Archive for the ‘கிருஸ்துவின் காதலி’ Category

சோபியா மாரியா ஹயாத் என்ற அரை-நிர்வாண நடிகை, கன்னியாஸ்திரி ஆகி, தன்னை மேரி, ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்வது உள்-கலாச்சாரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காகவா?

ஜூன் 13, 2016

சோபியா மாரியா ஹயாத் என்ற அரை-நிர்வாண நடிகை, கன்னியாஸ்திரி ஆகி,  தன்னை மேரி, ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்வது உள்-கலாச்சாரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காகவா?

Sofia Hayat converted to Christian nun

நான் தான் மேரி, பெண் ஏசு:  “நான் தான் பெண் ஏசு. இனி என்னை அன்னை சோபியா என்றே அழைக்க வேண்டும். நாம் யார், வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது பற்றிய உண்மையை நான் அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன்”, என்று தமிழ் ஊடகம் நிறுத்திக் கொண்டுள்ளது, ஆனால், “நான் குயான் யின் என்கின்ற பெண் ஏசு, மேரி மற்றும் ஐசிஸ் தேவதை ஆகிறேன். நான் தான் தாய் மற்றும் தந்தைசுதன்பரிசுத்த ஆவி என்கிற தியேகத்துவத்தின் மகள் ஆகிறேன். நான் எல்லோருக்கும் உண்மை சொல்லப் போகிறேன், நீங்கள் யார், வாழ்க்கை என்ன என்று விளக்கப் போகிறேன்”, என்றெல்லாம் பேசினார்[1]. உண்மையில் ஆசார கிருத்துவர்கள் இத்தகைய பேச்சு, நிலை மற்றும் இறையியலை ஒப்புக் கொள்ள மாட்டார்கள், ஆனால், இவ்விசயத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதது விசித்திரமாகவே இருக்கிறது. ஒருவேளை, பிரான்சிஸ் சேவியர் குளூனி [Francis Xavier Clooney] போன்றோர் சந்தோசப்படுவார்களோ என்னமோ தெரியவில்லை. புனேவில் உள்ள ஞான வித்யா பீடம் [Gnana Vidhya Peetam], குளித்தலை சச்சிதானந்த ஆசிரமம் [Sachitananda Asram] முதலிய இடத்திலி உள்ளோரும் இந்த அம்மையாரைப் பார்த்து சந்தோசப் படலாம்!

சோபியா கன்னியாஸ்திரி- அவதாரங்கள்செக்ஸ் புனிதமானது, இனி நான் செக்ஸ் வைத்துக் கொள்ளப் போவதில்லை[2]:  நான் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை[3]. அதாவது, ஜூலை வரை வைத்துக் கொண்டுள்ளார் என்று ஒப்புக் கொள்கிறார். யாரிடம் எத்தனை தடவை என்றெல்லாம் தெரியவில்லை. ரோஹித் சர்மா என்ற கிரிக்கெட் வீரருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. கிரிக்கெட்டிற்காக, முழு முதுகையும் காட்டி, அதில் பெயின்டால் ஓவியம் வரைவது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதெல்லாம், அந்நடிகையின் அந்தரங்க விவகாரங்களாக இருந்தாலும், இப்பொழுது, இவ்வகையில், அந்த விவகாரங்கள் பொதுவாக அறியப்படும் வகையில் வெளியாகி இருப்பதாலும், இந்திய சமூகத்தை பாதிப்பதாலும், மற்றவர் அலச வேண்டியுள்ளது. “இனி எனக்கு அது தேவையும் இல்லை. அதன் பிறகே செக்ஸ் என்பது புனிதமானது என்பது புரிந்தது. நான் முஸ்லிமாகப் பிறந்து, கிறிஸ்தவளாக மதம் மாறியிருக்கிறேன்”, என்று சோபியா தெரிவித்துள்ளார்[4]. ஏற்கெனவே, தந்திர முறைகளுக்கு செக்ஸ்-விளக்கம் கொடுத்து, தூஷிக்கப் பட்டு வருகிறது. யோகா முறைகளையும், செக்ஸ்-யோகா என்றெல்லாம் குறிப்பிட்டு கேவலப்படுத்தி வருகிறார்கள்.

