Archive for the ‘ஹெப்ரான் சர்ச்’ Category

ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்! [2]

ஜூலை 16, 2018

ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களாஇல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதாஇல்லையா, சிஎம்டிஏவை கலைத்து விட்டால் என்னகேட்பது உயர்நீதி மன்றம்! [2]

Hebron Castle chruch - protest-demo-politicizing issue

கே. பி. எடிசன் 2011ல் திமுகவை ஆதரித்தது[1]: கலைஞர் டிவி நடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது. அதில், கே. பி. எடிசன் பேசியது, “மதம் மாற்றச் சட்டம் இருந்தபோது, பல அடக்குமுறைகள் செய்யப்பட்டன. அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்தோம். மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறது. நான் கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போது, நிருபர் குறிப்பிட்ட விஷயத்திற்கு இழுக்கிறார்). சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதி வேண்டும் என்றமுறை இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லைபுரியவில்லை. ஆனால், சமீபத்தில் அவ்வாறு தேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்து, அதில் சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார். இந்துக்கள் காஷ்மீரத்தில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; பஞ்சாபில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப் பட்டால், என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்”.  சர்ச் கட்டிக்கொள்வதற்கு கருணாநிதி இடம் கொடுத்தார் என்பது திகைப்பாக இருக்கிறது. அரசியல் ஆதரவை வைத்துக் கொண்டால், சட்டங்களை மீறலாம் போன்ற செயல்பாடுகள், சமூகத்தில் அமைதியை உண்டாக்காது,

Hebron church, nungambakkam-politicized 2018

தனிமனித சட்டமீறல்கள் மற்றும் குற்றங்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பாவார்கள்: எதற்கெடுத்தாலும், மோடியைத் தாக்குவது என்ற நிலைப்பாடுள்ளதும் விசித்திரமாக உள்ளது. இங்கு பொறுத்தவரை, 2006லிருந்தே பிரச்சினை இருக்கும் போது மோடி எங்கிருந்தார் என்று தெரியவில்லை. தனிமனித மற்றும் கிருத்துவர் – எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தொடர்ந்து சட்டங்களை மீறி வருவது, வாடிக்கையாக உள்ளநிலையில், அவற்றை மறைத்து, இன்னொருவர் மீது பழி போட்டு, நாடகம் ஆடுவது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், உண்மையில் இந்த சட்டமீறல்களில், குற்றங்களில், யார் தாக்கப்படுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். டிசம்பர் 2017ல் ஒன்றும் தெரியாத அப்பாவி போல, இதே எடிசன், மற்ற கிருத்துவ கோஷ்டிகளுடன் சேர்ந்து கொண்டு [ஜான் தயாள் உட்பட] ஏதோ சர்ச்சுகள் எல்லாம் தாக்கப்படுகின்றன, உடனே நிறுத்துங்கள் என்று கூப்பாடு போட்டது தமாஷாக இருந்தது. அந்த அருமையான செய்தியை “தி இந்து” தான் வெளியிட்டது[2]. ஜான் தயாள் தமக்கே உரிய பாணியில், இந்தியாவில் சர்ச்சுகளுக்கு எதிரான வன்முறை தாக்குதல்கள் 250 நடந்துள்ளதாகவும், அவற்றில் 30 தமிழகத்தில் நடந்துள்ளதாக கூறியது வேடிக்கையாக இருந்தது[3].

