Posts Tagged ‘காதலர் தினம்’

பிஜு காஸ்ட்ரோ, அனு கென்ஸியைக் கத்தியால் குத்தியது: ஒருதலை காதலா, காதல் போதையா, சினிமா போதனையா – எது? (1)

ஜனவரி 2, 2017

பிஜு காஸ்ட்ரோ, அனு கென்ஸியைக் கத்தியால் குத்தியது: ஒருதலை காதலா, காதல் போதையா, சினிமா போதனையாஎது? (1)

biju-castro-who-stabbed-anu-kenzie-dinathanthiகாதல் போர்வையில், இளம்பெண்ணுக்குக் கத்திக் குத்து: ஒரு செய்தி வந்து விட்டால், இணைதளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அதே செய்தியை, தலைப்புக் கூட மாற்றாமல் அல்லது சிறிதே மாற்றி, அப்படியே போட்டுப் பரப்ப முயற்சித்து வருகின்றன, செய்து வருகின்றன. ஆனால், அதில் உள்ள நோய், நோய்நாடும் முறை, மருந்து கொடுத்து தீர்க்கும் வழி முதலியவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. “காதல்” என்ற போர்வையில் தாக்கப்படுவது பெண், கொலை செய்யப் படுவது பெண், வாழ்க்கை சீரழிவது அப்பெண்ணின் பேற்றோர், போன்றவற்றை அவை கவலைப்படுவதில்லை. பெற்றோர் என்ன தங்களது பெண்களை வளர்த்து, படிக்க வைத்து, நல்ல உத்தியோகம் பார்க்கும் நிலைக்கு உயர்த்தியர்வர்கள், இப்படி சமீபகால காம-சதாய்ப்புகள், பாலியல் தொல்லைகள், ஏன் கொலை வரை செல்லும் குரூரங்களுக்கு உட்படுத்தவா நினைக்கின்றனர்? கிருத்துவ போதகர்களே இத்தகைய பாதகமான செயல்களை செய்து வருவதால், அடுத்தவர்களுக்கு போதிக்க தகுதியில்லாதவர்கள் ஆகிவிட்டார்கள் போலும்! இதனை கிருத்துவப் பிரச்சினை என்றால், கிருத்துவர்கள் ஆராய வேண்டும். தொடர்ந்து நடக்கும் போது, பொதுப்பிரச்சினையாகி விடுவதால், மற்றவர்களும் ஆராய வேண்டியுள்ளது. இத்தகைய காமக்கொலைத் தாக்குதல்களை வெறும் செய்திகளாகக் கொண்டு விட்டுவிட முடியாது.

biju-castro-who-stabbed-anu-kenzie-puthiathalaimurai-tvபிஜு காஸ்ட்ரோ என்ற இளைஞன் இஞ்சினியரிங் படிப்பை விடுத்து, மீன் பிடிக்கச் சென்றது: பிஜு காஸ்ட்ரோ (Biju Castro, 27) நித்திரவிளை பூந்தோப்பு காலனியைச் (Poonthoppu colony) சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து 2 ஆண்டுகள் படித்தார். படிப்பு சரியாக வரவில்லை போலும். அதன்பின்பு படிப்பை நிறுத்திவிட்டு மீன்பிடித் தொழில் செய்து வந்தார்[1]. அவர் புகைப்படத்தைப் பார்க்கும் போதே, படிப்பில் சிரத்தையில்லாமல், பொழுதை வீணடித்தவன் போலத்தான் காணப்படுகிறான். காஸ்ட்ரோ என்ற பெயருக்கு ஏற்றபடி தாடியெல்லாம் வைத்திருக்கிறான். தாடி வைத்திருப்பது பிரச்சினையில்லை, ஆனால், “குற்றவாளிகள்” போன்ற அத்தகைய தோற்றம் வரக்கூடாது. படிக்கும் போது, படிக்காமல், படிப்பில் நாட்டம் இல்லையெனும் போது, பெற்றோர் என்ன செய்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இஞ்சினியரிங் சீட் கிடைப்பதே அரியதாக உள்ளநிலையில், லட்சங்களைக் கொடுத்து வாங்க வேண்டியுள்ள நிலையில், படிப்பை படிக்காமல் விட்டதிலிருந்தே, அவனது தவறான போக்கைக் காட்டுகிறது. சரி, மீன்களைத்தான் பிடிக்கிறானா, இல்லையா எனும் போது, ஒரு பெண்ணின் மீது கண் விழுந்துள்ளது.

biju-castro-anu-kenzie-puthiathalaimurai-tvபிஜு காஸ்ட்ரோ அனுகென்சியை ஒருதலையாக காதலித்தது: குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை (Chinnathurai) கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (Anthony Pillai) [2]. இவரது மகள் அனுகென்சி (Anu Kenzie, வயது 20) [3].  எம்.எஸ்சி பட்டதாரி, படித்த பிறகு, இவர் நெல்லையில் உள்ள / நெல்லையை அடுத்த செய்துங்கநல்லூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்[4]. அந்நிலையில் தான் பிஜு காஸ்ட்ரோ அனுகென்சியைப் பார்த்திருக்கிறான். உடனே காதல் விட்டது போலும். அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பிஜூ காஸ்ட்ரோ பின் தொடர்வது சென்று தனது காதலை அவர் வெளிப்படுத்தினார்[5]. ஆனால் அனுகென்சி அவரை காதலிக்க மறுத்தார்[6]. கடந்த 6 மாதத்துக்கு (ஜூன்.2016ல்) முன்பு பிஜூ காஸ்ரோவின் தொல்லை அதிகரிக்கவே அவர் மீது அனுகென்சி நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பிஜூ காஸ்ரோவை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதாவது, இந்த விவகாரங்கள் இருகுடும்பங்களுக்கும் தெரியும் என்றாகிறது. அப்படியென்றால், பிஜுவின் பெற்றோர், உற்றோர், அல்லது மற்றோர் அவனைக் கட்டுப் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்பது தொடர்ந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

