Archive for the ‘கை’ Category

கேரளாவின் பாஸ்டர், மணிப்பூரிலிருந்து சிறுமிகளை வரவழைத்து, ஜெய்பூரில் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது!

செப்ரெம்பர் 4, 2013

கேரளாவின் பாஸ்டர், மணிப்பூரிலிருந்து சிறுமிகளை வரவழைத்து, ஜெய்பூரில் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது!

ஜேகப் ஜான், சிறுமிகளை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய பாஸ்டர்

ஜேகப் ஜான், சிறுமிகளை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய பாஸ்டர்

கிரேஸ்ஹோம்என்ற கிருத்துவ குழந்தைகள் காப்பகத்தில் நடந்த செக்ஸ்-பாலியல் விளையாட்டுகள்: பாஸ்டர் ஜேகப் ஜான் என்பவன் 9 முதல் 20 வரையிலுள்ள சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்து தனது காமப்பசியைத் தீர்த்துக் கொண்டுள்ளான். கேரளாவைச் சேர்ந்த இவன் எப்படி ராஜஸ்தானில் வந்து, குழந்தை காப்பகம் பெயரில் இப்படி குழந்தை-விபச்சாரம் நடத்தி வந்தான் என்று தெரியவில்லை[1]. இரண்டாவதாக ஒரு ஹாலந்து நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்ஆனாம். பிறகு முதல் மனைவி சமாச்சாரம் என்ன என்று தெரியவில்லை. இரண்டு மனைகளை வைத்து அனுபவித்தப் பிறகும், அப்பாவி வயதுக்கு வந்த சிறுமிகளை-இள்:அம் பெண்களை ஏன் செக்ஸ்-வன்புணர்ச்சிகளில் ஈடுபட வைத்தான், அனுபவித்தான் என்று தெரியவில்லை. அவனது மனோநிலைதான் என்ன, எப்படி அத்தகைய வக்கிர காமத்தில் ஈடுபட்டு பெண்களை சீரழித்தான் என்றும் தெரியவில்லை.

சிறுமிகள் பட்ட பாடு

சிறுமிகள் பட்ட பாடு

கிரேஸ் ஹோம்காப்பகத்தில் நடந்த செக்ஸ்-பாலியல் குற்றங்களினால் மார்ச் 2013ல் ரெயிட்:  மார்ச் 12, 2013 அன்று அவனது “கிரேஸ் ஹோம்” என்ற குழந்தைகள் காப்பகத்தை ரெயிட் செய்தலில் 53 குழ்ந்தைகளை விடுவித்துள்ளனர்[2]. இதில் எப்.எக்ஸ்.பி. இந்தியா சுரக்ஷா [NGO FXB India Suraksha], ராஜஸ்தானின் சிறுவர்-சிறுமியர் உரிமைகள் காக்குக் கமிஷன் [Rajasthan Commission for Protection of Child Rights]  மற்றும் ராஜஸ்தான் போலீஸ் [Jaipur Police] சேந்து இந்த அதிரடி சோதனை, ரெயிடை மேற்கொண்டுள்ளன[3]. மொத்தம் 53 என்றுள்ள அக்குழந்தைகளுள், 23 மணிப்பூர் மாநிலத்திலிருந்து 2004 முதல் 2009 வரை உள்ள காலத்தில் வந்தவர்கள் / வரவழைக்கப்பட்டவர்கள் ஆகும்[4]. 15 பேர் ஆண்கள் மற்றவர்கள் பெண்கள். ஏற்கெனவே திருமணம் ஆன இவன், 2010ல் ஒரு ஹாலந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு, வேறொரு இடத்தில் வசித்து வந்தான்[5]. இங்கு வந்து போய் கொண்டிருந்தான். ரெயிட் நடந்தபோது, இரண்டு பென்களுடன் தப்பி ஓடிவிட்டாள்[6]. இவனது மைத்துனி மணிப்பூரில் இருப்பதால், அங்கிருந்து குழந்தைகளை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தாள்[7].

எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய தாய்மார்கள், பெண்கள்

எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய தாய்மார்கள், பெண்கள்

மணிப்பூரிலிருந்து ஜெய்பூருக்கு சிறுமிகள் அழைத்து வரப்பட்ட விவரங்கள்: தங்க்குல் ஷானவோ லான்ங் தில்லி  [Tangkhul Shanao Long, Delhi – TSLDடென்ற அமைப்பு, இந்த குழந்தை விபச்சார வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விசயத்தை வெளியிட்டது. மணிப்பூரில் உக்ருல் மாகாணத்தில் தூய்னெம் என்ற கிராமத்தில் இருக்கும் லுங்னெம் வஷி [Lungnem Vashi] என்பவள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறான். பெலிசிதா ஷோங்வா [Felicita Shongvah] சொல்வதாவது, ஜேகப் ஜானின் இளைய சகோதரன் இவளை திருமணம் செய்து கொண்டுள்ளான். ஏ.எஸ். வொர்ட்திங்லா [A.S.Worthingla] என்பவனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளான். ரெயிட் நடந்த போது லுங்னெம் வஷி மற்றும் ஏ.எஸ். வொர்ட்திங்லா தில்லிக்கு வந்துள்ளனர்[8]. இவர்கள் தில்லிக்கு வந்த விசயம் ஏன் என்று தெரியவில்லை.