Edison-henbron stopped tweeting

இதே சர்ச்சின் செயல்பாடு, வழக்கு பற்றி 2018ல் தி.இந்து செய்தி வெளியிடும் விதம்: இப்பொழுது, அதே “தி.இந்து” இப்பிரச்சினையைப் பற்றி, செய்தி வெளியிடும் போது[4], “It was during the hearing of a case related to the unauthorised construction of a multi-storey building in Nungambakkam here that the judges were told that the CMDA as well as Corporation officials lacked the manpower required to check unauthorised constructions. They were also told that the police officers seldom cooperated with the officials of the civic bodies,” என்று குறிப்பிட்டாலும், அது கே.பி.எடிசனின் மனு என்று குறிப்பிடவில்லை. ஆகவே, ஒரே நபர், ஒரே கட்டிடம், ஒரே – அதே வழக்கு, என்றாலும், இப்படி சாமத்தியமாக உண்மைகளை, அறியப்பட வேண்டிய சாதாரண தகவல்களை வெளிடாமல் இருப்பது, எத்தகைய பத்திரிகா தமத்தைச் சேர்ந்தது என்று தெரியவில்லை.” hearing a petition on a church, which was built by encroaching the building belonging to the corporation in Nungambakkam, Chennai” என்று மற்ற ஆங்கில நாளிதழ்கள் வெயிட்டபோது, உண்மைகளை, மக்கள் அறிய வேண்டிய தகவல்களை, “தி.இந்து” மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதில் வேடிக்கை என்னவென்றால், என், ராமின் மீதே நில அபகரிப்பு புகார், வழக்கு உள்ளது, அதனால் தான், தற்காலிகமாக, பதவி விலகி இருப்பதும் தெரிந்து விட்டது. இதுதான் “தி.இந்து”வின் கிருத்துவ சார்பினை எடுத்துக் காட்டுகிறது. அது “மார்க்ஸியத்துடன்” சேர்ந்து கொண்டு, செக்யூலரிஸ போர்வையில் உலா வந்து கொண்டிருக்கிறது. அப்பாவி வாசகர்களை ஏமாற்றி வருகின்றது.

Edison-hebron - December propaganda 2017, The Hindu

தி.இந்து-கிருத்துவ-மார்க்ஸீய சார்புடையதாக இருக்கிறாதா-இல்லையா?: என். ராம் இப்பொழுது, மிரியம் சாண்டி என்கின்ற, “மாமன்-மாப்பிள்ளை” குழுமத்தின் பெண்ணை மனைவியாகக் கொண்டிருக்கிறார், சிபிசிஐ மாநாட்டில் பேசுகிறார், கிருத்துவத்திற்கு சாதகமாக இருக்கிறார் என்றெல்லாம் தெரிகிறது. இதெல்லாம் அவரது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை விருப்பு-வெறுப்புளாக இருக்கலாம். அவற்றைப் பற்றி மற்றவர் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்த விருப்பு-வெறுப்புகள்:  மற்றவரை, குறிப்பாக இந்திய மக்களை, சமூகத்தை  பாதிக்கின்றன, சித்தாந்த ரீதியில் இருந்து கொண்ட, குறிப்பிட்ட மக்களுக்கு சாதகமாக-விரோதமாக இருக்கின்றன, அத்தகைய கருத்துருவாக்கங்களில் ஆதிக்கம் செல்லுத்த வலுக்கட்டாயமாக உபயோகப் படுத்தப் படுகிறது, மற்ற கருத்துகளை அமுக்கி, மறைத்து, அவை செயல்படுகின்றன என்ற நிலயுண்டாகும் போது, மற்றவர்களும் லவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Hebron church, nungambakkam-CMDA-High Court

2018ல் நீதிமன்றம் கேள்விகள் எழுப்பியது: 11-01-2018 அன்று கே.பி.எடிசன் போட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் மாதம் வரை, விதிமீறல்களை சரிசெய்ய, கால அவகாசம் கொடுத்தது. ஆனால், எடிசன் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை போலும். இதனால், இப்பொழுது மத்திய தணிக்கைக்குழு அறிக்கையில், சிஎம்டிஏயின் மெத்தனப் போக்கே, 2015-டிசம்பர் வெள்ளத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டது. அந்நிலையில் ஹெப்ரான் சர்ச்சின் மனு மறுபடியும், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்பாக வந்தபோது[5], ஏற்கெனவே நடந்துள்ள வழக்கின் போக்கை அறிந்து, இவ்விசயத்தில், சிஎம்டிஏ இவ்வாற்று நடந்து கொள்வது ஏன், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அமைதியாகி விட்டனரா[6], இப்படி வேலைசெய்யாமல் இருக்கும் இந்த சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன[7], என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விகள் நீதிபதிகளால் எழுப்பப் பட்டன[8]. நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி முன்பாக, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. 2006லிருந்தே, ஹெப்ரான் சர்ச், இவ்வழக்கை இப்படி இழுத்து வருவதை கண்டு, நீதிபதிகள், இவ்வாறு கேள்விகளை எழுப்பினர். நீதிமன்றம் ஜூலை 16ம்தேதி தம்முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆணையிட்டது[9].