biju-castro-who-stabbed-anu-kenzie-puthiathalaimurai-tv-2017போலீஸ் புகாருக்குப் பிறகு சிலகாலம் ஒதுங்கியிருந்து, மறுபடியும் பிந்தொடர ஆரம்பித்த போக்கு: அதன்பிறகு சிறிது காலம் ஒதுங்கி இருந்த பிஜூ காஸ்ரோ, மீண்டும் அனுகென்சியை பின் தொடரத் தொடங்கினார், “நீ என்னை கண்டிப்பாக காதலிக்க வேண்டும், உன்னை தான் திருமணம் செய்வேன்”, என்று மிரட்டினார். ஆனால் அவரது மிரட்டலுக்கு அடிபணியாமல் அனுகென்சி அவரை விட்டு விலகியே சென்றார். இந்நிலையிலும், மற்றவர்கள் அவனை ஏன் கண்டிக்கவில்லை அல்லது கன்டிக்கப்பட்ட விவரங்கள் தெரியவில்லை. அவளது பெற்றோரும் விசயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில், அவளுக்கு பையனைப் பார்க்க ஆரம்பித்தனர். இந்தநிலையில் அனு கென்சிக்கும், மற்றொரு வாலிபருக்கும் நிச்சயம் செய்து, திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி வருகிற ஜனவரி 5-ந் தேதி அனுகென்சிக்கு திருமண நடக்க உள்ளது. இதையறிந்த பிஜூ காஸ்ரோ ஆத்திரம் அடைந்தார்[7]. தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என அவர் முடிவு செய்தார்[8].  ஆக, அப்பிரச்சினை ஆரம்பித்து விட்டது.

biju-castro-jilted-lover-stabs-anu-kenzie-outside-tami-nadu-church-01-01-2017-malainalarநடு இரவு ஜெபத்திற்குச் சென்று கொலை செய்ய தீர்மானித்த கொடூரன்: 31-12-2016 அன்று நள்ளிரவு அனுகென்சி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு புத்தாண்டு பிரார்த்தனைக்கு செல்வதை அவர் அறிந்தார். இதையடுத்து ஆலயத்தின் வெளியே கத்தியுடன் அவர் காத்து நின்றார். ஒரு கிருத்துவன் என்ற முறையில், கொலை செய்ய வந்த அவனது மனம் மாறியிருக்க வேண்டும் அல்லது மனதை ஆண்டவன் மாற்றியிருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு. புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து பக்தர்கள் கூட்டத்தோடு கூட்டமாக அனுகென்சி ஆலயத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது வழிமறித்து, மறுபடியும் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புருத்தினான்[9]. ஆனால், மறுத்ததால், கோபமடைந்து-பாய்ந்து சென்ற பிஜூ காஸ்ரோ, அனுகென்சியை கத்தியால் சரமாரியாக குத்தினார்[10].  காதல் வெறியென்றால், நேசிக்கும் பெண்னை இவ்வாறு கொலைசெய்வானா என்று தெரியவில்லை. ஆனால், “எனக்குக் கிடைக்காதது, யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற கொலைவெறியோடு அலையும் காமக்கொடூரர்களை குறிப்பாக கண்காணிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-01-2017

love-me-or-else-i-kill-you-jilted-love

[1] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2017/01/02011105/When-returning-after-prayers-on-New-Years-incident.vpf

[2] தமிழ்.ஒன்.இந்தியா, காதலிக்க மறுத்த பேராசிரியைக்கு கத்திக்குத்து.. புத்தாண்டின்போது வாலிபரின் வெறிச்செயல்!, By: Kalai Mathi, Published: Sunday, January 1, 2017, 15:25 [IST].

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/young-man-stabs-college-lecturer-refusing-love-near-nagarcoil-270910.html

[4] தினத்தந்தி, புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து திரும்பிய போது சம்பவம்: காதலிக்க மறுத்த பேராசிரியைக்கு கத்தி குத்து 5–ந் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் வாலிபர் வெறிச்செயல், பதிவு செய்த நாள்: திங்கள் , ஜனவரி 02,2017, 1:11 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜனவரி 02,2017, 5:00 AM IST

[5] தமிழ்.வெப்துனியா, காதலிக்க மறுத்த கல்லூரி பேராசிரியைக்கு கத்திக் குத்துவாலிபர் கைது, ஞாயிறு, 1 ஜனவரி 2017 (16:07 IST)

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/young-man-tried-to-kill-girl-by-knife-117010100010_1.html

[7] செய்திபுனல்.காம், காதலிக்க மறுத்த இளம் பேராசிரியை புத்தாண்டின்போது சரமாரியாக தாக்கிய வாலிபர்!, Posted by கார்த்திக் பிரபாகரன், ஞாயிறு 1, ஜனவரி 2017.

[8] http://seithipunal.com/news/tamil-nadu/young-teacher-hacked-to-attack-at-kanyakumari-church/

[9]  “Learning that she is attending a prayer meet at the local church on the New Year night, he waited outside the church. He confronted her when she came out of the church. But the woman rebuffed him again. The angry man took out a lethal weapon and stabbed her. Though he tried to escape, churchgoers managed to catch him. He was thrashed severely, before handed over to the police,” the Police officer added.

http://timesofindia.indiatimes.com/city/madurai/spurned-lover-stabs-polytechnic-college-faculty/articleshow/56280634.cms

[10] மாலைமலர், நித்திரவிளை அருகே காதலிக்க மறுத்த பேராசிரியைக்கு கத்திக்குத்து, பதிவு: ஜனவரி 01, 2017 12:04

வாலன்டைன்’ஸ் டே அல்லது காதலர் தினம் – கற்பனையில் உருவாக்கப்பட்டவன் தியாகியாகி, திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் ஆகி, காதலர் தினநாயகனாக மாறியது (2)

பிப்ரவரி 15, 2015

வாலன்டைன்ஸ் டே அல்லது காதலர் தினம்கற்பனையில் உருவாக்கப்பட்டவன் தியாகியாகி, திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் ஆகி, காதலர் தினநாயகனாக மாறியது (2)

