Posts Tagged ‘கன்னிமார் செல்ஸ்’

இன்னுமொரு கன்னியாஸ்திரி மர்மமான முறையில் இறப்பு

ஏப்ரல் 1, 2013

இன்னுமொரு கன்னியாஸ்திரி மர்மமான முறையில் இறப்பு

கன்னியாஸ்திரிக்கள் குற்றங்களுக்கு ட் படுவது: கன்னியாஸ்திக்கள் சமீபகாலமாக மர்ம முறையில் இறப்பது, உடல் கிடப்பது, முதலியன சகஜமாக ஆகிவிட்டது. அயல்நாட்டில் நடப்பது போல, அவர்கள் இந்தியாவிலும் நடந்து கொள்வது, நடத்தப்படுவது கிருத்துவ நிர்வாக சீர்கேட்டைத்தான் காட்டுகிறது. அபயா கொலை வழக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஜார்க்கெண்டிலும் ஒரு கன்னியாஸ்திரி – வல்சா ஜான்[1] மாபியாவுடன் சம்பந்தப்பட்டதால்[2] கொலை செய்யப்பட்டாள்[3]. மேரி ஆன்சி என்ற கன்னியாஸ்திரியின் உடல் பூங்குளம் என்ற கான்வென்டின் பூமிக்கடியில் உள்ள நீர்த்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது (18-08-2011). ஆனால், அதன் மூடியை யாரோ நகர்த்தியுள்ளது தெரிகிறது. அத்தகைய முறை அபயா வழக்கை நினைவு படுத்துகிறது[4]. முதலில் அவள் காணவில்லை என்று சொல்லப்பட்டது. இவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் நிலையுள்ளது பற்றி கிருத்துவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். பெண்ணியக்க, மாதர் சங்க, பெண்ணுரிமை குழுக்களெல்லாம் வழக்கம் போல அமைதியாகவே இருப்பார். சில நாட்களில் இவை மறக்கப்படும், மறைக்கப்படும்.

ஏஞ்சலின் நிர்மலா ரீனாஎன்ற கோவை கன்னியாஸ்திரியின் மர்மமான சாவு: கன்னியாஸ்திரி ஏஞ்சலின் நிர்மலா சாவில், மர்மம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது[5].பட்டப்படிப்பு கோவை பீளமேடு, சவுரிபாளையம், மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரீட்டாமேரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். ஏஞ்சலின் நிர்மலா ரீனா, 26, என்ற மகளும், சார்லஸ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 2004, டவுன்ஹால், பிரசன்டேஷன் கான்வென்ட் கிறிஸ்துவ சபையில், ஏஞ்சலின் கன்னியாஸ்திரியாக சேர்ந்தார். பயிற்சிக்காக மதுரை, கிணத்துக்கடவு பகுதிகளில் செயல்படும் கிறிஸ்துவ சபைகளுக்கு சென்றார்.கடந்த நான்கு மாதங்களுக்கு முன், கோவை, லாலிரோடு, ஜான் பிரிட்டோ சர்ச்க்கு சொந்தமான, புனித கன்னிகை அன்னை கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கியிருந்து, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, பி.ஏ., படித்து வந்தார்.

விடுமுறையில் விடுதியில் தங்கியிருந்த ஏஞ்சல் ஏன் தற்ஜகொலை செய்து கொள்ள வேண்டும்: தேவாலய வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ., படித்து வந்தார்[6]. தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் ஏஞ்சல் நிர்மலா சக தோழிகளுடன் விடுதியிலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல காலையில் சாப்பிட்டு விட்டு தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று தனது அறைக்குள் சென்று விஷம் / பூச்சி மருந்து[7] குடித்து மயங்கி கிடந்தார். சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற தோழிகள் நிர்மலா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்[8].

