Posts Tagged ‘அனாதை இல்லம்’

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (2).

செப்ரெம்பர் 6, 2015

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (2).

Front line photos - P. Gautham

Front line photos – P. Gautham

சமூகநல ஆர்வலர்கள் எடுத்துக் காட்டுவது (2005 முதல் 2010 வரை): 2005லேயே அனாதை இல்லங்களை வைத்து நடத்துபவர்கள், தத்தெடுப்பு என்பது ஒரு பெரிய வியாபாரமாக செய்து வருகின்றனர் என்று எடுத்துக் காட்டப்பட்டது[1]. இந்திய சட்டங்கள் இருந்தாலும், அவற்றை வளைத்து குழந்தைகள், சிறார் மற்றும் இளம்பெண்களை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்ல பலமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அனாதை இல்லங்கள் நடத்துவதற்கு அனாதை குழந்தைகள் வேண்டும். அப்படியென்றால், பெற்றோர் இல்லாமல் குழந்தைகள் எப்படி கிடைக்கும். ஆனால், ஆயிரக்கணக்கில் உள்ள அனாதை இல்லங்களில் லட்சக் கணக்கில் குழந்தைகள் இருக்கின்றனர் என்றால், குழந்தைகள் எவ்வாறு வருகின்றன? குழந்தைகள் என்ன தாமாக உற்பத்திச் செய்யப்படுகின்ற பொருட்களா? கணவனும், மனைவியும் சேர்ந்து, மனைவி கர்ப்பமுற்று பத்து மாதம் கழித்துதான் குழந்தை பிறக்கும். அந்நிலையில் பெரும்பாலும் ஏழ்மையினால் குழதைகளை விற்பது என்பது உள்ளது. தவறான உறவில் பிறந்த குழந்தைகள் அனாதையாக விட்டுவிடும் உதாரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் குழந்தைகள் திருடிக்கொண்டு வருதது, கடத்திக் கொண்டு வருவது என்றவை தான் அதிகமாக இருக்கின்றன.

Inter country adoption process- courtesy - Frontline photo

Inter country adoption process- courtesy – Frontline photo

பெண்சிசு வதை, தொட்டில் குழந்தை, போன்ற ஆரவாரங்கள்: தமிழகத்தில் “பெண்சிசு வதை” என்று 2010-15 ஆண்டுகளில் அதிகமாக விவாதிக்கப் பட்டது. அப்பொழுது அரசு “தொட்டில் குழந்தை திட்டம்” கொண்டு வரப்பட்டது. ஆனால், அதுவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. குழந்தைகள் காணாமல் போயின, திருடு போயின என்று செய்திகள் வந்தன[2]. ஆனால், அவை உண்மையில் விற்கப்பட்டன. இதற்காகவே பெண்கள் அதையே வைலையாகக் கொண்டு அலைந்து-திரிந்தனர். அந்நிய நாடுகளுக்கு ஒரு குழந்தை $20,000 முதல் 30,000 வரை, அதாவது ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதனால் தான் குழந்தை திருடிக் கொண்டு வருபவர்களுக்கே ரூ.10,000/- முதல் 50,000/- வரைக் கொடுக்கப்படுகிறது.  அதனால், குழந்தைகள்-சிறார்கள் வாங்கி-விற்கும் பொருட்கள் தாம் என்று சில ஊடகங்கள் எடுத்துக் காட்டின[3]. இதன் பின்னணியில் கிறிஸ்தவ மிஷனரிகள் இருப்பதை அப்பொழுது எடுத்துக் காட்ட ஏனோ தயங்கினர் போலும். ஆனால், இப்பொழுது கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான அத்தகைய கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்புள்ள விவகாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் “பிடோபைல்” தொல்லை என்று கூட செல்லமாகக் குறிப்பிட்டு “தீராத விளையாட்டுப் பிள்ளை” போல சித்தரித்து மறந்து விடுவார்கள். ஆனால், இவற்றில் சம்பந்தப்பட்டுள்ளது குழந்தைகள் தாம், டீன் – ஏஜ் பெண்கள் தாம்.

Voluntary co-ordinating agency - courtesy - Frontline photo

Voluntary co-ordinating agency – courtesy – Frontline photo

தத்து, தத்தெடுப்பது சட்டப்படி மற்றும் போலியாக நடப்பது: 1999லேயே சமூகநல சங்கம் என்ற பெயரில், பாதிரிகள் குழந்தைகளை வாங்குவது-விற்பது என்ற வியாபாரத்தில் ஈடுபட்டனர்[4].  எஸ். பீட்டர் சுப்பைய்யா என்ற பாதிரி அவ்வாறு செய்ததால், அவர் நடத்தி வந்த சங்கத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன[5].