Anil Goyal, fake-Baba Ramdev- Talwar, Sofiaபாபா ராம்தேவை இழிவு படுத்திய புகைப்படம், வீடியோ, சினிமா முதலியன: பாபா ராம்தேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில், அப்படங்கள் வைலாகி பரவி, தேவையில்லாத வினர்சனங்களுக்குட்பட்டது நினைவிருக்கலாம்[5]. அவை மே மாத கடைசி வரை உலாவந்து கொண்டிருந்தன[6]. ஒரு இந்து குருவோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில், ஒழுங்காக ஆடை அணிந்து கொண்டு வராததும் சந்தேகத்தை எழுப்பியது. பிறகுதான் உண்மை தெரிந்தது, அது பாபா ராம்தேவ் அல்ல, ஆனால், அவரைப் போலவே தோற்றமளிக்கும் சுனில் தல்வார் என்ற நடிகர்[7]. “பாய் கா மால்” என்ற படத்தை இயக்குகும் அனில் கோயல், அத்தகைய பாத்திரத்திற்கு உபயோகப்படுத்தியுள்ளார்[8]. போதாகுறைக்கு சோபியா, பாபா ராம் தேவ் என்னுடைய மார்பைப் பார்த்திருக்கலாம்[9] என்று கமென்ட் வேறு அடித்தது உள்நோக்கம் கொண்டது என்றாகிறது. 2011ல் பூஜை போட்டு, 2012ல் அப்படம் வரும் என்றார்கள். அப்படம் வந்ததா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால், பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டது தானே. இதில், குறிப்பாக இந்துமத குருக்கள், சாமியார்கள் தாம் தாக்கப்படும் இலக்கில் உள்ளதை கவனிக்க வேண்டும். எத்தனையோ கிறிஸ்தவ, முஸ்லிம் போலி சாமியார்கள், காஜிகள், முல்லாக்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் இருந்தாலும், அவர்களை பாத்திரமாக வைத்தோ அல்லது இருப்பவர்களை, இப்படி, நடிகர்களை வைத்தோ சினிமா எடுப்பதில்லை. பிறகு, இது எதைக் காட்டுகிறது என்று ஆராயும் போது, இந்துமதம் தான் குறியாக, இலக்காக இருக்கிறது என்றாகிறது.

சோபியா கன்னியாஸ்திரிசோபியா மற்ற நடிகைகளைப் பற்றி கமென்ட் அடித்தது: ஒரு பேட்டியில், சன்னி லியோன், ஒரு “போர்ன்” நடிகை என்று கூறியுள்ளார்[10]. பதிலுக்கு அவர் ஏதாவது சொன்னாரா என்று தெரியவில்லை. நிர்வாணத்தில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பது, அவர்களது தாராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. அப்பேட்டியில், கிஸ் முதல் மார்பகங்களைக் காட்டுவது வரை தாராளமாக பேசியுள்ளார். ராகி சாவந்த், வீணா மாலிக், கத்ரினா கைப் நடிகைகளைப் பற்றியும் கமென்ட் அடித்துள்ளார்[11]. தொழில் ரீதியில் போட்டி-பொறாமை போன்றவற்றால், ஒரு நடிகை, இன்னொரு நடிகைப் பற்றி கமென்ட் அடிப்பதை, பொதுவான இந்தியர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மதரீதியில், அதே நடிகை கருத்துகளை வெளியிடும் போது, கவனம் செல்லுத்த வேண்டியுள்ளது.

Sofia Hayat- Hinduising Christianityஉள்கலாச்சாரமயமாக்கல் [Inculturation]: வாடிகன் – II [Vatican – II] ஆவணங்களின் படி, இந்தியாவில் “கத்தோலிக்க ஆசிரமங்கள்” நடத்தப் பட்டு வருகின்றன. இதுவரை, அவற்றில் இந்துமத முறைகள் கையாளப்பட்டு, நாட்டுப்புற, கிராம மக்களுக்கு, தாங்கள் மதம் மாற்றப் படுகிறோம் என்று கூட தெரியாமல், மதம் மாற்றப்பட்டுள்ளனர். பொங்கல், தீபாவளி என்று எல்லா பண்டிகைகளும் கொண்டாடுகிறார்கள். ஆனால், கும்பிடும் தெவம் “ஏசு” என்கிறார்கள். அதன் படி, ஏசுவும் இந்து கடவுள் போன்றே செய்து சிலைகளை, விக்கிரங்களை வைக்கிறார்கள், பூஜை, பஜனை எல்லாம் செய்து வருகிறார்கள். சர்ச்சுகள் இந்து கோவில் போன்றே கட்டப்பட்டுள்ளன. நக்மா போன்ற நடிகைகள், பிரச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் பட்டார்கள். அந்நிலையில், இந்த சோபியா மாரியா ஹயாத் அல்லது பூஜா மிஸ்ரா, அதே போல உபயோகப்படுத்தப் படுவாரா என்பதை கவனிக்க வேண்டும். ஒருவேளை பெண்கள், குறிப்பாக நடிகைகளை உபயோகப் படுத்தினால், அறுவடை சிக்கிரம் நடக்கும், முடியும் என்று தீர்மானித்துள்ளார்களோ தெரியவில்லை. குளூனி ஏற்கெனவே, இந்து தாய்கடவுளர்களை விட, மேரிதான் உயர்ந்தவள் என்று புகங்கள் எல்லாம் எழுதியுள்ளார். அதனால், தானே மேரி, பெண்-ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும், இந்த சோபியா மாரியா ஹயாத் அல்லது பூஜா மிஸ்ரா இனி என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்!