மயங்கிக் கிடந்தவர் சாவு: நேற்று முன்தினம் காலை (சனிக்கிழமை), கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், ஏஞ்சலின் மயங்கி கிடந்தார். கன்னியாஸ்திரிகள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஏஞ்சலின் உடல்நிலை மோசமாகவே, அங்கிருந்து போத்தனூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்; சிகிச்சை பலனின்றி ஏஞ்சலின் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து, ஆர்.எஸ்., புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில், ஏஞ்சலின் சடலம் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர் கன்னியாஸ்திரியாக பணியாற்றிய கிறிஸ்துவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மர்மம் இருப்பதால் உடலை வாங்க மறுப்பு: கன்னியாஸ்திரி சாவில், மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனையில், ஏஞ்சலின் சடலம் வைக்கப்பட்டிருந்த, ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்; போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தினர். இறுதியில், ஏஞ்சலின் சடலத்தை கிறிஸ்துவசபை நிர்வாகிகள் பெற்று சென்றனர். இதுகுறித்து ஏஞ்சலின் சகோதரர் சார்லஸ் கூறியதாவது:“கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டுக்கு வந்த ஏஞ்சலின், தங்கியிருக்கும் இல்லத்தில், பிற கன்னியாஸ்திரிகள், தன்னுடன் சரியாக பழகுவதில்லை, “டார்ச்சர்செய்கின்றனர் என்று கூறனார். இதில் சர்ச் அதிகாரிகள் மற்றும் சில கன்னியாஸ்திரிகளுக்குத் தொடர்பு உள்ளது”, என்றார்[9]. அவருக்கு நாங்கள் அறிவுரை கூறி அனுப்பினோம்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் என் சகோதரி தங்கியிருந்த இல்லத்திலிருந்து போன் செய்த கன்னியாஸ்திரிகள், “உங்களது சகோதரி உடல்நல குறைபாடு காரணமாக, போத்தனூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், உடனடியாக வாருங்கள்’ என்று கூறினர்.உறவினர்களுடன் போத்தனூர் மருத்துவமனைக்கு சென்றோம். என் சகோதரி நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கிறிஸ்துவசபை நிர்வாகிகள் தெரிவித்தனர். நிர்வாகிகளின் செயல்பாடு சந்தேகிக்கும் வகையில் உள்ளது.அறிவுறுத்தல்நேற்று முன்தினம் காலை ஏஞ்சலின் மயங்கி கிடந்துள்ளார்; முதலுதவிக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சகோதரியை பரிசோதித்த டாக்டர்கள், ஆபத்தான நிலையில் இருப்பதால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், போத்தனூரிலுள்ள சர்ச்க்கு தொடர்புடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கருதுகிறோம்; போலீசில் புகார் செய்துஉள்ளோம். இவ்வாறு, சார்லஸ் கூறினார்.

தாயாரின் குற்றச்சாட்டு: எஞ்சலின் தாயார் அலிஸ் ரேடா மேரி, “ஒரு குறிப்பிட்ட கன்னியாற்திரியினால் என் மகள் கொடுமைப்படுத்தப் பட்டு வந்துள்ளாள். அவள் சர்ச் அதிகாரிகளிடம் இதைப் பற்றி புகார் கொடுத்திருந்தபோது, அவர்கள் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை[10]. அதனால், அந்த கொடுமையைத் தாங்காமல் இந்த முடிவுக்கு வந்துள்ளாள்”, என்று குற்றம் சாட்டுகிறார்[11]. இருவரும் குரடும்பக் காரணங்களுக்காகத் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று சர்ச் நிர்வாகத்தார் சொன்னதை கடுமையாக எதிர்த்துள்ளனர்[12]. இது பற்றி அங்கிருந்த 7 கன்னியாஸ்திரிக்களிடம் கேட்டபோது அவர்கள் ஊடகத்தாருடன் பேச மறுத்தனர்[13].


