Archive for the ‘சி.எஸ்.ஐ’ Category

திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ் – மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (2)

ஓகஸ்ட் 29, 2017

திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ்மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (2)

Caldwell conference- Avvai college - 28-08-2017-vaikunda sami member

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி திருமண்டலம், அவ்வை நுண்கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து கருத்தரங்கை நடத்தியது: தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் நினைவேந்தல்-கருத்தரங்கம், பாளையங்கோட்டையில் 28-06-2017 திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. “அயர்லாந்தில் 1814-இல் பிறந்த ராபர்ட் கால்டுவெல், திராவிட மொழிகள் மீது அளவுகடந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளைப் புரிந்தவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் தங்கி இருந்து தமிழ்ப் பணியாற்றினார். இவர் ஆங்கில மொழியில் உருவாக்கிய ஒப்பிலக்கணம் உலகப் புகழ் பெற்ற நூலாகும். திருநெல்வேலி திருமண்டல முதல் பேராயராகவும் இருந்தவர். இவரது நினைவேந்தல்கருத்தரங்கம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஆக.28ஆம் தேதி நடைபெறுகிறது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி திருமண்டலம், அவ்வை நுண்கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து இக் கருத்தரங்கை நடத்துகின்றன,” என்று தினமணி செய்தி வெளியிட்டது[1]. ஆனால், இங்கு “திருநெல்வேலி திருமண்டலம்” என்று குறிப்பிட்டது, கிருத்துவ நிறுவனம் ஆகும். திருநெல்வேலி டையோசிஸ் டிரஸ்ட் அசோஸியேசன் [Tirunelveli Diocesan trust Association (TDTA)] என்ற பெயரில் ஒரு சங்கத்தை வைத்து, பல காரியங்களை செய்து வருகின்றது. அதில் பைபிளைப் பரப்புவது, மதமாற்றம் செய்வது என்பது தான் குறிக்கோளாக உள்ளது. ஆகவே, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மற்றும் அவ்வை நுண்கலைக் கல்லூரி இதனுடன் சேர்ந்து இவ்வாறு கருத்தரங்கம் நடத்தியுள்ளது விசித்திரமாகவும், திகைப்பாகவும் உள்ளது.

Caldwell conference- Avvai college - 28-08-2017-samiyar speech

கிருத்துவ ஆதிக்கம், சார்பு மற்றும் அழுத்தம் கொண்ட கருத்தரங்கமாக இருந்தது: இக் கருத்தரங்குக்கு ஓவியர் சந்ரு தலைமை வகிக்க, பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் அ. ராமசாமி, வரலாற்றுத் துறை தலைவர் ராமசுப்பிரமணியன், சாராள் தக்கர் கல்லூரி செயலர் சாம்சன் பால்ராஜ், தூய யோவான் கல்லூரி செயலர் ஜார்ஜ் கோசல் ஆகியோர் முன்னிலை வகிக்கி,. திருமண்டல தொடர்புத் துறை இயக்குநர் கிப்சன் ஜான்தாஸ் வரவேற்க, இக்கருத்தரங்கத்தை பல்கலைக் கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் தொடங்கி வைக்க, தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்துரை வழங்க, கருத்தரங்கில் கால்டுவெல் வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் மார்பளவு சிலை வெளியிடப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் வெளியிட, இந்தியத் தொல்லியல் துறை ஆணையர் பா. அறவாழி பெற்றுக் கொண்டார். அ.சேவியர், எம்.எஸ்.தங்கம் எழுதிய கால்டுவெல் வாழ்வும், பணியும் என்ற நூலை பல்கலைக் கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளியிட்டார். கிருத்துவர்கள் கருத்தரங்கங்கள் நடத்துவது ஒன்றும் ஆச்சரியமான விசயம் இல்லை, ஆனால், பல்கலை, கல்லூரி என்ற நிலைகளில் இவ்வாறு நடத்துவது திகைப்பாகவும், உள்நோக்கம் இருப்பதும் தெரிகிறது.

Vinod Vincent Raj - history asst.prof suspended-MSU

பாலியல் புகாரில் மனோன்மணியம் பல்கலைக் கழகம் முதலியன: சமீபகாலத்தில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படும் போது, தைரியமாக, வெளிப்படையாக வந்து புகார் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம், பயந்து புகார் கொடுக்காமல் இருந்தார்கள். இப்பொழுது கூட, பாலியல் தொல்லை, தொந்தரவு, சில்மிஷம் செய்யும் ஆண்கள் தங்களது தகுதி, அதிகாரம், பொறுப்பு முதலியவற்றைக் கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்து, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டவும் செய்து வருகிறார்கள். உதாரணங்கள் டெஹல்கா தருண் தேஜ்பால், தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி ஷதீஷ்குமார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் பழனிச்சாமி முதலியோர்[2]. சமீப காலத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கிருத்துவ நிறுவனங்கள் பல சர்ச்சைகளில் சிக்கி செய்திகள் வெளிவந்துள்ளன. பாலிய புகார்கள் பற்றிய விவகாரங்கள் மனோன்மணியம்பல்கலையில் அதிகமாக உள்ளன. பாலியல் தொந்தரவு மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரையடுத்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்[3]. போதாகுறைக்கு, இதில் பங்கு கொண்ட பாதிரிகள் சென்ற மாதங்களில் பணப்பிரிப்பு, கையாடல், அடிதடி, போலீஸாரிடம் புகார் என்றெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆக அத்தகையோரை வைத்து கருத்தரங்கம் நடத்தியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மாணவ-மாணவியர் இவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்பது புதிராக உள்ளது.

Billi, Stephen Selvinraj, involved in fund-sharing-10-05-2017

பில்லி, ஸ்டீபன் செல்வின்ராஜ் முதலியோர் போலீஸாரிடம் புகார் கொடுத்தது: நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல உதவி தலைவர் பில்லி, குருத்துவ செயலாளர் ஸ்டீபன் செல்வின்ராஜ் ஆகியோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது[4]: “நாங்கள் கடந்த 23.04.2017 அன்று நடந்த திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்று நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். 2.05.2017 அன்று திருமண்டல அலுவலகத்தில் உள்ள எங்கள் அறையில் அமர்ந்திருக்கும் போது, பாலபாக்கிய நகர் எடிசன், காமராஜ் நகர் மனோகர், ராமையன்பட்டி நேத்தன் மோசஸ், என்ஜிஓ பி காலனி ஜான்தினகர், நாங்குநேரி ராபர்ட் ஜெபக்குமார் மற்றும் அடையாளம் காட்டக்கூடிய சில நபர்கள் கூட்டமாக வந்து, எடிசன் என்பவரை நிர்வாக அலுவலராக பேராயர் நியமித்திருப்பதாகவும், அவருக்கு எதிராக செயல்படுவது யாராக இருந்தாலும் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினர். பாதிரியார் பில்லியின் அங்கியை பிடித்து இழுத்து அடிக்க வந்தார்கள். தேர்தலில் பேராயர் அணி தோற்று விட்ட நிலையில் தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் திருமண்டல நிர்வாகத்தை கவனிக்க தடை செய்யவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்”, இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.  இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி பிஷப் ஆதரவாளர்கள் எடிசன் உள்ளிட்ட 6பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்[5].