© வேதபிரகாஷ்

13-06-2016

Sofia-tweet turned to nun - pooja

[1] While talking to the media, Sofia said, “I am the incarnation of Quan Yin, Female Christ, Mary and Goddess Isis. I am the Mother and daughter of God of the Holy Trinity. I want to spread the truth of who we are and what is our purpose in life is. It is time to wake up and live the truth.

http://zeenews.india.com/entertainment/celebrity/mother-sofia-hayat-removes-breast-implants-shows-jaw-dropping-transformation-view-pic-inside_1891845.html

[2] Times of India, I am not going to have sex anymore: Sofia Hayat, Swasti Chatterjee, TNN, May 26, 2016, 12.45 AM IST.

[3] http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/I-am-not-going-to-have-sex-anymore/articleshow/52434437.cms

[4] She further revealed, “I have not had sex after July 2015 as I didn’t feel like. I was in a relationship earlier but I didn’t feel the urge to get physical. That’s when I understood sex should be considered as sacred. However, when it is enjoyed without love and respect it exhausts the life force and turns us into mere physical beings. I was born Muslim and converted into Christian.”

[5] Naidunia, रामदेवऔर सोफिया की वायरल हो रही फोटो की ये है सच्चाई, PublishedTue, 31 May 2016 02:07 PM (IST) | Updated: Tue, 31 May 2016 02:27 PM (IST)

[6] http://naidunia.jagran.com/state/gujarat-truth-of-viral-photo-of-hot-model-and-actress-sofia-hayat-and-baba-ramdev-looks-a-like-on-social-media-749541

[7] http://fbinvestigations.blogspot.in/2014/06/fake-ramdev.html

[8] It was a great surprise at the mahurtha of the upcoming Bollywood movie Bhai Ka Maal Hai, when Baba Ramdev turned up to the event in New Delhi on Monday. But it was not Ramdev. It was his look-alike actor Sunil Talwar, who was dressed up like the Yoga Guru for the shooting of the movie.  Bhai Ka Maal Hai is said to be a comedy movie on Baba Ramdev. Filmmaker Anil Goyal, who is directing the film, has roped in Baba”s lookalike Sunil Talwar to play Yoga Guru in the film. Hollywood actress Sofia Hayat is essaying the role of heroine. The film will also star Siraj Khan.

http://www.filmibeat.com/bollywood/features/2011/baba-ramdev-lookalike-bhai-ka-maal-hai-mahurtha-301111.html

[9] https://www.youtube.com/watch?v=aFQ_OR__xYU

[10] http://www.dailymotion.com/video/x21ts2t_sunny-leone-is-a-porn-star-sofia-hayat_fun

[11] She also spoke about Sunny Leone, Rakhi Sawant, Veena Malik and Katrina Kaif’s item number ‘Chikni Chameli’.

http://www.dailymotion.com/video/x21ts2t_sunny-leone-is-a-porn-star-sofia-hayat_fun

சோபியா மாரியா ஹயாத் என்ற அரை-நிர்வாண நடிகை, கன்னியாஸ்திரி ஆகி, தன்னை மேரி, ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்வது எதனைக் காட்டுகிறது?

ஜூன் 13, 2016

சோபியா மாரியா ஹயாத் என்ற அரை-நிர்வாண நடிகை, கன்னியாஸ்திரி ஆகி,  தன்னை மேரி, ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்வது எதனைக் காட்டுகிறது?

