Archive for the ‘பிரேத பரிசோதனை’ Category

என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்!

ஜூலை 3, 2011

என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்

 

ஜெயிலிலிருந்து மருத்துவமனைக்குச் சென்ற சாத்வி பிரக்யா தாகூரும், விடுதலை ஆகி வெளியே வந்த மரியா சூசைராஜும்: காலை 11.35 அளவில், ஊடகக்காரர்கள் மற்றவர்கள் பைகுல்லா ஜெயிலின் வாசலில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று கதவுகள் திறந்து ஒரு ஆம்புலன்ஸ் வெளிவந்ததும், ஏதோ ஒரு “கொள்ளைக்காரன்” வெளியே வரப்போகிறான் என்று பார்த்தனர். ஆனால், சாத்வி பிரக்யா தாகூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப் பட்டார். பிறகு தான் வெள்ளை நிற காரில் வந்த மரியாவின் சகோதரர் கதவருகில் சென்றபோது, மரியா இனிமேல் தான் வருவார் என்று தெரிய வந்தது.

 

சொகுசு காரில் சர்ச்சிற்குச் சென்ற மரியா: மரியா ஆர்தர் ரோடில் இருக்கும் ஜெயிலிலிருந்து வெளி வந்ததும், போலீஸார் ராஜ உபசாரத்துடன் அதாவது, ஏதோ ஒரு பெரிய விஐபி போன்று அனுப்பி வைத்தனர். வெளியே தயாராக நின்று கொண்டிருந்த ஹோண்டா-சிடி காரில் ஏறி, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். பந்த்ரா-வோர்லி கடற்கரை சாலை வழியாக மாஹியில் இருக்கும் செயின்ட் மைக்கேல் சர்ச்சிற்கு, தனது சகோதரியுடன் சென்றார்[1]. மூன்று வருடங்களாக தான் எந்த சர்ச்சிற்கும் செல்லவில்லை என்று கூறினார். சர்ச்சிற்குள் சென்றதும், உட்கார்ந்து கொண்டார். அருகில் சகோதரரும் இருந்தார். கைகளைக் கூப்பிக் கொண்டு பிரார்த்தனை செய்தார். சுமார் அரைமணி நேரம் அங்கிருந்தபோது, பிரார்த்தனை செய்தபோய்து அழுத நிலையில் இருந்தார்[2]. கைக்குட்டையால் கண்களை துடைத்துக் கொண்டே இருந்தார். குற்ற உணர்வுடன் இருப்பது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. இதை ஊடகக்காரர்களும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

 

பேட்டியில் சரீஃப் ‌ஷேய்க், மரியாவின் வக்கீல் கூறியது[3]: “நீரஜின் உடல் 300 துண்டுகள் வெட்டப்பட்டது என்பதெல்லாம் உண்மையில்லை…புலன் விசாரணை செய்த ராவ் ரானே என்பவர் எடுத்த புகைப்படம் இது (ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்). இதில் உடல் 300 துண்டுகளாக இருப்பதைப் பார்க்கிறீர்களா? விலா எலும்புகள், மண்டை ஓடு எல்லாமே ஒழுங்காக இருக்கின்றன[4]. 300 துண்டுகளாக உடல் வெட்டியிருந்தால், எலும்புக்கூடு இவ்வாறு இருக்குமா? போலீஸார் அவ்வாறு பார்த்திருக்க முடியுமா? ஆகவே போலீஸார் அத்தகைய தவறான விஷயத்தை ஊடகங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள். எங்களுக்கு தீர்ப்பின் நகல் ஜூலை 7ம் தேதி கிடைத்தவுடன், நாங்கள் மேல் முறையீட்டிற்குச் செல்வோம்”, என்று சரீஃப் ஷேய்க் என்ற மரியாவின் வக்கீல் கூறினார். அதற்குப் பிறகு, மரியாக கீழ்கண்டவாறு பேட்டியளித்தார்.

 

மரியாவின் பேட்டியில் சொன்னது[5]: வழக்குப் பற்றிய விவரங்களைக் கேட்ட வினாக்களுக்கு பதில் சொல்ல மறுத்து, “நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் நான் குற்றமற்றவள். என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும்[6] நான் கடந்த காலத்தை பின்னால் விட்டுவிட விரும்புகிறேன். எனக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எதையும் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை[7]”, என்றார்.

