெளிவருவதும், எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. இவனது இறப்பையும், மதத்திற்க்காக இறந்தவன், தியாகி போன்று சித்தரிக்கப்படும் நிலையும் உண்டாகலாம்.

© வேதபிரகாஷ்

23-11-2017

Charles Manson - childhood shattered

[1] Newsweek, Who was Charles Manson married to? Meet the women cult leader had romanced with, by Stav Ziv, 20-11-2017 at 10:59 AM USA.

[2] http://www.newsweek.com/who-was-charles-manson-married-meet-women-cult-leader-had-romances-716883

[3] TheHindu, Helter-skelter-On the legacy of Charles Mansion, November 22, 2017 00:02 IST: Updated  22, 2017 00:08 IST

[4] http://www.thehindu.com/opinion/editorial/helter-skelter-on-the-legacy-of-charles-manson/article20628787.ece

ஏசுகிருஸ்து நான் தான் என்று அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – இரண்டாவது வரவு முடிந்து விட்டதா? (1)

நவம்பர் 23, 2017

ஏசுகிருஸ்து நான் தான் என்று அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – இரண்டாவது வரவு முடிந்து விட்டதா? (1)

Charles Mansen, jesus christ

ஊடகக்காரர்களினால் பிரபலமடைய செய்யப் பட்ட தீர்க்கதரிசி: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மத வழிபாட்டு தலைவன் மற்றும் தன்னை தானே இயேசுவின் அவதாரம் என கூறிக்கொண்ட சார்ல்ஸ் மேன்சன் (83) 19-11-2017, ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்துள்ளான்[1] என்று ஒரே ஒரு தமிழ் ஊடகத்தில் சிறியதாக செய்தி வந்தது. தமிழில், “தி இந்து”வின் இன்றுதான் சுருக்கமாக செய்தி வந்துள்ளது. இதுவும் அமெரிக்க ஊடகங்களில் வந்த செய்திகளின் சுருக்கமான தொகுப்பு என்று தெரிகிறது. “உடலை யாரிடம் ஒப்படைப்பது, எரிப்பதா புதைப்பதா என்று போலீஸார் குழம்பி நிற்கிறார்கள்,” என்றபோது, அத்தகைய நிலை ஏன் என்று வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அவன் தன்னையே ஏசு என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவன் என்பதால், புதைக்கப் படத்தான் போகிறான். கிருத்துவன் இல்லை என்றாலும், எரிக்கப்படப் போவதில்லை. “நெருங்கிய உறவினர்கள் யாரேனும் முன்வந்தால் ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் காவல் துறையினரே அவரை ‘நல்லடக்கம்’ செய்ய வேண்டியதுதான்,” என்று “தி.இந்து”கூறியுளளது தமாஷாக உள்ளது. இயக்குநர் குவெண்டின் டாரன்டினோவின் அடுத்த படம் சார்லஸ் மேன்சன் பற்றியதாக இருக்கும் என்று சில மாதங்களுக்கு அனுமானமாகப் பேசப்பட்டது[2]. இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேன்சன் பாத்திரத்துக்கு லியனார்டோ டி காப்ரியோ, டாம் க்ரூஸ், பிராட் பிட் என்று முக்கிய நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன! என்ற தோரணையில் “தி இந்து” தமாஷை விவரித்துள்ளது.

Charles Manson books sold-

குற்றவாளியின் கதையினையும் காசாக்கிய ஊடகக்காரர்கள்: கலிபோர்னியா சிறைகளில் 1969லிருந்து 48 வருடங்களாக ஒன்பது ஆயுட் தண்டனைகளை அனுபவித்து வந்தான்[3]. 12 முறை அவனுக்கு பரோல் மறுக்கப்பட்டது. அமெரிக்க சமுதாயத்தை உலுக்கியது அவது, வாழ்க்கை, சித்தாந்தம், பாப் கலாச்சாரம், யூதவிரோதம், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான எதிர்த்தன்மை, பெண்கள் வெறுப்பு மற்றும் கொலைகள், மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் முதல் சட்டமேதைகள் வரை, அவனது வாழ்க்கை, மேசன் குடும்பம் முதலியவற்றை அலசி பார்த்தனர். ஆனால், இவையெல்லாமே, பொதுவாக அமெரிக்காவில் இருக்கும் இனவெறியாளகளின் சித்தாந்தத்தை ஒத்துப் போவதாகவே உள்ளது. கு கிளக்ஸ் கிளேண் [Ku Klux Klan] என்ற இயக்கத்தின் சித்தாந்ததமும் இப்படித்தான் இருந்தது, இருந்து வருகின்றது. நியோ பாசிஸம், இனவெறி என்றெல்லாம் விவாதித்தாலும், அவனது தாக்கம் குறையவில்லை என்றே ஆகிறது. எழுத்தாளர்கள், டிவி-மற்ற ஊடகக்காரர்கள் அவனை வைத்து நன்றாகவே வியாபாரம் செய்தனர். மற்ற இதே போன்ற கொலைகளுக்கு இவனது தாக்கம் தான் என்றும் சொல்லப்பட்டது.ஆனால், இந்திய ஊடகங்கள் இப்பொழுது தான் அவனைப் பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது.

Charles Mansen, jesus christ-vedaprakash

எசுவின் இரண்டாவது வருகை, ஏசுவின் அவதாரம் முதலியவற்றை வைத்து பிரச்சாரம் செய்தது:  அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னமரிக்க நாடுகளில், ஏசு வருகிறார், இரண்டாவது வருகையை எதிர்பார்த்திருக்க வேண்டும், அப்பொழுது, தீர்க்க தரிசனங்களின் படி பல தீயவை ஏற்படும்.யுத்தங்களில் மக்கள் இறப்பார்கள்; கொடிய-விசித்திர நோய்களால் பலர் சாக நேரிடும்; பூகங்கள் நிகழ்ந்து, நகரங்கள் புதைந்து விடும்; வெள்ளப்பெருக்கு ஏற்படும்; கடலால், உலகமே நீரில் மூழ்கி விடும்; ஆகவே, விசுவாசிகள் அவரது வருகைக்காக காத்திருக்க, ஆயத்தமாக வேண்டும், இப்படி, பிராச்சாரம் செய்து வருவது தெரிந்த விசயமே. இந்தியாவில் கூட அத்தகைய கூட்டங்கள் அதிகமாகவே இருந்து வருகின்றன. உலகம் அழியப் போகிறது, சாகத் தயாராக இருங்கள் என்று கத்திக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். இவற்றை அறிந்து கொண்டுதான், இவனும் அதே தோரணையில் பிரச்சாரத்தை செய்தான். இவன் அதன்படியே ஒரு தனி வழிபாட்டுக் குழுவின் தலைவராக இருந்து, பலரை தனது கட்டுக்குள் வைத்திருந்தான்[4].

Charles Manson - victims killed

சாரலஸ் மான்சன் எப்படி கொலைகளை நடத்தி வைத்தான்: அதன்படியே, தீர்க்கதரிசனங்களை மெய்ப்பிக்க, சடங்குகள் மூலம், மேலும் நம்பிக்கையை வளர்க்க திட்டம் போட்டான். அதன் விளைவு தான், பெண்களின் கொலை. தனது சூஸன் அட்கின்ஸ் [Susan Atkins], பாட்ரிஸீயா கெரின்விங்கில் [Patricia Krenwinkel], சார்லஸ் வாட்சன் [Charles Watson] மற்றும் எஸ்லி வேன் ஹூடன் [Leslie Van Houten] என்ற சீடர்களை தொடர் கொலைகள் செய்ய சொல்லி வலியுறுத்தியவன்[5]. இவரின் இயக்கம் “மான்சன் குடும்பம்”என்று அழைக்கப்பட்டது[6]. கடந்த 1960–ம் ஆண்டு முதல் 1970–ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் தொடர் படுகொலைகளை செய்தது, லாஸ் ஏஞ்சலிஸ் நகரம், ஏன் அமெரிக்காவையே நடுங்கி கலங்க வைத்தவன்[7]. அவர்கள் அந்த 1969-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 9ம் தேதி படுகொலைகள் ஆரம்பித்தன[8]. அவர்கள் கொலை செய்தவர்களில் –

  1. ஹாலிவுட் நடிகையான ஷாரோன் டேவும் [Sharon Tate] ஒருத்தி. கொலை செய்யபடும்போது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
  2. ஜே செப்ரிங் [Jay Sebring]என்ற சிகை அலக்கார வல்லுனர்,
  3. பெரிய பணக்காரி [Abigail Folger]
  4. வொஜிசிக் பிரைகோஸ்கி என்ற எழுத்தாளர் [Wojciech Frykowski]
  5. ஸ்டீவன் பேரன்ட் [Steven Parent] என்ற குடும்பப் பொறுப்பாளரின் நண்பர்.

ஆனால், அந்தக் கொலைகளில் திருப்தியடையாத மேன்சன், ‘எப்படிக் கொலை செய்வது?’ என்று காட்டுவதற்காக, அடுத்த நாள் இரவு தானே ஆறு பேரை அழைத்துச் சென்று தன் விருப் பப்படி இருவரைக் கொலைசெய்ய வைத்தார். அடுத்த நாள் மாலை [10-08-1969], கீழ்கண்டவர்கள் அவர்களது இல்லத்தில் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டனர்[9]:

  1. சூப்பர் மார்கெட்டின் பொறுப்பாளர் [Leno LaBianca ]
  2. ரோஸ் மேரி [Rosemary] அவரது மனைவி.

இக்கொலைகளை செய்ய அவன் ஆணையிட்டாலும், தான் அதில் ஈடுபடவில்லை[10]. கொலைகளில், பிணங்களின் மீது 169 கத்திக் குத்துகள் மற்றும் குண்டு காயங்கள் இருந்தன. “பன்றி” என்ற வார்த்தை ரத்ததினால், அவர்களது வீடுகளின் சுவர்கள் மற்றும் கதவின் மீது எழுதப்பட்டிருந்தன[11].இப்படி மொத்தம் ஒன்பது பேரைக் கொடூரமாகக் கொன்றது இந்தக் கும்பல். மேன்சன் சிறையில் இருந்தாலும், அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாகப் பெண்கள் கொலை வெறியுடன்தான் அலைந்தார்கள். 1975-ல் அப்போதைய அதிபர் ஜெரால்டு ஃபோர்டைச் சுட்டுக்கொல்ல லைனெட் ஸ்க்யூக்கி ஃப்ரோம் எனும் மேன்சன் சிஷ்யை முயற்சிசெய்தது பரபரப்பான செய்தியானது[12].