சிபிலிஸைப் பரப்பியது கொலம்பஸ் 1792

சிபிலிஸைப் பரப்பியது கொலம்பஸ் 1792

கடன் வாங்கி வளர்ந்த கிருத்துவ மதம்: கத்தோலிக்கக் கிருத்துவத்திற்கு சொந்தமாக எதுவும் இல்லை எனலாம். ஏசுவுக்கு முன்னால் ஏசு, கிருஸ்துவுக்கு முன்னால் கிருஸ்து என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது[1]. இறையியல், தத்துவம், நியாயம், தர்மம், முதலியவற்றிற்கு பற்பல நாடுகளிலிருந்து பெற்று, ஒரு கலவையாகத்தான் இடைக்காலத்தில் உட்கொண்டு, ஒரு நிலையை அடைந்தது[2]. தனக்கென்று குறிப்பிட்ட பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்று எதுவும் இல்லாமல், சென்ற இடங்களிலிருந்தெல்லாம் கடன் வாங்கிக்கொண்டு, தமக்கேற்ற முறையில் தகவமைத்துக் கொண்டு, பிறகு ஒரு காலகட்டத்தில், கடன் வாங்கிக் கொண்டதெல்லாம், தங்குளுடையதுதான், அதுதான் முதன்மையானது, உண்மையானது, ஆதியானது என்று திரித்து விளக்கம் கொடுத்து எழுதவும் செய்யதனர்[3]. அதற்கேற்றபடி, அந்தந்த நாடுகளில் உள்ள அத்தாட்சிகளையும் மாற்றினர், மறைத்தனர், அழித்தனர். இதனால் தான் இறையியல் ரீதியில் பற்பக முரண்பாடுகள் காணப்படுகின்றன. சடங்குகள், கிரியைகள், வழிபாடுகள் பற்றி கேட்கவே வேண்டாம், ஒரே குழப்பம் தான்.

DanceofDeath-St. Nicholas Church in the capital city of Estonia, Tallinn, the fragment of the painting

DanceofDeath-St. Nicholas Church in the capital city of Estonia, Tallinn, the fragment of the painting

பாலியல் மலிந்த பைபிள் கிருத்துவர்களின் பாலியல் குற்றங்களுக்கு ஆதாரமாக உள்ளன: உலகத்தின் முதல் தந்தை ஆதாம் மற்றும் தாய் ஏவாள் என்று குறிப்பிட்டு அவர்கள் மூலம் தான் பூவுலக மக்கள் பிறந்தார்கள் என்ற சித்தாந்தம் மூலம், ஜேஹோவாவின் குழந்தைகளான ஆதாம் மற்றும் ஏவாள் எப்படி புனைந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தனர் என்ற குழப்பம் ஏற்பட்டது[4]. உடலுறவு கொள் என்றது “அறிதல்” என்ற நாஜுக்காக, கௌரவத்திற்காக, உருவகமாக உபயோகப் படுத்தப் பட்டது[5]. மேரி நான் எந்த ஆணையும் அறியேன் என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். வார்த்தை இதனால், சகோதர-சகோதரிகளுக்குள் புணர்வது – அம்னான் என்பவன் தமர் என்ற தனது சகோதரியைக் கற்பழிக்கிறான் [2.சாமுவேல் 13:1-2] (Sodomy)[6], தந்தை மகளைப் புணர்வது[7] [லோத் என்பவன் தனது இரண்டு மகள்களையும் புணர்கிறான் – ஆதி.19:26-29] (incest)[8], அப்சலாம் பலருடன் வன்புணர்ச்சி கொள்கிறான் [2.சாமுவேல் 15:16] போன்ற தகாத உடலுறுகள் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், பெண்னை பெண் புணர்வது (Lesbian), ஆணை ஆணைப் புணர்வது போன்ற ஓரின சேர்க்கைகளுக்கு (homosexual) எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டன[9]. ஏனெனில் அத்தகைய உறவுகளில் குழந்தைப் பிறக்காது. பரிசுத்தமான கருதரிப்பு (Immaculate Conception) என்று ஒரு ஆணின் தொடர்பு இல்லாமல் குழந்தைப் பெற்றெடுத்ததை சிறப்பாக எடுத்துக் கொண்டார்கள். மேரி கருவுற்றது ஒரு ஆவியினால், அதனை பரிசுத்த ஆவி என்கிறார்கள். இதனால், கற்பிற்கு ஒரு கோட்பாடு உருவாக்க இயலாமல் திகைத்தனர். பைபிளை ஆராய்ந்த கிருத்துவயியல் பண்டிதர்கள், மனோதத்துவ அறிஞர்கள், மானிடவியல் வல்லுனர்கள், மருத்துவர்கள் பாலியல் மலிந்த பைபிள் கிருத்த்வர்களின் பாலியல் குற்றங்களுக்கு ஆதாரமாக உள்ளன எடுத்துக் காட்டினர்.

In the early 14th century, Templars accused of sodomy and heresy are burned alive under the eye of French King Philip IV

In the early 14th century, Templars accused of sodomy and heresy are burned alive under the eye of French King Philip IV

கிருத்துவப் பெண்களின் கற்பு முதலியன: மேலும், முதலாம் ஆதாம் செய்த பாவத்தினை, இரண்டாம் ஆதமான ஏசு தனது ரத்தத்தினால் போக்கினார் என்ற சித்தாந்தத்தை உருவாக்கியபோது, உலகத்தில் உள்ள பெண்களுக்கெல்லாம் முதல் கணவன் ஏசுதான் என்ற கருத்தும் வலியுறுத்தப் பட்டது. எல்லாம் பெண்களும் ஏசுவுக்கு தன்னை அற்பணித்துக் கொள்ள வேண்டும் என்றா கன்னியாஸ்திரி சித்தாந்தம் உருவாக்கப் பட்டது. இருப்பினும், மனிதவிருத்திற்காக, ஆண்-பெண் கலவி அனுமதிக்கப் பட்டது. அதிலும், ஒழுக்கம் வேண்டும் என்ற கட்டுப்பாடு உணர்வு எழுந்தபோது, பெண்களுக்கு கர்டில் / இடைக்கச்சை அணிவிக்கும் பழக்கம் ஏற்பட்டது[10]. அதாவது, பெண்கள் குறிப்பிட்டவர்களால் தான் புணர முடியும், மற்றவர்களால் கூடாது என்ற நிலை ஏற்படுத்தப் பட்டது. அந்நிலையில் காதல் என்றில்லாமல், கட்டாய உடலுறவுகள், குழந்தைப் பிறப்புகள் தாம் இருந்தன. மேலும், கருவுற்ற பெண்கள், கருக்கலைப்புச் செய்யக் கூடாது என்ற கட்டாயம் இருந்ததால், பல நேரங்களில், தந்தை யார் என்று தெரியாமல், கன்னிப்பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். கருக்கலைப்பு / அபார்ஷண் செய்யப்பட்டிருந்தால், மேரியினால் ஏசுவைப் பெற்றெடுத்திருந்திருக்க முடியாது என்ற நிலையை, கத்தோலிக்கக் கிருத்துவம் நன்றாகவே அறிந்திருந்தது. அவை தான் “கான்வென்டில்” பாதுகாப்பாக வளர்க்கப் பட்டனர்.  இதனால், பெண்களின் கற்பின் நிலைப்பாடு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 Gay and Lesbian priests

