Posts Tagged ‘கருணை இல்லம்’

அன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி!

ஜூலை 21, 2016

அன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி!

Girl molested by a christian father-21_07_2016_011_024

அன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள வளவன்புரத்தில் அன்னை தெரசா கருணை இல்லம் [Annai Teresa Home and Orphanag] என்கின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இல்ல நிர்வாகியை போலீஸார் 20-07-2016 அன்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்[1]. அதாவது ராஜா டேவின் ஒரு பிடோபைல், குழந்தை கற்பழிப்பாளி, சிறுவர்-சிறுமியரை புணரும் ஒரு மிருகம். இப்படி செய்தியைப் படிப்பதே துக்கமாக இருக்கிறது. அன்னை தெரசா பெயரில், இப்படியொரு இல்லத்தில், பாஸ்டர் பாலியல் வேலையில் இறங்கி விட்டர் போலும். போதாகுறைக்கு, தெரசாவைப் பற்றி கூடா ஏடாகூடமான செய்திகள் வந்துள்ளன. மெக்குரே, மிஷனரீஸ் ஆப் சாரிடீஸ் நிறுவனத்தின் ஆன்மீக இயக்குனர் [Pedophile Fr. McGuire: spiritual director of Mother Teresa and her Missionaries of Charity], ஆனால், 1960களிலேயே பிடோபைல் வல்லுனர். அதாவது சிறுவர்-சிறுமிகளை விட்டு வைக்கமாட்டார்[2]. பிறகு 2009ல் 25 வருடம் சிறைதண்டனை பெற்றார்[3]. ஆனால், தெரசா அம்மையார், இந்த ஆளை ஆதரித்துதான் திகைப்பான விசயம்.

Mother Teresa Defended Pedophile Priest

தெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர்.

Pedophile Fr. McGuire - spiritual director of Mother Teresa and her Missionaries of Charity

தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தஹால் மாட்டிக் கொண்ட ராஜா டேவிட்: பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதி சிவக்கொல்லையைச் சேர்ந்தவர் செ. ராஜா டேவிட் (47) என்ற மத போதகர்[4]. இவர் பட்டுக்கோட்டையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 13 ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர் /  25 பேர் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகின்றனர் என்கிறது தினத்தந்தி[5].. எத்தனை பேர் இருந்தால், என்ன, ராஜா டேவிட்டுக்கு சந்தோஷம் தான் போலிருக்கிறது. இவர்களில் 4 பேருக்கு கடந்த ஜூலை 15-ம் இரவு ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது[6]. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டனர்[7]. மத போதகர், பாதிரி, பாஸ்டர் என்றெல்லாம் சொல்லி விவரித்தாலும், செ. ராஜா டேவிட் என்ன லகவலைப்படப் போகிறாரா.

Raja Daviud, pastor arrested 20-07-2016

பாதிக்கப்பட்ட மாணவி புகார் மற்றும் விவரங்கள் கொடுத்தது: 20-07-2016 அன்று புதன்கிழமை 6 வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் எங்கள் இல்லத்தில் காப்பாளராக உள்ள பாஸ்டர் ராஜா டேவிட் என்பவர் எனக்கு மற்றும் என்னைவிட வயது குறைவான 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்[8]. உடனே போலீசார் சென்று அங்கு விசாரித்தனர், புகாரையடுத்து மாணவிகளை மருத்துவ பரிசோதனை செய்தனர் அரசு மருத்துவனை மருத்துவர்கள்[9]. சோதனைக்குப் பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் சொந்தரசவு செய்தது தெரிய வந்தது. மாணவிகள் இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராஜா டேவிட்டை  புதன்கிழமை இரவு கைது செய்தனர்[10].

cover 011112.indd

மற்ற ஆதிக்கப்பட்ட மாணவியர்களின் கதி என்ன?: இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்[11]. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[12]. அப்படி என்றால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஆனால், எந்த விதத்தில், ஏன், எப்படி பரபரப்பு ஏற்பட்டது என்று ஊடகங்கங்கள் விளக்கவில்லை. சுமார் ஐந்தாறு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், விசயத்தை இவ்வளவுதான் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் இத்தகைய பாலியல் வன்மங்கள் நடந்தாலும், எங்கோ, சிறியதாக செய்தியை போட்டு விட்டு, அமைதியாகி விடுவர் போலும்.

