Posts Tagged ‘கட்டி வைத்தல்’

சிறுவன் சாமுவேலுக்குப் பிடித்தது சாத்தானா அல்லது பேயா – சந்தேகத்துடன் இருந்தது ஜோசப்பா, தமிழ் ஊடகங்களா? – சங்கிலிருந்து விடுபட்ட சாமுவேல்!

ஜூன் 14, 2016

சிறுவன் சாமுவேலுக்குப் பிடித்தது சாத்தானா அல்லது பேயாசந்தேகத்துடன் இருந்தது ஜோசப்பா, தமிழ் ஊடகங்களா? – சங்கிலிருந்து விடுபட்ட சாமுவேல்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவன் சாமுவேல் ஜார்ஜ் உடன் ரயில்வே போலீஸார் - படம்- என்.ராஜேஷ்தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் சோதனைசங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சிறுவன் மீட்பு: சென்னை- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் 13-06-2016 அன்று காலை கீழூர்-தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தது. ரயிலில் வந்த பயணிகள் இறங்கி சென்றனர். வழக்கம்போல ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்த போது, அந்த ரயிலில் சிறுவன் ஒருவன் காலில் இரும்பு சங்கிலியுடன் அமர்ந்திருந்தான்[1]. சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருப்பதை ரயில்வே போலீசார் கண்டு அவனிடம் விசாரித்தனர்[2]. அவன், தன் தந்தை தான் சென்னையிலிருந்து பிடித்து வந்து, துத்துக்குடிக்கு கொண்டு வந்ததாகச் சொன்னான். அதாவது சென்னையில் 12-06-2016 அன்று பிடித்துவந்து வண்டியில் ஏற்றப்பட்டுள்ளான். இதனால், அவனிடம் செல்போன் எண்ணை வாங்கி தாயாரை வரவழைத்து ரயில்வே போலீசார் விசாரணை செய்ததில் கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்தன. இதனால், உலகம் முழுவதும் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி அருகே சாத்தான் பிடித்திருப்பதாக கூறி 16 வயது சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு தந்தையே கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[3].

Tutocorin possesses-chain boy Samuel chained and tortured 13-06-2016சிறுவன் சாமுவேல் கட்டப்பட்டு, துன்புருத்தப்பட்டது ஏன்?: தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த ஜோசப் மகன் சாமுவேல் ஜார்ஜ் (16) எனத் தெரியவந்தது[4]. இவரது தந்தை ஜோசப் இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு அடித்து தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் இரும்பு சங்கிலியை கல்லால் உடைத்து தப்பித்து சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்குச் செல்வதற்கு ரயிலில் ஏறியதாகவும் அச்சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்[5]. இதையடுத்து சிறுவனின் தாயார் மேரி கூறும்போது, “அவனுக்கு மனநிலை சரியில்லை, சாத்தான் பிடித்துள்ளது எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக கணவர் அடித்தார், நான் தட்டிக்கேட்டதால் எனக்கும் சாத்தான் பிடித்திருப்பதாகத் திட்டினார், மருத்துவ பரிசோனையில் எந்த பிரச்சினையும் இல்லை. மனநிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்”, எனவும் தாயார் மேரி கூறினார்[6]. மேலும் எனது மகனின் இந்த நிலைக்கு என் கணவர் தான் காரணம் என தாயார் மேரி கூறினார்[7]. இப்பொழுது, இப்படி கூறினாலும், நான்கு மாதங்களாக, ஏன் மௌனமாக இருந்தார் என்று தெரியவில்லை. கர்த்தரின் ஆணையா அல்லது மேரி அவ்வாறு அமைதியாக இருக்க கட்டுப்படுத்தப் பட்டாலா என்பதெல்லாம், பரிசுத்த ஆவிக்குத்தான் தெரியும் போலிருக்கிறது.

