Archive for the ‘சந்திராபுரம்’ Category

பாத்திமா சோபியா கொலை வழக்கில் ஒரு பிஷப் மற்றும் நான்கு விகார்-கிருத்துவ சாமியார்கள் 12-08-2016 அன்று கைது!

ஓகஸ்ட் 20, 2016

பாத்திமா சோபியா கொலை வழக்கில் ஒரு பிஷப் மற்றும் நான்கு விகார்கிருத்துவ சாமியார்கள் 12-08-2016 அன்று கைது!

Bishop Thomas Aqunas, Coimbatore diocese-arrested -Indian Express

பாத்திமா சோபியா கொலையும், தாய் சாந்தி ரோஷாலினின் நீதி போராட்டமும்: பாத்திமா சோபியா (Fathima Sofiya 19) மடாலய-குருகுலத்தில் ஜூலை 23, 2013 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். சோபியாவின் கடிதத்தில் ஆரோக்கிய ராஜ் தன்னை பாலியல் ரீதியில் புணர்ந்துள்ளான் என்றும் எழுதியிருந்தாள். தற்கொலை என்று சர்ச் அதிகாரிகள் கூறி, பிணத்தை எடுத்துச் செல்லக் கூறினர். ஆனால், அவளது தாயார் [Shanthi Roselin] அது கொலைதான் என்றும், கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்ச் அதிகாரிகள் முதலியோருடம் மன்றாடி, கெஞ்சி மண்டியிட்டு கேட்டப்பிறகும், சர்ச் அதனை மூடி மறைக்கப் பார்த்தது. தொடர்ந்து கற்பழிப்பு, பாலியன் வபுணர்ச்சி, கொலைகள், கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்துதல், பிஷப் முதல் பாஸ்டர் வரை இக்குற்றங்களில் ஈடுபடுதல் என்றுள்ளதால், இவ்வழக்கை எப்படியாவது மறைக்கவேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டது. கேரள கிருத்துவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், அரசியல், அதிகாரம், பணம் முதலியவற்றையும் பிரயோகித்து, ஏப்ரல் 2014ல் அது தற்கொலை என்று வயலார் போலீஸ் வழக்கை மூடியது. இதனால், சாந்தி ரோஷாலின் பல அரசு அதிகாரிகள், முதலியோரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சினார், முறையிட்டார். இதனால், இவ்வழக்கு மறுமடியும் திறக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Bishop Thomas Aqunas, Coimbatore diocese-arrested -Times of India

சாந்தி ரோஷாலின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு ஆணை பிறப்பித்தல்: ரோஷலின் சாமர்த்தியமாக இவர்களுடன் செல்போனில் பேசி அவர்களது உரையாடலை பதிவு செய்து, போலீஸாரிடம் சமர்ப்பித்தார்[1]. இதனால், 2015ல் எச். ஆரோக்கியராஜ் [Fr H Arockyaraj] என்ற சந்திரபுரத்தில் உள்ள சேயின்ட் ஸ்டான்லிசாலஸ் சர்ச்சின் பாதிரி [parish priest of St Stanlisalus Church in Chandrapuram] இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். இவனும் மறைந்து தான் இருந்தான். சாந்தி ரோஷாலின் புகார் கொடுத்து, அதை பாலக்காடு மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக் கொண்டு, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு தான் நிலைமை மாறியது. மே 2016ல், பாலக்காடு மாஜிஸ்ட்ரேட், பிஷப் அக்வினாஸின் [Bishop Acquinas] பங்குள்ளதை விசாரிக்க ஆணையிட்டார். கோயம்புத்தூர் டையூசிஸின் விகார் ஜெனரல் ஜான் ஜோசப் ஸ்டைன்ஸ் [Coimbatore diocese vicar general Fr John Joseph Stains], ஆரோக்கிராஜை சர்ச்சிலிருந்து விலக்கி விட்டோம் என்றெல்லாம் வாதித்துப் பார்த்தார். சர்ச் அதிகாரம் பலவழிகளில் இதனை தடுக்கப் பார்த்தது.

Fathima murder case - Bishop and 4 vicars arrested

ஜூலை முதல் ஆகஸ்ட் 2016 வரை பிஷப் மற்றும் பாதிரிகள் மறைந்திருந்தது முதலியன: போலீஸார், பிஷப் அக்வினாஸ், மற்றும் குலந்தை ராஜ், மடலை முத்து மற்றும் லாரன்ஸ் மெல்கியூர் [Bishop Acquinas and the priests — Kulantha Raj, Madalai Muthu and Lawrance Melcure, Coimbatore Kottur Christ King Church] என்ற மூன்று பாதிரிகள் என மொத்தம் நான்கு பேர்களை கொலையை மறைத்தக் குற்றத்திற்காக 12-08-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[2].  டைம்ஸ் ஆப் இந்தியா, இப்பெயர்களை சிறிது மாற்றி குறிப்பிட்டுள்ளது.

