Archive for the ‘கள்ளக்காதல்’ Category

குலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா?

பிப்ரவரி 15, 2016

குலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா?

Kulasekharam S of Pechiparai, N of Kulachel

குலசேகரம் கிருத்துவ அறுவடை போராட்ட பூமி: குலசேகரம் கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, மார்த்தாண்டத்திற்குப் பிறகு, ஒரு முக்கியமான வியாபார நகரமாகும். இதைச் சுற்றி பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி, தக்களை, கொளச்சல், மார்த்தாண்டம் என்று பல முக்கிய நகரங்கள் உள்ளன. இங்கு வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் உள்ளது. ரப்பர் தோட்டங்கள் அதிகமாகவுள்ளதால், அதில் முதலீடு செய்துள்ளவர்களின் நலன்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் மற்றும் பங்கீட்டுக் காரகள். இங்கு கத்தோலிக்க, புரொடெஸ்டென்ட், பெந்தகோஸ்தே என்று பலதரப்பட்ட டினாமினேஷன் சர்ச்சுகள் அறுவடைகளில் ஈடுபட்டுள்ளன. இதனால், ஜெபகூட்டம் என்ற பெயரில், இக்குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இங்குள்ள சர்ச்சுகளுக்குடையே பல விவகாரங்களில் சண்டை-சச்சரவு இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து, சிறுவர்-சிறுமிகளைக் கடத்திக் கொண்டு வந்து, அனாதை இல்லங்கள் நடத்தும் சாக்கில் பிடோபைல்-செக்ஸ் குற்றங்களில் பாதிரியார்கள் அதிகமாகவே ஈடுபட்டு வந்துள்ளனர். போதாகுறைக்கு, ஜெபகூட்டங்களில் பெண்களைக் கூட்டி வந்து பேச வைப்பது, பாட வைப்பது போன்ற  நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. எல்லைக்கருகில் இருப்பதினால், இங்கிருப்பவர்கள் கேரளாவுக்குச் சென்று மறைந்து கொள்வதும், அங்கிருப்பவர்கள், இங்கு வந்து மறைந்து வாழ்வதும் சகஜமாகவே இருக்கின்றன. சர்ச்சுகளுக்குள் பிரச்சினைகள் என்றால், மதமாற்றத்தில் இவை போட்டிப் போட்டுக் கொண்டு ஈடுபடுவதால், இந்துக்களோடும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

 சர்ச் விழா மோதல் - ஜனவரி 2016

ஜெபக்கூட்டங்கள் நடத்துவதில் போட்டி, அத்துமீறல்கள் முதலியன (07-02-2016): குலசேகரம் அருகே அண்டூரில் மத வழிபாடு செய்வதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை 07-02-2016 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்[1]. அண்டூர் புல்லை பகுதியில் ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு அப்பகுதியிலுள்ள மற்றொரு மதப்பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குலசேகரம் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீஸார் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர். முறையான அனுமதி பெற்று ஜெபக்கூட்டத்தை நடத்துமாறு ஜெபக்கூட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் கூறினர்[2].

மார்த்தாண்டம் பிரச்சினை - நியூஸ்.7. போட்டோ

மார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ

விழா நடத்துவதில் இரு கிருத்துவக் குழுக்களுக்குள் போட்டி, சண்டை, சச்சரவு: திருவட்டார் அருகே கோஷ்டிமோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இரு கிருத்துவப் போட்டிக் குழுக்களில் மோதல் உண்டானது என்பதை ஊடகம் அப்படி நாஜுக்காகச் சொல்லியுள்ளது. நாகர்கோவில் அருகே திருவட்டார் ஆற்றூர் பள்ளிகுழிவிளை பகுதியில் சர்ச் மற்றும் காவு உள்ளது[3]. இங்கு விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாளாக பிரச்னை இருந்து வருவதாக தெரிகிறது. ஆமாம், விழா, கொண்டாட்டம் என்றாலே, பணம், பெண்கள், பாட்டு, ஆட்டம் எல்லாமே இருக்கும் அல்லவா? இந்நிலையில் ஒரு பிரிவினர் பொங்கல் விழா நடத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மண் நிரப்பியதோடு, செங்கற்கள் இறங்கியும் வைத்துள்ளனர்[4]. “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற வாடிகனின் திட்டப்படி இப்படியெல்லாம் பண்டிகைகள் கொண்டாடி, கூட்டம் சேர்த்து வரும் பென்கள்-ஆண்கள் முதலியோரை வளைத்துப் போடுகின்றனர்.