© வேதபிரகாஷ்

15-07-2018

Hebron -beyond all acts and rules

[1]https://www.facebook.com/HebronCastleChurch/videos/pcb.1358924214161918/1358918130829193/?type=3&theater

[2] The Hindu, Stop violence against churches: forum, SPECIAL CORRESPONDENT CHENNAI , DECEMBER 23, 2017 23:44 IST, UPDATED: DECEMBER 23, 2017 23:44 IST

[3] The United Christian Forum and various Christian organisations called for action to put an end to violence against churches and Christians in Tamil Nadu.Representatives of Christian organisations, including the Synod of Pentecostal Churches, told a press meet here on Saturday that the State government and the Centre must take steps to stop the communal violence that had instilled fear among Christians. Citing the recent attacks in Coimbatore, John Dayal, spokesman, United Christian Forum for Human Rights, said there were about 250 attacks against Christians throughout the country. This year, nearly 30 incidents of vandalism of churches and attacks on Christians occurred in Tamil Nadu. Synod’s general secretary K.B. Edison said the recent incidents had triggered a sense of fear among Christians ahead of Christmas celebrations. The State must take action to bring an end to the hate campaign against minorities being done by Hindu fringe outfits.The forum had launched a helpline 18002084545 to aid victims of violence and intimidation by any criminal or political group.

 https://www.thehindu.com/news/national/tamil-nadu/stop-violence-against-churches-forum/article22268998.ece

[4] The Hindu, HC summons Corporation, CMDA officials, by Mohamed Imranullah S. CHENNAI, JULY 13, 2018 01:38 IST; UPDATED: JULY 13, 2018 01:38 IST.

[5] The Madras High Court slammed the Chennai Metropolitan Development Authority (CMDA) for its lackadaisical approach in tackling with encroachments. The Court has asked why the CMDA shouldn’t be dissolved for its inaction[5]. The bench consisting of Justices N Kirubakaran and Krishnan Ramasamy was hearing a petition on a church, which was built by encroaching the building belonging to the corporation in Nungambakkam, Chennai. “Is the CMDA silent after accepting money from the violators? Why can’t the CMDA which does not take actions against the violators be dissolved?” the bench asked[5]. Pointing to the increasing number of encroachments in Chennai, the bench expressed its disappointment at the CMDA.

Prime Times.IN, Madras HC slams CMDA, says it hasn’t learnt lessons from 2015 Chennai floods, JULY 13, 2018.

[6] https://www.primetimes.in/news/249894/madras-hc-slams-cmda-says-it-hasnt-learnt-lessons-from-2015-chennai-floods/</p>

[7] பத்திரிக்கை.காம், சென்னையில் விதிமீறும் கட்டடங்களை இடிக்காத சிஎம்டிஏ தேவையா?….உயர்நீதிமன்றம், Posted on July 12, 2018 at 9:06 pm by vathimathi.

[8]  https://patrikai.com/chennai-high-court-ask-why-did-the-cmda-should-not-abolish-for-their-inability-to-take-action-against-illegal-buildings/

[9] It then directed the Member Secretary of CMDA and the Commissioner of Corporation of Chennai to appear before it on July 16 and provide an explanation to the issues raised.http://www.newindianexpress.com/cities/chennai/2018/jul/12/why-not-close-down-cmda-if-it-cannot-stop-illegal-constructions-asks-madras-high-court-1842424.html

ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்! [1]

ஜூலை 16, 2018

ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களாஇல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதாஇல்லையா, சிஎம்டிஏவை கலைத்து விட்டால் என்னகேட்பது உயர்நீதி மன்றம்! [1]

Hebron church, nungambakkam, in dispute

2006 முதல் 2018 வரை சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ள ஹெப்ரான் சர்ச்சும், எடிசனும்: ஆகஸ்ட் 2016லேயே நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், தனியார் ஒருவர் [கே.பி.எடிசன்], தேவாலயம் மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டி உள்ளார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது[1].