ஏசுவின் மனைவியர், கன்னியாஸ்திரிக்கள், தந்தை-அறியா குழந்தைகள்: “கான்வென்ட்” என்ற குழந்தைகள் வளர்க்கப்படும் இடம், மடாலய குருமார்கள் மற்றும் கன்னியாஸ்திரிக்கள் வாழும் மடாலாயங்கள் மற்றும் இடங்களுக்கு அருகிலேயே அமைந்திருந்தன[11]. அக்குழந்தைகள் அதிக நேரம் ஆண்களால் சீராடி-பாராட்டி வளர்க்கப் பட்டதால், சிறுவர்-சிறுமியர்கள் அவர்களது பாலியல் தொந்தரவுகளுக்குட்பட்டனர். போப்புகளில் பலர் குழந்தை- சிறுவர்-சிறுமியர்கள் கற்பழிப்பாளர்களாக இருந்துள்ளதை ஆங்கில ஆசிரியர்கள் தங்களது புத்தகங்களில் எடுத்துக் காட்டியுள்ளனர். இத்தகைய செல்லக் குறுபுத்தனங்கள், உடலிச்சை விளையாட்டுகள், காமக்களியாட்டங்கள் பலரை குழந்தைப் புணர்வாளர்களாக, சிறுவர்-சிறுமியர் கற்பழிப்பாளர்களாக (peophiles) மாற்றின. அதுவே பிறகு பிடோபிலியா (pedophilia) என்ற காமநோயாக மாறியது[12]. அத்தகைய பெரும்பாலான, குழந்தை-சிறுவர்-சிறுமியர் கற்ப்பழிப்பாளர்களின் கொடிய-காமக்குரூரங்களை மறைத்து அவர்கள் “புனிதர்களாக” (Saint) அறிவிக்கப் பட்டு, அவர்கள் செய்த பாலியல் குற்றங்கள் மறக்கப்பட்டன. இதனால் தான், அதிகமாக அத்தகையச் குற்றங்கள் செய்தவர்கள் பெரிய குழந்தை-சிறுவர்-சிறுமியர் காபாற்றும், போற்றும் “செயின்ட்”டுகளாக சித்திரிக்கப் பட்டு, ஞானிகளாக-முனிவர்களாக மாற்றப்பட்டனர். புனிதர் (Saint) என்று அழைக்கப் படுவது, பட்டம் கொடுப்பது முதலிய ஆர்பாட்டங்களும் தொடர்ந்தன.

 16thc-German-woodcut-Chastity-belt

காலனிய பாலியல், செக்ஸ்-அடிமை வியாபாரம், கூடா உடலுறவுகள்: போர்ச்சுகீசியர் பல நாடுகளுக்குச் சென்றபோது, தங்களை “பரிசுத்தமானவர்கள்” (people belonging to pure race) என்று கூறிக்கொண்டாலும், அந்தந்த நாடுகளிலுள்ள பெண்களுடன் புணர்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால், என்னாகும் என்ற கலப்பின சோதனைகளிலும் (miscegenation) ஈடுபட்டனர். கோவாவில் அவர்கள் ஆட்சி செய்து வந்தப்போது, அவர்கள் அத்தகைய புணைவு-கலவி சோதனைகளில் ஈடுபட்டனர். அவ்வாறு பிறந்தவர்களின் பிரிப்புகளை “காஸ்டா” (Casta) என்று குறிப்பிட்டனர். அவை பிறகு “காஸ்ட்” (caste) என்றாகியது. இதனை ஊக்குவிக்க வேண்டுமானால், ஆண்கள்-பெண்களின் நெருக்கங்களை, காமக்களியாட்டங்களை, வன்புணர்ச்சிகளையும் ஊக்குவிக்க வேண்டும். காலனிய பாலியல் ரீதியில் அடிமை வியாபாரத்தை, கடல்கொள்ளைகள் மூலம் நியாயமாக்கினர். ஒரு நாட்டில் கடத்திக் கொண்டு வந்த பெண்களை கடல் பிரயாணம் போது, எல்லோரும் அனுபவித்து விட்டு, இன்னொரு நாட்டில் இறங்கும் போது விற்று வந்தனர். இதனை பொதுவாக செய்தால், மக்கள் கேவலமாக நினைப்பர். அதனால், இறையியல் ரீதியில் செயல்படுத்தி வந்தனர். அது மக்களால் தட்டிக் கேட்க ஆரம்பித்த போது, செயின்டுகளின் மீடு ஏற்றி நியாயப் படுத்த ஆரம்பித்தனர். அவ்வாறு தோன்றிய பண்டிகைகளில், கொண்டாட்டங்களில் ஒன்றுதான், “வாலன்டைன் டே” (Valentine’s Day) என்கின்ற “காதலர் தினம்” ஆகும்[13].

