Archive for the ‘பிரசங்கி’ Category

“வெளிச்சத்தை நோக்கி” என்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்! [2]

மார்ச் 3, 2019

வெளிச்சத்தை நோக்கிஎன்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்!  [2]

Christian site criticizing the seminar Feb 18-20 -2019.3

கலவரத்தை உண்டாக்கவே கருத்தரங்கம்ஆனால் ஏசுவின் வருகை காட்டுகிறது[1]: இதனை சமீபத்தில் லயோலா கல்லுாரியில் நடந்த ஓவிய கண்காட்சி, திருச்சி ஜோசப் கல்லுாரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் கருத்தரங்கம், கோவையில் நடக்க உள்ள வெளிச்சத்தை நோக்கி கருத்தரங்கம் போன்றவை மூலம் உணர முடியும். இவற்றி்ல் இவர்கள் பேசப் போவது அனைத்துமே பேத்தியை போலவே பாட்டி இருக்காங்க என்றுதான். அவர்கள் கருத்தரங்கம் குறித்து மிப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள்.

அது தொடர்பாக கருத்து மோதல் வெடிக்கும், இந்துகள், கிறிஸ்தவர்கள் மோதிக் கொள்வார்கள். தங்கள் பெயர் பிரபலமாகும். திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள். இதனால் ஏசுவின் பெயராலே இந்த சாத்தான்கள் குளிர்காய்வார்கள்.  சமீபத்தில் திரைப்படங்களில் அரசியல் பேசி ஓடாத சினிமாவை ஓட வைப்பதற்கு இணையானது தான் இது

கிருத்துவர்கள் இந்த அளவிற்குத் தெளிவாக இருக்கிறார்கள். “திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள்” என்ற அளவிற்கு சிந்தித்து வைத்து செயல்பட்டுள்ளார்கள்! ஆனால், இந்த்துவவாதிகளின் நிலை, திட்டம், குறிக்கோள்? கிருத்துவர்களுக்கு உதவுவது தான்! அப்படியென்றால், இவர்களுக்கு இடையே ஏடாவது கூட்டு இருக்கிறதா?

போன்றவையும். எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது அந்தி கிறிஸ்து வந்து விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து வெளிப்படுத்தின சுவிஷேங்களில் காணப்படும் அடையாளங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து இயேசுவின் 2வது வருகை இருக்கும். இதனால் கிறிஸ்தவர்களே பரலோக ராஜியம் சமீபமாக இருக்கிறது. இந்த உலகை விட்டு செல்ல மூட்டை முடுச்சுகளை கட்டிக் கொள்ளுங்கள்[2].

Pandithurai, Johnson, Baskara, Vijayakanth, Thomas, Ramesh

இந்துத்துவ கிருத்துவஎதிர்ப்பு விற்பன்னர்களின் கூட்டம்: டிசம்பர் 2017ல் “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[3] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[4] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[5] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[6] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[7] நடுவராக இருந்தார்[8]. இதில் குறிப்பாக ஜடாயு மற்றும் ஏ.வி. கோபாலகிருஷ்ணன் கிருத்துவ விசயங்களில் மிக்கத் தேர்ந்த பண்டிதர்கள் என்று அறிமுகப் படுத்தப் பட்டனர்[9]. அவர்களும் அந்த சுவதேசி இந்தியவியல் மாநாட்டில் வெளுத்துக் கட்டினர். யாரும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப் படவில்லை. இவ்விதமாக இந்துகளின் “சுவதேசி இந்தியவியல் மாநாடுகள்” நடக்கின்றன. இப்பண்டிதர்களில் ஒருவர் தாராளமாக சென்று கலந்து கொண்டிருக்கலாமே. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஏழு பேர்களுக்கு பேஸ்புக்கிலகிவர்கள் நண்பர்களாக வேறூ இருக்கிறார்கள்! சரி, இப்பொழுதாவது, யாராவது சென்று கலந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. விசாரித்தால் மாநாடு நடந்ததா இல்லையா என்று கூட சரியாகத் தெரியவில்லை. கிருத்துவர்கள் தரப்பில், பொய்யான ஆராய்ச்சி என்றாலும், பி.எச்டிக்கள் மூலம் அரைத்த வாவை அரைத்து, பெருக்குகிறார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளோ, அடுத்தவர்களை அமுக்கி, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமையில்லாத இவர்களால் இந்துக்களுக்கு லாபமும் இல்லை, பயனும் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், அவர்கள் தொடர்ந்து காரியங்களை செய்து வருகிறார்கள்.