பீட்டர் சுப்பையா- ஆந்திரா

பீட்டர் சுப்பையா- ஆந்திரா

ஆனால், இன்ரும் அவரது இணைதளத்தில் தம்மைப் பற்றி விளம்பரப்படுத்துக் கொண்டு வருகிறார்[6]. அந்நேரத்தில் தான் சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் திருடப்பட்டன. அந்நிலையில் குழந்தைகள் உற்பத்திற்கு, அனாதைகள் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் முதலியவை உபயோகப்படுத்தப் பட்டன[7]. இதில் தான் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு சாதகமான நிலை இருந்தது. குழந்தைகள் அந்நியநாட்டவர்களுக்கு தத்து கொடுக்கப்படுகிறது என்பதனால் அவர்களிடமிருந்து பணம் வந்தது. இல்லங்களைக் கட்டிக் கொள்ளவும் அப்பணம் உபயோகப்படுத்தப் பட்டது. முதலில் “உதவி” என்ற போர்வையில் அவர்கள் ஆரம்பித்து, பிறகு “தத்து” என்று ஆரம்பித்தனர்.

Jow with Peter Subbaiah

Jow with Peter Subbaiah

பணம் கிடைக்கிறது, தங்கள் குழந்தைகள் வெளிநாடுகளில் சந்தோஷமாக வாழ்வர் என்று, பல குழந்தைகள் பெற்ற ஏழைகள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை அவ்வாறு “தத்து” கொடுத்தனர். பிறகு தங்கள் குழந்தைகள் வேண்டும் என்றும் தகராறு செய்தனர். சிறுமிகள், கைவிடப்பட்ட அனாதை பெண்கள், கணவனிடமிருந்து பிரிந்த பெண்கள் என்று இவர்களுக்கு காப்பகத்தில் இடம் கொடுக்கிறோம் என்று அவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். நாளடைவில் அவர்களை வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தால், பணம் கொடுக்கிறோம் என்று ஆசை காட்டுகிறார்கள்[8]. பெரும்பாலும் ஒப்புக் கொண்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்களுடனே தங்கி, அவர்களுக்கு உதவியாக இருந்து விடுகின்றனர். ஏதோ காரணங்களுக்காக மறுக்கும் அல்லது பாதிக்கப் பட்ட பெண்கள் வெளியே வந்து புகார் கொடுக்கும் போது, விவரங்கள் தெரிய வருகின்றன. இது முதலில் விபச்சாரமாகக் கருதப் பட்டது, ஆனால், அதனை இப்பொழுது “வாடகைத் தாய்” என்று லட்சங்களில் புரளும் வியாபாரமாக்கி விட்டனர்[9].

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.2015

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.2015

சமூகநல ஆர்வலர்கள் எடுத்துக் காட்டுவது (2010 முதல் 2015 வரை):கோமல் கன்டோரா என்ற சிறுவர் உரிமைகள் இயக்கத்தின் இயக்குனர், “இரண்டு முதல் நான்கு வயது வரையில் உள்ள குழந்தைகள் தாம் இவர்களின் குறியாக இருக்கின்றன. இதெல்லாம் குழந்தை கடத்தலா அல்லது இவ்வாறு குழந்தைகளைக் கடத்தி நிதி பெறுகிறார்களா என்று தெரியவில்லை. இத்தலைய மீறல்கள் இருக்கும் வரையில் அரசின் கண்காணிப்பு, சோதனைகள் முதலியவை இருக்க வேண்டும்”, என்று கருத்துத் தெரிவித்தார்[10].  இதே ரஸ்ஸல் ராஜ் ஜூலை.2015ல் மனைவி, மாமியார்களுடன் கைது செய்யப்படுகிறார், மாமனார் தப்பித்துக் கொண்டார் போலும். பிரபுதாஸ் விசயத்தில், ஏ. நாராயணன் கூறியுள்ளதாவது[11], “சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப் படும் இல்லங்களினின்று சிறுமிகளை காப்பாற்றிய பிறகு எல்லா விதிமுறைகளையும் போலீஸார் மீறுகின்றனர். குழந்தை கர்ப்பமாக இருந்தது இரண்டு மாதங்கள் வரையும் கண்டுகொள்ளாமல் விடுப்பது ஆச்சரியமாக உள்ளது. சிறுமிகள் மீட்டவுடன் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், போலீஸார் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைகின்றனர். இது சிறார் நீதி சட்டத்திற்கு [Juvenile Justice Act] புறம்பானது.” டி.ஜிபிக்கு கொடுத்துள்ள மனுவில் 9ல், 8 குழந்தைகள் அவ்வாறு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முதலில் குழந்தைநல கமிட்டியின் முன்பு உரிய விசாரணைக்குட்படுத்திய பிறகு, அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் போன்றவற்றை செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் Juvenile Justice Act, 2000 and Tamil Nadu Juvenile Justice Rules, 2001 சட்டங்களின் கீழ் செய்யவேண்டியவை[12].