Charles Manson - Tate slayings blamed Hippes

மரண தண்டனை நீக்கப்பட்டதால், தண்டனைகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது: ஜூன் 16, 1970 அன்று, மான்சன் மற்றும் அவனது கூட்டாளிகள் சூஸன் அட்கின்ஸ் [Susan Atkins], பாட்ரிஸீயா கெரின்விங்கில் [Patricia Krenwinkel] மற்றும் எஸ்லி வேன் ஹூடன் [Leslie Van Houten] லாஸ் ஏஞ்சலிஸுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணையின் போதே, நெற்றில்யில் + குறியிட்டு, அவர்கள், நீதி மன்றத்தில் பாடுவது, ஆடுவது, கத்துவது, என்று கலாட்டா செய்தனர். அதாவது, தம்முடைய நிலைப்பாட்டை தாராளமாக வெளிப்படுத்தினர். அவற்றை நீதிமன்றத்தில் தடுக்கவில்லை. மற்ற குற்றங்களுக்காக சிறையில் இருந்த அட்கின்ஸ், என்றவன் கொடுத்த வாக்குமூலத்தில், பல உண்மைகள் வெளி வந்தன. செக்ஸ், கூட்டு செக்ஸ், பலருடன் செக்ஸ், போதை மருந்து உபயோகம், மூளை சலவை என்று பல பிரயோகங்கள் இருந்தது தெரிய வந்தது. உலகத்தையே அச்சத்தில் உறையக் கூடிய குரூரக் குற்றத்தை அவர்கள் செய்ய விரும்பினர், என்றாள். மான்சன் முதலில் மரண தண்டனை அளிக்கப்பட்டது, ஆனால், அது நீக்கப்பட்டதால், தண்டனைகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

23-11-2017

Charles Manson - Polanski-Sunday News, 10-08-1969

[1] தமிழ்.நியூஸ்.காம், தன்னை இயேசுவின் அவதாரம் என கூறிக்கொண்டவர் மரணம்!, By  Jey  -November 21, 2017

[2] தி.இந்து, ஒரு நிமிடக் கட்டுரை: சார்லஸ் மேன்சன் எனும் சாத்தான்!, வெ.சந்திரமோகன், 23 Nov 2017  10:49 IST; 23 Nov 2017  10:49 IST

[3] http://tamilgossip.com/2017/11/21/american-mass-killer-charles-manson-died-83-years-old/

[4] The Conversation, How cult leaders like Charles Manson exploit a basic psychological need, April 14, 2016 8.05pm AEST Updated November 21, 2017 9.22am AEDT

[5] https://theconversation.com/how-cult-leaders-like-charles-manson-exploit-a-basic-psychological-need-57101

[6] The Atlantic Daily, The real cult of Charles Manson, by Sophie Gilbert, November 20, 2017.

[7] https://www.theatlantic.com/entertainment/archive/2017/11/the-real-cult-of-charles-manson/546206/

 

[8] CNN, Charles Manson, leader of murderous ’60s cult, dead at 83, By Steve Almasy and Brandon Griggs, Updated 0424 GMT (1224 HKT) November 21, 2017

[9] http://edition.cnn.com/2017/11/20/us/charles-manson-dead/index.html

[10] The Hindu, Cult leader and convict Charles Manson dies aged 83, LosAngeles, November 20, 2017 11:49 IST; Upadated November,2017 12:10 IST

[11] http://www.thehindu.com/news/international/cult-leader-and-convict-charles-manson-dies-aged-83/article20564968.ece

[12] http://tamil.thehindu.com/opinion/columns/article20672800.ece

திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ் – மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (1)

ஓகஸ்ட் 29, 2017

திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ்மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (1)

Caldwell conference- tirunelveli- University-1

கால்டுவெல் கருத்தரங்கங்கள் தொடர்ந்த நடைபெற்று வரும் நிலை: கடந்த சில ஆண்டுகளாக கால்டுவெல் நினைவு கருத்தரங்க என்று நடத்தப்பட்டு வருகின்றது. “திராவிட மொழிகளுக்குக் கால்டுவெலின் பங்களிப்பு” என்று தேசிய கருத்தரங்கள் 11-08-2014 மற்றும் 12-08-2014 நாட்களில் மதுரையில், திருமலை நாயக்க்ர் கல்லூரியில் நடைப்பெற்றது[1]. அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி பெசன்ட் அரங்கம், தஞ்சையில் நடைபெற்றது[2]. 10.08.2014 ஞாயிறு எஸ்.எம்.எஸ். கல்யாண மகால், தாணப்ப முதலி தெரு, சென்ட்ரல் தியேட்டர் அருகில்,மதுரை – 1 யில் ராபர்ட் கால்டுவெல் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் நடைபெற்றது[3]. 16.08.2014 மாலை 5 மணி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் (பனகல் பார்க் அருகில்) தியாகராய நகர், சென்னை –17 நடந்தது என்றுள்ளது[4].  16.08.2014 சனி மாலை 6 மணி நகர அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் நடந்தது என்றுள்ளது[5]. “மோடி அரசின் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு  தேசிய இன, மொழி அடையாளங்களை அழிக்கும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!, களம் புகுவோம், தமிழறிஞர் கால்டுவெல் என்ற வாள் உயர்த்தி உழைக்கும் மக்களின் தமிழ் மரபைக் காப்போம்!”, என்று கடலூரில்  புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் 25.09.2014 அன்று மாலை 5 மணி அளவில்,  கருத்தரங்கம் நடைபெற்றது[6].

Caldwell conference- CPMIL

பிரிவினை, தேசவிரோத போக்குக் கொண்ட கருத்தரங்கங்கள்: இவை ஏதோ தமிழுக்கு ஆதரவாக, மேம்பாட்டிற்காக, உன்னதிக்காக நிகழ்த்தப்படுவது போலக் காட்டிக் கொண்டாலும், பேச்சாளர்கள் “தமிழ் தேசியம்”, பிரிவினைவாதம் என்று ஆரம்பித்து, தேசவிரோத கருத்துகளில் முடிக்கிறார்கள். இன்றைக்கு விவரங்கள், தவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள், ஆவணங்கள் என்று எல்லாமே ஓரளவிற்கு வெளிப்படையாகக் கிடைக்கின்றன. அதிலும் சமீபகால வரலாற்று நிகழ்வுகளை, விவரங்களை, அவற்றின் உண்மை தன்மையினை, பலமுக நோக்கில் ஆராய்ந்து, பாரபட்சமின்றி முடிவுக்கு வரும் வகையில் விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றை இக்கால இளைஞருக்கு முறைப்படி எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அந்நிலையில், இன்னும் பழைய, கட்டுக்கதை என்று தூக்கியெறியப் பட்ட கருதுகோள்கள், சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கால்டுவெல் ஒன்றும் சரித்திர ரீதியில் புனிதர் அல்ல, மதம் மாற்ற அனுப்பப்பட்ட பாதிரி, தமிழ் கற்று மக்களைப் பிரிக்க முயன்றது, இன்றைக்கு தெரிந்த விசயமாக இருக்கிறது. “திராவிட இனம்” ஒரு கட்டுக்கதை என்ற விசயம் இன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருக்கிறது. அந்நிலையில், இன்னும் அத்தகைய கட்டுக்கதையினைப் பிடித்துக் கொண்டு, பொருளாதாரம், படிப்பு, முன்னேற்றம் முதலியவற்றில் நாட்டம் கொள்ளாது, மக்களிடையே துவேசம், வெறுப்பு, காழ்ப்பு முதலியவற்றை தூண்டும், ஊக்குவிக்கும் போக்கில், இத்தகைய கருத்தரங்கங்கள் நடத்தப் படுவது கவனிக்கத் தக்கது.

Caldwell conference- Avvai college - 28-08-2017

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?: குணா போன்றோரே, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று முன்னமே எடுத்துக் காட்டினர். இப்பொழுது, இத்தகைய கேள்விகளும் எழுந்துள்ளன. தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது. திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை, “நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை.. …திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை. சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே.…போன்ற உண்மைகளை விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்[7]. இந்நிலையில், மறுபடி பொய்களை வைத்து கருத்தரங்கள் நடத்துவதினால் என்ன, யாருக்கு பிரயோஜனம் என்பதை கவனிக்க வேண்டும். கால்டுவெல் புராணம் பாடும், அடிமை தமிழர்களுக்கு ஒரு உதாரணம் எடுத்துக் காட்டப்படுகிறது.

Caldwell conference- Avvai college - 28-08-2017-inaugurated by Vigila

கால்டுவெல்லின் 800 கி.மீ தீர்த்தயாத்திரை? உண்மையில் கால்டுவெல் ஒன்றும் நடந்தே சென்றுவிடவில்லை. சாதாரணமாக ஐரோப்பியர்கள் எல்லோருமே பல்லக்கு அல்லது மாட்டுவண்டிகளில் தான் சொகுசாக உட்கார்ந்து கொண்டு செல்வார்கள். இந்திய கூலிகள் / வேலையாட்கள் அதற்கென பிரத்யேகமாக இருந்தனர். அவர்கள் தாம் கஷ்டப்பட்டு அந்த வேலைகளை செய்வார்கள். கால்டுவெல்லிற்கு, ஒரு குறிப்பிட்ட வேலை கொடுக்கப்பட்டதால், அதன்படி தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், அவர்களது சிந்தனைகள், பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை ஆராயச் சொன்னதால்தான் அவ்வாறு பல ஊர்களின் வழியாக சென்ன்னையிலிருந்து தனது ஆராய்ச்சி-பயணத்தை ஆரம்பித்தான். அதுதான், அவன் நாஜுக்காகச் சொல்கிறான் , “to get acquainted with the people and their ideas, manners, and to talk in a way in which I could never expect to do if I travelled in a palanquin or even a cart” !  எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவ்வாறுத்தான் பிரயாணம் செய்தான் என்பது உண்மையான விஷயம். நீலகிரி மலையில் சென்னை பிஷப்பான ஜியார்ஜ் ஸ்பென்ஸர் என்பரைப் பார்த்து விவரங்களைக் கேட்டுக் கொள்கிறான். ஒரு விசுவாச ஊழியனாக (Deacon) உறுதிமொழி எடுத்துக் கொள்கிறான். பிறகுதான், தனது ஊழியத்தைச் செய்வதாற்காக இடையன்குடிக்கு அனுபப்படுகிறான். 1841ல் வந்து சேர்கிறான். 1844ல் கல்யாணம்! பிறகு எப்படி கால்டுவெல், தமிழுக்கு சேவை செய்திருக்க முடியும்? பிரௌனிடம் சமஸ்கிருதம் படித்து, மற்ற ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தியர்களை எப்படிப் பிரிக்கலாம் என்ற நோக்கத்துடந்தான், வேலை செய்தவன் கால்டுவெல். இவனைத் தூக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? தமிழர்கள், “திராவிடர்கள்” என்று நினைக்கும் வரையில், இத்தகைய அடிமை சிந்தனை மற்றும் கூலி மனப்பாங்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், தமிழாராய்ச்சியாளர்கள் மூலங்களைப் படிக்காமலேயே, கால்டுவெல், எல்லீஸ் முதலியோரைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்!

Dinamani 27-08-2017 - Caldwell seminar

கால்டுவெல் குடும்பத்தினரின் கலவர வேலைகள்: தமிழரது அடிமைத்தனம், கூலிமனப்பாங்கு, வெள்ளையனுக்கு இன்றும் அடிவருடும் தன்மைதான் இதில் வெளிப்படுகிறது, ஏனெனில், இங்கிலாந்திலேயே, இன்று இவர்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. பிரிவினைவாத, தேசவிரோத கூட்டங்கள் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. சாணர்களை தூஷித்து எழுதியதனால், இவரது புத்தகம் கண்டனத்திற்கு உள்ளாகியது. அதனால், அப்புத்தகம் பின்வாங்கப்பட்டு தடை செய்யப்பட்டது. சட்டவிரோதமாக, இவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளும் கண்டிக்கப்பட்டன. தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் கால்டுவெல் ரீல் விட்டதை சரித்திரம் என்று நம்ப முடியுமா? கால்டுவெல் மாமனார்-மாமியார்- மௌல்ட் தம்பதியர் பல பிரச்சினகளுக்குக் காரணம் என்று தெரிகிறது[8]. சாணர்களை மதம் மாற்றி, ஜாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டதில் இவர்களது பங்கு புலப்படுகிறது. 1821ல் தமிழ் பேசப்பட்ட பகுதிகள் கொச்சிற்கு மற்றாப்பட்டபோதும், 1828-30களில் நடந்த ஜாதிக் கலவரங்களுக்கும் இவர்களே காரணம். ஆனால், கீழ்ஜாதி மக்கள், மேல்ஜாதி மக்களுக்குண்டான உரிமைகளை பெற்றபோது, இந்துக்கள் தங்களுடைய வீடுகளையெல்லாம் கொள்ளையெடித்தனர் என்று எழுதிவைத்துள்ளனர்!  அதாவது, இந்துக்களுக்கிடையில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டால், ஏன் இவர்கள் வீடுகள் கொள்ளையடிக்கப்படவேண்டும்? அதுமட்டுமல்லாது, கொவிலுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற வேலைகளும், இந்துக்களை கோபமடையச் செய்துள்ளன[9].

