Posts Tagged ‘அர்மகத்தான்’

அர்மகெதான் யுத்தம், உலக முடிவு, எண்ணை தீவிரவாதம்: யூத-கிருத்துவ-துலுக்க இறையியல் உலக மக்களின் மீது போருளாதார தீவிரவாதத்தைத் திணிக்கிறதா? [2]

ஏப்ரல் 26, 2019

அர்மகெதான் யுத்தம், உலக முடிவு, எண்ணை தீவிரவாதம்: யூதகிருத்துவதுலுக்க இறையியல் உலக மக்களின் மீது போருளாதார தீவிரவாதத்தைத் திணிக்கிறதா? [2]

Suicide bomber

தற்கொலை குண்டுவெடிப்பு ஆரம்பித்தது எப்பொழுது?: 1940-70களில் அமெரிக்கா, ஈரானுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்திருந்தது. 1957ல் முதல் அணு உலையை அமெரிக்க உதவியுடன், ஈரானில் நிறுவப்பட்டது. 1953 ஆகத்து மாதத்தில் ஈரானியப் பிரதமர் முகம்மது மொசாடெக்கின் ஆட்சியைக் கவிழ்த்த இராணுவப் புரட்சியில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனம் சிஐஏ முக்கிய பங்கு வகித்ததாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. 1967ல் யுரேனிஸம் செரிமானம் கொண்ட அணு ஆயுதங்களும் அமெரிக்க இரானுக்கு வழங்கியது. 1979ல் நடந்த இரானிய புரட்சியின் போது தான், ஷாவின் அரசு தூக்கியெறியப் பட்டதால், உறவுகள் பாதிக்கப் பட்டன. ஈரான் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்ததை, அமெரிக்க முடக்கப் பார்த்தது. இவ்வாறாக, அமெரிக்க ஈரானின் எதிரியாகியது. ஈரான் ஒரு தீயசக்தி என்று அமெரிக்கா விமர்சித்தது. ஜுனியர் ஜார்ஜ் புஷ் ஆட்சியிலிருந்தபொழுது ஈரான் மீது படையெடுக்கத் திட்டம் போட்டு, அந்நாட்டை “தீமையின் அச்சு நாடு” எனப் பழி சுமத்தினார். பொருளாதாரத் தடைகளைப் போட்டது. ஆனால், ஈரான் கஷ்டப்பட்டு, தொழிற்சாலைகளை நிறுவி முன்னேறியது. இருப்பினும் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு, அமெரிக்கா இரானைக் குற்றஞ்சாட்டியது. 1981ல் பெய்ரூட்டில் இருந்த இராகின் தூதரகம் குண்டுவெடிப்பில் தகர்க்கப் பட்டது. அதில் 27 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 1982ல், லெபனானின் ஜனாதிபதி பஸீர் ஜெமாயில், தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். இவ்விரு நிகழ்சிகள் தான், தற்கொலை தாக்குதலுக்கு ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது[1].

Oil and Terror

அமெரிக்காவின் எண்ணை சார்ந்த வளைகுடா சித்தாந்தம்: அமெரிக்காவிற்கு எண்ணை தேவை என்ற திட்டத்தினால் தான் வளைகுடா நாடுகளில் மூக்கை நுழைத்து வருகின்றது. வெறும் எண்ணையோடு, விவகாரத்தை வைத்துக் கொண்டால் பரவாயில்லை, ஆனால், அவர்களிடம் கலாச்சாரம், முதலியவற்றில் தலையிடுவதால், மற்ற பிரச்சின்னைகள் எழுகின்றன. எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத் அரசை, சதாம் ஆக்கிரமிக்க முனைந்த போது, தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக், குவைத்தை காப்பாற்ற, ஐந்து லட்சம் அமெரிக்க படை வீரர்கள் ஈராக்கினுள் அனுப்பப்பட்டனர். வான்வழியாகவும் தரைவழியாகவும் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான பொதுமக்கள் உயிரையும் உடைமைகளையும் இழந்தனர். இந்த வளைகுடா போரில், ஏற்கெனவே பலவீனமாக இருந்த ஈராக்கிய இராணுவம், முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டது. சதாம் உசைன், ஈராக்கினுள்ளேயே முடக்கி வைக்கப் பட்டு, பிறகு கொல்லப்பட்டார். 2001 செப்டம்பர் 11 ஆம் நாள், உலக வர்த்தக மைய கட்டிடத் தாக்குதல், பிறகு எழுந்த தீவிரவாதத்திற்கு அமெரிக்காவே காரணம் என்றாயிற்று. ஏனெனில், ஒஸாமா பின் லேடன் அமெரிக்கபிரஜை தான். உள்நாட்டு தீவிரவாதம், தீவிரவாத தோற்றம் என்று பேசி வருகின்ற நிலையில், உலக அழிவு, அர்மகெதான் யுத்தம் போன்றவற்றிற்கு அமெரிக்கா தான் காரணம் எனலாம். ஏனெனில், ஹாலிவு படங்கள் தாம், அத்தகைய கட்டுக் கதைகளின் ஆதாரமாக ஆயிரக் கணக்கான திரைப்படங்களை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து, பரப்பி வருகிறது.