விவரங்களைக் கொடுத்த அமைப்பு - Tangkhul Shanao Long, Delhi (TSLD) Unit

விவரங்களைக் கொடுத்த அமைப்பு – Tangkhul Shanao Long, Delhi (TSLD) Unit

இடம், உடை, உணவுஎல்லாம்கொடுக்கப்படும்என்று ஏமாற்றி அழைத்து வந்த விதம்: சிறுமிகள், இளம்பெண்கள் அதிகமாக இருந்த அந்த இல்லத்திற்கு வார்டனாக, பெண்ணிற்கு பதிலாக 14 வயது கொண்ட ஒரு பையன் இருந்தான். சுமார் 600 மது-பாட்டில்கள், அழுகிய காய்கறிகள், சுத்தமில்லாத கக்கூஸ் முதலியவற்றைக் கொண்டு அந்த இல்லம் இருந்தது[9]. ஆனால், அவர்களுக்கு இருக்க இடம், உடை, உணவு எல்லாம் கொடுக்கப் படும் என்றுதான் அழைத்து வரப்பட்டனராம்[10]. அறிவிப்புப் பலகையில் சிரித்த முகத்துடன் குழந்தைகள், வெளிநாட்டுக்காரர்கள் முதலிவற்றைக் கொண்ட புகைப்படங்கள் இருந்தன. இதிலிருந்து, வெளிநாட்டிலிருந்து பணம் வருவது தெரிகிறது[11]. போலீசார் இதனையும் விசாரித்து வருகின்றனர்.

அனுமதி இல்லாமல் காப்பகம் - பாலியல் செய்கைகளுக்கு ஈடுபடுத்தப் பட்டது

அனுமதி இல்லாமல் காப்பகம் – பாலியல் செய்கைகளுக்கு ஈடுபடுத்தப் பட்டது

சொசைடிபெயரில் கிருத்துவ வியாபாரம்,  அனுமதி இல்லாமல் குழந்தைகள் காப்பகம்: தொலிதா குமே பவுன்டேசன் [ Tholita Kume Foundation] மற்றும் கிரேஸ் மிஷனரி [Grace Missionary] என்று இரண்டு நிறுவனங்களை சொசைடி சட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தான்[12]. ஆனால், காப்பகத்திற்கு எந்த அனுமதியும் வாங்கவில்லை. எந்த ஆவணங்கள், புத்தகங்கள் எவற்றையும் வைத்துக் கொள்ளவில்லை. சட்டத்திற்குப் புறம்பாக, நடத்தப் பட்டு வந்த அந்த குழந்தைகள் காப்பகத்தில், சரியான கவனிப்பு இல்லாததால், குறிப்பாக ஜேகப் ஜான் அவர்களை தனதிச்சைக்கு உபயோகப் படுத்திக் கொண்டு வந்ததால், அவர்களது உடல்நிலை, ஆரோக்யம் முதலியனவும் சீர்குலைந்திருந்தன[13].

HT-reporting-on-grace-homeபாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளின் நிலை: தொடர்ச்சியாக ஜேகப் ஜான், அந்த சிறுமிகள்-இளம் பெண்களை செக்ஸ் மற்றும் பாலியல் ரீதியில் வன்புணர்ச்சி செயல்களில் ஈடுபடுத்தி வந்ததால், அவர்கள் உடல்-மனம் ரீதியில்  கீழ்கண்டவாறு பாதிக்கப்பட்டுள்னர்:

 • நான்கு குழந்தைகள் இறந்தன
 • இரண்டு திரும்ப அழைத்துச் செல்லும்போது, ரெயிலேயே இறந்து விட்டன.
 • ஒன்று “கிரேஸ் ஹோம்”லேயே இறந்தது.
 • ஒன்று வீட்டிற்குச் சென்றடைந்த பிறகு டி.பியால் இறந்தது.
 • நிறைய பெண் குழந்தைகள் செக்ஸ் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
 • அவர்கள் எப்பொழுதும் ஜேகப் ஜானுடன் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.
 • ஒரு பெண் தான் திரும்ப-திரும்ப தொடர்ந்து கற்பழிக்கப் பட்டு வந்ததாக கூறினாள்.
 • இன்னொரு பெண்ணும் தான் பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்று தெரிவித்தாள்.
 • ஒரு பெண் கர்ப்பமடைந்திருந்தாள்.
 • பெண்களின் கால்கள் உருகுலைந்திருந்தன.
ஒரு இளம் பெண்ணின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலை

ஒரு இளம் பெண்ணின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலை

இந்த பெண்களுக்கு மருத்துவ உதவி, மறுவாழ்வு முதலியன தேவைப்படுகிறது[14]. ஏப்ரல் மாதத்தில், முதலமைச்சர் ஓக்ரம் அபோபி சிங் [Okram Ibobi Singh ] மீட்கப்பட்ட சிறுமிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தங்கி படிக்கும் வகையில் பள்ளிகளை ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