 குலசேகரம் சர்ச்சுகள்

விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம்(ஜனவரி 2016)[5]: இன்னொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் பணியை தடுத்து நிறுத்தினர். இன்னொரு பிரிவினர் பிரச்னைக்குரிய இடத்தில் தங்களது பகுதிக்கான எல்லையை சரி செய்யத் தொடங்கினர். எந்த பணியும் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சர்ச்சின் உதவி போதகர் அகினாஸ் (34), ஜாஸ்வின் (22), லிகோ (22) காயம் அடைந்தனர். இதனிடையே நேற்று இரவு திடீரென ஏராளமானோர் சர்ச் முன்பு திரண்டனர். நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்து என்று கோரி கோஷம் எழுப்பினர். கல், மண் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்றும் கூறினர். போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சென்று சமாதானப்படுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பிரச்னைக்குரிய இடத்தில் குவிக்கப்பட்டுள்ள கல், மணல் அகற்றப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்[6].

குலசேகரம் சர்ச் - ஹீலிங் அதிசய நிகழ்ச்சி

பளுகல் காவல் சரக பகுதியில் பெந்தெகோஸ்தெ சபை மதில் சுவரை இடித்து சேதப்படுத்தியதாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு (நவம்பர் 2014)[7]: குலசேகரம் அருகேயுள்ள மலவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வில்சன் மகன் ராப்சன் (40). இவர் பளுகல் அருகே தேவிகோடு பகுதியில் ஆதிபெந்தேகொஸ்தெ சபையை நிறுவி, அதில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த ர. ஜாண்லிவிங்ஸ்டன் (55), ஆடோட்டுகோணம் ச. டைட்டஸ் (55), பொ. சுந்தரதாஸ் என்ற பிரான்சீஸ் (45), தோலடி ரா. ராபின்சன் (46), ராமவர்மன்சிறை நே. ஷாஜி (40), காரக்கோணம் பா. அருண்குமார் (24), மேல்பாலை இ. சந்தோஷ் (23), தோலடி சோ. ஜோஸ் (35), ஜேசிபி எந்திர உரிமையாளர் கண்ணுமாமூடு தே. அனிஷ் (23), ஆடோட்டுகோணம் தங்கராஜ், டெ. ஷைஜு (23) உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலையில் ஜேசிபி எந்திரத்துடன் பெந்தெகோஸ்தெ சபைக்கு சென்று, அங்கிருந்த மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம். இது குறித்து தட்டிக்கேட்ட சபை ஊழியர்களை மிரட்டினராம். இது குறித்து போதகர் ராப்சன் அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[8].

Sexy christianity - pastor sex India.3

ஜெபத்தில் பாட்டில் ஈடுபட்ட ஆண்-பெண் ஈர்க்க்கப்பட்டு காதலிக்க ஆரம்பித்தல்: இப்படி போதகர்கள், பாஸ்டர்கள் சண்டை போட்டு வரும் நிலையில், ஒரு பெண்ணிற்கு இரண்டு மதபோதகர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குலசேகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை, பெரும்பழதுார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (35 பெயர் மாற்றம்) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 மற்றும் 7வயதுகளில் இரண்ட பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர், அந்த பகுதியில் உள்ள ஜெபக்கூட்டம் ஒன்றிற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அதன் பின் உடல்நலம் பெற்றதாக கூறப்படுகிறது. உடனே இந்துவான அவர் கிருத்துவராக மாறிவிட்டாராம்! அதன் பின் மதம் மாறிய அவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சாட்சி சொல்வதுடன் வீட்டில் பிரார்த்தனை கூட்டமும் நடத்தி வந்துள்ளார். அந்த அளவுக்கு பரிசுத்த ஆவி அவர் மீதேறி வேலை செய்து வருகிறது போலும்! கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாகர்கோவிலில் நடந்த ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் இவர் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் மனம் கவரும் குரலில் பாடல்கள் பாடியுள்ளார். இதனால் பிரகாஷுக்கு அந்த இளம்பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதுபோல, பிரகாஷின் சாட்சியுடன் கூடிய பிரசங்கம் அந்த இளம்பெண்ணையும் கவர்ந்து விட்டது[10].

© வேதபிரகாஷ்

15-02-12016

[1] தினமணி, குலசேகரம் அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு: மறியல், By குலசேகரம், First Published : 08 February 2016 12:50 AM IST.

[2]http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2016/02/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/article3266127.ece

[3] குமரி முரசு, விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம், 05-01-2016.2.20:13 pm.

