Archive for the ‘வழக்கு’ Category

மெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது!

ஓகஸ்ட் 18, 2019

மெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது!

MCC, Zoology dept-Raveen

ரவீன் ராஜாசிங் மற்றும் சாமுவேல் டென்னிஸன்பாலியல் சதாய்ப்புகளில் ஈடுபட்ட துணை பேராசிரியர்கள்: சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ – மாணவிகள், கடந்த 2019 ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு “கல்வி சுற்றுலா” அழைத்து செல்லப்பட்டனர்[1]. அப்பொழுது இவர்கள் எல்லைகளை மீறியபோது கண்டித்துள்ளனர். ஆனால், அவர்கள் பல வகைகளில் செக்ஸ்-ரீதியில் தொட்டும்-பேசியும் சதாய்த்துள்ளனர். ஜனவரி 9, 2019 முதல் 14 வரை என்ற சுற்றுலாவில் 46 மாணவிகள் சென்றுள்ளனர், அதில் 34 பேரிடமிருந்து புகார் அளிக்கப் பட்டுள்ளன[2]. அந்த ரவீன் ராஜாசிங் ஒரு மாணவியின் அறையுள் நுழைந்து, அவள் படுக்கையில் படுத்தாரா/னாம்! இந்த லட்சணத்தில் இருக்கிறது படிப்பு/ புரொபசரு! இதனால், சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்[3].  கல்லுரியில் அமைக்கப் பட்ட புகார்-விசாரிப்பு கமிட்டி [Internal Complaints Committee (ICC)] மூலம்விசாரிக்கப் பட்டது[4]. சுற்றுலாவின் போது, அவர்கள் தகாத முறையில் பேசியது, நடந்து கொண்டது ஊர்ஜிதம் ஆனது[5]. டென்னிஸன், ரவீனின் சில்மிஷங்களை, அடாவடித்தனங்களை ஊக்குவிக்கும் வகையில் பேசி வந்தான்[6]. முன்னமே குறிப்பிட்டப் படி, ரவீன், ஒரு பெண்ணிம் அறைக்குள் நுழைந்து படுக்கையின் மீது படுத்துத் தூங்கினான்.

Samuel Tennyson

முதன் முதலில் செய்த குற்றம் என்று விசாரிக்க மறுத்த கல்லூரி: கல்லூரி முதல்வர், முதலில் புகார் கொடுத்த போது, இதெல்லாம், முதன் முதலில் செய்த குற்றம் என்று விசாரிக்க மறுத்து விட்டனராம். அதென்ன “முதன் முதலில்” என்ற சலுகை. ஒரு தடவை கற்பழித்தால் விட்டு விடுவார்களா? ஒருவேளை பரிசுத்த ஆவியோ, கர்த்தனோ, ஏசுநாதனோ[7] வந்து சரிசெய்து விடுமா? இதானால், பெற்றோர்கள் பயந்து விட்டார்கள் போலும்! பிறகு 30 பேர் கையெழுத்துப் போட்டு புகார் கொடுத்தப் பிறகு தான், கல்லூரி அதிகாரம் புகாரை அனுமதித்து, கமிட்டியை அமைத்தது[8].

MCC, Zoology dept-complaint letter

டென்னிஸனே அக்கமிட்டியில் இருந்தது வேடிக்கைதான். இதிலிருந்து, கல்லூரி விவகாரத்தை மறைக்கவே முயன்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு வினாத்தாள்களை தயாரிக்க மற்றும் விடைத்தாள்களை திருத்த ரவீனுக்கு தடை விதித்து கல்லூரி நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை எடுத்தது.[9]. ஏனேனில், இதை மனதில் வைத்துக் கொண்டு, மாணவிகளை பாதிக்க முயலும் என்பதால். மே 24, 2019 அன்று இருவருமே குற்றவாளிகள் என்று கண்டுபிடித்தது ரவீன் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட்டான். டென்னிஸன் அதற்குள் நீதி மன்றத்திற்கு சென்று விட்டான். இருப்பினும், கல்லூரி வளகத்திற்குள் வரக்கூடாது என்று ஆணையிடப்பட்டது.

Raveen Rajasigh, Christian Collge, Madras

வழிபாட்டு வளாகத்தில் நடப்பது தெருக்களில் நடந்தால், குற்றங்கள் அதிகமாகும்: வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் போது கோரிய ஆவணங்கள், விசாரணைக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதி மீறப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது[10]. ஆனால், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11].  அதாவது, எப்படியாவது, வழக்கை இழுத்தடிக்க, டென்னிஸன் முயன்றுள்ளான். கல்லூரி தரப்பு பதிலை ஏற்று, பேராசிரியர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தன்னுடைய உத்தரவில், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்ச், மசூதி, கோவில் விட்டு, மதம் தெருக்களில் கடைபிடிக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நிகழத்தான் கூடும், அதிகமாகும்- நீதிபதி . அதாவது இப்பொழுதெல்லாம், தெருக்களில் நமாஜ் செய்வது, பிரச்சாரம் செய்வது முதலிய அதிகமாகி விட்டன.

MCC, Zoology dept-Samuel Tennyson

இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது[12]. எஸ். வைத்தியநாதன், நீதிபதி நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை / சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்தார்[13].  இப்பொழுதுள்ள நவநாகரிகமுள்ள காலத்தில் தான் இவ்வாறான கருத்துச் சொல்லப் பட்டிருக்கிறது என்பனை கவனிக்க வேண்டும்[14]. நிச்சயமாக அத்தகைய கருத்து, திடீரென்று வந்திருக்காது. இந்தியா முழுவதும் தொடர்ந்து சிறுவர் கற்பழிப்பு, கன்னியாஸ்திரிக்கள் கற்பழிப்பு, மற்ற பாலிய அத்துமீறல்கள் நடந்து வருவதை சுட்டிக் காட்டவே அவ்வாறு குறிப்பிட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அவற்றில் சம்பந்தப்பட்டது எல்லாம் கிருத்துவ குருமார்கள், சாமியார்கள், பாஸ்டர்கள், பிஷப்புகள் முதலியோர் தாம்[15]. அதிக அளவில் உள்ள கிருத்துவ மழலையர் பள்ளிகள், கான்வென்டுகள் முதல் மகளிர் கல்லூரிகள் வரை அவர்கள் நிர்வாகத்தில், கட்டுப்பாட்டில் இருப்பதால், அத்தகைய அச்சம்ம் வந்தது நியாயமானது தான்[16]. மதம் மாற்றம் முதலியவற்றையும் மறைக்கத்தான் முயல்கின்றனர். இச்செய்தியும் பிடிஐ மூலம் வெளிவந்துள்ளதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[17].

Raveen Rajasigh, Christian Collge, Madras.at coorg

பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்கள்: பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்கும் சட்டங்கள் மீது அரசு கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சில சட்டங்கள் பெண்கள் எளிதாக அணுகும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் அப்பாவி ஆண்மகனை சிக்க வைக்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் நிறைய இருக்கின்றன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் போலியான பல வழக்குகள் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

18-08-2019

MCC, Zoology dept

[1] Bangalore Mirror, MCC sexual harassment case: Madras HC says there is a general feeling that Christian institutions are unsafe, Gladwin Emmanuel, Uploaded: August 16, 2019, 16:5 IST.

[2] தினமணி, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா? – உயர்நீதிமன்றம், By DIN | Published on : 17th August 2019 04:39 PM.

[3] https://www.dinamani.com/tamilnadu/2019/aug/17/christian-institutions-unsafe-for-girl-students-madras-hc-3215633.html

[4] https://bangaloremirror.indiatimes.com/news/india/mcc-sexual-harassment-case-madras-hc-says-there-is-a-general-feeling-that-christian-institutions-are-unsafe/articleshow/70700615.cms

[5] TheNewsMinute, In a win for students, Madras Christian College dismisses prof found guilty of sexual harassment, Jayarajan, Tuesday, July 16, 2019 – 18:39

[6] https://www.thenewsminute.com/article/win-students-madras-christian-college-dismisses-prof-found-guilty-sexual-harassment-105563

[7] தமிழில் கடவுளை அவன், இவன் என்று பேசுவது, எழுதுவது வழக்கம், அதனால், அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

[8] கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி – சென்னை உயர்நீதிமன்றம், WebDesk, Aug 16, 2019

[9] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-christian-college-women-students/

[10] தினமலர், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் பாதுகாப்பானதா ?, Updated : ஆக 17, 2019 18:16 | Added : ஆக 16, 2019 17:47

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2345457

[12] The Hindu, Sexual harassment case: HC refuses to interfere in show-cause notice to Madras Christian College staff, Legal Correspondent CHENNAI , AUGUST 17, 2019 01:05 IST. UPDATED: AUGUST 17, 2019 08:18 IST

[13]  https://www.thehindu.com/news/cities/chennai/hc-refuses-to-interfere-in-show-cause-notice-to-mcc-staff-college-took-the-step-against-teacher-after-34-students-levelled-charges-of-harassment/article29114275.ece

[14] Times of India, Christian institutions ‘unsafe’ for girl students: Madras HC judge ,  Chennai News – Updated: Aug 17, 2019, 6:25 IST

[15] https://timesofindia.indiatimes.com/city/chennai/christian-institutions-unsafe-for-girl-students-hc-judge/articleshow/70708267.cms

[16] NDTV.News, Christian Co-Ed schools regarded ‘Highly unsafe’ for girl students: Madras HC judge ,  Chennai News – Updated: Aug 17, 2019, 6:25 IST.

[17] https://www.ndtv.com/india-news/general-feeling-that-christian-co-ed-schools-highly-unsafe-for-girls-future-court-2086209

கனகராஜ் – தூத்துக்குடி பாதிரி கொலையும், விசுவாசிகளின் அணுகுமுறையும், படிப்பினையும்!

திசெம்பர் 24, 2017

கனகராஜ்தூத்துக்குடி பாதிரி கொலையும், விசுவாசிகளின் அணுகுமுறையும், படிப்பினையும்!

