Archive for the ‘கல்வி’ Category

திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ் – மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (2)

ஓகஸ்ட் 29, 2017

திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ்மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (2)

Caldwell conference- Avvai college - 28-08-2017-vaikunda sami member

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி திருமண்டலம், அவ்வை நுண்கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து கருத்தரங்கை நடத்தியது: தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் நினைவேந்தல்-கருத்தரங்கம், பாளையங்கோட்டையில் 28-06-2017 திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. “அயர்லாந்தில் 1814-இல் பிறந்த ராபர்ட் கால்டுவெல், திராவிட மொழிகள் மீது அளவுகடந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளைப் புரிந்தவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் தங்கி இருந்து தமிழ்ப் பணியாற்றினார். இவர் ஆங்கில மொழியில் உருவாக்கிய ஒப்பிலக்கணம் உலகப் புகழ் பெற்ற நூலாகும். திருநெல்வேலி திருமண்டல முதல் பேராயராகவும் இருந்தவர். இவரது நினைவேந்தல்கருத்தரங்கம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஆக.28ஆம் தேதி நடைபெறுகிறது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி திருமண்டலம், அவ்வை நுண்கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து இக் கருத்தரங்கை நடத்துகின்றன,” என்று தினமணி செய்தி வெளியிட்டது[1]. ஆனால், இங்கு “திருநெல்வேலி திருமண்டலம்” என்று குறிப்பிட்டது, கிருத்துவ நிறுவனம் ஆகும். திருநெல்வேலி டையோசிஸ் டிரஸ்ட் அசோஸியேசன் [Tirunelveli Diocesan trust Association (TDTA)] என்ற பெயரில் ஒரு சங்கத்தை வைத்து, பல காரியங்களை செய்து வருகின்றது. அதில் பைபிளைப் பரப்புவது, மதமாற்றம் செய்வது என்பது தான் குறிக்கோளாக உள்ளது. ஆகவே, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மற்றும் அவ்வை நுண்கலைக் கல்லூரி இதனுடன் சேர்ந்து இவ்வாறு கருத்தரங்கம் நடத்தியுள்ளது விசித்திரமாகவும், திகைப்பாகவும் உள்ளது.

Caldwell conference- Avvai college - 28-08-2017-samiyar speech

கிருத்துவ ஆதிக்கம், சார்பு மற்றும் அழுத்தம் கொண்ட கருத்தரங்கமாக இருந்தது: இக் கருத்தரங்குக்கு ஓவியர் சந்ரு தலைமை வகிக்க, பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் அ. ராமசாமி, வரலாற்றுத் துறை தலைவர் ராமசுப்பிரமணியன், சாராள் தக்கர் கல்லூரி செயலர் சாம்சன் பால்ராஜ், தூய யோவான் கல்லூரி செயலர் ஜார்ஜ் கோசல் ஆகியோர் முன்னிலை வகிக்கி,. திருமண்டல தொடர்புத் துறை இயக்குநர் கிப்சன் ஜான்தாஸ் வரவேற்க, இக்கருத்தரங்கத்தை பல்கலைக் கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் தொடங்கி வைக்க, தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்துரை வழங்க, கருத்தரங்கில் கால்டுவெல் வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் மார்பளவு சிலை வெளியிடப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் வெளியிட, இந்தியத் தொல்லியல் துறை ஆணையர் பா. அறவாழி பெற்றுக் கொண்டார். அ.சேவியர், எம்.எஸ்.தங்கம் எழுதிய கால்டுவெல் வாழ்வும், பணியும் என்ற நூலை பல்கலைக் கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளியிட்டார். கிருத்துவர்கள் கருத்தரங்கங்கள் நடத்துவது ஒன்றும் ஆச்சரியமான விசயம் இல்லை, ஆனால், பல்கலை, கல்லூரி என்ற நிலைகளில் இவ்வாறு நடத்துவது திகைப்பாகவும், உள்நோக்கம் இருப்பதும் தெரிகிறது.

