Archive for the ‘சுவாமி லட்சுமணானந்தர்’ Category

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன? ஒரு இந்து எப்பொழுது கொலைகாரன் ஆகமுடியும்! [3]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன? ஒரு இந்து எப்பொழுது கொலைகாரன் ஆகமுடியும்!  [3]

Lakhsmananada assassinated by Christian-maoists

கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன?: கிராம் ஸ்டைன் கொல்லப்பட்டது 1999ல், அதில், சிக்கியது தாராசிங். சுவாமி லக்ஷமணானந்த மற்றும் அவரது சீடர்கள் நான்கு பேர், ஒரு சிறுவன் உட்பட, ஆகஸ்டு 23, 2008 அன்று, கிருஷ்ண ஜன்மாஸ்டமி அன்று, கிருத்துவ-மாவோயிற்குகளால், கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று “பஜ்ரங் தள்” பற்றி ஊளையிடும் ஊடகங்கள், பிரச்சார கும்பல்கள் 82 வயது கிழவர் ஏன் கொல்லப் பட வேண்டும் என்று கட்டுரைகள் எழுதுவது இல்லை. நடு இரவில் அவ்வாறு, AK-47 துப்பாக்கிகளோடு 30-40 கும்பல் சூழ்ந்து கொண்டு சுட்டுத் தள்ள வேண்டும் என்று விவாதிப்பது இல்லை. அவர் மதமாற்றத்திற்கு இடையூராக இருந்தார், வனவாசிகளை, SC-STக்களை இணைத்தார் என்பதால் கொல்லப்பட்டார் என்பது கண்கூடு, ஏனெனில், இவையெலாம் கிருத்துவர்களுக்கு-மாவோயிஸ்டுகளுக்கு இடைஞ்சலாக இருந்தன. ஆனால், கிராம் ஸ்டைன் கொல்லப்பட்டது புதிரானது. மதமாற்றம் மட்டும் காரணமாகாது. இன்றுவரை வெளிவந்துள்ள ஆங்கில ஊடகங்களில் ஆதாரமாக ஒன்றைகூடக் குறிப்பிடாமல், விஷமத் தனமாக தலைப்பிட்டுள்ளனர். ஆனால், இவற்றையே இணைத்து, அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி மீது அவதூறான செய்திகளை இப்பொழுது வெளியிடுகின்றன.

Naveen Patnaik at the Jalespata ashram, the site of the murder of Swami Lakshmanananda Saraswati, on August 31, 2008.

வன்முறை / ஹிம்சை மற்றும் அஹிம்சை பற்றிய மனோதத்துவம்[1]: கொலை என்பது, வன்முறையை மனோதத்துவ ரீதியில் அபடித்துப் பார்த்தால், மனிதன் தனது பொறுமையின் எல்லைகளை எல்லாம் கடந்து, அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை அல்லது ஏதாவது ஒன்று செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஊக்குவிக்கப்பட்டு அவன் தள்ளப்படுகின்ற நிலையில், அவன் அத்தகைய முடிவுக்குத்  தள்ளப்படுகிறான். கொலை செய்வதற்கான எண்ணம், உத்தேசம், நோக்கம், செயல் படவேண்டும் என்ற தூண்டுதல் உணர்ச்சி முதலிவற்றைப் பற்றி மனோதத்துவ ரீதியில் ஆராயவேண்டும்.  குறிப்பாக அகிம்சையை போதிக்கும் தத்துவம் நாட்டில், எவனும் கொலை செய்ய மாட்டான். அந்நிலையில், அஹிம்சையை மீறி, மறுபடியும் அவன் ஹிம்சை / வன்முறை செயலில் ஈடுபடுவது செய்யத் தூண்டுவது எது என்று தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் 600 வருடங்களாக, முகமதிய படையெடுப்பு, அநியாயங்கள் கொலைகள், முதலியவற்றை கண்டும், அனுபவித்தும், வருத்தப்பட்டும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல 300 வருடங்களாக ஐரோப்பிய-ஆங்கிலேய ஆட்சிகளால், நேராகவும் மறைமுகமாகவும்  பற்பல குரூரங்களை, சட்ட விதி முறைகள் மூலமும், பட்டினி வரி விதிப்பது போன்ற அடாவடித்தனங்களைம் அனுபவித்திருக்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் அவர்கள் வன்முறை என்ற நிலைகுத் தள்ளப்பட்டுள்ளனர். சௌரி-சௌரா வன்முறை பற்றி அதிகமாகவே அலசப்பட்டுள்ளது இது சமீப கால நிகழ்வு என்பதனால் குறிப்பிடப்படுகிறது அதேபோலத்தான் இந்த ஸ்டைன்ஸ் கொலை வழக்கும்.