Murdered pastor, Kanakaraj, 73

06-10-2016 – கனகராஜ் பாதிரி மர்மமான முறையில் இறந்து கிடந்தது: துாத்துக்குடியில், பாதிரியார் கொலை வழக்கில், போதகர் உட்பட, மூவரை போலீசார் 12-2017 அன்று கைது செய்தனர்[1]. சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் கனகராஜ், 73. சென்னை, பெரம்பூர் அருகேயுள்ள மங்களபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (74), தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகொஸ்தே சபை போதகராக / பாதிரியாராக 1960ல் இருந்து, வேலை செய்து வந்தார், சபை ஊழியர்கள் தங்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கூரை அமைத்து தங்கியிருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. 2016 அக்., 6ல், படுக்கையில் இறந்து கிடந்தார்[2]. அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறி, உடலை அடக்கம் செய்ய சர்ச்சை சேர்ந்த சிலர் முயற்சித்தனர்.

Murdered pastor, Kanakaraj, 73-DTNext news

ஆனால், சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர் சுதர்சனன், போலீசில் புகார் அளித்தார்.  அவரது முகத்தில் காயங்கள் இருந்தன.  எனவே, உடலை பரிசோதனைக்கு அனுப்பினர். மதுரை, தடயவியல் ஆய்வக சோதனையில், பாதிரியார் கனகராஜ் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமானது. இருப்பினும், குற்றவாளிகளை கைது செய்வதில், சிப்காட் போலீசார் தாமதம் காட்டினர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கனகராஜின் ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.  03-10-2016 திங்கட்கிழமையன்று கனகராஜ் மரணம் அல்ல கொலை என்று சந்தேகிப்பதால், உறவினர் மற்றும் சர்ச் சார்ந்தவர், உரிய நடவடிக்கை எடுக்குமாற்ய் கலெக்டரிரம் புகார் அளித்தனர்[3]. அதற்குப் பிறகு சி.ஆர்.பிசி 174ம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது[4].

Murdered pastor, Kanakaraj, 73-Church people urged to take action

விசுவாசிகள் சந்தேகித்தது, போராடியது: சென்ற வருடமே, கனகராஜ் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும் என்று செய்திகள் வெளிவந்தன[5]. நாக்கு, உதடுகள் மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் காணப்பட்டதால், சர்ச்சின் நம்பிக்கையாளர்கள் அவ்வாறான கருத்தை வெளியிட்டனர். பஞ்சை வைத்து அடைத்து அவற்றை மறைத்து, காயங்கள் மற்றும் சிராய்ப்புகளை மூடி மறைக்கப் பார்க்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினர். சர்ச்சிற்கு அருகில் வசிக்கும் சிங்கராஜ் என்ற வக்கீல், செவ்வாய்கிழமை காலையில், கனகராஜ் கத்திய கூக்குரல் தனது காதில் விழுந்தது என்றார். சர்ச்சை சேர்ந்த ஊழியர்கள், அங்குள்ள ஜேக்கப் என்ற பாஸ்டர் மீது சந்தேகப்படுவதாகக் கூறினர். பணப்பட்டுவாடா விசயத்தில் அவருக்குத் திருப்தியில்லை என்று சொன்னார்கள். மேலும் போலீஸாரும் இவ்விசயத்தை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர்[6]. எப்படியிருந்தாலும், மற்ற கொலைகளை விட, இவ்விசயத்தில் விசுவாசிகள் அதிகமாகவே பாதிக்கப் பட்டது, அவர்கள் வெளியில் வந்து போராடியது மற்றும் ஊடகங்களில் விவாதித்தது, அவர்களது, ஜனநாயக அணுகுமுறையினைக் காட்டியுள்ளது[7]. வீடியோக்களும் அவர்கள் போராடிய முறையினைக் காட்டுகிறது[8]. ஒருவர் “பிளாக்கில்” முழுவிவரங்களையும், புகைப்படங்களுடன் விவரங்களைக் கொடுத்துள்ளார்[9]. அவற்றை இங்கே படிக்கலாம்[10].

Murdered pastor, Kanakaraj, 73-arrested Titus

விசாரணையில் வெளிவந்த கொடூர விவகாரங்கள்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அக்டோபர் 2016லிருந்து, இவ்வழக்கில் துப்பு துலங்காத நிலையில், எஸ்.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிஹரன், தனிப்பிரிவு எஸ்ஐ ஷியாம் சுந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சபையில் பணியில் இருந்த நாகர்கோவில் அருகேயுள்ள வாத்தியார் விளையைச் சேர்ந்த டைட்டஸ் (31) என்ற மற்றொரு போதகரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர்களது சந்தேகம் உறுதியானது[11]. இதையடுத்து அவரை கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட போதகர் கனகராஜ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கணக்கு வழக்குகளில் கறாராக இருந்துள்ளார்.

Murdered pastor, Kanakaraj, 73-Tamil news cutting-enquiry

டைட்டஸ் கூட்டாளிகளோடு கொன்றது எப்படி?: கன்னியாகுமரி மாவட்டம், வாத்தியார்விளையைச் சேர்ந்தவர் டைட்டஸ், 31. இவர், கனகராஜ் சபையில் போதகராக இருந்தார். வெளியிடங்களுக்கு ஜெபத்திற்கு சென்ற போது, பெண்களிடம் பாலியல் ரீதியாக டைட்டஸ் தவறாக நடந்துள்ளார். இப்பொழுதெல்லாம் சர்ச்சுகளில் இது சாதாரணமான விசயமாகி விட்டது. டிவி-நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் கிருத்துவ பெண்கள், மற்ற சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய உண்மைகளை சொல்லிவருகிறார்கள். இருப்பினும், சர்ச் எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மறைக்கப் பார்ப்பதால், இத்தகைய பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் பிஷப்புகளே செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே, டைடஸ் விசயத்தில் அவரை கனகராஜ் கண்டித்து, வெளியிடங்களுக்கு அனுப்பாமல், தலைமை மையத்திலேயே பணியமர்த்தினார். சுவைக் கண்ட பூனை சும்மா இருக்குமா? ஆத்திரமடைந்த டைட்டஸ், காய்கறி கடை நடத்தும் தன், 29 வயது தம்பி அன்றோ, மற்றும் அன்றோ நண்பரான கோட்டாறைச் சேர்ந்த ரகு 35 வயது முதலியோருடன் சேர்ந்து, பாதிரியாரை, தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர்[12].

Murdered pastor, Kanakaraj, 73-Tamil news cutting

கொலையை மறைக்க செய்த முயற்சிகள்: கொலையை மறைப்பதற்காக அதிகாலையே, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஒருவரிடம், ‘இறப்பு மாரடைப்பால் நடந்தது’ என, போலி சான்றிதழ் பெற்றுள்ளனர்[13]. மேலும் கனகராஜுக்கும் வேறு போதகர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததைப்போலவும், கனகராஜ், பெண்ணுடன் இருந்தார் என ஒரு நாடகத்தை அரங்கேற்ற நாகர்கோவிலில் இருந்து ஒரு பாலியல் தொழிலாளியையும் ஏற்பாடு செய்துள்ளனர்[14].கனகராஜ் கொலை செய்யப்பட்ட, ஒரு ஆண்டுக்கு பின், தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கொலையை மாரடைப்பாக மாற்றி, போலி சான்றிதழ் வழங்கிய டாக்டரை கைது செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tutocorin pastor murder- Dinamalar, 21-12-2017

இந்திய சர்ச்சுகள் கவனிக்க வேண்டியது என்ன?: சர்ச்சுகளில் தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் நடைபெற்றுவருவது, இந்திய பாரம்பரியத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. கிருத்துவத்தைப் பொறுத்த வரையில், சர்ச்சுகளில் பல நேரங்களில், பல விழாக்கள், கூடுதல்கள் முதலிய நேரங்களில், ஆண்கள்-பெண்கள் நெருங்கி உரையாடுவதற்கு, வேலை / சேவை செய்வதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. மேலும், பாஸ்டர்கள், பாதிரியார்கள் மற்றும் மதகுருக்கள் முதலியோரிடமிருந்து சலுகைகள், ஆதாயங்கள் பெறவேண்டிய நிலையில் உள்ளவர்கள், இன்னும் நெருக்கமாகவே இருக்க வேண்டிய கட்டாயங்கள், அவசியங்கள் ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. இதில் தான், இத்தகைய பாலியல் வன்மங்கள், பாலியல் சார்ந்த குற்றங்கள் ஏற்படுகின்றன, கேரளா அபயா வழக்கை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம். ஆகவே, முதலில் இந்திய சர்ச்சுகளில் ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம் முதலியவற்றிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆண்கள்-பெண்கள் விசயங்களிலும் கண்காணிப்பு அவசியமாகிறது. பெற்றோர், உற்றோர், மற்றோர், விசுவாசிகள் இவற்றில் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

© வேதபிரகாஷ்

24-12-2017

Tutocorin pastor murder- The Hindu, 08-11-2016

[1] தினமலர், பாதிரியார் கொலை வழக்கில் ஓராண்டுக்கு பின் போதகர் கைது, Added : டிச 21, 2017  01:08.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1923091

[3] The Hindu, “Mystery shrouds death of Pastor”, THOOTHUKUDI:, NOVEMBER 08, 2016 00:00 IST, UPDATED: DECEMBER 02, 2016 14:13 IST

[4] The parishioners of Pentecostal church at Millerpuram raised doubts over the death of Pastor Kanagaraj, and thronged the Collectorate here on Monday (03-10-2016) seeking fair action in the case. The Pastor was declared dead after cardiac arrest on October 5, 2016. In a petition submitted to Collector M. Ravikumar, they said ahead of his burial, relatives of the pastor claimed that the pastor had been murdered by somebody and his body bore injury marks. On the subsequent day, a post-mortem was done and the report showed injuries on it. But, the Sipcot police filed a case under Section 174 of Cr.P.C. for suspicious death.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/%E2%80%9CMystery-shrouds-death-of-Pastor%E2%80%9D/article16439922.ece

[5] DTNext, Foul play suspected in death of Thoothukudi priest, Published: Oct 07,201601:21 AM

[6] However, church workers are of the view that the priest could have been murdered and to support their claim they pointed out that there were injuries in his throat, lips and chest. They also alleged that cotton was placed in two spots in his throat to cover the injuries and there were rashes at his chest and lips, which according to them, are clear signs of murder. Singaraj, a senior lawyer who has his house near the church, said that he heard a loud noise from on Tuesday and in the morning he came to know that the father had died. The church workers also alleged that another priest Jacob could have been involved in the murder as he was unhappy some of the decisions of Kanagaraj in allocating funds. “Police officials too are trying to cover up the murder and close down the case by claiming that Kanagaraj had died of heart attack,” they alleged.

