Archive for the ‘திருச்சி’ Category

திருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்! இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா? [2]

நவம்பர் 22, 2019

திருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்! இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா? [2]

Why prasath committed suicide 16-11-2019

செக்யூலரிஸத்திற்குப் பிறகு, பாசிஸமும் சேர்ந்து ஊடகங்களில் உண்மைகள மறைக்கப் படுகின்றன, திரிக்கப் படுகின்றன: ஐந்து நாட்களாக இதைப் பற்றி விசாரித்து வருகிறேன். இணைதளத்தில் தேடி, ஓரளவிற்கு விவரங்களை சேகரித்தேன். இருப்பினும் உறுதி செய்ய காத்துக் கொண்டிருந்தேன். 21-11-2019 அன்று தான், “தி இந்து” விவரங்களை செய்தியாக வெளியிட்டது. ஒரு மாணவன் இறந்தது, மிக்க வருத்தப் படவேண்டிய விவகாரம் ஆகி விட்டது. செக்யூலரிஸம் என்றால், இதுவரை கம்யூனிலஸம் தான் கம்யூனிஸ, துலுக்க, கிருத்துவ, நாத்திக சித்தாந்திகளால் பயன் படுத்தப் பட்டு வந்தது. ஆனால், இப்பொழுது, பாசிஸத்தை வெளிப்படையாக கடைப் பிடித்து, தப்பித்துக் கொள்ள, இந்துக்களையே “பாசிஸ்டுகள்” என்று விளிக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், இந்துத்துவ வாதிகளுக்கும், முறையாக எதிர்ப்பதில்லை. இப்பொழுது, ஏதோ வீடியோ போட்டால், எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடுகின்றன இன்று பொழுதைப் போக்கி வருகிறார்கள். இந்தியாவை, உண்மையாக பாதிக்கும் விவரங்களை விடுத்து, உள்ளூரில் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்க்கிறார்கள்!

St Paul seminary- M. Prasath sucide, Andrew De Rose

கிருத்துவர்களின் போலித் தனம், இரட்டை வேடம், முதலியன: கிறிஸ்தவர்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக செமினரிகள், மடாலயங்கள், மருத்துவமனைகள் என்று நடத்தி வந்து, மனோதத்துவம், மனவியல் ரீதியிலான பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் / ஆலோசனை கூறுதல் முதலியவற்றிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள்[1]. ஹிப்னாடிஸம், மெஸ்மெரிஸம் போன்ற வித்தைகளில் வல்லவர்கள். அவற்றை அவர்கள் தினமும், தங்களது கிரியைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அவர்கள் நடத்தும் இறையியல் மற்றும் இதர பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுத்து, மிகவும் எளிதாக அவர்களை முன்னேற வழிகாட்டலாம். மேலும் அவர்கள் கிறிஸ்தவ மதத்தை ஊக்குவித்து, ஊக்குவிக்கும் நோக்கத்தில் இருக்கும்பொழுது, கிறிஸ்தவ மாணவ-மாணவிகளுக்கு உகந்த முறையில், அவர்களின் பிரச்சினைகளைக் கண்டுபிடித்து, ஆலோசனை கூறி தகுந்த முறையில் அவர்கள் வளர வேண்டியவற்றை செய்யலாம்.

Pastor -Martin,preventing pastor suicide

மனோதத்துவ கிரியைகள் செமினரிகளில் முறையாக பயன் படுத்தப் படுவதில்லையா?: ஆனால் இத்தனையும் இருந்தும், இவ்வாறு படிக்கும், குறிப்பாக பாஸ்டருக்கு படிக்கும் அதாவது கிறிஸ்தவ புரோகிதர், பூஜாரி போன்ற பதவிக்காக படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள் என்றால் அவர்கள், அத்தகைய எண்ணத்தை இவ்வாறு கொள்கிறார்கள் அல்லது கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள், அச்செயலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஆராயவேண்டியுள்ளது. இப்பிரச்சினை பற்றி எல்லாம் மற்றவர்கள் ஏன் பேச வேண்டும் என்று கேட்கலாம். என்றாலும் இப்போது தேவையில்லாமல் எல்லா விஷயங்களுமே அரசியல் ஆக்கப்பட்டு, இது ஒரு பெரிய பிரச்சினை போன்று ஊடங்களால் மாற்றப்பட்டு வருகின்றன. அவற்றிலும் அவர்களது பங்கு உள்ளது. எனவே, இதனை போலித் தனம் என்று தான், சொல்ல வேண்டியுள்ளது.

Pastor -Martin,preventing pastor suicide-3

தமது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது இந்துக்களின் மீது பழி போடும் ஏமாற்றுவேலைபோலித் தனம்: இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மோடியை எதிர்க்க வேண்டும், பிஜேபியை குறை கூற வேண்டும், இந்து மதத்தை தாக்க வேண்டும், இந்து மக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த வேண்டும் என்றுதான் கிறிஸ்துவர்களும் மற்ற திராவிட நாத்திகர்கள் இவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம், கலாட்டா, செய்து கொண்டு வருகிறார்கள். உண்மையில் இவர்கள் எல்லாரும் தங்களுக்குள் இருக்கும் அசிங்கங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைப் பற்றி அலசிப் பார்க்க வேண்டும். இவர்கள் மற்றவர்களை பாசிஸ்டுகள் என்று வேறு கூறி வருகிறார்கள். உண்மையில், ஆணவம்-அதம்பாவத்துடன் ஒரு தனிப்பட்ட மனிதன் அல்லது குழு, தான் நினைப்பதுதான் சரி, அதை எதிர்த்து யாரும் பேச கூடாது என்ற கொள்கை உடைய சித்தாந்தம் மற்றும் தம் கருத்துகளை அடுத்தவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருப்பவர்கள் தான் பாசிஸ்டுகள் ஆகின்றனர். இவர்கள் தான் மற்றவர்கள் மீது தமது கருத்துக்களைத் திணிக்க முயல்கிறார்கள்.அதனால், இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது சனாதன மதம் வேரறுக்கப் படவேண்டும், இந்துக்களை ஒழித்துக்கட்ட வேண்டும், அவர்களுடைய கோவில்கள் இடிக்கப் படவேண்டும், என்று அரசியல் தலைவர்கள் தினம்-தினம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள், அது மட்டுமல்ல, இதே காலகட்டத்தில், அதாவது கிறிஸ்துவ மற்றும் துலுக்க மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் போது பேசுகிறார்கள்!

Pastor committed suicide vyasar padi, 22-10-2019

இன்னொரு பாஸ்டர் தற்கொலை செய்து கொள்வது: மறுபடியும், இன்னொரு பாஸ்டர் சர்ச்சில், சர்ச்-வளாகத்தில் 21-10-2019 அன்று இறந்திருக்கிறார். இது இயற்கையாகவே இருக்கலாம், தனிப்பட்ட விசயமாகக் கூட இருக்கலாம். ஆனால், அடிக்கடி நடப்பது கவலையாக, திகைப்பாக மற்றும் வித்தியாசமாக இருக்கிறது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் புனித அந்தோணியார் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது[2]. இந்த தேவாலயத்தில் கிளிம்டன் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார்[3]. இவருக்கு உதவியாக ஸ்ரீபெரும்புதூர் பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான மார்ட்டின் சௌரியப்பன் (Fr C Martin Sowriyappan வயது 37), என்பவர் உதவி பாதிரியாராக இருந்து வந்தார்[4]. M.Sc chemistry பட்டம் கொண்டவர், சென்னை பல்கலைக் கழகத்தில் மேற் படிப்பு பிஎச்.டி படித்து வந்தார்[5]. சர்ச்சில் உள்ள ஒரு அறையில் தங்கி படித்து வந்தார். விஞ்ஞானம் படிக்கும் மாணவனுக்கு, இறையியலில் நம்பிக்கையா அல்லது, சர்ச்சில் அறை இருக்கிறது என்று தங்கி இருந்தாரா என்று தெரியவில்லை.

