Archive for the ‘ரூ.3 கோடி மோசடி’ Category

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)?

ஒக்ரோபர் 22, 2013

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)?

அஸ்தம்பட்டியில் பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவர்களின் வழக்குகள், புகார்கள், சண்டைகள் எல்லாமே வருகின்றன. முதல் பதிவிற்குப் பிறகு[1], இரண்டு[2], பிறகு மூன்றாம் பதிவு தொடர்கின்றது “அஸ்தம்பட்டி புராணம்”!

CSI Polytechnic college Samson Ravindran

அஸ்தம்பட்டி போலீஸ் ஷ்டேசனில் பிஷப் மாணிக்கம் துரை மீது வழக்குப் பதிவு (ஜூலை 2010)[3]: சிஎஸ்ஐ பிஷப் மாணிக்கம் துரை மற்றும், 12 இதர கிறிஸ்தவர்களின் மீது ஏகப்பட்ட பண கையாடல், மோசடி வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அஸ்தப்பட்டி பொலீஸ் ஸ்டேசனிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டது. கென்னடி, இன்ஸ்பெக்டர், மூன்று கோடி மோசடி வழக்கு மற்றும் சிஎஸ்ஐ சேலம் பாலிடெக்னிக் ஊழல் விசயமாக, பிஷப் மாணிக்கம் துரை, அவரது மனைவ் மற்றும் இதர 11 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். கோயம்புத்தூர் மோசடி வழக்கில், சென்னை நீதி மன்றத்திலிருந்து ஏற்கெனவே பெயில் பெற்றுள்ளார்கள். இதனால், பால் வசந்தகுமார் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்[4]. பிறகு துரை வசந்தகுமாருக்கு எதிராக வழக்குகளைப் போட்டுள்ளார்[5].

CSI Polytechnic Samson Ravindran

அஸ்தம்பட்டிபகுதியில்தென்னிந்தியதிருச்சபையினர்அரசுக்குச்சொந்தமான 4.7 ஏக்கர்நிலத்தைஆக்கிரமித்துள்ளனர்: அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதனை ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களையும் சிறைப்பிடித்து தென்னிந்திய திருச்சபையினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் தென்னிந்திய திருச்சபையினர் அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த ஜூன் 15ம் தேதி ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களை உள்ளே விடாமல் சி.எஸ்.ஐ நபர்கள் வெளியே துரத்தி அனுப்பினர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், நகர வருவாய்த் துறை அலுவலர் ஸ்ரீதர், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்றும் ஆய்வு செய்யச் சென்றனர். அவர்களை திருச்சபை ஊழியர்கள் சிறைப்பிடித்து வைத்தனர். இது  தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. சேலம் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்த கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் அலுவலர்களை சிறைப்பிடித்து, பணி செய்ய விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சேலம் வட்டத்தில் இருக்கும் 80 கிராம நிர்வாக அலுவலர்களும் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hasthampatti criminal case filed against Bishop Manickam Dorai

தம்பி. பால்தினகரனின்இனியுள்ளநிலை: பால் தினகரன் போன்ற மில்லியனர்-போதகர்கள் இங்கு வருவதும் வியப்பாக இருக்கிறது. ஒரு இணைதளத்தில், “சேலத்தில் அஸ்தம்பட்டி இம்மானுவேல் CSI ஆலயத்தில் ஞாயிறு காலை ஆராதனையில் தம்பி.பால் தினகரன் பேசும்போது என் தங்கை விபத்தில் மரித்த துக்கத்தில் எங்கள் குடும்பமே சொல்லொன்னா வேதனையில் இருந்த சமயம் ஒருசிலர் மட்டும் எங்களை தாக்கி எழுதி எங்கள் வேதனையை அதிமாக்கினார்கள் என்று ஆலயத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். என்னைத்தான் அப்படி குறிப்பிட்டார் என்று ஜனங்கள் அறிவார்கள்”, என்று இன்னொரு கிருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார்.  அதாவது, தினகரன் மகன்-மகள் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி அவரது மகள் இறந்த செய்தியுள்ளது.

