Archive for the ‘நார்மன் பாஸ்கர்’ Category

நார்மன் பாஸ்கர், திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர், வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில் கைது!

மே 17, 2017

நார்மன் பாஸ்கர்,  திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர், வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில் கைது!

Trichy Norman Baskar arrested -VGP-16-05-2017-Vikatan photo.வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிட் மற்றும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபை நிலம் வாங்கவிற்க போட்ட ஒப்பந்தம்: தொடர்ந்து நடந்து வரும் கிறிஸ்தவ மோசடிகளில் இன்னொரு வழக்கு மூலம் விவரங்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் பணப்பரிமாற்றம், நிலம் அபகரிப்பு, முதலிய விவகாரங்களில் அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி, ஒருவர் மீது, ஒருவர் புகார் கொடுத்து, வழக்குகளும் போடப்படுகின்ற நிலை உண்டாகி விட்டது. கோடிகளில் பணம் இருக்கும் போது, எல்லாமே மறக்கப்படுகின்றன. இந்த திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை விவகாரமும் அப்படித்தான் உள்ளது. திருச்சி, கருமண்டபம் பொன்நகர் பகுதியில் இயங்கிவரும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான 70 சென்ட் இடத்தை, அந்தச் சபையின் தலைமைப் போதகர் மற்றும் முக்கியமான நிர்வாகிகள், சென்னையைச்  சேர்ந்த வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக ஒப்பந்தம் 2011ல் போடப்பட்டது.

Trichy Norman Baskar arrested 16-05-2017-Vikatan photo

ஒப்பந்தம் போட்டு, பணம் கொடுத்த பின்னர், இடம் மாற்றிக் கொடுக்கப் படாதலால் புகார், வழக்கு: அதன்பிறகு நடந்ததை, வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனத்தின் துணைத்தலைவர் தங்கையா நம்மிடம் விவரித்தார்[1], “இந்த .ஜி சர்ச் என்பது மிகப்பெரிய திருச்சபை. நாடு முழுவதும் அதற்கு கிளைகள் உள்ளன[2]. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள், சபையின் முக்கிய நிர்வாகிகள், ஒப்புதல் வழங்கியதாக ஆவணங்கள் கொடுத்ததன் அடிப்படையில், .ஜி சபைக்குச் சொந்தமான இடத்தை வாங்கிட 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டோம்[3]. அந்த ஒப்பந்தப்படி, 6 கோடியே 88 லட்சம் பணத்தை வங்கியின்மூலம், சபைக்கு நாங்கள்  செலுத்தியுள்ளோம். மேலும், நிலத்தை எழுதித் தரும்போது மீதமுள்ள ரூபாய் 12 லட்சத்தைத் தருவதாக தலைமை போதகர் நார்மன் பாஸ்கரிடம் கூறியிருந்தோம். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால், அவர்கள் சொன்னபடி, திருச்சபை நிலத்தை நார்மன் பாஸ்கர் எழுதிக் கொடுக்கவில்லை. நாங்கள் பலமுறை நேரில் கேட்டோம். ஆனாலும் இழுத்தடித்தார். இந்நிலையில்தான் கடந்த வருடம் எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலத்தை எழுதிக்கொடுக்காமல், மோசடிசெய்யும் தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மற்றும் சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ், ஸ்டீஃபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குத் தொடர்ந்தோம்.

 Norman Baskar arrested for fraud -17-05-2017

ஒப்பந்தம் போட்டவர்களில்  நார்மன் பாஸ்கர் தவிர மற்றவர் ஒதுங்கிக் கொண்டது: தங்கையா மேலும் விவரித்தார், “திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், நார்மன் பாஸ்கரைத் தவிர மற்றவர்கள் நார்மன் பாஸ்கர் தன்னிச்சையாக நிலத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும், இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறி முன் ஜாமீன் வாங்கினார்கள்[4]. நார்மன் பாஸ்கரின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதால், தலைமறைவானார்[5]. அடுத்து, அவர் சபையை விட்டு நீக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். எங்களுடன்  போடப்பட்ட ஒப்பந்தப்படி, நிலம் கொடுக்காமல் மோசடி செய்த தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நாங்கள் அடுத்தடுத்து எடுத்த முயற்சியின் காரணமாக, திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார் அவரைக் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்”” என்றார்[6].

Norman Baskar arrested for fraud -Trichy--17-05-2017

ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதும், நார்மன் பாஸ்கர் கைது: இதுகுறித்து விஜிபி நிறுவன திருச்சி கிளையின் துணைத் தலைவர் தங்கையா, 2016 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்போதைய திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு, மதபோதகர் நார்மன் பாஸ்கர் விண்ணப்பித்திருந்தார்[7]. இந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார், மதபோதகர் நார்மன் பாஸ்கரை 16-05-2017 செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்[8]. நார்மன் பாஸ்கர் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்[9]. என்றாலும் மதபோதகர் ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].