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists-2

இந்து என்பவன் எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டான்: ஒரு இந்து என்பவன், பொதுவாக எந்த உயிரையும் கொல்ல நினைக்கமாட்டான். ஈ.,எறும்பு போன்றவற்றை கூட நசுக்க தயங்குவான். குறிப்பாக தாவர உணவு உண்பவன் எத்தகைய உயிர்கொலை அல்லது துன்புறுத்தலுக்கும் உடன்பட மாட்டான். அந்நிலையில் ஸ்டென்ஸை தீவைத்து கொளுத்தி கொன்றனர் எனும்பொழுது அவ்வாறு ஏன் நடந்தது என்பதையும் உன்னிப்பாக ஆராய வேண்டும். அவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள் என்பது மட்டும் முக்கியமான காரணம் சொன்னாலும் ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. அதாவது அந்த காரணம் கொல்வதற்கு ஊக்குவிக்கும் அல்லது தூண்டும்முறையில் உள்ளது என்று சொல்ல முடியாது.  உடல், உயிர், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம், முதலிய சித்தாந்தங்களை நம்புகின்ற ஒரு பாமர மனிதன், அதாவது ஒரு சாதாரண இந்து, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொள்ளமாட்டான். ஆகவே அங்கிருந்த வனவாசிகள் மற்றும் எஸ்சி மக்கள் எதற்காக இவரரை கொல்ல வேண்டும் என்பது பற்றி, நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists

ஸ்டைன்ஸை கொல்லும் அளவிற்கு மனப்பாங்கு எவ்வாறு உண்டாகி இருக்கும்?: நமக்கு தெரியும் விவரங்களிலிருந்து,

  1. இவன் ST-SC மக்களுக்கு இடையே வேறுபாடுகளை உண்டாக்கினான்,
  2. எஸ்.டி.யை, எஸ்சியாக மாற்றுவேன் என்று செயல்பட்டிருக்கிறான்
  3. பாரம்பரிய விழாக்கள் சடங்குகள் நடப்பது தடுத்திருக்கிறான்,
  4. ஒருவேளை அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் எதிராக எதையாவது சொல்லி பிரச்சாரம் செய்திருக்கலாம்
  5. குறிப்பாக நீ வணங்கும் தெய்வங்கள் எல்லாம் போய்
  6. அவை உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது,
  7. இப்பொழுது உங்களை பலர் பாதித்து வருகின்றனர் ஆனால், அவர்களை உங்கள் தெய்வங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை

 என்ற பாணியில் அவன் போதித்திருக்கலாம். இவை அவர்களை பெருமளவில் மங்களை பாதித்து இருக்கும்; மனங்களிலும் குழப்பம் ஏற்படுத்தியிருக்கும்; பிறப்பில் இருந்து இறக்கும் வரை அவர்களது குல தெய்வங்களை நம்பி வாழ்ந்தவர்கள், இத்தகைய போதனை அல்லது பிரச்சாரம் மனதளவில் வெகுவாக பாதித்து இருக்க வேண்டும். அவர்களுக்குள்ளேயே மோதல்கள், சண்டைகள், கலவரங்கள் ஏற்படசெய்து, ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது, கொல்வது என்ற நிலையில் இருக்கின்ற நிலையில் இத்தகைய தூண்டுதல், அவன் மீது அதிக அளவில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும்