வேதபிரகாஷ்

© 06-09-2015

[1] http://www.independent.co.uk/news/indian-babies-sold-to-west-for-adoption-1084609.html

[2] Abducting babies by a variety of methods, including organised kidnapping as is clear from the Tamil Nadu and Andhra Pradesh experience.

[3] http://www.thehindu.com/2001/04/29/stories/05291348.htm

[4] In 1999, the country was shocked by the revelation of an inter-country adoption racket in Andhra Pradesh when S. Peter Subbiah of Good Samaritan Evangelical Social Welfare Association was found buying and selling babies.

http://www.frontline.in/static/html/fl2211/stories/20050603006700400.htm

[5] http://mha1.nic.in/fcra/NGOs_AccountsFrozen.pdf

[6] http://www.goodsamaritanorphanhomes.org/; http://www.goodsamaritanorphanhomes.org/authentication/

[7] Asha Krishnakumar, The Adoption market, Frontline, Vo.22, Issue.11, May21-June.03,2005.

[8] Identifying vulnerable mothers – from poor families, unwed or single – and enticing them to give up their babies. The pressure may be exerted before the birth, at the maternity clinic or hospital, or in the adoption agency, which may house the mother till delivery. Such pressure is also reinforced by free pre- and post-natal care. For example, a children’s home in a Chennai suburb runs a short-stay home for deserted, destitute and abandoned women. It takes particular interest in rehabilitating unwed mothers who give away their children in adoption. http://www.frontline.in/static/html/fl2211/stories/20050603006700400.htm

[9] Offering women financial incentives to conceive a child specifically for adoption abroad and luring poor women to sell their babies. http://www.frontline.in/static/html/fl2211/stories/20050603006700400.htm

[10] “Children between the ages of 2 and 4 are most vulnerable,” said Komal Ganotra, Delhi-based director for policy, research and advocacy for CRY (Child Rights and You).”We don’t know whether there is an adoption racket, or they are trafficked to raise money from donations,” he said.  Activists say monitoring systems need to be strengthened even for government registered homes. “Inspections must be continuous as these children are under someone else’s custody and they are tutored to speak only certain things,” said Ganotra. “If they are abused, children will open up to people who continuously visit them. So it is important they have an external interface. We find lesser instances of abuse among children who stay in child care homes and go out to a public school.”

http://timesofindia.indiatimes.com/city/chennai/Child-rescued-from-unlicensed-home-in-Chennai-fourth-in-three-days/articleshow/47797478.cms

[11]  Indian Express, Police Flout All Norms After Rescuing Children From Illegal Homes: Activist, By Express News Service, Published: 06th September 2015 04:08 AM; Last Updated: 06th September 2015 04:14 AM.

[12] http://www.newindianexpress.com/cities/chennai/Police-Flout-All-Norms-After-Rescuing-Children-From-Illegal-Homes-Activist/2015/09/06/article3013001.ece2

வேலூர் கிருத்துவ மருத்துவமனை (CMC) தத்தெடுப்பில் சட்டமீறல்கள்!

மே 10, 2011

வேலூர் கிருத்துவ மருத்துவமனை (CMC) தத்தெடுப்பில் சட்டமீறல்கள்!

 

குழந்தைகள் கடத்தல், முறையற்ற தத்தெடுப்பு, குழந்தை விற்பனை, குழந்தைகளை பிச்சைக்கு ஈடுபடுத்துதல் போன்ற பல குற்றங்களில் கிருத்துவர்கள் ஈடுபட்டுவந்துள்ளது, மறுபடி-மறுபடி வெளிவந்த வண்ணம் உள்ளன[1]. தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் பெருகி வருவதால், போலீஸ்துறை விழிப்பாக இருக்கும்படி ஏப்ரல் 20, 2011 அன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது[2].

வேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவ மனை மருத்துவ சிகிச்சைக்கும், மதமாற்றத்திற்கும் பெயர் போனது. வேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவ மனை மருத்துவ சிகிச்சைக்கும், மதமாற்றத்திற்கும் பெயர் போனது. சமீபத்தில் சட்டத்திற்கு புறம்பாக தத்தெடுப்பு விவகாரத்தில் இது ஈடுபட்டுள்ளது கண்டு, நால்வர் குழு திகைத்துள்ளது[3]. சிசுபவனம் என்ற அமைப்பு அனாதை குழந்தைகள் மையம் வைத்து நடத்துகின்றது. கடந்த ஆண்டுகளில் அனாதையாக கிடக்கும் குழந்தைகளை கிருத்துவ மருத்துவ மனை சிசு பவனத்திற்கு கொடுத்துள்ளது. ஆனால், சிசு பவனம் குழந்தைகளை சட்டத்திற்கு மீறி அக்குழந்தைகளை தத்திற்கு கிருத்துவ மருத்துவ மனைக்குத் தெரிந்தே கொடுத்துள்ளது[4]. கடந்த மூன்று வருடங்களில் இவ்வாறு எத்தனை குழந்தைகளை தத்தாக கொடுத்துள்ளது என்று கேட்டுள்ளது[5].