dgs dhinakaran family

அஸ்தம்பட்டியில்  உள்ள  சி.எஸ்..,   பாலிடெக்னிக்[6]  நிர்வாகி  மீது  பல  கோடி  ரூபாய்  மோசடி  வழக்கு  பதிவு: சேலத்தில் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.., பாலிடெக்னிக் கல்லூரி ஒரு மைனாரிட்டி கிறிஸ்துவ மத அறக்கட்டளையான .எஸ்..டி.., மற்றும் சி.எஸ்.., டயாசிஸ் கோவை சட்ட திட்டங்களுக்கும் மற்றும் அந்த விதிகளுக்கும் உட்பட்ட நிறுவனம்இங்கு உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் கவுரவ நிர்வாகிகள். அவர்கள் கூட்டாக சேர்ந்து கல்லூரிக்கும், சபை மக்களுக்கும் போலி கணக்கு வழக்குகளை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். என்.பி.., அங்கீகாரம் வாங்குவதாகவும், கட்டுமான பணி நடப்பதாகவும், டி.சி.பி.சி., டிரெயினிங் புரோகிராம் டிரைனிங் என்ற தலைப்பிலும் வுமன் எம்பவர்மென்ட் புரோகிராம் எஞூற தலைப்பிலும், கல்லூரி வாகனத்தை முதல்வர் தன் பெயரில் பதிவு செய்ததும், கல்லூரி நிரந்தர இட்டுவைப்பினை சட்டத்திற்கு புறம்பாகவும், அன்றாட நிர்வாக செலவு பெட்டிகேஸ் என்ற தலைப்பிலும் உள்பட பல்வேறு வகைகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதற்குரிய ஆவணங்களையும் இணைத்துள்ளேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

CSI Polytechnic college Samson Ravindran

முதல்வர் முதல் மற்றவர்களின் மீது வழக்குப் பதிவு: தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., அம்பிகா,

  • சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் தாளாளர் துரை,
  • கல்லூரி முன்னாள் முதல்வர் சாம்சன் ரவீந்திரன்,
  • நிர்வாக மேற்பார்வையாளர் அனிபால்ட்,
  • ஏரியா சேர்மன் பால்ராஜ்,
  • கவுரவ செயலாளர் ஸ்டேன்லி குமார்,
  • கவுரவ பொறுப்பாளர் அமிர்தம்,
  • உயர் மட்ட கல்வி நிறுவன கன்வீனர் பாக்கிராஜ்,
  • விரிவுரையாளர் ரவி மனோகரன்,
  • ஜோஸ்வா,
  • அசோக்,
  • ஜெபக்குமார்,
  • சூடாமணி

ஆகியோர் மீது ஐ.பி.சி., 420, 403, 409, 468, 471, 477ஏ மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

© வேதபிரகாஷ்


[4] A Criminal case was filed in Salem on Friday against Church of South India Bishop Manickam Dorai, who is already facing charges of misappropriation of CSI funds, and 12 others, a top police official said. The case was filed under seven sections of IPC including cheating in Hasthampatty police station. Inspector Kennedy said the case relates to misappropriation of funds totalling Rs. three crore.Besides the Bishop, a case was filed against his wife and 11 others including a CSI Salem polytechnic College Principal. The CB-CID is already investigating the alleged misappropriation of funds in Coimbatore, Udhagamandalam, Erode. The Bishop and his wife had already obtained anticipatory bail from the Madras High Court in the Coimbatore case. Following the alleged irregularities, Paul Vasanthakumar, Bishop of Tiruchi and Thanjavur Diocese had taken over additional charge of Coimbatore Diocese of the Church of South India.

http://www.hindustantimes.com/India-news/TamilNadu/Criminal-case-filed-against-Bishop/Article1-576418.aspx

[5] Madras High Court – Rt. Rev. Dr.M.Dorai vs 8 .Rt.Rev.S.Vasanthakumar on 5 April, 2013; Dated : 05.04.2013; http://www.indiankanoon.org/doc/121956762/

பாதிரியார்கள் மாநாட்டில் சலசலப்பு: செக்ஸின் எதிரொலி – 2

மே 16, 2010

பாதிரியார்கள் மாநாட்டில் சலசலப்பு: செக்ஸின் எதிரொலி – 2

பாதிரியார்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகள்
மே 16,2010,00:00  IST

செக்ஸ் மயமான கிருத்துவம்: புதுடில்லி: செக்ஸ் புகார்கள் எதிரொலியால்,பாதிரியார்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகளை கொண்டு வர இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பு முடிவு செய் துள்ளது. கத்தோலிக்க கூட்டமைப்பின் கீழ் இயங்கும் அனாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்களில்  பாலியல் கொடுமைகள் நடப்பதாக புகார்கள் எழுவது தொடர்கதையானது.