© வேதபிரகாஷ்

29-08-2017

Caldwell conference- Avvai college - 28-08-2017-Christian pastors

[1] http://govt-tdd-en.s3.amazonaws.com/UTS/Caldwell_Seminar_Invitation.pdf

[2] http://www.vinavu.com/2014/07/30/robert-caldwell-200th-anniversary-in-thanjavur/

[3] http://www.vinavu.com/2014/08/07/robert-caldwell-200th-anniversary-in-madurai/

[4] http://www.vinavu.com/2014/08/14/robert-caldwell-200th-anniversary-in-chennai/

[5] http://www.vinavu.com/2014/08/13/robert-caldwell-200th-anniversary-in-vellore/

[6] http://www.vinavu.com/2014/10/01/robert-caldwell-200th-anniversary-in-cuddalore/

[7] http://www.tamilcanadian.com/article/tamil/875

[8] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[9] http://www.britishempire.co.uk/article/faithandfamily.htm

 

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர், ஜீசஸ்: ரஜினி கிருத்துவராகி ஊழியம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?

பிப்ரவரி 5, 2017

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர், ஜீசஸ்: ரஜினி கிருத்துவராகி ஊழியம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?

nicolas-notovitich-myth-maker-myth-developed

கிருஷ்ணர்ஜீசஸ்என்றெல்லாம் சேர்த்து பேசி குழப்பத்தை ஏற்படுத்தியது: “‘சினிமா சக்தி வாய்ந்தது. ஆயிரம் சுவாமிகள் சொல்லாத விஷயங்கள் சினிமா மூலம் மக்களை எளிதாக சென்று சேரும். ஆன்மிக விஷயங்களையும் சினிமாவில் சொல்லலாம்’, என்று அறிவுறுத்தினார்.” அதனால், தொடர்ந்து சினிமாவில் நடக்கிறேன் என்றால், நடிகன் இவ்வாறு, “கிருஷ்ணர்-ஜீசஸ்” என்றெல்லாம் சேர்த்து பேசக்கூடாதே? அத்தகைய பேச்சுகளாலும், பொய்யானவற்றை மக்களுக்கு சொல்வதைப் போன்றாகி விடுகிறது. “கிருஷ்ணர்-ஜீசஸ்” ஒப்புமை பேச்சு, தான் கிருத்துவராக மாறினார் என்பதால் பேசினாரா, யோகத சத்சங்கத்தில் அத்தகைய முயற்சி நடப்பதால் பேச வைக்கப் பட்டாரா, அல்லது, இவரே ஒப்புக் கொண்டு அத்தகைய நாடகத்தை, அப்புத்தகம் வெளியீட்டு விழாவில், வேண்டுமென்றே அரங்கேற்றி வைத்தாரா என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. எப்படி இருந்தாலும், சுவாமி விவேகானந்தர் மறுத்ததை, யோகத சத் சங்கமோ, ரஜினி காந்தோ வேண்டுமென்றே பரப்ப துணிந்தால், அவர்களுக்கு உள்ளூக்குள் ஏதோ திட்டம் இருப்பது உறுதியாகிறது. ஆகையால், இந்துக்கள் சும்மா இருக்க முடியாது.

rajnikanth-converted-to-christianity

ரஜினி கிருத்துவராக மதம் மாறினாரா?: 2014ல் ரஜினுக்கு உடம்பு சரியாகவில்லை என்ற நிலையில், அவர் பல கோவில்களுக்கு சென்று வந்தார். அவரது ரசிகர்களும், எல்லா வழிபாட்டு ஸ்தலங்களிலும் பிரார்த்தனை செய்தனர். அந்நிலையில், திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தவுடன், சம்மி தங்கையா என்ற பாஸ்டர், ரஜினி காந்த் வீட்டிற்குச் சென்று, அவரது உடல் நலம் குறித்து பிரார்த்தனை செய்தார் என்று ஒரு வீடீயோ சுற்றில் வந்தது[1]. அந்த பாஸ்டர் ரஜினியின் மார்பின் மீது கை வைத்து, நீண்ட ஆயுளுக்கு பிரார்த்தனை செய்ததாக சொல்லப்பட்டது. இதுதான், ரஜினி மாற்று மதத்தினரிடம் ஆசிர்வாதம் பெற்றது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[2]. அது தவிர சமீபத்தில் “கபாலி” படப்பிடிப்பிற்காக, நியூயார்க் சென்றிருந்தபோது, 50 நாட்கள் தங்கினார் என்றும், அப்பொழுது, ஒரு சர்ச்சிலிருந்து, அவருக்கு அழைப்பு வந்ததால், அங்கு சென்றார் என்றும், அப்பொழுது தற்செயலாக இவ்வாறு நடந்தது என்றும், ஆனால் ரஜினி மதம் மாறவில்லை என்றும் அவரது ரசிகர் சொன்னார் என்று வீடியோ கூறுகிறது[3]. எது எப்படியாகிலும், இது உண்மை என்றோ-பொய் என்றோ யாரும் தெளிவாக, வெளிப்படையாக, உறுதியாக சொல்லவில்லை. கிருத்துவர்களைப் பொறுத்த வரையில் பிரச்சாரத்தில் எத்தர்கள் என்பது தெரிந்த விசயமே. ரஜினுக்கு ஜான ஸ்தானம் செய்விக்கப்பட்டது என்றதற்கு பிறகு, ஏசு ஒரு பிராமணர் என்று ரஜினியை சேர்த்து தமாஷா செய்ய ஆரம்பித்தனர்[4]. மதத்திற்காக அவர்கள் எத்தகைய கீழ்த்தரமான வேலையையும் செய்யக் கூடியவர்கள்[5]. ஆகையால், ரஜினி தெளிவு படுத்தாமல் இருப்பதும் விசித்திரமானதே.

rajnikanth-sammy-thangaiah-prayer-tamil

பாபாஜியைப் பற்றிய வாதங்கள், விவாதங்கள்: பிற மதங்கள் என்று வரும் போது, அவர்களில் பெரும்பாலோர் மிகவும் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது; அவர்களுக்கு அம்மதங்களைப் பற்றிய அடிப்படை உண்மைகளே தெரியாமல் இருந்தது; இருப்பினும் தெரிந்தது போல அடித்து பேசிக் கொண்டிருந்தார்கள்; தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் வாதித்து / சாதித்துக் கொண்டிருந்தார்கள்; குறிப்பாக ஏசு இந்தியாவிற்கு வந்தார் போன்ற கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருந்தது விசித்திரமாக இருந்தது. யோகானந்தரே, “ஏசுவின் இரண்டாவது வருகை” போன்ற புத்தகங்கள், சிடி முதலியவற்றை வெளியிட்டுள்ளார்[6]. கிருத்துவர்களும், முகமதியர்களும் இந்துக்களை புனைந்த மாயைகளால் பெருமளவில் பாதித்திருந்தாலும், பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கட்டிவிட்ட கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருப்பது வருத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்துக்கள் இவ்விசயத்தில் அப்பாவிகளாக, ஏமாளிகளாக, சாதுக்களாக இருப்பதுதான் நிதர்சனமாக உள்ளது. பாபாஜி விசயத்தில் ஏசுவை இணத்து கட்டிவிட்ட கதைகள் உள்ளன என்றும், அவைத்தான் இவர்களின் வாதங்களுக்கு காரணம் என்றும் பிறகு புரிந்தது. யுக்தேஸ்வர் கிரி என்பவர் எழுதிய  அத்தகைய புத்தகத்தை யோகத சத்சங்கமே வெளியிட்டுள்ளது[7]. அதை எடுத்துக் காட்டினாலும், அவர்கள் ஒப்புக்கொள்வதாக்ல இல்லை. யோகானந்தரே சொல்லியிருக்கிறார் என்று அடித்து பேசுகிறார்கள். விவேகானந்தர் தவறு என்றதை படிக்காமல் இருக்கிறார்கள் அல்லது தெரிந்தும், தெரியாதது போல நடிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

rajnikanth-sammy-thangaiah-prayer

ஏசு மாயை, கிருஸ்து கட்டுக்கதை, மற்றும் ஏசுகிருஸ்து புனைப்பு பரப்பப்படும் விதம்: ஏசு, கிருஸ்து மற்றும் ஏசு கிருஸ்து என்பன வெவ்வேறான மூன்று விதமான தத்துவங்கள். “ஏசு” என்பது வருபவர், காப்பவர், எதிர்பார்க்கப்படுபவர் என்று யூதர்கள் நம்பிக்கையில் இருந்தது. “கிருஸ்து” என்றால், எண்ணை வார்க்கப்பட்டவர், எண்ணையினால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று கிரேக்கத்தில் பொருள். கிரேக்கர்களைப் பொறுத்தவரையில், ஆசிரியன், அரசன், ஊருக்குப் பெரியவன் என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர், குருவினால், எண்ணையினால் அபிஷேகம் செய்யப்பட்டு, அறிவிக்கப்படுகிறான். பிறகு தான், மக்களால் அவன் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அதனால், பால் என்பவர் பிறகு வந்தபோது, ஒரு சமூகங்களில், பிரபலமாக இருந்த இந்த இரு தத்துவங்களையும் சேர்த்து “ஏசு கிருஸ்து” என்ற நபரை, கற்பனையில் உருவாக்கினார். அதுதான், கிருஸ்துவ மதத்தின் கடவுளாக மாற்றப்பட்டார். ஆனால், 18-19ம் நூற்றான்டுகளில், கிருஸ்துவை, கிருஸ்துவ மதத்தை ஆராய்ச்சி செய்வர்கள், இதெற்கெல்லாம் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை என்று கண்டறிந்து, அவையெல்லாம் மாயை, கட்டுக்கதை மற்றும் புனையப்பட்டவை என்று நிரூபித்தனர். எனினும், வாடிகன் விடாமல், அவற்றை மெய்யாக்க, அவ்வபோது, முன்னுக்கு முரணான புதிய கட்டுக்கதைகளை உருவாக்கி, பரப்பி, புழங்கவிட்டு ஆராய்ச்சி செய்து வருகிறது. அம்முறையில் தான் “இந்தியாவில் ஏசு” என்ற கட்டுக்கதை உருவாக்கப் பட்டது.