 1. பிஷப் தாமஸ் அக்யுனிஸ் [Bishop Thomas Acunis],
 2. பி.எப்.மதுலை முத்து B F Madhulaimuthu, a priest from Kerala]
 3. குலந்தை ராஜ் [father Kulandiaraj]
 4. லாரஸ் மெல்கி, [father Lawrence Melque[3]].

மே 2016லேயே நீதிமன்றம், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 201 [destroying evidence or giving false information, ஆதாரங்களை அழித்தல் மற்றும் போய்யான தகவல்களைக் கொடுப்பது] மற்றும் 202 [intentionally omitting information, வேண்டுமென்றே தெரிந்த தகவலை சொல்லாமல் மறைப்பது]ன் கீழ் வழக்கு பதிவு செய்து, இவர்களை கைது செய்ய ஆணையிட்டது[4]. சர்ச்சில் இருக்கும் பெரிய கிருத்துவ சாமியார்கள் இவ்வாறேல்லாம் செய்யலாமா என்று எந்த பகுத்தறிவுவாதி, செக்யூலரிஸவாதி அல்லது சமதர்ம போராளி என்று யாரும் கேட்கவில்லை. ஒரு பெண் கொலைசெய்யப் பட்டாலே என்று பெண்ணிய வீராங்கனைகளும் கண்டு கொள்ளவில்லை.

Fathima murder case - Bishop and four vicars arrested

பிஷப் கைதானாரா இல்லையா?: ரோஷலின் சாமர்த்தியமாக இவர்களுடன் செல்போனில் பேசி அவர்களது உரையாடலை பதிவு செய்து, போலீஸாரிடம் சமர்ப்பித்தார்[5]. பிறகு அதனை நீதிமண்ரமும் ஏற்றுக் கொண்டது. சோபியா எழுதிய கடிதம்[6] மற்றும் ஆரோக்கிய ராஜ்[7], குலந்தை ராஜ், மடலை முத்து முதலியோரின் தொலைபேசி பதிவுகள் முதலியவை கொலை என்று எடுத்துக் காட்டியதால், பிறகு பிரிவு 302ம் [கொலைக்குற்றம்] சேர்க்கப்பட்டது[8]. அவை எல்லாமே ஆதாரங்களாக சேர்க்கப்பட்டன. மே முதல் ஆகஸ்ட் வரை ஜாமீன் கேட்டு காலம் தாழ்த்தினர்[9] மற்றும் மறைந்திருந்தனர்[10]என்றெல்லாம் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இப்பொழுது 12-08-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. பாலக்காடு போலீஸரிடம் சரணடைந்தனர் என்று மலையாள நாளிதழ்கள் கூறுகின்றன. இப்பொழுது கூட பிஷப் தலைமறைவாகி உள்ளார் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன[12]. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், இவரும் கைதாகி இருக்க வேண்டும். உண்மையை அறிந்து பயப்படும், இப்பிஷப்பை என்ன செய்வது?  கர்த்தர் இவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாரா, ஆதரிக்கிறாரா அல்லது கண்டுகொள்ளவில்லையா?

Fathima murder case - Bishop and four vicars arrested - totally 5

12-08-2016 அன்று பிஷப் மற்றும் நான்கு பாதிரிகள் கைது என்ற விசயம் தமிழ் ஊடகங்களில் வராமல் இருந்தது: கோயம்புத்தூர் சம்பந்தப்பட்ட இவ்விவகரங்களை தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றனவா, இல்லை வேண்டுமென்றே செய்திகளாஇ போடாமல் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இணைதளத்தில் தேடிப் பார்த்தபோது, கேரளாவில் கூட மலையாள மனோரமா போன்றவை இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், இவரும் கைதாகி இருக்க வேண்டும். உண்மையை அறிந்தும் அவை ஏன் மௌனம் சாதிக்கின்றன என்று தெரியவில்லை. சர்ச்சில் இருக்கும் பெரிய கிருத்துவ சாமியார்கள் இவ்வாறேல்லாம் செய்யலாமா என்று எந்த பகுத்தறிவுவாதி, செக்யூலரிஸவாதி அல்லது சமதர்ம போராளி என்று யாரும் கேட்கவில்லை. ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டாள் மற்றும் கொலைசெய்யப் பட்டாலே என்று பெண்ணிய வீராங்கனைகளும் கண்டு கொள்ளவில்லை. இவற்றிற்கெல்லாம் சாதாரணமாகக் கொதித்தெழும் போராளிகள் அமைதியாக இருக்கின்றனர். 2013லிருந்து இவ்வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை போலும். ஆக இவர்கள் எல்லோருமே செக்யூலரிஸ போதையில் இருந்தால், ஒன்றுமே தெரியாது போலும்! இத்தகைய ஊடக பாரபட்சமும் இருப்பதால் தான், இதனை எடுத்துக் காட்ட வேண்டியதாகிறது.