Norman Baskar AG--17-05-2017-facebook photo

திருச்சி நார்மன் பாஸ்கர் பின்னணி: பாஸ்டரான இவர், திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபையில் பிரபலமாக இருந்து வந்திருக்கிறரார். பேஸ்புக்[11], லிங்கெட்[12] என்று இணைதள செயல்பாடுகளில், தீவிரமாக இருந்து வந்திருக்கிறரார். பல கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், கொண்ட்டாட்டங்கள் என்று ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கில் கூட பிரச்சாரம் செய்துள்ளார். இளைஞர்களை வைத்து, சுற்றுல்லா, ஆட்டம், பாட்டம், கொண்ட்டாட்ட என்று நடத்தியுள்ளார். ஆனால், இந்த நில விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்டார் போலும். இருப்பினும், இவ்வாறான மோசடிகளை செய்ய இவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது என்று தெரியவில்லை. “தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது” என்றெல்லாம் செய்தி வந்தலும், எப்படி பொறுத்துப் போகிறார்கள் என்று தெரியவில்லை[13]. பரபரப்பு ஏற்பட்டது என்றாலும், நிலைமை என்ன என்று சொல்லவேண்டுமே[14]. பாதிரியாரே இப்படி செய்யலாமே என்று கேட்டாலும், தொடர்ந்து நடக்கும் போது, கருப்பு ஆடுகள் ஏன் வழிப்படுத்தப் படவில்லை என்பதும்  தெரியவில்லை[15]. ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து, பரிசுத்த ஆவி, மேரி, கர்த்தர் என்று யாரும் கவனிக்காமல் இருக்கிறார்கள், இவர் தொடர்ந்து இவ்வாறு அத்து மீறி மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[16].

VGP RAjadass arrsted for cheating - September 2010

விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் முன்னர் நிலமோசடியில் சிக்கிக் கொண்டது[17]: விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் விஜிபி. ராஜாதாஸ் (45) மறைந்த விஜிபி பன்னீர் தாசின் மகன். ஏ. எட்வின் கிரிஸ்டோபர் தனது மாமனார் எம். மரியதாஸ் கஸ்ரீஅப்பாக்கம் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை மூன்று லட்சத்திற்கு 1981ல் வாங்கியிருந்தார். அங்கு எறால் பண்ணை வைப்பதற்காக வங்கியிலிருந்து ரூ. 2.36 லட்சங்கள் கடன் வாங்கினார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால், சேர்ந்துவிட்ட ஐந்து லடசம் கடனைத் திருமப் பெற முடியாத நிலையில் 3 லட்சம் கொடுத்து ஏலத்தில் மீட்டார்.  2004ல் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டிற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தார். ஆனால், 27-04-2008 அன்று இறந்து விட்டார். அவ்வாறான நிலையில் பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது என்றபோதும், ராஜதாஸ் நிலத்தை தனது சித்தப்பாவான விஜி சந்தோஷத்திற்கு (75) “மார்க்கெட் விலைப்படி என்று ரூ.35 கோடிக்கு” விற்றிருக்கிறார். அவர் V G Panneerdas and Co Pvt Ltd ன் இயக்குனர் ஆவார். விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்[18]. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[19]. ஒருவேளை, இது தெரிந்ததால் வந்த தைரியமா? கர்த்தருக்குத் தான் வெளிச்சம்!

© வேதபிரகாஷ்

17-05-2017

Norman Baskar AG--wife-17-05-2017-facebook photo

[1] விகடன், 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது! , சி.. ஆனந்தகுமார், Posted Date : 05:34 (17/05/2017); Last updated : 07:48 (17/05/2017)

[2] நக்கீரன், 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக போதகர் கைது, பதிவு செய்த நாள் : 17, மே 2017 (9:32 IST); மாற்றம் செய்த நாள் :17, மே 2017 (9:32 IST)

[3] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=191566

[4] மாலைமலர், நிலத்தை விற்பதாக கூறி ரூ.7 கோடி மோசடி: திருச்சியில் கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 5 பேர் மீது வழக்கு, பதிவு: ஆகஸ்ட் 17, 2016 12:52

[5] http://www.maalaimalar.com/News/District/2016/08/17125251/1033058/Christian-priest-including-5-people-sued-for-rs-7.vpf

[6] http://www.vikatan.com/news/tamilnadu/89538-religious-preacher-arrested-in-trichy.html

[7] தினமணி, ரூ.6.88 கோடி மோசடி: மதபோதகர் கைது, Published on Wednesday, May 17, 2017, 01:41 [IST].

[8] http://www.dinamani.com/tamilnadu/2017/may/17/%E0%AE%B0%E0%AF%82688-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2703372.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நிலத்தை விற்பதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி.. பலே மதபோதகரை மடக்கிப் பிடித்த போலீசார், By: Amudhavalli, Published: Wednesday, May 17, 2017, 13:36 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/fraud-land-sale-christian-priest-arrested-282959.html

[11] https://www.facebook.com/trichycityag/

[12] https://in.linkedin.com/in/norman-bhasker-442b8735

[13] தமிழ்.முரசு, தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது , May 17, 2017.

[14]  http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107426

[15] அங்குசம், திருச்சி  கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது, May 17, 2017.

[16] http://angusam.com/2016/08/17/trichy-fraud-case-against-a-christian-paster-norman-basker/

[17]  https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/

[18] The Hindu, Held on charge of cheating, CHENNAI, SEPTEMBER 24, 2010 00:53 IST;  UPDATED: SEPTEMBER 24, 2010 00:53 IST

[19] http://www.thehindu.com/news/cities/chennai/Held-on-charge-of-cheating/article16044792.ece

 https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/