Pastor -Martin,preventing pastor suicide-2

சர்ச்சுகளுக்கு, பாஸ்டர்களின் தற்கொலையை தடுக்க பொறுப்புள்ளது[6]: இதை பற்றி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, அவர்கள் தற்கொலை தடுக்க வழிமுறைகள் என்ன என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர் அவற்றிலும் சில முக்கியமான முடிவுகள் எடுத்துக் காட்டப் படுகின்றன[7]

  1. முதலில் விசுவாசம் என்று எப்படி தனக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோமோ, அதேபோல அந்த பாஸ்டருக்கும் அவனுடைய குடும்பத்தினர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  2. ஏதாவது விமர்சனம் வந்தால் அதை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
  3. குறைந்த பட்சம் மூன்று வாரம் ஒரு முறை அதாவது சம்பளத்துடன் கூடிய விடுமுறை ஒரு வருடத்தில் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவன் தனியாகவோ அல்லது தனது குடும்பத்தாருடனோ பொழுதை கழிக்க முடியும்.
  4. அதேபோல ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நான்கு மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்பட வேண்டும்.
  5. அவர்களுக்கும் ஆலோசனை கொடுக்கப் பட வேண்டும் அதாவது மனம்-உடல் ரீதியில் ஆலோசன மற்றும் ஆஹரவு கொடுக்கப் படவேண்டும்.
  6. சடங்குகள் முதலியவற்றில் அவருக்கே உரித்தான பணம் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

மேலே கூறியபடி சர்ச்சுகள் தங்களது விசுவாசிகளை ஒழுங்காக வைத்துக் கொண்டால் போதும். இந்தியாவில் மற்ற பிரச்சனைகளை தலையிட வேண்டிய அவசியமில்லை.

© வேதபிரகாஷ்

21-11-2019.

St Paul seminary- statue

[1]  They have been experts in hypnotism, mesmerism and other techniques. In fact, the rituals of confession, baptism and others have been part of their psychological methods adopted and adapted with the devotees.

[2]  தினத்தந்தி, வியாசர்பாடியில் தேவாலய வளாகத்தில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை, பதிவு: அக்டோபர் 23, 2019 04:00 AM

[3] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/23005728/At-the-church-complex-in-Vyasarpadi-The-priest-commits.vpf

[4] Times of India, Pastor found hanging on church premises, tnn | Updated: Oct 23, 2019, 4:13 IST.

[5]  https://timesofindia.indiatimes.com/city/chennai/pastor-found-hanging-on-church-premises/articleshow/71712356.cms

[6] வேதபிரகாஷ், மார்ட்டீன் சௌரியப்பன், ரசாயனத்தில் பிஎச்டி செய்யும் மாணவன், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?” கிருத்துவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது நல்லது!, அக்டோபர் 23, 2019.

[7] https://christianityindia.wordpress.com/2019/10/23/martin-sowriyappan-christian-pastor-committed-suicide-under-pressure-and-health-reasons/

நார்மன் பாஸ்கர், திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர், வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில் கைது!

மே 17, 2017

நார்மன் பாஸ்கர்,  திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர், வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில் கைது!

Trichy Norman Baskar arrested -VGP-16-05-2017-Vikatan photo.வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிட் மற்றும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபை நிலம் வாங்கவிற்க போட்ட ஒப்பந்தம்: தொடர்ந்து நடந்து வரும் கிறிஸ்தவ மோசடிகளில் இன்னொரு வழக்கு மூலம் விவரங்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் பணப்பரிமாற்றம், நிலம் அபகரிப்பு, முதலிய விவகாரங்களில் அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி, ஒருவர் மீது, ஒருவர் புகார் கொடுத்து, வழக்குகளும் போடப்படுகின்ற நிலை உண்டாகி விட்டது. கோடிகளில் பணம் இருக்கும் போது, எல்லாமே மறக்கப்படுகின்றன. இந்த திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை விவகாரமும் அப்படித்தான் உள்ளது. திருச்சி, கருமண்டபம் பொன்நகர் பகுதியில் இயங்கிவரும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான 70 சென்ட் இடத்தை, அந்தச் சபையின் தலைமைப் போதகர் மற்றும் முக்கியமான நிர்வாகிகள், சென்னையைச்  சேர்ந்த வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக ஒப்பந்தம் 2011ல் போடப்பட்டது.

Trichy Norman Baskar arrested 16-05-2017-Vikatan photo

ஒப்பந்தம் போட்டு, பணம் கொடுத்த பின்னர், இடம் மாற்றிக் கொடுக்கப் படாதலால் புகார், வழக்கு: அதன்பிறகு நடந்ததை, வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனத்தின் துணைத்தலைவர் தங்கையா நம்மிடம் விவரித்தார்[1], “இந்த .ஜி சர்ச் என்பது மிகப்பெரிய திருச்சபை. நாடு முழுவதும் அதற்கு கிளைகள் உள்ளன[2]. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள், சபையின் முக்கிய நிர்வாகிகள், ஒப்புதல் வழங்கியதாக ஆவணங்கள் கொடுத்ததன் அடிப்படையில், .ஜி சபைக்குச் சொந்தமான இடத்தை வாங்கிட 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டோம்[3]. அந்த ஒப்பந்தப்படி, 6 கோடியே 88 லட்சம் பணத்தை வங்கியின்மூலம், சபைக்கு நாங்கள்  செலுத்தியுள்ளோம். மேலும், நிலத்தை எழுதித் தரும்போது மீதமுள்ள ரூபாய் 12 லட்சத்தைத் தருவதாக தலைமை போதகர் நார்மன் பாஸ்கரிடம் கூறியிருந்தோம். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால், அவர்கள் சொன்னபடி, திருச்சபை நிலத்தை நார்மன் பாஸ்கர் எழுதிக் கொடுக்கவில்லை. நாங்கள் பலமுறை நேரில் கேட்டோம். ஆனாலும் இழுத்தடித்தார். இந்நிலையில்தான் கடந்த வருடம் எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலத்தை எழுதிக்கொடுக்காமல், மோசடிசெய்யும் தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மற்றும் சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ், ஸ்டீஃபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குத் தொடர்ந்தோம்.

 Norman Baskar arrested for fraud -17-05-2017

ஒப்பந்தம் போட்டவர்களில்  நார்மன் பாஸ்கர் தவிர மற்றவர் ஒதுங்கிக் கொண்டது: தங்கையா மேலும் விவரித்தார், “திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், நார்மன் பாஸ்கரைத் தவிர மற்றவர்கள் நார்மன் பாஸ்கர் தன்னிச்சையாக நிலத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும், இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறி முன் ஜாமீன் வாங்கினார்கள்[4]. நார்மன் பாஸ்கரின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதால், தலைமறைவானார்[5]. அடுத்து, அவர் சபையை விட்டு நீக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். எங்களுடன்  போடப்பட்ட ஒப்பந்தப்படி, நிலம் கொடுக்காமல் மோசடி செய்த தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நாங்கள் அடுத்தடுத்து எடுத்த முயற்சியின் காரணமாக, திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார் அவரைக் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்”” என்றார்[6].