 

ஜெரோமுடன் எந்த உறவும் இல்லை, பேசியதே இல்லை[8]: நீரஜ் மற்றும் ஜேரோம் இவர்களுடனான உறவுகளைப் பற்றிக் கேட்டபோது, நீரஜுடனான உறவை முக்கியத்துவப் படுத்தாமல் மழுப்பினார். “நான் அவருடன் (ஜெரோமுடன்) எதையும் பேசவில்லை………”, மறுபடியும் கேட்டபோது, “அவருடன் (ஜெரோமுடன்) எனக்கு நட்பு கூட இல்லை………”, என்று சொன்னது வியப்பாகத்தான் இருந்தது.

 

ஊடகக்காரர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மழுப்பலக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தபோது, இதுவரை நான் இத்தனை பேர்களை எதிர்கொண்டதில்லை….”, என்றெல்லாம் சொல்லி,  “நான் தண்டனைக்குட்பட்டுள்ளேன். என்மீது ஏற்பட்டுள்ள நான் சிறையில் மூன்று வருடம் 41 நாட்கள் இருந்தேன். சிறையில் இருந்ததால் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்[9]. களங்கத்தை எவ்வாறு போக்குவது என்று தெரியவில்லை. என்னுடைய குடும்பத்தார் என்ன செய்வது என்று தீர்மானிப்பார்கள். எனக்கு நான் கடவுளுக்கு அருகில் இருந்ததாக உணர்ந்தேன். கடவுளை உணர்ந்தேன், அவர் தான் என்னை வெளியே அழைத்து வந்துள்ளார்.

சித்திரங்கள் வரைந்து கொண்டிருந்தேன், பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்………”. என்றெல்லாம் சொன்னார்.

 

எங்களுடைய மகனின் கொலையை தமாஷா ஆக்கிவிடாதீர்கள்: எங்களுடைய மகனின் கொலைகயை தமாஷா ஆக்கிவிடாதீர்கள் என்று நீரஜின் தந்தை அமர்நாத் வருத்தத்துடன் தெரிவித்தார். “ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், எங்களுடைய மகனின் பிணத்தைக் கூட போலீஸார் எங்களுக்குக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது தான் வெள்ளிக்கிழமை – 01-07-2011 அன்று கொடுப்பதாகக் கூறினார்கள்[10]. ஏற்கெனவே எரித்துவிட்டார்கள் என்றால் எப்படி பிணத்தைக் கொடுக்க முடியும்? நாங்கள் வாங்கமுடியாது என்று கூறிவிட்டோம்”. மரியா மற்றும் ஜெரோம் கொடுத்த ரூ. 1.5 லட்சங்களைப் பெற குரோவர் தம்பதியர் மறுத்துவிட்டனர்[11]. மே 2008ல் கொலை செய்யப்பட்ட பிணம் எப்படி இப்பொழுது கொடுக்க முடியும்? இதுவே முழு பொய் என்று நன்றகவே தெரிகிறது.

 