DTNext, Foul play suspected in death of Thoothukudi priest, Published: Oct 07,201601:21 AM

http://www.dtnext.in/News/City/2016/10/07012123/Foul-play-suspected-in-death-of-Thoothukudi-priest.vpf

[7] TPM Tuticorin Kanagaraj Murder Protest (Part 1), https://www.youtube.com/watch?v=WlAoPkZdXJw

 

[8] TPM Tuticorin Kanagaraj Murder Protest (Part 2), https://www.youtube.com/watch?v=DQFoxFYvV-c

[9] https://www.fromtpm.com/blog/2016/11/03/face-of-tpm-brutality-pastor-kanagaraj-murder-case/

[10] https://www.fromtpm.com/blog/2016/11/10/707/

[11]தூது.ஆன்லைம், தூத்துக்குடியில் மதபோதகர் கொலையில் 3பேர் கைது: பரபரப்பு தகவல், வெள்ளி 15, டிசம்பர் 2017 10:30:26 AM (IST)

[12] http://www.tutyonline.net/view/31_150504/20171215103026.html

[13] தினமலர், பாதிரியார் கொலை வழக்கில் போதகர் கைது: ஓராண்டுக்கு பின் துப்புத் துலங்கியது, Added : டிச 21, 2017  04:56.

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1923394

அன்பு ஸ்டெல்லா கொலை வழக்கும், சம்பந்தப்பட்ட நரிப்பையூர் பாதிரி மிலன் சிங்கும், மனைவி ஜீவிதாவும்!

ஒக்ரோபர் 8, 2016

அன்பு ஸ்டெல்லா கொலை வழக்கும், சம்பந்தப்பட்ட நரிப்பையூர் பாதிரி மிலன் சிங்கும், மனைவி ஜீவிதாவும்!

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-1

அன்பு ஸ்டெல்லாவுக்கு ரசு மருத்துவ மனையில் வேலை வாங்கித் தருவதாக வாக்களித்த பாதிரி: திருநெல்வேலியை குருவிகுளம் அருகே உள்ள செவல்குளம் ஜோசப் தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் ஞானையா [Gnaniah], ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன தனது மகள், அன்பு ஸ்டெல்லாவை [Anbu Stella (24)] கண்டுபிடித்து தரக்கோரி, ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்[1].  ஸ்டெல்லா, 24. பெருமாள்புரத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டே, லேப் டெக்னிஷியன் படிப்பு படித்து வந்த இவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் 10, 2015 அன்று மாயமானார். அன்பு ஸ்டெல்லா, அரசு மருத்துவ மனையில் வேலை வாங்கிக் கொடுப்பதாக சொன்ன மிலன் சிங் என்பவனுக்கு ரூ.2.75 லட்சம் கொடுக்கச் சென்ற அவள் திரும்ப வரவில்லை என்றார்.

milan-singh-pastor-murdered-stella-hc-summons-tirunelveli-sp-the-hindu-06-10-2016அன்பு ஸ்டெல்லா தந்தை ஞானய்யையாவை அலைய வைத்த போலீசார்: குருவிகுளம் போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது, திருநெல்வேலியியிலிருந்து மகள் காணவில்லை என்பதால், அங்குசென்று புகார் கொடுக்குமாறு சொல்லி அனுப்பினர். அங்கு சென்று புகார் கொடுத்த பிறகும், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதற்குள் மார்ச்.6, 2016 அன்று தான் கடத்தப் பட்டதாக அன்பு ஸ்டெல்லாவிடமிருந்து தொலைபேசி வந்தது. மார்ச்.8, 2016 அன்று தான் வீட்டில்  டைத்து வைக்கப் பட்டிருப்பதாக அன்பு ஸ்டெல்லாவிடமிருந்து தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என்று தி இந்து கூறுகிறது[2].  தேதிகளில் எப்படி வித்தியாசம் வரும் என்றூ தெரியவில்லை. ஆனால், அது உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. பிறகு விசாரித்த போது, பாதிரி கணேசன் மற்றும் ஜெயகுமார் என்பவர்களுடன் சேர்ந்து கொண்டு தன் மகளை அடைத்து வைத்ததாக தெரிந்து கொண்டார். அதனால் தான், ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்தார்.

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-205-10-2016 அன்று விசாரணைக்கு வந்த மனு: அந்த மனு தொடர்பான விசாரணை, கடந்த அக்டோபர் 5ம் தேதி 2016 அன்று நீதிபதிகள் நாகமுத்து [S. Nagamuthu] மற்றும் முரளிதரன் [M.V. Muralidaran] அடங்கிய அமர்வு முன்பு நடந்தது[3].  அப்போது, தன் மகள் அன்புஸ்டெல்லா, கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணம் அருகே கொலை செய்யப்பட்டதாகவும், தன் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, பாதிரியார் மிலன் என்பவர் கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாகவும் ஞானையா கூறியிருந்தார். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

millan-singh-confession-about-killing-stella-06-10-2016-dtஎரித்துக் கொலை சேய்யப்பட்டது யார்? காவேரிப்பட்டணம் அருகே, எர்ர அள்ளியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில், கடந்த ஆண்டு 2015 செப்டம்பரில்,  இளம் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்[4]. அவர் யார்? எந்த விவரத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், காவேரிப்பட்டணம் அருகே தன் மகள் கொலை செய்யப்பட்டதாக ஞானையா நீதிமன்றத்தில் கூறியுள்ளதால், எர்ரஹள்ளியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது அன்பு ஸ்டெல்லாவாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்த இடத்தை, நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையையும், திருநெல்வேலி சி.பி.சி.ஐ.டி., போலீசார், காவேரிப்பட்டணம் போலீசாரிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது[5].

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-3கொலை செய்யப்பட்டது யார் என்று ஊர்ஜிதம் செய்யப்படவில்லை: வழக்கில் பல குளறுபடிகள் இருப்பதை அறிந்த நீதிபதிகள் திருநெல்வேலி எஸ்பியை ஆஜராகும் படி உத்தரவிட்டனர்[6]. அப்போது, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் [Tirunelveli SP Vikraman] நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மிலன் சிங் மற்றும் ஜீவிதா ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ளதாகவும், விசாரணைவின் போது ஜனவரி 4, 2016 அன்று காவேரிப் பட்டினத்தைல் எரித்துக் கொலை செய்ததாக அவர்கள் கொண்டதாக கூறினர்[7]. மேலும், காணாமல் போனதாக கூறப்படும் அன்பு ஸ்டெல்லா கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமான மத போதகர் மிலன் சிங்கை கைது செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று நியூஸ்.7.டிவி கூறுகிறது[8]. கண்டு பிடத்த உடல் பரிசோதிக்கப்பட்டதா, அவ்வுடல் அன்பு ஸ்டெல்லாயுடையது என்று உறுதி செய்யப்பட்டதா என்று கேட்டபோது, இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்[9]. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசார் மிக மெத்தனமாக நடந்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்[10]. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், உரிய சோதனைகள் இருந்தாலும், அவற்றை மேற்கொள்ளாமல் இருப்பது போலீஸாரின் மெத்தனத்தையேக் காட்டுகிறது. தனால் தான் 90 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர் என்று கடிந்து கொண்டனர்[11]. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமெனவும், விசாரணை அறிக்கையை நவம்பர் 14-ஆம் தேதி 2016 நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்[12]. மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசாரும் நெல்லைக்கு சென்றுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-10-2016

millan-singh-confession-about-killing-stella-06-10-2016

[1] தினத்தந்தி, காவேரிப்பட்டணத்தில் பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.சி..டி. விசாரணை தொடங்கியது, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 3:02 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 3:30 AM IST.

[2] The petitioner also said that he received a phone call from his daughter from an unknown mobile number on March 8 and she complained of having been kept under house arrest by the pastor. Though she did not disclose the location, Mr. Gnanaiah said that enquiries made by him revealed that she was kept under illegal detention in collusion with two other people named Ganesan and Jeyakumar.

http://www.thehindu.com/news/cities/Madurai/hc-summons-tirunelveli-commissioner-sp/article9190524.ece

[3] http://www.dailythanthi.com/News/Districts/Krishnagiri/2016/10/08030229/In-the-case-of-woman-burned-to-deathCB-Started-investigation.vpf

[4] தினமலர், காவேரிப்பட்டணம் பெண் கொலையில் விசாரணை தீவிரம், பதிவு செய்த நாள்: அக் 08,2016 07:48

[5] http://m.dinamalar.com/detail.php?id=1623681

[6] The Hindu, HC summons Tirunelveli Commissioner, SP, Madurai, October 6, 2016, Updated: October 6, 2016 05:45 IST

[7] When the petition was taken up for hearing on Thursday [06-10-2016] Tirunelveli SP Vikraman informed the court that Millan and his wife Geevitha were arrested in connection with the case and Geevitha in the inquiry had informed that they had murdered Stella by torching her on January 4, 2016, at Kaveripattinam in Krishnagiri district. When the body was found, it resembled the body of Stella, claimed SP.

[8] நியூஸ்.7.டிவி, மதபோதகர் ஒருவர் இளம்பெண்ணை ஏமாற்றி படுகொலை செய்த வழக்கை சி.பி.சி..டி. விசாரிக்க உத்தரவு!, October 06, 2016

[9] dtNEXT, Shift girl missing case to CB-CID: High Court Bench, Published: Oct 07,201606:00 AM.

[10] http://www.thehindu.com/news/cities/Madurai/hc-summons-tirunelveli-commissioner-sp/article9190524.ece

[11] On hearing his replay, judges became infuriated and blamed police’s lacklustre in their investigation though there were several techniques available to ascertain identity. “Owing to this, more than 90 percent cases are not investigated properly and accused in most of the cases get acquitted. People with power and influence use the lacklustre attitude of cops to escape from such offences,” observed the judges.

http://www.dtnext.in/News/City/2016/10/07011646/Shift-girl-missing-case-to-CBCID-High-Court-Bench.vpf

[12] http://ns7.tv/ta/religious-man-arrested-nellai-killing-woman.html

சி.எஸ்.ஐ. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? இது வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, அல்லது நிதிமுறை சர்ச்சையா?

ஒக்ரோபர் 25, 2015

சி.எஸ்.. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? இது வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, அல்லது நிதிமுறை சர்ச்சையா?