Norman Baskar arrested for fraud -Trichy--17-05-2017

ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதும், நார்மன் பாஸ்கர் கைது: இதுகுறித்து விஜிபி நிறுவன திருச்சி கிளையின் துணைத் தலைவர் தங்கையா, 2016 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்போதைய திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு, மதபோதகர் நார்மன் பாஸ்கர் விண்ணப்பித்திருந்தார்[7]. இந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார், மதபோதகர் நார்மன் பாஸ்கரை 16-05-2017 செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்[8]. நார்மன் பாஸ்கர் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்[9]. என்றாலும் மதபோதகர் ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].

Norman Baskar AG--17-05-2017-facebook photo

திருச்சி நார்மன் பாஸ்கர் பின்னணி: பாஸ்டரான இவர், திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபையில் பிரபலமாக இருந்து வந்திருக்கிறரார். பேஸ்புக்[11], லிங்கெட்[12] என்று இணைதள செயல்பாடுகளில், தீவிரமாக இருந்து வந்திருக்கிறரார். பல கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், கொண்ட்டாட்டங்கள் என்று ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கில் கூட பிரச்சாரம் செய்துள்ளார். இளைஞர்களை வைத்து, சுற்றுல்லா, ஆட்டம், பாட்டம், கொண்ட்டாட்ட என்று நடத்தியுள்ளார். ஆனால், இந்த நில விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்டார் போலும். இருப்பினும், இவ்வாறான மோசடிகளை செய்ய இவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது என்று தெரியவில்லை. “தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது” என்றெல்லாம் செய்தி வந்தலும், எப்படி பொறுத்துப் போகிறார்கள் என்று தெரியவில்லை[13]. பரபரப்பு ஏற்பட்டது என்றாலும், நிலைமை என்ன என்று சொல்லவேண்டுமே[14]. பாதிரியாரே இப்படி செய்யலாமே என்று கேட்டாலும், தொடர்ந்து நடக்கும் போது, கருப்பு ஆடுகள் ஏன் வழிப்படுத்தப் படவில்லை என்பதும்  தெரியவில்லை[15]. ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து, பரிசுத்த ஆவி, மேரி, கர்த்தர் என்று யாரும் கவனிக்காமல் இருக்கிறார்கள், இவர் தொடர்ந்து இவ்வாறு அத்து மீறி மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[16].

VGP RAjadass arrsted for cheating - September 2010

விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் முன்னர் நிலமோசடியில் சிக்கிக் கொண்டது[17]: விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் விஜிபி. ராஜாதாஸ் (45) மறைந்த விஜிபி பன்னீர் தாசின் மகன். ஏ. எட்வின் கிரிஸ்டோபர் தனது மாமனார் எம். மரியதாஸ் கஸ்ரீஅப்பாக்கம் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை மூன்று லட்சத்திற்கு 1981ல் வாங்கியிருந்தார். அங்கு எறால் பண்ணை வைப்பதற்காக வங்கியிலிருந்து ரூ. 2.36 லட்சங்கள் கடன் வாங்கினார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால், சேர்ந்துவிட்ட ஐந்து லடசம் கடனைத் திருமப் பெற முடியாத நிலையில் 3 லட்சம் கொடுத்து ஏலத்தில் மீட்டார்.  2004ல் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டிற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தார். ஆனால், 27-04-2008 அன்று இறந்து விட்டார். அவ்வாறான நிலையில் பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது என்றபோதும், ராஜதாஸ் நிலத்தை தனது சித்தப்பாவான விஜி சந்தோஷத்திற்கு (75) “மார்க்கெட் விலைப்படி என்று ரூ.35 கோடிக்கு” விற்றிருக்கிறார். அவர் V G Panneerdas and Co Pvt Ltd ன் இயக்குனர் ஆவார். விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்[18]. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[19]. ஒருவேளை, இது தெரிந்ததால் வந்த தைரியமா? கர்த்தருக்குத் தான் வெளிச்சம்!

© வேதபிரகாஷ்

17-05-2017

Norman Baskar AG--wife-17-05-2017-facebook photo

[1] விகடன், 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது! , சி.. ஆனந்தகுமார், Posted Date : 05:34 (17/05/2017); Last updated : 07:48 (17/05/2017)

[2] நக்கீரன், 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக போதகர் கைது, பதிவு செய்த நாள் : 17, மே 2017 (9:32 IST); மாற்றம் செய்த நாள் :17, மே 2017 (9:32 IST)

[3] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=191566

[4] மாலைமலர், நிலத்தை விற்பதாக கூறி ரூ.7 கோடி மோசடி: திருச்சியில் கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 5 பேர் மீது வழக்கு, பதிவு: ஆகஸ்ட் 17, 2016 12:52

[5] http://www.maalaimalar.com/News/District/2016/08/17125251/1033058/Christian-priest-including-5-people-sued-for-rs-7.vpf

[6] http://www.vikatan.com/news/tamilnadu/89538-religious-preacher-arrested-in-trichy.html

[7] தினமணி, ரூ.6.88 கோடி மோசடி: மதபோதகர் கைது, Published on Wednesday, May 17, 2017, 01:41 [IST].

[8] http://www.dinamani.com/tamilnadu/2017/may/17/%E0%AE%B0%E0%AF%82688-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2703372.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நிலத்தை விற்பதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி.. பலே மதபோதகரை மடக்கிப் பிடித்த போலீசார், By: Amudhavalli, Published: Wednesday, May 17, 2017, 13:36 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/fraud-land-sale-christian-priest-arrested-282959.html

[11] https://www.facebook.com/trichycityag/

[12] https://in.linkedin.com/in/norman-bhasker-442b8735

[13] தமிழ்.முரசு, தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது , May 17, 2017.

[14]  http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107426

[15] அங்குசம், திருச்சி  கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது, May 17, 2017.

[16] http://angusam.com/2016/08/17/trichy-fraud-case-against-a-christian-paster-norman-basker/

[17]  https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/

[18] The Hindu, Held on charge of cheating, CHENNAI, SEPTEMBER 24, 2010 00:53 IST;  UPDATED: SEPTEMBER 24, 2010 00:53 IST

[19] http://www.thehindu.com/news/cities/chennai/Held-on-charge-of-cheating/article16044792.ece

 https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/

15-19ம் நூற்றாண்டு ஓவியத்தை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருவுருவம் என்று பொய் சொல்லி பிரச்சாரம் செய்யும் கிருத்துவர்கள்!

