Archive for the ‘பேட்டை’ Category

செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து சிசுவின் பிணம் தோண்டியெடுக்கப் பட்டப் பிறகும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் மௌனம் சாதிக்கிறாராம்!

திசெம்பர் 21, 2013

செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து சிசுவின் பிணம் தோண்டியெடுக்கப் பட்டப் பிறகும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் மௌனம் சாதிக்கிறாராம்!

Foetus exhumed tested but Diocese head kept mum

பாட்டு சொல்லிக் கொடுக்கிறேன் என்று கெடுத்த பாதிரி: நெல்லை மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கே.கைலாசபுரத்தை சேர்ந்தவர் செல்வன் (34). திருநெல்வேலி, பேட்டையில் உள்ள, புனித அந்தோணியார் பள்ளியின் பாதிரியாராகவும், தாளாளராகவும் இருந்த இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் நெல்லை பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் சர்ச்சுக்கு வந்து சென்றபோது, அவருக்கு பாட்டு சொல்லி தருவதாக கூறி, அவரை தனது பங்களாவுக்கு அழைத்து சென்று பலமுறை பாதிரியார் செல்வன் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். சர்ச் வளகத்தில் உள்ள வீட்டில் இவ்வாறு நடந்தது யாருக்கும் தெரியாமல் இருந்ததா என்பதும் வியப்பாக உள்ளது அல்லது செல்வன் அந்த அளவிற்கு திட்டமிட்டே செய்துள்ளார் என்றாகிறது.

Nellai rape - The burried foetus taken out - Church suppresses facts

அபார்ஷன், சிசு பிணம் புதைப்பு முதலியன: இதையடுத்து பாதிரியார் ஆலோசனையின் பேரில் மாணவியின் பெற்றோர் நெல்லை டவுனில் உள்ள ஒரு டாக்டரிடம் மாணவியை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர். இதற்கு ரூ. 25,000/- கொடுத்தாராம்[1]. மாணவியின் வயிற்றில் இருந்த 5 மாத சிசுவை, பேட்டை ஆதம் நகர் அருகே உள்ள மருத்துவமனையில் அறுவைஒசிகிச்சை மூலம் வெளியே எடுத்து, செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையில் உறவினர்களுடன் உதவியுடன் புதைத்தனர். பாதிரியின் உறவினர் அல்லது மற்றவர் கிருத்துவர்கள் என்பதினால், இவர்கள் எல்லோருமே திட்டமிட்டுதான் வேலை செய்துள்ளனர் என்றாகிறது. கிருத்துவர்களின் சமாசாரம் என்றதால் இவ்வாறு மூடி மறைக்க, புதைக்கப் பார்த்தனர் போலும். ஆனால், இந்த விவரம் வெளியில் தெரியவரவே, மாணவியின் தந்தை நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அனைத்து மகளிர் போலீசார், பாதிரியார் மீது கற்பழிப்பு, மிரட்டல், பாலியல் தடுப்பு பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர்[2]. போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதையறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீஸ் விசாரணையில் பாதிரியார் செல்வன் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nellai rape - The burried foetus taken out

மூன்று பெண்களிடம் செக்ஸ் தொந்தரவு செய்த பாதிரி: பாதிரியார் செல்வன் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது பங்களாவில் வேலை செய்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன[3]மானல், ஊடகங்கள் அவற்றை வெளியிடவில்லை. இது தொடர்பாக அவரது உதவியாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என்கின்றன. ஆனால், அந்த “உதவியாளர்” எப்படி சொல்வார்? லெனின் போன்ற நக்கீரன்கள் இப்பொழுது கண்களைத் திறந்து கொண்டு வரவில்லை. இதையெல்லாம் விசாரணை செய்தால் திருச்சி பிஷப் கன்னியாஸ்திரி கற்பழிப்பு போலத்தான் விரியும் போலிருக்கிறது. ஆனால், இந்திய கிருத்துவ மேலிடங்கள், பெண்கள் உரிமை, சிறார் உரிமை முதலியவற்றைப் பற்றியெல்லாம் கூச்சலிடும் கிருத்துவக் கூட்டங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.5