தர்கா-கோவில் செல்ல விரும்பிய மரியாவும் ஏசுவிடன் நெர்க்கமாகி விட்ட மரியாவும்[12]: மாஹிமில் உள்ள தர்கா மற்றும் சித்தி வினாயகர் கோவில் முதலிய இடங்களுக்கு செல்வதாக இருந்ததாம். ஆனால், பிறகு அவற்றை தவிர்த்து, நேராக சீக்கிரமாக வக்கீலைப் பார்க்க பந்த்ரா-குர்லா பாதையில் சென்று விட்டாராம்[13]. சரீஃப் ஷேய்க் அங்கு என்ன பேசலாம், கூடாது என்பது பற்றி விவாதித்தப் பிறகு, பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாம். அதனால்தான், சர்ச்சிற்குள் நுழையும் போதே, ஊடகக்காரர்கள் கேள்வி கேட்டபோது, மரியாவின் சகோதர், பிறகு இதற்கெல்லாம் பதில் சொல்லப்படும் என்று கூறி, மரியாவை அணைத்துக் கொண்டு சர்ச்சிற்குள் சென்றுவிட்டனர். ஆக மிகவும் தீர்மானித்து செயல்படுவதைக் காணலாம், இருப்பினும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் இவ்வாறு ராஜ மரியாதையுடன் நடத்தப் பட வேண்டும் என்று தெரியவில்லை. திடீரென்று, இப்பொழுது மதரீதியிலான பதில்கள், நியாயப்படுத்தப்படும் முறைகள் முதலியவற்றை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு பெண் இரு ஆண்களை காதலிப்பது, உறவு வைத்துக் கொள்வது ……………………முதலியவற்றை கிருத்துவம் ஆமோதிக்கிறதா, கர்த்தர் ஆதரிக்கிறாரா அல்லது ஏசு ஏற்றுக் கொள்கிறாரா என்று தெரியவில்லை. இப்பொழுது மரியா கர்த்தர் / ஏசுவின் அருகில் மிகவும் நெருக்கத்தில் இருப்பதால், ஒருவேளை, அவரே பதில் சொல்லக்கூடும்! குற்றவாளிகள் இப்படி தொடர்ந்து மதரீதியில் பேசுவது, தங்களை அவ்வாறு காட்டிக் கொள்வது, “எங்கள் கடவுள் எங்களுடன் இருக்கிறார்”, என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும், என்றெல்லாம் சொல்வது நீதித்துறையை பாதிக்கக் கூடும். மேலும், இது அரசியல் ஆக்கப்படும் படும்போது, சாதாரண மக்களும், இப்பிரச்சினையால் அவதிப்பட நேரிடலாம். ஏற்கெனவே, செக்யூலரிஸ இந்தியா, இஸ்லாம் அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் என்பனவற்றால், அதிகமாகவே அவஸ்தைப் பட்டு, வருந்திவரும் வேளையில், இத்தகதைய கிருத்துவமத வாதங்கள் தேவையில்லை. அந்தந்த கடவுளின் நம்பிக்கை அவரவர்களுக்கு, இதனால் என் கடவுள் என்னை காப்பாற்றினார், உன் கடவுள் உன்னை காப்பாற்றவில்லை என்பது போலெல்லாம் பேசவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், பிறகு, உனது கடவுள் தான் அத்தகைய உறவு முறைகளை வைத்துக் கொள்ள சொன்னாரா, அவ்வாறு கொலை செய்யச் சொன்னாரா, குரூரமாக உடலை வெட்டச் சொன்னாரா…………….என்றெல்லம் கேள்விகள் எழுந்தால், நன்றக இருக்காது.

 

வேதபிரகாஷ்

03—07-2011


[5] டிவிக்களில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டவைகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

“All I know is that I am innocent. I have left my past behind. I haven’t realised what is happening. I have not digested the fact that I am convicted. That is a big stigma for me.” [7] http://www.hindustantimes.com/Maria-free-says-she-is-innocent/Article1-716664.aspx

[8] The 30-year-old refused to comment on her relationship with Grover, and played down the importance of her fiancee, Jerome, in her life. “I have not had a word with him…” She insisted that she shared “no friendship” with Jerome.

http://timesofindia.indiatimes.com/city/mumbai/I-have-left-my-past-behind-says-Maria-Susairaj/articleshow/9078189.cms

[9] “I have spent three years and 41 days in the jail. I should say I was blessed. I got close to God and believed in God, and (it is) He who has got me out today. I did a lot of paintings and prayer meets and lot of activities inside the jail,”….. http://www.telegraphindia.com/1110703/jsp/nation/story_14191089.jsp

[13] She was also scheduled a visit to the Mahim Dargah and Siddhivinayak temple, but decided against it and took the Western Express Highway to Thane in an attempt to shake off the media. Once the coast was clear, she quickly headed to her lawyer’s office at Bandra Kurla Express.

 

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி (2)

ஏப்ரல் 29, 2011

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி (2)