ஒக்ரோபர் 17, 2016

15-19ம் நூற்றாண்டு ஓவியத்தை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருவுருவம் என்று பொய் சொல்லி பிரச்சாரம் செய்யும் கிருத்துவர்கள்!

blessed-virgin-mary-by-pope-pius-ix-associated-with-a-celebrated-byzantine-icon-of-the-same-name-dating-from-the-15th-century

blessed-virgin-mary-by-pope-pius-ix-associated-with-a-celebrated-byzantine-icon-of-the-same-name-dating-from-the-15th-century

கிருத்துவர்களைப் பொறுத்த வரையில், எதையாவது ஒன்றை வைத்துக் கொண்டு, பெரிய கலாட்டா செய்து விடுவர். பொய் சொல்வதிலும், கள்ள ஆவணங்களை உற்பத்தி செய்வதிலும், மோசடிகளை செய்வதிலும், சரித்திர புரட்டல்களூக்கும் அவர்களூக்கு இணை அவர்கள் தான். ஆட்பலம், பணபலம், அரசியல்-செல்வாக்கு, ஆதரவு என்று எல்லாம் இருப்பதால், எதனையும் செய்யும் வேகமும் காணப்படுகிறது. தேவையென்றால், அனைத்துலக ரீதியிலும் அழுத்தத்தை ஏற்படுத்தி சாதித்துக் கொள்கின்றனர். அத்தகைய அதிரடி வேலைகளுக்கு, பிரச்சார சாமர்த்தியங்களுக்கு, இந்துக்கள் ஈடாக மாட்டார்கள். இப்பொழுது, சமூக வளைதளங்களில் மட்டும் ஏதோ, சில பதிவுகளை செய்து அடங்கி விடுகிறார்கள். ஆனால், கிருத்துவர்களோ தமது விசமத்தனமான, சரித்திர மோசடிகளை பலவழிகளில் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த வகையில், இப்பொழுது “சகாயமாதாவின் திருஉருவம்” என்று ஒன்று முளைத்துள்ளது.

our-lady-of-perpetual-help-1866-and-modified-painting

our-lady-of-perpetual-help-1866-and-modified-restored-painting

நகல், போலி, மாதிரி சித்திரம் வலம் வருவது: “சகாயமாதாவின் திருஉருவம் – 150வது ஆண்டு விழா” [150th year of Our Lady of Perpetual Succour icon] என்று உலகம் முழுவதும் கொண்டாட வாடிகன் முடிவெடுத்தது[1]. அதாவது 1325-1480 காலத்தில் கண்டெடுக்கப்பட்ட, இந்த ஓவியம், திருடப்பட்டு 1499ல் ரோமுக்கு எப்படியோ வந்து சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு மறுபடியும் காணாமல் போய் விட்டது, அல்லது அங்கேயே இருந்தது, போர்களில் அழிந்தது என்றெல்லாம் கதைகள் இருந்தாலும், அங்கேயே இருந்தது என்று வாடிகன் சொல்கிறது. 1866ல் அது பொது மக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது[2]. இப்பொழுது 150 ஆண்டுகள் ஆகியுள்ளதால், அதனை, உலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு, அனுப்பி காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பிரதிகள் எடுத்து அனுப்பப்பட்டன. ஜூன் 2016ல் முன்னோட்டமாக, மும்பையில் இது பற்றிய விழா நடத்தி உம்பை ஆர்ச்பிஷம் மூலம் டிவிடிகளும் வெளியிடப்பட்டன[3]. அத்தகைய 19ம் நூற்றண்டு சித்திரத்தின் நகல்கள் தான் அனுப்பப்பட்டன. அதில் ஒன்று, திருச்சி, மதுரை, கோவை என்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

history-of-icon-1866-2016

history-of-icon-1866-2016

இதற்கான இணைதளம் கூறும் விவரங்கள்[4]: ஜனவரி 19, 1866 – அருட்தந்தை மைக்கேல் Marchi மற்றும் எர்னஸ்டோ Bresciani இடைவிடாத உதவி எங்கள் தாய் ஐகான் சேகரிக்க எஸ் மரியா டி Posterula சென்றார். ஏப்ரல் 21, 1866 – சுப்பீரியர் பொது போப் பியஸ் IX ஒரு பரிசு வழங்கினார். ஏப்ரல் 26, 1866 – அதற்கான மீட்பு, போலிஷ் ஓவியர் லியோபோல்ட் Nowotny நடத்திய பிறகு, அதை மீண்டும் காட்சி,, மதிப்புப்பெறும் சர்ச் சாண்ட் என்ற ‘அல்போன்சோ உள்ள Esquiline மலை வைக்கப்பட்டது. ஜூன் 23, 1867 – நிலைத்த உதவி நம் தாய் படத்தை வலியுறுத்தி வத்திக்கான் அத்தியாயத்தின் டீன் மூலம் முடிசூட்டப்பட்டார். அதன் தேவாலயங்களில் ஒன்று இருந்து ஒரு அதிசயமான படம் திருடியது கிரீட் தீவு இருந்து ஒரு வணிகர் பற்றி நமக்கு சொல்கிறது என்று 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு பாரம்பரியம் உள்ளது. ஒரு வருடம் கழித்து, அவர் தனது திருடப்பட்ட படம் ரோம் வந்து. 1798 ஆம் ஆண்டு, போர் ரோம் லட்சம் மற்றும் மடங்களின் மற்றும் சர்ச் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.

perpetual help our lady graphic

perpetual help our lady graphic

2016 செப்டம்பரில் திருச்சிக்கு வந்தது: திருச்சி பாலக்கரையில் உலக மீட்பர் சகாயமாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதாவின் திருஉருவம் நேற்று கொண்டு வரப்பட்டது. அதில் சகாயமாதாவின் கையில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் அச்சத்தில் இருப்பது போன்றும், மாதா அவரது பயத்தை போக்கி அரவணைத்து கொள்வது போலவும் வரையப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் லூக்கா இந்த படத்தை வரைந்துள்ளார்[5]. பழமை வாய்ந்த மற்றும் அரிய ஓவியத்தை பார்வையிட கிறிஸ்தவர்கள் 28-09-2016 அன்று காலை முதலே ஆலயத்திற்கு வரத்தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சகாயமாதாவின் திருஉருவத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர். மக்கள் செல்வதற்கு வசதியாக ஆலயத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தன. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை சகாயமாதாவின் திருஉருவத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.

mary-painting-2000-years-old-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-17-10-2016

mary-painting-2000-years-old-Daily-thanthi-17-10-2016

2000 வருட ஓவியம் என்று திருச்சி பாதிரிகள் சொன்னது: இந்த அரிய திருஉருவ ஓவியம் குறித்து உலகமீட்பர் பசிலிக்கா ஆலயத்தின் பாதிரியார்கள் கூறியதாவது: “இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் இருந்த போது தாய் மாதா அவரை கையில் வைத்திருக்கும் போது நற்செய்தியாளர் லூக்கா நேரில் கண்டு வரைந்துள்ளார். இந்த திருஉருவம் வரையப்பட்டு 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இயற்கையான மூலிகைகளால் வரையப்பட்ட இந்த திருஉருவம் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது[6]. சகாயமாதாவின் இந்த தோற்றம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மேலும் இந்த தோற்றத்தால் மாதா இடைவிடா சகாயமாதா அன்னை என அழைக்கப்படுகிறார். இந்த தோற்றத்தில் இருக்கும் சகாயமாதாவை கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வழிபட தொடங்கினர்[7]. திருச்சியில் பசிலிக்கா ஆலயத்தில் கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இடைவிடா சகாயமாதாவின் பக்தி முயற்சி தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும், திருச்சியில் பசிலிக்கா ஆலயத்தில் 60-வது ஆண்டையொட்டியும் இடைவிடா சகாயமாதாவின் திருஉருவம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருஉருவத்தை ரோம் நகரில் இருந்து ரட்சகர்கள் சபை குருக்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் ஆலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மதுரையில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோவை ஆகிய ஊர்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது”. இவ்வாறு அவர்கள் கூறினர்[8].