Hebron church, nungambakkam, in dispute-family

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி கூறியது: இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “கட்டட உரிமையாளர் தரப்பு விளக்கத்தை கேட்க, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நோட்டீஸ்அதன் பின் அந்த குறிப்பிட்ட கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, ‘சீல்வைப்பதற்கான நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டது. ஆனால், உரிமையாளர் நீதிமன்ற தடை பெற்று நடவடிக்கையை முடக்கினார். இந்நிலையில், கட்டட உரிமையாளர், குடியிருப்போர் சங்கம் ஆகிய தரப்பு கருத்துகளை கேட்ட பின், கட்டடத்துக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது,” இவ்வாறு அவர் கூறினார்[2]. ஆனால், சுமார் இரண்டு வருடங்கள் ஆகியும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  2017ல் நாடகம் நடத்தப் பட்டது எனலாம். அதை எனது பிளாக்குகளில் விளக்க்யுள்ளேன்.

Hebron illegal church supported by islamic fringe groups

விசமத் தனமான செய்தி வெளியீடு, பொய் பரப்பும் இந்துவிரோதிகள்: “தமிழ்வலை” என்ற பெயை வைத்துக் கொண்டு பொய்யை செய்தி மாதிரி வெளியிட்டுள்ளது திகைக்கவைக்கிறது. அதை அப்படியே கீழே கொடுக்கப்படுகிறது. “வள்ளுவர் கோட்டம் அருகில் லேக் ஏரியா 7 வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலமான தேவாலயம் இயங்கி வருகிறது. இந்தத் தேவாலயத்தின் மேல் தளம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக இந்துத்துவக் கும்பலைச் சார்ந்த சமூக விரோதிகள் வழக்குத் தொடுத்தனர்[3]. உயர்நீதிமன்றம் 17 ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருக்கிற சூழலில், காவல்துறை உதவியோடு சென்னை மாநகராட்சியினர் தேவாலயத்தின் மேல் பகுதியை ஜூலை 10 அன்று இடிக்க முயற்சி செய்தனர். தகவலறிந்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா, அப்துல் சமது, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் நானும் சென்று இடிக்கிற போக்கைத் தடுத்து நிறுத்தினோம்.பாசக, ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் களத்தில் நிற்போம் என்றும் கிறித்தவ மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்போம் என்றும் உறுதி அளித்தோம். காவல்துறை மற்றும் மாநகராட்சியின் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்துத்துவக் கும்பலுக்கு எதிராகக் கிறித்துவப் பெருங்குடி மக்கள் அணி திரளுவது ஏரோது மன்னனுக்கு எதிராக அணி திரளுவதாகும்! மோடி என்னும் ஏரோது அரக்கனை ஒழித்துக்கட்ட கிறித்தவ மக்கள் களமாடுவது காலத்தின் கட்டாயம்! இது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னிஅரசு எழுதியுள்ள முகநூல் குறிப்பு. கிறித்துவ தேவாலயத்தைப் பாதுகாக்க இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லா முன்வந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மதங்களைத்தாண்டிய மனிதநேயம் மிக்கது தமிழகம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று முடிக்கிறது[4].

Jawahirullah support 2017

இது இந்துவிரோத கும்பலின் கூட்டம் என்று வெளிப்படுத்திக் கொண்டது: சென்ற வருடமே, இக்க்கோஷ்டிகளின் பின்னணியை எடுத்துக் காட்டினேன்[5].

வள்ளுவர் கோட்டம் அருகில் லேக் ஏரியா 7 வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலமான தேவாலயம் இயங்கி வருகிறது. இந்தத் தேவாலயத்தின் மேல் தளம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக இந்துத்துவக் கும்பலைச் சார்ந்த சமூக விரோதிகள் வழக்குத் தொடுத்தனர்[6].

பிறகு உயர்நீதி மற்றும் உச்சநீதி மன்றங்களுக்கு ஏன், எடிசன் செல்ல வேண்டும், மூக்குடைப்பட்டு வர வேண்டும்?

பாதிக்கப் பட்ட பொதுமக்கள், எப்படி, “இந்துத்துவக் கும்பலைச் சார்ந்த சமூக விரோதிகள்” ஆவார்கள்? “பக்கத்து வீட்டு சொந்தக் காரர்கள் எல்லாம், சமூக விரோதிகள்” ஆவார்களா?

தகவலறிந்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா, அப்துல் சமது, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் நானும் சென்று இடிக்கிற போக்கைத் தடுத்து நிறுத்தினோம். இப்பொழுது, 12-07-2018 அன்று சீல் வைத்துவிட்டார்களே, போய் உடைக்க வேண்டியதுதானே?