rajnikanth-converted-to-christianity-in-usa

நிக்கோலஸ் நோட்டோவிசின் கட்டுக்கதையும், யோகானந்தரும்: நிக்கோலஸ் நோடோவிட்ச் என்ற ரஷ்ய பிரயாணி தான், ஹிமி புத்த மடாலயத்தில் ஒரு ஓலைச்சுவடியைப் பார்த்ததாகவும், அதில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், பிராமணர்களில் வேதங்களைக் கற்றுக் கொண்டார், வேதங்களை போதித்தார்…பொன்ற விவரங்கள் இருந்ததாக குறிப்பிட்டான். “யாருக்கும் தெரியாத ஏசுகிருஸ்துவின் மர்மமான வாழ்க்கை” என்ற புத்தகத்தை எழுதி நன்றாகவே பணம் சம்பாதித்தான்[8]. ஆனால், மாக்ஸ்முல்லர் இதை ஆராயுமாறு ஆணையிட்டார். அதன்படியே, ஆங்கில அதிகாரிகள், அந்த மடாலயத்திற்கு சென்று விசாரித்தபோது, அத்தகைய ஓலைச்சுவடி அங்கில்லை என்றும், ஆனால், நிக்கோலஸ் நோடோவிட்ச், அடிபட்டதால் அங்கு வந்து தங்கினான் என்று மடத்தில் அறிவித்தனர். இதனால், மாக்ஸ்முல்லர், அப்புத்தகத்தை ஒரு மோசடி என்று அறிவித்தார். சுமாமி விவேகானந்தரும் இதனை எடுத்துக் காட்டினர். ஆனால், முன்னர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்து சாமியார், இதனை விடாமல் பரப்பி வந்தார்[9]. அப்புத்தகத்தை வெளியிடவும் செய்தார். யோகானந்தர் தனது புத்தகத்தில் இக்கட்டுக்கதையை சேர்த்ததால், மறுபடியும், இது பிரபலமாகியது. கிருத்துவர்களுக்கோ கொண்டாட்டம் தான்[10]. இப்பொழுது ரஜினிகாந்த, அந்த கும்பலோடு சேர்ந்திருப்பதால், அந்த ஈர்ப்பில், இக்கட்டுக்கதைக்ககுதவுவது போன்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-02-2017

nicolas-notovitich-myth-refuted-by-swami-vivekananda

[1] Kolly-talk, Rajini gets blessed by Christian priests at residence, Jan 30, 2014

[2] A special prayer was conducted at the residence of superstar Rajinikanth by Sammy Thangaiah, a noted Christian priest. Rajini,A believer in all faiths,  was spotted at the holy abode of Lord Venkateshwara at the Tirupathi Tirumala Hills along with eldest daughter Aishwarya last week.  Mean while Rajini is said to have senta message for Samimy Thangaiah, a noted Christian priest, soon after his return from Tirupathi. Thangaiah met the superstar at his Poes Garden residence. The priest conducted special prayers and prayed to the Almighty for Rajini’s healthy long life. He placed his hands on Rajini’s chest and chanted biblical lyrics. Rajini did appear to be deeply involved in those prayers. It may be noted that this is not the first time that Rajini is seeking blessings from priests of other religions.

http://www.kollytalk.com/cinenews/rajini-gets-blessed-christian-priests-residence-134733.html/attachment/rajnikanth-sammy-thangaiah-prayer

[3] https://www.youtube.com/watch?v=RXNzAKXrHdk

[4] Mid-day.com, Rahul Da Cunha: Jesus was a Tam-Brahm, By Rahul Da Cunha | Posted 27-Feb-2016.

[5] http://www.mid-day.com/articles/rahul-da-cunha-jesus-was-a-tam-brahm/16993192

[6] In his book The Second Coming of Christ, Yogananda states that Jesus Christ went to India and conferred with Mahavatar Babaji.

Yogananda, Paramahansa (2004). The Second Coming of Christ: The Resurrection of the Christ Within You,  p. Los Angeles, CA: Self-Realization Fellowship.

[7] Yukteswar Giri, The Holy Science, Yogoda Satsanga Society, 1949.

[8]  Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.

[9] Abhayananda, Swami. “Journey Into Kashmir and Tibet: With the Life of Jesus by Nicolas Notovitch.”, Advaida Ashrama, Calcutta,  (1987).

[10] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர் வழியில், ஜீசஸ்-கட்டுக்கதைய பரப்ப ஆரம்பித்து விட்டாரா?

பிப்ரவரி 5, 2017

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர் வழியில், ஜீசஸ்-கட்டுக்கதைய பரப்ப ஆரம்பித்து விட்டாரா?

rajini-at-book-release-function-3

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர், ஜீசஸ்: நான் நடிகராக அறியப்படுவதைவிட, ஆன்மிகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார், என்று ஊடகங்கள் எதிர்பார்த்தபடி செய்திகளை வெளியிட்டன, ஆனால், “கிருஷ்ணர், ஜீசஸ்”, என்றெல்லாம் அளந்ததைப் பற்றிக் குறிப்பிடவில்லை. “பாபாஜி” பெயரில் ஆன்மீகத்தை தேடும் ரஜினிகாந்த, கடந்த வருடங்களில், கிருத்துவர்களின் வலையில் விழுந்துள்ளது தெரிகிறது. ஒரு பாதிரி இவரை ஆசிர்வதிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. பெங்களூரு வீட்டில், தனது அறையில் ஏசு கிருஸ்து படம் வைத்திர்ருப்பதை காண முடிந்தது. இப்பொழுது வெளிப்படையாகவே, “கிருஷ்ணர், ஜீசஸ்”, என்றெல்லாம் பேசியது, அந்த “தயா மாதா” (1914-2010) வலையில் விழுந்து விட்டார் என்று தெரிகிறது. யோகதா சத்சங்கத்தைப் பொறுத்த வரையில், பாபாஜி, ஏசு ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொண்டார்களாம். அதனால், ஏசுவையும் சேர்த்துதான், அவர்கள் தங்களது ஆசிரமங்களில் படங்களை வைத்திருக்கிறார்கள். போதாகுறைக்கு, “கிருஷ்ணர்-ஏசு” படங்களையும் வைத்துள்ளனர். கூட “ஏசு இந்தியாவிற்கு வந்தார்” என்ற கட்டுக்கதையினையும் பரப்பி வருகின்றனர். இதையெல்லாம், இந்த யோகதா சத்சங் மற்றும் யோகானந்த பரமஹம்சர் இவற்றை நம்புகிறவர்கள் நம்புகிறார்கள்.

rajini-at-book-release-functionதெய்வீகக் காதல்புத்தகத்தை ரஜினிகாந்த வெளியிடுதல் (04-02-2017): “யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா’ சார்பில் பரமஹம்ஸ யோகானந்தரின் “தி டிவைன் ரொமான்ஸ்” – எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “தெய்வீகக் காதல்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் 04-02-2017 (சனிக்கிழமை) அன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது[1]. நூலை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது[2]: “சிறு வயதிலேயே எனக்கு ஆன்மிக ஈடுபாடு இருந்தது. எனது அண்ணன் சத்யநாராயணன் ஆன்மிக கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்வார். அப்போதுமனித ஜென்மம் பெரியது. அதை பாழாக்காதீர்கள் பைத்தியக்காரர்களே…’, என்ற பக்தி பாடலை கேட்டிருக்கிறேன். எத்தனையோ ஜென்மங்களை கடந்துதான் மனிதனாக பிறக்கிறோம். இந்த மனித வாழ்க்கையில் சம்சாரம், பணம், சுகம், புகழ், சந்தோஷம் போன்றவற்றில் மூழ்கி விடுகிறோம். இதில் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? மரணத்துக்கு பிறகு என்ன? கடவுள் யார்? ஆத்மா என்றால் என்ன? என்ற கேள்விகள் வருவது அபூர்வம். ஒரு குரு கிடைப்பது அபூர்வம். அந்த குருவிடம் இருந்து போதனைகள் கிடைப்பதும் அபூர்வம்.”

rajini-at-book-release-function-2நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: ரஜினி தொடர்ந்து பேசியது, “நான்பவரை‘ (இறை சக்தியை) கொஞ்சம் விரும்புபவன். நீங்கள் நினைக்கும்பவர்‘ (அரசியல் அதிகாரம்) அல்ல. நான் நடிகர் என்று அறியப்படுவதைவிட, ஆன்மிகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்[3]. ஆன்மிகம்தான் வேண்டும்: பெயர், பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டுமென்று என்னிடம் கேட்டால், ஆன்மிகம்தான் வேண்டுமென்பேன்[4]. மனித ஜென்மம் கிடைப்பதே அரிது[5]. என்னுடைய முதல் குரு, எனது அண்ணன் சத்திய நாராயணா[6]. முதல் ஆன்மிக குரு சச்சிதானந்தர். அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு குருக்களை பின்பற்றி வந்திருக்கிறேன்[7]. ராகவேந்திரரிடம் பக்தியை கற்றுக்கொண்டேன்[8]. நான் யார் என்று எனக்குள் கேள்வி கேட்பதை ரமண மகரிஷி மூலம் கற்றுக்கொண்டேன்[9]. பரமஹம்ச யோகானந்தரின் சுய சரிதைப் புத்தகம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது[10]. ‘ரஜினிகாந்த் ஒவ்வொரு மத குருக்களின் பெயரை சொல்லி குழப்புகிறாரே…’, என்று மக்களும், ரசிகர்களும் நினைத்தது உண்டு. நான் குழப்பவாதி இல்லை. எனது ஆன்மிகத் தேடல் தொடந்து கொண்டே உள்ளது. இமயமலையில் ஏராளமான ஆன்மிக ரகசியங்கள் உள்ளன”, என்றார் நடிகர் ரஜினிகாந்த். விழாவில், யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்வாமி ஸ்மரணானந்தா, பொருளார் ஸ்வாமி சுத்தானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

rajini-with-vishveshwarananda-omkara-ashramஅர்ஜுனனைப் போல் இருங்கள்: ரஜினி தொடர்ந்து பேசியது, “பீஷ்மர் ஒருநாள் கிருஷ்ணனிடம், “கண்ணா! மனிதன் ஏன் பிறந்தான், வாழ்க்கையில் நல்லவை எவை? கெட்டவை எவை? போன்றவைகளை அர்ஜுனனுக்கு மட்டும் கற்றுக்கொடுக்காதே; துரியோதனனுக்கும் அவற்றை எல்லாம் கற்றுக் கொடுஎன்றாராம். அவரும் (கண்ணன்) துரியோதனனிடம் சென்று, “வாவாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதை கற்றுத் தருகிறேன்என்றாராம். அதற்கு துரியோதனன், “கண்ணா, நான் வாழ்க்கையின் நல்லவை, கெட்டவைகளை நன்கு அறிவேன். அர்ஜுனனுக்குத்தான் இதுகுறித்து ஒன்றும் தெரியாது. எனவே, இதையெல்லாம் அவனுக்கே (அர்ஜுனன்) கற்றுக் கொடுஎன்றாராம்இதையடுத்து, வாழ்க்கையின் தத்துவங்கள் அனைத்தையும் பகவத் கீதை மூலம் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் எடுத்துரைத்தார்”. நாம் துரியோதனனைப் போல் இருக்காமல், அர்ஜுனனைப் போல் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியதும் கூட்டம் சிரிப்பலையில் மூழ்கியது.

rajini-in-padappai-ashram-jesus-babaபாபா படம் உருவான கதை[11]: ரஜினி தொடர்ந்து பேசியது, “20 வருடங்களுக்கு பிறகுபடையப்பாபடத்தை முடித்ததும், ‘இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம்’, என்று முடிவு செய்தேன். அப்போது சச்சிதானந்தர் அமெரிக்காவுக்கு என்னை அழைத்தார். பாபா புத்தகத்தையும் உடன் எடுத்துச்சென்றேன். ‘சினிமா சக்தி வாய்ந்தது. ஆயிரம் சுவாமிகள் சொல்லாத விஷயங்கள் சினிமா மூலம் மக்களை எளிதாக சென்று சேரும். ஆன்மிக விஷயங்களையும் சினிமாவில் சொல்லலாம்’, என்று அறிவுறுத்தினார். அப்போது பாபாஜியின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்க முடியவில்லை. அதில் இருந்து ஒரு ஒளி வருவது போல தெரிந்தது. என் உடம்பு என்னவோ மாதிரி ஆனது. வியர்க்கவும் செய்தது. அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. உடனடியாக என் மனதில்பாபாபடத்தின் கதை தயாரானது[12]. அந்த கதையை நானே எழுதி, தயாரித்து படமாக்கினேன். வியாபார ரீதியில் அது நன்றாக போகாமல் நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டம் அடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தேன். அந்த படம் வியாபார நோக்கில் எடுக்கப்பட்டது அல்ல. அதன் பிறகுகிரியா யோகாகற்றேன். அது என் வாழ்க்கையையே மாற்றியது. ‘கிரியா யோகாசாதாரணமானது அல்ல. நமக்கு எது நல்லது? எது கெட்டது? என்று தெரியும். தியானம் சக்தி கொடுக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனாலும் அதை கேட்பது இல்லை.”