 kombo-2-kirchenbuecher-DW-Vermischtes-Sydney

ஆண்-பெண் உறவு, திருமணம் முதலியவை நீர்க்கப்பட்ட விதம்: கத்தோலிக்கக் கிருத்துவம் விவாக ரத்தை (divorce) எதிர்க்கிறது, ஏனெனில், “பரிசுத்த ஆவி”, மேரியை மட்டும் புணர்ந்து குழந்தையை உண்டாக்கியது. “பரிசுத்த ஆவி” வேறெந்த பெண்ணையும் புணர்ந்து கருவுரச்செய்யவில்லை. அதுபோலவே, கணவன் – மனைவி பந்தம் பிரிக்கமுடியாதது என்றது. இதனால், அவர்கள் பிரிவது என்பது நடக்காது. அவ்வாறு பிரிந்து, சேர்ந்து கொண்டிருந்தால், பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்-தந்தை உறவுமுறைகள் பாதிக்கப் படும். இதனால், மறைமுகமாக “காதலர் தினம்” ஆதரிக்கப் பட்டது. ஒரு ஆண்- ஒரு பெண் உறவு தொடர வேண்டும், நிலைத்திருக்க வேண்டும். ஆனால், நவீனத்துவம் போன்ற கொள்கைகள் அவற்றை எதிர்த்தன. யார், யாரை வேண்டுமானாலும் புணர்ந்து கொள்ளலாம், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் கருவைக் கலைத்து விடலாம், பிரிந்தும் வாழலாம் போன்ற தளர்த்தப் பட்ட, நீர்க்கப்பட்ட இறையியல் கொள்கைகள் உருவாக்கப் பட்டன[14].

 Sexy christianity - pastor sex India.3

சமூகத்தை சீரழிக்கும் வியாபாரமாக கொண்டாடப் படும் வேலன்டைன்ஸ் தினம்: ஆரம்பத்தில் காதலர் தினம் என்றா தோரணையில் காதலர்-காதலிகள் தாம் தங்களுக்குள் மலர்களை பரிமாற்றிக் கொள்ளுதல் (exchange of flowwers) போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன[15]; பிறகு பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன; இவ்வாறு வளர்க்கப் பட்ட வாலன்டைன் டே (Valentine’s Day) தான், வாலன்டைன் கீஸ் (Valentine keys) பரிமாற்றம், வாலன்டைன் கிப்ட் (Valentine gifts) பரிமாற்றம், அழைப்பிதழ்கள் (Valentine Greetings) விநியோகம் என்று விவாக்கப்பட்டன[16]. காலனிய பண்பாட்டு ஊடுருவல், பண்பாட்டு ஆதிக்கம், கலாச்சார திணிப்பு போன்ற திட்டங்களில், உள்ளே நுழைந்து, இளம் ஆண்கள்-பெண்களை குறியாக வைத்துக் கொண்டு வளர ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலான, இந்தியர்கள் இதனை எதிர்த்தாலும், இந்நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும், பரிந்துரைக்கும், ஆதரிக்கும் குழுக்கள் தங்களது, ரகசிய திட்டத்தை மறைத்து, நக்சலைடு விரட்டல், அவர்கள் பதுங்கியுள்ள இடங்களை அறிதல், போன்ற விசயங்களில் ஈடுபடுவதாக அறிவித்துக் கொண்டனர். கோடிகளில் வியாபாரம் நடப்பதால், திணிக்கப் பட்ட அந்த வியாபாரத்தை செய்யத்தான் தயாராக இந்த நவீன காலத்தில் உள்ளனர்.

கர்டில் சாவி, இதய சாவி

கர்டில் சாவி, இதய சாவி

வேலன்டைன்ஸ்  (Valentines) மற்றும் வேலஸ்சியன்ஸ் (Valesians): வேலன்டைன்ஸ் (Valentines) என்ற குழுக்கள் ரகசிய திருமணங்கள், உடலுறவுகள் முதலியவற்றை ஆதரித்தன என்றுள்ள போது, வேலஸ்சியன்ஸ் (Valesians) என்ற இன்னொரு வித்தியாசமான குழுக்கள் அத்தகைய கூடா வன்புணர்ச்சிகளை தடுக்க ஆணுறுப்பு அறுப்பு (castration) என்ற முறை கையாளப்பட்டது. அவர்கள் வேலஸ்சியன்ஸ் (Valesians) என்றழைக்கப்பட்டனர். அதாவது ஆண்கள் சுத்தமான பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. பெண்களைக் கண்டாலே வெறுத்தொதுங்க வேண்டும் என்ற முறாஇயில் மிக்கக் கடுமையான பிரம்மச்சரியத்தைப் பின்பற்ற தங்களது ஆணுறுப்புகளை அறுத்துக் கொண்டனர் மற்றும் தீயானால் சுட்டுக் கொண்டனர். இதனை “பாப்டிஸம் பை பயர்” அதாவது நெருப்பினால் செய்து வைக்கப்படும் சடங்கு (baptism by fire) என்றழைக்கப்பட்டது. பிறகு இதனை தளர்த்தியபோது, வெறும் மொட்டையடித்துக் கொண்டால் போதும் என்ற நிலைக்கு வந்தது. இவர்களை காமத்தில், காதலில், உடலுறவில் ஈடுபடும், ஈடுபடுத்தப் படும் வேலன்டைன்ஸ் (Valentines) குழுக்களிலிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது. சுய- ஆணுறுப்பு அறுப்பு (self-castration) பற்றி லூசியன் என்பவர் விவரித்துள்ளார்[17].

© வேதபிரகாஷ்

15-02-2015

[1] Nolan, Albert. Jesus before christianity. Orbis books, 1985.

[2] Jackson, John G. Christianity Before Christ. Amer Atheist Press, 1985.

[3] Doherty, Earl. The Jesus Puzzle: Did Christianity Begin with a Mythical Christ? Challenging the Existence of an Historical Jesus. ISBN 0-9686014-0-5, 1999.

[4] இன்செஸ்ட் (incest) போன்ற தகாத உடலுறுகள் ஆதியாகமத்திலிருந்தே [1:27; 2:21-23; 4:1-2 முதலியன] விளக்கப்படுகின்றன.

[5] Hartmann, Wilfried, and Kenneth Pennington, eds. The history of medieval canon law in the classical period, 1140-1234: from Gratian to the decretals of Pope Gregory IX. Vol. 6. CUA Press, 2008.

[6] Burgwinkle, William E. Sodomy, Masculinity and Law in Medieval Literature: France and England, 1050–1230. Vol. 51. Cambridge University Press, 2004.