[4] A nun was found dead in the underground water tank of a convent at Poonkulam near Kovalam in Thiruvananthapuram on Wednesday. Sister Mary Ancy, 48, who hailed from Kottayam, was a teacher at the Holy Cross Lower Primary School and was an inmate of the convent near the school.The nun went missing from her room where she had gone to sleep on Tuesday night after prayers and her body was found in the water tank in the morning by her inmates.The slab of the covered water tank was found displaced and this fuelled speculation of a murder, reminiscent of the Sister Abhaya episode. In 1992 Sister Abhaya was found dead in her convent at Kottayam. Police have registered a case of unnatural death.

http://indiatoday.intoday.in/story/thiruvananthapuram-nun-found-dead-in-convent-tank/1/148486.html

[7] While having breakfast on Saturday, she informed other nuns that she had consumed pesticide and fell unconscious.

http://timesofindia.indiatimes.com/india/Nun-kills-self-family-allege-abuse-by-church-in-TN/articleshow/19313782.cms

[9] A Charles Irudhayaraj, 25, brother of the deceased. He alleged that church authorities and a few nuns were behind Angeline’s suicide.

[10] In recent days, he claimed that Angin had frequently complained about harassment from another inmate there. Members had taken up the issue with senior church officials, but to no avail.

http://www.thehindu.com/todays-paper/tension-at-coimbatore-medical-college-hospital-over-nuns-suicide/article4568386.ece

[11] Alish Reta Mary, mother of the deceased, said her daughter took the extreme step after she was tortured mentally. “My sister was studying BA (English literature) final year at Nirmala College for Women at Race Course. She was tortured by a nun. When she lodged a complaint about this with the authorities, they failed to take necessary action. She could not bear the torture and took the extreme step,” said. http://timesofindia.indiatimes.com/india/Nun-kills-self-family-allege-abuse-by-church-in-TN/articleshow/19313782.cms

[12] They also took exception to statement by the church officials that Angin committed suicide due to her family situation.

http://www.thehindu.com/todays-paper/tension-at-coimbatore-medical-college-hospital-over-nuns-suicide/article4568386.ece

குழந்தைகள் காப்பகம் – கடத்தல், கற்பழிப்பு, பாதிரிகள் கைது, பெண் ஏஜென்டுகள்: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள் (2)!

ஒக்ரோபர் 14, 2010

நவீனகால அடிமை வியாபாரம்[1]: இன்றும் அதே முறைதான் கடைப் பிடிக்கப் படுகிறது. விடுதலை, மனித உரிமைகள் என்றேல்லாம் வாய் கிழிய பேசும் இந்த ஐரோப்பியர்கள், அமெரிக்கர், ஆஸ்திரேலியர் அடிமை வியாபாரத்தைத்தான் இன்றும் செய்து வருகின்றனர்[2]. ஆஸ்திரேலியர்கல் அதிக அளவில் இதில் மாட்டிக் கொண்டதால், அந்த அரசு இந்த விசயத்தில் மிகவும் விழிப்படைந்தூள்ளது[3]. கெட்டப் பெயரை சரி செய்து கொள்ள பல யுக்திகளை கையாளுகிறது. மேலும், போப்பே ஆஸ்திரேலிய பழங்குடி மக்களை கிருத்துவர்கள் அப்படி கேவலமாக தமது காம இச்சைகளுக்கு மிருகத் தனமாக பயன் படுத்திக் கொண்டுள்ளதால், வேறு வழியே இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதும் நினைவு கொள்ள வேண்டியுள்ளது. இதை “நவீனகால அடிமை வியாபாரம்” என்றே கூறலாம்! இந்தியர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டே அத்தகைய ஈனமான, மனிதத்தன்மையற்ற காரியங்களை மனசாட்சியே இல்லாமல் செய்து வருகின்றனர்.