Caldwell conference- Avvai college - 28-08-2017-Christian pastors-2

உயிருக்கு பயந்த பில்லி, ஸ்டீபன் செல்வின்ராஜ் முதலியோர் கால்டுவெல் மாநாட்டில் கலந்து கொண்டது: ஒரு பக்கத்தில் காசுக்காக அடித்துக் கொண்டும், இன்னொரு பக்கம் ஏசுவுக்காக மோதிக்கொண்டும் இருக்கும் இவர்கள், மாணவ-மாணவியருக்கு என்ன சொல்லிக் கொடுக்கப் போகின்றனர் என்று தெரியவில்லை[6]. பில்லி, ஸ்டீபன் செல்வின்ராஜ் முதலியோர் உயிருக்கு பயந்து புகார் கொடுத்தனர் என்றால், சர்ச்சிற்குள் இருக்கும் அந்த எதிர்தரப்பு பாதிரியார்கள் கொலை செய்யத் துணிந்தனரா? “எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்,” என்று கெஞ்சிய பாதிரிகளா மாணவ-மாணவியருக்கு ஒருப்படியாக போதிக்கப் போகின்றனர்? இத்தகைய பாதிரிகளைக் கொண்ட டையோசிஸை என்னென்பது? ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம் முதலியவை இல்லாதவர்கள், பாதிரிகளாக இருப்பது, இத்தகைய கருத்தரங்களில் பங்கு கொள்வது முரண்பாடாக, நேர்மையற்றதாக இருக்கின்றன[7]. அதேபோல, பாலியல் விவகாரங்களில் நாறும் மனோன்மணிய பல்கலை பேராசிரியர்கள், முதலில் தங்களை ஒழுங்குப் படுத்திக் கொள்வதற்கு முன், இவ்வாறு பொது கருத்தரங்களில் கலந்து கொண்டு மற்றவர்களுக்கு என்ன போதனை செய்ய முடியும்?

© வேதபிரகாஷ்

29-08-2017

Caldwell conference- Avvai college - 28-08-2017-students

[1] தினமணி, பாளை.யில் நாளை தமிழறிஞர் கால்டுவெல் நினைவேந்தல்கருத்தரங்கம், Published on : 27th August 2017 05:35 AM

http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/aug/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2762625.html

[2] https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2015/08/28/bharathiar-university-sexual-harassment-and-bribery-complaints-lodged-by-lady-scholars/

[3] https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2015/08/16/sexual-harassment-complaint-against-assistant-professor-of-manonmaniam-sundaranar-university/

[4] நெல்லை ஆன் லைன், திருமண்டல புதிய நிர்வாகிகளுக்கு மிரட்டல் : பிஷப் ஆதரவாளர்கள் 6பேர் மீது வழக்கு, ஞாயிறு 14, மே 2017 7:06:21 PM (IST)

[5] http://nellaionline.net/view/31_138599/20170514190621.html

[6] வேதபிரகாஷ், சர்ச்சில் காணிக்கை வசூலைப் பிரிப்பதில் சேகர  குருக்கள் இடையே சண்டை – அடிக்கடி வழக்குகளில் சிக்கி வரும்சி.எஸ். சர்ச்சுகள்!, 27-06-2017.

[7] https://christianityindia.wordpress.com/2017/06/27/csi-parish-priests-started-fighting-for-sharing-collection-at-churches-tirunelveli/

அன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி – கர்த்தரின் செயலா?

ஜூன் 26, 2016

அன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி கர்த்தரின் செயலா?

இளவரசி - போட்டோ

பாதிரியிடம் ஜாதகம் கொடுத்து மாப்பிள்ளை பார்க்க சொன்னால், நானே மாப்பிள்ளைதான் என்ற பாதிரி: செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜபுரத்தை சேர்ந்த பீட்டர் மற்றும் திலகவதி மகன் ஜான்ஞானபிரகாஷ் (31). பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராம சர்ச் ஒன்றில் பாதிரியாராக வேலை செய்து வருகிறார். நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கூலியான கலியபெருமாள்-மல்லிகா தம்பதியரின் இரண்டாவது மகள் இளவரசி. கஷ்டப்பட்டு, இவர் பி.காம்., எம்.பில்., பட்டம் படித்துள்ளார். பெற்றோர் இவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகத்தை, ஜான்ஞானபிரகாஷ், பாதிரியிடம் கொடுத்து மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லி இருந்தார்கள். இதிலிருந்து, இளவரசி குடும்பத்தினரும் கிருத்துவர்கள் என்று தெரிகிறது. ஆனால், ஞானபிரகாஷத்திற்கே அவள் மீது ஆசை இருந்ததால், தானே திருமணம் செய்து கொள்கிறேன் என்றாராம்! அதன் பிறகு நடந்ததை, இளவரசியின் மாமா ரவிக்குமார், மு. இராகவன் என்ற “தமிழக அரசியல்” இதழ் நிருபரிடம் சொன்னதாக இவ்வாறுள்ளது[1]. இங்கும், ஜாதகம் பார்க்கும் விசயத்தில் கிருத்துவத்தின் போலித்தனம் வெளிப்படுகிறது.

ஞானபிரகாசம் - ராகவன். போட்டோஎனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை என்ற பாதிரி!: “நான் ஒரு மாப்பிள்ளை இருக்கும்போது ஏன் வெளியில் தேடவேண்டும் என்று ஜான் ஞானபிரகாசம் வலிய பெண் கேட்டதால், கடந்த ஆண்டு 2015 ஜூன் 22ம் தேதியன்றவு அவர்கள் இருவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தோம். முதல் நாள் இரவேநான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திருஎன்று கூறிவிட்டு சென்று விட்டார். அதன் பின் இரு மாதத்திற்கு ஒரு முறை வந்தாலும் கூட இரவு தங்குவதில்லை. ‘ஏன் ஒதுங்கி செல்கிறீர்கள் என்று இளவரசி கேட்டதற்கு, ‘நீ அழகா இல்ல. மற்றவர்கள் மத்தியில் என்னுடன் ஜோடியாக வர உனக்கு தகுதி இல்லைஎன்று கூறிவிட்டார். நான்கு ஊர் பஞ்சாயத்து கூடி பாதிரியிடம் கேட்டபோது, ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லைஎன்று கூறி சென்று விட்டார். என்றாலும், மனம் திருந்தி வருவார் என இளவரசி அவரது வீட்டிலேயே வேலைக்காரியைப் போல உழைத்து எத்ர்பார்ப்புடன் காத்திருந்தாள். இந்த ஜூலை 22 முதல் திருமண நாள் வர இருப்பதால், அன்றாவது வருவார் என்று காத்திருந்தார் இளவரசி. ஆனால், வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் வந்தவுடன் துடித்துப்போய் அந்த விரக்தியேலேயே தூக்கில் தொங்கி விட்டாள். ஆனால், மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றி விட்டோம்”, என்று கூறி முடித்தார்.