மேல் முறையீடு செய்ய ஏற்பாடு: 20-04-2011 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது[1]. 23-04-2011 (சனிக்கிழமை) கடலூரில் ஜான் டேவிட் சரண்டர் ஆகிறான். இவ்வளவு நடந்த பிறகும், போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, உச்ச நீதி மன்றத்தில் மறு ஆய்வு செய்ய / மேல் முறையீடு மனு செய்யப் போவதாக அவனது வழக்கறிஞர் ஏ. பத்மநாபன் என்பவர் 27-04-2011 அன்று தெரிவித்திருப்பது[2], சட்டமுறையை இன்னும் எந்த அளவிற்கு இழுக்கலாம், காலம் தாழ்த்தலாம் என்று தெரிகிறது. மறுபடி-மறுபடி நேரிடையான ஆதாரங்கள் இல்லை, மறைமுகமான, சந்தர்ப்பவசமான, ஆதாரங்கள்தான் உள்ளன என்று இப்படி வாதிட்டு வருவது, சட்டப் பிரிவுகளில், மேல்முறையிட்டு அமைப்பில் நியாயமாக இருக்கலாம். அதற்கு குற்றவாளிக்கு, உரிமையும் இருக்கலாம். ஆனால், குற்றத்தை பல நேரங்களில் ஒப்புக் கொண்டு இரண்டுமுறை சிறைக்கு வந்துவிட்டப் பிறகு[3], மறுபடியும் அத்தகைய முறையீட்டை பயன்படுத்தி பார்த்துவிடுவது என்ற முடிவு ஜான் டேவிட் உடையதா அல்லது அவ்வாறு யாராவது தூண்டிவிட்டுள்ளனரா அல்லது இன்னும் நீதித்துறையிலுள்ள சட்ட சலுகைகள், உரிமைகள் அல்லது ஓட்டைகளை வைத்து ஒருவேளை, கெட்ட முன்னுதாரத்தை உருவாக்க முயல்கிறார்களா என்பது, மறுபடியும் மூன்று-ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியும்.

ஜான் டேவிட்டும், அவனது பெற்றோரும்: ஜான் மாரிமுத்து மற்றும் எஸ்தர் லட்சுமி என்கின்ற அவனது பெற்றோர்களுக்கு, அவனைப் பற்றிய விவரங்கள் நிச்சயமாகத் தெரியும் என்பது, அவர்களது நடவடிக்கைகளிலிருந்து அறியப்படுகின்றது. போலீஸார் ஊடகங்களில் ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான் என்றபோதே, அவர்கள் கரூரிலிருந்து சென்னைக்கு வந்து, வக்கீல்களை சந்தித்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். அத்தகைய வதந்தி பரப்பியுள்ளது அவர்களின் வேலைதான் என்று தெரிய வந்துள்ளது. தம்முடைய மகன் விரைவில் சரணடைவான் என்று பெற்றோர் அறிவித்தனர்[4]. இணைத்தள நகலை வைத்துக் கொண்டு சரண்டரும் ஆகிவிட்டது.

ஜான் டேவிட்டைப் பற்றிய விவரங்களை மறைக்கும் ஊடகங்கள்: ஜான் டேவிட்டின் விஷயத்தில் மட்டும் ஊடகங்களில் அவனைப் பற்றிய விவரங்கள் மிகவும் குறைந்த அளவில்தான் வந்துள்ளன. அவனது முகத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அளவிற்குக் கூட, புகைப் படமோ, அல்லது தொலைக்காட்சிகளில் செய்திகளிலோ காட்டவில்லை. ப்ழைய படங்களைத் தான் காட்டி வந்துள்ளனர். குறிப்பாக “தி ஹிந்து”வில் வந்த இரண்டு படங்களைத்தான், மாற்றி-மாற்றி மற்ற ஊடகங்கள் காட்டிவருகின்றன. மேலும் சதர்லாந்து கம்பெனியில் வேலைப் பார்க்க உண்மையான பெயர் மற்ற விவரங்களை மறைத்துள்ளதும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் செய்வது போல இல்லை. ஏனெனில், முன்பு பைபிளை கையில் வைத்துக் கொண்டு, கடவுள்தான் தன்னைக் காப்பாற்றினனர் என்று அரைகூவலிட்டு பேசியது சிலருக்குத்தான் நினைவில் இருக்கும்[5].

ஜான் டேவிட்டைப் பற்றிய வதந்திகள்: தன்னுடைய மகன் திருமணம் செய்து கொண்டு விட்டான், பாதிரியாகி விட்டான், நட்டைவிட்டு ஓடி விட்டான், பாதிரியாகி விட்டான் என்றெல்லாம் வதந்திகள் வருவதை தாய் எஸ்தர் லட்சுமி விரும்பவில்லையாம். ஆகையால் தான், வக்கீல் துணையுடன் சரண்டர் ஆகத் தீர்மனித்தனராம். பிறகு எப்படி, இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தனர். உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாடினர் என்பதெல்லாம் ரகசியமாகவே இருந்தன என்பதும் மர்மமமக இருக்கின்றது. இதே மற்ற வழக்கு எனும்போது, தினசரி அல்லது தொடர்ந்து அவ்வழக்கைப் பற்றி ஊடகங்களில் கூறிவருகின்றனர். ஆனால், கிருத்துவர்கள் சம்பந்தப் பட்டவை என்றால், ஆரம்பத்தில் பெரியதாக வந்து, பிறகு, ஒன்றுமே இல்லை என்பது போல அமைதியாகி விடுகின்றது. இந்த போக்கு என்ன என்று ஆராயவேண்டியுள்ளது.