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists-4

ஸ்வாமி லக்ஷ்மானந்தா முன்னரே பலமுறை தாக்கப் பட்டுள்ளார்: முன்னர் கிருத்துவர்களால், இவர் பலமுறை தாக்கப் பட்டுள்ளார். பேரூந்தில் சென்று கொண்டிருந்த பிரம்மநிகாவ் கிராமத்திற்குச் செல்லும் போது, பன்னாவைச் சேர்ந்த சுக்ரிபா சிங் என்ற  கிருத்துவத் தலைவர், வழி மறித்து, தாக்கினர். அதில் டிரைவர், பாதுகாவளி மற்றும் இவர் காயமடைந்தனர். தாக்கியவர்களில் ஒருவரை, காங்கிரஸ் ராஜ்ய சபா எம்பி, ராதா கன்ட நாயக் [Radhakant Nayak[2] ] என்று அடையாளம் கண்டு, விசாரணையில் தெரிவித்தார். இதுவரை, ஏழு முறை அவர்கள் தாக்கியதாகத் தெரிவித்தார். ஸ்வாமி கொலையுண்ட பிறகு, இவர் மீது குற்றம் ச்ச்ச்பட்டது[3]. எஸ்சிக்களை மதம் மாற்றும் திட்டங்களில் நாயக் கிருத்துவர்களுக்கு உதவினார். மதம் மாறிய பனோஸ் என்ற குய் மொழி பேசும் எஸ்.டிக்களுக்கு[ST] எஸ்.சி [SC] அந்தஸ்து வாங்கிக் கொடுக்கிறேன் என்றும் வேலை செய்தார்[4]. அதாவது எஸ்.டி தான் எஸ்.சிஐ விட இடவொதிக்கீட்டு விசயத்தில் நல்லது, சீக்கிரம் வேலை பலன் கிடைக்கும். ஆனால், எஸ்சி ஆக்குகிறேன் என்பதில் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. இருப்பினும், இவர் மற்றும் கிருத்துவர்கள் என்ன திட்டம் போட்டார்கள் என்று தெரியவில்லை. மதம் மாறிய எஸ்.சி கிருத்துவர்களுக்கு சலுகை இல்லை என்பதால், எஸ்.சி கிருத்துவ ஜனத்தொகையைப் பெருக்கி, அதை வைத்து, எஸ்சி கிருத்துவர்களுக்கு, இந்து-எஸ்சி இடவொதிக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக்க, இந்த திட்டத்தை பின்பற்றினார் என்ரும் ஊகிக்கலாம். இருப்பினும், அம்மகளிடையே வெறுப்பை உண்டாக்கி, பிரிவுகள் ஏற்படுத்தி, கலவரங்களை உண்டாக்க திட்டம் போட்டது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-06-2019

Radhakant Nayak IAS, Congress

[1] Vedaprakash, Psychology of violence and non-violence,

[2] Radhakant Nayak is an Indian politician belonging to the Indian National Congress party. He is a Member of the Parliament of India representing Orissa in the Rajya Sabha, the upper house of the Indian Parliament. Radhakant Nayak, a 1962 batch IAS officer. Nayak is also connected with the Young Men’s Christian Association (YMCA) and is one of the most high-profile Christians in Orissa.

In October 2007, the Kandhamal district Kui Samaj Coordination Committee demanded his resignation. The rationale for the demand was Nayak’s support for classifying Panas as Kui tribals, a move that the KSCC opposed. In October 2008, Nayak was accused by local Hindu groups, including the chapters of the BJP and VHP, of being behind the murder of Swami Laksmanananda Saraswati, and police have been investigating persons close to him.

Nayak is under investigation by the Orissa Police as of December 2008. Nayak has termed the allegations “defamation and maligning of my character”.

[3] http://archive.indianexpress.com/news/net-closes-in-on-cong-mp-for-orissa-swami-s-murder/403507/

[4] The Mumbai Mirror, Congress MP fears slain VHP leader’s followers may target him, By Lakshmi Iyer | Updated: Aug 29, 2008, 03:25 IST .

Congress Rajya Sabha MP from Orissa Radhakant Nayak, who is known to have openly crossed swords with slain VHP leader Swami Lakshmananda Saraswati on the conversion issue, is staying put in Delhi as he fears for his life. According to the Kandhamal police website, the conversion of tribal population has been a major source of trouble in the area. The numbers of Christians in the district has been increasing steadily and, as per 1991 Census, account for 15 per cent of the population. There is opposition to the activities of missionaries in some areas such as Kotagarh, Balliguda, Sarangada, Phiringia PS areas. Due to this recent development, there is ill-feeling and tension on communal lines in villages. Sources said Nayak’s efforts to get ST status for Kui-speaking Panos who have converted to Christianity has been one of

 the causes for communal friction. Nayak is a Dalit who  belongs to the Pano caste. Congress sources said Nayak refuses to visit Orissa fearing for his life. On Wednesday, he reportedly met Congress president Sonia Gandhi and sought extra security cover for himself, stating that he feared a revenge attack.

https://mumbaimirror.indiatimes.com/news/india/Congress-MP-fears-slain-VHP-leaders-followers-may-target-him/articleshow/15846789.cms?