© வேதபிரகாஷ்

21-07-2016

[1] தினமலர், சிறுமி பலாத்காரம் : பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016

[2] http://www.traditioninaction.org/HotTopics/a01r_McGuire_Galitzin.html

[3] Catching up with the case of Mother Teresa’s pedophile spiritual director, here is the latest news. On February 12, 2009, former Jesuit celebrity Fr. Donald McGuire received 25 years in prison on abuse charges. In this trial McGuire was punished for abusing just one boy repeatedly on religious retreats http://www.traditioninaction.org/HotTopics/a01u_McGuireSentenced_Galitzin.html

[4] http://www.dailythanthi.com/News/State/2016/07/21111005/In-pattukottai-students-Sexual-harassment-Priest-arrested.vpf

[5]  தினததந்தி, பட்டுகோட்டையில் கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST

[6] தினமணி, ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது, By பட்டுக்கோட்டை, First Published : 21 July 2016 06:53 AM IST

[7]http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2016/07/21/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/article3539972.ece

[8]  நக்கீரன், கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஸ்டர் கைது, பதிவு செய்த நாள் : 20, ஜூலை 2016 (23:40 IST) ; மாற்றம் செய்த நாள் :20, ஜூலை 2016 (23:40 IST)  – இரா.பகத்சிங்

[9] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=169509

[10] தமிழ்.வெப்துனியா, சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார், வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)

[11] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/priest-raped-school-girl-116072100022_1.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1568085&Print=1; http://www.dinamalar.com/news_detail.asp?id=1568667

 

கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (2)

மார்ச் 20, 2014

கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (2)

 

ஏசுவின் பெயரால் மோசடி - ஏசுதாஸ், ஜான் பிரபாகரன், பால் கிளாட்சன்

ஏசுவின் பெயரால் மோசடி – ஏசுதாஸ், ஜான் பிரபாகரன், பால் கிளாட்சன்

இதன் முதல் பகுதி இங்கு பதிவிடப்பட்டுள்ளது[1]. டா. பால் கிளாட்சன் “ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ்” என்ற தர்மஸ்தாபனம் சென்னையில் 1993ல் எப்படி துவங்கினார்[2], அது ஜெருஸியா பவுன்டேஷன் கீழ் அனாதை மற்றும் இதர குழந்தைகளுக்காக செயல்பட்டது, “கருணை இல்லம்” என்ற பெயரில் பாளையங்கோட்டையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது, 2007ல் சென்னையில் 12 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது, இந்திய டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது (REG NO-921/08)[3] முதலிய விவரங்கள் முன்னமே கொடுக்கப்பட்டன. ஆனால், இணைதளத்தில் “வியாபார நிறுவனம்” என்ற முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. தாங்கள் விற்கின்ற பொருட்கள்: ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு, உணவு, மருத்துவ உதவி, இருக்க இடம் மற்றும் விதவைகளுக்கு ஆதரவு, என்றுதான் படங்களுடன் போட்டுக் கொண்டது. ஆக, இத்தகைய “சேவை” என்பதெல்லாம், வியாபாரம் தான் என்று நன்றாகவே நிரூபித்துக் கொண்டனர். இப்பின்னணியில், ஆவடி டேவிட் எவ்வாறு ஏமாற்றப் பட்டார் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

 