பாதிரி பற்றிய விவரங்கள்பாதிரி சிறைக்கு சென்றது தற்கொலையைத் தூண்டியதாலா, வரதட்சிணை கேட்டதாலா?: இந்நிலையில் மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜான் ஞானபிரகாசம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இளவரசியிடம் பேசும் போது, “நான் வாழாவெட்டியாக தாய் வீட்டிற்கு திரும்புவதால் எனது தங்கைகளின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என்பதால் அவருடனே வாழப் போராடினேன். பாதிரியார் என்ற வேஷத்தில் வேஷதாரியாய் இருக்கும் அவருடன் இனி வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. என் வாழ்வைக் கெடுத்த பாவத்திற்கு கர்த்தரும் அவனுக்கு மன்னிப்பு தரப்போவதில்லை. வாழ்வுதான் கிடைக்கவில்லை. சாகத்துணிந்தும் அதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவன் செய்த தவறுக்கு சட்டத்தின் தண்டனையை அனுபவிக்கட்டும்”, என்றார் கண்ணிர் மல்க. கர்த்தர் இளவர்சியை ஆசிர்வாதிப்பாராக என்று முடித்திருந்தாலும், வழக்கம் போல மற்ற தமிழ் ஊடகங்கள் சில மாறுபட்ட விவரங்களைத் தருகின்றன. வரதட்சிணை கேட்க சொன்னது தேவனா, கர்த்தரா, மாதாவா, பரிசுதத ஆவியா, யார்?

பாதிரி பற்றிய விவரங்கள்.ராகவந் இளவரசிஜான் ஞானபிரகாசம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினார்[2]: தினகரன், ஜான் ஞானபிரகாசம் மற்றும் இவரது மனைவி இளவரசி (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்[3]. கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. திருமணம் நடைபெற்றபோது, இளவரசியின் பெற்றோர் 10 பவுன் நகைகள், சீர் சாமான்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சிணையாக கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் ஞானப்பிரகாசம், இவரது தாயார் திலகவதி ஆகியோர்  இளவரசியிடம்  வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இளவரசிக்கு ஜான்ஞானபிரகாஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுபற்றி கணவரிடம் இளவரசி கேட்டபோது, உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து, மனமுடைந்து இளரவசி, 11-06-2016 சனிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்[4]. அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பின்னர் இதுபற்றி போலீசில் இளவரசி புகார் செய்தார். அதில் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்[5]. இதையடுத்து ஜான்ஞானபிரகாஷ், அவரது தாய் திலகவதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்[6].

ஞானபிரகாசம் - ராகவன்

நான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திரு: ஜான் ஞானபிரகாசம் இவ்வாறு சொல்லும் போது, யாரைக் கேட்டு கல்யாணம் செய்து கொண்டான், தாலி கட்டினான்……..என்றெல்லாம் எழுகின்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது? ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார் என்றால், பஞ்சாயத்து பிரமுகர்கள் எப்படி அமைதியாக இருந்தார்கள். அத்தகைய அதிகாரம் யார் கொடுத்தது, பிறகு பாதிரியை யார்தான் விசாரிப்பது என்பதெல்லாம், என்ன கிருத்துவயியலில் உள்ள மாயைகளா, மர்மங்களா? அதாவது, இந்திய சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற தோரணையில் இவர்கள் செயல்படுவது தெரிகிறது. சர்ச்சை மீறி, போலீஸாரிடம் புகார் கொடுத்தால் தான், இந்திய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார் இல்லை என்றால், எல்லாமே அமுக்கப்பட்டு விடுகின்றன. குற்றம் புரிந்த பாதிரிகள் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள், அடுத்த இரையை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள்! கேட்டால், எல்லாமே தேவனின் மகிமை என்றும் சொல்வார்கள் போலும்!

வேப்பந்தட்டை எங்ஜினியரிங் கல்லூரி தற்கொலை முயற்சி

இப்பகுதிகளில் அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களின் பின்னணி என்ன?:: அன்னமங்களத்தில் ரோமன் கத்தோலிக்க மற்றும் புருடெஸ்டென்ட் சர்ச்சுகள் உள்ளன. அவற்றில் டி;எல்.எல்.சி மற்றும் சி.எஸ்.ஐ புருடெஸ்டென்ட் என்று மூன்று பிரிவுகளின் சர்ச்சுகள் உள்ளன. மதம் மாற்றும் விசயங்களில் இவற்றிற்குள் போட்டி இருக்கிறது. கூகுள் மேப் அவற்றின் இருப்பிடத்தைக் காட்டுகிறது. அருகில் முஸ்லிம்கள் அதிகமுள்ள காத்தான்காடு போன்ற இடங்களும் உள்ளன. முஸ்லிம்களும் மதம் பரப்புவதில், தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இப்பகுதிகளில், அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன. இவையெல்லாம், தெற்செயலாக நடப்பவையா அல்லது பின்னணியில், மதசார்புடைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் முதலியவை உள்ளனவா என்ற சந்தேகம் எழுகின்றது.

வேப்பந்தட்டை பள்ளி மாணவி சுபாஷிணி மாயம்இந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா?:  அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி[7] ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மே 1, 2014 அன்று நடந்தது[8]. விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் சேகர் தலைமை வகித்தார். அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம் ஜெபம் செய்து, விழாவை தொடங்கி வைத்தார்[9]. உதவி பேராசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனிட்டா ஆண்டறிக்கை வாசித்தார். அன்னமங்கலம் பங்கு தந்தை ஆல்பர்ட் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ராஜாலெமார்ஜி, பொருளாளர் நிக்கல்சன், உதவி தலைவர் மெர்லிஸ், பாலிடெக்னிக் முதல்வர் லோகர்செல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துறைத்தலைவர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இங்கு, இந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா என்ற கேள்வி எழுகின்றது. அன்னமங்கலம், அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம், கிருத்துவர்களால் நிர்வகித்து வரப்படும் அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி முதலியவை, அதை சுட்டிக் காட்டுகின்றன. பிறகு, அந்த சர்ச்சுக்கும், இக்கல்லூரிக்கும் என்ன சம்பந்தம்?

© வேதபிரகாஷ்

26-06-2016

Location churches in Annamanalam Google map

[1] மு. இராகவன், நீ அழகா இல்ல!…… மனைவியை தூக்கில் தொங்க வைத்த பாதிரியார்,. தமிழக அரசியல், 25-06-2016, பக்கம்.16.

[2] தினமணி, வரதட்சிணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு, By மயிலாடுதுறை, First Published : 13 June 2016 07:31 AM IST

[3] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=583440&cat=504

[4] தினகரன், மனைவி தற்கொலை முயற்சி பாதிரியார் மீது வழக்கு,
Date: 2016-06-13 11:34:53

[5]http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2016/06/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/article3479962.ece

[6] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=583440&cat=504

[7] Elizabeth College of Engineering and Technology, Annamangalam(po),
Vepppanthattai (TK), Perambalur(Dt), Tamil Nadu – 621102.http://elizabethcollege.in/

[8] தினமலர், எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி ஆண்டு விழா, பதிவுசெய்த நாள்: மே.2, 2014: 02.15.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=966479&Print=1

புகாரை மறுக்கும் தேவாசீர்வாதம் – பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள அவர் பெண்கள் பிரச்சினைப் பற்றிய மூன்று நாள் கருத்தரங்கத்தைத் துவக்கிவைத்து பேசினார்!