Crusade, ideology, propaganda

குண்டு வைப்பிற்கு பதில், குண்டு வைத்தல் அல்ல: முன்பு இஸ்லாமிக் குண்டு என்றார்கள், ஆனால், தற்கொலை மனித குண்டுகள் மூலம், அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார்கள். இனி ஜேஹோவா, ஜோசப், மேரி, ஏசு, கிருஸ்து குண்டுகள் எல்லாம் கிருத்துவர்களால் கொண்டு வரப்படும் போலிருக்கிறது. ஆம்கெதன் போர் வரும் என்று கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குண்டுக்கு பதில் குண்டா, அணுகுண்டா, கத்தியா என்று தான் அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர். இவையெல்லாமே, பைபிள் மற்றும் குரானில் உள்ள வசனங்கள் மீது ஆதாரமாக எழுப்பப் பட்ட விசயங்கள், கேள்விகள் மற்றும் விவகாரங்கள் ஆகும். அப்பாவி மக்கள் கொல்லப் படுவது பற்றி, சிந்திக்காமல், “நீ குண்டு வைத்தாய், பதிலுக்கு நான் வைக்கிறேன், இது நியாயமானது தான்,” என்று தீவிரவாதிகள் அறிக்கைகள் விட்டால், அதனை கண்டிக்காமல், வாத-விவாதங்களை சித்தாந்தவாதிகள் ஆரம்பித்து வைக்கிறார்கள். அதில்தான், உண்மைகள் மறைக்கப் படுகின்றன. ஊடக, பிரச்சார பலம் மூலம், அவ்வாறான, மறைப்பு வேலைக அதிகமாகி இருப்பதால், 10-15 நாட்களில் அச்சம்பவம் மறக்கப் படும் அல்லது அதனை மறைக்க, வேறொரு செய்தி அல்லது விவகாரத்தை முன்னிருத்துவர்.

USA, oil, Iran

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பது, புதிய பிரச்சினையை உண்டாக்குவது: 1957ல் முதல் அணு உலையை அமெரிக்க உதவியுடன், ஈரானில் நிறுவப்பட்டது. 1967ல் யுரேனிஸம் செரிமானம் கொண்ட அணு ஆயுதங்களும் அமெரிக்க இரானுக்கு வழங்கியது. ஆனால், இப்பொழுது, 50 ஆண்டுகள் கழித்து, அதே அமெரிக்கா, இரானின் வளர்ச்சியை எதிர்க்கிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில், ஈரானின் பரம வைரிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் ஆரம்பத்தில் இருந்தே “ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்தை” எதிர்த்து வந்தன. 2015 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப் பட்ட பின்னர், ஆசிய நாடுகள் தான் ஈரானிய எண்ணையை வாங்கி வந்தன. டிரம்பின் ஒருதலைப்பட்சமான விலகலை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், முடிவை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும், புதிய ஒப்பந்தம் போடுமாறும் கேட்டு வருகின்றன. முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம். அந்நிலையில் பாதிப்பு அடையப் போவது, வளர்ச்சியடையும் நாடுகளே. இவ்வாறு நாடுகளின் வள்சர்ச்சிகளில் தலையிட்டு, பொரளாரத்தை சீரழிக்கும் முறையினை, “பொருளாதார தீவிரவாதம்” எனலாம்.