எச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் விளம்பரம் தெலுங்கில்

எச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் விளம்பரம் தெலுங்கில்

புனிதமான பணமோசடியும், கோடிகளில் நடத்தப் பட்ட ஊழலும்: ஹெவன்லி இன்டர் டினாமினல் மிஷம் டிரஸ்ட் சார்பில் ஏகப்பட்ட முகவர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப் பட்டன. வவுச்சர் / ரசீது புத்தகங்களும் அச்சிடப்பட்டன, வசூலிக்கும் முகவர்களுக்குக் கொடுக்கப் பட்டன. ஆந்திராவில் உள்ளூர் செய்திதாள்களில் விளம்பரங்கள் கொடுக்கப் பட்டன. பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள் என்று பெரிய ஆட்கள் சம்மந்தப் பட்டதால், சர்ச்சுகளுக்கு வரும்போது, அவர்களே, பென்சன், மகளிர் முதலியவற்றைப் பற்றிய திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, பரிந்துரைத்தனர். மதத்தலைவர்கள் சொன்னார்களே என்று பணத்தைக் கட்டினர். தவணை முறையிலும் வசூலிக்கப் பட்டதால், தாராளமாகவே கொடுத்தனர். வழக்கம்போல, முதல் சில மாதங்களில் செக்குகள் கொடுக்கப் பட்டன, காசும் வந்தது. ஆனால், பிறகு செக்குகள் பவுன்ஸ் ஆகின, கேட்டால் “இதோ வரும்” என்று சொல்லி சமாளித்தனர். “கொஞ்சம் பொறுங்கள், பணம் வந்துவிடும், இப்பொழுது பிரச்சினை செய்தால், நம்முடைய மானம் போய் விடும்”, என்றும் வேண்டிக் கொண்டிருப்பார்கள். பிறகு மிரட்டியும் இருப்பார்கள். பெரிய ஆட்கள் எல்லோருமே மதத்தலைவர்கள் முதலில் மக்களே அமைதியாக இருந்தனர், பிறகு மோசடி என்றதும் கொதித்து எழுந்தனர், புக்கார்கள் கொடுக்கப் பட்டன. அரக்கோணத்தைச் சேர்ந்த பிஷப் ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தபோது மற்றவர்களும் புகார் கொடுத்தனர்.

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013

டேவிட் கொடுத்த புகாரின் படி உள்ள விவரங்கள் (தினகரன், மார்ச்.2014): சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக பால் கிளாட்சன் என்ற கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா நகர் மேற்கு பொன்னி காலனியை  சேர்ந்தவர் டேவிட் (72). இவர் சென்னை போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், “ஆவடியில் நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாசரேத் கலை அறிவியல் கல்லூரி தலைவராக உள்ளேன். புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த  பால் கிளாட்சன் (45) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் ஒரு மத போதகர். இவர் அறக்கட்டளை தலைவராகவும் இருந்தார். கிளாட்சன்  நடத்தும் பக்தி கூட்டங்களுக்கு சென்று வந்தேன். அவர் மீது எனக்கு  மரியாதை ஏற்பட்டது. வெளிநாடுகளில் உள்ள பலரிடம் தொடர்பு  இருப்பதாகவும், அவர்கள் மூலம் கல்வி நிறுவனத்திற்கு நன்கொடை பெற்று  தருவதாகவும் பால் கிளாட்சன் ஆசை வார்த்தை கூறினார். அதற்கு ஒரு  குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தர வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். முதற்கட்டமாக  ரூ. 5 கோடி பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 லட்சம்  பெற்றார். படிப்படியாக  ரூ. 25 லட்சம் வரை என்னிடம் இருந்து பெற்றார்.  ஆனால், உறுதி அளித்தபடி பணம் பெற்றுத் தரவில்லை. நான் கொடுத்த  பணத்தை கேட்டபோது, உயிருடன் போகமாட்டாய் என்று மிரட்டல்  விடுத்தார்[4]. எனவே, சம்பந்தப்பட்ட பால் கிளாட்சன் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்”, என்று கூறி இருந்தார். இதுகுறித்து, போலீசார் உரிய  நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி டேவிட் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார்  விசாரணை நடத்தினர். அதில், பால் கிளாட்சன் மோசடி செய்தது உறுதி  செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்[5].

 

எச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் அடையாள அட்டை ரசீது

எச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் அடையாள அட்டை ரசீது

இது  குறித்து  போலீஸ்  தரப்பில்  கூறப்பட்டதாவது[6] (தினமணி, மார்ச்.2014): அண்ணா நகர் மேற்கு பொன்னி காலனியைச் சேர்ந்தவர் எஸ்.டேவிட் (72). இவர் ஆவடியில் மெட்ரிக் பள்ளியையும், கல்லூரியையும் நடத்தி வருகிறார். இவரிடம் புழலைச் சேர்ந்த பால் கிளாட்சன் (45) சில மாதங்களுக்கு முன் அறிமுகமானார். இவர் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வருகிறார். இந்நிலையில் கிளாட்சன் தனக்கு வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலம் டேவிட்டின் கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடையாக நிதி பெற்றுத் தர முடியும் என்றும், அதற்கு கமிஷனாக தனக்கு பணம் தர வேண்டும் என கூறினாராம். டேவிட் அதற்கு கமிஷன் தருவதாக ஒப்புகொண்டாராம். இதற்கிடையே உடனடியாக ரூ.5 கோடி நன்கொடை பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் கமிஷன் வேண்டும் என கிளாட்சன் கேட்டதாக தெரிகிறது. டேவிட்டும் பணம் கொடுத்துள்ளார்[7]. இந்தப் பணம் கொடுத்த சில நாள்களில் கிளாட்சன் ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்துக்கான காசோலையை டேவிட்டிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4