மே 5, 2016

புகாரை மறுக்கும் தேவாசீர்வாதம் – பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள அவர் பெண்கள் பிரச்சினைப் பற்றிய மூன்று நாள் கருத்தரங்கத்தைத் துவக்கிவைத்து பேசினார்!

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- 4

புகாரை மறுக்கும் தேவாசீர்வாதம்: கொண்டா ஜான் சாஸ்திரி [Konda John Sastry] என்ற கிருத்துவர் பாஸ்டராக வேலைசெய்து வந்தார். இவர் பணியில் ஓய்வு பெரும் நிலையில் இருந்தார். அந்நிலையில், இவரை தேவையில்லாமல் தேவாசீர்வாதம் அவரை வேறு இடத்திற்கு இடமாற்றனம் செய்தார். இதனை பாஸ்டர் சாஸ்திரி எதிர்த்தார்[1]. இடம் மாற்றுதல் விசயமாக தீவேனா என்ற கொண்ட ஜான் சாஸ்திரியின் மனைவி வந்த போது, கௌடா தேவாசீவாதம் வார்த்தைகள் மட்டுமல்லாது, தொட்டும் பாலியல் ரீதியில் செயல்பட்டார் என்று புகார் கொடுத்தார்[2]. முதலில் பாரிஷ் கமிட்டியில் புகார் கொடுத்தபோது, மிரட்டி அனுப்பப்பட்டனர். குழந்தைகள் சென்று கேட்டபோதும் மிரட்டி அனுப்பி வைத்து விட்டனர். நான் சென்றபோது, அவர் தனக்கு இணங்கினால் தேவையானதை செய்து கொடுப்பதாக கூறியதால் பயந்து வெளியே வந்து விட்டேன் என்றார். இதற்கு தேவார்சீதம் இருவர்க்கும் மூளை சரியல்லை என்றார். தன்னை அவமதித்ததால் சஸ்பென்ட் செய்தேன் என்றும் ஒப்புக் கொண்டார்[3]. சாஸ்திரி எப்பொழுதும் சென்ற இடங்களில் எல்லான் யாதாவது பிரச்சினை செய்து கொண்டிருப்பார் எனவும், அவரை ஒழுங்குப்படுத்தவே, அவ்வாறு “சஸ்பென்ட்” செய்ததாகவும் கூறினார். மேலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாமே தனக்கு கெட்டப் பெயர் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்[4].

Govada Dyvasirvadam with students2015ல் பெங்களூரு சி.எஸ். பள்ளியிலும் மாணவிகள் பாலியல் ரீதியில் துன்புருத்தப்படுவதாக புகார்கள்: கடந்த பிப்ரவரி 2015ல் பெங்களூரு சி.எஸ்.ஐ பள்ளியிலும் மாணவிகள் பாலியல் ரீதியில் துன்புருத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அபோழுது, “மத்தியஸ்தராக” இருந்த இதே கௌடா தேவாசீவாதமிடம் புகார்கள் அனுப்பப்பட்டன. இங்கு கூட போலீஸாரிடம் புகார்கள் அளிக்கப்படாமல், பிஷப்பிடம் ஏன் அனுப்பப்பட்டன என்ற கேள்வி எழுகின்றது. ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை[5]. முன்பு கொண்ட ஜான் சாஸ்திரி விசயத்தில் அவர் செல்கின்ற இடத்தில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை செய்து வருகிறார் என்றார். ஆனால், இவர் செல்கின்ற இடத்தில் எல்லாம் ஏன் செக்ஸ் புகார்கள் எழுகின்றன மற்றும் இவர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது நோக்கத்தகது[6]. இவர் ஜனவரி 2014ல் மாடரேட்டர் பதவிக்கு போட்டியிட்ட போது, கிருஷ்ணா-கோதாவரி டயோசீசன் அணியினர் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். இவர்கள் மீது ஊழல் குற்றடச்சாட்டுகளும், பெண் பாதிரியார் ஒருவரை பேராயராக அபிஷேகம் செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் இவர்களுக்கு சினாடு தேர்தலில் கடுமையான அதிருப்தி அலை வீசியது[7]. இருப்பினும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014தீவிரமாகும் தெய்வாசீர்வாதத்தின் பாலியல் புகார் (ஜனவரி 2016): ஜான் மோஹன் ராஸு[8] தன்னுடைய கட்டுரையில், இவ்விவகாரத்தைப் பற்றி மேலும் விவரங்களைக் கொடுக்கிறார். “முதலில் தீவேனா போலீஸ் இன்ஸ்பெக்டரிட்டம் புகார் கொடுத்தாலும், அவருக்கு பணம் கொடுக்கப்பட்டு வழக்கை மூட ஏற்பாடு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் பிறகு டி.ஜி.பியிடம் புகார் அளித்ததால், மறுபடியும் எப்..ஆர் போடப்பட்டது, வழக்கு தொடர்கிறது, என்று நண்பர்கள் மூலம் தெரிய வருகிறது”, என்று சொல்லிவிட்டு, இத்தகையோர் சி.எஸ்.ஐக்கு தலைவராக இருப்பதினால், மாபெரும் இழுக்கு ஏற்படுகிறது என்று வருத்தப்படுகிறார்[9]. மேலும் தெய்வாசீர்வாதம் புகார் கொடுத்தவர்களுக்கு மனநிலை சரியில்லை என்றார். அப்படியென்றால், அவர்களை மருத்துவ ரீதியில் சோதனை செய்திருக்கலாமே. அப்பொழுது, யார் பொய் சொல்கின்றனர் என்பதனை கண்டு பிடித்து விடலாம் என்கிறார்[10]. சி.எஸ்.ஐன் பொறுப்பாளர் மற்றும் இறையியல் வல்லுனரான இவரிடத்திலிருந்து, இவ்விவரங்கள் வருவதனால், இப்பிரச்சினையில் தீவிரம் என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். மேலும் தேவாசீர்வாதம் போன்ற சக்தி கொண்ட பிஷப்புகள் எதையும் செய்யத் துணிவார்கள் என்பதும் தெரிகிறது.

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- 3பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள தெய்வாசீர்வாதம் பெண்கள் பிரச்சினைப் பற்றிய மூன்று நாள் கருத்தரங்கத்தைத் துவக்கிவைத்து பேசுதல் (06-10-2015)[11]: அக்டோபர் 6 -8, 2015 தேதிகளில் பெண்களின் உரிமைகள், பிரச்சினகள் முதலியவற்றைப் பற்றி விவாதிக்க, ஒரு கருத்தரங்கம் / பட்டறை ஹென்றி மார்ட்டீன் இன்ஸ்டிடுட்யூட்டில் ஹைதராபாத் [Henry Martyn Institute] நடைபெற்றது. அதன் துவக்கத்தின் போது,  கோவாட தெய்வாசீர்வாதம் கலந்து கொண்டு, பெண்களின் இயக்கம் ஒரு கூட்டமாக இருப்பதை விட, நம்பிக்கையின் பாதுகாவலர்களாகவும், நவவுலத்தை கட்டும் சிற்பிகளாகவும் இருக்க வேண்டும் என்று பேசியதாக உள்ளது[12]. ஆனால், 2014ல் நடந்த தீவேனா மற்றும் 2015ல் பெங்களூரில் பள்ளியில் நடந்த பாலியல் பிரச்சினைகள் பேசப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. ஏனெனில், இப்பிரச்சினை லண்டன் தலைமையகம் வசை சென்றுள்ளது, அங்குள்ள ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[13]. பெண்களைப் பற்றிய பற்பல பிரச்சினைகளைப் பற்றி – சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவது[14], பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்துதல்……..பேசிய இப்பெண்மணிகளுக்கு, இது தெரியாது என்பதும், குற்றம் சாட்டப்பட்டுள்ள தேய்வாசீர்வாதமே, இந்த பட்டறையைத் துவக்கி வைத்ததும், முரண்பாடான, வெட்கப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது.