© வேதபிரகாஷ்

20-08-2016


Bishop Thomas Aqunas, Coimbatore diocese

[1] http://naradanews.com/2016/08/a-mother-chases-down-the-culprits-of-her-daughters-murder-narada-news-receives-exclusive-phone-conversations/

[2] Indian Express,  Kerala: Bishop, three priests held for hiding info on woman’s death

Written by Shaju Philip | Thiruvananthapuram | Published:August 14, 2016 4:48 am

http://indianexpress.com/article/india/india-news-india/kerala-bishop-three-priests-held-for-hiding-info-on-womans-death-2974222/

[3] http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Fathima-murder-case-Court-orders-arrest-of-4-priests/articleshow/52486499.cms

[4] The Times of India, Fathima murder case: Court orders arrest of 4 priests, TNN | May 29, 2016, 07.26 AM IST

[5] http://naradanews.com/2016/08/a-mother-chases-down-the-culprits-of-her-daughters-murder-narada-news-receives-exclusive-phone-conversations/

[6] http://naradanews.com/2016/08/a-mother-chases-down-the-culprits-of-her-daughters-murder-narada-news-receives-exclusive-phone-conversations/

[7] http://naradanews.com/2016/08/a-mother-chases-down-the-culprits-of-her-daughters-murder-narada-news-receives-exclusive-phone-conversations/

[8] In a sting operation carried out by a local television channel, father H Arcockiaraj had confessed to his crime. After that the Kerala police re-opened the case and changed the sections to 302 (murder).

http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Fathima-murder-case-Court-orders-arrest-of-4-priests/articleshow/52486499.cms

[9] http://news.keralaonline.in/Fathima-Sofia-murder-case-4-priests-and-Bishop-arrested-1376301

[10] http://www.ucanindia.in/news/bishop-three-priests-held-for-hiding-info-on-woman%E2%80%99s-death/32794/daily

[11] http://www.bignewslive.com/fathima-sofia-murder-case-4-vicars-arrested/ – .V7enIlt95dg

[12] ഫാത്തിമ സോഫിയ വധം: നാല് വൈദികര്‍ അറസ്റ്റില്‍; ബിഷപ്പ് ഒളിവില്‍; പാലക്കാട്ടെ പള്ളിക്കെട്ടിടത്തിലെ കൊലപാതകം പുറത്തു കൊണ്ടുവന്നത് ഒരമ്മയുടെ ഒറ്റയാള്‍ പോരാട്ടം.

 http://ml.southlive.in/newsroom/kerala/fathima-sofia-murder-4-priests-surrendered

பாத்திமா சோபியா திடீரென்று மரணித்தது, கொலையென்று மாறியது, ஆரோக்கிய ராஜ் பதவி விலக்கம்: சர்ச்சில் தொடரும் மர்மங்கள்! (2)

ஜூலை 31, 2015

பாத்திமா சோபியா திடீரென்று மரணித்தது, கொலையென்று மாறியது, ஆரோக்கிய ராஜ் பதவி விலக்கம்: சர்ச்சில் தொடரும் மர்மங்கள்! (2)

பாத்திமா சோபியா 07-07-1995 - 23-07-2013 புகைப்படங்கள்

பாத்திமா சோபியா 07-07-1995 – 23-07-2013 புகைப்படங்கள்

சாந்தி ரோஸ்லின் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு: இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு[1]: “கோவை மைக்கேல் பேராலயத்தின் உதவி பங்கு தந்தையாக இருந்தவர் ஆரோக்கியராஜ் [Father Arockiaraj]. இவர் எங்களுக்கு குடும்ப ரீதியாக நண்பரானார். எனது மகள் பாத்திமா சோபி [ Fathima Sophie (18)]நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வாளையார் பகுதியிலுள்ள புனித தனிஸ்லாஸ் தேவாலயத்தில், எனது மகளை ஆசிரியராக ஆரோக்கியராஜ் நியமித்தார். விடுமுறை நாட்களில், அருகிலுள்ள கன்னியர் மடத்தில் தங்கி விடுவாள். 2013 (௨௦௧௩)ம் ஆண்டு வலுக்கட்டாயமாக வாளை யார் பேராலயத்துக்கு, எனது மகளை ஆரோக்கியராஜ் அழைத்து சென்றார். அன்றைய தினம் எனது மகள், தற்கொலை செய்ததாக பாதிரியார் தெரிவித்தார். ஜூலை.23, 2013 அன்று பாத்திமா சோபியின் உடல் கண்டெடுக்கப் பட்டது[2].ஆனால், எனது மகள் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கிறோம். இதுகுறித்து கேரள முதல்வர், டி.ஜி.பி., ஆகியோரிடம் முறையிட்டோம். எனது மகள் பலியானது தொடர்பாக பாதிரியாருக்கு உள்ள தொடர்பு பற்றி, நான் தெரிவித்த கருத்துக்களால் சிலர், எனது வீட்டை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது[3]. சோபியா எழுதி வைத்துள்ள கடிதத்தில், அப்பாதிரி தன்னை பாலியில் ரீதியில் தொந்தரவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தாள்[4]. அதனால் தான், அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததாகவும் ரோஸ்லின் தெரிவித்தார். பாதிரியார் ஆரோக்கியராஜை போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் போனை ‘அட்டெண்ட்’ செய்யவில்லை[5].