mary-painting-150-years-old-the-church-where-it-is

mary-painting-150-years-old-the-church-where-it-is

கோவையிலும் அதே பொய்யைச் சொல்வது: அக்டோபரில் கோவைக்கு வந்தபோதும், அங்குள்ள பாதிரிகள் அதே பொய்யைக் கூறியுள்ளார்கள். ஊடகங்களும் தாராளமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. முட்டாள் இந்துக்கள் உண்மை அறியாமல், அந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டுள்ளனர். முகநூல் இந்துக்களைப் பற்றி சொல்ல வேண்டும். உண்மையை சொல்லாமல், ஷேர் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் படிப்பதில்லை, அறிந்து கொள்வதில்லை. அதனால் தான், அசட்டுத்தனமான அவர்களது எதிர்ப்பும் வீணாகிறது. வாடிகன் எதை செய்தாலும், திட்டமிட்டு செய்கிறது. ஆனால், எதிற்கும் இந்துக்கள் கண்மூடித்தனமாகத்தான் எதிர்க்கிறார்களே தவிர, அவர்களை போன்று முறையாக செய்வதில்லை. அதனால், தான் வாய் கூசாமல், மும்பை பிஷப் கூறியதை கூட யாருக்கு தெரியாது என்பது போல, தமிழகத்தில் உள்ள பாதிரிகள் கதை விடுகிறார்கள். ஊடகங்களும் அப்படியே செய்திகளை வெளியிட்டு வருகின்றது. அவர்களும், உண்மை என்ன, சரித்திரம் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை போலும். கவரை வாங்கிக் கொண்டு, கொடுத்த விவரத்தை அப்படியே செய்தியாகப் போட்டு விடுவார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

17-10-2016

holy-ghost-church-bangalore

holy-ghost-church-bangalore

[1] http://www.iconoflove.org/; http://www.iconoflove.org/asia-oceania.html

[2] Believed to have originated between 1325-1480 in Rome, the icon was stolen by a merchant and subsequently returned to Rome where it was first venerated by the public in 1499, and remained there for three centuries. Later, in 1866, Pope Pius IX — who had seen and prayed before the icon as a young boy — entrusted it to the Church of St. Alphonsus, ordered its public display and veneration at the church. It remain there since the past 150 years and attracts millions of pilgrims and tourists from all over the world.

Times of India, DVD marks 150th year of Our Lady of Perpetual Succour icon, IANS | Jun 27, 2016, 04.15 PM IST

[3] http://timesofindia.indiatimes.com/city/mumbai/DVD-marks-150th-year-of-Our-Lady-of-Perpetual-Succour-icon/articleshow/52938752.cms

[4] http://www.iconoflove.org/history-of-the-icon.html

[5] மாலைமலர், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருஉருவம்: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை, பதிவு: செப்டம்பர் 29, 2016 08:57.

[6] http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/09/29085732/1042010/2-thousand-years-ago-painted-sagaya-matha-image-Christian.vpf

[7] தினத்தந்தி, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருஉருவம் கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை, பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 11:07 PM IST, மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 29,2016, 4:15 AM IST.

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2016/09/28230754/2-thousand-years-ago-drawn-by-visiting-Christians.vpf

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (5).

செப்ரெம்பர் 8, 2015

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பதுஇவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றனகிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (5).

Mose Ministries Trichy - save our home propaganda

Mose Ministries Trichy – save our home propaganda

ஜேகப்பை ஆதரித்து இணைதளத்தில் பிரச்சாரம் (செப்டம்பர்.2015): இப்பொழுது ஏ. ஜேக்கபின் மகன் கிதியோன் ஜேக்கப் மாட்டிக் கொண்டதும், ஒரு ஜெர்மானியர், வக்காலத்து வாங்கியுள்ளார். கெர்ஹார்ட் பிளேஸ் [Gerhard Blache] என்பவர் ஜெர்மனியிலிருந்து ஜேகப்பை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார்[1]. அதிலிருந்து இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன. பாஸ்டர் கிடியோன் ஜேகப் மற்றும் அவருடைய மனைவி உதி / உதே[Ute] 1994லிருந்து உசிலம்பட்டியில் பல சிறுமிகளை / இளம் பெண்களை கவனித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோருமே இறக்கக் கூடிய நிலையிலிருந்து, பிறந்தவுடன் காப்பாற்றப் பட்டு வளர்க்கப்பட்டவர்கள். இந்த மாவட்டத்தில் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்துவதால், பெண்சிசு வதை நடப்பதாக ஊடகங்கள் எடுத்துக் காட்டின. அவர்களைக் காப்பதற்கு தான் கிடியோன் ஜேகப் இந்த இல்லத்தை ஆரம்பித்தார். 1988ல் இது திருச்சிக்கு மாற்றப்பட்டது[2]. இவர் ஜெர்மனியில் பல்லாண்டுகள் வாழ்ந்தவர். அந்த 89 பெண்களுக்காக பாடுபட்டவர். இன்று சட்டத்தின் கீழ் அப்பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால், அதைத் தடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் என்று இணைதளத்தில் அக்கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்[3].  இந்தியாவில் நடக்கும் விவகாரங்களில், இவர் இப்படி தலையிட்டுள்ள நிலையில், ஜேக்கப் மற்றும் இதர கிறிஸ்தவர்கள் இந்தியாவில் செய்து வரும் கொடுமைகளைப் பற்றி ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்?  இருபக்கமும் விசாரிக்க வேண்டும் என்றுள்ளது எனும்போது, தனது நண்பரிடத்திலிலும் இதைப் பற்றி கேட்டிருக்கலாமே? மேலும், ஜேக்கப் ஜெர்மனிக்கே போய்விட்டார் என்றும் செய்திகள் சொல்வதால், அவரிடமே நேரில் கேட்டு விசாரித்துக் கொள்ளலாமே? ஏன் பல்லாண்டுகள் ஜெர்மனியில் வாழ்ந்தபோது, ஜேக்கப் எப்படிப்பட்டவர் என்று கெர்ஹார்ட் பிளேஸுக்குத் தெரியாதா?

Mose Ministries Trichy - save our home propaganda by Gerhard Blache

Mose Ministries Trichy – save our home propaganda by Gerhard Blache

உசிலம்பட்டி விவகாரத்தை ஜெர்மானிய நண்பர் ஒப்புக்கொண்டது: இங்கும் உசிலம்பட்டி விவகாரத்தை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டது நோக்கத்தக்கது[4]. ஜெர்மானிய ஆதரவாளரே அவ்விரங்களைக் கொடுத்துள்ளதால், இனி உள்ளூர்வாசிகள் கொடுத்துள்ள புகார்களில் உள்ள விவகாரங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் இயங்கி வரும் மோஸே மினிஸ்ட்ரீஸ் மற்றும் லவ் அண்டு கேர் 333 இந்தியா குழந்தைகள் காப்பகங்களில், உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திடுக்கிடும் தகவல், ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேரடி ஆய்வில் தெரிய வந்தது[5]. மேலும் அந்த குழந்தைகளை, சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியதும் அம்பலமானது.  இதற்கெல்லாம் அந்த நண்பர் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. மேலும், இவையெல்லாமே, ரசுல் ராஜ் விசயத்தில் அலசியுள்ள விவகாரங்களை ஒத்துள்ளதை கவனிக்கலாம். சென்னை பிரபுதாஸ், ரசுல் ராஜ், திருச்சி, என்று இவ்விடங்களில் விசாரணை மேற்கொண்டதில், உசிலம்பட்டி விவகாரத்துடன் இணைந்துள்ளது தெரியவருகிறது. எனவே, குழந்தைகளைக் காப்பது, வளர்ப்பது, டீன்-ஏஜிலிருந்து செக்ஸில் ஈடுபடுத்துவது, பாலியல் ரீதியில் தொந்தரவு செய்வது, கற்பழிப்பது என்ற அதே முறை இதிலும் வெளிப்படுகிறது. பெண்களைக் காக்கிறோம் என்ற போர்வையில், இந்திய பெண்களை சீரழிக்கிறார்கள் என்று தான் தெர்கிறது.  இந்நிலையில் இந்தியப் பெண்களைப் பற்றி, ஒரு ஜெர்மானிய பெண்மணி, குறிப்பாக ஜேகப்பின் நண்பர் எழுதியிருப்பதும், அவர்களது மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது.