Participants at the IAWN regional consultation in South Asia. Photo- Ilona Sabera - ACOசெக்ஸ்-ஊழல்களில் கத்தோலிக்கமும், கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருந்து நாறுகின்ற நிலை: உலகம் முழுவதும், கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் செய்து வரும் குற்றங்கள் நாறி வருகின்ற நேரங்களில், அவற்றையெல்லாம் விடுத்து, இப்படி மற்ற விசயங்களைப் பற்றி பேசுவது மறைக்கும் போக்காகவே தெரிகிறது. ஒருவேளை இப்பெண்களே அவற்றை மறைக்க இவ்வாறான கருத்தரங்கங்கள் முதலியவற்றை ஏற்பாடு செய்து “வெள்ளையடுக்கும்” வேலையில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகமும் எழுகிறது. கத்தோலிக்கக் கிருத்துவம் தான் செக்ஸ்-ஊழலில் திளைத்து நாறுகிறது என்றால், கத்தோலிக்கத்தை எதிர்க்கும் மற்ற கிருத்துவக் கூட்டங்களும் அதைவிட மோசமாக நாறுகின்றன என்று பார்க்கும் போது கேவலமாகவே இருக்கின்றது. வேலியே பயிரை மேய்வது மட்டுமன்றி, மற்ற ஆடுகளும் ஒத்துழைப்பது போலிருக்கிறது. பொதுவாக “கருப்பு ஆடுகள்” என்றுதான், கிருத்துவர்கள் பேசுவார்கள். இனி இத்தகைய “சிகப்பு ஆடுகள்” பற்றியும் பேச வேண்டிய நிலை வந்து விட்டது. அதனால் தான், பெங்களுரைச் சேர்ந்த ஜான் மோஹன் ராஸு வருத்தத்துடன் விவரங்களை வெளியிட்டது மேலே குறிப்பிடப்பட்டது.

© வேதபிரகாஷ்

05-05-2016

[1] https://www.youtube.com/watch?v=M4GXRzdE3Co

[2] https://www.youtube.com/watch?v=OCMRDO3sFD0

[3] https://www.youtube.com/watch?v=W83vtgTADAs

[4] Speaking to South India TV9, Bishop Dyvasirvadam denied the truth of the charges, saying his accuser was mentally unbalanced. The bishop further stated the charge was part of a conspiracy to discredit him in retaliation for his having disciplined Mr. Sastry for abusing his office. The investigation is on-going. http://www.anglican.ink/article/indian-bishop-accused-assault

[5] Scores of people staged a protest outside the office of the Karnataka Central Diocese (KCD) on Wednesday demanding action against those who allegedly sexually assaulted students of a prominent all-girls school recently. The school is managed by the Church of South India (CSI), which comes under the KCD. The protesters wanted to draw the attention of CSI moderator Govada Dyvasirvadam to the alleged incident. One of the protesters Anita Sharly said that girls were allegedly assaulted during the installation ceremony of the new principal and demanded the arrest of the management members. “Although the complaint was filed weeks ago, no action has been initiated by the police. As we do not have a Bishop for Karnataka, there is nobody to monitor the management of educational institutions and prevent such untoward things,” she added.

http://www.thehindu.com/news/cities/bangalore/protest-at-karnataka-central-diocese/article6858519.ece

[6] The Hindu, Protest at Karnataka Central Diocese , Updated: February 5, 2015 05:32 IST

[7] http://www.tutyonline.net/view/31_60575/20140108134924.html

[8]  Professor of Social Ethics was on the faculty of UTC-Bengaluru, in the Departments of Theology and Ethics, Church and Society, and a stake-holder of CSI.

[9] Our friends from Vijayawada say the initially the police inspector was bribed to close the case. Then sense dawned on that same diocesan pastor and his “bishop — sexually harassed ” wife of that pastor .and they are supposed to have approached the DGP with a complaint — as a result of which the FIR was again slapped and it is in progress still !!! Please take it up with the higher ups.

[10] John Mohan Razu, Failing, faltering and falling of “god-men” – Purple robed – CSI crumbles, https://www.academia.edu/23308792/FAILING_FALTERING_AND_FALLING_OF_god_men_PURPLE_ROBED_CSI_CRUMBLES

[11] CAN (Anglican News Service), Women from the Anglican and United Churches of South Asia discuss challenges and seek gender justice, Posted on: October 16, 2015 9:33 AM

[12] http://www.anglicannews.org/news/2015/10/women-from-the-anglican-and-united-churches-of-south-asia-discuss-challenges-and-seek-gender-justice.aspx

[13] http://www.anglican.ink/article/indian-bishop-accused-assault

[14] http://www.anglicancommunion.org/community/communion-women/ending-and-preventing-gender-based-violence.aspx

பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். ஐ. பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்!

மே 5, 2016

பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். . பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்!

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- to be arrested

கௌடா தேவாசீர்வாதம், கோவட தேவாசீர்வாதம், கோவாட தேவாசீர்வாதம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இப்பிஷப் பல பொறுப்புகளில் பல இடங்களில் வேலை செய்துள்ளார், வேலை செய்து வருகிறார். தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) என்ற ஆங்கிலிகன் சர்ச்சைச் சேர்ந்த இந்த கிருத்துவப் பிரிவு, கத்தோலிக்கம் அல்லாத கோஷ்டிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றப் பிறகு, இச்சர்ச்சிற்கு கோடிக்கணக்கில் சொத்துகள் கிடைத்து விட்டதால், கம்பெனியாக மாற்றி அவற்றை வைத்து நன்றாக அனுபவித்து வருகிறார்கள். இதனால், பதவிகளுக்கு வரவே அதிக போட்டிகள் இருந்து வருகின்றன. எப்பொழுது பார்த்தாலும், உள்ளுக்குள் சண்டை, சச்சரவு என்று ஆரம்பித்து, நீதிமன்றங்களுக்கும் செல்கிறார்கள். இதனால், சமீபத்தில் இவர்களைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. கத்தோலிக்கக் கிருத்துவத்தில் ஆண்கள்-பெண்கள் பிரம்மச்சரியத்தில் இருந்து கொண்டு ஊழியம் செய்ய வேண்டும் என்றுள்ளது. ஆனால், தாக்குப் பிடிக்காமல், பற்பல கொக்கோக செக்ஸ்-பாலியல் விளையாடல்களில் ஈடுபட்டு அங்கிகள் கழண்டுள்ளன. இதே நிலை இப்பொழுது இவர்களுக்கும் வந்து விட்டது. இவர்களுக்கு கல்யாணம் செய்து கொள்ளலாம், பிரமச்சரியம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இருப்பினும், இவர்கள் நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்று கிளம்பிவிட்டார்கள் போலும். இந்நிலையில் கோவட தேவாசீர்வாதம் பிரச்சினை பெரிதாகியுள்ளது.