பரிதாபகரமான அகால மரணம் அல்லது கொலை மறுபடியும் பல கேள்விகளை எழுப்புகின்றன: பாத்திமா சோபியா பரிதாபமாக அகால மரணம் அல்லது கொலை மறுபடியும் பல கேள்விகளை எழுப்புகின்றன:

 1. கத்தோலிக்க சர்ச்சில் ஏன் இளம்பெண்களை, வாலிப பாஸ்டர்கள், பாதிரிகள் முதலியோருடன், பழக அனுமதிக்கப் பட வேண்டும்?
 1. பைபிள், வகுப்பு, இறையியல் போதனை, பாட்டு பாடுதல், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று இளம்பெண்களை ஏன் வாலிப பாஸ்டர்கள், பாதிரிகளோடு சேர்ந்து கலந்து கொள்ள அனுமதிக்கப் பட வேண்டும்?
 1. தொடர்ந்து கத்தோலிக்க பாஸ்டர்கள், பாதிரிகள், சாமியார்கள் பாலியல் வன்மங்களில், செக்ஸ்-விவகாரங்களில், கற்பழிப்புகளில் ஈடுபட்டு வரும் போது, பெற்றோர் தவிர்க்கலாமே?
 1. பெற்றோர்களிடம் நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு கத்தோலிக்க பாஸ்டர்கள், பாதிரிகள், சாமியார்கள் என்ன செய்கிறார்கள்?
 1. பெற்றோர்களுக்கு சந்தேகம் எழாத அளவிற்கு, கத்தோலிக்க பாஸ்டர்கள், பாதிரிகள், சாமியார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?
 1. ஒருவேளை அவ்வாறு பழகுவது, காதலில் முடியும், திருமணம் செய்து வைக்கலாம் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்களா?
 1. கத்தோலிக்கத்தில், எவ்வாறு கத்தோலிக்க பாஸ்டர்கள், பாதிரிகள், சாமியார்கள் முதலியோர் எவ்வாறு தங்களது “பிரம்மச்சரியத்திலிருந்து” வெளி வந்து அவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளனர்?
 1. இதுவரை வெளிவந்த விசயங்கள், வழக்குகள் முதலியவற்றில் எல்லாம், கத்தோலிக்க பாஸ்டர்கள், பாதிரிகள், சாமியார்கள் இளம்பெண்களுடன்
 2. ஆசைக்காட்டி, உடலுறவு வைத்துக் கொண்டு,
 3. பிறகு, நான் சாமியார் அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது,
 • ஒன்று இதேபோல என்னுடன் இருந்து கொண்டிரு அல்லது
 1. வேறு எவரையாவது திருமணம் செய்து கொள்,
 2. கருவுற்றிருந்தால் கருவைக் கலைத்து விடு,
 3. திருமணம் செய்து கொள்,
 • நானே உனக்கு திருமாம் செய்து வைக்கிறேன் என்று தான் உள்ளது.
 1. பெற்றோர்களுக்கு நிச்சயமாக, இவ்விகாரங்கள் தெரிந்திருக்கும் என்பதனால், அவர்கள் தங்களது பெண்களை அனுப்பி வைக்கின்றனர் என்றால், என்ன விசயம் என்று தெரியாத புதிராக உள்ளது.
 1. அனுப்பி வையுங்கள் என்று சர்ச்சில் வற்புருத்தல் உள்ளதா, இறையியல் ஒப்புதல் இருக்கிறதா அல்லது அவ்வாறான கடமையை வைத்து, இவ்வாறு சீரழிப்பில் ஈடுபடுகிறார்களா?
 1. , “மைனர்” பண் மீது, எந்த கத்தோலிக்க பாஸ்டர், பாதிரி கை வத்தாலும், உடனடியாக “டிஸ்மிஸ்” செய்யுமாறு போப் சட்டம் எடுத்து வந்துள்ளார் என்றால், முதலில் அவ்வாறு மைனர்-பெண்கள் அழகுவதே தவறு, பெற்றோர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் அற்வுரை கூறி இருக்க வேண்டுமே?
 1. பதவி விலக்கம் செய்தால், மறுபடியும், ருசி கண்ட அந்த கத்தோலிக்க பாஸ்டர்கள், பாதிரிகள், சாமியார்கள் மறுபடியும் பெண்களை நாடி செல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