இந்துத்துவக் கும்பலுக்கு எதிராகக் கிறித்துவப் பெருங்குடி மக்கள் அணி திரளுவது ஏரோது மன்னனுக்கு எதிராக அணி திரளுவதாகும்! மோடி என்னும் ஏரோது அரக்கனை ஒழித்துக்கட்ட கிறித்தவ மக்கள் களமாடுவது காலத்தின் கட்டாயம்!

 

ஆக, இது மோடி-எதிர்ப்பா, பிஜேபி அதிர்ப்பா, இந்து-எதிர்ப்பா, ஒட்டுமொத்த, இந்துவிரோதிகள் எதிர்ப்பா, என்று தீர்மானிக்க வேண்டும் போலிருக்கிறது!
இது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னிஅரசு எழுதியுள்ள முகநூல் குறிப்பு. கிறித்துவ தேவாலயத்தைப் பாதுகாக்க இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லா முன்வந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மதங்களைத் தாண்டிய மனிதநேயம் மிக்கது தமிழகம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று முடிக்கிறது[7]. மதங்களைத் தாண்டிய மனிதநேயம் மிக்கது தமிழகம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று பீழ்த்திக் கொள்வதிலிருந்தேம் துலுக்க-கிருத்துவ கோஷ்டிகள், இந்துக்களுக்கு எதிராக இருக்கின்றன என்பதை மெய்ப்பிக்கிறது. பிறகு எங்கிருந்து “மனித நேயம்” வரும்?

இப்பொழுது, பொத்திக் கொண்டி இருப்பது, அவர்களது, செக்யூல்ரிஸம், மனித நேயம் என்ற எல்லாவற்றையும் எடுத்துக் காட்டுகின்றன[8]. உண்மையில், இத்தகைய சமூகப் பிரிவினைவாதிகளால், மக்கள் எந்த பலனையும் பெறமுடியாது. மக்களை போதவிட்டு, அப்பாவி மக்களைக் கொன்று, தங்களது தனிமனித செல்வாக்கை வளர்த்து கொள்வார்கள். அவ்வளவுதான்!

© வேதபிரகாஷ்

15-07-2018

hebron - protest - CHN_2017-07-13_maip5_12

[1] தினமலர், தேவாலய கட்டடத்துக்குசீல்வைக்க உத்தரவு, Added : ஆக 10, 2016 22:54

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1582840

[3] தமிழ்வலை, சென்னையில் கிறித்துவ தேவாலயத்தை இடிக்க முயற்சிதடுத்து நிறுத்திய முஸ்லிம்தலைவர், ஜூலை 11, 2017.

[4] http://www.tamizhvalai.com/archives/11488

[5] வேதபிரகாஷ், ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி. மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புகளையும் மீற முயன்ற நிலைசெக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?, 13-07-2017.

https://christianityindia.wordpress.com/2017/07/13/residence-turned-hebron-chruch-turned-kalyana-mantap-violation-of-law/

[6] தமிழ்வலை, சென்னையில் கிறித்துவ தேவாலயத்தை இடிக்க முயற்சிதடுத்து நிறுத்திய முஸ்லிம்தலைவர், ஜூலை 11, 2017.

[7] http://www.tamizhvalai.com/archives/11488

[8] வேதபிரகாஷ், ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலைகே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?, 14-07-2017

https://christianityindia.wordpress.com/2017/07/14/illegal-construction-of-hebron-church-is-politicized/

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி.ஏ மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புகளையும் மீற முயன்ற நிலை – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

ஜூலை 13, 2017

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி. மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புகளையும் மீற முயன்ற நிலை – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