Gowda Dyvasirvadam

பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். . பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்[1] (ஜூலை 2014): “பாதிரியார் மனைவியின் கற்பை சூறையாடிய சி. எஸ். ஐ. பிரதமப்பேராயர். ஆந்திர போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்”, என்று தலைப்பிட்டு, “டுடி.ஆன்லைன்.நெட்” என்ற இணைதளம் வெளிப்படையாக செய்தி வெளியிட்டது[2]. இந்தியன் எக்ஸ்பிரஸில் சுருக்கமாக செய்தி வந்துள்ளது. ஒரு பெண்ணின் கற்பை சூறையாடும் எண்ணம் (இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு.354) மற்றும் குற்றவுணர்வுடன் மிரட்டுதல் (பிரிவு.506) [He was booked under the IPC Sections 354 (intent to outrage the modesty of a woman) and 506 (criminal intimidation)] கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[3]. அவர்தான், தென்னிந்திய திருச்சபையின் பிரதமப் பேராயராக ஆந்திர மாநிலம், கிருஷ்ணா – கோதாவரி திருமண்டலத்தின் பேராயராக இருக்கும் கௌடா தேவாசீர்வாதம்[4]. ஆனால், மற்ற ஊடகங்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இதே மற்ற மதத்துடைய சாமியார் இவ்வாறு செய்திருந்தால், 24 x 7 ரீதியில் எல்லா அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் அதிரடி செய்தியாகி, அனைவரையும் உசுப்பி விட்டுக் கொண்டிருக்கும் செய்தியாக மாறியிருக்கும். அத்தகைய பாரபட்சமான செய்தி வெளியீடு, ஊடகங்களின் நடுநிலையற்றத் தன்மை மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு முதலியவற்றை கவனிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- 1

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்..) ஒரு கம்பெனியாகும்: ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்பிரதேசம், அண்டை நாடான ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் தென்னிந்திய திருச்சபை என்ற அமைப்பு உள்ளது. தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) என்ற அமைப்பானது ஆங்கலிக்கன் திருச்சபை, மெத்தடிஸ்ட் திருச்சபை ஆகியவை இணைந்து உருவான அமைப்புதான் தென்னிந்திய திருச்சபை. இந்திய கம்பெனிகளின் பதிவுச்சட்டம் 1913 பிரிவு 26 இன் படி சி. எஸ். ஐ. டிரஸ்ட் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை 1947 செப்டம்பரில் உருவாக்கினார்கள். இதன்மூலம் மருத்துவ வசதி, கல்வி வசதி, சமூகசேவை ஆகியவற்றை ஏற்படுத்துவதே நோக்கமாகும். இதில் தென்னிந்தியாவின் 4 மாநிலங்கள், ஒருயூனியன் பிரதேசம், ஸ்ரீலங்காவிலுள்ள ஜாபானா உள்ளிட்ட 22 திருமண்டலங்களை உள்ளடக்கி தென்னிந்தியதிருச்சபை செயல்பட்டு வருகிறது. தென்னிந்திய திருச்சபையில் 40,15,000 உறுப்பினர்கள் உள்ளனர். இதனை நிர்வகிக்க சினாடு என்றஅமைப்பு உள்ளது. இதன் தலைவராக பிரதமப் பேராயர் (பேராயர்களுக்கெல்லாம் பேராயர்) துணைதலைவராக துணைப் பிரதமப் பேராயர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்களை கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்களது பதவிக்காலம் 2 ஆண்டுகள். இந்த அமைப்புதான் சி. எஸ். ஐ. அமைப்பின் கீழ் உள்ள 22 திருமண்டலங்களையும் நிர்வகித்து வருகிறது.

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- 2

டுடி.ஆன்லைன்.நெட்என்ற இணைதளம் கொடுக்கும் விவரங்கள்: தென்னிந்திய திருச்சபையின் பிரதமப் பேராயராக ஆந்திர மாநிலம், கிருஷ்ணா – கோதாவரி திருமண்டலத்தின் பேராயராக இருக்கும் கௌடா தேவாசீர்வாதம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் (2014) பதவி ஏற்றுக் கொண்டார். இவர்மீதுதான் கற்பழிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா- கோதாவரி திருமண்டலத்தில் பாஸ்டராக இருப்பவர் ஜான் சாஸ்திரி. இவரது மனைவி டெவினா தனதுகணவரின் பணிமாறுதல் குறித்து பிரதமப் பேராயராக இருக்கும் கௌடா தேவாசீர்வாதத்திடம் முறையிடச் சென்ற போது பலவந்தப்படுத்தி தனது கற்புக்கு பங்கம் விளைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[5]. இவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, 506 இன்கீழ் சூர்யராவ் பேட்டை இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Sexual harassment casse booked against Gowda Dyvasirvadam June 2014- 3

ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்கள் பிரதமப் பேராயராக ஆவது, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது: இதுகுறித்து தென்னிந்தியதிருச்சபையின் நிர்வாகிஒருவர் நம்மிடம் கூறியதாவது: “சினாடு நிர்வாகம் மிகப்பரந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பொறுப்பில் உள்ளவர்கள் குட்டிஅரசு நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பிற்கு இந்தியாவில் பேரழிவுகள், பேரிடர்கள் நடந்தால் வெளிநாட்டு உதவிகள் கணக்கில்லாமல் வருகிறதுஇந்த உதவிகளை வைத்துக் கொண்டு பதவியில் இருப்பவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. இவர்களை எதிர்க்கும், தவறுகளை சுட்டிக்காட்டும் பேராயர்களை சஸ்பென்ட் செய்வது பதவியில் இருப்பவர்கள் செய்துவருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் சி.எஸ்.. சினாடு அமைப்பிற்கு சென்னை ராயப்பேட்டையில்தான் தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதுஆனால் தமிழர்கள் எவரும் சினாடு அமைப்பின் உயர் பதவிக்கு வருவது என்றால் மிகவும் கடினம். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்களே பிரதமப் பேராயராக வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு வெளிநாட்டு உதவிகளையும், சி. எஸ். . கிறிஸ்தவர்களின் காணிக்கை பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகின்றனர்எனவே தமிழக முதல்வர் தலையிட்டு தமிழகத்தை மதத்தின் பெயரால் சுரண்டி வருபவர்களையும், பெண்ணின் கற்பை சூறையாடி வருபவருமான பிரதமப் பேராயர் மற்றும் அவரது கும்பல்களையும் அடையாளம்கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு உதவிகள் செய்துவரும் தமிழக மாபியா கும்பல்களையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்”, இவ்வாறு அவர்கூறினார்.