சிசுவின்  உடல்  தோண்டி  எடுக்கப்பட்டு  அங்கேயே  நடந்த பரிசோதனை: பாதிக்கப்பட்ட மாணவிக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. மேலும் புதைக்கப்பட்ட சிசுவின் உடல் 20-12-2013 அன்று திருநெல்வேலி தாசில்தார் பாலசுரமணியன் மற்றும் டாக்டர் செல்வ முருகன், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதலியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை நடந்தது (இப்படி தினகரன் கூறுகிறது). ஆனால், சோதனைக்கு பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டு ஆராயப்பட்டது என்று மற்ற நாளிதழ்கள் கூறுகின்றன[4]. ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் சில சதை துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. “அதை அங்கேயே சோதனை செய்த டாக்டர், டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது”, என்று நக்கீரன் கூறுகிறது[5]. இதில் புதைக்கப்பட்டது ஆண் சிசு என்பது தெரியவந்தது[6]. அந்த கல்லறை செயின்ட் ஆன்டனி சர்ச்சிற்கு சொந்தமானது, நிர்வாகத்தில் உள்ளது[7]. சர்ச்சுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு நடக்கும் போது, கிருத்துவ மேலிடங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்பது கவனிக்கத் தக்கது.

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.3

தலைமறைவான  செக்ஸ்-பாதிரி  நீதிமன்றத்தில்  சரண்: தலைமறைவாக உள்ள பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்[8]. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் பாதிரியார் செல்வன் நேற்று மாலை உத்தமபாளையம் கோர்ட்டில் சரணடைந்தார்[9]. அவரை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவான பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், நேற்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நீதிபதி கீதா முன், சரணடைந்தார். அவரை, டிச., 26ல், திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க ஆணையிட்டார். இதையடுத்து, பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[10].

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.2

ரைட்  ரெவரென்ட்  . ஜூட்  பால்ராஜ்: இவ்வளவு நடந்தும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் வாயை மூடிக் கொண்டு இருக்கிறாராம்[11]. அதாவது, ஜூட் விட்டுவிட்டு ஒளிந்து கொண்டுள்ளாராம். முன்னர் போலீசார் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை என்றார்[12]. கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், இதைப் பற்றி மறைக்கிறார்கள். உலகமெலாம் கிருத்துவ செக்ஸ் பற்ரிதான் பேசிக்கொண்டிருக்கின்றர்கள். போப்பே அதைப் பற்றிதான் சுற்றறிக்கை விட்டுக் கொண்டு, கேள்விகள் கேட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். ஆனால், அவர் பட்டியிலில் இந்த இந்திய செக்ஸ் பாதிரிகளின் பெயர்கள் சென்றடையவில்லை போலும்!

வேதபிரகாஷ்

© 21-12-2013


[2] தினமலர், புதைக்கப்பட்ட சிசு தோண்டி எடுப்பு: ஓடிய பாதிரியார் கோர்ட்டில் சரண், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2013,23:17 IST

[4] Foetus sent to lab for analysis – The five-month foetus was exhumed in the presence of Tirunelveli Tahsildar Balasubramanian and Dr. Selvamurugan of Tirunelveli Medical College. It was later sent to laboratory for analysis.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

[6] தினகரன், நெல்லை மாணவி பலாத்காரம் 5 மாத சிசு உடல் தோண்டி எடுத்து சோதனை, 20-12-2013.

[7] surgically removed  foetus was buried in the graveyard under the control of St. Antony’s Church administration.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

[11] Repeated attempts to get Palayamkottai RC Diocese’s official version on this development proved futile as Bishop Rev. A. Jude Paulraj was tight-lipped.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

பேட்டை திருத்தேவாலய பற்று தந்தையான ஞானபிரகாசம் அந்தோனி செல்வன், ஒரு இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து, ஐந்துமாதசிசுப் பிண்டத்தை செயின்ட் ஆன்டனி சர்ச் வளத்தின் கல்லறையில் புதைத்து விட்டாராம்!

திசெம்பர் 20, 2013

பேட்டை திருத்தேவாலய பற்று தந்தையான ஞானபிரகாசம் அந்தோனி செல்வன், ஒரு இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து, ஐந்துமாதசிசுப் பிண்டத்தை செயின்ட் ஆன்டனி சர்ச் வளத்தின் கல்லறையில் புதைத்து விட்டாராம்!