Tutocorin possesses-chain boy Samuel rescued 13-06-2016சென்னைக்குத் தப்பியோடிய சாமுவேல், பிடித்து கொண்டுவந்த ஜோசப் ஜார்ஜ்: கடந்த 4 நாட்களுக்கு இரும்பு சங்கிலியை அறுத்து சிறுவன் தப்பியோட முயன்றபோது, தந்தை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார்.  இந்நிலையில் இருநாட்களுக்கு முன்பு திடீரென சிறுவன் தப்பியோடிவிட்டான்[8]. ஜோசப் சென்னைக்குச் சென்று, சாமுவேலைப் பிடித்து, திரும்ப கொண்டு வந்துள்ளான். அவன் தப்பிவிடக்கூடாது என்றுதான், கட்டிப் போட்டுள்ளான். தூத்துக்குடியில் தந்தையால் ரயில் பெட்டியில் சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைக்கு உள்ளான சிறுவனை போலீசார் மீட்டு, குழந்தைகள் நலன் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்[9]என்று நியூஸ்.7 கூறுகிறது.  சூட்கேசைக் கட்டிப்போடுவது போல் சிறுவன் ரயில் பெட்டியில் கட்டிப்போடப்பட்டது, உடன் வந்த ரயில் பயணிகளையும் அதிர்ச்சி அடைய செய்தது. குழந்தைகள் நலன் பாதுகாப்பு மையத்தில் சாமுவேலை ஒப்படைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10].

சாத்தானா - பேயா- சாமுவேலா - மாட்டிக் கொண்ட சிறுவன்சாத்தான் / பேய் பிடித்தது என்று தந்தை துன்புருத்தியது: சிறுவனைப் பிடித்திருப்பது சாத்தானா அல்லது பேயா என்று தமிழ் ஊடகக்காரர்களுக்கு சந்தேகம் இருப்பது போன்று தெரிகிறது[11]. தூத்துக்குடியில் தந்தையின் கொடுமை தாங்காமல் 13-06-2016 ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு தப்பியோடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர்[12]என்று தினமணி கூறுகிறது. தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜோசப் ஜார்ஜ் – மேரி தம்பதியின் மகன் சாமுவேல் (16)[13]. இவர், மெஞ்ஞானபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு தேர்வில் 391 மதிப்பெண்கள் பெற்றுள்ள போதிலும் கணிதத்தில் மட்டும் 12 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். என்று தினமணி நிறுத்தியுள்ளது. அதாவது மாணவன் பெயிலாகியுள்ளான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது போலும். அதனால், தந்தை அவனை அடித்துத் துன்புருத்தி இருக்கலாம். ஒருவேளை சாமுவேல் எதிர்த்து பேசியதால், அவனுக்கு பேய் / சாத்தன் பிடித்து விட்டது என்று தான் அடித்துத் துன்முருத்தியதை மறைக்க அவ்வாறு செய்திருக்கலாம். அப்படித்தான் நடந்துள்ளது என்று புதிய தலைமுறை டிவி கூறுகிறது[14].