[7] McLaughlin, Megan. “Abominable Mingling: Father-Daughter Incest and the Law.” Medieval Feminist Forum. Vol. 24. No. 1. 1997.

[8] Archibald, Elizabeth. Incest and the medieval imagination. Oxford University Press, 2001.

[9] John J. MacNeil, The Church and the Homosexual, New York, 1985, pp.vii-xi.

[10] Francus, Marilyn. “The monstrous mother: reproductive anxiety in Swift and Pope.” Elh 61.4 (1994): 829-851.

[11] Eckenstein, Lina. Woman under monasticism: chapters on saint-lore and convent life between AD 500 and A. University press, 1896.

[12] J. C. Ayer, A Source Book for Ancient Church History from Apostolic Age to the Close of the Concilar Period, New York, 1913.

[13] https://christianityindia.wordpress.com/2015/02/14/valentines-day-or-lovers-day-the-imaginary-character-turned-marriage-priest-to-love-monger/

[14] Dening, Sarah. The mythology of sex. Macmillan USA, 1996.

[15] Lee, Ruth Webb. A history of valentines. Tuttle Pub, 1952.

[16] Brand, John. Observations on Popular Antiquities Chiefly Illustrating the Origin of Our Vulgar Customs, Ceremonies, and Supersititions. Chatto and Windus, 1900.

[17]  Ben Edward Akerrley, The X-rated Bible – An Irreverent Survey of Sex in the Scripture, American Atheist Press, Austin, Texas, USA, 1985, p.300.

வாலன்டைன்’ஸ் டே அல்லது காதலர் தினம் – கற்பனையில் உருவாக்கப்பட்டவன் தியாகியாகி, திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் ஆகி, காதலர் தினநாயகனாக மாறியது!

பிப்ரவரி 14, 2015

வாலன்டைன்’ஸ் டே அல்லது காதலர் தினம் – கற்பனையில் உருவாக்கப்பட்டவன் தியாகியாகி, திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் ஆகி, காதலர் தினநாயகனாக மாறியது!

கர்டில் சாவி, இதய சாவி

கர்டில் சாவி, இதய சாவி

இடைக்காலத்தில் 12-13 நூற்றாண்டுகளில் உருவாக்கப் பட்ட வாலன்டைன் கட்டுக்கதை: வேலன்டைன் என்று சொல்லப்படுகின்ற கிருத்துவப் பாத்திரம் [imaginery charcher created based on hagiography] ஒரு கற்பனையில் இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது[1]. அத்தகைய கற்பனை கதைகள் [legends] புனையப்பட்டபோது, வழக்கம் போல ஒருவனுக்கு மேல் இருவர் இருந்தனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது[2]. பிறகு கத்தோலிகிகக் கிருத்துவத்தின் இறையியல் சித்தாந்தத்தின் படி, “தியாகத்துவம்” [martyrdom] சேர்க்கப்படும் போது, மேலும் தியாகத்துவவியல் [martyriology] ரீதியில் கட்டுக்கதைகள் [martyrdom stories] கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. ரோம் நாட்டில் வழங்கி வந்த ஒரு கற்பனைக் கதையின்படி, இவன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கப் பட்ட வீரர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தார் என்கின்றது. இன்னொரு கதையோ, ரோமானிய அரசால் தண்டிக்கப்பட்ட கிருத்துவர்களுக்கு சாதகமாக இருந்ததால் கைது செய்யப்பட்டார் என்றிருக்கிறது. இன்னொரு கதை சிறையில் இருக்கும் போது, சிறையாளியின் மகளை நோயிலிருந்து தனது அதிசயத்தினால் காப்பாற்றினான் என்று நீட்டுகிறது. இன்னுமொரு கதையோ, தான் கொல்லப்படுவதற்கு முன்பு, அவளுக்கு காதல் கடிதம் எழுதியதாக சேர்த்துச் சொல்கிறது. உண்மையில் கிளாடியஸ் என்கின்ற அந்த அரசன் அத்தகைய ஆணை எதையும் போடவில்லையாம்![3] கட்டுக்கதைக்கு என்ன ஆதாரமா வேண்டிக்கிடக்கிறது? ரோமில் மட்டும் அப்பெயரைக் கொண்டவர்கள் ஏழு பேர் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

This illustration from 1250 shows Saint Valentine curing an epileptic.

This illustration from 1250 shows Saint Valentine curing an epileptic.

பாலியல் வியாதி கடவுள், காதலர் தின துறவியானது: கிளாடியஸ் – II [Claudius II] கோத்துகள் [Goths] என்பவர்களை வெற்றிக் கொண்ட பிறகு, அவர்களது பெண்களில் இரண்டு அல்லது மூன்று பேர்களுக்கு மேலாக திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஆணையிட்டானாம்[4]. அக்கதையுடன் சேர்த்துதான், கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கப் பட்ட வீரர்களுக்கு ரகசியமாக கல்யாணம் செய்து வைத்தார் என்ற புதிய கதையை கிருத்துவர்கள் இடைக்காலத்தில் தயாரித்தார்கள்[5]. போர்களில் வென்றவர்கள், வெற்றிக் கொண்டவர்களின் பெண்களைத் தூக்கிக் / கடத்திக் கொண்டு போவது, கற்பழிப்பது சகஜமாகவே இருந்து வந்துள்ளன. பெண்கள் அவர்களுக்கு எப்பழுதுமே காமத்தை அடக்கும் பொருளாகவே இருந்து வந்துள்ளனர். அதனால், இடைக்காலத்தில் ஆண்களுக்கு சிபிலிஸ் / மேகவியாதி அதிகமாக வந்தது. அதனைக் குணப்படுத்த பலவாறு முயன்றனர். அப்பொழுது, ஒவ்வொரு வியாதியை உண்டாக்குவதும் ஒரு கடவுள் / தேவதை, அதனைப் போகுவதும் ஒரு கடவுள் / தேவதை என்று நம்பி வந்தனர். ஆகவே, பெண்களுடன் சம்பந்தப்பட்ட இந்த வியாதி, வேலன்டைனுடன் சேர்க்கப் பட்டது. பெண்களுடன் சேருவது, புனைவது என்பதனை காதல் என்று உருவகமாக்கினர். வேலன்டைன்ஸ் டே [Valentine’s Day] மற்றும் வெனிரல் டிஸ்ஸீஸ் [Vinereal Disease] இரண்டயுமே செல்லமாக “VD” என்றே அழைத்து வந்தனர். சுமார் 1500 CE வாக்கில் தான் ஐரோப்பா இந்நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அறிந்துகொண்டார்கள். இருப்பினும், அதனை உண்டாக்கும் கிருமியான “ட்ரெபோனெமோ பல்லிடம்” 1905ல் தான் கண்டறியப்பட்டது. பால் ஹெர்லிச் என்பவர் அர்சனிக் கலவையிலான மருந்து மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கும் மூறையினை கண்டுபிடித்தார்.

