Archive for the ‘பெந்தகோஸ்து’ Category

ஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை! (1)  

மார்ச் 21, 2018

ஜான் ஜோசப்செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை! (1)

John Joseph - Charimatic centre-different postures

கத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மற்றும் ரிஸ்மேட்டிக் சென்டர் ஆஸ்ரமம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கரிஸ்மேட்டிக் சென்டர் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் ஜான் ஜோசப் (வயது 70)[1]. “கத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மார்க்கெட் ரோடு, மார்த்தாண்டம், இந்தியா” என்று அதிரடியாக ஊழியம் செய்து வந்தார். கத்தோலிக்கத்தில் “பெந்தெகோஸ்து” எப்படி வந்தது என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. பொதுவாக, “பொரொடெஸ்டென்ட்” பிரிவில் தான், இவையெல்லாம் வரும். மேலும், இந்து சாமியார் போல வேடம் போட்டுக் கொண்டு, ஆசிரமம் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை ஏமாற்றும் போகும் தெரிகிறது. ஆனால், இன்றைக்கு, இந்தியாவில், கிருத்துவர்கள் எல்லோருமே, இத்தகைய மோசடிகளை செய்து வருகிறார்கள். இவரது ஆஸ்ரமத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வந்துள்ளது தெரிகிறது. ஜான் ஜேக்கப், விஜயதாரிணி முதலியோர் வந்துள்ளனர். நகர சபை தலைவர் போன்றோரிடமும் செல்வாக்குடன் இருக்கிறார் ஜான் ஜோசப். இத்தகைய அரசியல் செல்வாக்கு, பணபலம் முதலியவற்றுடன் இருக்கும் இவருக்குத் தான், இப்பிரச்சினை வந்துள்ளது திகைப்பாக இருக்கிறது. இதைப்பற்றி 2010ல் ஏதோ செய்தி வந்தபோது, http://www.imdiainteracts.comல் பதிவுகள் போட்டேன்[2]. ஆனால், அவை காணாமல் போய் விட்டன. பிறகு, http://www.wordpress.comல், கீழ்கண்ட பதிவை செய்தேன். தமிழ் பதிவு காணாமல் போனதால், குறிப்பிட்ட உயர்நீதி மன்ற தீர்ப்பை, அப்படியே பதிவு செய்தேன்[3].

John Joseph - with Vijayadharini MLA

கத்தோலிக்க பெந்தெகோஸ்து ஆஸ்ரமத்தில் செக்ஸ் விளையாட்டுகள்: கடந்த 1997-ம் ஆண்டு, அப்பொழுது அவருக்கு வயது 49, இந்த ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் தகாத உறவு கொண்டதாகவும், ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது[4]. ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்தார்[5] என்றால், லெனின் குரூப் போன்றவர்கள் எப்படி வீடியோ எடுக்காமல் விட்டார் அல்லது “நக்கீரன்” அமைதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, அதிரடி செய்தியாக இருந்தாலும், ஊடகங்கள் அடக்கித் தான் வாசித்தன. மேலும் அதே ஆண்டில், அந்த ஆசிரமத்தில் இருந்த வாலிபர் கில்பர்ட் ராஜ் என்பவரை கொலை செய்து, ஆசிரமத்தில் புதைத்ததாகவும் புகார் எழுந்தது[6]. 14-10-1995 அன்று சிகிச்சை அளிக்கப்பட்டும்,  பயனில்லாமல் இறந்தான். 05-09-1987 அன்று பிரான்சிஸ்கா ஜெயா என்பவர் புகார் கொடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது[7].