Mose Ministries Trichy - Gideon Jacob

Mose Ministries Trichy – Gideon Jacob

உசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜெரார்ட் பிளாஸெவின் இணைதள பிரச்சாரம் செப்டம்பர் 2015

ஜெரார்ட் பிளாஸெவின் இணைதள பிரச்சாரம் செப்டம்பர் 2015

தொட்டில் குழந்தை திட்டமும், மிஷனரிகளும்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில்  நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[6]:

  • சேலம் – 851 லிருந்து 917
  • மதுரை – 926 லிருந்து 939
  • தேனி – 891 லிருந்து 937
  • திண்டுக்கல் – 930 லிருந்து 942
  • தருமபுரி – 826 லிருந்து 911

அப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[7].  அத்தகைய தத்தெடுப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[8]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[9].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[10]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[11].

வேதபிரகாஷ்

© 08-09-2015

[1] https://www.change.org/p/the-district-collector-of-trichy-india-the-prime-minister-of-india-new-delhi-the-president-of-india-new-delhi-the-minister-of-foreign-affairs-new-delhi-the-minister-of-women-child-develop-urgent-request-to-oppose-the-actions-of-the-department-of-soci

[2] மேலே கிதியோன் ஜாய் 1990ல் உசிலம்பட்டியில் ஆரம்பிக்கப் பட்டது என்கிறார். இவரது கணக்கின் படி 1998ற்கு முன்பே அசிலம்பட்டியில் காப்பகம் ஆரம்பிக்கப்பட்டது என்றாகிறது. இல்லையென்றால், 1988ல் திருச்சிக்கு மாற்றப்பட்டிருக்காது.

[3] http://good-shepherd-online.net/en/

[4] Over the past years we have been following with great interest the efforts of Pastor Gideon Jacob and his wife Ute (Trichy, Tamil Nadu), who since 1994 have been involved in looking after many small girls in Usilampatti. Most of these children were taken in immediately after their birth and have been saved from an almost certain death. As is widely reported in the media, this district has in the past been known for the fact that especially high numbers of female infants fall victim to the illegal dowry practice.

[5] நியூஸ்.7.டிவி, வேலியே பயிரை மேய்ந்த கதையாகும் குழந்தைகள் காப்பகங்கள், Updated on August 26, 2015.

[6] http://www.dinamani.com/tamilnadu/article767703.ece

[7] http://www.maalaimalar.com/2012/03/05174840/Cradle-Child-Centre-in-Dharmap.html

[8]https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/

[9]https://christianityindia.wordpress.com/2010/05/25/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/

[10]Hindusthan times, CBI wants to probe adoption case again, Sep.11 2009, http://www.hindustantimes.com/CBI-wants-to-probe-adoption-case-again/Article1-452521.aspx

http://ibnlive.in.com/tag/topic/Preet+Mandir.html

http://ibnlive.in.com/news/cbi-confirms-cnnibns-report-on-illegal-adoption/54491-3.html

http://ibnlive.in.com/CBIReport_full1.pdf

[11] Times of India, Juvinile Act provides for Adoption: HC, http://timesofindia.indiatimes.com/NEWS/City/Chennai/Juvenile-Act-provides-for-adoptions-HC/articleshow/4831787.cms

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (4).

செப்ரெம்பர் 8, 2015

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பதுஇவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றனகிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (4).

Mose Ministries- Trichy - Gideon Jacob evangelist

Mose Ministries- Trichy – Gideon Jacob evangelist

காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் கூறிய விவரங்கள்: காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாவது: “கடந்த, 1990ம் ஆண்டு உசிலம்பட்டியில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, குழந்தைகள் மீட்பு மையம் துவக்கினோம். இதில், 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர். அதில், இரண்டு பெண் குழந்தைகள், நோய் பாதித்து இறந்து விட்டனர். குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை, அவர்களது பிறந்த நாளாக கணக்கிட்டு, பதிவு செய்தோம். இந்த குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் கிடையாது. உசிலம்பட்டி மையத்தில் இருந்த குழந்தைகளை, கடந்த, 1994ம் ஆண்டு திருச்சியில் துவங்கப்பட்ட மோஸ் மினிஸ்ட்ரீஸ் காப்பகத்துக்கு அழைத்து வந்தோம்”, இவ்வாறு, அவர் கூறினார். 1990, 1989 மற்றும் 1997 வருடங்கள் என்றாலே, அவ்வருடங்களில் சேர்க்கப்பட்ட பெண்குழந்தைகளுக்கு இப்பொழுது வயது முறையே 25, 26 மற்றும் 18 என்று வருகிறது. மேலும் 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர், எனும்போது, குழந்தைகள் மீட்பு மையம் துவங்குவதற்கு முன்னரே, குழந்தைகள் அவர்களிடத்தில் இருந்த என்றாகிறது.பிறகு குழந்தைகள் அவர்களிடத்தில் எவ்வாறு ஒப்படைக்கப்பட்டனர் என்று புரியவில்லை.

மோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015.- காத்துக் கிடக்கும் அதிகாரிகள்

மோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015.- காத்துக் கிடக்கும் அதிகாரிகள்

காப்பகத்திலிருந்து சிறுமிகள், பெண்கள் வெளியே வர மறுப்பு: காப்பகத்தில், 02-09-2015 அன்று மாலை, 3.30 மணிக்கு விசாரணை முடித்த, குழந்தைகள் நலக்குழுவினர், அரசு மருத்துவக்குழுவினரை வரவழைத்து, குழந்தைகளின் உடற்கூறுகளை ஆய்வு செய்து, அவர்களின் வயதை உறுதி செய்தனர். தொடர்ந்து, போலீஸ் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட சமூகநல அலுவலர் உஷா, திருச்சி கிழக்கு தாசில்தார் சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறையினர் காப்பகத்துக்கு வந்தனர். அவர்கள் காப்பகத்தில் உள்ள நிலையை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி, வேறு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும், குழந்தைகள் அனைவரும், காப்பகத்தில் இருந்து வெளியேற மறுத்து விட்டு, அங்கேய ஜெபம் செய்யத் துவங்கினர்[1]. மனோதத்துவ நிபுணர், மனவியல் மருத்துவர் மற்றும் குழந்தை மருத்துவர் என்று மூவர் அடங்கிய குழு அச்சிறுமியர் மற்றும் இளம்பெண்களிடம் பேசி, அறிவுரை கூறியுள்ளனர்[2]. ஆனால் எந்த பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்குட்பட ஒப்புக்கொள்ளாவில்லை என்று டாக்டர். பிரனேஸி கூறினார். மாலை, 6.30 மணிவரை பேச்சுவார்த்தை நடத்தியும் குழந்தைகள் வெளியேற மறுத்து விட்டதால், அரசு துறை அதிகாரிகளும், போலீஸாரும் செய்வதறியாமல் காப்பகத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