சீனாவின்  கோல்ட்  யூனிட்  நிறுவனத்தில் முதலீடு: அதன்பின்னர், சீனாவின் கோல்ட் யூனிட் நிறுவனத்தின் சார்பில் வருமான வரித்துறைக்கு கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இந்தப் பணத்தைக் கொடுத்தால் ரூ.10 கோடி தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய டேவிட் மேலும் ரூ.15 லட்சத்தையும் கொடுத்துள்ளார். கிளாட்சன் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியதில், அந்த கணக்கில் பணமில்லை என காசோலை திரும்பி வந்தது. மேலும் கிளாட்சன் கூறிய சீனா கோல்ட் யூனிட் குறித்து விசாரித்ததில், அது போலியானது என்பதும், கோல்ட் யூனிட் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டது விட்டதும் தெரிந்தது.  மேலும் அவர் சீனாவின் தங்க யூனிட் பத்திரம் என்று கொடுத்த பத்திரமும், தற்போது மதிப்பு இல்லாதது என்று சீனாவின் மத்திய வங்கி தெரிவித்து விட்டது. எனவே அதுவும் போலி[8]. இதனால், கொடுத்த பணத்தை திரும்பித் தருமாறு டேவிட் கேட்டாராம். ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கிளாட்சன் இழுத்தடித்தாராம். இந்த நிலையில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவில் டேவிட் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கிளாட்சனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதுவும் ஏசுதாஸின் ஆப்ரோ மைக்ரோ பைனான்ஸும் ஒரேமாதிரியான யுக்தியைக் கையாண்டுள்ளததை அறிந்து கொள்ளலாம். ரிசர்வ் பேங் விதிமுறைகளை மீறி இக்கிருத்துவ நிதிநிறுவனங்கள் எப்படி ஈடுபட்டன என்பது வியப்பாகத்தான் உள்ளது.

 

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4

டேவிட்டின் அறியாமை வியப்பை அளிக்கிறது: பள்ளி-கல்லூரி என்று நடத்தி வரும் டேவிட்டுக்கு பால் கிளாட்சன் பற்றி ஒன்றும் தெரியாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிருத்துவப் பள்ளி நிறுவனங்களை நடத்திவரும் இவரே பலமுறை டொனேஷன்கள் வாங்கியிருப்பார். எனவே, அதைப் பற்றியெல்லாம், இவருக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்நிய நாடுகளிலிருந்து வரும் என்பதால், ஆசைப் பட்டார் என்பதிலும் வியப்பாக இருக்கிறது. ஏனெனில், கிருத்தர்களுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாத விசயம் இல்லை. இருப்பினும் லட்சங்களைக் கொடுத்தார், என்றால், என்றால் ஒன்று ஆசைப்பட்டு கோடிகளை அள்ளவேண்டும் என்று லட்சங்களை கமிஷனாகக் கொடுத்தார் அல்லது அவரும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த கிருத்து பணமோசடி வலையில் சிக்கியிருக்கலாம். மற்றவர்களைப் போல, இவரிடம் சாம-தான-பேத-தண்டம் முறைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. வேறுவழியில்லை எனும் போது, போலீசிடம் புகார் கொடுத்தார் என்றும் தெரிகிறது.