சி.எம்.சியின் பெயரைக் காப்பாற்ற அரங்கமேறும் நாடகங்கள்[6]: சிசு பவன் மற்றும் கிருத்துவ மருத்துவ மனை தெரியாமல் அத்தகைய சட்டமீறல்களை செய்துவிட்டது என்று அந்த நால்வர் கமிட்டியின் அங்கத்தினரே கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது[7]. அதாவது குற்றத்தைக் கண்டுபிடித்த கமிட்டியே அவாறான வெள்ளையெடிப்பு வேலை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இவ்வளவு நடந்தும் தமிழ் ஊடகங்கள் மௌனமாகவே இருந்து வருகின்றன[8].

“ஜஸ்ட் டயல் தததெடுப்பு: கர்நாடகத்தில் ஹோரமாவு என்ற நகரத்தில் கல்கரே என்ற இடத்தில் இருக்கும் அனாதை இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 2010ல் 19 அனாதை குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த செய்தி வெளிவந்த போதுதான் பதிவு செய்யாமல், ரீடா தாமஸ் என்பவர் அந்த அனாதை இல்லத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது[9]. ஜஸ்ட் டயல்.காம் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்திருந்தது. 2005ல் தொடங்கப்பட்டது. 12 குழந்தைகளை ததெடுக்கவும் கொடுத்திருக்கிறார்கள்; போலீஸ் மற்றும் குழந்தை பாதுகாப்பு இணையத்து அதிகாரிகள் அந்த இல்லத்திற்கு சென்றபோது 7 முதல் 12 வயது வரையிலுள்ள 29 குழந்தைகள் இருந்தன. ஆனால் எந்த ஆவணமோ, பதிவு புத்தகமோ வைத்திருக்கவில்லை.

மங்களூரில் ஜாய்-எலிஸபெத் ஜாலியாக செய்து வந்த வியாபாரம்: மங்களூர் நகரத்தில், ஹலெயங்காடி என்ற பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட இடத்தில், கே.ஜே. ஜாய் மற்றும் அவரது மனைவி எலிஸெபெத் எபினேசர் பிரேயர் ஹால் என்ற பெயரில், லைசென்ஸ் இல்லாமல், அனாதை இல்லம் மற்றும் குழந்தைகளை தத்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஏப்ரல் 2, 2011 அன்று போலீஸ் ரெய்ட் நடத்தியபோது, இவ்விவரங்கள் தெரியவந்தன[10]. அதுமட்டுமல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக இவ்வேலைகளை செய்து வந்ததோடு, மதம் மாற்றத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். குழந்தைகளை பராமரிப்பது, தத்து கொடுத்தது, போன்ற விவரங்களை வைத்துக் கொள்ளாதிருந்ததாலும், அவற்றை மறத்ததாலும், இருவரும் போலீஸாறல் கைது செய்யப்பட்டனர்[11].

தொட்டில் குழந்தைகளையும் விட்டு வைக்காத பாதிரி: அல்போன்ஸ் சேவியர் என்ற பாதிரி, படப்பை சென்னையில் அத்தகைய அனாதை இல்லத்தை நடத்தியதால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டான்[12]. அதுமட்டுமல்லாது, தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் வளர்த்து வரும் குழந்தைகளை விற்றும் உள்ளான். இதற்கு கூட்டாக வேலை செய்த் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.


[3] A four-member committee, which was constituted by the district court to conduct an inquiry into a case of illegal child adoption, has found that the famous Christian Medical College (CMC) hospital had sent two abandoned babies to Sishu Bhavan, a children’s home in Vellore, without informing the Child Welfare Committee (CWC) as per norms.

[4] The committee visited Shishu Bhavan, the CCI from where the children were given in adoption. The DWSO, Vellore, Gomathi, a member of the committee, told The Hindu that the panel confirmed that Shishu Bhavan had given the two children in adoption, though it was not an authorised adoption agency.

[7] Another committee member, speaking on condition of anonymity, said both CMC and Shishu Bhavan had taken the steps they did in the best interests of the children, but had inadvertently violated the JJA, which states that the children had to be produced before the district-level CCI, which has the powers of a First Class Magistrate to take decisions on placement of children in suitable homes for adoption.