மார்த்தாண்டம் பிரச்சினை - நியூஸ்.7. போட்டோ

மார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ

கிறிஸ்தவ மதபோதகர்கள் திராவிட சித்தாந்தம் மற்றும் இந்துவிரோத பகுத்தறிவு கொள்கைகளினால் ஊக்குவிக்கபடுகிறார்களா?: தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்த ஆட்சியாளர்களின் கீழ் மதநம்பிக்கையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளாளர்கள். குறிப்பாக, அவர்கள் நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டால் கூட, இந்து-விரோத சித்தாந்திகளாகத்தான் இருந்து வருகிறார்கள். கோவில்கள், அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆட்டிப்படைத்து வருகிறார்கள். கோடி-கோடிக்கணக்கில் உள்ள அச்சொத்துகளை மாறி-மாறி குத்தகை, ஆக்கிரமிப்பு, பட்டா-மாற்றம் போன்ற வழிகளில் கொள்ளையடித்து வருகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் வழிபாட்டு இடங்கள் அவற்றின் சொத்துகளை அம்மாதிரியே செய்யும் போது கூட அரசு தலையிட முடியாத நிலையுள்ளது. அந்நிலையில் அவர்களே அத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்குள்ளேயே சண்டைகள் வந்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளார்கள், அவற்றில் மதத்தலைவர்கள் முதல், கீழுள்ள நிர்வாகிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள் என்று எல்லோருமே அடக்கம். சி.எஸ்.ஐ பற்றி சொல்லவே வேண்டாம். நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றின் மூலம் அவர்களது விவகாரங்கள் பல வெளிவந்துள்ளன. இந்நிலையில், மார்த்தாண்டத்தில் வணிக வளாக வாடகை பிரச்சினை தொடர்பாக போதகர்கள்–வியாபாரிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று வரும் செய்தி வியப்பாக உள்ளது.

பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.

பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.

சி.எஸ்.. பேராயத்திற்கு வணிக வளாகம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. ஆலயம், ஆலய வளாகம் முதலியவை உள்ளது பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகம் தான் இப்பொழுதைய பிரச்சினையில் வந்துள்ளது[1]. இங்கு 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அக்கடைகள் பல வணிகர்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்த வணிக வளாகம் இருப்பதால் எப்போதும், இங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் கணிசமான பணம் சி.எஸ்.ஐக்குக் கிடைத்து வருகிறது. இந்த கடைகளின் வாடகை மற்றும் வைப்புத்தொகையை அதிகரித்து தர வேண்டும் என பேராய நிர்வாகிகள் அங்கு கடைகளை நடத்தி வருபவர்களிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், ஒருசில கடை உரிமையாளர்கள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015

பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015

போதகர்கள் மற்றும் வணிகர்களுக்குன் இடையில் கைகலப்பு[2]: இந்தநிலையில், 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர். எல்லோரும் அவரது மத-உடைகளோடு படைப்போல அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒரு ஓட்டலில் நுழைந்து அதன் உரிமையாளரிடம் பேராயம் நிர்ணயித்த தொகையை தர வேண்டும் எனவும், வாடகை பாக்கியை முழுமையாக கட்ட வேண்டும் எனவும் கூறினர். இதனால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பிரச்சினை முற்றி கைகலப்பு மூண்டது[3]. கிறிஸ்தவ போதகர்கள் அங்கிகளுடன் வணிகர்ளுடன் இவ்வாறு தள்ளுமுள்ளு மற்றும் கைக்கலப்புகளில் ஈடுபட்டது, ஏதோ சினிமா பார்ப்பது போன்றிருந்தது[4]. போதகர்களுக்கு ஆதரவாகவும், கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர். அதற்கு யாரும் உடன்படாததால் பதற்றம் அதிகரித்தது. இதனை வேடிக்கை பார்க்க நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரும் பொதுவான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். அதன்பின்பு, போதகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்

சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்

இருதரப்புகளிடையே நடந்த பேச்சுவார்த்தை[5]: இதைத்தொடர்ந்து, 20-10-2025 அன்று மாலை சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பேராயம் சார்பில் ராபர்ட் புரூஸ், மற்றும் ஜெங்கின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிகர்கள் சார்பில் ஓரிரு கடைக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் வாடகை தொடர்பாக இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா, ஒப்புக்கொள்வார்களா என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், வர்த்தகர்களில் சிலர் இவ்விசயமாக போராட்டம் நடத்தவும், கோர்ட்டுக்குச் செல்லவும் தயாக இருப்பதாகக் கூறியுள்ளனர்[6]. அவ்வணிகர்களில் கணிசமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

சி.எஸ்.. பேராயத்திற்கும் வியாபாரத்திற்கும் தொடர்பு உள்ளதா?: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகத்தில் 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன என்று பார்த்தோம். 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் மத-உடைகளோடு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர்.  இப்படி 200 கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட  மதபோதகர்கள் என்பது கவனத்தில் ஈர்ப்பதாக உள்ளது. 200 கடைகளுக்கும் இவ்வாறு 200 மதபோதர்களை பொறுப்பில் போட்டுள்ளார்களா, அவர்களை வாடகை வசூல், வாடகை ஏற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனெனில், அவர்களை அவ்வேலையை செய்தது மட்டுமல்லாது, வணிகர்களுடன் சண்டையும் போட்டுள்ளார்கள். மதவுடைகள் அணிந்து கொண்டு, அத்தகைய மதம் சம்பந்தமில்லாத காரியங்களில் அவர்கள் எவ்வாறு ஈடுபட்டனர் என்று நோக்கத்தக்கது. அப்படியென்றால், மதவிவகாரங்களைத் தவிர, இவர்களுக்கு இத்தகைய மதம்-சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய அனுமதி உள்ளதா அல்லது இரட்டை வேடம் போட்டு வருகிறார்களா, அல்லது அவ்வுடைகளைப் போட்டு மதச்சாயம் பூசி மிரட்ட வந்தார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது[7]. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அவ்வாறு மதவுடைகளுடன் 200 பேருக்கும் மேலாக போதகர்கள் வந்தார்கள் என்றால், அது தீர ஆலோசித்து, திட்டமிட்டு, முடிவெடுத்த காரியம் என்றாகிறது. திடீரென்று சாதாரணமாக அவ்வாறு வந்துவிட முடியாது. அப்படியென்றால், இவர்களுடைய தலைவர் யார், இவர்களை இவ்வாறு தயார் படுத்தி அனுப்பியது யார், வியாபார விவகாரங்களில் கிறிஸ்த அமைப்புகள் ஏன் ஈடுபடுகின்றன, போன்ற கேள்விகளும் எழுகின்றன.

CSR Marthandam

CSR Marthandam

தாக்கிய பாஸ்டர்மீது வழக்கு[8]: மார்த்தாண்டம் வணிக மையம் [Marthandam Chamber of Commerce] இந்த கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 100 சதவீதத்திற்கு மேலாக வாடகை உயர்த்தப்பட்டது, குறித்து எதிர்ப்பு தெரிவித்தது. மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இதைப்பற்றி வர்த்தகர்கள் புகாரும் அளித்துள்ளனர்[9].  20-10-2015 அன்று நடந்த வணிகர்கள்-போதகர்கள் கைகலப்பு படம்பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில், மத போதகர் சுரேஷ் செல்வகுமார் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. “புதிய தலைமுறை” நிருபர் கே. மது, போதகர்களினால் தாக்கப்பட்டார். குறிப்பாக சுரேஷ் செல்லக்குமார் என்ற பாஸ்டர் தாக்கியதால் அவர்மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 341, 294 (b), 323 மற்றும் 506 (i) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[11].

CSI Shopping complex,  Marthandam

CSI Shopping complex, Marthandam

திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது யார்?: வியாபார விவகாரங்களில் கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால், வியாபாரமும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாகிறது. தீவிரவாதிகள் (ஜிஹாதிகள் முதலியோர்) இந்திய ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்து, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறார்கள் என்று முன்னரே செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதைய நிதியமைச்சர் சிதம்பரமே அதைப் பற்றி பேசியுள்ளார். இப்பொழுது ஆன்-லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. அதில் யார் பணத்தை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள் என்று தெரியாது.  ஷேர்களை, பொருட்களை வாங்கினால் மட்டும் போறாது, அவற்றை நிர்வகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த அளவுக்கு இவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது என்பதும், தெளிவாகிறது. இந்நிலையில் சாதாரண மக்கள் இத்தகைய திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. பொதுவாக, பண்டிகைக் காலங்களில் தான் இத்தகைய காரியங்கள் நடந்து வருகின்றன. அப்படியென்றால், அப்பண்டிகைகளைக் கொண்டாடும் மக்களைக் குறிவைத்து, இத்தகைய நாணயமற்ற மற்றும் பொருளாதாரத்த்யை சீர்குலைக்கும், சாதாரண மக்களை சுரண்டும் வேலைகள் நடந்து வருகின்றனவா என்று கவனிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

21-10-2015

[1]  தினத்தந்தி, வணிக வளாக வாடகை பிரச்சினை: போதகர்கள்வியாபாரிகள் கைகலப்பு மார்த்தாண்டத்தில் பரபரப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 5:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 1:47 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[3] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[4] அதாவது பலத்தை, சக்தியை எம்முறையிலும் உபயோகப்படுத்தத் தயாராக உள்ளனர், அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்றாகிறது.

[5] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[6]  கோவில் சொத்துகள் என்றால், வேறுவிதமாக இருக்கும், இங்கு உண்மையிலேயே அவ்வாறு செல்வார்களா அல்லது சரசமாகி விடுவார்களா என்று பார்க்க வேண்டும்.

[7]  செக்யூலரிஸத்தில், மதத்தையும் மற்ற மதம் சம்பந்தமில்லாத காரியங்களையும் சேர்க்கக் கூடாது என்றுள்ளது. “சர்ச் மற்றும் ஸ்டேட்” தனித்தனி என்று கூறிக்கொள்கிறார்கள்.

[8]  The Hindu, Case registered against pastor, Nagerkoil, October.24, 2015; Updated: October 24, 2015 05:45 IST

[9] நியூஸ்.7, மார்த்தாண்டத்தில் தாக்குதல் தொடர்பாக மதபோதகர் மீது வழக்கு, Updated on October 23, 2015.