[4] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=86187

[5] தினகரன், விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம், ஜனவரி.7, 2016, 07.06 pm.

[6]http://m.dailyhunt.in/news/india/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-epaper-karan/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-newsid-48117867

[7] தினமணி, பளுகல் அருகே சர்ச் மதில் சுவர் இடிப்பு: 11 பேர் மீது வழக்கு, By களியக்காவிளை, First Published : 06 November 2014 12:29 AM IST.

[8]http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2014/11/06/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/article2509586.ece

[9] குமரி.ஆன்.லைன், கள்ளக்காதலிக்காக 2 போதகர்கள் பயங்கர மோதல் : குலசேகரம் அருகே பரபரப்பு சம்பவம், சனி 13, பிப்ரவரி 2016 5:23:48 PM (IST).

[10] http://kumarionline.com/view/31_110932/20160213172348.html

Advertisements

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்

மார்ச் 20, 2015

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்

Franklin christian priest murders March 2015.DM

Franklin christian priest murders March 2015.DM

தனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதுடன், தனது 2-வது திருமணத்திற்கும் இடையூறாக, கள்ளக்காதல் விவகாரத்தில் போட்டியாக இருந்த கல்லுாரி மாணவரை கொலை செய்த வழக்கில், மதபோதகர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளிவந்துள்ள செய்திகள் வழக்கம்போல உள்ளதேயன்றி, அதிலுள்ள தீவிரமான பிரச்சினைகளைப் பற்றி யாரும் அலசுவதாகத் தெரியவில்லை. வழக்கம் போல கொலைக்குற்றத்தில் சிக்கியுள்ளவர்களின் மத அடையாளங்களை மறைக்கவும், தமிழ் ஊடகங்கள் முயன்றுள்ளன. இதில் கொலை செய்யப்பட்டுள்ள மாணவன், வேன் டிரைவர் கிருத்துவர்கள் தான். சர்ச்சுகளில் பகுதிநேர ஊழியத்தில் கிருத்துவர் அல்லாதவர் ஈடுபடமுடியாது. டிரைவரும் கிறிஸ்தவப் பெயரை சும்மா வைத்துக் கொள்ளமுடியாது. இனி அந்த மூன்று 21வயதிற்கு கீழானவர்களின் அடையாளம் குறிப்பிடப்படவில்லை.

Franklin christian priest murders March 2015

Franklin christian priest murders March 2015

அழுகிய நிலையில் வாய்க்காலில் கிடந்த பிணம்: ஈரோடு மாவட்டம், கோபி, பங்களாப்புதுார் சாலையில், தடப்பள்ளி வாய்க்கால் அருகே, சந்தனத்துறை என்ற இடத்தில், கடந்த, 8ம் தேதி, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல், அழுகிய நிலையில் கிடந்தது. தனை கோபி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[1].  அருளாளனின் உடற்கூறு ஆய்வில் விஷத்தினால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், டி.என்.பாளையம், கொங்கர்பாளையம் அருகே, திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ராஜன் மகன் அருளாளன், 25, என்பவர், கொலையானதை உறுதி செய்தனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலையுண்ட அருளாளனின் மொபைல் போனை வைத்து துப்பு துலக்கினர். அருளாளனின் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். நீச்சல் நன்கு தெரியும் என்பதால் அவர் வாய்க்காலில் விழுந்து இறந்திருக்க முடியாது என்று போலீசார் கருதினார்கள். போலீசார் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால்

மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால்

அருளாளனும் கிருத்துவர் தாம், மதஊழியர் தாம்: கொலைசெய்யப்பட்ட மாணவனின் பெயர் அருளாளன். அவர், கோபி அரசு கலைக் கல்லுாரியில் எம்.ஏ., முதலாமாண்டு படித்து கொண்டே, பங்களாப்புதுாரில், விவேகானந்தா டியூசன் சென்டரில், டியூசன் எடுத்து வந்து உள்ளார். டி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாலையில் ஆங்கில மொழியும் கற்பித்து வந்தார். அதுமட்டுமின்றி கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பகுதிநேர ஊழியராகவும் வேலை செய்துவந்தார்[2]. அதாவது அவர் கிறிஸ்தவர் என்று தெரிகிறது, இருப்பினும் தமிழ் ஊடகங்கள் அதைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளன. செக்யூலரிஸ போதையில் அவ்வாறு மறைத்தது, அப்பட்டமாகத்தான் தெரிகிறது.