Big boss-7 participantsபிக் பாஸ்நடிகைகளுள் ஒருவர் சோபியா மாரியா ஹயாத்: “பிக் பாஸ்” என்ற நிகழ்சி ஏற்பாடு செய்தபோது, வெளிநாட்டு நடிகைகளை வைத்துக் கொண்டு “ஷோ” காட்டினர். அதில் சன்னி லயோன், பமெலா ஆன்டர்ஸன், கிளாடியா செஸ்லா, அல்லி அவ்ரம், சோபியா ஹயாத் முதலியோர் அடக்கம்[1]. 20-20 கிரிக்கெட் பிரபலமானபோது, பல வெளிநாட்டு நடிகைகள், மாடல்கள், ஏன் விபச்சாரிகள் கூட இறக்குமதி செய்யப்பட்டனர் அல்லது இந்தியாவுக்கு “டூரிஸ்ட் விசாவில்” வந்தனர். ஹோட்டல்களில் ரூம் எடுத்துக் கொண்டு தங்களது தொழிலை நடத்தினர் என்று ஊடகங்கள் செய்திகளை தாராளமாக வெளியிட்டன. இவர்களுக்காக, பிரபலங்கள் கூட சண்டைப் போட்டுக் கொண்டனர். கவர்ச்சியை வைத்துக் கொண்டு இந்திய சினிமாவில் இடம் பிடுத்து விடலாம் என்று சிலர் திட்டம் போட்டனர். அதில் சன்னி லயோன் மற்றும் சோபியா ஹயாத் மிஞ்சினர். ஆனால், பின்னவர் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கவர்ச்சி ரீதியில் என்னென்னவோ செய்து பார்த்தார், முடியவில்லை. அவ்வகையில் வந்த பாலிவுட் நடிகை சோபியா மாரியா ஹயாத் [Sofia Maria Hayat] கிறிஸ்தவ மதம் மாறியதாக அறிவித்தார். மேலும், தான் கன்னியாஸ்திரியாக மாறியதற்கான காரணத்தை தெரிவித்தார். தொடர்ந்து தான் பெண் ஏசு என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்[2]. சர்ச்சை மேல் சர்ச்சை கிளப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை சோபியா ஹயாத். பாலிவுட்டில் வெற்றி பெற போராடிக் கொண்டிருந்த அவர் திடீர் என ஒரு நாள் கன்னியாஸ்திரியாகிவிட்டார்.

Sofia-showing breast implant

Bollywood actor Sofia Hayat during a press conference in Mumbai, India on June 3, 2016. The model-turned actress converted herself to nun Gaia Mother Sofia. (Pravin Utturkar/SOLARIS IMAGES)

கன்னியாஸ்திரியாகிய உடன் மார்பகங்களை பெரிதாக்க சிலிகான் இம்பிளான்ட்டை பொருத்தியதை எடுத்து விட்டார்: இங்கிலாந்தை சார்ந்த சோபியா ஹயாத் பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை வந்தார்[3]. கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வெளியிடும் அவரால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை[4]. இதனால் தனது மார்பகங்களை பெரிதாக்க சிலிகான் இம்பிளான்ட்டை பொருத்தி தனது மார்பகங்களை கவர்ச்சியாக காட்டி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார் சோபியா ஹயத்[5]. ரசிகர்களை கவர்வதற்காக மிகவும் குறைவான ஆடையுடன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்திய சோபியா தற்போது கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க பயன்படுத்திய சிலிகான் இம்பிளான்டை அகற்றிவிட்டார்[6]. மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர் தனது மார்பகங்களில் இருந்து அகற்றப்பட்ட சிலிகான் இம்பிளான்டை காண்பித்தார்[7]. இரு கைகளிலும், வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த போது, ஏதோ தேவதையைப் போன்று போஸ் கொடுத்ததும் உள்நோக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது. மார்பில் “ஓம்” என்றுள்ள ஒரு சின்னம் கொண்ட டிசைனும் ஆடையில் தெரிகிறது. அதில், ஏன் சிலுவையை இருக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது. இனி ஆன்மீக பாதையில் தான் தனது வாழ்க்கைப் பயணம் என்று பெரிய பெரிய பேச்சு எல்லாம் பேசுகிறார். இந்த நடிகை என்னப்பா வச்சா குடுமி, அடிச்சா மொட்டை மாதிரி இருக்காங்களே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்[8].முஸ்லீமாக பிறந்த அவர் கிறிஸ்தவராகி கன்னியாஸ்திரியாகிவிட்டார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி அவர் கூறுகையில்[9], என்னெனவோ பேசியிருப்பது வியப்பாக இருக்கிறது. அவர் கூறியுள்ளவற்றை அலசுவோம்.