Vinod Vincent Raj - history asst.prof suspended-MSU

பாலியல் புகாரில் மனோன்மணியம் பல்கலைக் கழகம் முதலியன: சமீபகாலத்தில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படும் போது, தைரியமாக, வெளிப்படையாக வந்து புகார் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம், பயந்து புகார் கொடுக்காமல் இருந்தார்கள். இப்பொழுது கூட, பாலியல் தொல்லை, தொந்தரவு, சில்மிஷம் செய்யும் ஆண்கள் தங்களது தகுதி, அதிகாரம், பொறுப்பு முதலியவற்றைக் கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்து, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டவும் செய்து வருகிறார்கள். உதாரணங்கள் டெஹல்கா தருண் தேஜ்பால், தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி ஷதீஷ்குமார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் பழனிச்சாமி முதலியோர்[2]. சமீப காலத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கிருத்துவ நிறுவனங்கள் பல சர்ச்சைகளில் சிக்கி செய்திகள் வெளிவந்துள்ளன. பாலிய புகார்கள் பற்றிய விவகாரங்கள் மனோன்மணியம்பல்கலையில் அதிகமாக உள்ளன. பாலியல் தொந்தரவு மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரையடுத்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்[3]. போதாகுறைக்கு, இதில் பங்கு கொண்ட பாதிரிகள் சென்ற மாதங்களில் பணப்பிரிப்பு, கையாடல், அடிதடி, போலீஸாரிடம் புகார் என்றெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆக அத்தகையோரை வைத்து கருத்தரங்கம் நடத்தியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மாணவ-மாணவியர் இவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்பது புதிராக உள்ளது.

Billi, Stephen Selvinraj, involved in fund-sharing-10-05-2017

பில்லி, ஸ்டீபன் செல்வின்ராஜ் முதலியோர் போலீஸாரிடம் புகார் கொடுத்தது: நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல உதவி தலைவர் பில்லி, குருத்துவ செயலாளர் ஸ்டீபன் செல்வின்ராஜ் ஆகியோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது[4]: “நாங்கள் கடந்த 23.04.2017 அன்று நடந்த திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்று நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். 2.05.2017 அன்று திருமண்டல அலுவலகத்தில் உள்ள எங்கள் அறையில் அமர்ந்திருக்கும் போது, பாலபாக்கிய நகர் எடிசன், காமராஜ் நகர் மனோகர், ராமையன்பட்டி நேத்தன் மோசஸ், என்ஜிஓ பி காலனி ஜான்தினகர், நாங்குநேரி ராபர்ட் ஜெபக்குமார் மற்றும் அடையாளம் காட்டக்கூடிய சில நபர்கள் கூட்டமாக வந்து, எடிசன் என்பவரை நிர்வாக அலுவலராக பேராயர் நியமித்திருப்பதாகவும், அவருக்கு எதிராக செயல்படுவது யாராக இருந்தாலும் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினர். பாதிரியார் பில்லியின் அங்கியை பிடித்து இழுத்து அடிக்க வந்தார்கள். தேர்தலில் பேராயர் அணி தோற்று விட்ட நிலையில் தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் திருமண்டல நிர்வாகத்தை கவனிக்க தடை செய்யவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்”, இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.  இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி பிஷப் ஆதரவாளர்கள் எடிசன் உள்ளிட்ட 6பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்[5].

Caldwell conference- Avvai college - 28-08-2017-Christian pastors-2

உயிருக்கு பயந்த பில்லி, ஸ்டீபன் செல்வின்ராஜ் முதலியோர் கால்டுவெல் மாநாட்டில் கலந்து கொண்டது: ஒரு பக்கத்தில் காசுக்காக அடித்துக் கொண்டும், இன்னொரு பக்கம் ஏசுவுக்காக மோதிக்கொண்டும் இருக்கும் இவர்கள், மாணவ-மாணவியருக்கு என்ன சொல்லிக் கொடுக்கப் போகின்றனர் என்று தெரியவில்லை[6]. பில்லி, ஸ்டீபன் செல்வின்ராஜ் முதலியோர் உயிருக்கு பயந்து புகார் கொடுத்தனர் என்றால், சர்ச்சிற்குள் இருக்கும் அந்த எதிர்தரப்பு பாதிரியார்கள் கொலை செய்யத் துணிந்தனரா? “எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்,” என்று கெஞ்சிய பாதிரிகளா மாணவ-மாணவியருக்கு ஒருப்படியாக போதிக்கப் போகின்றனர்? இத்தகைய பாதிரிகளைக் கொண்ட டையோசிஸை என்னென்பது? ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம் முதலியவை இல்லாதவர்கள், பாதிரிகளாக இருப்பது, இத்தகைய கருத்தரங்களில் பங்கு கொள்வது முரண்பாடாக, நேர்மையற்றதாக இருக்கின்றன[7]. அதேபோல, பாலியல் விவகாரங்களில் நாறும் மனோன்மணிய பல்கலை பேராசிரியர்கள், முதலில் தங்களை ஒழுங்குப் படுத்திக் கொள்வதற்கு முன், இவ்வாறு பொது கருத்தரங்களில் கலந்து கொண்டு மற்றவர்களுக்கு என்ன போதனை செய்ய முடியும்?