[10] http://ns7.tv/ta/case-filed-against-piest-marthandam-attacking.html

[11] In connection with an attack on a reporter of a private television channel, a case has been registered against Suresh Chellakumar, Pastor, CSI church, Thalakkanvilai, by Marthandam police on Thursday. According to the police, K. Mathu (44), working for Puthiya Thalaimurai Television, along with a few other reporters, rushed to the CSI shopping complex in Marthandam on Wednesday for recording the scuffle between members of the Marthandam Chamber of Commerce and CSI pastors. Angered by recording of the scuffle, a few CSI pastors are alleged to have abused Mr. Mathu. The reporter was also allegedly attacked and threatened with dire consequences. Accompanying reporters A. Arul Kumar and Shagayakumar tried to safeguard Mathu from the attack but in vain. Mathu refused to get admitted to a hospital for treatment. Marthandam police have registered a case under Sections 341, 294 (b), 323 and 506 (i) of Indian Penal Code against Suresh alias Suresh Kumar, Pastor, CSI church, Thalakkanvilai, based on complaint lodged by Arul Kumar. Further investigation is on.

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலை செய்யப்பட்டது ஏன் (2)?

செப்ரெம்பர் 18, 2015

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு கொலை செய்யப்பட்டது ஏன் (2)?

Lisieux Carmelite Convent fathers and nuns Amla murder-poilice enquiry

Lisieux Carmelite Convent fathers and nuns Amla murder-poilice enquiry

கான்வென்டைச் சேர்ந்தவர்கள் போலீஸாருடன் ஒத்துழைக்கவில்லையா?: போலீஸ் தரப்பில் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, கான்வென்டைச் சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தேவையான விவரங்களை கொடுக்கவில்லையோ என்ற தோணியில் பேசுவது தெரிகிறது. போலீஸார் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக சொல்லவில்லை என்கிறார்கள்[1]. குறிப்பிட்ட இரவன்று யாரும், சந்தேகிக்கும் முறையில் எதையும் பார்க்கவில்லை, எந்த சப்தத்தையும் கேட்கவில்லை என்கிறார்கள். பல கன்னியாஸ்திரிக்கள் இருக்கும் கான்வென்டில் எப்படி ஆளரவம் எதுவும் இல்லை என்ற நிலை இருக்கும் என்பது வியப்பாக உள்ளது. ரூ.500/- காணாமல் போனதால், திருடுவதற்கு வந்திருக்கலாமோ என்றும் யூகிக்கப்படுகிறது. ஆனால், அந்த வளாகத்திற்கு காவல் இல்லையா, பாதுகாப்பாக செக்யூரிடி / காவலாளிகள் யாரும் இல்லையா, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா இல்லையா போன்ற விவரங்களும் தெரியப்படுத்தவில்லை. ஆகவே, பணம் திருட வந்தவன், முதலில் ஒரு கன்னியாஸ்திரியிடமிருந்து ரூ.500/- திருடிவிட்டு, அம்லா அறைக்கு சென்ற நேரத்தில், அவர் விழித்திருந்ததால், அவர் கத்தாமல் இருக்க தாக்கி ஓடியிருக்கலாம் என்று ஒரு கருதுகோளை உருவாக்குவார்கள் போலிருக்கிறது. அகவே அப்படியும் செய்திகள் வருவதில் ஆச்சரியம் இல்லை.

Lisseux Carmelite Convent-nun dead Sep.2015-The Hindu photo

Lisseux Carmelite Convent-nun dead Sep.2015-The Hindu photo

ரூ 500/- திருட்டு, அம்லா கொலையில் முடிந்ததா?: நூற்றுக்கணக்கில் கன்னியாஸ்திரிக்கள் இருக்கும் கார்மெல் வளாகம் பெரியது[2]. ஆயிர ஏக்கர் கணக்கில் வளாகம் விரிந்து பரந்துள்ளது. கான்வென்டுகள் 48 இடங்களில் உள்ளன[3]. அதில் ஒன்று பாலா என்ற இடத்தில் உள்ளது[4]. அக இதில் நூற்றுக்கணக்கில் கன்னியாஸ்திரிக்கள் இருந்து வருகிறார்கள் என்று தெரிகிறது. பல பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரி என்று இருக்கும், இந்த நிறுவனம், நிச்சயமாக, ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டு வரும், பாதுகாப்பு கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கென்று பலர் பணியில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி போன்றவையும் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். 17-09-2015 அன்று நள்ளிரவில் எவனாவது வந்திருந்து, இத்தனை அட்டகாசங்கள் செய்து, கொலையும் செய்திடருக்கிறான் என்றால். அவனது உருவம் நிச்சயமாக அந்த கேமராக்களில் சீக்கிருக்கும். அனால், இவற்றைப் பற்றி மூச்சுக்கூட விடாதது வேடிக்கையாக இருக்கிறது. எனவே, நள்ளிரவில், யாரோ சுவர் ஏறி குதித்து ரூ.500/- திருட வந்தான் என்று சொல்வதே விசித்திரமானது. கான்வென்டைச் சேர்ந்தவர்கள் தாம், தெளிவாக விவரங்களை சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால், போலீஸாரும் க்கொலையைப் பற்றி யேஷ்யங்களை விதைத்து விட்டுச் சென்றுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து சென்றுள்ளதே, இதில் விவகாரம் இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. கேரளாவில், தொடர்ந்து, கிருத்துவ பாதிரிகள், பாஸ்டர்கள்,  சாமியார்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் குற்றங்களில் ஈடுபட்டுவருவது, தெரிந்த விசயமாக இருக்கிறது.

Lisieux Carmelite Convent-nuns

Lisieux Carmelite Convent-nuns

அபயாவுக்குப் பிறகு அடந்துள்ள இந்த அம்லா கொலை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: இந்த கன்னியர்மடத்தில் இதற்கு முன்பும் பல முறை கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளன. அப்போது கன்னியாஸ்திரிகளின் அறைகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தான் 17-09-2015 அன்று இரவும் மடத்திற்குள் வந்திருக்க வேண்டும், அவர்கள் பணம் எதுவும் கிடைக்காததால் கன்னியாஸ்திரி அமலாவை தாக்கி இருக்க வேண்டும் என்றும் இதில் அவர் இறந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்[5]. கன்னியாஸ்திரி அமலாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். கன்னியாஸ்திரி அமலாவை கொன்றவர்களை கண்டு பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கன்னியாஸ்திரி அமலாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை கன்னியாஸ்திரி அமலாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அருகில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் கொண்டுச் செல்லப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்ட பின்பு உடல் அடக்கம் நடக்கிறது.

Lisieux Carmelite Convent-nuns.2

Lisieux Carmelite Convent-nuns.2

அபயா முதல் அம்லா வரை – கத்தோலிக்க சர்ச்சின் நிலை: மார்ச்.27, 1992ல் 19 வயதான இளம் பெண், கன்னியாஸ்திரி ஒருத்தி, இதே போல செயின்ட் ஜோசப் குழும வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முதலில் தற்கொலை என்று சர்ச் விசயத்தை மூடி மறைக்கப் பார்த்தது. ஆனால், ஆது கொலை வழக்காகி, இரு பாதிரிகள், இன்னொரு கன்னியாஸ்திரி என்று 6 ஆண்டுகள் கழித்து கைது 2008ல் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் பெயிலில் வெளியே வந்து விட்டனர். இன்று வரை அவ்வழக்கு முடிக்கப்படவில்லை[6]. கத்தோலிக்க சர்ச் அத்தகைய எதிர்மறை விளைவு ஏற்படும் வகையில் தொடர்ந்து, ஊடகங்களில் விவரங்கள், விவாதங்கள் வருவதை-வந்துக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. வழக்குகளை எப்படியாவது முடித்துவிட வேண்டும், விசயங்கள் அமுக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்யப்பட்டு வருகின்றது. மடத்திற்குள் புகுந்து கன்னியாஸ்திரி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்[7] அவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் கவனிக்க வேண்டும்..

Abhaya murder case - the three accused

Abhaya murder case – the three accused

சர்ச் தாக்கப்பட்டாலே அலறும் கிருத்துவர்கள் இப்பொழுது அமைதியாக இருப்பதேன்?: சர்ச்சுகள் தாக்கப்பட்டபோது, கிருத்துவர்களின் உரிமைகளே பறிபோயின என்று அலறினார்கள். பிஷப்புகள் எல்லோரும் சேர்ந்து பிரதம மந்திரியிடம் மனு கொடுத்தனர். ஒரு மூதாட்டி வங்காளதேசத்து முஸ்லிம்கள் கற்பழித்தபோது, நிலைக்கு ஏற்றபடி ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், வடவிந்தியாவில் நடந்த நிகழ்சிகளைப் போல, தெற்கில் நடக்கும் போது ஏன் அத்தகைய ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், முதலியவை நடத்தப்படவில்லை, காவி-சங்கப்பரிவார் தான் காரணம் என்றெல்லாம் கூறவில்லை என்று தெரியவில்லை. மற்ற கிருத்துவத் தலைவர்களும் அமைதியாகவே இருக்கின்றனர். துடித்தெழுந்து அறிக்கைகள் விடும் ஜான் தயால் போன்றோரும் காணப்படவில்லை. நிகழ்ச்சிற்கு, நிகழ்ச்சி மாறுபடும் இந்திய சர்ச்சின் நிலைப்பாடும் விசித்திரமாக இருக்கிறது. தங்களுக்கு சாதகமாக உள்ளது, அதனால், அனைத்துலக ரீதியில் பிரபலம் ஆகலாம் அல்லது இந்துக்கள் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள், சிறுபான்மையினரை அடக்கி ஆள்கின்றனர், மதரீதியில் தொல்லைக் கொடுக்கின்றனர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். சாதகமாக இல்லை எனும் போது, இவ்வாறு இருந்து விடுகின்றனர்.

© வேதபிரகாஷ்

18-09-2015

[1] http://www.hindustantimes.com/india-news/kerala-nun-found-dead-in-convent-room-murder-suspected/article1-1391069.aspx

[2] http://www.cmcpalai.org/home/inner/22

[3] http://www.cmcpalai.org/home/convents

[4] http://www.cmcpalai.org/home/convent/2578

[5]  தினமலர், கோட்டயம் : கன்னியாஸ்திரி மர்மச்சாவு, செப்டம்பர்.17 2015.14.25.

[6] http://www.thehindu.com/todays-paper/tp-national/abhaya-murder-case-remains-a-mystery/article3249534.ece

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1344096

“கற்பழிப்புப் புகார்” – செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் – வல்சன் தம்பு, ஏன் எல்லோரிடத்திலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்?