முதலமைச்சர் சிறுமிகளை சந்தித்து விவரங்களை அறிதல்

முதலமைச்சர் சிறுமிகளை சந்தித்து விவரங்களை அறிதல்

பிஜுஜார்ஜ்ஜோசப்விசாரித்த் இரண்டு வழக்குகள்: இந்த வழக்கையும் பிஜு ஜார்ஜ் ஜோசப் தான் விசாரித்து வந்தார்[15]. இவ்வளவும் ஜூன் மாதத்தில் நடந்திருந்தாலும், செய்திகள் அமுக்கி வாசிக்கப் பட்டன. ஏனெனில், தென்னிந்தியாவில், இவ்விசயம் தெரியாமலே இருந்தது எனலாம். இப்படி பல இளம்பெண்களை கற்பழித்து, பாலியல் வன்புணர்ச்சி செய்து ஜேகப் ஜான் மாட்டிக் கொண்டாலும், பிஜு ஜார்ஜ் ஜோசப் அவ்விசயத்தை ஆசாராம் பாபு விசயம் போல் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து விவரிக்கவில்லை. சட்டம் எல்லோருக்கும் சமம் எனும் போது, ஒரே மாநிலம் – ராஜஸ்தான், ஒரே மாதிரியான, ஒரு பக்கம் ஜேகப் ஜான் விசயத்தில் 30ற்கும் மேற்பட்ட சிறுமிகள்-இளம்பெண்கள் பலாத்காரம் மெய்ப்பிக்கப்பட நிலை, இன்னொரு பக்கம் ஆசாராம் பாபுவின் விசயத்தில் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு நிலை, அதாவது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதே போலீஸ் வெவேறு விதமாக நடந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது.

Jacob john rapist of Jaipur

ஊடகங்களின்சினிமாபாணிசூட்டிங், டயலாக்எல்லாம்செய்திகள்ஆகின: ஜேகப் ஜான் விசயத்தில் எந்தவித ஆர்பாட்டமும் இல்லை, ஊடகங்கள் தொடர்ந்து செல்லவில்லை, விவகாரகங்களை படம் பிடித்துக் காட்டவில்லை. ஆனால், ஆசாராம் பாபுவின் விசயத்தில், ஏதோ ஒரு தீவிரவாதியைப் பிடித்துச் செல்வது போல பெரிய போலிஸ் வண்டி, நூற்றுக் கணக்கான போலீஸார் என்று செய்திகளில் காட்டப்பட்டன. ஏதோ திரைப்பட சூட்டிங் எடுப்பது போல, விமானத்தில் கூட நுழைந்து, வீடியோ எடுத்து, நிருபர்களை நிற்கவைத்து பேசுகின்ற அளவிற்கு விமானநிலை அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்கள் முதலியோர் இடம் கொடுத்துள்ளனர். அப்படியென்றால், ஏன் இந்த வித்தியாசம், வேறுபாடு அல்லது பாரபட்சம்? அதாவது, செக்யூலரிஸ ரீதியில் இத்தகைய வழக்குகள் அணுகப்படுகின்றன போலும். இங்குதான் செக்யூலரிஸாத்தின் மீது சந்தேகம் வருகிறது.

© வேதபிரகாஷ்

04-09-2013


[7] John’s sister-in-law, who lives in Manipur is, by his own admission a conduit for sending kids from there on promise of a “better education” to children’s parents, mostly from rural backgrounds.

[8] The president of NGOs involving the Tangkhul Shanao Long, Delhi [TSLD] alleged that a man identified as one Lungnem Vashi from Tuinem village of Ukhrul district, Manipur is also highly suspected to be involved in the child trafficking incident in collaboration with Jacob John. Felicita Shongvah disclosed that Jacob John’s younger brother is married to Lungnem Vashi’s sister. The TSLD president further alleged that the involvement of one A.S.Worthingla of Khamasom Khullen village of Ukhrul district is also suspected. “After the rescue operation of the Grace Home was widely published in the newspapers, Lungnem Vashi and A.S.Worthingla came to Delhi. It was not clear whether Worthingla had gone to Jaipur or not but she wrote to the police station where Jacon John was lodged for the release of the latter,” alleged Felicita Shongvah. – See more at: http://tntmagazine.in/uncategorized/another-raiding-in-jaipur-in-connection-to-child-trafficking/#sthash.T5JBzxIN.dpuf

[9] Six gunny bag full of empty liquor bottles, a butcher’s knife and a rod were among the suspicious articles recovered from the girls’ home. The ‘kitchen’ of the home emanated a stench which got unbearable as one approached the store room – filled with rotting cauliflowers, cabbages and fungus-covered peas and brinjals.

செக்ஸ், கொக்கோக, புரோனோ புத்தகங்களை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் கிருத்துவப் பாதிரிகள்!