ஞானபிரகாசம் அந்தோனி செல்வன்

ஞானபிரகாசம் அந்தோனி செல்வன்

கிருத்துவ  தேவ  சங்கீதத்தைப்   பாட   வந்த   பெண்ணை  காமத்திற்கு  உட்படுத்திய  அருட்தந்தை: நெல்லை பேட்டையை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் மேரி (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மேரி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் / சர்ச் வளாகத்தில் உள்ள பள்ளியில்[1] 11–ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி மேரி அடிக்கடி அந்த பகுதியில் உள்ள செயின்ட் ஆன்டனி கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று வருவார். மேலும் ஆலயத்தில் உள்ள ‘கொயர்’ (கிருத்துவ தேவ சங்கீதம் – சேர்ந்து பாடும் குழு) பிரிவில் சேர்ந்து பாடல் படித்து வந்தார். கிருத்துவப் பண்டிகைகளில் குழுவாக கூட்டுப் பாடல் பாடி வருகிறார். இந்த சர்ச்சின் “பாரிஷ் பிரீஸ்ட்டாக” (தேவாலயப்பற்று ஊழியராக) பேட்டை திருத்தேவாலய பற்று தந்தையான ஞானபிரகாசம் அந்தோனி செல்வன், ஒரு இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து, ஐந்துமாதசிசுப் பிண்டத்தை செயின்ட் ஆன்டனி சர்ச் வளத்தின் கல்லறையில் புதைத்து விட்டாராம்!

ஏப்ரல் 2007லிருந்து வேலை பார்த்து வருகிறார்[2].  இந்த கூட்டுப்பாடல் நிகழ்சிகளில் கலந்து கொள்வார்.

அருட்தந்தை  ஞானபிரகாசம்  அந்தோனி  செல்வன்  அவர்களின்  விவரங்கள்: இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் புளியம்பேட்டைக்கு அருகில் உள்ள கைலாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவராம்.

 Nellai rape - The burried foetus taken out Rev.Fr.Gnanapragasam Selvan F.
Date of Birth : 06-03-1977
Date of Ordination : 15-04-2007
Phone :  9442228650
Email : fselvan@gmail.com

1977ல் பிறந்த இவர், 2007ல் இங்கு மற்ற விவரங்கள் கீழ் வருமாறு[3]:

Patron of Parish
Established On
Population
Catholic
:
:
:
:
St. Anthony of padua
10.07.1961
24,500
3980
Vicairate : Palayamkottai
Church Name : St. Antony’s Church
Parish Priest : Rev. Fr. Gnanapragasam Selvan F.
Asst. Parish Priest :
Address : St. Antony’s Church, Pettai, Tirunelveli-627 004
District : Tirunelveli
Telephone : 0462-2342084

அந்த ஆலயத்தில் பாதிரியாராக [parish priest of St. Antony’s Church] வேலை பார்த்த பாதர் ஞானபிரகாசம் செல்வன் [Fr. Gnanapragasam Antony Selvan[4]] மாணவியின் மீது கண் விழுந்தது. 36 வயதான இவருக்கு, “டீன் ஏஜில்” இளம்பெண்ணிடம் கிரக்கம் ஏற்பட்டு வலைவீச ஆரம்பித்தார். அப்பெண்ணுக்கு பாடல்கள் சொல்லி கொடுப்பது போல் தனியாக அழைத்து, தொட்டு ஆசைக்காட்டி, மெல்ல மெல்ல உடலுறவு கொள்ள செய்தார். தனது காமப்பசியை தீர்த்துக்கொண்டார்[5]. இவ்வளவும் அந்த தெய்வ வளகத்திலேயே நடந்து வந்ததாம். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் புளியம்பேட்டைக்கு அருகில் உள்ள கைலாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவராம்.

மேரி  கர்ப்பம்  அடைந்தது, கருக்கலைப்பு  செய்தது: இப்படி தொடர்ந்து உடலுறவு கொண்டு வந்ததால், மாணவி மேரி ஜூன்-ஜூலை 2013 மாதங்களில் கர்ப்பம் அடைந்தார். அவளது வயிறு பெரிதானதால், வீட்டில் சந்தேகப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தான், மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் விபரத்தை பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினார்கள். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர், என்ன செய்வது என்று தெரியாமல், தங்கள் மகளை கற்பழித்த, அந்த காமூக பாதிரியார் செல்வனிடமே சென்று நியாயம் கேட்டனர். உடனடியாக பாதிரியார் செல்வன், தனது பண பலத்தின் மூலம், மாணவிக்கு கருக்கலைப்பு செய்து, பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாது, புற்றுநோயால் பாதிக்கப் பட்டு வரும் மேரியின் தாயாருக்கும் மருத்துவ உதவிக்காக பணம் கொடுக்க வாக்குக் கொடுத்ய்தார். அதன்படி மாணவி மேரியை நெல்லை டவுணில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று 5 மாதம் வளர்ந்த சிசுவை ‘கருக்கலைப்பு ஆபரேசன்’ செய்து அகற்றினார்[6]. திருநெல்வேலியைச் சேர்ந்த டாக்டர் எஸ். மீனாட்சி என்பவர் அதைச் செய்ததாகத் தெரிகிறது.