பாதிரிகள் செய்யாத குற்றங்களே இல்லை என்ற நிலை: கடவுளுக்கு நிகராக கருதப்படும் பாதிரியார்கள், பாலியல் வன்முறைகளிலும், நிதி மோசடிகளிலும்  ஈடுபடுவதாக குற்றச் சாட்டு எழுந்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில், சர்ச்சுகள், கிறிஸ்தவ நிறுவனங் கள் மீதான நன்மதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கத்தோலிக்க கூட்டமைப்பின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு புதிய நடத்தை விதிமுறைகளை நடைமுறை படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, வரும் ஜூன் மாதம் 2010 முதல், புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின் றன. பெங்களூரில் சமீபத்தில் நடந்த இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பு (சிபிசிஐ) மாநாட்டில், புதிய நடத்தை விதிமுறைகளுக்கு இறுதி வடிவம் கொடுப்பது குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பிஷப்புகள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: சர்ச்சுகள், கிறிஸ்தவ நிறுவனங்களில், எந்த வகையிலும் சிறு குற்றங்கள் கூட நிகழாத வகையில், புதிய நடத்தை விதிமுறைகள் வகுப்பது குறித்து, மாநாட்டில் விவாதிக்கப்பட் டது. இதையும் மீறி, பாதிரியார் கள், நிர்வாகிகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டால், அவர்கள் பதவி பறிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கத்தோலிக்க கூட்டமைப்பின் கீழ் இயங்கும் இல்லங்களில் தங்கியுள்ள சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய நடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி தொடர்பாளர் கூறினார்.

இதையும் மீறி, பாதிரியார்கள், நிர்வாகிகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டால், அவர்கள் பதவி பறிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வளவேதானா? பிறகு என்ன, ஜாலிதானே? ஊட்டி பாதிரியார் அதைத்தானே செய்து கொண்டிருந்தார். ஒரு பதவி பறிக்கப் பட்டால், இன்னொரு பதவி கொடுத்து விடுகிறார்களே! “அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்“, என்றால், எந்த சட்டத்திபடி என்று தெரியவிலையே? தவறு செய்யும் பாதிரிகள் மீது, இவர்களே போலீஸாரிடம் புகார் அளிப்பார்களா, அல்லது அமுக்கிவைத்துக் கொண்டு, இவர்களே தீர்மானிப்பார்களா?

வரும் ஜூன் மாதம் முதல், புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும்: அதாவது, பழையது, போனது……………. எல்லாம் அம்பேல்……………………….மன்னிக்கப் பட்டு விட்டுவிடுவார்கள்.

ஊட்டி உல்லாசப் பாதிரியைப் போல,

மதுரை மன்மத பாதிரி போல,

குஜாலான கன்னியாக்குமரி பாதிரி போல………..,

அந்த மலையாள பாதிரிகள், பிஷப்புக்ளைப் போல…………….

ஒரிஸ்ஸா உல்லாசிகள்…………………………………மொட்டுகளை கசக்கியவர்கள்

கோவா உன்மத்தர்கள்…………………………………………

மும்பை பாதிரி கூட்டம்………………………..

பங்களூரு பாதிரிகள்…………………………..

இவர்கள் எல்லொருமே தப்பித்து விடுவார்களா?

அத்துனைப் பெண்களின் கதி என்ன? லட்சக் கணக்காக இருப்பார்களே? அவர்களுக்கு வாழ்வா அல்லது அதே நிலை தொடருமா?

இதைப் பற்றியெல்லாம், ஒன்றும் சொல்லவில்லையா?

கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?

ஏப்ரல் 9, 2010

கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?

கோவா இன்குஷிஷன் – மதவெறி ரீதியில் இந்துக்களுக்குத் தண்டனை அளித்து கொன்றது, கற்பழித்தது, குழைந்தைகள்-முதியோர் என்று பாராமல் கொன்று குவித்தது முதலியன – இன்றைய வரை கிருத்துவர்களின் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்……………….முதலியவை பெருமளவில் மறைக்கப் படுகின்றன. இதை உண்மைகளை மறைக்கும் சித்தாந்தம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். ஆனல், வெளிவரும் செய்திகளே மிகவும் கோரமாக, பீதியடையும், கவலைக் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றன.

ஊடகங்களில் / ஊடகத் துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிருத்துவர்கள், கிருத்துவர்களின் ஆட்கள், அபிமானிகள்,…………………….என்பதனால் செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்கிறார்கள். வந்தாலும், அதன் பின்னணி, தொடர் நிகழ்வுகள், வழக்குகள், முடிவுகள்……………..முதலியவை வராமல் கவனித்துக் கொள்கின்றனர்.

செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல

தட்ஸ்தமிழ் – ‎7 ஏப்., 2010‎
சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார்.