ஆட்டோ சங்கரும், ஜான் டேவிட்டும், கிருத்துவர்களும்: ஆட்டோ சங்கர் விவகாரத்தில், எப்படி கிருத்துவர்கள் ஆபாசமாக விளம்பரத்தைப் பெற முயன்றனரோ, அதேமுறையில் ஜான் டேவிட் விஷயத்திலும் செயல்பட்டது. கொலைவிஷயத்தில் தீவிரமாக விசாரணை செய்தால், ஜான் டேவிட் அவ்வாறு தீவிரமாக கொலைவெறிப் பிடித்த குரூரனாக மாற, கிருத்துவ மதம் தான் காரணம் என்ற உண்மை தெரிய வரும் என்று தெரிந்துகொண்டு, அவ்வழக்கை அமுக்க முயற்சி மேற்க்கொண்டன்ர். சிறையில் இருக்கும் போதே கிருத்துவர்கள் தமது ஆதிக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவன் விடுவிக்கப் பட்டதும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிருத்துவ அமைப்பை அவனை மதபோதக வேலைக்கு வைத்துக் ஆஸ்திரிலேயாவில் பாதிரியாக வேலைசெய்து வருகிறான் என்று செய்திகளை ஏன் பரப்பின என்பதும் வேடிக்கையாக உள்ளன..


[1] Ispector of Police, Tamilnadu vs John David, in Criminal Appeal No. 384 of 2002-Decided on 20-04-2011; http://www.stpl-india.in/SCJFiles/2011_STPL(Web)_404_SC.pdf

[5]  Waving the Bible, John David told waiting presspersons “Your pen is mightier than an ordnance and ammunition; don’t spoil my life with some publicity or the other, and please let me lead my life”, he said fluttering. Long-haired and bearded, David attributed his release to “Lord Christ’s mercy alone, and nothing else”.

http://www.hindu.com/2001/10/09/stories/0409223w.htm

கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்!

பிப்ரவரி 11, 2011

கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்!

கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்!

மர்மமான மரணம்: மண்டையுடைப்பு / மாரடைப்பு: திருச்சி செயின்ட் ஜோஸப் பாதிரி, புளோரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டார்[1]. கைது செய்யக் கூட போலீஸார் காலம் தாழ்த்தினர்[2]. பிறகு, நிபந்தைகள் கூடிய ஜாமீனில் வெளியே வந்தார்[3]. மற்ற பாதிரிகளோ, நிபந்தைகள் இல்லாமல் ஜாமீனில் வந்தனர்[4]. தினமும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போட்டு வந்தார். மருத்துவ பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் மறைக்கப் பட்டன[5]. வீருகொண்டு எழுந்த சில இயக்கங்களும் காணாமல் போய்விட்டன[6]. ஊடகங்கள் வழக்கம் போல அமைதியயகி விட்டன. இந்நிலையில், பாதிரியார்கள் மறுபடியும், இந்த வழக்கை மூடி மறைக்க வேலைசெய்து வருவது தெரிய வந்துள்ளது. இன்னொரு பாதிரி சூசை மர்மமான முறையில் இறந்துள்ளார். சூசையின் உதவியாளர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார். ஆனால், கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கையில், படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார்”, என்றுள்ளது!

புளோரன்ஸ்-மேரி-புகார்-கலெக்டர்

புளோரன்ஸ்-மேரி-புகார்-கலெக்டர்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்மமரணம்[7]: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர், ரெக்டார், சாமியார் P. சூசை மர்மமான முறையில் 19-12-2010 அன்று இறந்து கிடந்தார். ஏற்கனவே, கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சையில் இக்கல்லூரியின் முதல்வர் சிக்கியுள்ள நிலையில், அதிபரின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிரிகள் நீக்கம் பற்றிய ஆணையை பிறப்பித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகமடைந்த திரவியநாதன் அவரது அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[8]. கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கை: “நேற்று காலை நடந்த திருப்பலிக்கு, சூசை அடிகளார் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்து, கல்லூரி முதல்வர் செபாஸ்டின், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைராஜ், இல்ல நிர்வாகி ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸ் ஏ.சி., சீனிவாசன் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். பூட்டியிருந்த அவரது அறை கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார். இதைப் பற்றி, விவரங்களை மறைத்து, மாரடைப்பினால் இறந்தார் என்று, உடலை புதைத்துவிட்டனர்.