© வேதபிரகாஷ்

05-02-2017

rajini-in-babaji-cave-jesus-baba

[1] தினமணி, ஆன்மிகவாதி என்பதில் பெருமை அடைகிறேன்: நடிகர் ரஜினிகாந்த், Published on : 05th February 2017 04:03 AM.

[2]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/05/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2643996.html

[3] தினகரன், மனதை தூய்மையாக வைத்திருந்தால்தான் ஆன்மீகத்தின் பயன் கிடைக்கும் : ரஜினிகாந்த் பேச்சு, 2017-02-04@ 20:00:36

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=277490

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: ரஜினி, By: Karthikeyan,  Updated: Saturday, February 4, 2017, 21:10 [IST]

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/i-am-devotional-person-says-rajni-kanth-273309.html

[7] தினத்தந்தி, மனித ஜென்மம் கிடைப்பதே அரிது” – ‘தெய்வீக காதல்புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு, பிப்ரவரி 04, 08:08 PM

[8] http://www.dailythanthi.com/News/State/2017/02/04200833/TheiveegaKadhal-Rajinikanth–Speech.vpf

[9] தினமலர், ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த், பிப்ரவரி.4, 2017. 20.04.IST.

[10] http://cinema.dinamalar.com/tamil-news/55882/cinema/Kollywood/spritiualist:-rajini.htm

[11] மாலைமலர், நடிகன் என்பதை விட ஆன்மிகவாதியாக இருப்பதே எனக்கு பெருமை: ரஜினிகாந்த் பேச்சு, பதிவு: பிப்ரவரி 05, 2017 00:49.

[12] http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/05004909/1066361/I-am-proud-being-an-spiritualist-rather-than-an-actor.vpf

பிரான்சினா – கீகன் ஜோஸ் கோம்ஸ் – விவகாரம்: ஒருதலை வக்கிர காதல், குரூரக் கொலை, ஜுஜுபி தற்கொலை!

செப்ரெம்பர் 7, 2016

பிரான்சினா – கீகன் ஜோஸ் கோம்ஸ் – விவகாரம்: ஒருதலை வக்கிர காதல், குரூரக் கொலை, ஜுஜுபி தற்கொலை!

n-fransina-cremated-on-05-09-2016-tutocorinகீகன் ஜோஸ் கோம்ஸின் ஒருதலை காதல்: தூத்துக்குடி, ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நியூமேன் [Newman] மகள் பிரான்சினா (N. Francina 25). இவர் தூத்துக்குடி கீழசண்முகபுரம் பேதுரு ஆலய [St Peter Church] வளாகத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாக பணி புரிந்தார்.  இவரை மறக்குடிதெரு குருசடிசந்தை சேர்ந்த ஜோதி கோமஸ் மகன் கீகன் ஜோஸ் (26) என்பவர் பின்தொடர்ந்து சென்று காதல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.  கீகன் ஜோஸ் கோம்ஸ் [Keegan Jose Gomez] என்று ஆங்கில நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன. இதனால் தினமும் பள்ளிக்கு செல்லும் பிரான்சினாவை அவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் தினமும் பிரார்த்தனை செய்த பின்னர் பிரான்சினா பள்ளிக்கு செல்வார். அதுவரை சீகன் ஆலயத்தின் வெளியே காத்திருப்பாராம்[1]. ஒருமுறை போலீஸாரிடம் புகார் கொடுத்து, கீகன் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளான். இருப்பினும், தொடர்ந்து, இவ்வாறு தொல்லை கொடுத்துள்ளான். அப்படியன்றால், அத்தகைய மனப்பாங்கை, தைரியத்தை, அடாத செயல் செய்யத் தூண்டும் போக்கை எது உண்டாக்குகிறது என்பது நோக்கத்தக்கது.  இவ்வாறு இவன் தொடர்ந்து செய்து வரும் போது, புகார் அளிக்கவும் இல்லை, இதனால், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

murder-in-church-how-keegan-jose-gomez-lookedபெண்ணிற்கு நிச்சயதார்த்தம், திருமண தேதி தீர்மானம்: பலமுறை கீகன்ஜோசை கண்டித்தும், அவரது தொந்தரவுகள் குறையவில்லை. இதனால் பிரான்சினாவின் பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தனர். சமீபத்தில் அவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.  இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஜானுக்கும் வருகிற செப்டம்பர். 8ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியை வேலையை விட்டுவிட பிரான்சினா முடிவு செய்தார். இதையடுத்து இன்றுடன் ஆசிரியை வேலையில் இருந்து நின்றுவிடப் போவதாக அவர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். பிரான்சினாவிற்கு வருகிற 8-ந் தேதி திருணம் நடக்க இருப்பதையும், அவர் வேலையில் இருந்து நிற்கப்போவதையும் அறிந்த சீகன் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்[2]. இதையடுத்து இன்று காலை அரிவாளை தனது சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பள்ளி அருகே சீகன் காத்திருந்தார்.

fransina-teacher-murdered-inside-church-01_09_2016_005_011சர்ச்சிற்குள் ஏசுகிருஸ்து, பாதிரி, பக்தர்கள் முன்பாக நடந்த கொலை: இவர் வழக்கம் போல 31-08-2016 அன்று பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற பிரான்சினா பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் கிறிஸ்துவ ஆலயத்தில் நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டார். அப்போது அங்கே, அரிவாளுடன் வந்த கீகன் ஜோஸ் என்பவர் திடீரென ஆசிரியை பிரான்சினாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். தலை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. சர்ச்சில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த எல்லோர் முன்னிலையிலும் இது நடந்துள்ளது. பிரான்சினாவின் அலறல் சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரான்சினாவை மீட்டு, உடனே அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் [Tuticorin Government Medical College Hospital] சேர்த்தனர்.

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8dசர்ச் பாதியார் செல்வின் துரை கொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திந்தாரா?: “காலை 8.30 மணிக்கு சர்ச்சில் பிரான்சினா வெட்டப்பட்டுள்ளார். ஆனால் சர்ச் பாதியார் செல்வின் துரை அதை வெடிக்கை பார்த்துக் கொண்டிருந்திந்ததாகவும் 9.30 மணிக்கு தான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அங்குள்ள முகநூல் நபர்கள் தெரிகிக்கின்றனர்”, என்று இன்னொரு செய்தி கூறுகிறது[3]. சர்ச்சிற்குள் எல்லோர் முன்னிலையில் எனும்போது, செல்வின் துரையும் இதைப் பார்த்திருப்பது திண்ணம்[4]. ஆபத்தான நிலையில் இருந்த ஆசிரியருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். கீஜன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட ஆசிரியை பிரான்சினா, தற்கொலை செய்து கொண்ட கொலையாளி கீகன்ஜோஸ் ஆகியோரது உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த 1–ந் தேதி ஆசிரியை பிரான்சினா, கீகன்ஜோஸ் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. கீகன்ஜோஸ் உடல் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது.

n-fransina-cremated-on-05-09-2016சகோதரன் பிரான்ஸிலிருந்து பிராம்சினாவைப் பார்க்க வந்தது: பிரான்ஸ் நாட்டிலிருக்கும் பிரான்சினாவின் அண்ணன் பிராங்க்ளின்  வந்த பிறகே அவரது உடலை அடக்கம் செய்ய   குடும்பத்தினர்  முடிவு செய்தனர். பிராங்க்ளின் மாலுமியாக பணி புரியும் கப்பல் தற்போது பிரான்ஸ் நாட்டு கடல் பகுதியில் உள்ளது[5]. தங்கை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கப்பலில் இருந்து அருகில் ஒரு தீவில் இறக்கி விடப்பட்ட பிராங்க்ளின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரான்ஸ் வந்து அதன் பிறகே இந்தியா திரும்பினார்[6]. பிரான்சில் இருந்து அவருக்கு இந்தியா வர விமான டிக்கெட் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது[7]. இதனால் பிரேத பரிசோதனைக்கு பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலேயே பிரான்சினாவின் உடல்  வைக்கப்பட்டிருந்தது[8].

murder-in-church-keegan-francinaஆசிரியர் தினத்தன்று ஆசிரியையின் இறுதி சடங்கு, உடலடக்கம் நடந்தது: இந்நிலையில் பிராங்க்ளின் 04-09-2016 அன்று மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடி வந்து சேர்ந்தார்[9].  பெற்றோரை பார்த்ததும் தனது சகோதரிக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து கேட்டு  கதறி அழுதார்[10]. இதை பார்த்த உறவினர்களும் கண்ணீர் விட்டனர். இதையடுத்து ஆசிரியர் தினமான 05-09-2016 அன்று காலை 8.15 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  வைக்கப்பட்டிருந்த ஆசிரியை பிரான்சினாவின் உடல் அவரது உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களும், அவருடன் பணியாற்றிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினர். அதன் பின்னர் பாத்திமாநகர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு திருப்பலி நடந்தது[11]. தொடர்ந்து 9.45 மணியளவில் ஜார்ஜ் ரோடு மையவாடியில் பிரான்சினாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்[12].

© வேதபிரகாஷ்

07-09-2016

how-keegan-jose-gomez-looked-facebook-photo

[1] மாலைமலர், தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: ஒருதலைக்காதலில் வாலிபர் வெறிச்செயல், பதிவு: ஆகஸ்ட் 31, 2016 11:27; மாற்றம்: ஆகஸ்ட் 31, 2016 11:35

[2] http://www.maalaimalar.com/News/State/2016/08/31112734/1035857/teacher-attack-school-premises-in-Thoothukudi.vpf

[3] sattrumun.com, தூத்துக்குடியில் ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை, August 31, 2016.

[4] http://www.sattrumun.com/tuticorin-nursery-school-teacher-murdered-in-church/

[5] tutyonline.net, பிரான்சினா உடல் ஆசிரியர் தினத்தன்று அடக்கம்: வெளிநாட்டில் இருந்து சகோதரர் வருகை தாமதம், சனி 3, செப்டம்பர் 2016 10:44:05 AM (IST)

[6] நக்கீரன், பிரான்சினா உடல் 6 நாட்களுக்கு பின்னர் ஆசிரியர் தினத்தன்று அடக்கம், பதிவு செய்த நாள் : 5, செப்டம்பர் 2016 (20:42 IST) ; மாற்றம் செய்த நாள் :5, செப்டம்பர் 2016 (20:42 IST)

http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=172460

[7] http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=172460

[8] http://www.tutyonline.net/view/31_124195/20160903104405.html

[9] தினத்தந்தி, தூத்துக்குடியில், ஒருதலைக்காதலில் வெட்டிக்கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியை பிரான்சினா உடல் 6 நாட்களுக்கு பின் அடக்கம் ஆசிரியர் தினத்தில் மண்ணுக்குள் புதைந்த சோகம், பதிவு செய்த நாள்: திங்கள் , செப்டம்பர் 05,2016, 10:41 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 06,2016, 4:30 AM IST

[10] http://www.dailythanthi.com/News/Districts/Thoothukudi/2016/09/05224103/In-Tuticorin-in-orutalaikkatalVettikkollappatta-School.vpf

[11] தினகரன், ஒருதலைக்காதலில் வாலிபரால் கொல்லப்பட்ட பிரான்சினா உடல் ஆசிரியர் தினத்தில் அடக்கம், Date: 2016-09-06@ 00:26:22

[12] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=243691

ஆசீர்வாதம் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று, கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டியதால், பாதிரி உட்பட பலர் கற்களால் அடித்து கொலையுண்டது – ஊடகங்களில் முரண்பட்ட செய்தி வெளியீடு!