இந்திய கிருத்துவம் மேனாட்டு கலப்புகளினின்று விடுபட முடியுமா?: இளம்-பெண்கள் இவ்வாறு பாலியல் குற்றங்களுக்குட்படுத்தப் படும் போது, மதம் என்று கூட பார்க்க வேண்டாம், அவகளுக்கு உரிய “பாதுகாப்பை” அளிக்க ஆவண செய்ய வேண்டும். “பாதுகாப்பு” என்றால், போலீஸார் முதலியோரது பாதுகாப்பு அல்ல, மதகுருக்கள், சந்நியாசிகள், சாமியார்கள் நாணயமாக, நேர்மையாக இருக்க வேண்டும். அதற்கு எளிமை தான் உதவும், இக்காலத்தில் கிடைக்கும் நவீன வசதிகளுடன் அவர்கள் வாழ்ந்து, வேலைக்காக இறையியல் போதித்து, நீயாயம்-தர்மம் பேசினால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அவர்கள் ஒழுக்கமாக இருந்தால், மற்றவர்களின் ஒழுக்கமும் பேணப்படும். கிருத்துவத்தைப் பொறுத்த வரையில், வெளிநாட்டிலிருந்து, இந்தியாவுக்கு வந்ததால், என்னதான், “இந்தியமுறைப்படுத்தப்பட்டாலும்”, அது மேற்கத்தைய கலப்பினை, தாக்கத்தினை, காரணிகளை விடுத்து தனியாக இயங்க முடியாது. அந்நிலையில் தான், இத்தகைய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் முதலியன ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அவற்றை கத்தோலிக்க பாஸ்டர்கள், பாதிரிகள், சாமியார்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

31-07-2015

[1] தினமலர், பெண் கொலையில் பாதிரியாருக்கு தொடர்பு? போலீஸ் கமிஷனரிடம் தாய் புகார், ஜூன்.17, 2015.

[2] She claimed that on July 23, 2013, the priest had come to her home and forcibly taken her daughter to Walayar where he allegedly tried to misbehave with her and later murdered her and made out as if her daughter committed suicide.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/woman-seeks-police-protection/article7323865.ece

[3] http://www.dinamalar.com/district_detail.asp?id=1276486

[4] Later, Ms. Rosalyn said that they came across a letter written by her daughter in which she had allegedly stated that she was being harassed.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/woman-seeks-police-protection/article7323865.ece

[5] http://www.dinamalar.com/district_detail.asp?id=1276486&Print=1

பாத்திமா சோபியா திடீரென்று மரணித்தது, கொலையென்று மாறியது, ஆரோக்கிய ராஜ் பதவி விலக்கம்: சர்ச்சில் தொடரும் மர்மங்கள்! (1)

ஜூலை 31, 2015

பாத்திமா சோபியா திடீரென்று மரணித்தது, கொலையென்று மாறியது, ஆரோக்கிய ராஜ் பதவி விலக்கம்: சர்ச்சில் தொடரும் மர்மங்கள்! (1)

சாந்தி ரோஸ்லின் - சொல்வதெல்லாம் உண்மை - ஜி-டிவி 15-06-2015

சாந்தி ரோஸ்லின் – சொல்வதெல்லாம் உண்மை – ஜி-டிவி 15-06-2015

சொல்வதெல்லாம் உண்மைஎன்றஜிடிவியில்நிகழ்சியில் சாந்தி ரோஸ்லின் பேட்டி: “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்சி “ஜி-டிவியில்” ஜூன்.15 மற்றும் 16, 2015 நாட்களில் காண்பிக்கப்பட்டது. அதில் 23-07-2013 அன்று தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படும் பாத்திமா சோபி, உண்மையில் ஆரோக்கியராஜ் என்ற பாதிரியால் கொல்லப்பட்டதாக, அவரது தாயார் சாந்தி ரோஸ்லின் நிகழ்சியில் விவரித்தார்[1]. அப்பேட்டி, இவ்வாறு ஆரம்பிக்கிறது. ஆரோக்கிய ராஜ் தன்னிடம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினாராம். ஏன் என்று கேட்டதற்கு, “மைனர்” பண் மீது, எந்த கத்தோலிக்க பாஸ்டர், பாதிரி கை வத்தாலும், உடனடியாக “டிஸ்மிஸ்” செய்யுமாறு போப் சட்டம் எடுத்து வந்துள்ளார், அதனால் தான் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று விளக்கம் அளித்தார். ஆனால், சாந்தி ரோஸ்லின், “உங்களுக்குத் தான் சோபியாவை சிறிய வயதிலிருந்தே தெரியுமே. அவளுக்கு 18 வயது ஆகிறதே”, என்று கேட்டதற்கு, “இல்லை, அவள் பிளஸ்-1 மற்றும் 2 படிக்கும் போது………………..நான் முறைப்படித்தான் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்”, என்றாராம் ஆரோக்கிய ராஜ். (இங்கு உரையாடல் திடீரென்று மாறுகிறது). ஆனால், அவருக்கும், சோபியாவுக்கும் ஏதாவது உறவு இருக்கும் என்றது தொணித்தது.