ஓகஸ்ட் 12, 2012

செக்ஸ், கொக்கோக, புரோனோ புத்தகங்களை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் கிருத்துவப் பாதிரிகள்!

குறிப்பு: மேனாட்டவர்கள், மேற்கத்தையவர்கள், ஐரோப்பியர்கள் முதலியோர் நம்மைவிட சிறந்தவர்கள், நம்மையாளக் கூடியவர்கள், அவர்கள் தாம் நமக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தவர்கள் என்றேல்லாம் கதையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களது யோக்கியதை இப்படி இருக்கிறது என்பதனால், அது எடுத்துக் காட்டப் படுகிறது

கத்தோலிக்க சர்ச் செக்ஸ் மற்றும் புரோனோ – அதாவது கொக்கோக, சரச, காமலிலைகள், உடலுறுவுகளை விவரிக்கும், வர்ணிக்கும், படம் பிடித்துக் காட்டும்  புத்தகங்களை விற்று லாபம் சம்பாதித்து வருகின்றது[1] என்றால், இதெல்லாம் சகஜமப்பா என்கிறார்கள். வெட்பில்ட் (Weltbild) ஜெர்மனியில் புத்தக பதிப்பு, விநியோகம் செய்துவருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் அவர்கள் விற்பதில் செக்ஸ் மற்றும் புரோனோகிராபிக் புத்தகங்கள், டிவிடி முதலியவை மிகவும் பிரபலமானவை. நம்ம ஊர் மதனகாமராஜன், சரோஜாதேவி, கதைகளை மிஞ்சிவிடும் அளவிற்கு உள்ளன. அதற்கு மேல் அவை விவரிக்குகூடிய நிலையில் இல்லை.

அட்டை படமே கிளுகிளுப்பான காட்சிகளைக் கொண்டிருக்கும்.வெளியிட்டுள்ள புத்தகங்களில் 2500ற்கும் மேற்பட்டவை இத்தகைய பலான புத்தகங்கள் தாம்!கடந்த ஆண்டு  இக்கம்பெனியின் வருமானம் ஒரு பில்லியன் மற்றும் ஆறு மில்லியன் யுரோக்கள்[2] (one billion six hundred million euros ) அதாவது சுமார் 12,000 கோடிகள்!

இதேபோல ட்ரோனெர் நார் (Droemer Knaur) என்ற பதிப்பகத்தாரும் அதே வேலையைச் செய்து வருகின்றனர். அதன் முதலாளிகளும் கத்தோலிக்க பிஷப்புகள் தாம். இதோ அப்புத்தகங்களின் தலைப்புகளில் சில:

கிளுகிளுப்பான பலான கிக்கேற்றும் தலைப்புகள்: இப்பொழுதே அங்கேயும், இங்கேயும் என்னைத்தூக்கிக் கொண்டு போ – “Take me here and take me now”,

நல்ல வேளையாட்களுக்கு செக்ஸ் – “Sex for Experts”,

செக்ஸ் தேவைதைகளுக்கு கையேடு – “Manual for sex goddesses”,

பலான கதைகள் – “Dirty Stories”

சரியான தூண்டிவிடும் சாகசக்காரி – “The perfect seducer”,

சொல்லுடி என்னுடைய தெவிடியாவே – “Tell me bitch!”.

விபச்சாரிகளின் கல்லூரி – “The College of harlots”

என்னை தெவிடியா என்று கூப்பிடு – “Call me slut”

இங்கே ஆங்கிலத்தில் மிகவும் கீழ்த்தரமான, கேவலமான, ஆபாசமான, கொச்சையான வார்த்தைகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தாலே அசிங்கம் என்பதனால், சில பொதுவான வார்த்தைகள் திரும்ப-திரும்ப உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.

வாடிகனுக்குத் தெரிந்தே இந்த வேலைகள் நடந்து வருகின்றனவாம்[3]: போப்புக்குத் தெரிவிக்கப்பட்டதும், அமுக்கி வாசிக்கப்படுகிறது. ஏற்கெனவே வாடிகன் மீது பற்பல செக்ஸ் குற்றங்கள், புகார்கள் பொங்கி வழிந்து நாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், வாடிகன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை[4]. செக்ஸ் விஷயத்தில் வாடிகனுக்கு ஒழுங்கான கொள்கையும் இல்லையென்று கிருத்துவர்களே குற்றஞ்சாட்டுகிறார்கள்[5]. பெயர் கெட்டுவிடும் என்று எல்லா விஷயங்களையும் அமுக்கப் பார்க்கிறதே தவிர, நடந்த, நடந்துள்ள, நடக்கின்ற குற்றங்கள், அசிங்கங்கள், முதலியவற்றை தீர்க்க, சரிசெய்ய எந்த ஒழுங்கான முயற்சியும் எடுக்கவில்லை என்று உண்மையான கிருத்துவர்கள் புழுங்கி மனங்கொதிது தமது உணர்வுகளைக் கொட்டுகிறார்கள்.

