இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீது புகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம்!
பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கிருத்துவ மதபோதகர்களுக்கு இதே வேலையாகி விட்டது போலும்!
சேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், கட்டிட தொழிலாளி.இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 18-10-2013 காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் கார்-செட்டுக்கு அழைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது[1]. பள்ளியின் முதல்வர், ஏன் அவரும் ஒரு கிருத்துவப் பாதிரியாகத்தானே இருப்பார், அவர் இப்படி கருப்பு ஆடுகளை வளர்த்து, வைத்துக் கொண்டு, மேய விடலாமா?
ஏறெகெனவே, இப்படி ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று மேய ஆரம்பித்து விட்டார்களே? ஏன் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை?
பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார். பிறகு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்[2]. அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்[3].
இது ஏதோ சாதாரண விசயமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், கற்பழிப்புகளில் ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்[4]. வழக்கம் போல புகார்கள் கொடுக்கப் படுகின்றன. சில விசயங்களில் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. தில்லி-மும்பை போன்று, இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை.
பலமுறை இத்தகைய புகார்கள் வந்துள்ளன