Hebron Castle chuch - front

தனியார் வீடு என்று அனுமதி பெற்று ஹெபரான் சர்ச் கட்டியது: ஹெபரான் சர்ச் என்று இரு கிருத்துவ சர்ச்சை கே. பி. எடிசன் என்பவர் நடத்தி வருகிறார் [Dr. K.B. Edison,. Hebron Castle Church,. Kings Highway, No: 4, 7th Cross, Lake Area,.Nungambakkam,. Chennai – 600034, India. Phone: 044-28170007]. முதலில் சிறியதாக ஆரம்பித்தது, நாளடைவில் பெரிய கட்டடமாக மாறியது. அதுமட்டுமல்லாது, தனியார் வீடு என்று தான் சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால் பணம் வரவர, அடுக்கு மடி கட்ட ஆரம்பித்தார். பிறகு, வெளீப்படையாக சர்ச், ஊழியம், என்று கூட்டம் கூடியதால், அக்கம்-பக்கம் உள்ளவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. மூன்று மாடி கட்டடம் என்று ஆரம்பித்து, ஏழு மாடிகள் கட்ட ஆரம்பித்தார். மேலும், கல்யாண மண்டபம் எனவும் வாடகைக்கு விட ஆரம்பிக்கப் பட்டது. இதனால், வருபவர்களின் எண்ணிக்கை பெருக, கார்கள், வேன்கள் என்று வந்த வாகனங்கள் சுற்றியுள்ள தெருக்களை ஆக்கிரமித்துக் கொண்டன. இதனால், அப்பகுதி மக்களுக்கு பெருத்த தொந்தரவு ஏற்பட்டது. இதனால், லேக் ஏரியா குடியிருப்பு சங்கம் என்ற அமைப்பு, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வீடு என்று அனுமதி வாங்கிக் கொண்டு, பிறகு, சர்ச், கல்யாண மண்டபம் என்று மதம் மற்றும் வணிக ரீதியில் உபயோகப்படுத்தப்படுவதால், அங்கு உடியிருக்கும் அக்களுக்கு பலவிதமான தொந்தரவுகள் ஏற்படுகின்றன, அதனால், விதிமீறல் முறையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று செப்டம்பர் 2016ல் முறையிட்டனர்[1]. முன்னர் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எடிசனும் முறையிட்டார்[2].

Hebron Castle chuch - owners

வீடு சர்ச் ஆகி, கல்யாண மண்டபம் ஆனது: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், தனியார் ஒருவர், தேவாலயம் மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டி உள்ளார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Hebron Castle chuch - CMDA Notice

சி.எம்.டி. மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியது: இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது[3]: “கட்டட உரிமையாளர் தரப்பு விளக்கத்தை கேட்க, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பின் அந்த குறிப்பிட்ட கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, ‘சீல்வைப்பதற்கான நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டது. ஆனால், உரிமையாளர் நீதிமன்ற தடை பெற்று நடவடிக்கையை முடக்கினார். இந்நிலையில், கட்டட உரிமையாளர், குடியிருப்போர் சங்கம் ஆகிய தரப்பு கருத்துகளை கேட்ட பின், கட்டடத்துக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது”, இவ்வாறு அவர் கூறினார்[4]. பிப்ரவரி 2017லேயே, சென்னை உயர்நீதி மன்றம் இந்த ஆணையை, “மூன்று மாடிகளுக்கு பதிலாக, ஆறு மாடிகள் மனுதாரர் கட்டியுள்ளார். அதனால், அவரது சீரமைப்பு மனு சி.எம்.டி.ஏ.வால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டு மாத காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் அவர் விதிமீறலை சரிசெய்து கொள்ள வேண்டும், இல்லையென்றால், சி.எம்.டி.ஏ சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என்று, வெளியிட்டது[5].

Church sealed, Nungambakkam - 12-07-2017

நடவடிக்கை எடுக்க வந்த போது  பெண்களை வைத்து போராட்டம் நடத்தியது: சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் சி.எம்.டி.ஏ ஆணைகளையும் மீறி, சீல் வைக்க வந்த அதிகாரிகளின் மீது, பெண்களை வைத்து தாக்குதல் நடத்தும் விதத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. 10-07-2017 அன்று சென்றபோது, வாக்குவாதம் நடந்தது, அதிகாரிகளையும் அவர்கள் மிரட்டினர். இதனால், 12-07-2017 அன்று போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். அதனால், அங்கிருந்த கும்பல், சீல் மற்றும் நோட்டீஸை கிழித்து எரிந்தனர், எரிக்கவும் செய்தனர். மாநகராட்சி அதிகாரிகளைத் தாக்கவும் செய்தனர். இதனால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மறுபடியும் அவர்கள் போலீஸாரிடம் சென்று முறையிட்டனர். அதனால், போலீஸார் அங்கு வந்தனர். அக்கூட்டமும் கலைந்து சென்றது. பிறகு, மாநகர அதிகாரிகள் தங்களது ஊழியர்களுடன், விதிமுறைகளுக்கு மீறி கட்டிய பகுதியை இடிக்க ஆரம்பித்தனர். ஆக, சிறிய விசயம் பெரிதாக்க்கப் பட்டது போல காணப்படுகிறது. ஆனால், எடிசன் இங்கு மைனாரிடி கார்டை உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.