Economic financial terrorism.

பொருளாதார பயங்கரவாதம், தீவிரவாதிகளின் நிதிநிலை: இன்று பொருளாதார பயங்கரவாதமும், தீவிரவாதிகளின் நிதிநிலை அறிக்கைகளும் சேர்ந்தே செயல்படுகின்றன. அதற்கு அரசியல்வாதிகளும் ஒத்து போகின்றார்கள். இத்தகைய புனிதமற்ற கூட்டுக் கொள்ளையில் அப்பாவி சாதாரணமான குடிமக்களின் கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணம் கொள்ளை போகிறது. அதிலும் மத்திய வர்க்க குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் துன்பம் சொல்லி மாளாது. தமது பிள்ளைப் படிப்பு / பெண்ணின் திருமணம் என்று வைத்திருக்கும் பணத்தைப் போட்டு நஷ்டமாகி துன்பத்தை அனுபவித்தவர்கள் ஏராளம். இருப்பினும் அரசு மெத்தனமாகவே செயல்படுவது பல கேள்விகளை எழுப்புகின்றன. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்துமானால், வளைகுடா நாடுகள் எதுவுமே கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய விடமாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடன் செய்திருந்த அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதிக்க தொடங்கியது. பின்னர், ஈரானிடம் இருந்து அதனுடைய கூட்டணி நாடுகள் எதுவுமே கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று வலியுறுத்தி சில நாடுகளை மிரட்டி பணியவும் வைத்துள்ளது அமெரிக்கா. இந்தியா இரானின் எண்ணையை சார்ந்தே பொருளாதாரம் உள்ளது. ஆகவே, மறைமுகமாக, அமெரிக்கா, இந்தியாவை பாதிக்கிறது.

Economic terrorism

முடிவுரை: மேலே அலசிய விவரங்களை வைத்து, கீழ்கண்ட முடிவுகளைப் பெறலாம்.

  1. தேவையை உண்டாக்கி, அதற்கு வேண்டிய மூலப்பொருட்களை அளிக்கும் நிலையில், அவற்றைக் கட்டுப் படுத்துவது வணிக தர்மம், வியாபார ஒழுக்கம் ஆகாது.
  2. வியாபார போட்டியை சர்வாதிகார அடக்குமுறையாக மாற்றக் கூட்டாது. பொருளையோ, சேவையினையோ, நிரந்தரமாக சந்தையில் வைத்திருக்க முடியாது.
  3. தேவைகள் மாறும் போது, அனைத்தும் மாறும் நிலைமை ஏற்படும். அந்நிலையில், சில பொருட்கள், சேவையில் உபயோகமற்றதாகி விடும்.
  4. “எல்லோரும் சாக வேண்டும்” போன்ற, இறையியலை தீவிரவாதத்திற்கு உபயோகப் படுத்துதல், நியாயப்படுத்துதல், சரியாகாது. அது அமைதியை உண்டாக்காது.
  5. தற்கொலை தாக்குதலுக்கு இறையியலைத் தவிர, மனோதத்துவம் மற்றும் பணம் அதிகமாக வேலை செய்கிறது. திராவிட சித்தாந்தத்தில், “தீக்குளித்தல்” என்பதும் தற்கொலை தான், அதனால், தீக்குளித்தவரின் குடும்பம் காப்பாற்றப்படுகிறது. இங்கும் அதே முறைதான் உள்ளது.
  6. மனித உரிமைகள் என்றெல்லாம் பேசிக் கொண்டு, பொருளாதார வேற்றுமைகளால் மக்களை பொருளாதாரத் தடைகளால் இம்சிப்பதும், பொருளாதார தீவிரமாகிறது.
  7. இந்தியாவை பாகிஸ்தானை வைத்து மிரட்டி, ராணுவத்திற்கு செலவழிக்க வைப்பதும், தீபாவளி நேரத்தில் தங்கத்தை விற்பதும், தீபாவளி வரை எண்ணை வாங்கிக் கொள்ளலாம் என்பதும் பொருளாதார தீவிரவாதம் தான்.
  8. பிரச்சினைகளை உருவாக்கி, அதை வியாபாரமாக்கி, அதை வைத்து லாபங்களை சம்பாதிக்கும் முறைகளும், பொருளாதார தீவிரவாதத்தில் அடங்கும்.
  9. விற்பவன் வாங்குபவன் இடையில் முடியும் வியாபாரம், பலரின் கைகளுக்கு போவது, மூலம் வருவது, நியாயமான வணிகம் ஆகாது.