ஓகஸ்ட் 1, 2015

“கற்பழிப்புப் புகார்”செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர்வல்சன் தம்பு, ஏன் எல்லோரிடத்திலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்?

Valsan Thampu with Mother Theresa in 1994

Valsan Thampu with Mother Theresa in 1994

கத்தோலிக்கப் பாதிரி, கல்லூரி முதல்வர், சிறுபான்மை கமிஷன் உறுப்பினர் என்று பல அவதாரங்களில் இருப்பவர்: வல்சன் தம்பு, ஒரு கத்தோலிக்க பாதிரி, இறையியல் வல்லுனர் மற்றும் இப்பொழுதைய செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர். இக்கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. 2008ல் முதல்வராவதற்கு முன்னர், இக்கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு கத்தோலிக்கக் கிருத்துவம் பற்றிய பல மொழிபெயர்ப்புகளை செய்து வந்தார். வடவிந்திய சர்ச்சில் ஒரு பாதிரி அந்தஸ்தில் உள்ளார் மற்றும் தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார். பிஎச்.டி மாணவி சதீஷ்குமார் என்ற பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்து, வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேலையில், அக்கல்லூரியின் இன்னொரு பெண்-பேராசிரியருடன் ஏன் தகராறில், வல்சன் தம்பு ஈடுபட்டுள்ளார் என்பது வியப்பாக இருக்கிறது.

Prof Nandita Narain taught 23 years st St. Stephen

Prof Nandita Narain taught 23 years st St. Stephen

ஜூலை.31, 2015: நந்திதா நாராயண் என்கின்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரி கணித பேராசிரியர் மற்றும் தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர், வல்சன் தம்பு தன்னை பழிவாங்க நினைக்கிறார் என்று எடுத்துக் காட்டியுள்ளார். வழக்கம் போல தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட விடுமுறை கேட்டபோது, அதனை மறுக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்[1].

ஜூலை.30, 2015: வல்சன் தம்பு, தங்களை ஆதரிப்பதற்காக பல்கலை மானிய குழுக்கு பேஸ்புக் மூலம் நன்றி தெரிவித்தார்[2]. பெரிய அற்புதம் நிகழ்ந்தது, ஆண்டவர் தம்மை காப்பாற்றினார் என்றேல்லாம் எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[3].

Valsan Thampu row with Prof Nandita Narain

Valsan Thampu row with Prof Nandita Narain

ஜூலை.30, 2015: பாதிக்கப்பட்ட மாணவி, அக்டோபர்.14 2014 முதல் ஜூன்.30 2015 வரை தனக்கு சேர வேண்டிய ரூ. 20,800/- மற்றும் ரூ.1,21,420/- போக்குவரத்து படியையும் சேர்த்துகொடுக்குமாறும், தான் ஆராய்ச்சி செய்து தயாரித்து வைத்துள்ள NY-6, 2NY-91, 2NY-92, 2NY-132 கூட்டுப்பொருட்களை, தன்னுடைய ஆரய்ச்சிக் குறிப்புகளுடன் திரும்பக் கொடுக்குமாறும் கடிதம் மூலம் வல்சன் தம்புவைக் கேட்டுக் கொண்டுள்ளார்[4].

Valsan Thampu envious of Nandita Narain

Valsan Thampu envious of Nandita Narain

ஜூலை.23, 2015: ஸ்மிருதி ராணி, பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து பேசினார். உடன் சிபிஎம்மின் போலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் இருந்தார். அம்மாணவிக்குரிய உதவித் தொகை, சோதனைக்கூடத்திற்கு செல்லும் அனுமதி முதலியவற்றை தொடர்ந்து கொடுக்குமாறு, தில்லி பல்கலஒக்கழகத்திற்கு உத்தரவிட்டார்[5].

ஜூலை.5, 2015: பல்கலை மானிய குழு, ஒரு பிரதிநிதியை செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு அனுப்பி வைத்தது[6].

ஜூலை.7, 2015: டெல்லி பல்கலைக்கழக பதிவாளருக்கும், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன[7]. ஸ்டீபன் கல்லூரியில், ஆராய்ச்சி படிப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவ்விகாரத்தை மூடி மறைக்க முயலும் முதல்வரை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் டெல்லி பல்கலை. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்[8].

St Stephen victim interview with NDTV

St Stephen victim interview with NDTV

ஜூன்.24 2015: பேராசிரியர் சதீஷ் குமார் மீது போலீசில் பாலியல் புகார் அளித்ததால், பாலியல் புகாரில் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலையில், இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது[9]. கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சதீஷ் தன்னை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது எதிர்காலம் பாதிக்கும் என்று அஞ்சி தான் இத்தனை ஆண்டுகளாக சதீஷ் குமார் மீது புகார் அளிக்கவில்லை என்று அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சதீஷ் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது[10]. இதற்கிடையே சதீஷ் கல்லூரியின் நிதி நிர்வாக அதிகாரி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கல்லூரி முதல்வர் வல்சன் தம்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருந்தால் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆனால் அது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. மகாத்மா காந்தி, யேசு நாதர், நபிகள் நாயகம் மீது கூடத் தான் புகார் எழுந்தது. அனைத்து சீர்திருத்தவாதிகள் மீதும் புகார் உள்ளது என்றார்[11].

Valsan Thampu fights through Facebook

Valsan Thampu fights through Facebook

2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி: டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரிபவர் சதீஷ்குமார். இதே துறையில் பி.எச்டி படித்து வரும் மாணவிக்கு, சதீஷ்குமார் வழிகாட்டியாகவும் இருக்கிறார். இந்நிலையில், சதீஷ்குமார் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக சம்பந்தப்பட்ட மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமும் (ஐசிசி), முதல்வரிடமும் புகார் தெரிவித்தார்[12].  இந்நிலையில், சத்தீஷ் தனது ஆசைக்கு இணங்கினால் மட்டுமே முனைவர் ஆய்வை முடித்துக் கொடுப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி வந்ததாக புகார் கூறியுள்ளார் அந்த மாணவி. இதுகுறித்து அம்மாணவி அளித்த புகாரில், இதற்கான முயற்சியில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி சத்தீஷ் தன்னிடம் முறை தவறி நடந்துகொண்டதாக கூறியுள்ளார். தனக்கு எதிராக புகார் செய்தால் முனைவர் பட்டம் பெறமுடியாது என்று சத்தீஷ் மிரட்டியதால் ஆய்வை முடிப்பதற்காக பொறுமை காத்ததாக அம்மாணவி கூறியிருக்கிறார்[13].

Valsan Thampu responds

Valsan Thampu responds

செக்ஸ் புகாரில் சர்ச்சைக்குள்ளான வல்சன் தம்பு: ஆனால், ஒழுங்கு நடவடிக்கை குழு, இந்த விவகாரத்தில் பாரபட்சம் பார்ப்பதாகவும், சதீஷ்குமாரை காப்பாற்ற முதல்வர் வல்சன் தாம்பு முயல்வதாகவும் கூறி மாணவி, ஐசிசியில் அளித்த புகாரை வாபஸ் பெற்றார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக சதீஷ்குமார் மற்றும் முதல்வருக்கு எதிராக மாணவி போலீசில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பேராசிரியர் சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், டெல்லி பல்கலையின் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கல்லூரியின் வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜினாமா செய்ய தயார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் வல்சன் தாம்பு கூறுகையில், ‘இது தொடர்பாக கல்லூரிக்குள்ளேயே விசாரணை நடந்து வருகிறது.  என் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கல்லூரியின் நலன் கருதி அடுத்த நிமிடமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Valsan Thampu and St.Stephen involved in controversies

Valsan Thampu and St.Stephen involved in controversies

பலவித சர்ச்சைகளில் சிக்கியுள்ள வல்சன் தம்பு: வசன் தம்பு, பொதுவாகவே பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பது தெரிகிறது. இதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

  1. 2008ல் அலஹாபாத் விவசாய நிறுவனத்திலிருந்து பெற்ற (தனிநிகர் பல்கலைக்கழகம்) தனது இறையியல் பிஎச்.டி செல்லாது என்பதால் ராஜினாமா செய்ய நேரிட்டது. ஆனால், அடே ஆண்டில் மறுபடியும் முதல்வராக நியமிக்கப்பட்டார். விவசாய நிறுவனத்திலிருந்து இறையியல் பிஎச்.டி பெற்றதே வினோதமாக இருக்கிறது.
  1. 2008ல் ஒரு சமஸ்கிருத ஆசிரியர், ஒரு அமெரிக்க மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவ்வழக்கு, தில்லி உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கிலும், அம்மாணவி வல்சன் தம்புவிடம் புகார் கொடுக்கச் சென்றபோது, அவர், அந்த சமஸ்கிருத ஆசிரியரோடு சேர்ந்து கொண்டு, தன்னை கல்லூரியிலிருந்து விலக்க முயற்சித்தார் என்று கூறியிருக்கிறார்[14].
  1. 2012ல் 19-வயதுக்கு கீழே போட்டியிடும் கிரிக்கெட் கேப்டனாக இருக்கும், உன்முக்த் சந்த், என்ற அக்கல்லூரி மாணவர் குறைந்த கல்லூரி வருகைப்பதிவு உள்ளது என்று பரீட்சை எழுதவிடாமல் வல்சன் தம்பு தடுத்தார். பிறகு ஒப்புக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

01-08-2015

[1] http://www.business-standard.com/article/pti-stories/stephen-s-maths-prof-accuses-principal-of-pursuing-personal-115073101312_1.html

[2] http://timesofindia.indiatimes.com/city/delhi/UGC-is-backing-him-claims-Thampu-on-FB/articleshow/48303658.cms

[3] “Shouldn’t we, my friends, as a community of ordinary people, rejoice at the extraordinary things that happen in our midst? [Eight] years ago, no one gave me a ghost of a chance to survive the ferocious, orchestrated attacks that a large number of highly feared agents had unleashed -de facto declaring a war-on the college. There were those who believed that the College would go six feet underground. By the mercy of the Almighty, it today stands towering several feet above all other institutions in excellence. If this is not a miracle, what is?”