பாத்திமா சோபியா 07-07-1995 - 23-07-2013 பெற்றோர் கல்லறையில் பிரார்த்தனை செய்வது

பாத்திமா சோபியா 07-07-1995 – 23-07-2013 பெற்றோர் கல்லறையில் பிரார்த்தனை செய்வது

கண்டுபிடிக்க முடியாத வழக்கு” – புகார் கொடுத்ததால் திறக்கப்பட்டது: அவேளையில், அவரது உறவினரான, பத்திரிக்கையாளர் ஒருவர் வந்து, போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் முதலியவற்றைப் படித்துப் பார்த்தீர்களா, என்று கேட்டபோது, சாந்தி இல்லையென்றாராம். அப்பொழுது, இல்லை, உங்களது மகள் எப்படி இறந்தாள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ல வேண்டும் என்றார். அதனால், அவர் ஆவணங்களை கேட்க ஆரம்பித்து, பார்க்க ஆரம்பித்தார். போலீஸார் “கண்டுபிடிக்க முடியாத வழக்கு” என்று வழக்கை முடித்து விட்டனர். இதனால், போஸ்ட் மார்ட்டம் அறிக்கையைப் படித்துப் பார்த்த போது, கழுத்து நெறிக்கப்பட்டு இறந்திருப்பது போலிருக்கிறது. கழுத்தை இறுக்கியதால், வாயில் ரத்தம் வந்திருக்கிறது. அதனால் கொலை செய்திருப்பது தெரியவந்தது. பிறகு, சந்திராபுரம் போலீஸ் ஷ்டேசனுக்குச் சென்று எப்.ஐ.ஆர். காபி வாங்கிக் கொண்டனர்.  சவத்தின் போட்டோ வாங்கிப் பார்த்த போது, வாயில் ரத்தம் வந்திருப்பது தெரிந்தது. இதனால், கொலை செய்யப் பட்டது உறுதியாகத் தெரிந்ததால், அவர்களை விடக்கூடாது என்று தீர்மானித்ததாக ரோஸ்லின் கூறினார். பத்து லட்சம் வாங்கிக் கொண்டார் என்ற பேச்சும் வந்தது. ஆரோக்கியராஜுவோடு 25-02-1015 அன்று, சாந்தி ரோஸ்லின் போனில் பேசிய உரையாடலை பதிவு செய்ததையும் ஒலிபரப்பட்டது. குழந்தை ராஜ் என்பவர், ஆரோக்கியராஜ், பாத்திமா சோபியைத் தள்ளி, கழுத்தை நெறித்துக் கொன்றதை தன்னிடம் சொன்னதாக, சாந்தி ரோஸ்லின் கூறுகிறார்.

பாத்திமா சோபியா 07-07-1995 - 23-07-2013

பாத்திமா சோபியா 07-07-1995 – 23-07-2013

ஜிடிவி பேட்டிக்குப் பிறகு சாந்தி ரோஸ்லின் வீடு தாக்கப்படல்: கோவை, கோட்டைமேடு, சாமியார் புதுவீதியை சேர்ந்த சகாயராஜூ மனைவி எஸ். சாந்தி ரோஸ்லின் [S Shanthi Rosalyn (40)], கோவை உள்ளூர் டிவி-செனலில் பேட்டி கொடுக்கும் போது, தனது மகளாக பாத்திமா சோபியை, கோவை மைக்கேல் பேராலயத்தின் பங்கு தந்தையான, ஆரோக்கியராஜ் கொலை செய்து விட்டதாக கூறினார். திங்கட்கிழமை 16-06-2015 அன்று இரவு 8.30க்கு இந்நிகழ்சி ஒலி-ஒளிபரப்பு செய்யப்பட்டது[2]. இதனால், சர்ச்-நம்பிக்கையாளர் மற்றும் விசுவாசிகளிடம் பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. சாந்தி ரோஸ்லின் இவ்வாறு பேட்டி கொடுத்தவுடன், அன்றிரவே ஒரு கும்பல் வந்து, அவரது வீட்டின் மீது கற்கள் எரிந்து தாக்கினர்[3]. அருகில் இருந்த மக்கள் வந்ததால், அவர்கள் ஓடிவிட்டனர். இதனால், தனக்கு பாதுகாப்புக் கொடுக்கும் படி, ரோஸ்லின் போலிஸாரிடம் கேட்டுக் கொண்டார்[4].  புகார் கொடுத்த பெண்ணின் வீடு தாக்கப் பட்டது என்ற போதும், ஆங்கில ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது வேடிக்கையாக இருக்கிறது (தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், சிறிய செய்திகளை வெளியிட்டன, ஹூனியர் விகடன் விவரங்களுடன் கீழ் கண்டவாறு வெளியிட்டது).