© வேதபிரகாஷ்

29-08-2017

Caldwell conference- Avvai college - 28-08-2017-students

[1] தினமணி, பாளை.யில் நாளை தமிழறிஞர் கால்டுவெல் நினைவேந்தல்கருத்தரங்கம், Published on : 27th August 2017 05:35 AM

http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/aug/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2762625.html

[2] https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2015/08/28/bharathiar-university-sexual-harassment-and-bribery-complaints-lodged-by-lady-scholars/

[3] https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2015/08/16/sexual-harassment-complaint-against-assistant-professor-of-manonmaniam-sundaranar-university/

[4] நெல்லை ஆன் லைன், திருமண்டல புதிய நிர்வாகிகளுக்கு மிரட்டல் : பிஷப் ஆதரவாளர்கள் 6பேர் மீது வழக்கு, ஞாயிறு 14, மே 2017 7:06:21 PM (IST)

[5] http://nellaionline.net/view/31_138599/20170514190621.html

[6] வேதபிரகாஷ், சர்ச்சில் காணிக்கை வசூலைப் பிரிப்பதில் சேகர  குருக்கள் இடையே சண்டை – அடிக்கடி வழக்குகளில் சிக்கி வரும்சி.எஸ். சர்ச்சுகள்!, 27-06-2017.

[7] https://christianityindia.wordpress.com/2017/06/27/csi-parish-priests-started-fighting-for-sharing-collection-at-churches-tirunelveli/

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் “நவீன ராமாயண” நாடகம் கிருத்துவப் பள்ளியில் நடந்தது – அதிமுக எம்.எல்.ஏ சசித்துப் பார்த்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு; 2 ஆசிரியர்கள் கைது!

பிப்ரவரி 19, 2012

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் “நவீன ராமாயண” நாடகம் கிருத்துவப் பள்ளியில் நடந்தது – அதிமுக எம்.எல்.ஏ சசித்துப் பார்த்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு; 2 ஆசிரியர்கள் கைது!

கிருத்துவ பள்ளியில் நடந்தேறிய நாடகம்: தனியார் செயின்ட் மேரீஸ் கிறிஸ்தவ பள்ளியில்[1] “நவீன ராமாயணம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகத்தில் இந்து கடவுள்களை அவமதித்தாக கூறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்திய பள்ளித் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்யக் கோரி மீஞ்சூர் கடை வீதியில் இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலர் பரமேஸ்வரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்துச் செல்ல மறுத்தனர். இதையடுத்து சாலை மறியிலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 32 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர்[2].

ஆளும் கட்சி அதிமுக எம்எல்ஏ பொன். ராஜா கைகளைத் தட்டி சிரித்து ரசித்துப் பார்த்த நாடகம்: சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் செல்வராணி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் நடைபெற்ற நாடகத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து கடவுள்கள் சினிமா பாடல்களை பாடி கேலி செய்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. விழாவில் அதிமுக எம்எல்ஏ பொன். ராஜாவும் கலந்துகொண்டுள்ளார். அவர் கைகளைத் தட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார்[3]. இந்த நிகழச்சி சி.டி.யும் வெளியானது[4]. இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்துக்களின் கடவுள்களை விமர்சனம் செய்யும் வகையிலும் இருந்ததாக கூறி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சசிக்குமார் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்[5].

செக்யூலரிஸ நாட்டில் கிருத்துவர்கள் எப்படி இவ்வாறு அவதூறு செய்கிறர்கள்: இதில் அதிசயம் என்னெவென்றால், ஊடகங்கள் மௌனமாக இச்செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளன. இதே ஒரு கிருத்துவ-முஸ்லீம் கடவுளர்களை தூஷித்து, கிண்டல் செய்து, இப்படி – நவீன பைபிள், நவீன குரான் என்று நாடகம் நடத்தியிருந்தால், ஆளும் கட்சி அதிமுக எம்எல்ஏ பொன். ராஜா கைகளைத் தட்டி சிரித்து ரசித்துப் பார்ப்பாரா? அதை சிடி போட்டு கொடுப்பார்களா? போலீசார் இப்படி ஏனோ-தானோ என்று நடவடிக்கை எடுப்பார்களா? கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் இத்தகைய விஷத்தனத்தை விஷமத்தைச் செய்வார்களா? அந்த அளவிற்கு அவர்களது எண்ணம், ரசிப்பு உள்ளது என்றால், அவர்களின் கோரமான, அழுக்குள்ள, அசிங்கமன மனங்களைத் தான் அது வெளிப்படுத்துகிறது. பிறகு ஏன் சேவை செய்கிறேன் என்று பீத்திக் கொள்ள வேண்டும்? இத்தகைய குரூரங்களை மனங்களில் வைத்துக் கொண்டு செய்யும் சேவை, சேவையா அல்லது விபச்சாரத்தை விட கேடு கெட்ட செயலா? உண்மையில் கர்த்தரோ, ஏசுவோ, மேரியோ இதை ஏற்றுக் கொள்வார்களா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஆக இந்துக் கடவுளர்களை, இந்துக்களை எப்படி வேண்டுமானாலும் தூஷிக்கலாம், அவதூறு பேசலாம் இந்திய சட்டங்கள் ஒன்றும் செய்யாது.