புளோரன்ஸ்-மேரி-கமிஷனரிடம்-புகார்

புளோரன்ஸ்-மேரி-கமிஷனரிடம்-புகார்

திருச்சி கன்னியாஸ்திரி, மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு (07-02-2011): திருச்சி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், புனித ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் குற்றப்பத்திரிகையை போலீசார் திரும்பப்பெற்றனர். இதனையடுத்து குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ள பெயர்களில் அரசியல்வாதிகள் நெருக்கடியாலும், போலீஸ் கமிஷனர் நெருக்கடியால் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்[9].இதுகுறித்து அறிந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, பிப்.,7ம் தேதி, தன் வக்கீல் இருதயசாமியுடன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் புகார் மனு அளித்தார். அதில், “போலீஸ் உயரதிகாரிகளும், ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட்டும் சேர்ந்து, குற்றப்பத்திரிகையில் உள்ள சில குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்‘ என்று கூறியிருந்தார்

புளோரன்ஸ்-மேரி-ரகசியங்கள்

புளோரன்ஸ்-மேரி-ரகசியங்கள்

போலீஸ் கமிஷனரிடம் புகார் (10-02-2011):.கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி 10-02-2011 மதியம் ஒரு மணியளவில் திடீரென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம் புகார் மனு அளித்தார். அதில், “குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை நீக்க கோட்டை போலீசார் மேற்கொண்டுள்ள முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்‘ என்று கூறியுள்ளார்[10]. பின்னர் கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி நிருபர்களிடம் கூறியதாவது: “குற்றப்பத்திரிகையில் உள்ள இரண்டு பெயர்களை நீக்கவும், ஆவணங்களை அழிக்கவும் கோட்டை போலீசார் முயற்சித்து வருகின்றனர். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்தேன். குற்றவாளிகளுக்கு அரசியல் பலம், பணபலம், போலீஸ் உயரதிகாரிகள், நீதித்துறையில் உள்ளவர்கள் என பலரும் ஆதரவாக இருப்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. கடந்த 7ம் தேதி, போலீஸ் கமிஷனரும், மாஜிஸ்திரேட்டும் இணைந்து தான், குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்று கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்[12]. ஆனால், அவர் குற்றஞ்சாட்டிய, போலீஸ் கமிஷனரிடமே, ப்ளாரன்ஸ் மேரி நேற்று முன்தினம் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்[13]: ஜனவரி 8,9,1.2011 ஆகிய 2 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் பாதிரியார் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். இதற்கிடையே பாதிரியார் ராஜரத்தினம் தரப்பில் நிபந்தனை ஜாமீனை தளர்த்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணை 15.2.2011-ந்தேதி வருகிறது.   இதற்கிடையே வழக்கு தொடரப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் கோட்டை மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிளாரன்சு மேரி வழக்கில் சாட்சியங்கள் சந்தர்பங்களை திரட்டி குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். இறுதியில் பாதிரியார் ராஜரத்தினம் மீது சுமார் 110 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை திருச்சி மாஜிஸ்திரேட்டு நடுவர் எண்.1ல் மாஜிஸ்திரேட்டு ஆபிரகாம் லிங்கனிடம் தாக்கல் செய்தனர். இதில் பாதிரியார் பிளான்சுமேரியை மிரட்டிய, பாதிரியார்கள் மற்றும் பிளாரன்சுமேரிக்கு கருகலைப்பு செய்த தென்னூர் ஆஸ்பத்திரி டாக்டர் ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பிடித்து உள்ளது. மேலும் இவ்வழக்கில் சாட்சிகளாக பிளாரன்சுமேரி அவரது அக்காமேரி, உள்பட 28 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். பாதிரியார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து விரைவில் விசாரணை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு சூடுபிடித்து உள்ளது