Participants at the IAWN regional consultation in South Asia. Photo-Ilona Sabera - ACO -Oct.2015

தமிழக முதல்வர் அம்மா இதனை கவனிப்பாரா?  கடைசி செய்தி[6]: ஒரு பேராயர் மீது கற்பழிப்பு புகார், திட்மிட்டு தாக்குதல் ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதியப்பட்டபின் அவர் தனது பதவியை தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்வது மரபு. ஆனால் இவரோ தலை மறைவுவாழ்க்கை நடத்திக்கொண்டு சட்டத்தை ஏமாற்றி வருகிறார். எனவே இவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் கோர்ட்படி ஏறவும், போராடவும் தயாராகி விட்டனர், என்று இன்னொரு செய்தி கூறினாலும், இதைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. இரண்டு தெலுங்கு டிவி-செனல்கள், இவரைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கின்றன.

© வேதபிரகாஷ்

05-05-2016

[1] டுடி.ஆன்லைன்.நெட், பாதிரியார் மனைவி பலாத்காரம்: சிஎஸ்ஐ பிரதமப் பேராய மீது ஆந்திர போலீசார் வழக்கு, திங்கள் 7, ஜூலை 2014 11:37:39 AM (IST).

[2] http://www.tutyonline.net/view/31_70687/20140707113739.html

[3] Indian Express, Cops Book Bishop for ‘Harassing’ Woman, By Express News Service, Published: 27th June 2014 07:34 AM, Last Updated: 27th June 2014 07:34 AM

[4] The Most Revd Dr Govada Dyvasirvadam; Address: St Andrew’s Cathedral Compound, Main Road, Machilipatnam – 521 002, Krishna-Godaviri District, Andhra Pradesh, India; Office: +91 (0)8672 220 623

Fax: +91 (0)8672 220 771.

[5]  The Suryaraopet police registered a case against Govada Dyvasirvadam, the moderator of the Church of South India (CSI) and Bishop of Krishna-Godavari Diocese of the CSI here Thursday. He was booked under the IPC Sections 354 (intent to outrage the modesty of a woman) and 506 (criminal intimidation). Deevena, wife of a pastor Konda John Sastry, has lodged a complaint at the One Town police station alleging that the bishop had misbehaved with her when she went to him to discuss her husband’s transfer issue. Circle-inspector of Suryaraopet police station M Srinivas said that they had registered a case, and investigation is on. http://www.newindianexpress.com/states/andhra_pradesh/Cops-Book-Bishop-for-%E2%80%98Harassing%E2%80%99-Woman/2014/06/27/article2302950.ece

[6] http://m.dailyhunt.in/news/india/english/the-new-indian-express-epaper-newexpress/cops-book-bishop-for-harassing-woman-newsid-30312529

சி.எஸ்.ஐ. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? இது வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, அல்லது நிதிமுறை சர்ச்சையா?

ஒக்ரோபர் 25, 2015

சி.எஸ்.. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? இது வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, அல்லது நிதிமுறை சர்ச்சையா?

மார்த்தாண்டம் பிரச்சினை - நியூஸ்.7. போட்டோ

மார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ

கிறிஸ்தவ மதபோதகர்கள் திராவிட சித்தாந்தம் மற்றும் இந்துவிரோத பகுத்தறிவு கொள்கைகளினால் ஊக்குவிக்கபடுகிறார்களா?: தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்த ஆட்சியாளர்களின் கீழ் மதநம்பிக்கையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளாளர்கள். குறிப்பாக, அவர்கள் நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டால் கூட, இந்து-விரோத சித்தாந்திகளாகத்தான் இருந்து வருகிறார்கள். கோவில்கள், அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆட்டிப்படைத்து வருகிறார்கள். கோடி-கோடிக்கணக்கில் உள்ள அச்சொத்துகளை மாறி-மாறி குத்தகை, ஆக்கிரமிப்பு, பட்டா-மாற்றம் போன்ற வழிகளில் கொள்ளையடித்து வருகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் வழிபாட்டு இடங்கள் அவற்றின் சொத்துகளை அம்மாதிரியே செய்யும் போது கூட அரசு தலையிட முடியாத நிலையுள்ளது. அந்நிலையில் அவர்களே அத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்குள்ளேயே சண்டைகள் வந்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளார்கள், அவற்றில் மதத்தலைவர்கள் முதல், கீழுள்ள நிர்வாகிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள் என்று எல்லோருமே அடக்கம். சி.எஸ்.ஐ பற்றி சொல்லவே வேண்டாம். நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றின் மூலம் அவர்களது விவகாரங்கள் பல வெளிவந்துள்ளன. இந்நிலையில், மார்த்தாண்டத்தில் வணிக வளாக வாடகை பிரச்சினை தொடர்பாக போதகர்கள்–வியாபாரிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று வரும் செய்தி வியப்பாக உள்ளது.

பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.

பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.

சி.எஸ்.. பேராயத்திற்கு வணிக வளாகம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. ஆலயம், ஆலய வளாகம் முதலியவை உள்ளது பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகம் தான் இப்பொழுதைய பிரச்சினையில் வந்துள்ளது[1]. இங்கு 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அக்கடைகள் பல வணிகர்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்த வணிக வளாகம் இருப்பதால் எப்போதும், இங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் கணிசமான பணம் சி.எஸ்.ஐக்குக் கிடைத்து வருகிறது. இந்த கடைகளின் வாடகை மற்றும் வைப்புத்தொகையை அதிகரித்து தர வேண்டும் என பேராய நிர்வாகிகள் அங்கு கடைகளை நடத்தி வருபவர்களிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், ஒருசில கடை உரிமையாளர்கள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015

பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015

போதகர்கள் மற்றும் வணிகர்களுக்குன் இடையில் கைகலப்பு[2]: இந்தநிலையில், 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர். எல்லோரும் அவரது மத-உடைகளோடு படைப்போல அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒரு ஓட்டலில் நுழைந்து அதன் உரிமையாளரிடம் பேராயம் நிர்ணயித்த தொகையை தர வேண்டும் எனவும், வாடகை பாக்கியை முழுமையாக கட்ட வேண்டும் எனவும் கூறினர். இதனால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பிரச்சினை முற்றி கைகலப்பு மூண்டது[3]. கிறிஸ்தவ போதகர்கள் அங்கிகளுடன் வணிகர்ளுடன் இவ்வாறு தள்ளுமுள்ளு மற்றும் கைக்கலப்புகளில் ஈடுபட்டது, ஏதோ சினிமா பார்ப்பது போன்றிருந்தது[4]. போதகர்களுக்கு ஆதரவாகவும், கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர். அதற்கு யாரும் உடன்படாததால் பதற்றம் அதிகரித்தது. இதனை வேடிக்கை பார்க்க நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரும் பொதுவான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். அதன்பின்பு, போதகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்

சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்

இருதரப்புகளிடையே நடந்த பேச்சுவார்த்தை[5]: இதைத்தொடர்ந்து, 20-10-2025 அன்று மாலை சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பேராயம் சார்பில் ராபர்ட் புரூஸ், மற்றும் ஜெங்கின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிகர்கள் சார்பில் ஓரிரு கடைக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் வாடகை தொடர்பாக இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா, ஒப்புக்கொள்வார்களா என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், வர்த்தகர்களில் சிலர் இவ்விசயமாக போராட்டம் நடத்தவும், கோர்ட்டுக்குச் செல்லவும் தயாக இருப்பதாகக் கூறியுள்ளனர்[6]. அவ்வணிகர்களில் கணிசமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