Christian seminar -Pandithurai with Moses Michael

மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” 1989ல் தோன்றியது: கிருத்துவர்களை எதிர்க்க வேண்டுமானால், ஒற்றுமையுடன் இந்துக்கள் செயல்பட வேண்டும். நான் 1989ல் “மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” சார்பில், “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற சிறு-புத்தகத்தை வெளியிட்டேன். அது ஆராய்ச்சிப் புத்தகம் என்பதால், நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது[10]. “மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” என்பது ஒத்தக் கருத்துக் கொண்ட எட்டு நண்பர்கள் மூலம் உருவாக்கப் பட்டது. பல நண்பர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள். ஒரு.ரூ ரூ, 5/- ரூ. 10 ரூ 50/- என்றெல்லாம் கொடுத்தார்கள், அதை வைத்து அப்புத்தகம் வெளியிடப்பட்டது. அதனால் தான் அப்புத்தகம் வெளியானது. அச்சிட்டவரே அதனை பாராட்டினார், ஏனெனில், அவர் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு புத்தகங்களை அசிட்டுக் கொடுத்து வந்தார்[11]. ஆனால், “செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – தொடர்கிறது” என்று சுமார் 180 பக்கங்கள் கொண்ட புத்தகம் தயாரித்து, சிடியில் கொடுத்த போது, வெளியிடுகிறோம் என்று வாக்களித்தவர் 2008ல் வெளியிடவில்லை. மாறாக அவற்றில் உள்ள ஆதாரங்களை வைத்து, மற்றவர்கள் புத்தகங்களை வெளியிட்டார்கள். இப்படித்தான், இந்துக்களின், இந்துத்துவவாதிகளின் போக்கும், நடவடிக்கைகளும் இருக்கின்றன. முன்பு பணமில்லை, மனமிருந்தது. இப்பொழுது பணம்-அதிகாரம் இருக்கிறது, ஆனா, மனமில்லை. தங்களது நிலையை, பதவியை, இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார்களே தவிர, கொள்கைக்குப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இங்குதான் கிருத்துவர்கள் மாறுபடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

03-03-2019

Ezra, Sundar Singh etc

[1] நியூஸ்.டி.எம், தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !, பாரதி பித்தன் | Last Modified : 09 Feb, 2019 09:33 am.

[2] https://www.newstm.in/news/tamilnadu/55607-jesus-is-coming-soon.html

[3] M.Venkatesan is well known Tamil writer and publisher. He is an original thinker and dharmic activist. He has written books on Ambedkar, EV Ramasamy Naicker, the Dravidian movement and Justice Party. His books such as ஈவே ராமசாமியின் மறுபக்கம் (The Other side of EV Ramasamy), ‘புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? (Why did Ambedkar Convert to Buddhism? ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare? )’, ‘ஹிந்துத்துவ அம்பேத்கர் (Hindutva Ambedkar) ‘ have been making a significant impact on the intellectual climate of Tamil Nadu.