பாதிரியார்களின் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்: இது பாதிரியார்களின் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் எனலாம் போலிருக்கிறது. எப்படி கோடிகள் வளர்ந்தனவோ, இதிலும் கற்பழிப்பு கன்னியாஸ்திரிகளின் எண்ணிக்கையும் வளர்ந்தது[14]. கன்னியாஸ்திரிகளின் புகார்களும் பெருகின[15]. அந்நேரத்தில் தமிழகத்திற்கு வந்த கந்தர்புரி பிஷப் கூட நொந்து விட்டார்[16]. ஆனால், எல்லாவற்றையும் மறைத்துவிட்டனர். எப்படி ஊழலில் கூட நம் நாட்டில் பாரபட்சம் பார்க்கின்றனரோ, அதே போல, செக்ஸ் குற்றங்களில் கூட, பாரபட்சமமகவே, ஊடகங்கள், நீதிமன்றங்கள், சட்டத்தை அமூல் படுத்தும் அதிககரிகள், நிறுவனங்கள் எல்லாமே அவ்வாறுதான் நடந்து கொள்கின்றன.

வேதபிரகாஷ்

11-02-2011


[3] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!, https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/

[4] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது: மற்ற பாதிரிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

, https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

[5] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!, https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

[7] தினமலர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம், டிசம்பர் 20,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149603

[9] தினமலர், திருச்சி கன்னியாஸ்திரி, மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு,  பிப்ரவரி 07, 2011,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182677

[10] தினமலர், குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை நீக்க முயற்சிப்பதை தடுக்க கோரிக்கை:கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2011,00:10 IST; மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 11,2011,02:00 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=185315

[12] தினமலர், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி: கன்னியாஸ்திரி பரபரப்பு குற்றச்சாட்டு, பிப்ரவரி 07,2011,,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182795

[13] மாலைமலர்,கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: திருச்சி பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் , http://www.maalaimalar.com/2011/02/04152351/wimple-case-charge-sheet-appl.html

[14] வேதபிரகாஷ்,, கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!, https://christianityindia.wordpress.com/2010/10/23/clinus-usha-mary-the-raped-list-increases-catholic-sex-case/

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாமியார் சூசை மர்ம மரணம் – கொலையா?

திசெம்பர் 20, 2010

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாமியார் சூசை மர்ம மரணம் – கொலையா?

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம்[1]: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர், ரெக்டார், சமியார் P. சூசை மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார். ஏற்கனவே, கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சையில் இக்கல்லூரியின் முதல்வர் சிக்கியுள்ள நிலையில், அதிபரின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்த பாதிரியார் சூசை (52). சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்த இவர், கடந்த ஓராண்டுக்கு முன் 2009ல், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபராக (ரெக்டர்) நியமிக்கப்பட்டார். 1990ல் சொஸைடி ஆஃப் ஜீஸஸ் (Society of Jesus) என்ற கத்தோலிக்க அடிப்படை சபையில் பாதிரியாக சேர்க்கப்பட்டு அதில் 33 வருடங்கள் வேலை செய்தார். கல்லூரியின் கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் மற்றும் ஹாஸ்டல் வார்டன் என்று பல்;அ பொறுப்புகளில் இருந்துள்ளார்[2]. கற்பழிப்புப் புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள ராஜரத்தினம் விலக்கல் ஆணையைப் பிறப்பித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன சாமியார்: கல்லூரியில் உள்ள ரெக்டர் இல்லத்தில் தங்கியிருந்தார். கடந்த டிசம்பர் 17ம் தேதி இரவு, அவரது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று முன்தினம் முழுவதும் அறையை விட்டு வெளியே வரவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, உதவியாளர் திரவியநாதன் அவரது மொபைல் போனை தொடர்பு கொண்ட போது, அறையில் இருந்து போன் அழைக்கும் சத்தம் கேட்டது. ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த திரவியநாதன் அவரது அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[3].