தாமதம் செய்த போலீசார், பதட்டம் ஏற்பட்ட நிலை: அந்த புகாரின் பேரில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று கூறி பொன்னேரி டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனிடம் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் ஏற்படாத வண்ணம் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.குமார், பொன்னேரி டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், அப்துல்காதர் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், விஜயன், பிரபாகரன், ஆனந்தன், ரகு, உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு வழக்கறிஞர் தைரியமாக புகார் கொடுத்தார்: நிலைமை மோசமாகிக் கொண்டிருந்த நிலையில், ஒரு வழக்கறிஞர் தைரியமாக கிரிமினல் புகார் கொடுத்தார். அதனால், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் நாடகம் நடத்திய பள்ளி நிர்வாகிகள் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளிக்கூட உடற்கல்வி ஆசிரியர் சரவணமுரளி (வயது 32). தாவரவியல் ஆசிரியர் காந்திநாத் (31) ஆகிய இருவரை கைது செய்தனர். கன்னியாஸ்திரிகளான பள்ளியின் தாளாளர் செல்வராணி, பள்ளி முதல்வர் ஜான்சிராணி ஆகியோரை பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்து முன்னணியினர் குறை கூறினார்கள். இந்து முன்னணியினரின் அழைப்பின் பேரில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், பாஸ்கர், சோமுராஜசேகர், ஒன்றிய பொறுப்பாளர் குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த மீஞ்சூர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

நாடகத்தை அரங்கேற்றிய கிருத்துவர்களை விடுத்து, பெயருக்கு இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நாடகம்: அவர்களிடம், ‘இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சரவணமுரளி, காந்திநாத் ஆகியோரை போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மீஞ்சூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மீஞ்சூரில் தொடர்ந்து கிருத்துவர்களின் சட்டமீறல்கள்: மீஞ்சூரில் கிருத்துவர்களின் சட்டமீறல்கள் அதிகரித்து வருகின்றன. சென்ற செப்டம்பரில் கூட, மதப்பிரச்சார கூட்டம் நடத்தியபோது, போலீசார் மற்ற அதிகாரிகள் கிருத்துவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டனர். உதாரணத்திற்கு, ஒரு நிகழ்ச்சிக் கொடுக்கப் படுகிறது.

மீஞ்சூரில்அரசுஇடத்தில்கிறிஸ்தவவிழாநடத்தகிராமமக்கள்எதிர்ப்புஆர்ப்பாட்டம்-43 பேர்கைது: மீஞ்சூர், லட்சுமிபுரம் காலனி 1-வது தெருவில் கிறிஸ்தவ சபை உள்ளது. இச்சபையின் 7-ம் ஆண்டு விழாவை அப்பகுதியில் உள்ள சென்னை குடிநீர் அலுவலகத்திற்கு சொந்தமான காலி இடத்தில் நடத்த முடிவு செய்தனர். இதற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுமதி அளித்ததாக தெரிகிறது. நேற்று மாலை கிறிஸ்தவ விழா நடப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இதுபற்றி தெரிந்ததும் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு பொது இடத்தில் விழா நடத்த அனுமதி வழங்கியதை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் காண்டீபன், கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகசுந்தரம், கோதண்ட ராமன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிறிஸ்தவ விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருத்துவர்களுக்கு அனுமதி, இந்துக்களுக்கு கைது: இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 43 பேரை கைது செய்தனர்[6]. இதைத் தொடர்ந்து மாலையில் திட்டமிட்டப்படி கிறிஸ்தவ விழா அங்கு நடை பெற்றது. பொன்னேரி உதவி கலெக்டர் கந்தசாமி நேற்று இரவு கைது செய்யப் பட்ட கிராமமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். கிராமமக்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி அமைப்பினரும் கலந்து கொண்டனர். அப்போது இன்று காலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப் பட்ட 43 பேரும் விடுவிக்கப்பட்டனர். அதன்படி இன்று காலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள், கிராமமக்கள் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடந்தது.