[4]  N.A. Padmanabhan is a Tamil journalist and writer having a very rich experience in both Tamil print and visual media. He has authored books on Indian Philosophy and Hindu spirituality. His books such as ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே (Rejection of God is also Spirituality), தத்துவ தரிசனங்கள் (Indian Philosophical Perspectives: Dharsanas) are widely popular in the state. https://www.facebook.com/padman.anandapadmanaban?fref=ts

[5] Jataayu (R N Sankara Narayanan) is an IT professional. He is a well-known Tamil Writer and Hindutvaite thinker. He has been one of the editors of website Tamil Hindu and Valam magazine. He has a deep interest in Kambaramayanam and knows Sanskrit well. He has written a number of articles in Tamil Hindu and Thinnai websites. His most recent publications include பண்பாட்டைப் பேசுதல் (Talking on Culture), சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் (இணையாசிரியர் அரவிந்த நீலகண்டன்) – A New Perspective on Jati (with Aravindan Neelakandan), காலம்தோறும் நரசிங்கம் (பண்பாட்டு கட்டுரைகளின் தொகுதி) Narasimham Over the Ages – Compendium of Articles on Culture).

[6] A.V.Gopalakrishnan is an engineer by profession and a passionate historical researcher on Bible and theology. For over fifteen years he has been writing blogs on the historicity of Bible under his pen name Devapriya ji.

[7] Professor, Department of Social Work, Mizoram University, https://www.facebook.com/mekanagaraj

[8] வேதபிரகாஷ், சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புஅறிக்கைஇந்துஎதிர்ப்பு மனப்பாங்குகலந்துரையாடல்கள் (5), டிசம்பர் 28, 2017.

[9] https://tamilheritage.wordpress.com/2017/12/28/swadeshi-indology-conference-discussion-on-hinduphobia-meyhodology/

[10] ஈஸ்வர் சரண் ஆங்கிலத்தில் விரிவான புத்தகத்தை வெளியியட்டார். இப்பொழுது 2019லும் அதன் விரிவான பதிப்பு வெளியாகி உள்ளது.

[11]  சமூக அறிவியல் புத்தகத்தை அச்சிட அவருக்கும் ஆர்டர் கிடைத்திருந்தது. ஆனால், அந்த விவகாரம் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகவே, பரிகாரமாக, இதனை அச்சிட்டுத்தருகிறேன் என்ற போது, அவருக்குள்ளும் இருந்த உணர்வு தெரிந்தது.

கிறிஸ்தவ பெண் பிரசங்கி உட்பட நான்கு பேர் பண-இரட்டிப்பு மோசடியில் சென்னையில் கைது!

ஒக்ரோபர் 11, 2015

கிறிஸ்தவ பெண் பிரசங்கி உட்பட நான்கு பேர் பண-இரட்டிப்பு மோசடியில் சென்னையில் கைது!

கிறிஸ்தவப் பிரசங்கி கரூர் மல்லிகா

கிறிஸ்தவப் பிரசங்கி கரூர் மல்லிகா

2 பைகளுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டனர்[1]: 10-10-2015 அன்று பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் 2 பைகளுடன் 4 பேர் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட செம்பியம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து விசாரித்த போது அந்த கும்பல் பணம் இரட்டிப்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பையில் 5 கருப்பு நோட்டு கட்டுகள் இருந்தன. மற்றொரு பையில் நூறு ரூபாய் அளவிற்கு வெற்று காகித கட்டுகள் இருந்தன. மேலும் நூறு ரூபாய் ஒரிஜினல் பணமும் 5 வைத்திருந்தனர்[2]. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரசாயன பவுடரை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது[3]. மேலும் நூறு ரூபாய் ஒரிஜினல் பணமும் 5 வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரசாயன பவுடரை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது[4]. இந்த மோசடியில் ஈடுபட்ட –

  1. கரூர் காந்திபுரம் நீலிமேடு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மா. மல்லிகா (52/56),
  2. தூத்துக்குடியைச் சேர்ந்த / கூடுவாஞ்சேரி நேதாஜிநகரைச் சேர்ந்த ராஜன் (39) என்ற ஜெயசிங் பாக்கியராஜ்,
  3. தூத்துக்குடி மட்டக்கடை தட்டார் தெருவைச் சேர்ந்த யா.தாம்சன் (24), மற்றும்
  4. மதுரை திடீர்நகர் அலாவுதீன் கார்டன் பகுதியைச் சேர்ந்த மு.சேர்ந்த முகமது யூசுப் (22)

ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

பணம் இரட்டிப்பு மல்லிகா, தாம்சன் கைது 2015

பணம் இரட்டிப்பு மல்லிகா, தாம்சன் கைது 2015

யாரிந்த கரூர் மல்லிகா – பெண்-பாஸ்டர் மல்லிகா?: 2013ல் கடத்தல் மற்றும் பணம் இரட்டிப்பு விவகாரங்களில் மல்லிகா என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். முருகேசன் என்பவர், இது விசயமாக போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார். புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன் மணிராஜ், அவரது மனைவி மல்லிகா (46), மகன் ராஜகாளீஸ்வரன், கருப்புச்சாமி ஆகியோர் எங்களிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் ரூ. 1 லட்சம் தருவதாக கூறினர். பணம் இரட்டிப்பு மோசடி செய்ததாக மணிராஜ், அவரது மனைவி மல்லிகா, மகன் ராஜாகாளீஸ்வரன், கருப்புச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்[5]. இப்பொழுது மோசடியில் ஈடுபட்ட மல்லிகாவும் (52) கரூரைச் சேர்ந்தவர் / காந்திபுரம் நீலிமேடு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மா.மல்லிகா (55)[6], என்றுள்ளது, ஆனால், வயது வித்தியாசம் இருக்கிறது.  தேவாலயம் ஒன்றில் பிரசங்கம் செய்து வந்தாள்[7], கிறிஸ்தவ பெண் பிரசங்கர் போலும்! மல்லிகா, வேப்பேரியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். ஆக, இந்த பெண் பாஸ்டர் வேறு மல்லிகா போலும்!

ஏ.பி.எம். சர்ச் பண இரட்டிப்பு மோசடி 2011

ஏ.பி.எம். சர்ச் பண இரட்டிப்பு மோசடி 2011

 பாஸ்டர்கள் ஈடுபட்ட பணம் இரட்டிப்பு மோசடி: செம்பியத்தில், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, பலகோடி ரூபாய் மோசடி செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், காந்தி கிராமம் நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா, 53. தேவாலயம் ஒன்றில் பிரசங்கம் செய்து வந்தாள்[8]. அங்கு, பொருளாதார பிரச்னைக்காக பிரார்த்தனை செய்ய வருவோரிடம், ‘பணத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கான வழிமுறைகள் தெரிந்த நபர்களை எனக்கு தெரியும்’ என கூறி, அவர்களை, துாத்துக்குடி மட்டக்கடை, தட்டார் தெருவைச் சேர்ந்த தாம்சன் என்ற ஜோயல், 24, என்பவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள். தாம்சன், அந்த நபர்களிடம், பத்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தான். இவ்வாறு, ௧௫க்கும் மேற்பட்டோர், அவனிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெரம்பூர், எம்.பி.எம். தெருவைச் சேர்ந்த வடிவேல், 30, என்பவரிடம், மல்லிகாவும், தாம்சனும், இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டனர். சந்தேகம் அடைந்த வடிவேல், செம்பியம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீசார், மல்லிகா, தாம்சன், மதுரையை சேர்ந்த முகமது யூசுப், 22, துாத்துக்குடியை சேர்ந்த செபஸ்டின், 39, ஆகியோரை கைது செய்தனர்.

HIM JOhn Prabhakars wife Sukanya arrested June 2013

HIM JOhn Prabhakars wife Sukanya arrested June 2013

தூத்துக்குடி பிரதீப் தான் சொல்லி கொடுத்துள்ளான்கைதான நபர்கள் விசாரணையில் கூறியதாவது: எங்களுக்கு, இதுபோல் பணத்தை இரட்டிப்பாக்கி ஏமாற்றும் வித்தையை சொல்லி தந்தது துாத்துக்குடி, பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதீப், 40, என்பவன் தான். நிறைய பேருக்கு அவன் சொல்லி கொடுத்துள்ளான். அவர்களும் எங்களைப் போல், பல இடங்களில் மோசடி செய்து வருகின்றனர். நாங்கள் போலீசிடம் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், ‘இந்த நபர்களால் பாதிக்கப்பட்டோர் எங்களிடம் புகார் அளிக்கலாம். பிரதீப்பை பிடிக்க தனிப்படை துாத்துக்குடிக்கு விரைந்துள்ளது’ என்றனர். இச்செய்தியைப் படித்த பிறகும் பிரதீப் அங்கு இருப்பானா என்ன?