பலிக்கு வராத சாமியார் பலியா என்ற சந்தேகம்: திருப்பலி சடங்கிற்கு வராமல் காணாமல் போன சூசை குறித்து கல்லூரி முதல்வர் ஏ. செபாஸ்டிடயன் உட்பட போலீஸாருக்கு புகார் செய்துள்ளனர்[4]. இது குறித்து திரவியநாதன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கோட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், “நள்ளிரவில் படுத்த அவர், அதிகாலை சிறுநீர் கழிக்க எழுந்து, செருப்பு அணிய சென்றபோது, திடீரென நெஞ்சு வலி வந்து, கீழே விழுந்து இறந்திருக்கலாம்’ என்று தெரிய வந்தது. இதற்கிடையே, தூக்கிட்டோ, விஷம் குடித்தோ சூசை தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி வளாகம் முழுவதும் தகவல் பரவியது. ரெக்டர் இல்லம் முன் ஏராளமான மாணவரும், பேராசிரியரும் திரண்டனர்.

உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்புதான் எப்படி இறந்தார் என்ற உண்மை தெரியும்: சம்பவம் குறித்து துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா கூறுகையில், “”அதிபர் சூசையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எப்போது, எதனால் இறந்தார் என்பது பரிசோதனை முடிவில் தெரிந்து விடும்,” என்றார். திருச்சி கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மர்ம முடிச்சுகள் – எழுதிக்கொண்டிருந்த சாமியார்!: கல்லூரியில், துறைகளுக்கிடையேயான “இண்டெப்’ கலைவிழா டிசமபர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்துள்ளது[5]. கடந்த 17ம் தேதி – வெள்ளிக்கிழமை இரவு தூங்கச் சென்ற சூசை, நள்ளிரவு (18-12-2010) வரை ஏதோ எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். அவர் என்ன எழுதினார் என்பது இனி நடக்கும் போலீஸ் விசாரணையில் தான் தெரிய வரும். நேற்று முன்தினம் ஒருநாள் முழுவதும் அவரை யாருமே தேடவில்லை என்பது நெருடலான விஷயமாக இருக்கிறது. சூசைக்கு அடிக்கடி நெஞ்சு வலி வரும் என்றும், ஆரோக்கியமாகத்தான் இருந்தார் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.

கல்லூரி அதிபர் மரணம் முதல்வர் விளக்கம்: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கை: “கல்லூரி அதிபர் சூசை, தன்னுடைய 54 வயதில், 34 ஆண்டுகள் ஏசுச்சபையில் சேவையாற்றி உள்ளார். 1990ம் ஆண்டு தன்னை குருவாக அர்ப்பணித்துக் கொண்டவர். நேற்று காலை நடந்த திருப்பலிக்கு, சூசை அடிகளார் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்து, கல்லூரி முதல்வர் செபாஸ்டின், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைராஜ், இல்ல நிர்வாகி ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸ் ஏ.சி., சீனிவாசன் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். பூட்டியிருந்த அவரது அறை கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார். அவரது மரணம் இயற்கையானதே. பல்வேறு வதந்திகள் பரவுவதை போல அல்லாமல், தீவிரமான மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்தார். அவருக்கு பிரேத பரிசோதனையும் செய்து முடித்துள்ளோம். அவருக்கு கடவுள் நிரந்தர அமைதியை அளிக்க வேண்டும். அவரை இழந்து வருந்தும் ஏசுச்சபையினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும், ஜெபங்களும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணியளவில் ஜோசப் கல்லூரியில் நடக்கும்”, இவ்வாறு செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

அவருக்கு பிரேத பரிசோதனையும் செய்தது போலீஸா, ஏசு சபையா? சம்பவம் குறித்து துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா கூறுகையில், “அதிபர் சூசையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எப்போது, எதனால் இறந்தார் என்பது பரிசோதனை முடிவில் தெரிந்து விடும்,” என்றார். திருச்சி கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கையில் ,“அவரது மரணம் இயற்கையானதே. பல்வேறு வதந்திகள் பரவுவதை போல அல்லாமல், தீவிரமான மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்தார். அவருக்கு பிரேத பரிசோதனையும் செய்து முடித்துள்ளோம்…………. அவரது இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணியளவில் ஜோசப் கல்லூரியில் நடக்கும்”, என்றுள்ளது. அவர்களே பிரேத பரிசோதனையை செய்து விட்டார்களா அல்லது திருச்சி அரசு மருத்துவமனை செயுதுள்ளதா என்று தெளிவாக இல்லை.


[1] தினமலர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம், டிசம்பர் 20,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149603

[5] செயின்ட் ஜோசப் கல்லூரியில் நாளை “இண்டெப்’ கலை விழா, டிசம்பர் 12,2010, http://www.dinamalar.com/district_detail.asp?id=144182