Church sealed, unauthorised building - Nungambakkam - 12-07-2017

நம்பிக்கையாளர்களுக்கு சமவுரிமை உள்ளதா இல்லையா என்ற கேள்வி எழுகின்றது: எடிசன் ஆரம்பத்திலிருந்தே, தாங்கள் கிருத்துவர்கள், மைனாரிட்டி, அதனால், தங்கள் மீது ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் செயல்பட்டு வந்தார். அதனால் தான், வீடு சர்ச்சாகி, ஜெபகூடம், கல்யாண மண்டபம் ஆகியது. கூட அயல்நாட்டு நிதியுதவியு,ம் கிடைக்க, புத்தகங்கள், சிடி வெளியீடு, ஜெப கூட்டங்கள், வீடியோ நிகழ்ச்சிகள் என்று அதிகமாகின. இணைதளங்களில் அதிரடியாக தன்னைப் பற்றி விளம்பரம் செய்து கொள்ள ஆரம்பித்தார்[6]. சர்ச் உண்டாக்குதல் [Church planting], அறுவடை செய்தல் [harvest], 2017ல் பாவம் செய்த விக்கிர ஆராதனையாளர்களுக்கு ஒளி காட்டுதல் [“The Gentiles shall come to your light, And kings to the brightness of your rising] என்றெல்லாம், வெளிப்படையாக இருக்கின்றன. ஆக, மறுபடியும், செக்யூலரிஸ நாட்டில், இவ்வாறெல்லாம், கிருத்துவர்கள் செய்ய முடியுமா என்ற கேள்விதான் எழுகின்றது. உரிமைகள் என்றால், எல்லோருக்கும் உரிமைகள் இருக்கின்றன. அப்பொழுது எடிசன் போன்றோர், இவ்வாறு வரம்பு மீறி செய்ய முடியாது. நம்பிக்கையாளர்களுக்கு சமவுரிமை உள்ளதா இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் அத்தகைய உரிமைகள் சமமாகத்தான், இருக்க வேண்டும். ஆனால், சமமாக இல்லாமல், நீதியின் தராசின் தட்டு, ஒன்று மட்டும் உயர்ந்தால், அடுத்த தட்டு தாழ்கிறது, சமநிலை பாதிக்கின்றது என்றாகிறது.

©  வேதபிரகாஷ்

13-07-2017
Hebron Castle chuch - church planting-conversion

[1] It is the case of the petitioner that the fourth respondent had obtained permission to put up a residential house but, however, is using the building for commercial activities by running a Church cum Kalyana Mandapam. Since the same is causing lot of inconvenience to the members of the petitioner Association and in view of the violation of the planning permission granted, the petitioner is before this Court to execute the order passed by the 1st respondent.

Madras High Court, Lake Area Residents Assocation vs The State Of Tamil Nadu on 28 September, 2016; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 28.09.2016

https://indiankanoon.org/doc/144176701/

[2]  Madras High Court, K.B.Edison vs The State Of Tamil Nadu on 6 June, 2016

 IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED:  06.06.2016, CORAM, THE HONOURABLE MR.JUSTICE HALUVADI G.RAMESH; AND THE HONOURABLE MR.JUSTICE M.V.MURALIDARAN; W.P.No.14921 of 2015.https://indiankanoon.org/doc/188099465/

[3] தினமலர், தேவாலய கட்டடத்துக்குசீல்வைக்க உத்தரவு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.10, 2016. 22.54.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1582840&Print=1

[5] Para. 7. Coming to the case on hand, it transpires that instead of three floors, the petitioner has put up six floors, for which he has sought for regularization and the same was rejected. Therefore, we do not find any reason to interfere with the impugned order rejecting the review petition filed by the petitioner. However, considering the facts and circumstances of the present case, we grant two months time to the petitioner to bring the construction in conformity with the approved plan. If the petitioner fails to comply with the said direction within the stipulated time, the respondent/authorities are at liberty to proceed in accordance with law.

https://indiankanoon.org/doc/68825862/

[6]  http://www.hebroncastlechurch.org/ ; http://www.hebroncastlechurch.org/contact.php