ஜூலை 8, 2016

ஆசீர்வாதம் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று, கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டியதால், பாதிரி உட்பட பலர் கற்களால் அடித்து கொலையுண்டதுஊடகங்களில் முரண்பட்ட செய்தி வெளியீடு!

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - போலீஸ் விசாரணை - 19-06-2016

பல வித்தியாசங்களுடன் வெளி வந்தரவுடி/ரௌடி கொலைசெய்தி (19-06-2016): மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக கற்களால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. வழக்கம்போல, பொறுமையாகப் படித்தபோது, நிறைய வேறுபாடுகள் காணப்பட்டன. இதுதொடர்பாக, கிறிஸ்தவ போதகர், மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டாலும், அதற்குண்டான சம்பந்தத்தை விளக்காமல் சாதாரண “ரௌடி மிரட்டல்” என்றதில் முடித்து விட்டன. ஆசீர்வாதத்தின் வயது, கலாட்டா செய்த விதம் (குடித்து வந்தானா-இல்லையா), வயது 35 அல்லது 40 என்று வேறுபாடுகள் காணப்படுகின்றன. செங்கல்பட்டு கே.கே. நகரில் ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர் என்று லைவ்.டே என்ற இணைதளம் கூறுகிறது[1].  சரி, இனி விவகாரத்தைப் பார்ப்போம்[2].

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - ஆசிர் போட்டோ- 19-06-2016ஆசிர் என்ற ஆசிர்வாதம் யார்?: செங்கல்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் ஆசீர் (எ) ஆசீர்வாதம் (35) என்கிறது தினகரன். வயது 40 என்கிறது மாலைமலர்[3]. செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் ஆசீர் என்ற ஆசீர்வாதம், 35; ரவுடி என்கிறது தினமலர். இவரது தாய் சுசீலா. மனைவி மேரி. பிரபல ரவுடியான ஆசீர் மீது கொலை முயற்சி வழக்கு, கொள்ளை, மிரட்டல், ஆள் கடத்தல்,   கடைகளில் சென்று, மாமூல் கேட்டு மிரட்டியதாக,உள்ளிட்ட 11 வழக்குகள் உள்ளன[4]. செங்கல்பட்டு தாலுகா போலீஸ் மற்றும் செங்கல்பட்டு நகர போலீசில், 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கடந்த, 2015ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்துவிட்டு, தற்போதுதான் வெளியே வந்திருந்தார்[5].  ஆக, ஆசீர்வாதம் ரௌடி, ஜெயிலுக்கு போய் வந்தவன்…….என்றாலும் கிருத்துவன். பிறகு, அவன், சர்ச்சிடமே வந்து எப்படி மாமூல் கேட்டான் என்று தெரியவில்லை. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படவில்லை போலும்.

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - சர்ச், - 19-06-2016ராஜ்டிவியின் பேட்டியின் படி, மக்கள் அவன் எப்படியாவது பணத்தைக் கறக்கும் பேர்வழி என்று தெரிகிறது: அந்த பகுதியில் யாரிடத்தில் அதிகமாக பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வான், பிறகு, அவர்களிடத்தில் சென்று மிரட்டி பணம் கேட்பான். இப்படி மாமூல் கேட்பதையே வேலையாகக் கொண்டிருந்தான். எல்லோரிடத்திலும் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்பான். சிறுவர்கள் என்று கூட பார்க்க மாட்டான், கத்தியால் கீறி பயமுறுத்தி பணம் பரிப்பான். பெண்களாக இருந்தால், அசிங்கமாக-ஆபாசமாக பேசி மிரட்டுவான். ஏன் நிர்வாணமாக கூட இருந்து தொல்லைக் கொடுத்து பணம் கறப்பான், என்று அங்குள்ள பெண்கள் கூறுவதை “ராஜ்டிவி” பதிவு செய்துள்ளது[6]. ஒரு ஆண் பேசும்போது, பணத்திற்காக மிரட்டுவதை விளக்கி விட்டு, இப்படி அடிக்கடி வந்து கேட்டால் கோபம் வரும், அப்பொழுது அடிக்க பார்ப்பார்கள், பலர் சேரும் போது, இவ்வாறு ஆகிவிடுகிறது, ஆனால், அவன் இறந்து விடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண்களையும் சேர்த்து தான், போலீஸார் கூட்டி செல்ல முயன்றனர். ஆனால், பிறகு, அவர்களை விட்டுவிட்டு ஐந்து பேரை கூட்டி சென்றனர் என்று விவரித்தார்[7]. ராஜ்-டிவியின் “ரவுடிகள் உருவாகும் விதம்” அலசல் நண்ராக இருக்கிறது.

 செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - பொது மக்கள் விளக்கம் 19-06-2016

ஞாயிற்றுக் கிழமை சர்ச்சில் பிரார்த்தனை நேரத்தில் வந்து மிரட்டிய ஆசிர்வாதம்: இம்மானுவேல் பிரகாஷ் [Immanuel Prakash] என்ற பாஸ்டர் / மதபோதகர் தனது வீட்டின் அருகில், இந்த ஜெபகூடத்தை நடத்தி வந்தார். இடம் – மேலமை ஊராட்சி, கே.கெ.நகர், அம்பேத்கர் 2வது தெரு, வார்டு எண். 9. இந்நிலையில், 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணியளவில் (தினகரன்) / 10.15 மணிக்கு (தினமலர்) ஆசீர் செங்கல்பட்டு அடுத்த கேகே நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு கே.கே., நகர் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று (தினமலர்) / திடீரென சென்றார்[8]. சாதாரணமாக சென்றார், திடீரென்று சென்றார், குடித்து விட்டு சென்றார் – என்று காணப்படுகிறது. பின்னர் போதகர் இம்மானுவேல் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளார்[9]. அதற்கு போதகர், ‘வார வாரம் வந்து மாமூல் கேட்கிறாய், தர முடியாது’ என்று கூறியுள்ளார்[10]. உடனே ஆசீர், ‘நான் பிரபல ரவுடி. எனக்கு மாமூல் தரமாட்டியா. நீ எப்படி சபை நடத்துகிறாய் என பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஆவேசமாக கூறி அடிக்க பாய்ந்துள்ளார்[11]. இதனை கண்டித்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் மற்றும் பிரார்த்தனைக்கு வந்தவர்களை ஆசீர்வாதம் கத்தியை காட்டி மிரட்டினார்[12]. மேலும் போதகர் இம்மானுவேல் பிரகாசிடம் மாமூல் கேட்டு எச்சரித்தார்[13].

Ashirvadam killed - Deccan chronicle ஊடகங்கள் விவரித்தது (20-06-2016): ஆசிர்வாதம் கத்தியுடன் ஜெபகூடத்திற்குள் சென்றான் இம்மானுவேலை கத்தி காட்டி மிரட்ட ஆரம்பித்து பணம் கேட்டான். ஜெபகூட்டத்தில் இருந்த சுமார் 50 பக்தர்களுக்கு[14] எதிராகவே கத்தி காண்பித்து சுழற்றி மிரட்டினான். இவ்வாறு, தினமும் மாமூல் கேட்டு வந்தான்[15]. இதனால், அவனை வெளியே போகும்படி சொன்னார்கள். ஆனால், அவனோ, எல்லோரையும் கத்தி காட்டி மிரட்டினான்[16]. பிறகு அப்படியே வெளியே சென்றான். அப்பொழுது, பக்தர்கள் அவன் மீது பாய்ந்து, கற்களால் அடித்து, வளைத்துப் பிடிக்க முயன்றனர்[17]. ஆனால், அவனோ கத்தியை வைத்து, சுற்றி வந்து, குத்தி விடுவது போல பாய்ந்து, பாய்ந்து நடந்து கொண்டிருந்தான். ஆனால், கற்கள் அவனது மார்பு மற்றும் தலைமீது தாக்கப்பட்டதில் மயங்கி விழுந்தான். ஒரு பெரிய கல் அவன் தலையில் பட்டதில், அங்கேயே இறந்து விழுந்தான்[18]. அவ்வாறு டெக்கான் குரோனிகல் விவரித்தது[19].

© வேதபிரகாஷ்

08-07-2016

[1] http://liveday.in/chennai-online-tamil-news/criminal-murder/

[2]  விவரங்களை அலசி இதனை பதிவு செய்ய வேண்டும் என்று தாமத்தித்தில், மற்ற விவகாரங்கள் வந்துவிட, இதனை மறக்கும் படி ஆகிவிட்டது. இருப்பினும், முக்கியத்துவம் குறித்து, இப்பொழுது பதிவு செய்யப்படுகிறது.

[3] மாலைமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்மகன் உள்பட 5 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2016 12:38

[4] தினகரன், மாமூல் கேட்டு மிரட்டியதால் பயங்கரம் பட்டப்பகலில் மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து ரவுடி படுகொலை போதகர், மகன் உள்பட 5 பேர் கைது, Date: 2016-06-20 12:51:29

[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=586671&cat=504

[6] கோப்பியம் (ராஜ் டிவி), Koppiyam – Rowdy Hacked To Death In Chengalpattu – பாதிரியார் உட்பட 5 பேர் கைது !!, Published on Jun 24, 2016

[7] https://www.youtube.com/watch?v=B2sIXu35CtQ

[8] நியூஸ்.7.டிவி, பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கல்லால் அடித்து கொலை செய்த பொது மக்கள் !, June 19, 2016

[9] http://ns7.tv/ta/rowdy-nabbed-public-threatening-father-money.html

[10] தினகரன், பட்டப்பகலில் மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து ரவுடி படுகொலை, Date: 2016-06-20@ 01:16:19.

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=225349

[12] மாலைமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்மகன் உள்பட 5 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2016 12:38

[13] http://www.maalaimalar.com/News/District/2016/06/20123825/1020145/Rowdy-struck-and-killed-in-Chengalpattu.vpf

[14] The Times of India, Thug tried to extort money from pastor, TNN | Jun 20, 2016, 04.44 AM IST

[15] http://timesofindia.indiatimes.com/city/chennai/Thug-tried-to-extort-money-from-pastor/articleshow/52825565.cms

[16] New Indian Express, Unforgiving: Church drama leaves former convict dead in Chengalpet, By Express News Service, Published: 20th June 2016 04:07 AM, Last Updated: 20th June 2016 10:21 AM.

[17] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Unforgiving-Church-drama-leaves-former-convict-dead-in-Chengalpet/2016/06/20/article3490680.ece

[18] Ashirvadam allegedly went inside the prayer hall with a knife and started threatening the preacher, demanding money. He demanded mamool daily at knifepoint in front of devotees, who suggested that he get out of the prayer hall. Paying no heed, he continued to threaten the preacher. He said that if Immanuel Prakash failed to give him money daily he would be forced to use the knife. When Ashirvadam refused to listen to the request of the devotees to get out, some of them tried to overpower him. He then pointed knife at them. Swinging knife at them in a threatening manner, he came out of the prayer hall. While devotees were shocked over the incident, Immanuel Prakash, his son, brother and two others surrounded Ashirvadam and attacked him by pelting big stones at him as he continued his stabbing actions with knife. He collapsed after he was hit on his head and chest.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/200616/chennai-preacher-kin-stone-ex-convict-to-death.html

[19] Deccan chronicle, Chennai: Preacher, kin stone ex-convict to death, Published Jun 20, 2016, 6:40 am IST; Updated Jun 20, 2016, 6:40 am IST.