Sofia - cricketeer lover

காதலர்கள் இருந்தார்களாம்!: எனக்கு காதலர்கள் இருந்தார்கள். நான் செக்ஸ் வாழ்க்கையில் ஓவராக ஈடுபட்டேன். அப்படி இருக்கையில் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தான் என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. எனக்கு ஏன் ஆசைகள் ஏற்படுவது நின்றுவிட்டது என்று யோசித்தேன். அதன் பிறகே நான் என்னை புரிந்து கொண்டேன். எனக்கு செக்ஸ் ஆசையே போய்விட்டது”, என்று ஒப்புக் கொண்டதும் வேடிக்கைதான். ஒரு பெண்ணிற்கு எப்படி பல காதலர்கள் இருப்பார்கள் என்று தெரியவில்லை. “ஒருவனுக்கு-ஒருத்தி” என்ற ரீதியில் தான் இந்திய சமூகம் உள்ளது. பாலிவுட், கோலிவுரட் நடிக-நடிகையர்களை வைத்துக் கொண்டு, இந்திய சமூகத்தை எடைபோடும் விதமாக சிலர் நடந்து கொண்டாலும், இத்தகைய வக்கிரகங்கள், இந்தியாவில் இப்பொழுது பேசப்பட்டாலும், சில நிகழ்வுகளில் காணப்பட்டாலும், அவை சமூக பிறழ்சிகளாக, ஒவ்வாத முரண்பாடுகளாகவே கருதப்பட்டுகின்றன.

nude and nun - Sofia Hayatநடிகை சோபியா போய் கன்னியாஸ்திரி பூஜா வந்தாகி விட்டது: “நடிகை சோபியாவை இனி எதிர்பார்க்க முடியாது. இனி அந்த சோபியாவை நீங்கள் பார்க்கவே முடியாது. நான் இனி ஆன்மீக பாதையில் செல்லப் போகிறேன். ஒரு பெண்ணை உடல் அளவில் பார்ப்பதை நிறுத்துங்கள்”, என்றதும் தமாஷுதான். “பூஜா மிஸ்ரா” என்று பெயரை வைத்துக் கொண்டது எப்படி என்று தெரியவில்லை[10]. ஏற்கெனவே தனது பெயர் சொப்பியா மாரியா ஹயாத் என்றிருக்கும் போது, இவ்வாறு இந்தியப்படுத்த வேண்டிய அவசியமும் புரியவில்லை. நடிப்பதை விட்டுவிடுவாரா என்று தெரியவில்லை.நெற்றியில் பொட்டு என்றெல்லாம் வைத்துக் கொண்டிருப்பதும் வினோதமாக இருக்கிறது. இதெல்லாம் “உள்-கலாச்சாரமயமாக்கல்” விளையாட்டா என்றும் தோன்றுகிறது! கிருத்துவராக மாறி, ஒரு நடிகையாக, இத்தகைய வேலைகளை செய்தால், அதனால், கொஞ்சம் பாதிப்பு ஏற்படும் என்றதால், இவ்விசயங்கள் கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

13-06-2016

[1] Sunny Leone – She was the contestant who gained more than just popularity from the reality show. Her stint on the show raised quite a few eyebrows, given her career as a pornstar. But slowly and steadily, with her subdued and calculated moves, Sunny managed to win a lot of favour and was soon a mass favourite. She was sweet and candid on the show and eventually went on to even bag a Bollywood film!

Jade Goody – Bigg Boss hit the perfect casting coup when they brought in Jade Goody in Bigg Boss 2 which was hosted by Shilpa Shetty. The differences between Shilpa and Jade go back to the UK version of Big Brother, when Jade’s comments on Shilpa sparked worldwide protests of alleged racism. Jade was later diagnosed with cancer and had to leave the show. But despite their hostile interactions in the past, Shilpa and Jade shared a cordial relationship during her stay in India. Atithi devo bhava, anyone?

Pamela Anderson – Pam did not enter the show as a contestant but as a special guest, but did quite a lot to make sure the TRPs scaled right up! From entering the house in a translucent white sari to dancing to Madhuri Dixit’s iconic Dhak Dhak Karne Laga number, Pamela made sure to heat things up!

Andrew Symonds – The cricketer had been in the news for a controversial comment on Indian spinner Harbhajan Singh. When he entered the Bigg Boss house, he played the game subtly, without getting into any arguments, barring a few occasions when he lost his cool. Bigg Boss helped us see a different side to the aggressive Aussie batsman!

Claudia Ciesla – Claudia was just starting off in Bollywood doing item numbers, when she was approached to be a part of the show. She danced, she sang and shared some chemistry with co contestant Pravesh Rana. But it was her sexy pool acts which sky rocketed TRPs on the show.

Elli Avram – Possibly the most innocent and sweetest amongst all the foreigners who have been on the show, Elli came out of the house, with her head held high. From her naughty pranks on the other housemates to her sweet camaraderie with host Salman Khan, people could not have enough of Elli and her eviction from the BB7 house definitely broke a lot of hearts.