வேதபிரகாஷ்

26-04-2019

Iran, India, USA - OIL

[1] Atran, Scott. Genesis of suicide terrorismScience 299.5612 (2003): pp. 1534-1539.

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [2]

மார்ச் 16, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [2]

Mary Magdalene myth - Da vinci code

மேரி மக்தலீன், புனித கோப்பை, தொடர்ந்து வரும் வம்சாவளி[1]: ஏசுவின் வாரிசுகளை ஆதரிக்கும் ரகசியக் குழுவில் டா வின்சியும் உறுப்பினராம். யூதாஸால் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பு தன் சீடர்களுடன் கடைசியாக ஏசு கிறிஸ்து உணவருந்திய காட்சியை டா வின்சி ஓவியமாக தீட்டியிருக்கிறார். அதில் ஏசுவுக்கு அருகே உட்கார்ந்திருப்பது சீடர் ஜான் அல்ல. அது மேரி மக்தலீன் என்பது டான் பிரவுனின் கருத்து. கடைசி விருந்தில் ஏசு பயன்படுத்திய கோப்பை, கிறிஸ்தவர்கள் மத்தியில் புனிதமாகக் கருதப்படுகிறது. அதில் கடவுளின் ரத்தம் இருப்பதாகக் கருதப்படுகிறது. டா வின்சியின் ஓவியத்தில் கோப்பையே கிடையாது. காரணம், கோப்பை என்பது ஒரு குறியீடுதான். ஏசுவின் ரத்தத்தைத் தன் வயிற்றில் உள்ள குழந்தை வடிவத்தில் தனக்குள் வைத்திருக்கும் மேரி மக்தலீன்தான் அந்தக் கோப்பை என்பது டான் பிரவுனின் வியாக்யானம்[2].

Merovingian dynasty

உண்மையினை மறைக்க, படத்தை அமுக்கி விட்டனர்[3]: டா வின்சியின் புகழ்பெற்ற மோன லிசா ஓவியமும் படத்தில் வருகிறது. மோன லிசா பெண்ணே அல்ல. டா வின்சி தன்னைத்தானே ஓவியமாக தீட்டிக் கொண்டிருக்கிறார் என்பது டான் பிரவுனின் இன்னொரு வியாக்யானம். நாவலாகப் படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்த கதை, சினிமாவாக எப்படி இருக்கும்? இந்த வாரம் நடந்த சர்வதேசப் பத்திரிகையாளர் பிரிவியூவுக்குப் பின் பல பத்திரிகையாளர்கள், ‘படம் செம போர்’ என்று சொல்லி விட்டார்கள். ‘மர்மப் படத் துக்கு சரிப்பட்டுவராத விதத்தில் வளவள என்று நிறைய பேச்சு, சாதாரண பார்வையாளர்களுக்கு விளங்காத கிறிஸ்தவ மதக் கோட் பாடுகள்- குறியீடுகள், டாம் ஹாங்க்ஸின் உணர்ச்சியற்ற நடிப்பு எல்லாம் சேர்ந்து ஒரே போர்’ என்று சொல்லப்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்களின் சர்ச்சையை மீறி நாவல் பெரும் வெற்றியடைந்தது போல, விமர்சகர்களின் கருத்தை மீறி படமும் வெற்றி பெறுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும். மதம், கடவுள் தொடர்பான விஷயங்களில் ஒரு படைப்பாளிக்கு எந்த அளவுக்குக் கற்பனைச் சுதந்திரம் அனுமதிக்கப்படும் என்பது எல்லா சமூகங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விவாதமாகிறது. அதில் இன்னொரு மைல் கல்… ‘டா வின்சி கோட்’[4].