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்.2

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்.2

பாஸ்டர் குடும்பத்தாருடன் பழகிய ஊழியன் அருளாளன்: கோபிசெட்டிபாளையம் அண்ணாவீதியை சேர்ந்தவர் பாஸ்டர் பிராங்கிளின்பால் (37). இவர் கோபி மற்றும் கொங்கர்பாளையத்தில் உள்ள சியோன் முதலிய கிறிஸ்தவ ஆலயங்களில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுரி என்கிற மனைவியும், கார்த்திக்பால் என்கிற மகனும் உள்ளனர். அப்போது, கோபி மற்றும் பாஸ்டர் பிராங்கிளின் பால், 37, என்பவருடன் அருளாளனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன. சரி, மணமாகி, ஒரு மகனும் உள்ள ஒரு கிறிஸ்த பெண் எப்படி, இன்னொரு ஆணுடன் பழகலாம் என்பது பற்றி விளக்கவில்லை. கணவன் – மனைவி பந்தத்தைதாண்டி, தொடர்ந்து கிருத்துவர்கள் எப்படி இத்தகைய கள்ள-பாலியல் உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள் என்று சர்ச்சோ, மற்ற கிருத்துவ பாஸ்டர்களோ, பிஷப்புகளோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அருளாளனின் பெற்றோர், கௌரி மற்றும் பிராங்க்ளினின் பெற்றோர் எப்படி சம்மதித்தார்கள் என்று புரியவில்லை. மாறாக, ஊடகங்கள், “திருச்சபைக்கு வந்து சென்றதால், அருளாளன், மதபோதகர் பிராங்கிளின் பால் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பழகினார்[3]. அப்போது அருளாளனுக்கும், கவுரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது[4]. சில மாதங்களுக்கு முன், திருச்சபை பணியாக வெளியூர் சென்றபோது, அவரது மனைவியுடன், அருளாளன் உல்லாசமாக இருந்ததை அறிந்து, பிராங்கிளின்பால் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவருக்கும், கவுரிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. தவிர, பிராங்கிளின் பாலின் மனைவி, அவரை பிரிந்து கோவைக்கு சென்று விட்டார்”, என்று முடித்துள்ளனர்.

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்

பேபிராணியை காதலித்த அருளாளனும், பிராங்கிளினும்: இந்நிலையில், கொங்கர்பாளையத்தை சேர்ந்த பேபிராணி, 23, என்ற பெண்ணுடன், பிராங்கிளின் பாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது[5]. மதபோதகர் விரும்பிய பெண்ணை, அருளாளனும் விரும்பியது, பிராங்கிளின் பாலுக்கு தெரியவந்தது. இதை அறிந்த பிராங்கிளின்பால் தனது மனைவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை காதலிக்கிறாயா? என்று ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவர் கோபத்தை வெளிக்காட்டாமல் அருளாளனுடன் பழகி வந்தார், என்கிறது ஒரு ஊடகம், அதாவது, தெரிந்தே அமைதியாக இருந்தார் என்றால், விசயம் என்ன சொல்லவில்லை. இன்னொரு ஊடகமோ, “இதற்கிடையே அருளாளனின் காதலிக்கும், பிராங்கிளின்பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் பிராங்கிளின்பால் தன் மனைவியிடம் விவகாரத்து பெற்ற பிறகு காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்[6] என்கிறது. இதற்கு அருளாளன் தடையாக இருப்பதாகவும் அவர் எண்ணினார். அதனால், அருளாளனை தீர்த்துக்கட்ட பிராங்கிளின் பால் முடிவு செய்தார்[7].

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

விஷம் கொடுத்து / பூச்சி மருந்து கொலை[8]: பங்களாப்புதுார் தனியார் கல்லுாரியில் படிக்கும் மூன்று மாணவர்களை, மதபோதகர் உதவிக்கு அழைத்து உள்ளார். இவர்களுக்கும் அருளாளனுக்கும் டியூஸனுக்கும் வருவதால் பழக்கம் இருக்கிறது. ஆனால், பிராங்கிளின் கூப்பிட்டதும், அதுவும் கொலைசெய்யக் கூப்பிட்டதும், அம்மாணவர்கள் எப்படி ஒப்புக்கொண்டனர் என்பது புதிராக இருக்கிறது. அம்மாணவர்கள் என்ன அந்த அளவுக்கு குற்றமனப்பாங்கு கொண்டவர்களா அல்லது மூளைசலவை செய்து கொல்லத்தூண்டிவிட்டார் என்றால், தூண்டுதல் (Motive) முறை என்ன என்படும் தெரியவில்லை. ஆனால், பிராங்கிளின் சொல்லியபடி, கோகோ கோலாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்தனர்.  அதை குடித்த அருளாளன் ‘‘என்ன இந்த குளிர்பானம் ஒரு மாதிரியாக உள்ளதே..’’ ரொம்ப நாள் ஆகிவிட்டதா.. என்று கேட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அருளாளன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