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

ஆட்டையை போட்டது எப்படி?[9]: கைது செய்யப்பட்டோர் அளித்த வாக்குமூலம்: தொழில் அதிபர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முதலில் குறிவைப்போம். பின், அவர்களை அணுகி, கறுப்பு காகிதத்தை பணமாக மாற்றும் வித்தையை கற்று தருவதாக தெரிவிப்போம். அவர்களை பேச்சில் மயக்கி சம்மதம் பெறுவோம். எங்களிடம் மசியும் நபர்களை, ரகசிய இடத்திற்கு அழைத்து செல்வோம். அங்கு, ஒரு பாத்திரத்தில், காயத்திற்கு போடும் ‘டிஞ்ஜரை’ அளவுக்கு அதிகமாக ஊற்றுவோம். அதன் உள்ளே, அவர்களுக்கு தெரியாமல் ஏற்கனவே பணத்தை போட்டு வைத்து இருப்போம். பின், ‘டிஞ்ஜர்’ ஊற்றப்பட்ட பாத்திரத்தில், ரூபாய் நோட்டு அளவு கொண்ட கறுப்பு காகிதத்தை போடுவோம். அந்த காகிதம் டிஞ்ஜரில் கரைந்துவிடும் அதன் பின், பாத்திரத்தில் உள்ள டிஞ்ஜரை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, பாருங்கள், கறுப்பு நிற காகிதம் ரூபாய் நோட்டாக மாறிவிட்டது என, தெரிவிப்போம். இதை நம்பி, பலர் ஒரு கோடி ரூபாய் வரை தந்தனர். அதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற காகிதத்தை கொடுத்து மோசடி செய்தோம். டிஞ்ஜரில் மூழ்கடிக்கப்பட்ட காகிதம், நிறம் மாறி இருக்கும் என்பதால் பலர் சந்தேகம் அடைவர். அதற்காக, ‘புகைப்பட பிலிம் கழுவும் திரவத்தில் போட்டு எடுத்து, பளபளக்கும் ரூபாய் நோட்டுகளாக மாறிவிட்டது பாருங்கள்’ என்போம். இதை நம்பி, பலர் ஒரு கோடி ரூபாய் வரை தந்தனர். அதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற காகிதத்தை கொடுத்து மோசடி செய்தோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

பண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது (செப்டம்பர் 2015)[10]: சென்ற மாதத்தில் கரூரில் இத்தகைய மோசடி நடந்துள்ளதால், அதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சேலத்தில் பண இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட முயன்ற கரூரைச் சேர்ந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை 25-09-2015 அன்று இரவு கைது செய்தனர். சேலம் சீலநாய்க்கன்பட்டி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40). பானிப் பூரி கடை வைத்துள்ளார். இவரிடம் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருகே உள்ள காதப்பாறைப் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (38) என்பவர் பணத்தை  இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறினாராம்.  இதை நம்பிய மகேந்திரன், பாஸ்கரைத் தொடர்பு கொண்டதில், அவர் சீலநாயக்கன்பட்டி வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற மகேந்திரனிடம், பாஸ்கர் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஸ்கரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேந்திரன் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், மகேந்திரன் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து மகேந்திரன் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல இடங்களில் அவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை இரவு பாஸ்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்[11].