 

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு நுழைந்த கிருத்துவ நிதிமோசடியின் பின்னணி என்ன?: ராஜசேகர ரெட்டி 2009ல் விபத்தில் திடீரென்று இறந்தபோது, அவர் பணத்தை எங்கு வைத்திருந்தார் என்று பேச்செழுந்தது. சோனியாவிடம் விசுவாசமாக இருந்த இவர் காலமானதும், சோனியாவுக்கும் ரெட்டி குடும்பத்திற்கும் சரியான உறவில்லாமல், எதிர்ப்பாகவும் மாறியது. மகன் ஜெகன்மோஹன் மீது சிபிஐ, வருமானத்துறை போன்றவற்றின் மூலமாக ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டன. அந்நிலையில் கிருத்துவர்களின் சர்ச்சுகள் கட்டும் வேலையும் அதிகமாகியது. எனவே, திடீரென்று அவ்வாறு கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகின்றது. அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனரிகளின் நடமாட்டம் ஆந்திரா-ஒரிஸா கட ற்கரைப் பகுதிகளில் அதிகமாகின. அவர்கள் “சர்ச்-பிளான்டிங்”கிற்காக பணமும் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால், அந்நிய செலாவணி, வருமானத்துறை முதலியவற்றை ஈடுகட்ட புதிய-புதிய டிரஸ்டுகள் மற்றும் கம்பெனி சட்டத்தின் கீழ் பிவி 25ன் கீழ் லாபம் எதிர்பார்க்காத பிரைவேட் கம்பனிகளும் முளைத்தன. இவை மற்றும் டிரஸ்டுகள் பண பரிமாற்றம், புழக்கம் மற்றும் செலவீனங்களைக் காட்டுவதற்காக உபயோகப் படுத்தப் பட்டன. இந்நிலையில் தான் மேற்குறிப்பிடப்பட்ட கிருத்துவ நிறுவனங்கள் நிதிமோசடிகளில் இறங்கியது. கோடிகளைப் பெற்ற குற்றங்களை மறைக்க, ஒருவேளை, முன்னரே குறிப்பிடப் பட்டபடி பல்வேறு அடுக்குகள் கொண்ட விற்பனைமுறை [Multi-Level Marketing Schemes (MLM)], வலைபோன்ற வியாபரமுறை []Network Marketing (NWM) மற்றும் பணம் இரட்டிப்பு என்ற போர்வைகளில் நடத்தப் பட்டன[9]. இப்பொழுது, நன்கொடைக்கு கமிஷன் என்ற புதியமுறை, பால் கிளாட்சன் மூலம் தெரிய வருகிறது. இதுவும் வருமானவரித்துறையினரை ஏமாற்றுவதற்கு உபயோகிக்கப் பட்டது எனலாம்.

 

 

© வேதபிரகாஷ்

20-03-2014


[3] JESUS LOVES MINISTRIES is a charitable trust organization based in Chennai, and this dedicated trust was founded by Dr. Paul Gladson in the year 1993. It was laid by the Jerushiya foundation and is functioning sucessfully with an  aim to make lives better for the orphan and helpless children. Dr.Paul Gladson, who is the current chairman started the good work and has motivated others to come forward and help in providing basic amenities to these little innocent creatures that have no one but us to help them grow into responsible and gentle citizens of our society. The trust began in PALAYANKOTTAI  in the name of “KARUNAILLAM” with twenty-eight children initially. After its smooth functioning a second branch was started at THIRUNELVELI in the year 1997, with sixty-two children and after ten years a third branch was established at CHENNAI  in 2007 with twelve children. It is registered under the INDIAN TRUSTS ACT 1882, REG NO-921/08. We are a trustworthy organization and truly work for the emancipation of these deserted children and poor, needy, lonely widows and protect them from all kinds of exploitation which they may face if not helped. Our motto is to deliver the needy when they cry, & help the poor when they need help. The Trust is managed by five trustees, Mr.Paul Gladson, Mr. Julius.G.Raja Singh, Mr.J. Inbarasi , Mr.Sigamani and Mr.Grace Jothimozhi who are making best efforts to provide these underprivileged children with all basic requirements as food, shelter, education, medical aid, entertainment & above all hope to live.

http://www.made-from-india.com/showroom/jerushiya-foundation/products/

[4] தினகரன், வெளிநாட்டுநிதிபெற்றுதருவதாககல்விநிறுவனஅதிபரிடம்ரூ.25 லட்சம்மோசடி: மதபோதகர்கைது, சென்னை, 19-03-2014.

[7]  தினமணி, கல்லூரிநிர்வாகியிடம்ரூ.25 லட்சம்மோசடி, By dn, சென்னை

First Published : 19 March 2014 03:39 AM IST