அருளாளன் உடலை வாய்க்காலில் போட்டது: பிறகு, “இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதபோதகர் பிராங்களின் பால் மகிழ்ச்சியுடன் அங்கு வேனுடன் வந்தார்”, என்று ஊடகங்கள் சொல்கின்றன. அப்படியென்றால், அம்முன்று மாணவர்கள் போன் செய்து அறிவித்தார்கள் என்றாகிறது. அதாவது, அந்த அளவுக்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்றாகிறது. மயங்கிய நிலையில் கிடந்த அருளாளனை, டெம்போ டிராவலர் மூலம் கடத்திச் சென்று, வழியில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதை கண்டு தண்ணீரில் போட்டால் தவறி விழுந்து இறந்திருப்பார் என போலீசார் கருதி விடுவார்கள் என எண்ணி அருளாளன் பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர். பிறகு யாருக்கும் எதுவும் தெரியாததுபோல் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். போலீஸ் பிடியில் சிக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் அவர்கள் வசமாக சிக்கிக்கொண்டனர்[9].

21 வயதுக்கு கீழான மூன்று பேர் கைது:  கொலைக்கு உடந்தையாக இருந்ததாக,

  1. டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி,
  2. மதபோதகர் பிராங்கிளின்பால் (37),
  3. அருண்குமார் (18),
  4. நாகராஜ் (18),
  5. கார்த்திகேயன் (20),

மற்றும் கல்லுாரி மாணவர்கள் மூவர் என, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்[10]. இங்கு “டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி” என்று ஒரு நாளிதழ்தான் குறிப்பிடுகிறது. விசாரணையில் அவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிகிறது[11]. மாணவர்கள் 3 பேரும் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்[12].இன்று 21 வயதுக்குக் கீழானவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது, அவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாமல் இருப்பது, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற விசயங்கள் இன்றைக்கு விவாதிக்கப் படுகின்றன. அதனால், கிருத்துவர்கள் இளைஞ்சர்களை இவ்வாறு ஈடுபடுத்தி பரிசோதனை செய்கிறார்களா அல்லது குற்றங்களை மறைக்க புதிய வழிகளை உருவாக்குகிறார்களா என்று தெரியவில்லை. சில நேரங்களில் மத-அடையாளங்கள் குறிப்ப்டப்படுவதில்லை, சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. இதெல்லாம் எதற்கு என்றும் நோக்கத்தக்கது.

வேதபிரகாஷ்

© 20-03-2015

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=136281

[2] http://www.dailythanthi.com/News/State/2015/03/17005209/The-missionary-who-killed-5-people-including-college.vpf

[3] தினமலர், மாணவர் கொலை வழக்கு மதபோதகர் உட்பட 5 பேர் கைது, மார்ச்.6, 2015.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/illicit-love-love-clash-murder-5-people-arrested-including-preacher-college-students-115031700016_2.html

[5]  தினத்தந்தி,  மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: கல்லூரி மாணவரை கொலை செய்த மதபோதகர் உள்பட 5 பேர் கைது , பதிவு செய்த நாள்:

செவ்வாய், மார்ச் 17,2015, 12:52 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 17,2015, 4:00 AM IST.

[6]  வெப்துனியா, கள்ளக்காதல், மோதல், கொலை: மதபோதகர், கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது, செவ்வாய், 17 மார்ச் 2015 (13:49 IST).

[7] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pastor-Among-Four-Held-for-Killing-Student/2015/03/17/article2717021.ece

[8]  தினகரன், குளிர்பானத்தில் விஷம் கலந்து கல்லூரி மாணவனை கொன்ற கிறிஸ்தவ மதபோதகர் கைது, 16-03-2015; 00:08:49; திங்கட்கிழமை.

[9] http://www.maalaimalar.com/2015/03/16165150/College-student-who-killed-a-p.html

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1207108

[11] http://www.business-standard.com/article/pti-stories/pastor-and-4-others-held-for-murder-115031600407_1.html

[12] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/illicit-love-love-clash-murder-5-people-arrested-including-preacher-college-students-115031700016_1.html