கிறிஸ்தவ மதபோதகர் ஸ்டீபன்குமார் என்கின்ற விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் மாணவியுடன் பலமுறை “உல்லாசமாக” இருந்தானா அல்லது கற்பழித்தானா – ஊடகங்கள் ஏன் உண்மைகளை மறைக்கின்றன?
கிருத்துவமத போதகர்கள் ஏன் எப்பொழுதும் மாணவிகளுக்கு, இளம் பெண்களுக்கு காமவலையை விரிக்கிறார்கள்?: மாணவியுடன், ‘உல்லாசமாக’ இருந்து விட்டு, திருமணத்துக்கு மறுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைதானார். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த ஜலகாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார், 47, ஜலகாம்பாறை அருகே உள்ள, மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில், மதபோதகராக இருந்து வருகிறார். தேவாலயத்துக்கு, அடிக்கடி மாணவி சென்றபோது, மதபோதகருடன் பழகி உள்ளார்[1]. கிருத்துமதபோதகருக்கு இவற்றைத்தான் செமினரிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள் போலும். விடுதலை “கடவுள் சக்தி சிரிக்கிறது” என்ற தலைப்பில், குமரி மாவட்ட கோவில்களில் தொடர் திருட்டு, ஒரே கோவிலில் ஆறாவது கொள்ளை என்று அவற்றுடன் சேர்த்து மதபோதகர் கைது என்று இச்செய்தியை நுழைத்துள்ளது[2]. அதாவது “செக்யூலரிஸ நாத்திகத்தைப்” பின்பற்றியுள்ளது. இதே இந்து சாமியார் என்றால், வேறுவிதமாக இருந்திருக்கும். மற்ற ஊடகங்களும் முதல் பக்கங்களில் தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டிருக்கும். கிருத்துவ மதபோதகர் என்றதும் அமுக்கி வாசித்துள்ளன ஊடகங்கள் என்று நன்றாகவே தெரிகிறது.
பாதகம் செய்த கிருத்துவ மதபோதகர் யார்?: தீபக்குமார் என்கிறது தினமலர்[3]; ஸ்டீபன்குமார் என்கிறது மாலைமலர்[4]; விஜயகுமார் என்கிறது தமிழ்முரசு[5]; விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் என்கிறது தினகரன்[6]; விடுதலையும் தீபக்குமார் என்றே குறிப்பிட்டுள்ளது[7]. அந்த கிருத்துவ போதகரின் பெயரை மறைக்க ஊடகங்கள் இந்த அளவுக்கு பாடுபட வேண்டுமா என்று தெரியவில்லை. பாலியல் குற்றங்களில், வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் முதலியவை தாம் வெளிப்படையாக சொல்லக்கூடாது, வெளியிடக்கூடாது என்றுள்ளது. ஆனால், பாலியல் குற்றம் புரிந்த, ஏமாற்றி கற்பழித்த போதகனின் பெயரைக் குறிப்பிடக் கூடாது, அடையாளத்தை மறைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. இருப்பினும் இவ்விசயத்தில் அவ்வாறு ஊடகங்கள் ஏன் செய்துள்ளன என்று தெரியவில்லை. செக்யூலரிஸ வைரஸ், நச்சுத்தன்மை, கேன்சர் அந்த அளவுக்கு புரையோடி இருப்பதால், இவர்களை அவ்வாறு பாரப்பட்சத் தன்மையுடன் “பத்திரிகா தர்மம்” முதலியவற்றை மறந்து வேலை செய்ய செய்திருக்கின்றது போலும்!
தாயுக்கு உடல்நிலை சரியில்லை என்றாதால் ஜெபிக்கக் கூப்பிட்ட காதலி: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனது படிப்பை நிறுத்தி விட்டு தாயை கவனிக்க ஊருக்கு சென்று விட்டாராம். மேலும் தனது தாய்க்கு ஜெபம் செய்ய வரும்படி மதபோதகர் விஜயகுமாரை அப்பெண் அழைத்துள்ளார்[8]. அதன்படி விஜயகுமார் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று ஜெபம் செய்து வந்தாராம்[9]. அடிக்கடி அந்த மாணவி வீட்டிற்கு சென்று வரவே, இரண்டு பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. உடல்நிலை சரியில்லாத அம்மா வீட்டில் கிடக்க, இவ்விருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டனர் என்றால், கர்த்தர் பார்த்துக் கொண்டே இருந்தார் போலும்! அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதெல்லாம் வழக்கமான பாணியில் தான் உள்ளது. இதனையடுத்து ஸ்டீபன்குமார் அந்த மாணவியை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றுவிட்டார். அப்படியென்றால், உடம்பு சரியாக இல்லாமல் இருக்கும் அம்மாவைக் கூட ஏமாற்றி விட்டார்களா? மேலும் மாணவியை சென்னை, பெங்களூரு என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்[10]. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மைனர்பெண்ணை சென்னைக்கு அழைத்துச்சென்ற விஜயகுமார், அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது[11].