விடுப்பில் சென்றார் கோவை சிஎஸ்ஐ பிஷப்

தினகரன் – ‎4 ஏப்., 2010‎
கோவை : திருமண்டல நிதியில் இருந்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக, கோவை சிஎஸ்ஐ மண்டல பிஷப் மாணிக்கம் துரை, மனைவி சூடாமணி, சகோதரர்கள் தனபால், மூர்த்தி, முன்னாள் செயலர் அமிர்தம்,

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் முன்னாள் நோர்வே கத்தோலிக்க

அலைகள் – ‎7 ஏப்., 2010‎
கத்தோலிக்க பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்கதைகளில் ஓரங்கமாக இன்று நோர்வேயின் முன்னாள் பிஷப் ஒருவருடைய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக செயல்

பிஷப் ராஜினாமா ஏற்பு

ஆறாம்திணை – ‎24 மார்., 2010‎
அயர்லாந்து, மார்ச்.25 (டிஎன்எஸ்) அயர்லாந்து நாட்டில் பாலியல் முறைகேடு தொடர்பான சர்ச்சையில் அந்நாட்டு பிஷப் மாகே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை போப்

தாது மணலை பிரிப்பதில் பாதிரியார் ஊழல் – மாற்றக் கோரி பிஷப்

தட்ஸ்தமிழ் – ‎24 மார்., 2010‎
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணலை பிரிப்பதில் பெருமளவில் ஊழல் செய்ததாக பாதிரியார் மீது குற்றம் சாட்டிய கிராம மக்கள், அவரை மாற்றக் கோரி பிஷப் அலுவலகத்தை

பிஷப் ரூ.3 கோடி மோசடி வழக்கு கல்லூரி பேராசிரியர் கைது

தினகரன் – ‎19 மார்., 2010‎
கோவை & பிஷப் ரூ.3 கோடி மோசடி வழக்கு தொடர்பாக கல்லூரி இணை பேராசிரியரை போலீசார் நேற்று கைது செய்தனர். கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் துரை என் கிற மாணிக்கம் துரை (62), திருமண்டல
இப்படி செய்திகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஆனால், அடுத்த நாள் இவ்விவரங்கள் எல்லாம் மறைக்கப் படும்!
ரூ.3 கோடி மோசடி வழக்கு: கோர்ட்டில் சி.எஸ்.ஐ., பிஷப் சரண்
பிப்ரவரி 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5258

Court news detail

மூன்று கோடி ஊழல் விசுவாச ஊழியர்:  மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சி.எஸ்.ஐ., திருச்சபை பிஷப், ஐகோர்ட் நிபந்தனைப்படி நேற்று கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம் துரை. சி.எஸ்.ஐ., திருச்சபை அறக்கட்டளை தலைவர். எட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் திருச்சபைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளார். திருச்சபை அறக்கட்டளைக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் நிதியை மோசடி செய்து விட்டதாக, இவர் மீது புகார் எழுந்தது. இம்மோசடி குறித்து சிங்காநல்லூரைச் சேர்ந்த திருச்சபை உறுப்பினர் பிரேம்குமார், போலீசில் புகார் கொடுத்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, பிஷப் மாணிக்கம் துரை, அமிர்தம், மூர்த்தி, தனபால் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது.
ஊழல் மாணிக்கம் சரண்: போலீசார் தேடுவதை அறிந்த பிஷப், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி சொக்கலிங்கம் டிஸ்மிஸ் செய்தார். தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “கோவை ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் சரணடைந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட கோர்ட்டில் பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும். தவிர, தினமும் காலை 10.00 மணிக்கு கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும்’ என, நிபந்தனை விதித்து, முன்ஜாமீன் வழங்கியது. நேற்று, கோவை ஜே.எம்.எண்-3 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அருணாச்சலம் முன்னிலையில் சரணடைந்த பிஷப் மாணிக்கம் துரை, ஐகோர்ட் நிபந்தனைப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இவருக்காக மதுக்கரையைச் சேர்ந்த குணசிங், சங்ககிரியைச் சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் மற்றும் ஈரோடைச் சேர்ந்த தனபால் ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்தனர். ஆவணங்கள் பரிசீலனைக்குப் பின், ஜாமீனில் செல்ல பிஷப்புக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.
பத்திரிகையாளர்கள் மீது ஆத்திரம்: பிஷப் மாணிக்கம் துரை, கோர்ட்டில் சரணடைந்தது குறித்த செய்தி சேகரிக்க நிருபர்கள், கோர்ட் வளாகத்தில் சூழ்ந்தனர். நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த பிஷப்பை, போட்டோகிராபர்கள் படம் எடுத்தனர். அப்போது, பிஷப்புக்கு பாதுகாப்பாக வந்த இருவர், போட்டோகிராபர்களை படம் எடுக்க விடாமல் தடுத்து,கேமராவை தள்ளி விட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த போட்டோகிராபர்கள், சம்பந்தப்பட்ட நபரை சுற்றிவளைத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட, பிஷப் சார்பில் ஆஜரான வக்கீல்கள் திடீரென கூட்டத்தில் புகுந்து, பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி, வாலிபரை அழைத்துச் சென்றார். இச்சம்பவம் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.