குழந்தைகள் காப்பகங்களின் பின்னணி: ஏதோ கிருத்துவர்களைக் குறைசொல்வதாக நினைக்க வேண்டாம், ஏனெனில், எவ்வகையில், இதை ஆராய்ந்து பார்த்தாலும், கிருத்துவர்கள், கிருத்துவ நிறுவனங்கள், அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் / டாலர்கள் உள்ளவர்கள் தாம் இதில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில:

1.   Adoption Alliance (CO)

2.   Adoption Horizons (CA)

3.   Catholic Charities of Baltimore

4.   Catholic Charities of the Archdiocese of Chicago

5.   Heartsent Adoptions, Inc.

6.   Lutheran Social Services of Illinois

7.   Lutheran Social Services of Illinois

8.   Partners for Adoption

9.   Sunny Ridge Family Center

10.  Children’s Home Society & Family Services, Minnesota (CHSFS)[4]

உதாரணத்திற்கு, இதில் இந்திய ஏஜென்ட் போல சிலர் சமந்தப்பட்டுள்ளனர்[5]. உண்மையிலேயே அவர்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்று தெரியும் போது, அதை இந்திய பெற்றோர்களுக்குச் சொல்லி, அந்த குழந்தைகளை அவர்களிடம் (பெற்றோர்களிடம்) சேர்த்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், வழக்குப் போட்டாலும், அதை தொடர்ந்து இழுத்து வருகின்றனர். இதில் சமந்தப்பட்டுள்ள வக்கீல்களும் நன்றாக கவனிக்கப்படுவதால், அவர்களும், வழக்குகளில் ஏனோ-தானோ என்றுதான் வேலை செய்கிறார்கள். அதாவது, மிஷனரிகளுக்கு உதவுகிறார்கள். இந்நிலையில் தான், புதுச்சேரி கடத்தை விவகாரத்தை நோக்கவேண்டியுள்ளது.

குழந்தைகள் காப்பகத்தில் மூன்று சிறுமிகள் கடத்தல்[6]: புதுச்சேரியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த, மூன்று சிறுமிகளை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில், வாலுன்டரியேட் சில்ரன்ஸ் ஆர்பன்ஞ், நீலா இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்த சந்துரு மனைவி விஜயலட்சுமி (25). இவர்  கடந்த ஆறு மாதங்களுக்கு முன் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தனக்கு யாரும் ஆதரவில்லை எனக் கூறி, தனது இரு குழந்தைகளுடன் தஞ்சம் அடைந்துள்ளார். இல்லத்தில் ஆறு மாதங்களாக தங்கியிருந்த விஜயலட்சுமி குழந்தைகளிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த 5ம் தேதி இரவு 8 மணிக்கு விஜயலட்சுமி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற இல்லக் குழந்தைகளான சுமதி (10), தமிழ் அழகி (10),  அனுசுயா (8) ஆகிய மூன்று சிறுமிகளுடன் திடீரென மாயமானார். இது குறித்து குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சுரேஷ் (27) கொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்பதற்காக சேதராப்பட்டு சப் – இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டிவனத்தில் முகாமிட்டுள்ளனர். திண்டிவனம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர்பாஷா, சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் உதவியுடன் விஜயலட்சுமியின் கணவர் சந்துரு மற்றும் உறவினர்களிடம் புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி கடத்தல் ராணி திண்டிவனத்தில் கைது[7]: காப்பகத்திலிருந்த சிறுமிகளை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சிறையில் அடைக்கப்பட்டார். புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் அனாதை குழந்தைகள் காப்பகம் உள்ளது. இக்காப்பகத்தில் தங்கியிருந்த சுமதி (10), அனுஷா (8), தமிழ் (10) ஆகிய மூன்று சிறுமிகள் கடந்த 5ம் தேதி திடீரென காணாமல் போயினர். சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். காப்பகத்தில் பணியாற்றிய திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த லட்சுமியை (23) என்பவரையும்  காணவில்லை. சிறுமிகளை லட்சுமி கடத்திச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர். இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஆடலரசன் ஆகியோர் நேற்றுமுன்தினம் திண்டிவனத்திற்கு விரைந்தனர்.