ஏமாற்றி கற்பழித்ததை “உல்லாசமாக” இருந்தார் என்று ஊடகங்களின் கொகோகத் தன்மையினை வெளிப்படுத்தும் விதம்: இதையடுத்து, அவர், பல இடங்களுக்கு, மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம், மாணவியை, சென்னைக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் மதபோதகர், ‘உல்லாசமாக’ இருந்ததாக தெரிகிறது. கற்பழித்தான் என்று குறிப்பிட அஞ்சுவது ஏனோ? தில்லியில் நடந்தால், கற்பழிப்பு, தமிழகத்தில் நடந்தால் “உல்லாசமா”? அப்படியென்றால், பல இடங்களுக்கு கூட்டிச் சென்றபோது, பலமுறை கற்பழித்தான் என்றாகிறது. சரி, ஸ்டீபன் குமார் ஏன் சர்ச்சுக்கு வரவில்லை என்று அவனை யாரும் கேட்கவில்லையா அல்லது அவ்வாறு உல்லாசமாக, சல்லாபங்களில் ஈடுபட சர்ச் விடுமுறை அளிக்கின்றதா? இதன்பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரை, மாணவி வலியுறுத்தியதற்கு, மறுப்பு தெரிவித்து உள்ளார். அத்துடன், ‘சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்’ எனவும், மதபோதகர் மிரட்டி உள்ளார். இதெல்லாமும் வழக்கமாக மற்ற கிறிஸ்தவ மதபோதகர்கள், பாஸ்டர்கள், சாமியார்கள், பிஷப்புகள் பின்பற்றும் யுக்திதான். இதுகுறித்து, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, மதபோதகர் தீபக்குமாரை கைது செய்தனர்[12]. பிறகு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ப்ளோரன்ஸ் மேரி-கலைக் காவேரி – மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போலத்தான் கிருத்துவத்தில் பெண்கள் இடிபடுகிறார்கள்1
வழக்கமாக மற்ற கிறிஸ்தவ மதபோதகர்கள், பாஸ்டர்கள், சாமியார்கள், பிஷப்புகள் பின்பற்றும் யுக்தி:
- சர்ச்சுகளுக்கு வரும் மாணவிகளுக்கு / இளம் பெண்களுக்கு வலை வீசுதல்.
- அவர்களிடம் பேச்சு கொடுத்து, குறைகள் தீர்க்க பிரார்த்தனை செய்கிறேன், ஆசிர்வதிக்கிறேன் என்று இரக்கத்தை, அக்கறைய ஏற்படுத்துதல்.
- தனியாக வந்தால் விசேசமாக பிராத்திக்கிறேன் என்று அடிபோடுவது.
- அவ்வாறு வந்தால், நைசாக தலையைத் தடவுவது, கைகளைப் பிடிப்பது, முதுகில் தட்டுவது என்று ஆரம்பித்து, அணைத்துக் கொள்வது.
- மார்புடன் அணைத்துக் கொண்டு கிளிகிளுப்பை ஏற்படுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டி விடுதல்.
- அடிக்கடி வா என்று கூறுவது, வெறெங்காவது போகலாமே என்பது, அவ்வாறே சென்று வருவது.
- பிறகு தனி அறையில் உடலுறவில் ஈடுபடுவது, தொடர்ந்து கற்பழிப்பது.
- உண்மையினை உணர்ந்து, பயந்து கல்யாணம் செய்து கொள் என்றால், நான் சாமியார் அவ்வாறெல்லாம் செய்ய முடியாது. உனக்கு வேண்டியதை செய்து தருகிறேன். ஜாலியாக இருக்கலாம் என்பது.
- அடுத்த கட்டமாக, நானே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன் என்பது.
- அதற்கும் ஒத்துவரவில்லை என்றால், ‘சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுவது.
© வேதபிரகாஷ்
19-10-2015
[1] தினமலர், மாணவியுடன் ‘உல்லாசம்‘மதபோதகர் கைது ,அக்டோபர்.16, 2015: 03.15.
[2] http://www.viduthalai.in/e-paper/110322.html
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1365358
[4] http://cinema.maalaimalar.com/2015/10/15165619/Priest-arrested-for-girlfriend.html
[5] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=82898
[6] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=500024&cat=504
[7] http://www.viduthalai.in/e-paper/110322.html
[8] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=82898
[9] தினகரன், மதபோதகர் கைது திருப்பத்தூர் அருகே பரபரப்பு, பதிவு செய்த நேரம்:2015-10-16 11:51:06.
[10] மாலைமலர், திருப்பத்தூர் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, அக்டோபர் 15, 4:56 PM IST.
[11] தமிழ்முரசு, மைனர் பெண்ணிடம் உல்லாசம் திருமணத்துக்கு மறுத்த மதபோதகர் கைது, 10/15/2015 2:34:41 PM.