ஊருக்கு உபதேசம் செய்யும் கிருத்துவப் பாதிரிகள்-ஜெசுவைட்டுகள்: தண்ணீர் குடி என்று அறிவுரை அளித்துவிட்டு, ரம், ஒயின், விஸ்கி, ஸ்காட்ச் என்று குடிக்கும் பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் மற்ற ஜெசுவைட் சாமியார்களைக் கண்டு கொதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாறுவதாகத் தெரியவில்லை. இப்படி பில்லியந்மில்லியன் என்று பணம் வருகிறது என்றால், யார் தான் அந்த வியாபாரத்தை விட மனம் வரும்?

இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இப்படியிருக்கும் இவர்கள் தாம், இப்பொழுது, அவர்களது பொருட்களை இங்கே விற்கிறோம் என்று சந்தை வியாபாரத்திற்கு வருகிறார்கள். குடி, கும்மாளம் என்று வந்துள்ளது. கிரிக்கெட், அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் எனும் போது விபச்சாரிகளையும் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். போதைமருந்து சீரழிவுகளும் ஆரம்பித்துள்ளன. பிறகு எல்லாம் வந்தவுடன், இந்திய சமூகத்தின் நிலையாகும் என்று பொறுப்புள்ளவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவே இந்தியாவிற்கு இத்தகைய சீரழிவுகள், ஆபாசங்கள், அசிங்கங்கள் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2012


டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)?

ஒக்ரோபர் 30, 2011

டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)?

புகைப்படங்களை “கிளிக்” செய்து பெரியதாகப் பார்க்கலாம்.                                                                                                                                                                                 இன்றைய தினமலரில் வந்துள்ள விளம்பரம்: கிருத்துவர்கள் தங்களுக்கு எந்த அளவில் பணபலம் உள்ளது என்பதனை பெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். ஆமாம், இன்றைய தினமரில் கலரில் / வண்ணத்தில், அதிலும் வலது பக்கத்தில் பார்ப்பதற்கு வசதியாக முழுப்பக்க விளம்பரத்தையே செய்தி போல வெளியிட்டுள்ளனர்[1]. தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப முன்பே எப்படி தினமலரில் பக்கம்-பக்கமாக செய்திகளை வெளியிட்டு, விளம்பரங்களை வெளியிட்டன என்று முன்பே எடுத்துக் காட்டியுள்ளேன். இப்பொழுது தொன் பொஸ்கோ / டான் பாஸ்கோ முறை போலும். ஆக, இப்பொழுதுள்ள விளம்பரத்தில் “தொன் போஸ்கோ நம்மை சந்திக்க வருகிறார்”, என்ற தலைப்பில் –

 1. உலகம் போற்றும் கல்வியாளர் தொன்பொஸ்கோ
 2. புனித தொன் பொஸ்கோவின் பொன்மொழிகள்
 3. அருட்திரு ஜெயபாலன் ச.ச, சென்னை சலேசிய மாநிலத் தலைவரது ஆசியுரை.
 4. அருட்திரு ஸ்டான்லி இக்னேஷியஸ் ச.ச தொன்பொஸ்கோ மேல் நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை, அவருடைய
 5. ஆசியுரை.
 6. தொன்பொஸ்கோ திருக்கரத்தின் புனித பயணம்.
 7. இந்தியாவில் தொன்பொஸ்கோ சலேசியர்களின் சேவை.
 8. புனித தொன் பொஸ்கோவின் திருவுடலின் பயணம்.
 9. புனித தொன் பொஸ்கோ அவர்களின் திருக்கரத்தை தரிசிக்க வாய்ப்பளித்த சலேசிய சபைக்கு நன்றி
 10. இணையற்ற பேரொளி

செய்திகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். இதே மாதிரி மற்ற செய்தித் தாள்களில், பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் கூட செலவு செய்து விளம்பரம் செய்திருப்பார்கள்.


டான் போஸ்கோ / தொன் பொஸ்கோவைப் பற்றி அதிரடி விளம்பரங்கள்: சென்ற வாரமே, “கடந்த இரண்டுமூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்றுஹிந்துஎன்டிடிவியில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம்! “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை[2] என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது[3]. இணைதளங்களில் அளவிற்கு அதிகமான விளம்பரம், பதிவுகள்கருத்தரங்கங்கள் என உள்ளன”, என்று குறிப்பிட்டிருந்தேன். முன்பாக அளவிற்கு அதிகமாக, ஏனோ இவ்விஷயம் எல்லோருக்கும் தெரிந்தே ஆக வேண்டும் அல்லது பார்த்தேயாக வேண்டும் என்ற ரீதியில் விடாப்பிடியாக திணிக்கபட்டு டான் போஸ்கோ பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்த போது தான் சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றி அலசி இரண்டு கட்டுரைகளை – “ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன”?[4] மற்றும் “டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்”?[5] பதிவு செய்தேன்.