e0ae9ae0aebee0aea4e0af8de0aea4e0aebee0aea9e0af8d-e0ae8fe0ae9ae0af81-e0ae95e0aebfe0aeb0e0af81e0aeb8e0af8de0aea4e0af81e0aeb5e0aeae1ஜோசப், சாமுவேலை அடைத்து வைத்திருந்தது இரண்டு மாதமா, நான்கு நாட்களா?: இந்நிலையில், மாணவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி, காலில் சங்கிலியால் கட்டி கடந்த இரண்டு மாதங்களாக அவரது தந்தை ஜோசப் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தாராம்[15]. இரண்டு மாதங்கள் என்று தினமலரும் குறிப்பிட்டுள்ளது[16]. இந்நிலையில் மாணவர் சங்கிலியை அறுத்துக் கொண்டு வீட்டிலிருந்து தப்பி 13-06-2016 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவரை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக இலவச குழந்தைகள் சேவை மையத்துக்கும் புகார் அளித்தனர். இதையடுத்து ரயில் நிலையம் சென்ற குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களிடம், ரயில்வே போலீஸார் மாணவரை ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மாணவனை குழந்தைகள் நலக்குழுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, மாணவர் சாமுவேலின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் பிச்சை எடுத்த சிறுவர்கள் மீட்புமெய்ஞானபுரம் விடுதியில் நடப்பது என்ன?: மார்ச் 30, 2016 மாதத்தில் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தனியார் விடுதியிலிருந்து தப்பி வந்த பள்ளி மாணவர்கள் வள்ளியூரில் சுற்றித்திரிந்த போது போலீஸார் அவர்களை மீட்டனர்[17]என்று தினமணியில் செய்தி வந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் முத்துசெல்வன், அஜினு. இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் திட்டியதாகக் கூறி விடுதியை விட்டு வெளியேறிய இருவரும் பேருந்தில் வள்ளியூர் வந்துவிட்டனர். வள்ளியூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தபோது இருவரும் விடுதியிலிருந்து தப்பி வந்தது தெரியவந்தது[18]. தூத்துக் குடியில் குழந்தைகள், அதாவது 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்-சிறுமிகளை கடத்தி வந்து, பாலியல் வன்மங்கள், பிச்சை எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு மே 2015ல் பிச்சையெடுத்த 15 சிறார்கள் “ஹெல்ப்லைன்” காவலர்களால் மீட்கப்பட்டுள்ளார்கள்[19].

© வேதபிரகாஷ்

14-06-2016

[1] தினகரன், சாத்தான் பிடித்திருப்பதாக கூறி சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைபடுத்திய தந்தை, Date: 2016-06-13@ 15:51:19.

[2] http://ns7.tv/ta/hain-ties-son-father-made-it-horrible.html

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/father-tied-son-with-chain-as-he-was-attcked-ghost-116061400008_1.html

[4] தூத்துக்குடி.ஆன்லைன், ரயில் நிலையத்தில் சிறுவன் சங்கிலியுடன் மீட்பு : தந்தை கொடுமைப் படுத்தியதாக புகார், ஞாயிறு 12, ஜூன் 2016 12:24:08 PM (IST)

[5]

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-

[7] http://www.tutyonline.net/view/31_118153/20160612122408.html

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=223745

[9] நியூஸ்.7, சங்கிலியால் கட்டிப்போட்டு மகனை கொடுமை படுத்திய தந்தை!, June 12, 2016

[10] http://timesofindia.indiatimes.com/city/madurai/Teen-tortured-by-dad-rescued-by-railway-cop-in-Tuticorin/articleshow/52721191.cms

[11] வெப்.துனியா, பேய் பிடித்திருக்கு: மகனை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை படுத்திய தந்தை, செவ்வாய், 14 ஜூன் 2016 (06:46 IST)

[12] தினமணி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு, By தூத்துக்குடி,First Published : 13 June 2016 12:49 AM IST

http://www.dinamani.com/edition_thirunelveli/tuticorin/2016/06/13/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/article3479338.ece

[13]  Times of India, Teen tortured by dad rescued by railway cop in Tuticorin, TNN | Jun 13, 2016, 06.47 AM IST.

[14] https://www.youtube.com/watch?v=r9HeWx_woXE

[15]http://www.dinamani.com/edition_thirunelveli/tuticorin/2016/06/13/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/article3479338.ece

[16]  இந் நிலையில் சாமுவேலுக்கு பேய் பிடித்து விட்டது, என அவரது தந்தை ஜோசப் கடந்த இரு மாதங்களாக வீட்டில் காலில் சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளார். தினமும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1541127

[17]http://m.dailyhunt.in/news/india/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-epaper-dinamani/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-newsid-51435797

[18]http://theekkathir.in/2016/04/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/

[19] Fifteen children who were found begging in Tuticorin were rescued in a joint raid conducted by a team from Department of Social Welfare, Childline, Child Protection Unit and Child Welfare Committee on Saturday. The drive was carried out following a directive from Collector M. Ravikumar, said Chairman of Child Welfare Committee P. Murugesan.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/15-children-found-begging-in-tuticorin-rescued/article7266697.ece