கிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது!
ஜான் வெஸ்லி குடித்துக் கொண்டே, சிறுவர்–சிறுமியர் காப்பகத்தில் நுழைந்தது: கோபி, பாரியூர் சாலையில், நஞ்சகவுண்டன்பாளையத்தில், ‘கருணை இல்லம்’ என்ற பெயரில், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது[1]. இங்கு 2 முதல் 9 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இங்கு, 25 ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்[2]. நிர்வாகியாக கிறிஸ்தாஸ், 70, உள்ளார். இவரின் மகன் ஜான் வெஸ்லி, 28; காப்பகத்துக்கு இவர், 25-11-2019 அன்று மாலை, குடிபோதையில் ஆட்டோவில் வந்ததாக தெரிகிறது. ஜான் வெஸ்லினி என்று தினகரன் குறிப்பிடுகிறது[3]. குழந்தைகள் காப்பகம் நடத்துபவரின் மகன் எப்படி குடிக்கலாம், அவ்வாறு அவர் மகன் வளர்ந்தானா, வளர்க்கப் பட்டானா என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், ஒருவன் திடீரென்று குடிக்க மாட்டான். அது பழக்கமாகத்தான் இருக்கும். ஆட்டோவில் வந்து இறங்கினான் என்பது, அவனது பழக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. ஆட்டோவில் இருந்து இறங்கும்போதே அவர் அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் குழந்தைகள் அலறியடித்து ஓடினர்.
குடிபோதையில் யாரும் இல்லை என மற்றொரு காப்பக நிர்வாகி கூறினார்: இதுகுறித்து கோபி டி.எஸ்.பி., தங்கவேல், தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் போனது. இருவரும் அங்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் ரெஜிகுமார் காப்பகத்திற்கு வந்து விசாரணை செய்தபோது, குடிபோதையில் யாரும் இல்லை என மற்றொரு காப்பக நிர்வாகி கூறினார்[4]. இது பொய் என்று நன்றாகவே தெரிகிறது. ஒருவேளை அந்த “இன்னொரு நிர்வாகி” வக்காலத்து வாங்கினார் என்று தெரிகிறது. இதற்கிடையே, தகவல் அறிந்து 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காப்பகம் முன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்து முன்னணியினர், பாஜகவினரும் அதில் இருந்தனர் என்று தினகரன் எடுத்துக் காட்டுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த கோபி டிஎஸ்பி தங்கவேல் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காப்பக நிர்வாகியின் மகனை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்[5].
பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது: வெஸ்லிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த மக்களிடம் சமாதானம் பேசினர். பின், காப்பகத்தில் இருந்த வெஸ்லியை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் விஜயகுமார், அங்குள்ள குழந்தைகளிடம் விசாரணை நடத்தினார். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார், காப்பக நிர்வாகியின் மகனை பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். விசாரணைக்குப் பின்னர், பொது இடத்தில் தகராறு செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர் என்கிறது தினகரன். குழந்தைகள் வன்கொடுமை போக்ஸோவில் பதிவு செய்யாதது கவனிக்கத் தக்கது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பெண் குழந்தைகள் உள்ள காப்பகத்திற்குள் குடிபோதையில் தினமும் காப்பக நிர்வாகியின் மகன் வருவது பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக காப்பக அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர்.
குழந்தை ஆபாசப் படம் அதிகம் பார்ப்பது தமிழ்நாட்டில் தான்: உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை பார்க்கும் நகரம் சென்னை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது[6]. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு, குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தன[7]. இதனையடுத்து, ஆய்வில் இறங்கிய அந்த அமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது[8]. அந்த அறிக்கையில், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்க்கும் அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக சென்னைக்கு முதலிடம் என கூறப்பட்டுள்ளது[9].
இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது[10]. அதன் படி, மத்திய உள்துறை தமிழக போலீசுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது[11]. முன்னர் அதிக அளவில் அமெரிக்க பிடோபைல்கள் சென்னையிலிருந்து கைதாகினர். குழந்தைகள் காப்பகங்கள் அவகளுக்கு தீனி போட்டது. பாலியல் வன்மையுன் புணர்ந்து அனுபவித்து, ஆபாசப் படங்களையும் எடுத்தனர். வில்ஹியூம் அதற்கு சிறந்த உதாரணம். அந்நிலையில், சென்னை இதில் சிக்கியுள்ளது கவனிக்கத் தக்கது. ஒரு வேளை, அவர்கள் பிடோபைல் ஆனதற்கு சென்னை தான் காரணம், சென்னையில் அத்தகைய வசதிகள் உள்ளன அல்லது ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றன என்றும் குற்றஞ்சாட்டப்படும் போலிருக்கிறது.
ஒரு குழந்தைகள் காப்பகம் நடத்துகின்றனர் மகன் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது சாத்தியமான குற்றமே: மறுபடியும் குழந்தைகள் காப்பகங்கள் விவகாரத்தில், ஒருவர் நிர்வாண கோலத்தில் உள்ளே நுழைந்தான், பெண் குழந்தைகள் பயந்து ஓடினார்கள், என்று செய்திகள் கூறுகின்றன. இதிலும் சம்பந்தப்பட்டவர்கள் கிருத்துவர்களாகவே இருக்கின்றனர். உண்மையில் அவர்கள் சேவை செய்கிறார்களா அல்லது இத்தகைய பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. கருணை இல்லத்தை பற்றிய செய்திகள் முன்னர் நல்ல விதமாகவே இருக்கின்றன. ஆதரவற்றவர்களுக்கு உதவியதாக தெரிய வருகிறது. ஆனால், இப்படி திடீரென்று பாலியல் சதாய்ப்பு, போன்ற கோணத்தில் செய்தி வருவது திகைப்பாக இருக்கிறது. மேலும் தமிழ் ஊடகங்களில், சில இதனை செய்தியாக வெளியிட்டு இருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் செய்தி வரவில்லை என்று தெரிகிறது. எது எப்படியாகிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இங்கு கூட சிலர் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் அவரது ஜாமீன் பெற்று வெளியில் வரலாம் அல்லது வழக்கை நீர்த்துப் போகுமாறும் செய்யலாம். ஆகவே, இத்தகைய பாலியல் ரீதியான குற்றங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிய தண்டனைக்கு குற்றவாளிகள் உள்ளாக்கப்பட வேண்டும், இல்லையென்றால் அவர்கள் திருந்த மாட்டார்கள்.
© வேதபிரகாஷ்
01-12-2019
[1] தினமலர், குடிபோதையில் வந்த காப்பக நிர்வாகியின் மகனுக்கு எதிர்ப்பு, Added : நவ 26, 2019 08:16
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2420021
[3] தினகரன், குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்த நிர்வாகி மகன் கைது, புதன், நவம்பர் 27, 2019.
[4] தமிழ்.முரசு, மது போதையில் அரைகுறை ஆடையுடன் காப்பகத்தில் புகுந்த வாலிபர்: பெண் குழந்தைகள் அலறியடித்து ஓட்டம், 11/26/2019 3:30:51 PM
[5] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126891
[6] தினத்தந்தி, குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் பட்டியல் : சென்னை முதலிடம், பதிவு : நவம்பர் 30, 2019, 03:04 AM
[7] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/30030458/1059753/Most-viewed-list–child-pornography-Chennai-First.vpf
[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில் முதலிடம் பிடித்த சென்னை..!! வீடு தேடி வந்து அலேக்காக தூக்க தயாராகும் போலீஸ்..!!, By Ezhilarasan Babu, Chennai, First Published 30, Nov 2019, 5:39 PM IST..
[9] https://tamil.asianetnews.com/crime/tamilnadu-have-no-1-for-child-porn-video-viewership-particularly-chennai-has-been-lead-in-list-q1s74c
[10] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், .’சென்னைக்கு முதலிடம்‘…’ஆபாச படம் பாக்குறவங்க லிஸ்ட் ரெடி‘…’ஐபி அட்ரஸ் வந்தாச்சு‘…அதிரடி நடவடிக்கை!, By Jeno | Nov 30, 2019 03:52 PM
[11] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-tops-globally-in-child-pornography-viewers-says-report.html