John Joseph - with John Jacob MLA

நிதி மோசடி புகாரை அடுத்து செக்ஸ், கொலை புகார்கள்: 1994ல் அம்மையத்தின் நிர்வாகி ஜோசப் அல்போன்ஸ் என்பவர் மற்றும் இரண்டு பேர் ரூ. 84 லட்சங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கைது செய்யப்பட்டனர். ஜோசப் அல்போன்ஸின் மனைவி, பிரான்சிஸ்கா ஜெயா, 1996ல் அந்த மையத்தின் வளாகத்தில் இருக்கும் மார்தாண்டா ரெசிடென்சியல் பள்ளியில், 9-வது படிக்கும், 14-வயது தமது மகளான டயானாவை இவர்கற்பழிக்க முயன்றார் மற்றும் 18-வயதான கில்பர்ட் ராஜ் “பாலியல் தொல்லையால்” தான் கொல்லப் பட்டான் என்றும் புகார் கொடுத்தார்[8]. 19-11-1996 அன்று அவள் தனது வகுப்பு மாணவியுடன் விடியற்காலையில், வீட்டிற்கு ஓடிவந்தாள். விசயம் கேட்டபோது, ஜான் ஜோசப் தமது மார்பின் மீது கை வைத்ததால், ஓடி வந்து விட்டேன் என்றாள். அந்த மையத்தினர் தீயிட்டுக் கொளுத்தவும் ஊரார் முயன்றனர். ராஜேஸ் மற்றும் டார்வின் என்ற இரு சிறுவர்கள், தம்மை அங்கிருக்கும் பெண்களுடன் உடல் உறவு கொள்ளுமாறு “சாமியார்” வற்புருத்தி, அதனைப் பார்த்து ரசித்தார் என்று புகார் கொடுத்தனர்[9]. சிறுவகள் உடலுறவு கொண்டதைப் பார்த்த பிறகு, உணர்ச்சி பொங்க, அப்பெண்களை படுக்கை அறைக்கு அழைத்து சென்று இனபம் துய்த்தாராம். ராஜேஸ் அங்கிருந்து தப்பிச் சென்றாலும் இறந்து விட்டதாகத் தெரிந்தது. அங்குள்ள பெண்களுக்கு பலமுறை அபார்ஷன் செய்யப் பட்டதாகவும், அந்த பெண்-மருத்துவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், ஷைலேந்திர குமார் என்ற தக்களையின் எஸ்.பி [Says Shylesh Kumar Yadav, joint SP, Thuckalay] கூறினார்[10]. இவ்வளவு நடந்தும், அந்த சாமியார் மீது, யாரும் புகார் கொடுக்க வராமல் இருக்கிறார்கள். இப்பொழுது கூட பிரான்சிஸ்கா ஜெயா, ஜூலை 1997ல் இவ்விவகாரங்கள் தெரிய வந்ததால் புகார் கொடுத்தார். 05-09-1997 அன்று, ஜான் ஜோசப்பின் சகோதரியான அஞ்சலால் என்பவரிடம், அவருடைய செயல்களைப் பற்றி சொன்னார். ஆனால், விசயம் அறிந்த ஜோசப், அன்றே ஆட்களை அனுப்பி, தனது விட்டிற்கு கடத்தி வந்தார். இதனால், அல்போன்ஸ் அவர் கால்களில் வீழ்ந்து மன்றாடி கூட்டி வந்தார். அதற்குப் பிறகு கொடுத்த புகார் தான் 917/97 என்ற எண்ணிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, சாட்சிகளிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டு, அவை வீடியோ-ஆடியோக்களிலும் பதிவு செய்யப்பட்டன. ராஜேஸ், ராணி, பெமி, ஜான் ஜோசப் என்று எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் மூலம், அவர்கள் செக்ஸில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது. இவ்விவரங்களை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