Good Shepherd World Prayer Centre - Trichy - Gideon Jacob evangelist

Good Shepherd World Prayer Centre – Trichy – Gideon Jacob evangelist

பென்டகோஸ்ட் மூளைசலவை முறைகள் சிறுமியர் மற்றும் இளம்பெண்களை பாதித்துள்ளதா?: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி சமூக நலத்துறை அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, காப்பக நிலைமையை குறித்து குழந்தைகளிடம் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவர்களை வெளியே கொண்டு வந்தால் தான் காப்பகத்துக்கு சீல் வைக்க முடியும் என்றார்[3]. குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி கூறுகையில, காப்பகத்திலிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டவுடன், பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தைகள் மாத்துாரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில், படிக்கும் குழந்தைகள் அந்தந்த பள்ளி அருகே உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்படுவர் என்றார்[4]. முதலில் சிறுமியர் மற்றும் இளம்பெண்கள் மருத்துவ பரிசோதனைக்குட்பட தயங்கினர், மறுத்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[5]. அப்படியென்றால், அவர்களை அவ்வாறு பணித்துள்ளனர் என்றாகிறது. பென்டகோஸ்ட் கிறிஸ்தவர்கள் உடம்புக்கு அசௌகரியம் வந்தால், மருந்து-மாத்திரை சாப்பிடக் கூடாது, ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டும், அப்படியிருந்தால், கர்த்தர் கிருபையினால் நோய்-நொடி எல்லாமே பறந்து போய்விடும் என்று மூளைசலவை செய்து வைத்திருப்பது வழக்கம். எனவே அம்முறையில் அவர்கள் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் போலும். அல்லது அந்த கல்லூரி மாணவர்களின் ஆய்வில் வெளியானது போல, அப்பெண்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ ஆய்வில் தெரிந்து விடும் என்றதால், காப்பக அதிகாரிகள் மிரட்டி வைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும், பெந்தகோஸ்தே நம்பிக்கை இவர்களை ஆட்டிப்படைக்கிறது என்று தெரிகிறது.  அத்தொடர்பும் ஒரு ஜெர்மானிய மிஷனரியின் புத்தகத்திலிருந்து தெரிய வருகிறது.

Mose Ministries- Trichy - Gideon Jacob evangelist carries on the work of his father

Mose Ministries- Trichy – Gideon Jacob evangelist carries on the work of his father

ஜெர்மானிய தொடர்பு எப்படி வேலை செய்கிறது[6]: மைக்கேல் பெர்குன்டே என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன. அவர் எழுதியுள்ளதாவது, “கார்ல் பெக்கர் [Karl Becker] 1972ல் . ஜேகப்பை [A. Jacob] திருச்சியில் சந்தித்தார். அவர் மூலமாக பென்டகோஸ்டல் மிஷன் வளர்க்க முயற்சி செய்தார். அதற்காக நிதியுதவி கொடுத்து சைலோம் [Siloam] என்ற சர்ச் மற்றும் இயக்கம் உருவாக்க பாடுபட்டார். ஜேகப்பிற்கு ஒரு ஜெர்மானிய பெண்ணையும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது. 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது. அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு . ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேக்கப் தொடர்ந்து செய்து வருகிறார்.”

Gideon Jacob evangelist carries on the work of his father A. Jacob

Gideon Jacob evangelist carries on the work of his father A. Jacob

1972 முதல் 1980 வரை ஜேக்கப் விவகாரத்தில் நடந்தவை: ஆக, அந்த ஜெர்மானிய தொடர்புகளில் இங்கு தெரிய வரும் விவரங்கள்:

1.       1972ம் ஆண்டு கார்ல் பெக்கர் என்ற ஜெர்மானிய மிஷனரி, ஏ. ஜேக்கப் என்ற, கிதியோன் ஜேக்கப்பின் தந்தையை திருச்சியிக் சந்தித்தார்.

2.       சைலோம் என்ற தனது சர்ச்சை அங்கு ஆரம்பிக்க, ஏ. ஜேக்கப்புடன் பேசியுள்ளார்.

3.       ஒப்புக் கொண்டவுடன், அவருக்கு நிதியுதவியும் செய்துள்ளார்.

4.       ஏ. ஜேக்கப் ஒரு ஜெர்மானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றால், அவர் ஜெர்மனிக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது அப்பெண்மணி இங்கு வந்திருக்க வேண்டும்.

5.       ஏ. ஜேக்கப் பல கம்பெனிகளை ஆரம்பித்தார், அதாவது, ஜெர்மனியிலிருந்து நிதியுதவி நன்றாகவே கிடைத்துள்ளது.

6.       ஆனால், ஒருவேளை ஏ. ஜேக்கப் கார்ல் பெக்கரிடம் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை போலும், அதனால், “அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது”, என்று நொந்து கொள்கிறார்.

7.       ஏ. ஜேக்கப்பின் நிறுவனங்களில் அந்நிய-நிதியுதவி, அவற்றின் போக்குவரத்து கணக்கு, பணம் கையாடல், வரியேப்பு போன்றவை நடந்துள்ளது போலும்.

8.      அதனால், 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்று கார்ல் பெக்கரே குறிப்பிடுள்ளார்.

9.       இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது”, என்று புலம்பியுள்ளார்.

10.   அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை”,. என்றும் கார்ல் பெக்கர் ஒப்புக்கொள்கிறார். ஜெர்மனியில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

11.    பிறகு . ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேக்கப் தொடர்ந்து செய்து வருகிறார்’, அப்படியென்றால் 1980களுக்குப் பிறகும், நிதியுதவி தொடர்ந்துள்ளது என்றாகிறது.

பொதுவாக ஜெர்மானிய மிஷனரிகள் நேரிடையாக இத்தகைய காரியங்களில் ஈடுபடாது என்றலும், இப்பொழுது இவ்வாறு தீவிரமாக வேலை செய்வது கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஜீஜன்பால்கு வந்தபோதே, பற்பல சர்ச்சைகளில், பாலியல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டு, திரும்ப அழைக்கப்பட்டனர்.

வேதபிரகாஷ்

© 08-09-2015

[1] தினமலர், அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் சோதனை: வேறு காப்பகத்துக்கு மாற மறுத்து குழந்தைகள்அடம், செப்டம்பர்.4, 2015.07:05.

[2] Secondly, the District Social Welfare officer S Usha and District Child Protection Officer, Saravanan, held a discussion with the staff of the home, after which they roped in a Psychologist, Psychiatrist and Pediatrics. Joint Director of Health Service (JDHS), Dr Bhiranesi told Express that they sent a medical team after DSW office communicated them, as it was necessary. “We received a communication and sent a three-member doctor team as per request,” she said, adding that she learnt that no child was willing to go for the medical check up.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Home-With-55-Minor-Girls-to-be-Shut-For-Improper-Records/2015/09/04/article3009626.ece1

[3] தினகரன், தனியார் காப்பகத்துக்கு சீல் வைப்பதில் இழுபறி, பதிவு செய்த நேரம்:2015-09-05 11:53:38.

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=487507&cat=504 .

[5] The premises of the home, which was expected to be sealed on Thursday evening, was tense till around 8 pm, as the children showed reluctance in undergoing medical check up and move to other places making the officials’ efforts futile.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Home-With-55-Minor-Girls-to-be-Shut-For-Improper-Records/2015/09/04/article3009626.ece1

[6]  Michael Bergunde, The South Indian Pentecostal Movement in the Twentieth Century, Wm.B. Eerdmans Publishing Co., U.K, 2008,  p.76.

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).

செப்ரெம்பர் 8, 2015

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பதுஇவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றனகிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).

மோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015

மோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015

கிதியோன் ஜேக்கப் காப்பகம், விசாரணை, தலைமறைவு (செப்டம்பர்.2015): திருச்சி சுப்பிரமணியபுரம், அண்ணாநகர், முதல் தெருவில் மோஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் [ஆகஸ்ட்.2014] திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் உஷா ஆய்வு செய்தார். அரசு அனுமதியின்றியும், குழந்தைகளின் விவரங்கள் முழுமையாக இல்லாமலும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் இல்லாமலும் காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது. இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு காப்பகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஜேக்கப் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் விவரங்களைக் கேட்டு எப்பொழுது சென்றாலும் ஒத்துழைக்காமல், வேண்டுமென்றால் புகார் கொடுத்து அந்த இல்லத்தையே மூடிவிடுங்கள் என்று தூண்டியுள்ளனர். ஓராண்டாகியும் உரிய பதில் அளிக்காததால், சமூக நல அலுவலர் உஷா முறைப்படி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணைக்குப் பிறகு, உண்மை விவரங்கள் தெரிய வந்ததால், அரசு அனுமதியின்றியும், இளைஞர் நீதிச் சட்டத்தை பின்பற்றாமலும் காப்பகத்தை நடத்தியதாக அதன் நிர்வாகி கிதியோன் ஜேக்கப் மீது அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. உள்ள சட்டங்களில் பல பிரிவுகளை மீறி அந்த காப்பகம் உள்ளதாக தெரிந்தது. இதனால், தமிழ்நாடு ஹாஸ்டல் மற்றும் பெண்கள் சிறார் இருப்பிடம் முறைப்படுத்தும் சட்டம் 2014 மற்றும் இளம்சிறார் நீதி சட்டம் 2000 முதலியவற்றின் பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது[2], வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன[3].

Gideon Jacob - photo

Gideon Jacob – photo

தலைமறைவான ஜேக்கப், ஆனால், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படல்: போலீஸ் விசாரணை என்று வந்த பிறகு, ஜேக்கப் மறைந்தது விசித்திரமாக உள்ளது. கிதியான் ஜேக்கப் மெத்தப் படித்தவர், பல பட்டங்களைப் பெற்றவர், பல நாடுகளுக்கு விஜயம் செய்தவர், ஜெர்மனி-ஹாம்பர்கில் கூட வாழ்ந்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி விவரிக்கப்படுகின்றன. அத்தகையவர் எப்படி மறைந்தார் என்று தெரியவில்லை. இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது, என்ற விசயமும் தெரிய வந்தது. இதுபற்றி கே.கே.நகர் போலீஸாரிடம் கேட்டதற்கு, “நாங்கள் நடத்திய விசாரணையில் 89 குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கிதியோன் ஜேக்கப்பை தேடி வருகிறோம். அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளோம்” என்றனர்[4]. பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு, இவ்வாறு செய்கிறார்கள் போலும். ரசுல் ராஜ் விசயத்திலும், இது போலவே, நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது நினைவில் கொள்ளலாம்.

New Year 2014 - Good Shepherd World Prayer Center, Trichy - girls singing at

New Year 2014 – Good Shepherd World Prayer Center, Trichy – girls singing at

நியூஸ்.7.டிவி தரும் விவரங்கள்[5]: வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது பழமொழி. குழந்தைகள் காப்பகங்களில் தங்கியுள்ள குழந்தைகள் விஷயத்தில் அது தொடர்கதையாகி வருகிறது. குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மாணவர்கள் சொல்வது என்ன? இனியாவது விழித்துக் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள்?  திருச்சி மற்றும் மதுரையில் இயங்கி வரும் மோஸே மினிஸ்ட்ரீஸ் மற்றும் லவ் அண்டு கேர் 333 இந்தியா குழந்தைகள் காப்பகங்களில், உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திடுக்கிடும் தகவல், ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேரடி ஆய்வில் தெரிய வந்தது. ஆனால், எந்த கல்லூரி என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த குழந்தைகளை, சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியதும் அம்பலமானது. அங்கிருந்த 2 குழந்தைகளின் தற்போதைய நிலை பற்றி தகவல் இல்லை.  இங்கெல்லாம் “குழந்தைகள்” என்று குறிப்பிடப்பட்டவர்கள் எல்லோரும் “டீன்-ஏஜ்” பெண்கள் ஆவர்.

Good Shepherd World Prayer Center, Trichy - girls dancing

Good Shepherd World Prayer Center, Trichy – girls dancing

சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகள்: இந்த காப்பகங்கள் பற்றி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகளை அடுத்து, சமூக நல அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு நடத்தினர். இதுபோன்ற கண்துடைப்பு ஆய்வு மட்டும் போதாது என்று சொல்லும் பாடம் நாராயணன், அங்குள்ள குழந்தைகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இவர் தொடுத்துள்ள வழக்குகள் பற்றிய விவரங்களும் கிடைக்கவில்லை. திருச்சி காப்பகத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவர்.  இதே போல், மதுரை காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவியும், காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்கூடாகப் பார்த்ததாகக் சொல்கிறார்.  இந்நிலையில், திருச்சி காப்பகத்தை நடத்தி வந்த ஜேக்கப் ஜெர்மனிக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. இப்போதாவது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழந்தைகளைக் காப்பாற்றுவார்களா என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Mose Ministries Trichy - CWC official enter to verify 02-09-2015

Mose Ministries Trichy – CWC official enter to verify 02-09-2015

02-09-2015 அன்று குழந்தை சமூகநலத்துறை அதிகாரிகள் விஜயம் செய்தது: திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்ட, மோஸே தொண்டு நிறுவன காப்பகத்தில், 02-09-2015 அன்று, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். அதில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கான ஆவணங்கள் முறையாக இல்லாததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காப்பகத்தில் இருந்த குழந்தைகளை வேறு காப்பகத்துக்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்[7]. இந்நிலையில், 02-09-2015 அன்று மதியம், 12.30 மணிக்கு காப்பகத்துக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி மற்றும் அதிகாரிகள், காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், குழந்தைகளுக்கான கல்வி ஆலோசனை அலுவலர் ஜெசி இன்ஃபெண்டா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திரா காந்தி, காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் மற்றும் காப்பகத்தின் கல்வி ஆலோசனை அலுவலர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். ஆனால், காப்பகத்தை நிர்வகித்து வந்தவர்கள், கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.

வேதபிரகாஷ்

© 08-09-2015

[1] தமிழ்.இந்து, புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம், Published: September 3, 2015 09:14 ISTUpdated: September 3, 2015 10:15 IST.

[2] As the home failed to reply to the notice issued in May 2015, a complaint was lodged with the K.K. Nagar police station seeking to rescue the children and register a case against the home. Upon conducting a preliminary inquiry, the K.K. Nagar police booked a case against the founder of the Home Gideon Jacob under the Juvenile Justice Act, 2000. The case was booked under Section 20 (2) of the Tamil Nadu Hostels and Homes For Women and Children (Regulation) Act, 2014 and under section 23 of the Juvenile Justice Act, 2000.

http://www.thehindu.com/todays-paper/tiruchi-childrens-home-asked-to-hand-over-minor-girls-to-cwc/article7614736.ece

[3] http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/case-booked-against-founder-of-unregistered-children-home/article7593240.ece

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-89-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7610572.ece

[5] நியூஸ்.7.டிவி, வேலியே பயிரை மேய்ந்த கதையாகும் குழந்தைகள் காப்பகங்கள், Updated on August 26, 2015.

[6] http://www.ns7.tv/ta/india-childrens-homes-children-sexually-harassed-startling-information.html

[7] http://www.dinamalar.com/district_detail.asp?id=1334358