திண்டிவனம் கிடங்கல் (1) பகுதியில், சிறுமிகளை கடத்தி வைத்திருந்த லட்சுமியை கைது செய்தனர். லட்சுமி மற்றும் மூன்று சிறுமிகளும் நேற்று காலை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.காப்பகத்திலிருந்த சிறுமிகளை கடத்திச் சென்ற லட்சுமி, திருப்பதிக்கு அழைத்துச் சென்று, சிறுமிகளை பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதன் மூலம் போதுமான பணம் கிடைக்காததால் திரும்பி திண்டிவனம் வந்ததாக, விŒõரணையில் லட்சுமி தெரிவித்துள்ளார்.லட்சுமியை @நற்று மாலை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறும், சிறுமியர் மூவரையும் காப்பகத்தில் ஒப்படைக்குமாறும் மாஜிஸ்திரேட் தாமோதரன் உத்தரவிட்டார்.

குழந்தைகள் தத்தெடுப்பு லாப நோக்கில்மத்திய அரசு தகவல்: “இந்திய குழந்தைகளை தத்தெடுப்பதில், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் லாப நோக்கத்துடன் செயல்படுகின்றனர்’ என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது[8].

மூளை வளர்ச்சி குறைந்த சிறுவன் ஒருவனை தத்தெடுக்க அனுமதி கோரி, அமெரிக்காவைச் சேர்ந்த கிரேயக் ஆலன் கோட்ஸ், அவரது மனைவி சைந்தியா ஆன் கோட்ஸ் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய டில்லி ஐகோர்ட்,”மனுதாரர்களுக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். எனவே குழந்தைகளை தத்தெடுக்கும் அவசியம் இல்லை. மேலும், தத்தெடுக்கும் சிறுவனை வீட்டு வேலை செய்ய பயன்படுத்த இருப்பதாகத் தெரிகிறது’ என்று கூறி, 2009ம் ஆண்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் சொலிசிட் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் டி.எஸ்.தாகூர் அடங்கிய பெஞ்ச் முன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: “பெரும்பான்மையான வெளிநாட்டினர் இந்திய குழந்தைகளை லாப நோக்குடன் தத்தெடுத்து செல்கின்றனர்.தத்தெடுத்து செல்லப்படும் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். பெண் குழந்தைகள் விபசாரத்திலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.கடைசியில் அந்த குழந்தைகளை தத்தெடுத்தவர்கள், கைவிட்டு விடுகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாரும் இல்லை’ என்று கூறினார்.

இதை பரிசீலனை செய்த செய்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: “இந்திய குழந்தைகள் வெளிநாட்டினரால், உள்நோக்கத்துடன் தத்தெடுக்கப்படுகின்றனர் என்பதை கோர்ட் ஒப்புக்கொள்கிறது.இதை தடுக்க தற்போது சட்டங்கள் இல்லை. எனவே தத்தெடுப்பதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நாடுகளுக்கு இடையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மனுதாரர்கள் குழந்தையை நல்லெண்ண அடிப்படையில் தத்தெடுப்பதாக கோர்ட் கருதுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறிவிட்டது

கிருத்துவ பாதிரிகளின் அட்டூழியம்[9]: மனித உரிமைகள் போர்வையில் குழந்தைகள் கடத்தல், பெண்கள் உரிமைகள் பெயரில் விபச்சாரம், ராஜரிக்கக் கட்சி பெயரில் ராசலீலைகள்,…………………..எப்படி, இவர்கள் தொடர்ச்சியாக இத்தகைய குற்றங்களை செய்து வர முடிகிறது?


[5] Meera Udayakumar, a U.S.-trained social worker, worked as the India Programme Coordinator at the Children’s Home Society of Minnesota, one of the major adoption agencies in the U.S. She has placed more than one hundred Indian children with American and non-resident Indian parents and is planning to set up post-adoption programmes for these parents and children in India.

[6] தினமலர், குழந்தைகள் காப்பகத்தில் மூன்று சிறுமிகள் கடத்தல், அக்டோபர் 09, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=102577

[9] வேதபிரகாஷ், குழந்தைகள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம்: புதுச்சேரியில் ஒரு பெண் கைது; குழந்தைகள் மீட்பு, https://christianityindia.wordpress.com/2010/05/29/குழந்தைகளை-கடத்திய-பாதிர/