Sofia Hayat – Sofia was famous in the Bigg Boss for her insignificant fights, frivolous arguments and nonsensical explanations. Not only the audience, but the controversial foreign star also received a lot of flak from host Salman Khan.

http://www.bollywoodlife.com/news-gossip/sunny-leone-pamela-anderson-claudia-ciesla-sofia-hayat-7-foreign-celebrities-who-spiced-up-bigg-boss/

[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் தான் பெண் ஏசு, இனி என்னை அன்னை என அழையுங்கள்: நடிகை ஓவர் பேச்சு, By: Siva Updated: Monday, June 6, 2016, 18:57 [IST]

[3] தமிழ்.வெப்.துனியா, கன்னியாஸ்திரியாகிய கவர்ச்சி நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி! (வீடியோ இணைப்பு), திங்கள், 6 ஜூன் 2016 (16:55 IST)

[4] http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/sofia-hayat-displays-silicon-implants-removed-from-breasts-116060600038_1.html

[5] Times of India, Sofia Hayat reveals why she turned into a nun, displays silicon implants removed from breasts, Vijaya Tiwari, TNN, Jun 3, 2016, 10.37 PM IST

[6] http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Sofia-Hayat-reveals-why-she-turned-into-a-nun-displays-silicon-implants-removed-from-breasts/articleshow/52576700.cms

[7] தமிழ்.ஒன்.இந்தியா, இந்த நடிகை என்னப்பா வச்சா குடுமி, அடிச்சா மொட்டையா இருக்கே!: வீடியோ, By: Siva, Updated: Monday, June 6, 2016, 15:25 [IST].

[8] http://tamil.oneindia.com/news/india/sofia-hayat-displays-silicon-implants-removed-from-her-breas-255357.html

[9] http://tamil.oneindia.com/news/india/i-am-woman-jesus-call-me-mother-actress-sofia-hayat-255374.html

[10] First.post, Sofia Hayat to Pooja Misrra: Bigg Boss’ gallery of strange, stranger, strangest, Benita Chacko,  May 25, 2016 13:00 IST

http://www.firstpost.com/bollywood/sofia-hayat-to-pooja-misrra-bigg-boss-gallery-of-strange-stranger-strangest-2797322.html

இளைஞனான பாதிரி (30), அழகான மனைவி (26), உறவு கொள்ள அழைப்பு, ஆனால் முடிவு மனைவி கொலை, பரிதாபம்

திசெம்பர் 4, 2011

இளைஞனான பாதிரி (30), அழகான மனைவி (26), உறவு கொள்ள அழைப்பு, ஆனால் முடிவு மனைவி கொலை, பரிதாபம்


ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி கொலை: கணவன் கைது[1]: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சுவிளை ராஜவீதித்தெருயைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜ் (62) இவரது மனைவி வசந்தா. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஓய்விற்குப் பிறகு கிருஸ்துவ பிரசங்கம் / மதப்பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு சொரூபா, மிஸ்பா என்ற இரு மகள்கள். மூத்தமகள் திருமணமாகி பெங்களூரில் கணவர் பிரின்ஸ், எஞ்சினியர், உடன் வாழ்ந்து வருகிறார். இவரது இளைய மகள் மிஸ்பா எபனேசர் ஜெய்ஹிந்த் (26). எம்.ஏ, எம்பில் படித்த மிஸ்பா நெல்லைக்கு அருகியேள்ள தாழையூத்து தென்கலத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் அருள் (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வந்தார். இவர் சிறுவர்களுக்கான ஊழியம் செய்து வந்தார்[2]. இவர் நேற்று முன்தினம் (22-11-2011) இரவு வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார் அவரது கன்னத்தில் காயமும் இருந்தது. மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் போலீசில் புகார் செய்த சவுந்தர்ராஜ் தன் மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார்[3]. சம்பவத்திற்குப் பின் கணவர் அருள் மாயமானது சந்தேகத்தைக் கிளப்பவே இன்ஸ்பெக்டர் இசக்கியின் தலைமையிலான தனிப்படையின் திவிர தேடுதலில் அருள் பிடிபட்டார். விசாணையில் மிஸ்பாவை கணவரே கொலை செய்தது தெரியவந்தது[4].

கணவன்-மனைவி கருத்து வேறுபாடு: எம்.ஏ.படித்த மிஸ்பாவுக்கும் நெல்லை பக்கமுள்ள தென்கலத்தைச் சார்ந்த அருள் என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்தது. இவர்களுக்குத் குழந்தை இல்லை. மாமனார் வீட்டில் தான் அருள் வசித்து வந்தார். தனித்குடித்தனம் போக விரும்பினார். மனைவி மிஸ்பா விரும்பவில்லை. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு மூண்டது. அருள் பிளஸ் 2வரை படித்துள்ளார். மிஸ்பா எம்ஏ.பிஎட் படித்துள்ளார். தனது மனைவி தன்னை விட அதிகம் படித்தது இவருக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. முன்றாண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்ற ஏக்கமும் இருந்தது. இதனால், மேலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இருவருக்குமிடையே ஈகோ பிரச்னை வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது[5].