விடியும், வேலன்டைன் தினமும்

விடியும், வேலன்டைன் தினமும்

பல வாலன்டைன்கள், பல கொண்டாடும் தினங்கள்: கிருத்துவம் இடைக்காலத்தில் ஒரு ஏற்படுத்தப் பட்ட மதமாக உருவாகியபோது, பற்பல சித்தாந்தங்களுடன் அதற்கேற்ற ஆதாரங்களை தயாரிக்க ஆரம்பித்தார்கள்[6]. அதில் வாலன்டைன் சிக்கியபோது, ஐரோப்பா, அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், கலாச்சாரங்களில் இருந்த கதைகளுடன், இவர்களது கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்[7]. இடத்திற்கேற்ற முறையில் மாற்றியும் கொண்டார்கள். இத்தகையக் குழப்பங்களினால், பிறகு இது சர்ச்சுகளின் மீது திணிக்கப்பட்டபோது, கொண்டாடும் தினங்களும் மாறின. கிழக்கத்தைய ஆசார சர்ச் பிரிவுகள் இப்பண்டிகையை ஜூலை 6 மற்றும் ஜூலை 30 தேதிகளில் கொண்டாடுகின்றன. பிரேசிலில் “டயா டி சாவோ வேலன்டிம்” [Dia de São Valentim] என்று ஜூன்.12ம் தேதியில் கொண்டாடுகிறது.  1969 ஆம் ஆண்டு வரை கத்தோலிக்கக் கிருத்துவம் மட்டும் பதினோரு வாலண்டைன் தினங்களை அங்கீகரித்திருந்தது.பிப்ரவரி 12 பிறகு ஏற்படுத்தப் படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் 18ம் நூற்றாண்டில் தான், காதலர்கள் தங்களது காதலை வேலிப்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் பூக்கள், பரிசுகள், அழைப்பிதழ்கள் பரிமாற்றுக் கொள்வது ஆரம்பித்தது. வேலன்டைனின் எலும்புகூடுகளும் அதிகமாகவே இருக்கின்றன; மண்டையோடுகள்-எலும்புகள் முதலியன அதைவிட அதிகமாவே இருக்கின்றன. வனுடைய சாமாதிகள் ரோம் (ரோமில் பல இடங்கள்); டப்லின், அயர்லாந்து; ஆப்பிரிக்கா; என்று பல நாடுகளில் உள்ளன. எனவே பல வாலன்டைன்கள், பல கொண்டாடும் தினங்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விசயமே இல்லை.

விடி - சரித்திரம்

விடி – சரித்திரம்

வேலன்டைன் வியாதியும், காக்காய் வலிப்பும், தொழு நோயும்: வேலன்டைன் வியாதி என்று ஒரு வியாதியே உள்ளதாக கதைகள் கூறுகின்றன, அதாவது, காக்காய் வலிப்பு நோயுக்கு அந்த பெயர் கொடுக்கப் பட்டது. ஏனெனில், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பல பெண்களைப் புனைந்து பாலியல் நோய் கொண்டவர்கள், வேலன்டைன் போலவே பாதிக்கப்படுவார்கள் என்று பாரம்பரியமாக சொல்லப்பட்ட கதைகள் இருந்தன. சிபிலிஸ் / மேகவியாதியும் வரும் என்று அதையும் “கடவுள் நோய் / கடவுள் கொடுத்த நோய்” என்று சொல்லப்பட்டது. இதெல்லாம் இடைக்காலத்தில் கிருத்துவ நம்பிக்கைகளாக இருந்தன. இவ்வியாதிகளை போக வேண்டுமானால், மந்திரிக்கப்படவேண்டும், இறந்தவர்களின் சமாதிகளுக்குச் சென்று, அங்குள்ள எலும்புகளைத் தொடவேண்டும், மண்டையோட்டில் எதாவது ஒரு திரவியத்தை ஊற்றிக் குடிக்க வேண்டும், மண்ணை பூசிக்கொள்ள வேண்டும், அப்படி செய்தால், நோய் நீங்கி விடும் என்பது அவர்களுக்கு நம்பிக்கையாகின. அதனால் தான், இப்பொழுது, வேலன்டைன் நினைவாக, சிறுவர்-சிறுமிகளுக்கு தாயத்துக் கட்டுதல், போன்று செய்தால் வலிப்பு நோய் வராமல் இருக்கும் நம்பப்படுகிறது[8]. இது ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இன்றும் வழக்கமாக இருக்கின்றது. அங்கு அந்த வியாதி வரக்கூடாது என்றால், சிறுவர்-சிறுமிகளின் கைகளில் தங்கசாவியைக் கொடுத்து பூஜை செய்கிறார்கள். அப்படி செய்தால், அவர்களுக்கு அத்தகைய நோய்கள் வராது என்பது நம்பிக்கையாக இருக்கிறது[9].