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

கிறிஸ்தவ பாஸ்டர்களும், பண இரட்டிப்பு மோசடிகளும்: கிறிஸ்தவ பாஸ்டர்கள் கடந்த ஆண்டுகளில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பண-இரட்டிப்பு மோசடிகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.பி.எம். சர்ச் அரக்கோணம், ஹெவன்லி இன்டர்நேஷனல் மிஷன் [Heavenly International Mission (HIM)] போன்ற மோசடிகளில் அவை வெளிப்பட்டன. டஜன் கணக்கில் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாகத்துடன் அவை நடந்தேறின[12]. அவர்களுக்குள் தொடர்பு இருந்திருந்தாலும், ஏதோ அழுத்தங்களினால் விசயங்கள் அமுக்கப்பட்டன, அமுங்கி விட்டன. சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்குள் நடந்த விவகாரமாக இருந்ததால், பணத்தைத் திருப்பக் கொடுத்த, புகார்களை வாபஸ் வாங்கிக் கொண்டு, வழக்குகளை சுமுகமாக முடித்துக் கொண்ண்டனர். அவ்வகையில் இப்பெண் கிறிஸ்தவ பிரசங்கியும், சர்ச்சில் தனது யுக்தியை ஆரம்பித்தாலும், பிறகு மற்றவர்களிடம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதில் செக்யூலரிஸ ரீதியில் மற்ற மதத்தினரும் கலந்து கொண்டுள்ளனர். ஆக, இனி செக்யூலரிஸ ரீதியில் அணுகப்பட்டு, முடிக்கப்பட்டுவிடுமா அல்லது மேலும் விசயங்கள் வெளிவருமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-10-2015

[1] மாலைமலர், சென்னையில் பணம் இரட்டிப்பு கும்பல் கைது: கட்டு கட்டாக நோட்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 10, 2:12 PM IST

[2] The Hindu, Four arrested for ‘money doubling’ scam, October 11, 2015.

Four persons, including a student, were arrested in Perambur on Friday – 10-10-2015 for allegedly being involved in a money doubling scam.  According to the police, money doubling gangs carry black sheets and a solution with them.  “The gang will apply the solution on two genuine notes, smeared with black paste, hidden in the bundle of black sheets. The targets are deceived when the colour fades and the real rupee is seen,” said a senior police officer. They only partially dip the notes in the liquid, claiming that it is very rare. They say that with the solution, they can convert black paper into real money and charge a huge amount for the solution and the black paper. “They collect the money and flee under the pretext of getting more liquid,” said an officer. In this case, the police employed a decoy to contact the suspect. They were called to Perambur. “The suspects said they would give him black paper and the solution for nearly Rs. 5 lakh,” said the officer.  Once the gang arrived, they were arrested. The suspects were identified as Thomson, Mallika, T Rajan and Mohammad Yusuff.

[3] http://www.thehindu.com/news/cities/chennai/four-arrested-for-money-doubling-scam/article7748596.ece

[4] http://www.maalaimalar.com/2015/10/10141214/money-cheating-gang-arrested-n.html

[5] http://www.maalaimalar.com/2013/11/29181445/Money-Doubling-Scam-of-same-fa.html

[6] தினமணி, ரூபாய் நோட்டு இரட்டிப்பு மோசடி:பெண் உள்பட 4 பேர் கைது, By சென்னை, First Published : 11 October 2015 03:33 AM IST

[7] தினமலர், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி, அக்டோபர்.11.2015, 01.48.

[8] தினமலர், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி, அக்டோபர்.11.2015, 01.48.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1361611

[10] தினமணி, பண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது, By சேலம், First Published : 27 September 2015 05:55 AM IST

[11] http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2015/09/27/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-/article3050047.ece

[12] The Crime Investigation Department (CID) police who are investigating the money circulation fraud are planning to make an appeal the court to extend police custody for John Prabhakar. About 12 companies, mostly belonging to Tamil Nadu, and registered in the name of Christian missionary organisations and charitable trusts, collected some hundreds of crores of money from people assuring them to pay ten times more than the amount paid.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/cid-seeks-extension-of-john-prabhakars-custody/article2572141.ece