பாத்திமா சோபியா 07-07-1995 - 23-07-2013 புகைப்படங்கள் கல்லறை

பாத்திமா சோபியா 07-07-1995 – 23-07-2013 புகைப்படங்கள் கல்லறை

மத அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளும் தவறுகளும் தெரியாமல் மறைக்கப்படுகின்றன: மத அமைப்புகளில், மத அடையாளங்களுடன் நடக்கும் முறைகேடுகளும் தவறுகளும் கூடுமானவரை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகின்றன. சில சம்பவங்கள்தான் வெளிச்சத்துக்கு வருகின்றன. கோவையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது கல்லூரிப் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த பாதிரியார், அந்த இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம்! தன் மகள் கொலை செய்யப்பட்டதை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் போராடி நிரூபித்துள்ளார் அவரது தாய் சாந்தி ரோஸ்லின். (இங்கு கூட முதலில் “முறைகேடுகளும் தவறுகளும்” என்று ஆரம்பித்து “கொலை செய்த சம்பவம்!” என்று இழுத்து, “கொலை செய்யப்பட்டதை” என்று முடித்திருக்கிறார்கள்! இருப்பினும் செய்தியை வெளியிட்டதற்காக பாராட்ட வேண்டும்)

பாத்திமா சொப்பி, ஆரோக்கிய ராஜ்

பாத்திமா சொப்பி, ஆரோக்கிய ராஜ் – படம் ஜூனிய விகடன் – நன்றி

சர்ச் பாதிரியார் ஆரோக்கியராஜ் அறையில் மர்மமான முறையில் ஃபாத்திமா சோஃபி இறந்து கிடந்தார்: கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சகாயராஜ் – சாந்தி ரோஸ்லின் தம்பதியர். இவர்களது ஒரே மகள் ஃபாத்திமா சோஃபி. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரள மாநிலம், வாளையாரையடுத்த சந்திராபுரம் புனித தனிஸ்லாஸ் ஆலய வளாகத்தில் உள்ள சர்ச் பாதிரியார் ஆரோக்கியராஜ் அறையில் மர்மமான முறையில் ஃபாத்திமா சோஃபி இறந்து கிடந்தார். ஃபாத்திமா சோஃபி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகவும், காப்பாற்றி கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டதாகவும் பாதிரியார் ஆரோக்கியராஜ், சந்திராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க,தற்கொலை என வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்தது கேரளா காவல் துறை. இப்போது பழைய வழக்கை மறுவிசாரணை செய்து பாதிரியார் ஆரோக்கியராஜையும், அவருக்கு உதவியவர்களையும் கைதுசெய்யச் சொல்லி கேரளா காவல் துறையிடம் முறையிட்டுள்ளார் சாந்தி ரோஸ்லின். இதுதொடர்பாக சாந்தி ரோஸ்லினிடம் பேசினோம்[5] (ஜூனியர் விகடன் படி).

சாந்தி ரோஸ்லின் - தாயார் புகார் கொடுத்தார்

சாந்தி ரோஸ்லின் – தாயார் புகார் கொடுத்தார் – நன்றி – ஜூனிய விகடன்

மறைக்கல்வி வகுப்பு எடுப்பதற்காக என் பொண்ணை வாளையாருக்குக் கூட்டிட்டுப் போவாரு. அதனால எந்த சந்தேகமும் படல:  ‘‘ஃபாதர் ஆரோக்கியராஜுக்கு சோஃபி சிறுகுழந்தையாக இருக்கும்போதிருந்தே தெரியும். அப்போ அவர் கோயம்புத்தூர்ல உதவி பங்குத் தந்தையா இருந்தாரு. அப்புறம் சந்திராபுரம் சர்ச்க்குப் போயிட்டாரு. சோஃபி 10-வது படிக்கறப்போ அடிக்கடி தலைவலி வர ஆரம்பிச்சது. அதனால சிகிச்சைக்காகக் கேரளாவுக்குப் போனோம். அப்போது ஃபாதர் ஆரோக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவரோட பழக்கம் அதிகமாச்சு. மாசத்துல ஒருநாள் சின்ன குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்பு எடுப்பதற்காக என் பொண்ணை வாளையாருக்குக் கூட்டிட்டுப் போவாரு. அதனால அவர் மேல நாங்க எந்த சந்தேகமும் படல. 2013-ம் வருஷம் ஜூலை மாசம் 22-ம் தேதி என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாததால நானும், என் கணவரும் ஹாஸ்பிட்டல்லேயே தங்கிட்டோம். அப்போது சோஃபியை ஃபாதர் ஆரோக்கியராஜ் சந்திராபுரம் சர்ச்க்குக் கூட்டிட்டுப் போயிருக்கார் (ஜூனியர் விகடன் படி).