அன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி – கர்த்தரின் செயலா?

ஜூன் 26, 2016

அன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி கர்த்தரின் செயலா?

இளவரசி - போட்டோ

பாதிரியிடம் ஜாதகம் கொடுத்து மாப்பிள்ளை பார்க்க சொன்னால், நானே மாப்பிள்ளைதான் என்ற பாதிரி: செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜபுரத்தை சேர்ந்த பீட்டர் மற்றும் திலகவதி மகன் ஜான்ஞானபிரகாஷ் (31). பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராம சர்ச் ஒன்றில் பாதிரியாராக வேலை செய்து வருகிறார். நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கூலியான கலியபெருமாள்-மல்லிகா தம்பதியரின் இரண்டாவது மகள் இளவரசி. கஷ்டப்பட்டு, இவர் பி.காம்., எம்.பில்., பட்டம் படித்துள்ளார். பெற்றோர் இவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகத்தை, ஜான்ஞானபிரகாஷ், பாதிரியிடம் கொடுத்து மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லி இருந்தார்கள். இதிலிருந்து, இளவரசி குடும்பத்தினரும் கிருத்துவர்கள் என்று தெரிகிறது. ஆனால், ஞானபிரகாஷத்திற்கே அவள் மீது ஆசை இருந்ததால், தானே திருமணம் செய்து கொள்கிறேன் என்றாராம்! அதன் பிறகு நடந்ததை, இளவரசியின் மாமா ரவிக்குமார், மு. இராகவன் என்ற “தமிழக அரசியல்” இதழ் நிருபரிடம் சொன்னதாக இவ்வாறுள்ளது[1]. இங்கும், ஜாதகம் பார்க்கும் விசயத்தில் கிருத்துவத்தின் போலித்தனம் வெளிப்படுகிறது.

ஞானபிரகாசம் - ராகவன். போட்டோஎனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை என்ற பாதிரி!: “நான் ஒரு மாப்பிள்ளை இருக்கும்போது ஏன் வெளியில் தேடவேண்டும் என்று ஜான் ஞானபிரகாசம் வலிய பெண் கேட்டதால், கடந்த ஆண்டு 2015 ஜூன் 22ம் தேதியன்றவு அவர்கள் இருவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தோம். முதல் நாள் இரவேநான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திருஎன்று கூறிவிட்டு சென்று விட்டார். அதன் பின் இரு மாதத்திற்கு ஒரு முறை வந்தாலும் கூட இரவு தங்குவதில்லை. ‘ஏன் ஒதுங்கி செல்கிறீர்கள் என்று இளவரசி கேட்டதற்கு, ‘நீ அழகா இல்ல. மற்றவர்கள் மத்தியில் என்னுடன் ஜோடியாக வர உனக்கு தகுதி இல்லைஎன்று கூறிவிட்டார். நான்கு ஊர் பஞ்சாயத்து கூடி பாதிரியிடம் கேட்டபோது, ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லைஎன்று கூறி சென்று விட்டார். என்றாலும், மனம் திருந்தி வருவார் என இளவரசி அவரது வீட்டிலேயே வேலைக்காரியைப் போல உழைத்து எத்ர்பார்ப்புடன் காத்திருந்தாள். இந்த ஜூலை 22 முதல் திருமண நாள் வர இருப்பதால், அன்றாவது வருவார் என்று காத்திருந்தார் இளவரசி. ஆனால், வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் வந்தவுடன் துடித்துப்போய் அந்த விரக்தியேலேயே தூக்கில் தொங்கி விட்டாள். ஆனால், மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றி விட்டோம்”, என்று கூறி முடித்தார்.

பாதிரி பற்றிய விவரங்கள்பாதிரி சிறைக்கு சென்றது தற்கொலையைத் தூண்டியதாலா, வரதட்சிணை கேட்டதாலா?: இந்நிலையில் மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜான் ஞானபிரகாசம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இளவரசியிடம் பேசும் போது, “நான் வாழாவெட்டியாக தாய் வீட்டிற்கு திரும்புவதால் எனது தங்கைகளின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என்பதால் அவருடனே வாழப் போராடினேன். பாதிரியார் என்ற வேஷத்தில் வேஷதாரியாய் இருக்கும் அவருடன் இனி வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. என் வாழ்வைக் கெடுத்த பாவத்திற்கு கர்த்தரும் அவனுக்கு மன்னிப்பு தரப்போவதில்லை. வாழ்வுதான் கிடைக்கவில்லை. சாகத்துணிந்தும் அதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவன் செய்த தவறுக்கு சட்டத்தின் தண்டனையை அனுபவிக்கட்டும்”, என்றார் கண்ணிர் மல்க. கர்த்தர் இளவர்சியை ஆசிர்வாதிப்பாராக என்று முடித்திருந்தாலும், வழக்கம் போல மற்ற தமிழ் ஊடகங்கள் சில மாறுபட்ட விவரங்களைத் தருகின்றன. வரதட்சிணை கேட்க சொன்னது தேவனா, கர்த்தரா, மாதாவா, பரிசுதத ஆவியா, யார்?

பாதிரி பற்றிய விவரங்கள்.ராகவந் இளவரசிஜான் ஞானபிரகாசம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினார்[2]: தினகரன், ஜான் ஞானபிரகாசம் மற்றும் இவரது மனைவி இளவரசி (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்[3]. கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. திருமணம் நடைபெற்றபோது, இளவரசியின் பெற்றோர் 10 பவுன் நகைகள், சீர் சாமான்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சிணையாக கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் ஞானப்பிரகாசம், இவரது தாயார் திலகவதி ஆகியோர்  இளவரசியிடம்  வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இளவரசிக்கு ஜான்ஞானபிரகாஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுபற்றி கணவரிடம் இளவரசி கேட்டபோது, உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து, மனமுடைந்து இளரவசி, 11-06-2016 சனிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்[4]. அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பின்னர் இதுபற்றி போலீசில் இளவரசி புகார் செய்தார். அதில் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்[5]. இதையடுத்து ஜான்ஞானபிரகாஷ், அவரது தாய் திலகவதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்[6].

ஞானபிரகாசம் - ராகவன்

நான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திரு: ஜான் ஞானபிரகாசம் இவ்வாறு சொல்லும் போது, யாரைக் கேட்டு கல்யாணம் செய்து கொண்டான், தாலி கட்டினான்……..என்றெல்லாம் எழுகின்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது? ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார் என்றால், பஞ்சாயத்து பிரமுகர்கள் எப்படி அமைதியாக இருந்தார்கள். அத்தகைய அதிகாரம் யார் கொடுத்தது, பிறகு பாதிரியை யார்தான் விசாரிப்பது என்பதெல்லாம், என்ன கிருத்துவயியலில் உள்ள மாயைகளா, மர்மங்களா? அதாவது, இந்திய சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற தோரணையில் இவர்கள் செயல்படுவது தெரிகிறது. சர்ச்சை மீறி, போலீஸாரிடம் புகார் கொடுத்தால் தான், இந்திய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார் இல்லை என்றால், எல்லாமே அமுக்கப்பட்டு விடுகின்றன. குற்றம் புரிந்த பாதிரிகள் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள், அடுத்த இரையை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள்! கேட்டால், எல்லாமே தேவனின் மகிமை என்றும் சொல்வார்கள் போலும்!

வேப்பந்தட்டை எங்ஜினியரிங் கல்லூரி தற்கொலை முயற்சி

இப்பகுதிகளில் அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களின் பின்னணி என்ன?:: அன்னமங்களத்தில் ரோமன் கத்தோலிக்க மற்றும் புருடெஸ்டென்ட் சர்ச்சுகள் உள்ளன. அவற்றில் டி;எல்.எல்.சி மற்றும் சி.எஸ்.ஐ புருடெஸ்டென்ட் என்று மூன்று பிரிவுகளின் சர்ச்சுகள் உள்ளன. மதம் மாற்றும் விசயங்களில் இவற்றிற்குள் போட்டி இருக்கிறது. கூகுள் மேப் அவற்றின் இருப்பிடத்தைக் காட்டுகிறது. அருகில் முஸ்லிம்கள் அதிகமுள்ள காத்தான்காடு போன்ற இடங்களும் உள்ளன. முஸ்லிம்களும் மதம் பரப்புவதில், தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இப்பகுதிகளில், அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன. இவையெல்லாம், தெற்செயலாக நடப்பவையா அல்லது பின்னணியில், மதசார்புடைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் முதலியவை உள்ளனவா என்ற சந்தேகம் எழுகின்றது.

வேப்பந்தட்டை பள்ளி மாணவி சுபாஷிணி மாயம்இந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா?:  அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி[7] ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மே 1, 2014 அன்று நடந்தது[8]. விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் சேகர் தலைமை வகித்தார். அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம் ஜெபம் செய்து, விழாவை தொடங்கி வைத்தார்[9]. உதவி பேராசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனிட்டா ஆண்டறிக்கை வாசித்தார். அன்னமங்கலம் பங்கு தந்தை ஆல்பர்ட் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ராஜாலெமார்ஜி, பொருளாளர் நிக்கல்சன், உதவி தலைவர் மெர்லிஸ், பாலிடெக்னிக் முதல்வர் லோகர்செல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துறைத்தலைவர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இங்கு, இந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா என்ற கேள்வி எழுகின்றது. அன்னமங்கலம், அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம், கிருத்துவர்களால் நிர்வகித்து வரப்படும் அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி முதலியவை, அதை சுட்டிக் காட்டுகின்றன. பிறகு, அந்த சர்ச்சுக்கும், இக்கல்லூரிக்கும் என்ன சம்பந்தம்?

© வேதபிரகாஷ்

26-06-2016

Location churches in Annamanalam Google map

[1] மு. இராகவன், நீ அழகா இல்ல!…… மனைவியை தூக்கில் தொங்க வைத்த பாதிரியார்,. தமிழக அரசியல், 25-06-2016, பக்கம்.16.

[2] தினமணி, வரதட்சிணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு, By மயிலாடுதுறை, First Published : 13 June 2016 07:31 AM IST

[3] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=583440&cat=504

[4] தினகரன், மனைவி தற்கொலை முயற்சி பாதிரியார் மீது வழக்கு,
Date: 2016-06-13 11:34:53

[5]http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2016/06/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/article3479962.ece

[6] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=583440&cat=504

[7] Elizabeth College of Engineering and Technology, Annamangalam(po),
Vepppanthattai (TK), Perambalur(Dt), Tamil Nadu – 621102.http://elizabethcollege.in/

[8] தினமலர், எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி ஆண்டு விழா, பதிவுசெய்த நாள்: மே.2, 2014: 02.15.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=966479&Print=1

சோபியா மாரியா ஹயாத் என்ற அரை-நிர்வாண நடிகை, கன்னியாஸ்திரி ஆகி, தன்னை மேரி, ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்வது உள்-கலாச்சாரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காகவா?

ஜூன் 13, 2016

சோபியா மாரியா ஹயாத் என்ற அரை-நிர்வாண நடிகை, கன்னியாஸ்திரி ஆகி,  தன்னை மேரி, ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்வது உள்-கலாச்சாரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காகவா?