சி.எஸ்.. பேராயத்திற்கும் வியாபாரத்திற்கும் தொடர்பு உள்ளதா?: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகத்தில் 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன என்று பார்த்தோம். 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் மத-உடைகளோடு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர்.  இப்படி 200 கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட  மதபோதகர்கள் என்பது கவனத்தில் ஈர்ப்பதாக உள்ளது. 200 கடைகளுக்கும் இவ்வாறு 200 மதபோதர்களை பொறுப்பில் போட்டுள்ளார்களா, அவர்களை வாடகை வசூல், வாடகை ஏற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனெனில், அவர்களை அவ்வேலையை செய்தது மட்டுமல்லாது, வணிகர்களுடன் சண்டையும் போட்டுள்ளார்கள். மதவுடைகள் அணிந்து கொண்டு, அத்தகைய மதம் சம்பந்தமில்லாத காரியங்களில் அவர்கள் எவ்வாறு ஈடுபட்டனர் என்று நோக்கத்தக்கது. அப்படியென்றால், மதவிவகாரங்களைத் தவிர, இவர்களுக்கு இத்தகைய மதம்-சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய அனுமதி உள்ளதா அல்லது இரட்டை வேடம் போட்டு வருகிறார்களா, அல்லது அவ்வுடைகளைப் போட்டு மதச்சாயம் பூசி மிரட்ட வந்தார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது[7]. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அவ்வாறு மதவுடைகளுடன் 200 பேருக்கும் மேலாக போதகர்கள் வந்தார்கள் என்றால், அது தீர ஆலோசித்து, திட்டமிட்டு, முடிவெடுத்த காரியம் என்றாகிறது. திடீரென்று சாதாரணமாக அவ்வாறு வந்துவிட முடியாது. அப்படியென்றால், இவர்களுடைய தலைவர் யார், இவர்களை இவ்வாறு தயார் படுத்தி அனுப்பியது யார், வியாபார விவகாரங்களில் கிறிஸ்த அமைப்புகள் ஏன் ஈடுபடுகின்றன, போன்ற கேள்விகளும் எழுகின்றன.

CSR Marthandam

CSR Marthandam

தாக்கிய பாஸ்டர்மீது வழக்கு[8]: மார்த்தாண்டம் வணிக மையம் [Marthandam Chamber of Commerce] இந்த கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 100 சதவீதத்திற்கு மேலாக வாடகை உயர்த்தப்பட்டது, குறித்து எதிர்ப்பு தெரிவித்தது. மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இதைப்பற்றி வர்த்தகர்கள் புகாரும் அளித்துள்ளனர்[9].  20-10-2015 அன்று நடந்த வணிகர்கள்-போதகர்கள் கைகலப்பு படம்பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில், மத போதகர் சுரேஷ் செல்வகுமார் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. “புதிய தலைமுறை” நிருபர் கே. மது, போதகர்களினால் தாக்கப்பட்டார். குறிப்பாக சுரேஷ் செல்லக்குமார் என்ற பாஸ்டர் தாக்கியதால் அவர்மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 341, 294 (b), 323 மற்றும் 506 (i) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[11].

CSI Shopping complex,  Marthandam

CSI Shopping complex, Marthandam

திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது யார்?: வியாபார விவகாரங்களில் கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால், வியாபாரமும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாகிறது. தீவிரவாதிகள் (ஜிஹாதிகள் முதலியோர்) இந்திய ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்து, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறார்கள் என்று முன்னரே செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதைய நிதியமைச்சர் சிதம்பரமே அதைப் பற்றி பேசியுள்ளார். இப்பொழுது ஆன்-லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. அதில் யார் பணத்தை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள் என்று தெரியாது.  ஷேர்களை, பொருட்களை வாங்கினால் மட்டும் போறாது, அவற்றை நிர்வகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த அளவுக்கு இவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது என்பதும், தெளிவாகிறது. இந்நிலையில் சாதாரண மக்கள் இத்தகைய திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. பொதுவாக, பண்டிகைக் காலங்களில் தான் இத்தகைய காரியங்கள் நடந்து வருகின்றன. அப்படியென்றால், அப்பண்டிகைகளைக் கொண்டாடும் மக்களைக் குறிவைத்து, இத்தகைய நாணயமற்ற மற்றும் பொருளாதாரத்த்யை சீர்குலைக்கும், சாதாரண மக்களை சுரண்டும் வேலைகள் நடந்து வருகின்றனவா என்று கவனிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

21-10-2015

[1]  தினத்தந்தி, வணிக வளாக வாடகை பிரச்சினை: போதகர்கள்வியாபாரிகள் கைகலப்பு மார்த்தாண்டத்தில் பரபரப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 5:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 1:47 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[3] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[4] அதாவது பலத்தை, சக்தியை எம்முறையிலும் உபயோகப்படுத்தத் தயாராக உள்ளனர், அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்றாகிறது.

[5] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/21014758/Rental-Business-Corridor-issue-potakarkal-merchants.vpf

[6]  கோவில் சொத்துகள் என்றால், வேறுவிதமாக இருக்கும், இங்கு உண்மையிலேயே அவ்வாறு செல்வார்களா அல்லது சரசமாகி விடுவார்களா என்று பார்க்க வேண்டும்.

[7]  செக்யூலரிஸத்தில், மதத்தையும் மற்ற மதம் சம்பந்தமில்லாத காரியங்களையும் சேர்க்கக் கூடாது என்றுள்ளது. “சர்ச் மற்றும் ஸ்டேட்” தனித்தனி என்று கூறிக்கொள்கிறார்கள்.

[8]  The Hindu, Case registered against pastor, Nagerkoil, October.24, 2015; Updated: October 24, 2015 05:45 IST

[9] நியூஸ்.7, மார்த்தாண்டத்தில் தாக்குதல் தொடர்பாக மதபோதகர் மீது வழக்கு, Updated on October 23, 2015.

[10] http://ns7.tv/ta/case-filed-against-piest-marthandam-attacking.html

[11] In connection with an attack on a reporter of a private television channel, a case has been registered against Suresh Chellakumar, Pastor, CSI church, Thalakkanvilai, by Marthandam police on Thursday. According to the police, K. Mathu (44), working for Puthiya Thalaimurai Television, along with a few other reporters, rushed to the CSI shopping complex in Marthandam on Wednesday for recording the scuffle between members of the Marthandam Chamber of Commerce and CSI pastors. Angered by recording of the scuffle, a few CSI pastors are alleged to have abused Mr. Mathu. The reporter was also allegedly attacked and threatened with dire consequences. Accompanying reporters A. Arul Kumar and Shagayakumar tried to safeguard Mathu from the attack but in vain. Mathu refused to get admitted to a hospital for treatment. Marthandam police have registered a case under Sections 341, 294 (b), 323 and 506 (i) of Indian Penal Code against Suresh alias Suresh Kumar, Pastor, CSI church, Thalakkanvilai, based on complaint lodged by Arul Kumar. Further investigation is on.