Mother accuses xian father for killing her daughter June 2013

Mother accuses xian father for killing her daughter June 2013

நான் செத்துட்டா அதுக்குக் காரணம், ஃபாதர் ஆரோக்கியராஜ்தான்னு எழுதி இருந்தா: அங்கேதான் என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்லி உடலை ஒப்படைச்சாங்க. இதற்கிடையில ஃபாதர் ஆரோக்கியராஜை சஸ்பென்ட் பண்ணாங்க. இந்த நிலையில், என் பொண்ணு எழுதின ஒரு கடிதம் கிடைச்சது. அதுல ‘நான் செத்துட்டா அதுக்குக் காரணம், ஃபாதர் ஆரோக்கியராஜ்தான்’னு எழுதி இருந்தா. அதனால ஆரோக்கியராஜ்கிட்ட போன்ல பேசி அனைத்தையும் ரெக்கார்டு பண்ணினேன். அதை ஒரு டி.வி நிகழ்ச்சியில கொண்டுபோய் கொடுத்தேன். அங்கேயும் உண்மைய ஒத்துக்கிட்டாரு. இப்போ அந்த வீடியோ, ஆடியோவை கேரளா போலீஸ்கிட்ட கொடுத்து, மறு விசாரணை செஞ்சு, ஃபாதர் ஆரோக்கியராஜையும், அவருக்கு உடந்தையா இருந்தவங்களையும் கைது செய்ய வலியுறுத்தியிருக்கோம்” என்றார் ஆவேசமாக (ஜூனியர் விகடன் படி).

கன்னியாஸ்திரி கற்பழிப்பிற்கு எதிராக போராட்டம் - சி.பி.சி.ஐ பேனருடன்

கன்னியாஸ்திரி கற்பழிப்பிற்கு எதிராக போராட்டம் – சி.பி.சி.ஐ பேனருடன்

அவளுக்கும் எனக்கும் லிங்க் இருந்துச்சுஆரோக்கியராஜ்: ஆரோக்கியராஜ் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வீடியோ காட்சிகளை நாமும் பார்த்தோம்[6]. அதில், ‘‘நான் திட்டமிட்டு கொலை செய்யல அக்கா (சாந்தி ரோஸ்லின்). அவளுக்கும் எனக்கும் லிங்க் இருந்துச்சு. அன்னைக்கு என் ரூம்ல இருந்தப்போ திடீர்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டா. என் ரூம்ல பொண்ணு இருந்தது தெரிஞ்சா எனக்கு ரொம்ப பிரச்னை ஆயிடும். அதனால அவ சத்தம் போடாம இருக்க துப்பாட்டாவை பிடிச்சு இழுத்தேன். அதுல கழுத்து நெறிஞ்சி மயங்கிட்டா. ஹாஸ்பிட்டல் கொண்டு போறதுக்குள்ள வழியிலேயே இறந்துட்டா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவளை ப்ளான் பண்ணி எல்லாம் கொலை பண்ணலை. இது ஒரு ஆக்சிடென்ட். பிரஸ்காரங்களுக்கு தெரிஞ்சா இதை பெரிசாக்கி பார்ப்பாங்க. அதனாலதான் இதை நான் ஒத்துக்கிட்டு, சரண்டர் ஆகலை. முடிஞ்சவரைக்கும் என்னை இதுல இருந்து காப்பாத்துங்க அக்கா. நான் பண்ணது தப்புதான். தெரியாம பண்ணிட்டேன்’’ என சாந்தி ரோஸ்லினிடம் பேசுகிறார் ஃபாதர் ஆரோக்கியராஜ் (ஜூனியர் விகடன் படி).

© வேதபிரகாஷ்

31-07-2015

[1] https://youtu.be/TR4pNBDv_eo; https://youtu.be/5mxxyd0KxJc

[2] A woman, who alleged in a television show that a church priest had murdered her daughter, approached the Coimbatore City Police on Tuesday seeking protection and a fresh inquiry into her daughter’s death. She alleged that the followers of the priest had stoned her house on Monday night after the show was telecast at 8.30 p.m.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/woman-seeks-police-protection/article7323865.ece

[3] Komal Gautham, Tamil Nadu woman seeks police protection after she accuses priest of murdering her daughter TNN | Jun 16, 2015, 04.16PM IST.

[4] A woman in Coimbatore sought police protection on 16-06-2015 (Tuesday), a day after she alleged in a television show that a Christian priest had murdered her daughter. A mob pelted stones at the residence of S Shanthi Rosalyn (40) at Kottaimedu here on Monday night after a Tamil TV channel telecast her statement. In the TV show, Rosalyn alleged that the Christian priest, Father Arockiaraj, had murdered her daughter, Fathima Sophie. Sophie was found dead on July 23, 2013 and a case was registered at a police station in Kerala.

http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-woman-seeks-police-protection-after-she-accuses-priest-of-murdering-her-daughter/articleshow/47690632.cms

[5] http://www.vikatan.com/article.php?page=2&module=magazine&mid=2&sid=3264&aid=107495.

[6] ஜூனியர் விகடன், சத்தம் போடாம இருக்க துப்பட்டாவை இழுத்தேன் !, 24 Jun, 2015

Posted Date : 06:00 (20/06/2015); Last updated : 06:00 (20/06/2015)