John Joseph - with City head

கில்பர்ட் ராஜ் கொலையும், சுற்றியுள்ள மர்மங்களும்: சிகிச்சை பலனின்றி 14-10-1995 அன்ரு உயிரிழந்தான் என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. உடனே, அவனுடைய உடல் புதைக்கப் பட்டடு. 1995ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கில்பர்ட் ராஜ் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதில் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன[11]. அவை பரிசோதனைக்கு அனுப்பப் பட்டன. ஆனால், கில்பட் ராஜின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் (அப்போது குழித்துறை காவல் நிலையம்) விசாரணை நடத்தி 302 (கொலை), 120 (பி) (சதி திட்டம்) உள்பட மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் பாதிரியார் ஜான்ஜோசப், ஆண் ஊழியர்கள் சந்தனராஜன், மரியஜான் மற்றும் பெண் ஊழியர்கள் ராணி, பெமி என்ற ஒய்லின் பெமினாரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 05-09-1997 அன்று கைது செய்யப்பட்டனர். அப்பெண்கள் [கன்னியாஸ்திரீக்கள்] ஒத்துழைக்கவில்லை, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், ஜான் சோசப் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் பல விவரங்கள் காணப்படுகின்றன. நீதிமன்ற வழக்குகள் நிலையில், பல வழக்குகள் தொடுத்து, சிறிய விசயங்களில் ஓட்டைக் கண்டு பிடித்து, முக்கியமான வழக்கைத் திசைத் திருப்பப்பட்டிருப்பது, தீர்ப்புகளிலிருந்து வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

21-03-2018

John Joseph - Charimatic centre-நெப்மட்

 

[1] R. ஜாண்ஜோசப், பிறந்த இடம்: காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரிமாவட்டம், பிறந்த நாள்: 05 – 03 -1949, பெற்றோர்கள்: திரு. சக்கரியாஸ் ரபேல், திருமதி. ஞானதீபம் ஜீவநேசம்; உடன்பிறப்புகள் : அக்கா – :திருமதி. லூர்து மேரி, தம்பி – திரு. மரிய ஆன்றணி, தங்கை – திருமதி மேரி ஆஞ்சலா; பங்கு: புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்; மறை மாவட்டம்: கோட்டார்.

[2] வேதபிரகாஷ், கன்னிகளுடன் ஜான் ஜோஸப்பின் காமக் களியாட்டக்கள்!, செப்டம்பர் 29, 2010.

[3]https://christianityindia.wordpress.com/2010/09/28/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/

[4] மாலை மலர், கொலைபலாத்கார வழக்கு: பாதிரியார், 2 பெண் ஊழியர்கள் விடுதலை, பதிவு: மார்ச் 04, 2018 22:58; மாற்றம்: மார்ச் 04, 2018 23:10

[5] https://www.maalaimalar.com/News/State/2018/03/04225809/1148955/murder-harassment-case-Priest-2-female-employees-release.vpf

[6] தினகரன், கொலை, பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் விடுதலை: 21 ஆண்டுக்கு பின் நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு, 2018-03-04@ 01:41:32.

[7] According to the respondents, a case was registered in Crime No.917/97 on the complaint of one Tmt.Franciscal Jeya on 5.9.1987 for the offences under Sections 366 read with 511, 376, 376 read with 511, 201, 302, 312 and 506(ii) I.P.C. against the petitioner and others.

[8] India Today, Priest’s arrest in Tamil Nadu exposes trail of murder and sexual abuse, M G RadhakrishnanOctober 6, 1997UPDATED 17:29 IST

[9] But reports of bizarre happenings had started trickling out of the centre even before that. About how Joseph would ask young boys to have sex with women inmates much older than them. And how they would be beaten up if they refused. Two such young men, Rajesh and Darwin, lodged a complaint with the police alleging sexual torture. “Swamiyar (Joseph) used to force me to have sex with women who were thrice my age while he watched,” alleges Rajesh, 18, who worked for the centre for three years till 1995. “Unable to take any more, I ran away.” Police suspect that Raj died of similar torture and claim to have proof of the sexual orgies at the centre.

 https://www.indiatoday.in/magazine/states/story/19971006-priests-arrest-in-tamil-nadu-exposes-trail-of-murder-and-sexual-abuse-830698-1997-10-06

[10] They are on the lookout for a lady doctor who is believed to have conducted several abortions on the campus. Says Shylesh Kumar Yadav, joint SP, Thuckalay, who is in charge of the investigations: “We have sufficient evidence to prove all the charges, including murder, rape and attempt to rape, to have Father Joseph convicted.” Despite persistent rumours of strange goings-on at the centre, nobody considered filing a complaint against the Father earlier, as they were taken in by his charisma. Alphons claims that his wife’s complaint about the rape attempt on their daughter was made only recently because she came to know about it in July, 1997.

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=381058

Advertisements