ஜாக்கிரதை விடி- பெண்கள்

ஜாக்கிரதை விடி- பெண்கள்

பூட்டும்சாவியும்வாலன்டைன் சாவிகளும்: “பூட்டு-சாவி” உருவகம் கிருத்துவத்தில் ஆண்-பெண் உறுப்புகள் இணைப்புடன் சம்பந்தப்படுத்தி வைத்தார்கள். அக்காலத்தில் பெண்களின் கற்ப்பைக் காப்பதற்கு, இடுப்பில் “கர்டில்” கட்டி, பூட்டு போட்டு வைப்பார்கள். அதுமட்டுமல்லாது, தனது பெண்களை அடுத்தவர்கள் புனையாமல் இருப்பதற்கும் அம்முறை கையாளப்பட்டது. வாலன்டைன் பெண்களை பலதார முறையில் ஈடுபடுத்தியதால், பாலியல் நோய்கள் உண்டாகின. இதனால், பெண்களுகு பூட்டுப் போட ஆரம்பித்தனர். சாவியை பத்திரமாகவைத்துக் கொள்வார்கள். இதனால், காதலர்களின் இதயங்கள் உடைந்தன, அதற்கு காரணம் வாலன்டைன் என்று கதைகளை உருவாக்கினர். இதயங்களைப் பிளப்பார் என்று கதைகட்டினர். இதை விளக்கும் பல கதை புத்தகங்கள், ஜோக்குகள் அதிகமாகவே இருக்கின்றன. பிறகு வியாதி-உருவகத்திலிருந்து, வாலன்டைனை உயர்த்தி எடுத்துச் செல்லும் முயற்சிகளில், காதலர்களுடன் 18-19ம் நூற்றாண்டுகளில் இணைத்தனர். அப்பொழுது, வாலன்டைன் காதலர்களது இதயங்களைத் திறப்பார் என்று கதையினை மாற்றினர். அதற்கும் சாவிகள் தேவைப்பட்டன. . இதயத்தைத் திறக்கும் சாவி வேலன்டைனிடம் இருந்தது என்று நம்பினார்கள்!

வேலன்டைன் வியாதி என்பது சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்

வேலன்டைன் வியாதி என்பது சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்

வாலன்டைன் சிறுவர்சிறுமிகளுடன் தொடர்பு ஏற்படுத்தப் பட்டது:  சிறுவர்-சிறுமிகளுடன் வாலன்டைனை இணைக்க முற்பட்டனர், இதற்கு ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் இருந்த பழக்கம் உதவியது. மேலே குறிப்பிடப் பட்டபடி, காக்காய் வலிப்பு வருபவர்களுக்கு இரும்பினால் செய்யப் பட்ட பொருட்கள், பொதுவாக சாவிகள் கொடுத்தால், அதனைப் பிடித்துக் கொண்டதும் வலிப்பு நிற்பதைப் பார்த்திருக்கின்றனர். ஆனால், காதல் நோய், காமநோய் என்ற போது, இரும்புச்சாவியை தங்கச்சாவியாக மாற்றினர். சிறுவர்-சிறுமிகளின் கைகளில் தங்கசாவியைக் கொடுத்து பூஜை பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள். அப்படி செய்தால், அவர்களுக்கு அத்தகைய நோய்கள் வராது என்பது நம்பிக்கையாக இருக்கிறது[10]. இப்பண்டிகை பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

© வேதபிரகாஷ்

14-02-2015

[1] Ansgar, 1986, p. 59. It originated in the 1797 edition ofKemmish’s Annual, according to Frank Staff, The Valentine and Its Origins (London, 1969), p. 122.

[2] செயின் பேட் அல்லது பேடே, தாமஸ் போன்ற கட்டுக்கதைகளுடன் ஒத்துப்போவதும், சில ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

[3] Another embellishment is that Saint Valentine would have performed clandestine Christian weddings for soldiers who were forbidden to marry. However, this supposed marriage ban was never issued, and in fact Claudius II told his soldiers to take two or three women for themselves after his victory over the Goths.

  1. David James Harkness, Legends and Lore: Southerns Indians Flowers Holidays, vol. XL, No. 2, April 1961, University of Tennessee Newsletter (bimonthly), p. 15.

[5] Max L. Christensen, Heroes and Saints: More Stories of People Who Made a Difference, 1997, Westminster John Knox Press. Chapter “The First Valentine”, p. 25 ISBN 066425702X.

[6][6] கிருஸ்து இருந்தற்கான ஆதாரங்களில் பெரும்பாலும், இக்காலத்தில் உருவாக்கபட்டவைதான், அதனால் தான் இப்பொழுது, அவற்றின் தேதிகளை விஞ்ஞானமுறையில் சோதனைக்கூடங்களில் ஆராயும் போது 13-14 நூற்றாண்டுகள் என்று தேதிகள் வருகின்றன. இதில் பிரபலமான “டூரின் சௌர்ட்”ம் அடங்கும்.

[7] உள்ளூர் கதைகளைச் சேர்த்துக் கொண்டு, பிறகு தங்களது கதைகளிலிருந்து தான், அவை உண்டாகின என்று பிறகு மாற்றிக் கூறும், எழுதும் முறையை, கிருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வழக்கனாகக் கொண்டுள்ளனர்.

[8] In ancient Rome, epilepsy was known as the Morbus Comitialis (‘disease of the assembly hall’) and was seen as a curse from the gods. In northern Italy, epilepsy was once traditionally known as Saint Valentine’s malady. Saint Valentine is invoked for healing as well as love. He protects against fainting and is requested to heal epilepsy and other seizure disorders. In northern Italy, epilepsy was once traditionally known as Saint Valentine’s Malady.

[9] While Saint Valentine’s keys are traditionally gifted as a romantic symbol and an invitation to unlock the giver’s heart, Saint Valentine is also a patron saint of epilepsy. The belief that he could perform miraculous cures and heal the condition – also known as ‘Saint Valentine’s illness’ or ‘Saint Valentine’s affliction’ – was once common in southern Germany, eastern Switzerland, Austria, and northern Italy. To this day, a special ceremony where children are given small golden keys to ward off epilepsy is held at the Oratorio di San Giorgio, a small chapel in Monselice, Padua, on 14 February each year.

[10] While Saint Valentine’s keys are traditionally gifted as a romantic symbol and an invitation to unlock the giver’s heart, Saint Valentine is also a patron saint of epilepsy. The belief that he could perform miraculous cures and heal the condition – also known as ‘Saint Valentine’s illness’ or ‘Saint Valentine’s affliction’ – was once common in southern Germany, eastern Switzerland, Austria, and northern Italy. To this day, a special ceremony where children are given small golden keys to ward off epilepsy is held at the Oratorio di San Giorgio, a small chapel in Monselice, Padua, on 14 February each year.