Sofia Hayat converted to Christian nun

நான் தான் மேரி, பெண் ஏசு:  “நான் தான் பெண் ஏசு. இனி என்னை அன்னை சோபியா என்றே அழைக்க வேண்டும். நாம் யார், வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது பற்றிய உண்மையை நான் அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன்”, என்று தமிழ் ஊடகம் நிறுத்திக் கொண்டுள்ளது, ஆனால், “நான் குயான் யின் என்கின்ற பெண் ஏசு, மேரி மற்றும் ஐசிஸ் தேவதை ஆகிறேன். நான் தான் தாய் மற்றும் தந்தைசுதன்பரிசுத்த ஆவி என்கிற தியேகத்துவத்தின் மகள் ஆகிறேன். நான் எல்லோருக்கும் உண்மை சொல்லப் போகிறேன், நீங்கள் யார், வாழ்க்கை என்ன என்று விளக்கப் போகிறேன்”, என்றெல்லாம் பேசினார்[1]. உண்மையில் ஆசார கிருத்துவர்கள் இத்தகைய பேச்சு, நிலை மற்றும் இறையியலை ஒப்புக் கொள்ள மாட்டார்கள், ஆனால், இவ்விசயத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதது விசித்திரமாகவே இருக்கிறது. ஒருவேளை, பிரான்சிஸ் சேவியர் குளூனி [Francis Xavier Clooney] போன்றோர் சந்தோசப்படுவார்களோ என்னமோ தெரியவில்லை. புனேவில் உள்ள ஞான வித்யா பீடம் [Gnana Vidhya Peetam], குளித்தலை சச்சிதானந்த ஆசிரமம் [Sachitananda Asram] முதலிய இடத்திலி உள்ளோரும் இந்த அம்மையாரைப் பார்த்து சந்தோசப் படலாம்!

சோபியா கன்னியாஸ்திரி- அவதாரங்கள்செக்ஸ் புனிதமானது, இனி நான் செக்ஸ் வைத்துக் கொள்ளப் போவதில்லை[2]:  நான் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை[3]. அதாவது, ஜூலை வரை வைத்துக் கொண்டுள்ளார் என்று ஒப்புக் கொள்கிறார். யாரிடம் எத்தனை தடவை என்றெல்லாம் தெரியவில்லை. ரோஹித் சர்மா என்ற கிரிக்கெட் வீரருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. கிரிக்கெட்டிற்காக, முழு முதுகையும் காட்டி, அதில் பெயின்டால் ஓவியம் வரைவது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதெல்லாம், அந்நடிகையின் அந்தரங்க விவகாரங்களாக இருந்தாலும், இப்பொழுது, இவ்வகையில், அந்த விவகாரங்கள் பொதுவாக அறியப்படும் வகையில் வெளியாகி இருப்பதாலும், இந்திய சமூகத்தை பாதிப்பதாலும், மற்றவர் அலச வேண்டியுள்ளது. “இனி எனக்கு அது தேவையும் இல்லை. அதன் பிறகே செக்ஸ் என்பது புனிதமானது என்பது புரிந்தது. நான் முஸ்லிமாகப் பிறந்து, கிறிஸ்தவளாக மதம் மாறியிருக்கிறேன்”, என்று சோபியா தெரிவித்துள்ளார்[4]. ஏற்கெனவே, தந்திர முறைகளுக்கு செக்ஸ்-விளக்கம் கொடுத்து, தூஷிக்கப் பட்டு வருகிறது. யோகா முறைகளையும், செக்ஸ்-யோகா என்றெல்லாம் குறிப்பிட்டு கேவலப்படுத்தி வருகிறார்கள்.

Anil Goyal, fake-Baba Ramdev- Talwar, Sofiaபாபா ராம்தேவை இழிவு படுத்திய புகைப்படம், வீடியோ, சினிமா முதலியன: பாபா ராம்தேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில், அப்படங்கள் வைலாகி பரவி, தேவையில்லாத வினர்சனங்களுக்குட்பட்டது நினைவிருக்கலாம்[5]. அவை மே மாத கடைசி வரை உலாவந்து கொண்டிருந்தன[6]. ஒரு இந்து குருவோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில், ஒழுங்காக ஆடை அணிந்து கொண்டு வராததும் சந்தேகத்தை எழுப்பியது. பிறகுதான் உண்மை தெரிந்தது, அது பாபா ராம்தேவ் அல்ல, ஆனால், அவரைப் போலவே தோற்றமளிக்கும் சுனில் தல்வார் என்ற நடிகர்[7]. “பாய் கா மால்” என்ற படத்தை இயக்குகும் அனில் கோயல், அத்தகைய பாத்திரத்திற்கு உபயோகப்படுத்தியுள்ளார்[8]. போதாகுறைக்கு சோபியா, பாபா ராம் தேவ் என்னுடைய மார்பைப் பார்த்திருக்கலாம்[9] என்று கமென்ட் வேறு அடித்தது உள்நோக்கம் கொண்டது என்றாகிறது. 2011ல் பூஜை போட்டு, 2012ல் அப்படம் வரும் என்றார்கள். அப்படம் வந்ததா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால், பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டது தானே. இதில், குறிப்பாக இந்துமத குருக்கள், சாமியார்கள் தாம் தாக்கப்படும் இலக்கில் உள்ளதை கவனிக்க வேண்டும். எத்தனையோ கிறிஸ்தவ, முஸ்லிம் போலி சாமியார்கள், காஜிகள், முல்லாக்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் இருந்தாலும், அவர்களை பாத்திரமாக வைத்தோ அல்லது இருப்பவர்களை, இப்படி, நடிகர்களை வைத்தோ சினிமா எடுப்பதில்லை. பிறகு, இது எதைக் காட்டுகிறது என்று ஆராயும் போது, இந்துமதம் தான் குறியாக, இலக்காக இருக்கிறது என்றாகிறது.

சோபியா கன்னியாஸ்திரிசோபியா மற்ற நடிகைகளைப் பற்றி கமென்ட் அடித்தது: ஒரு பேட்டியில், சன்னி லியோன், ஒரு “போர்ன்” நடிகை என்று கூறியுள்ளார்[10]. பதிலுக்கு அவர் ஏதாவது சொன்னாரா என்று தெரியவில்லை. நிர்வாணத்தில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பது, அவர்களது தாராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. அப்பேட்டியில், கிஸ் முதல் மார்பகங்களைக் காட்டுவது வரை தாராளமாக பேசியுள்ளார். ராகி சாவந்த், வீணா மாலிக், கத்ரினா கைப் நடிகைகளைப் பற்றியும் கமென்ட் அடித்துள்ளார்[11]. தொழில் ரீதியில் போட்டி-பொறாமை போன்றவற்றால், ஒரு நடிகை, இன்னொரு நடிகைப் பற்றி கமென்ட் அடிப்பதை, பொதுவான இந்தியர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மதரீதியில், அதே நடிகை கருத்துகளை வெளியிடும் போது, கவனம் செல்லுத்த வேண்டியுள்ளது.

Sofia Hayat- Hinduising Christianityஉள்கலாச்சாரமயமாக்கல் [Inculturation]: வாடிகன் – II [Vatican – II] ஆவணங்களின் படி, இந்தியாவில் “கத்தோலிக்க ஆசிரமங்கள்” நடத்தப் பட்டு வருகின்றன. இதுவரை, அவற்றில் இந்துமத முறைகள் கையாளப்பட்டு, நாட்டுப்புற, கிராம மக்களுக்கு, தாங்கள் மதம் மாற்றப் படுகிறோம் என்று கூட தெரியாமல், மதம் மாற்றப்பட்டுள்ளனர். பொங்கல், தீபாவளி என்று எல்லா பண்டிகைகளும் கொண்டாடுகிறார்கள். ஆனால், கும்பிடும் தெவம் “ஏசு” என்கிறார்கள். அதன் படி, ஏசுவும் இந்து கடவுள் போன்றே செய்து சிலைகளை, விக்கிரங்களை வைக்கிறார்கள், பூஜை, பஜனை எல்லாம் செய்து வருகிறார்கள். சர்ச்சுகள் இந்து கோவில் போன்றே கட்டப்பட்டுள்ளன. நக்மா போன்ற நடிகைகள், பிரச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் பட்டார்கள். அந்நிலையில், இந்த சோபியா மாரியா ஹயாத் அல்லது பூஜா மிஸ்ரா, அதே போல உபயோகப்படுத்தப் படுவாரா என்பதை கவனிக்க வேண்டும். ஒருவேளை பெண்கள், குறிப்பாக நடிகைகளை உபயோகப் படுத்தினால், அறுவடை சிக்கிரம் நடக்கும், முடியும் என்று தீர்மானித்துள்ளார்களோ தெரியவில்லை. குளூனி ஏற்கெனவே, இந்து தாய்கடவுளர்களை விட, மேரிதான் உயர்ந்தவள் என்று புகங்கள் எல்லாம் எழுதியுள்ளார். அதனால், தானே மேரி, பெண்-ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும், இந்த சோபியா மாரியா ஹயாத் அல்லது பூஜா மிஸ்ரா இனி என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்!

© வேதபிரகாஷ்

13-06-2016

Sofia-tweet turned to nun - pooja

[1] While talking to the media, Sofia said, “I am the incarnation of Quan Yin, Female Christ, Mary and Goddess Isis. I am the Mother and daughter of God of the Holy Trinity. I want to spread the truth of who we are and what is our purpose in life is. It is time to wake up and live the truth.

http://zeenews.india.com/entertainment/celebrity/mother-sofia-hayat-removes-breast-implants-shows-jaw-dropping-transformation-view-pic-inside_1891845.html

[2] Times of India, I am not going to have sex anymore: Sofia Hayat, Swasti Chatterjee, TNN, May 26, 2016, 12.45 AM IST.

[3] http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/I-am-not-going-to-have-sex-anymore/articleshow/52434437.cms

[4] She further revealed, “I have not had sex after July 2015 as I didn’t feel like. I was in a relationship earlier but I didn’t feel the urge to get physical. That’s when I understood sex should be considered as sacred. However, when it is enjoyed without love and respect it exhausts the life force and turns us into mere physical beings. I was born Muslim and converted into Christian.”

[5] Naidunia, रामदेवऔर सोफिया की वायरल हो रही फोटो की ये है सच्चाई, PublishedTue, 31 May 2016 02:07 PM (IST) | Updated: Tue, 31 May 2016 02:27 PM (IST)

[6] http://naidunia.jagran.com/state/gujarat-truth-of-viral-photo-of-hot-model-and-actress-sofia-hayat-and-baba-ramdev-looks-a-like-on-social-media-749541

[7] http://fbinvestigations.blogspot.in/2014/06/fake-ramdev.html

[8] It was a great surprise at the mahurtha of the upcoming Bollywood movie Bhai Ka Maal Hai, when Baba Ramdev turned up to the event in New Delhi on Monday. But it was not Ramdev. It was his look-alike actor Sunil Talwar, who was dressed up like the Yoga Guru for the shooting of the movie.  Bhai Ka Maal Hai is said to be a comedy movie on Baba Ramdev. Filmmaker Anil Goyal, who is directing the film, has roped in Baba”s lookalike Sunil Talwar to play Yoga Guru in the film. Hollywood actress Sofia Hayat is essaying the role of heroine. The film will also star Siraj Khan.

http://www.filmibeat.com/bollywood/features/2011/baba-ramdev-lookalike-bhai-ka-maal-hai-mahurtha-301111.html

[9] https://www.youtube.com/watch?v=aFQ_OR__xYU

[10] http://www.dailymotion.com/video/x21ts2t_sunny-leone-is-a-porn-star-sofia-hayat_fun

[11] She also spoke about Sunny Leone, Rakhi Sawant, Veena Malik and Katrina Kaif’s item number ‘Chikni Chameli’.

http://www.dailymotion.com/video/x21ts2t_sunny-leone-is-a-porn-star-sofia-hayat_fun