கணவன் செக்ஸ் வெறியர்: அருள் ஒரு செக்ஸ் வெறியர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. கால நேரம் தெரியாமல் மனைவியை உறவுக்கு அழைப்பாராம் அது மிஸ்பாவுக்கு பிடிக்கவில்லை[6] என்றெல்லாம் கூட குறிப்பிடப்பட்டுள்ளன.  நேற்றுமுன்தினம் தூத்துக்குடியில் ஊழியம் முடித்துவிட்டுத் திரும்பிய அருள் இரவு மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார் (இரவு நேரம் தவறனாதா). தனக்கு உடல் நிலை சரியில்லை என மனைவி மறுத்ததால் வெறியிலிருந்த அருள் போர்வையால் மனைவியின் முகத்தை அழுத்தியுள்ளார் (இதனால் மோடிவ்/குறிக்கோள் என்ன என்று தெரியவில்லை). அதில் அவர் மூச்சுத் திணறி இறந்து விடவே பயந்து போன அருள் தப்பி ஒடி விட்டார்[7] (நடந்தது அவர்களுக்கும் கர்த்தருக்கும் தான் தெரியும்).


கணவனே கொலை செய்த கொரூரம்: வீடு திரும்பிய மிஸ்பாவின் தந்தை சவுந்தர்ராஜ் மகள் இறந்து கிடப்பதைக்கண்டு பதறியவர் போலீசுக்கு தகவல் கொடுத்தவர் தனது சந்தேகத்தையும் தெரிவிக்க தலைமறைவான கணவர் அருளை தேடிப்பிடித்து கைது செய்தனர்[8]. போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவலை சொன்ன கணவன் அருளைக் கைது செய்தனர். “உறவுக்கு, கட்டிய மனைவியே உடன்படாவிட்டலும், கரம்பிடித்த கணவனே பலாக்காரம் செய்தாலும் மனுநீதிப்படி குற்றம்தான் என்பதே தற்போதைய நடைமுறை”, இப்படி நக்கீரன் விளக்கம் அளித்திருப்பது வியப்பானது. கிருத்துவர்களுக்கும், மனுநீதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சம்பந்தப் பட்டுள்ளவர்கள், குடும்பங்கள் எல்லோருமே நம்பிக்கையுள்ள கிருத்துவர்கள், அதிலும் படித்தவர்கள், ஊழியம் / மதப்பிரசாரம் / போதனை செய்து வருபவர்கள். ஆகவே, அவர்கள் கிருத்துவ மத போதனகள், அவர்களது மதகுருமார்கள் நடத்தை, பழக்க-வழக்கங்கள் முதலியவற்றால் இர்ர்க்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அருள் ஒரு பிடோபைலா – அதாவது சிறுவர் பாலியல் வன்மமுள்ள பாதிரியா? அருள் ஒரு அழகான வாலிபர். சிறுவர்களுக்கு ஊழியம் செய்து வருபவர், அதாவது சிறுவர்-சிறுமியர்களுடம் நெருங்கி பழகி வரும் கிருத்துவ போதகர், ஆலோசனை போதகர். டான் போஸ்கோ / தோன் பொஸ்கோ போன்றவர்[9]. ஆகையால், மனைவி ஒதுங்கியிருந்ததால், சென்ஸ் வக்கிரத்தை சிருவர்-சிறுமியர்களிடம் காட்டினாரா அல்லது அவர்கள் புகார் செய்து விடுவர் என்று மனைவியிடம் காட்டியுள்ளாரா. அத்தகைய செக்ஸ் செயல்களைக் கண்டு வெறுத்து, மனைவி பயந்து ஒதுங்கியிருந்தாளா? அதனால் பொறுக்காத கணவன் தன்னுடைய மனைவியை நெருங்கி வந்தானா, மறுத்ததால் கோபம் அதிகமாகி, அந்நிலை ஏற்பட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், கிருத்துவர்கள் தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது, சிக்கிக் கொள்வது முதலியன தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கில், கணவன்-மனைவி இருவருமே இளம் வயதினர், புரிந்து கொண்டு வாழவேண்டியவர்கள். அந்நிலையில், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டமானது.