[4] http://www.dnaindia.com/india/report-st-stephen-s-molestation-victim-sends-caution-note-to-valson-thampu-and-professor-2109631

[5] http://www.ndtv.com/delhi-news/had-a-great-time-valson-thampu-after-meeting-university-grants-commission-officials-1202280

[6] http://www.siasat.com/news/st-stephens-molestation-row-valson-thampu-meets-ugc-officials-says-had-great-time-803386/

[7]  தி-இந்து, டெல்லி கல்லூரி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு: அறிக்கை கோரியது மனிதவள அமைச்சகம், Published: June 24, 2015 13:11 ISTUpdated: June 24, 2015 18:20 IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1288189

[9] http://tamil.thehindu.com/india/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7350004.ece

[10] Read more at: http://tamil.oneindia.com/news/india/jesus-prophet-muhammad-mahatma-gandhi-have-faced-allegatio-229618.html

[11] http://tamil.oneindia.com/news/india/jesus-prophet-muhammad-mahatma-gandhi-have-faced-allegatio-229618.html

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=154571

[13] தினகரன், செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டம், மாற்றம் செய்த நேரம்:7/7/2015 6:28:09 AM.

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2617183/Case-against-St-Stephens-college-professor-Nandita-Narain-hold-principal-seeks-court-settlement.html

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)?

ஒக்ரோபர் 22, 2013

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)?

அஸ்தம்பட்டியில் பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவர்களின் வழக்குகள், புகார்கள், சண்டைகள் எல்லாமே வருகின்றன. முதல் பதிவிற்குப் பிறகு[1], இரண்டு[2], பிறகு மூன்றாம் பதிவு தொடர்கின்றது “அஸ்தம்பட்டி புராணம்”!

CSI Polytechnic college Samson Ravindran

அஸ்தம்பட்டி போலீஸ் ஷ்டேசனில் பிஷப் மாணிக்கம் துரை மீது வழக்குப் பதிவு (ஜூலை 2010)[3]: சிஎஸ்ஐ பிஷப் மாணிக்கம் துரை மற்றும், 12 இதர கிறிஸ்தவர்களின் மீது ஏகப்பட்ட பண கையாடல், மோசடி வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அஸ்தப்பட்டி பொலீஸ் ஸ்டேசனிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டது. கென்னடி, இன்ஸ்பெக்டர், மூன்று கோடி மோசடி வழக்கு மற்றும் சிஎஸ்ஐ சேலம் பாலிடெக்னிக் ஊழல் விசயமாக, பிஷப் மாணிக்கம் துரை, அவரது மனைவ் மற்றும் இதர 11 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். கோயம்புத்தூர் மோசடி வழக்கில், சென்னை நீதி மன்றத்திலிருந்து ஏற்கெனவே பெயில் பெற்றுள்ளார்கள். இதனால், பால் வசந்தகுமார் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்[4]. பிறகு துரை வசந்தகுமாருக்கு எதிராக வழக்குகளைப் போட்டுள்ளார்[5].

CSI Polytechnic Samson Ravindran

அஸ்தம்பட்டிபகுதியில்தென்னிந்தியதிருச்சபையினர்அரசுக்குச்சொந்தமான 4.7 ஏக்கர்நிலத்தைஆக்கிரமித்துள்ளனர்: அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதனை ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களையும் சிறைப்பிடித்து தென்னிந்திய திருச்சபையினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் தென்னிந்திய திருச்சபையினர் அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த ஜூன் 15ம் தேதி ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களை உள்ளே விடாமல் சி.எஸ்.ஐ நபர்கள் வெளியே துரத்தி அனுப்பினர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், நகர வருவாய்த் துறை அலுவலர் ஸ்ரீதர், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்றும் ஆய்வு செய்யச் சென்றனர். அவர்களை திருச்சபை ஊழியர்கள் சிறைப்பிடித்து வைத்தனர். இது  தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. சேலம் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்த கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் அலுவலர்களை சிறைப்பிடித்து, பணி செய்ய விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சேலம் வட்டத்தில் இருக்கும் 80 கிராம நிர்வாக அலுவலர்களும் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hasthampatti criminal case filed against Bishop Manickam Dorai

தம்பி. பால்தினகரனின்இனியுள்ளநிலை: பால் தினகரன் போன்ற மில்லியனர்-போதகர்கள் இங்கு வருவதும் வியப்பாக இருக்கிறது. ஒரு இணைதளத்தில், “சேலத்தில் அஸ்தம்பட்டி இம்மானுவேல் CSI ஆலயத்தில் ஞாயிறு காலை ஆராதனையில் தம்பி.பால் தினகரன் பேசும்போது என் தங்கை விபத்தில் மரித்த துக்கத்தில் எங்கள் குடும்பமே சொல்லொன்னா வேதனையில் இருந்த சமயம் ஒருசிலர் மட்டும் எங்களை தாக்கி எழுதி எங்கள் வேதனையை அதிமாக்கினார்கள் என்று ஆலயத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். என்னைத்தான் அப்படி குறிப்பிட்டார் என்று ஜனங்கள் அறிவார்கள்”, என்று இன்னொரு கிருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார்.  அதாவது, தினகரன் மகன்-மகள் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி அவரது மகள் இறந்த செய்தியுள்ளது.

dgs dhinakaran family

அஸ்தம்பட்டியில்  உள்ள  சி.எஸ்..,   பாலிடெக்னிக்[6]  நிர்வாகி  மீது  பல  கோடி  ரூபாய்  மோசடி  வழக்கு  பதிவு: சேலத்தில் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.., பாலிடெக்னிக் கல்லூரி ஒரு மைனாரிட்டி கிறிஸ்துவ மத அறக்கட்டளையான .எஸ்..டி.., மற்றும் சி.எஸ்.., டயாசிஸ் கோவை சட்ட திட்டங்களுக்கும் மற்றும் அந்த விதிகளுக்கும் உட்பட்ட நிறுவனம்இங்கு உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் கவுரவ நிர்வாகிகள். அவர்கள் கூட்டாக சேர்ந்து கல்லூரிக்கும், சபை மக்களுக்கும் போலி கணக்கு வழக்குகளை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். என்.பி.., அங்கீகாரம் வாங்குவதாகவும், கட்டுமான பணி நடப்பதாகவும், டி.சி.பி.சி., டிரெயினிங் புரோகிராம் டிரைனிங் என்ற தலைப்பிலும் வுமன் எம்பவர்மென்ட் புரோகிராம் எஞூற தலைப்பிலும், கல்லூரி வாகனத்தை முதல்வர் தன் பெயரில் பதிவு செய்ததும், கல்லூரி நிரந்தர இட்டுவைப்பினை சட்டத்திற்கு புறம்பாகவும், அன்றாட நிர்வாக செலவு பெட்டிகேஸ் என்ற தலைப்பிலும் உள்பட பல்வேறு வகைகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதற்குரிய ஆவணங்களையும் இணைத்துள்ளேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

CSI Polytechnic college Samson Ravindran

முதல்வர் முதல் மற்றவர்களின் மீது வழக்குப் பதிவு: தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., அம்பிகா,

  • சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் தாளாளர் துரை,
  • கல்லூரி முன்னாள் முதல்வர் சாம்சன் ரவீந்திரன்,
  • நிர்வாக மேற்பார்வையாளர் அனிபால்ட்,
  • ஏரியா சேர்மன் பால்ராஜ்,
  • கவுரவ செயலாளர் ஸ்டேன்லி குமார்,
  • கவுரவ பொறுப்பாளர் அமிர்தம்,
  • உயர் மட்ட கல்வி நிறுவன கன்வீனர் பாக்கிராஜ்,
  • விரிவுரையாளர் ரவி மனோகரன்,
  • ஜோஸ்வா,
  • அசோக்,
  • ஜெபக்குமார்,
  • சூடாமணி

ஆகியோர் மீது ஐ.பி.சி., 420, 403, 409, 468, 471, 477ஏ மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

© வேதபிரகாஷ்


[4] A Criminal case was filed in Salem on Friday against Church of South India Bishop Manickam Dorai, who is already facing charges of misappropriation of CSI funds, and 12 others, a top police official said. The case was filed under seven sections of IPC including cheating in Hasthampatty police station. Inspector Kennedy said the case relates to misappropriation of funds totalling Rs. three crore.Besides the Bishop, a case was filed against his wife and 11 others including a CSI Salem polytechnic College Principal. The CB-CID is already investigating the alleged misappropriation of funds in Coimbatore, Udhagamandalam, Erode. The Bishop and his wife had already obtained anticipatory bail from the Madras High Court in the Coimbatore case. Following the alleged irregularities, Paul Vasanthakumar, Bishop of Tiruchi and Thanjavur Diocese had taken over additional charge of Coimbatore Diocese of the Church of South India.

http://www.hindustantimes.com/India-news/TamilNadu/Criminal-case-filed-against-Bishop/Article1-576418.aspx

[5] Madras High Court – Rt. Rev. Dr.M.Dorai vs 8 .Rt.Rev.S.Vasanthakumar on 5 April, 2013; Dated : 05.04.2013; http://www.indiankanoon.org/doc/121956762/

கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா!

மே 5, 2013

கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா!

Christian priest fraud - money doubling - Ravi 2013

பரிசுத்தஆவி, பிதா, மகன்: கிருத்துவத்தில் மூனிறில் ஒன்றா, ஒன்றில் மூன்றா என்று விவாதிக்கப்படலாம். ஆனால், மோசடிகளில், எல்லாமே ஒன்று என்கிறார்கள். கிருத்துவப் பாதிரிகள் என்று குறிப்பிடும் போது, அவர்களின் “டினாமினேசன்”, மதப்பிரிவு தெரிவிக்கப் படுவதில்லை.  ஆனால், அவர்களின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவியின் ஏவலா என்று புரியவில்லை! இதோ இன்னொன்று:

பெயர் ரவி
விலாசம் சஞ்சீவி நகர், வியாசர்பாடி
மனைவியின் பெயர் வேளாங்கன்னி
மதம் கிருத்துவம்
தொழில் பாதிரி
இதர தொழில் பணம் இரட்டிப்பு, பண வசூல்
காவல் நிலையம் எம்.கே.பி. நகர்
புகார் கொடுக்கப்பட்டது, ஆனால் போலீஸார் வாங்க மறுப்பு
ஏன் புளியந்தோப்பு துணை ஆணையரிடம் செல்லுமாறு கூறல்
முந்தைய புகார் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பணம் கொடுத்தவர் நிலை அலைந்து கொண்டிருக்கின்றனர்

 

அயல்நாடுகளிலிருந்து ஏகப்பட்ட பணம் வரும் நிலையில் இவ்வாறு ஏமாறுவதன் ரகசியம் என்ன? அயல்நாட்களினின்று கோடிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் செலவழித்து, தங்களுக்கும் எடுத்துக் கொள்வதாக அவர்களே பல நேரங்களில் மெய்ப்பித்துள்ளார்கள். பிறகு, உள்நாட்டில் இவ்வாறு ஏன் ஏமாற்றுகிறார்கள்? ஒருவேளை, இந்தியாவை ஒட்டு மொத்தமாக சுரண்ட வேண்டும் என்று ஏதாவது ஒரு திட்டம் உள்ளதா?