Merovingian STAR

சர்டிபிகேட்டுடன் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டு வெளி வந்த படம்[5]: இந்தியாவைப் பொறுத்தவரை படத்தைப் பார்த்துவிட்டுத் தானே முடிவு செய்யப் போவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி அறிவித்தார். இதற்கு முன் அமீர்கானின் ‘ரங் தே பசந்தி’ படம் பற்றியும் சர்ச்சை வந்தபோது தானே ஐந்து முறை படத்தைப் பார்த்துவிட்டு அனுமதித்ததாக சொல்லியிருக்கும் தாஸ் முன்ஷி, தற்போது ‘தி டா வின்சி கோட்’ படத்தைப் பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் கடுமையாக எதிர்ப்புக் காட்டிய கிறிஸ்தவ அமைப்புகளும், ‘ஆட்சேபகரமான காட்சிகளை வெட்டிவிட்டுப் படத்தைத் திரையிடலாம்’ என்று இறங்கிவர, ‘ஏ’ சர்டிபிகேட்டுடன் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டது[6].

Battle of Armageddon

சரித்திர ஆதாரங்கள் இலாததால் கிருத்துவத்தில் உள்ள பிரச்சினை: கிருஸ்தோலாஜி / கிருஸ்துவயியல் (Christology) என்பது கிருஸ்துவைப்பற்றி படிப்பது, ஆராய்ச்சி செய்வது, அறிவதாகும்.  ஜீஸஸ் (Jesus), கிருஸ்து (Christ) என்ற இரு சித்தாந்தங்கள் ஒன்று சேர்ந்து ஜீஸஸ் கிரைஸ்ட் (Jesus Christ) அதாவது ஏசுகிருஸ்து என்பது உருவாக்கப்பட்டது. ஆகவே ஏசுகிருஸ்து சரித்திரரீதியாக இருந்தாரா இல்லையா என்ற விவாதம் இருந்து வருகிறது. மனித கிருஸ்து (Human Christ), சரித்திரக் கிருஸ்து (Historical Christ) மற்றும் தெய்வ கிருஸ்து (Divine Christ) என்ற வாதங்களும் உண்டு.

  1. மனித கிருஸ்து (Human Christ): கிருத்துவயியலைப் போற்றுபவர்கள், பின்பற்றுபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் இத்தகைய பிரச்சினைகள முன்வைத்து தமது கொள்கைகளை நிலைநிறுத்தப் பார்ப்பார்கள். அதாவது, கிருத்துவிற்கு கல்யாணம் ஆனதா இல்லையா, மேரி மேக்தலீன் கிருத்துவை மணம் செய்து கொண்டார்களா இல்லையா, அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனவா இல்லையா, 13 வருட இடைக்காலத்தில் அவர் எங்கு இருந்தார், இந்தியாவிற்கு வந்தாரா இல்லையா, ……………..என இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பினால், பலரும் பற்பல விவாதங்களுடன் களமிருங்குவர். பதில் சாதகமாகவோ, பாதகமாகவோ இருந்தாலும், ஏசுகிருஸ்து இருந்தார் என்று ஒப்புக்கொண்டு இந்த விவாதங்களில் ஈடுபடவேண்டியிருக்கும்.
  2. சரித்திரக் கிருஸ்து (Historical Christ): ஆனால் சரித்திர ரீதியாக ஏசுகிருஸ்து இல்லை என்று இன்றைய ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இதுதான், இன்றைய ஐரோப்பிய, அமெரிக்க மக்களின் நிலையாகிறது. அதனால் தான் சர்ச்சுகளுக்கு போகும் நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைகின்றன, சர்ச்சுகளும் விற்கப்படுகின்றன.
  3. தெய்வ கிருஸ்து (Divine Christ):  இதெல்லாம் கிருஸ்துவை தெய்வமாகக் கருதுபவனுக்குக் கவலையில்லை. நம்பிக்கையாளனுக்கு தெய்வம் இருப்பது அவனது நம்பிக்கை. அதை எந்த உண்மையான நம்பிக்கையாளனும் விமர்சிக்கப் போவதில்லை.Jesus never crucified, died in Kashmir - Hindutwa vadis believe