வாடிகன், பிடோஃபல் குற்றங்கள், அவற்றை மறைக்கும் முயற்சிகள்: கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக இந்திய கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், குருக்கள், குருமார்கள், பாஸ்டர்கள், பொதகர்கள் என பலர் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டுள்ளனர். குறிப்பாக பிடோஃபைல் என்ற சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியில் சதாய்த்தது, செக்ஸ் கொண்டது, போன்ற குற்றங்களுக்காக அதிகமாகவே சிக்கியுள்ளனர். இது உலகம் முழுவதுமாக நடந்து வந்துள்ளன. வாடிகனுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. பிடோஃபைல் இணைதளத்தையே மறைக்க வேண்டிய சூழ்நிலை வாடிகனுக்கு ஏற்பட்டது. அவ்வாறு மறைத்தபோது எதிர்ப்பு ஏற்பட்டது, ஆனால் வாடிகன் கண்டு கொள்ளவில்லை[6]. அதைவிட கோரமான விஷயம் என்ன்வென்றால், வாடிகனுக்கு பிடோஃபைல் விஷயமாக அறிவுரை கூறிவந்த சாமியாரே, அதே குற்றத்திற்காக மே 2011ல் கைது செய்யப்பட்டார்[7]. ஆண் சாமியார்கள் மட்டுமல்ல கத்தோலிக்க பெண் சாமியார்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை என்ரும் தெரிய வந்தது[8]. மாட்டிக் கொண்டவர்களைத் தண்டிக்காது, கண்டிக்காது, ஏதோ இடமாற்றம் என்ற ரீதியில் தான் நடவடிக்கைகள் இருந்தன[9]. போதா குறைக்கு, ருசி கண்ட பூனை மாறாது என்பது போல, சென்ற இடங்களில் எல்லாம் அந்த கிருத்துவக் குற்றவாளிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் ஒன்று இப்பிரச்சினையை வழக்கம் போல ஆதிக்கத் திணிப்பு, அதிரடி விளம்பரங்கள் என ஈடுபடுவது, இந்திய மதங்களில் குறைகள் இருந்தால் அவற்றைப் பெரிதாக்கி திசைத் திருப்புவது என்ற திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தோன்றுகிறது.

தினமலர் விளம்பரம் என்ன சொல்கிறது: குறிப்பக கிருத்துவர்கள் இந்த விளம்பரத்தின் மூலம் தெரியப்படுத்த விரும்புவதாவது:

 • புனித தொன் பொஸ்கோவின் 200வது ஆண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் புனித தொன்பொஸ்கோவின் திருக்கரம் தாங்கிய திருவுடல் பேழை உலகெங்கும் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு அக்டோபர் 28ம் தேதி சென்னையில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தரிசனத்திற்காக வந்துள்ளது.
 • புனித பயணத்திற்காக 150 ஆண்டுகள் அழியாமல் பாதுகாக்கப் பட்டு வரும் அவரது உண்மையான வலது கரமானது, மெழுகால் செய்யப்பட்ட திருவுடல் மார்புப் பகுதிக்குள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது.

ஆக அதே நேரத்தில் உண்மையினையும் மறைக்க வேண்டியுள்ளது. இதில் பொய்களை உண்மையாகத் தரவேண் டும் என்ற ஆர்வத்தில் அவர்களே, பலமாக திணிக்கும் விதத்தில் கூறப்பட்டுள்ளவை எடுத்துக் காட்டுகிறது:

 1. தொன்பொஸ்கோவின் திருக்கரம் தாங்கிய திருவுடல்” என்றும் “தொன்பொஸ்கோவின் திருவுடல்”, “மெழுகால் செய்யப்பட்ட திருவுடல்” என்றெல்லாம் குறிப்பிடுவது உண்மையினை மறைக்கத்தான்.
 2. அதாவது மனித உடல் புதைக்கப் பட்ட பின், 150 ஆண்டுகளில் மண்ணோடு மண்ணாக போயிருக்கும். ஆகவே பொம்மையை, உண்மையான உடல் போல காட்டுவது, சொல்வது நம்பிக்கையாளர்களை ஏமாற்றவே என்று தெரிகிறது.
 3. 1888ல் இறந்து புதைக்கப் பட்ட பிறகு “புனிதர்” என்று அறிவிக்கப்பட்ட போது, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப் பட்டபோது, வலது கை எலும்புதான் இருந்தது என்று அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் “உண்மைத்தன்மை” ஆதாரமாக ஏற்றுக்க் கொள்ளப்படவில்லை.
 4. ஆகவே, இங்கு விளம்பரத்தில் “உண்மையான வலது கரமானது….” என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிய வருகிறது.
 5. மேலும் , “அவரது உண்மையான வலது கரமானது, மெழுகால் செய்யப்பட்ட திருவுடல் மார்புப் பகுதிக்குள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது”, எனும்போது, அது தெரியும்படியுள்ளதா அல்லது மறைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

 அதாவது இன்னும் ஒருமாத அளவில் இந்த “திரு உலா”  நடக்கும், செய்திகளும் வந்து கொண்டிருக்கும். பிரச்சரமும் இருக்கும்.                                         வேதபிரகாஷ்

30-10-2011


[1] தினமலர், தொன் போஸ்கோ நம்மை சந்திக்க வருகிறார், சென்னை, ஞாயிறு, அக்டோபர் 30 2011, பக்கம்.5.