 

முந்தைய இடுகைகள்: பணம் மோசடி, நிலம் மோசடி என்று கிருத்துவ பாதிரிகள், பிஷப்புகள், பாஸ்டர்கள் தொடர்ந்து தான் ஈடுபடுகிறார்கள்.  உதாரணத்திற்கு சில:

  • ·         கிருத்துவ அறக்கட்டளை நடத்தி[1], பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!
  • ·         நில மோசடியில் இன்னுமொரு பிஷப்[2]: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!
  • கோவில் நிலம், அரசு நிலம், புறம்போக்கு நிலம் அபகரிப்பது என்பது கிருத்துவர்களுக்குக் கைவந்த கலை[3].
  • ·         மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா[4], அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?

ஆனால், செய்திகள் வருவதோடு சரி, அதற்குப் பிறகு என்னவாயிற்று என்று அறிவிக்கப்படுவதில்லை.

வேதபிரகாஷ்

05-05-2013


சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் – ஒரு கம்பெனி – குட்டு வெளிப்பட்டுவிட்டது!

ஏப்ரல் 1, 2012

சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் – ஒரு கம்பெனி – குட்டு வெளிப்பட்டுவிட்டது!

1947லிருந்து சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன்ஒரு பதிவு செய்யப்பட்டுள்ள கம்பெனியாகும்: இன்று முட்டாள்களின் தினம் என்று எண்ணவேண்டாம். இந்தியா கிழக்கிந்திய கம்பெனியின் கீழிருந்து விடுபட்டாலும், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது போலும். சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் [the Church of South India Trust Association (CSI-TA)] 1947லேயே, இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கம்பெனியாம். இத்தனை ஆண்டுகள் கழித்து, சென்னை உயர்நீதி மன்றம் இந்த உண்மையினை கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது[1]. இந்திய கம்பெனி சட்டம், 1956ன் கீழ் மாத-வருட அறிக்கைகளை சமர்ப்பிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தென்னிந்திய திருச்சபை ஒரு நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு[2]: சென்னை, மார்ச்.29: தென்னிந்திய திருச்சபை (சர்ச் ஆஃப் சவுத் இந்தியா) ஒரு நிறுவனம் / கம்பெனி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது[3]. எனவே நிறுவன விவகார சட்டத்தின்படி அதன் கணக்குகளை நிறுவனங்களின் பதிவாளருக்கு ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1947-48ல் நிறுவனச் சட்டத்தின்கீழ் சிஎஸ்ஐயே தன்னை ஒரு நிறுவனமாக பதிவுசெய்துள்ளது. அதற்கு அயல்நாடுகளிலிருந்து ஏராளமான பணம் வருகிறது, ஆனால், அது அப்பணத்தை துர்பிரயோகம் செய்கிறது என்று ரிஜிஸ்டிரர் ஆப் கம்பெனிக்கு புகார் கொடுத்திருந்தார்[4].  முன்னதாக சிஎஸ்ஐ உறுப்பினரான ஜான் எஸ். துரை என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் இந்த உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளார்.

 சிஎஸ்ஐ உறுப்பினரான ஜான் எஸ். துரை என்பவர் தாக்கல் செய்த மனுவின் முடிவு: அந்நியச் செலாவணி பரிவர்த்தனையின்கீழ் வரும் நிதிகளை சிஎஸ்ஐ தவறாக பயன்படுத்துகிறது. எனவே அதன் கணக்குகளை ஆராய உத்தரவிட வேண்டும் என்று ஜான் எஸ். துரை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். துரையின் மனுவைத் தொடர்ந்து நிறுவனங்களின் பதிவாளரை இந்த விவகாரத்தை கவனிக்குமாறு பிப்ரவரி 2, 2011ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டது.

மத்திய அமைச்சகத்திடமிருந்து நிறுவனங்களின் பதிவாளர் அனுமதி பெற்றது: ஏற்கெனெவே பல ஊழல்களில், குற்றச்சாட்டுகளில், சட்டமீறல்களில் கத்தோலிக்கப் பாதிரிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த விஷயமே. ஆனால், கம்பெனியாக இருந்தாலும், ரிஜிஸ்டிரர் ஆப் கம்பெனியே விசாரிக்க வேண்டுமானால், அனுமதி வேண்டுமாம். இதையடுத்து சிஎஸ்ஐயின் நிதி விவகாரங்களை விரிவாக விசாரிக்க மத்திய அமைச்சகத்திடமிருந்து நிறுவனங்களின் பதிவாளர் பிரிவு 209Aன் (Section 209A of Company’s Act) கீழ் விசாரிக்க அனுமதி பெற்றார். ஆகஸ்ட் 30, 2011ல் சிஎஸ்ஐ அறக்கட்டளை அமைப்புக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் சிஎஸ்ஐயின் கணக்கு புத்தகங்களை தயாராக வைத்திருக்குமாறு கூறப்பட்டிருந்தது. எனினும் சிஎஸ்ஐ நிர்வாகிகள் கணக்குகளை ஆய்வுசெய்ய ஒரு வாரம் அனுமதி கேட்டிருந்தனர். இதனிடையே நோட்டீஸுக்கு எதிராக சிஎஸ்ஐ சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, தங்களது கணக்குகளை ஆய்வுசெய்ய பதிவாளருக்கு உள்ள அதிகாரம் குறித்து செப்டம்பர் 16, 2011ல் கேள்வி எழுப்பி, தடையுத்தரவையும் பெற்றனர்.

 மறுபடியும் வழக்குத் தொடர்ந்த துரை: அப்பொழுது துரை தனது எதிர்-சுய-நில-விளக்கத்தை அளித்து, சி.எஸ்.ஐ எப்பொழுதுமே கணக்கு-வழக்குகளை தாமதமாக சமர்ப்பித்து வருகிறது, ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை என்று எடுத்துக் காட்டி, அவ்வழக்கில் தம்மையும் சேர்ந்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்[5]. அதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில்தான் சிஎஸ்ஐ ஒரு நிறுவனம்தான் என்றும் அதன் கணக்குகளை நிறுவனங்களின் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், கத்தோலிக்க இணையதளம் ஒன்று இச்செய்தியை திரித்து வெளியிட்டிருந்தது[6].

வேதபிரகாஷ்

01-04-2012


[4] The case started with a complaint lodged with the RoC by a CSI member, John S Durai of Mylapore. He had claimed that the CSI was misusing the foreign exchange account, which witnessed a huge inflow of money.

[5] In his counter-affidavit, Durai informed the court that CSI was a “habitual defaulter in filing the statutory returns in time, and also not in the habit of replying to the genuine queries raised by the registrar regarding complaints received against the CSI”. He also said the court order was the basis for the present inspection.

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

மார்ச் 11, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

அணு-உலை எதிர்ப்பு விஷயத்தில் இரட்டை வேடம்[1] போட்டு மக்களை ஏமாற்றியது தெரியவதுள்ள வேலையில்[2], அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள் பிஷப்புகள்[3]. வேடிக்கையென்னவென்றால், இவர்கள் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன[4]. ஆனால், அவற்றைப் பற்றி ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

  1. பற்பல பாதிரிகள், பாலியல் குற்றங்கள், சிறுவர் வன்புணர்ச்சி அக்கிரமங்கள், சிறுமியர் வன்புணர்ச்சி குரூரங்கள், கற்பழிப்பு பாதகங்கள், நிலமோசடிக:ள், பணக்கையாடல்கள் என மிகவும் அதிகமாக சட்டமீறல்களில் மாட்டியிருந்தாலும், அதைக் கண்டிப்பதில்லை. அரசு கண்டுக்கொள்வதே இல்லை. அப்படியென்றால், அரசு ஆதரிக்கிறதா?
  2. அப்படியென்ன இந்திய நாட்டில் கிருத்துவ சாமியார்களுக்கு சிறப்பு சலுகைகள்?
  3. அப்படிப்பட்ட விலக்கு இந்தியாவில் எப்படி கிருத்துவ குற்றவாளிகளுக்கு இருக்கிறது?
  4. இப்பொழுது கூட, இந்திய மீனவர்களை இலங்கையர் சுட்டால், ஒரு மாதிரி பிரச்சினையை கையாளுகிறார்கள். ஆனால், இத்தாலிய கிருத்துவர்கள் சுட்டுக் கொன்றாலும், வாடிகன் வரை விஷயம் செல்கிறது[5]. இந்திய கார்டினல்களே, வவடிகனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்[6], தாய்நாட்டுச் சட்டங்களையோ, கிருத்துவ மீனவர்களையோ மதிப்பதில்லை, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
  5. அப்படியென்றால், தமிழ் மீனவர்கள் மலையாளத்து மீனவர்களை விட குறைந்தவர்களா?
  6. அதிலும், இந்து மீனவர்கள் கிருத்துவ மீனவர்களை விட குறைந்தவர்களா?
  7. இந்தியாவில் சுட்டுக் கொலைசெய்து விட்டு, தங்கள் நாட்டு சட்டப்படி, தண்டனைக் கொடுப்போம் என்றால் என்ன?
  8. எல்லோருக்கும் ஒரு சட்டம் எனும்போது, கிருத்துவர்களுக்கு மட்டும், ஏன் சட்டங்கள் மாறுகின்றன? நாங்கள் ஊர்வலமாகச் செல்வோம் என்கின்றனர்.

மற்ற பாதிரிகள் சொன்னால், இந்த பாதிரிகள் கேட்பார்களா என்ன? அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை!

பாதிரிகள்       அணு உலை எதிர்ப்பு கூட்டம் / குழு போராட்டம் வேதபிரகாஷ்
11-03-2012


[4]  இதைபற்றி இந்த இணைதளத்தில் பல இடுகைகளை விவரங்களுடன் வெளியிட்டுள்ளேன்: https://christianityindia.wordpress.com/