நியூசிலாந்த்தில் கிருத்துவன் துலுக்கரைக் கொன்றான் என்று பதிவு போடுவது சரியில்லை: 15-03-2019 அன்று கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல்-நூர் என்னும் மசூதியில் தொழுகை நடத்துபவர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்தது. நியூசிலாந்து கொலைகாரன் ஒரு டெம்ளர், கத்தோலிக்க வெறியாளன் என்று சில நண்பர்கள் பதிவு செய்து மகிழ்வது போல உள்ளது, இது ஆபத்தானது. ஏனெனில் முட்டாள் இந்துக்களில் பலர், “இந்தியாவில் ஏசு” போன்ற கட்டுக் கதைகளை நம்புகின்றனர். யோகானந்த பரம ஹம்ஸர், மற்ற பலர் செக்யூலரிஸ இந்துத்துத்துவ சாமியார்கள் நம்புகிறார்கள். ஆன்மீகப் பார்வையில் புரட்டு புரட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர், ஏனெனில் அயல்நாட்டவர்களிடத்திலிருந்து பணம் வருகிறது. ஏசு மேரி மேக்தலினை கல்யாணம் செய்து கொண்டார், அவர்கள் வழி வந்தவர் நாங்கள் என்று டெம்ப்ளர்கள் சாதிக்கின்றனர், கத்தோலிக்கதைக் காக்கும் வீரர்கள் என்று பறைச் சாற்றிக் கொள்கின்றனர்.  ஆகவே, அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை வேறு, இந்துக்கள் நுழைவது வேறு.

Jesus never crucified, died in Kashmir - Hindutwa vadis, RSS believe

ஆர்.எஸ்.எஸ் இக்கட்டுக்கதைகளை ஊக்குவிப்பதேன்?: ஆர்.எஸ்.எஸ்.ல் சிலர் இக்கட்டுக் கதைகளை ஊக்குவிப்பதும் தெரிகிறது. ஸ்லீப்பர் வேலை செய்கிறார்களா முட்டாள் இந்துக்கள் என்று சந்தேகிக்க தோன்றுகிறது. ஏசு மனநிலை பாதிக்கப் பட்டவர் என்று ஒருவர் அடிக்கடி பரப்பி வருவதை கவனிக்கலாம்[7], இன்னொருவர் நானே ஏசு என்று சொல்லிக் கொள்கிறார். மறுபடியும் சிலுவை போர்கள் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனரா? அர்மகதான் [Battle of Armageddon] யுத்தம் தேவையா?

Battle of Armageddon

உண்மையில் இந்த இந்துத்துவ வாதிகளுக்கு, இதெல்லாம் தெரியுமா அல்லது தெரிந்து துணை போனால் விவகாரம் வேறு, தெரியாமல் துணை போனால் ஆபத்து. எச்சரிக்கை! டெம்ப்ளர்களை களைத்த போது, அவர்கள் பிரீமேசன்கள் ஆனார்கள் என்கிறார்கள், இவர்கள் எல்லோருமே மேஸோனிக் குழுக்களில் அடங்குவர்! பாவம், கன்னித் தாய், சிலுவையில் மரிப்பு, உயிர்த்தெழுதல், எழும்பி சுவர்கத்திற்குசென்றது, முதலியவற்றை நம்புவது கிருத்துவம்[8].

Jesus mentally ill

ஆனால், ஏசுக் கட்டுக் கதைகள், அவற்றிற்கு விரோதமானவை, ஏற்று கொள்ளப் படாதவை! குரான் ஆதரிப்பதால், இந்துக்கள் ஆதரிப்பது சரியில்லை! அடிப்படை மத உண்மைகள் அறிந்து கொண்டால், எல்லோருக்கு நல்லது. ஆனால், இப்பொழுது நடப்பதெல்லாம் நல்லதல்ல. ஏசு தமிழ் இந்து தான், கடையாக, சரவவண பவ ஹோட்டலில் இட்லி, தோசை எல்லாம் சாப்பிட்டார். தமிழச்சியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு கொரியாவில் இறந்தார், அங்குள்ள சமாதியை ஒரிசா பாலு கண்டு பிடித்தார். இப்படியெல்லாம் சொன்னால் கூட நம்மாட்கள் நம்புவார்கள் போலும்.

© வேதபிரகாஷ்

16-03-2019

Jesus had 12 wives

[1] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[2] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[3] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[4] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[5] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[6]  https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[7] https://www.express.co.uk/news/uk/341926/Jesus-Christ-may-have-suffered-from-mental-health-problems-claims-Church-of-England

[8] Concept of sin, Immaculate Conception. Virgin birth, Crucifixion, Resurrection, Ascension, Trans-substantiation…