[3] The Hindu, Hundreds pay respect to relic of Saint Don Bosco, Thanjavur, October 21, 2011,http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article2558537.ece

[4] வேதபிரகாஷ், ஹிந்துஎன்டிடிவி, டான்பாஸ்கோ, சிறுவர்பாலியல், செக்ஸ்குற்றங்கள்தொடர்புஎன்ன?, https://christianityindia.wordpress.com/2011/10/23/hindu-ndtv-don-bosco-pedophile-sex-crimes-christianity/

[5] வேதபிரகாஷ், டான்பாஸ்கோவின்உண்மைஉருவம்என்னஇந்தியர்களுக்குகிருத்துவர்என்னசொல்ல விரும்புகின்றனர்?, https://christianityindia.wordpress.com/2011/10/23/do-bosco-what-christians-want-to-convey-to-indians/

[6] அதாவது www.vaticanhidespedophiles.com/ வேலைசெவதில்லை, மாறாக http://www.vaticanhidespedophiles.com/default.html என்றுதான் கிடைக்கும்.

John Wojnowski protests the Roman Catholic Church policies and practices where the sexual abuse of children by its pedophile priests is concerned.

[9] Father Riccardo Seppia, a 51-year-old parish priest in the village of Sastri Ponente, near Genoa, was arrested last Friday, May 13, 2011 on pedophilia and drug charges. Investigators say that in tapped mobile-phone conversations, Seppia asked a Moroccan drug dealer to arrange sexual encounters with young and vulnerable boys.

http://www.globalresearch.ca/index.php?context=va&aid=18408

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி!

ஏப்ரல் 21, 2011

கொலையாளி ஜான் டேவிட், குரூரமாக கொலையுண்ட நாவரசு, தாமதமான நீதி!


சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உச்சநீதி மன்றம் கண்டனம்: 1997ல் ஜான் டேவிட் என்ற மருத்துவ மாணவன், தனது சக-மாணவன் நாவரசு என்பவனைக் கொலை செய்தான். பிறகு குரூரமாக அங்கம்-அங்கமாக வெட்டி முண்டத்தை பார்சல் செய்து சென்னைக்கு அனுப்பினான், மற்ற பகுதிகளை வீசியெறிந்தான். 1998ல் இதனால், சிதம்பரம் கீழ்நீதி மன்றம், தீர விசாரித்து, இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது. ஆனால், 1998ல் ஜான் டேவிட் தரப்பில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. 2001ல் அதன்படியே, சென்னை உயர்நீதி மன்றம் அவனை விடுவித்தது. ஆனால், 2002ல் தமிழக அரசு, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதி மன்றம், 20-04-2011 அன்று ஜான் டேவிட்டிற்கு அளித்த தண்டனை சரியானதே என்று தீர்ப்பளித்ததுடன், சென்னை உயர்நீதி மன்றம் இவ்வாறு மெத்தனமாக நடந்துகொண்டதற்கு, கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மீதும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

1997ல் நாவரசனைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றது: மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், அவரது சீனியர் மாணவரான குற்றவாளி ஜான் டேவிட்டிற்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது[1]. சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு (17); 1996ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசு, அதே ஆண்டு நவம்பர் 6ம் தேதி, வகுப்பிற்கு சென்றவர் விடுதிக்குத் திரும்பவில்லை. நவம்பர் 7ம் தேதி, சென்னையில் மாநகர பஸ் ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில், தலை, கை, கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உடல் மட்டும் கிடந்தது. இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிந்து, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். நாவரசு காணாமல் போனது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி, நவம்பர் 10ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாவரசுவை நவம்பர் 6ம் தேதி மதியம், அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜான் டேவிட் தனது அறைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. நவம்பர் 11ம் தேதி ஜான் டேவிட், ராஜமன்னார்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார், நவம்பர் 18ல் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், தேர்வு எழுதி விட்டு வந்த நாவரசுவை, ஜான் டேவிட் வழிமறித்து தனது அறைக்கு அழைத்துச் சென்று ராகிங் செய்துள்ளார்.அப்போது, ஜான் டேவிட் தாக்கியதில் நாவரசு மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்து விட்டதாகக் கருதிய ஜான் டேவிட், வெளியில் தெரியாமல் இருக்க, தனது படிப்பிற்காக ஆய்வகக் கூடத்தில் பயன்படுத்தும், “டிசக்ஷன்’ கருவிகளை பயன்படுத்தி நாவரசுவின் தலை, கைகள் மற்றும் கால்களை தனித்தனியாக துண்டித்துள்ளார்.