சமூகப்பிரச்சினையா, மதப்பிரச்சினையா: இக்காலகட்டத்தில், அறிந்த-படித்த-தெளிந்த மக்கள் பல நேரங்களில் மதம்-ஜாதி போன்ற மனிதன் ஏற்படுத்திய கட்டுத்திட்டங்களைத் தாண்டி செயல்படுகிறார்கள். குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பலர் கிருத்துவர்களாக இருந்தாலும், இந்து சம்பிரதாயங்களைப் பின்பற்றுகின்றனர். சில ஜாதியினர் (குறிப்பாக நாடார்கள்) மதபேதத்தைப் பார்க்காமல் பெண்கொடுத்து, பெண் எடுக்கின்றனர். அதாவது இந்து-கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ-இந்துக்கள் போன்று இருக்கின்றனர். உறவுமுறை விட்டுப்போகக்கூடாது, சொத்து/வியாபாரம் பிரிந்து விடக்கூடாது என்று அவ்வாறு திருமணங்கள் நடந்து வருகின்றன. ஆனால், அவ்வாறு நடக்கவேண்டும் என்றே சில திருமணங்களை கிருத்துவர்கள் ஊக்குவிப்பதாக புகார்களும் எழுந்துள்ளன. எது எப்படியாகிலும், வாலிப வயதில் உள்ள தம்பதியர்கள் வாழ்க்கையில் இத்தகைய கொடூரம் நிகழக்கூடாது. அந்நிலையில், இதனை மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

மதநம்பிக்கைகளினால் குற்றங்கள் ஏற்படுகின்றன என்றால், நம்பிக்கையாளர்கள் தாம் தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்: ஆனால், மதநம்பிக்கைகளில் மனங்கள் கட்டுண்டு செயல்பட்டால், மணங்கள் பாதிக்கப்படுகின்றன. அந்நிலையில் மதபோதனை, போதனையால் மூளைசலவை செய்யப்படுதல், மூளை-மனம்-எண்ணங்கள் அவ்வாறே செயல்படுவது, அதனால் பிரச்சினைகள் ஏற்படுவது என்றிருந்தால், அந்நிலையில் பாதிக்கக் கூடிய மதபோதனைகள் என்னவென்று கண்டறிந்து, விலக்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணத்திற்கு ஒரு தீவிர விசுவாசியான கிருத்துவப் பெண், சிறுவயதிலிருந்தே, தான் கிருத்துவிற்கு அடிமை, கிருத்துவின் உண்மையான காதலி, மனைவி, அர்ப்பணிக்கப்பட்டவள் என்றெல்லாம் போதிக்கப்பட்டு, பிறகு அவள் திருமணம் செய்து கொள்ள்வேண்டிய நிலை ஏற்பட்டால், கணவுடன் கூடும் போது கூட தான் குற்றம் செய்து விட்டோமோ என்று நிலைக்கலாம். அத்தகைய எண்ணத்தால் பாதிக்கப்படலாம். இது இந்து மதத்தில் மீரா-கிருஷ்ணன் போன்ற நிலையாகும். பக்தி ரீதியாக இதனை நாயகி-நாயக பாவம் என்றும் சொல்வதுண்டு. கிருத்துவ மதத்தில் அவ்வாறு பெண்கள் கிருத்துவிற்கு அர்ப்பணிக்கப் படுகின்றனர். அவர்கள் கன்னியாஸ்திரிக்களாகின்றனர். தங்களது வாழ்க்கையை சேவைக்கு அர்ப்பணிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், அவர்களை பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். கத்தோலிக்கக் கிருத்துவம், அவர்களுக்கு பிரமச்சரியத்தை வலியுறுத்திகிறது. அதனால், பிரம்மச்சரியத்தைக் காக்க முடியாத அல்லது சபல மனங்கள் கொண்ட ஆண்களும், ஏன் பெண்களும் கூட ஒத்துழைத்தால், தவறுகள் நடக்கின்றன[10]. அவற்றை மறைக்கும் போது, குற்றங்கள் நடக்கின்றன. அவற்றைத்தான் பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே பார்த்து வருகின்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மதம், அதனை பின்பற்ருகிறவர்கள் பிரச்சினை என்று மற்றவர்கள் அமைதியாக இருக்க முடியாது, ஏனெனில், அவை சமுதாயத்தை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள், குற்றங்களாகவே மாறி, தொடர்ந்து நிகழும் போது, கண்காணிக்க, தடுக்கவேண்டியுள்ளது.

வேதபிரகாஷ்

04-12-2011


 


[10] சமீபத்தில் ஆமென் என்று புத்தகம் எழுதிய கன்னியாஸ்திரி, இதனை விளக்கியுள்ளார்.