ஞானபிரகாசம்  அந்தோனி   செல்வன்  செய்த   குரூர  காரியங்களுக்கு  எதிராகத்   திரண்ட கிருத்துவ  பக்தர்கள்: இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய மாணவியின் நிலையை அறிந்த அந்த பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தனர். கிருத்துவப் பக்தர்களாக இருந்தாலும், ஞானபிரகாசம் அந்தோனி செல்வனின் அவர்கள் பாதிரியார் செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 18-12-2013 அன்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்[8]. விவரம் அறிந்த பாதிரியார் செல்வன், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்[9]. பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பால், மாணவி மேரியின் தந்தை ராஜன் நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசாரின்  விசாரணை  குரூர  காரிங்களை  வெளிப்  படுத்தியது: மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் மீனாட்சி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 19-12-2013 அன்று போலீசார் மாணவி மேரியை, பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவி மேரிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இன்று பிற்பகல் நெல்லை தாசில்தார் முன்னிலையில் பேட்டை மயானத்தில் புதைக்கப்பட்ட 5 மாத சிசுவின் கருவும் தோண்டி எடுக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான தனிப்படை போலீசார் தப்பி ஓடிய பாதிரியார் செல்வனை தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கைலாசபுரத்திற்கும் தனிப்படை போலீசார் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.தவிர கருக்கலைப்பு ஆபரேஷன் செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த டாக்டர் எஸ். மீனாட்சி என்பவரையும் தேடி வருகின்றனர்[10].

உண்மைகளை மறைக்கும் கத்தோலிக்கக் கிருத்துவம்: கிருத்துவ கார்டினெல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என நிறைய பேர் செக்ஸ் குற்றங்களில் மாட்டிக் கொண்டு வந்தாலும், வாடிகன் அதனை அமுக்கப் பார்க்கிறது. அதே நிலை இந்தியாவிலும் பிபற்றப்பட்டு வருகிறது. தில்லிக் கற்பழிப்பு பற்றி பெரிய ஆரபாட்டம் நடந்த்யு, விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. ஆனால், தமிழகத்தில் இப்படி, கிருத்துவ மதத்தலைவர்கள் தொடர்ந்து பாலியல்-வன்புணர்ச்சிக் குற்றங்களில் ஈடுபட்டு வந்தாலும், உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இவ்விசயமும் அதே மறைப்புப் பாதையில் செல்கிறது. ஏனெனில், பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜைக் கேட்டதற்கு, போலீசிடமிருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை, என்றாராம். போலீசார் ஞானபிரகாசத்தையும் விசாரித்ததாக தெரிவித்தனர். ஆனால், அதை அவர் மறுத்தார்[11].

ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ்

ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ்

 

வேதபிரகாஷ்

© 20-12-2013


 


[5] மாலைமலர், நெல்லையில் பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 11:32 AM IST

[8] However, a group of devotees, who informed the police about the incident, also persuaded the parents to file a formal complaint with the All Women Police, Tirunelveli, who have registered a case.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-accused-of-sexual-assault-goes-underground/article5481112.ece

[9] The Hindu, Priest accused of sexual assault goes underground, TIRUNELVELI, December 20, 2013, Updated: December 20, 2013 09:26 IST,

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-accused-of-sexual-assault-goes-underground/article5481860.ece

[10] Police are on the lookout for a Roman Catholic priest in connection with the alleged sexual assault of a teenage girl student here. They are also searching for a doctor, S. Meenakshi of Tirunelveli Town, who reportedly conducted the termination of pregnancy to remove the standard XI student’s five-month-old foetus.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-accused-of-sexual-assault-goes-underground/article5481112.ece

[11] When contacted, Bishop of Palayamkottai RC Diocese Rt. Rev. A. Jude Paulraj said he did not receive any information from the police. Bishop’s House sources said a three-member team questioned Fr. Gnanapragasam on Tuesday. But he denied the charge.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-accused-of-sexual-assault-goes-underground/article5481112.ece