வெட்டிய உடல் பகுதிகளை பல இடங்களில் போட்டது: தலையை பாலிதீன் கவரில் சுற்றி, கல்லூரி வளாகத்தில் உள்ள குட்டையில் வீசியுள்ளார். பின்னர் உடலை பாலிதீன் கவரில் சுற்றி, பெரிய சூட்கேசில் அடைத்துள்ளார். அதேபோன்று, கைகள் மற்றும் கால்களை தனியாக, “பேக்’ செய்து, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிச் சென்றுள்ளார். செல்லும் வழியில், கைகள் மற்றும் கால்களை ஆற்றில் வீசியுள்ளார். உடல் இருந்த சூட்கேசை, சென்னையில் டவுன் பஸ்சில் வைத்துவிட்டு சிதம்பரம் திரும்பி வந்ததும், போலீசார் சந்தேகிக்கவே கோர்ட்டில் சரணடைந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து, போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். ஜான் டேவிட் குறிப்பிட்ட அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள குட்டையில் தேடியதில், நாவரசுவின் தலை சிக்கியது; செங்கல்பட்டு அருகே கால்கள் சிக்கின. இதையும், சென்னையில் கண்டெடுக்கப்பட்ட உடலில் இருந்து எடுத்த திசுக்களை ஆய்வு செய்ததில், இறந்தது நாவரசு என்பது உறுதி செய்யப்பட்டது.கல்லூரியில், “ராகிங்’ கொடுமையால் மாணவர் நாவரசு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தியது. ஜான் டேவிட் மீது 1997ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக முன்னாள் நீதிபதி கந்தசாமியும், ஜான் டேவிட் தரப்பில் பிரபல வக்கீல் விருத்தாசலம் ரெட்டியாரும் ஆஜராகி வாதிட்டனர்.

கீழ்நீதிமன்றத்தில் தண்டனை, உயர்நீதி மன்றத்தில் விடுதலை! நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், 78 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, 1998, மார்ச் 11ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில், ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டைன என, ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேல்முறையீடு செய்த தமிழக அரசு: உலகமே அச்சுறும் வகையில் நடந்த கொடூர கொலை வழக்கில் கைதான ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், “மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை கொடூரமான முறையில் கொன்ற, அவரது சீனியர் மாணவர் ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானதே’ என, தீர்ப்பளித்தது.

ஜான் டேவிட் சரணடைய உத்தரவு: நாவரசு கொலை வழக்கில் நீதிபதிகள் எழுதிய 41 பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:விசாரணை நடவடிக்கைகளில் நடந்துள்ள சிறு தவறுகளை வைத்து, வழக்கில் உண்மையில்லை என, ஒட்டு மொத்தமாக கூறி விட முடியாது. இந்த வழக்கில் பலமான சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. ஜான் டேவிட் தான் குற்றவாளி என்பதை தர்க்க ரீதியாகவும், நுட்பமான வகையிலும் விசாரணை அதிகாரிகள் நிரூபித்துள்ளனர். இந்த வழக்கை ஐகோர்ட் கையாண்ட விதம் சரியில்லை. சாட்சியங்கள் எல்லாம் திசை திருப்பப்பட்டுள்ளன.ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை, அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டியதில்லை. தண்டனை பெற்ற ஜான் டேவிட் உடனடியாக சிறை அதிகாரிகளிடம் சரண் அடைய வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த வழக்கின் உண்மை நிலவரங்களை பார்க்கையில் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மிகக் கொடூரமான முறையில் இளம் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டியது கொடூரமான மற்றும் அச்சமூட்டும் செயல்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கிறாரா ஜான் டேவிட்? மாணவர் நாவரசு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய சாட்சி இல்லாத காரணத்தால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலையான அவர், கிறிஸ்தவ மத போதகர் படிப்பு முடித்து ஆஸ்திரேலியா சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஐகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்து, செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை தற்போது சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

தமிழக போலீஸாரின் நிலை: இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஜான் டேவிட் தாமாகவே முன் வந்து கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் சரணடைய வேண்டும். தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளதால், அங்குள்ள இந்திய தூதரகத்தில் கூட சரணடையலாம்.அப்படி இல்லாத பட்சத்தில், கோர்ட் மூலம் தண்டனை பிடி ஆணை பிறப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் உள்நாட்டில் இருந்தால், அவரது பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டு பின்னர் போலீசாரால் கைது செய்யப்படுவார். வெளிநாட்டில் இருந்தால், நம் நாட்டில் உள்ள அந்நாட்டின் தூதரகத்திற்கும், அந்த நாட்டில் உள்ள நம் நாட்டு தூதரகத்திற்கும் கோர்ட் உத்தரவு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் ஜான் டேவிட்டை அந்நாட்டு போலீசார் கைது செய்து, அங்குள்ள நம் நாட்டு தூதரகத்தில் ஒப்படைப்பர். பின்னர் இந்தியா கொண்டு வரப்பட்டு, கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஜான் டேவிட் குறித்த தகவல் சேகரிக்க 2 தனிப்படை: எஸ்.பி., : சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகுறித்து கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் கேட்டபோது, “இந்த வழக்கில் ஜான் டேவிட்டிற்கு கடலூர் கோர்ட் அளித்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஜான் டேவிட் தற்போது எங்குள்ளார் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன[2]. கோர்ட் உத்தரவு கிடைத்த பின் ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.