[1] St. Mary’s Matric School, Ramananagar, Minjur, Tiruvallur (Dist.) – 601 203 (Tamilnadu),  2793 3053

கிருத்துவப் பள்ளிகளின் இரட்டை வேடம் – கிருத்துவர்கள் இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 1999ஐ எதிர்ப்பது ஏன்?

திசெம்பர் 31, 2011

கிருத்துவப் பள்ளிகளின் இரட்டை வேடம் – கிருத்துவர்கள் இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 1999ஐ எதிர்ப்பது ஏன்?

கிருத்துவர்கள் இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 1999ஐ எதிர்ப்பது ஏன்?  இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 1999 சிறுபான்மையினர்களின் உரிமைகளை மீறுகிறது என்று கத்தோலிக்க பிஷப்புகள் தீர்மானித்துள்ளனர். இதை எதிர்த்து பிரச்சாரத்தையும் ஆரம்பித்து விட்டனர்[1]. அச்சட்டத்தில் பிரிவுகள் 18, 21 மற்றும் 22 முதலியவற்றை மாற்ற வேண்டும் என்று இந்திய கதோலிக்க பிஷப் மாநாடு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது[2]. உச்சநீதி மன்றத்திலும் மனு சமர்ப்பித்துள்ளது[3]. மனிதவள மேம்பாட்டு அமைச்சர், சிறுபான்மையினர் பள்ளிகள் இந்த சட்டத்தில் வராது என்று வாக்குறுதி அளித்தாராம். ஆனால், எதுவும் நடக்கவிக்லை என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளனராம்[4].

Bishop Joshua Mar Ignathios, the Bishop-in-Charge of the CBCI Office of Education and Culture, briefed the house about the ‘Right of Children to Free and Compulsory Education Act-2009 and the Model Rules’. He focused on certain provisions of the said Act, which violate the rights of minorities[5]. He also referred to the statement made by Justice Siddiqui, Chairman of the National Commission for Minority Educational Institutions (NCMEI), that the minority institutions with less than 30% of students from a particular minority community cannot claim the minority status. After a brief discussion, the house authorized Bishop Joshua to take necessary action, even to the point of having legal recourse, particularly with reference to some discriminatory sections of the RTE Act 2009, in order to safeguard the minority status of our educational institutions guaranteed by the Constitution of India Art. 30(1).

திட்டமிட்டபடி மற்ற கிருத்துவர்களும் வழக்கை பதிவு செய்கின்றனர்: மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள விதிமுறைகளை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மயிலாப்பூர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பாக பாதிரியார் செபாஸ்டியன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:

விதிமுறைகளின்படி 25 சதவீதம்இடங்களை ஏழைமாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும் என கூறுகிறார்கள். இ து நடைமுறை சாத்தியமல்ல: “தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தி வருகிறோம். ஏழை குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி கற்பித்து வருகிறோம். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. இதனால் எங்களது பள்ளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். 150 மாணவர்கள் இருந்தால் தான் தலைமை ஆசிரியர் இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி 8ம் வகுப்பு வரை 25 சதவீதம் இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும் என கூறுகிறார்கள். இது நடைமுறை சாத்தியமல்ல. மிச்சமுள்ள 75 சதவீத மாணவர்களிடமும் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனவும் விதிமுறை வகுக்கப்பட்டுள்து.

சிறுபான்மையினருக்கு முழு உரிமைகள் வேண்டும்: “ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அந்தக் கமிட்டியில் பள்ளி சார்பாக ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்ற இடங்களில் பெற்றோர்கள், அந்தப்பகுதி கவுன்சிலர்கள் இடம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு கமிட்டி அமைத்தால் பள்ளியின் நிர்வாகம் அந்த கமிட்டி வசம் சென்றுவிடும். பள்ளி நடத்துபவர்களுக்கு எந்த உரிமையும் இருக்காது. மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் என அனைத்தும் அந்த கமிட்டிவசம் சென்றுவிட்டால், சிறுபான்மை பள்ளிகளுக்கு எந்த அதிகாரமும் மிஞ்சாது.

இந்தச் சட்டமானது, கல்வித்தரத்தை கீழே கொண்டு வருவது மட்டுமல்லாமல்,  கல்வித்தரத்தை மேம்படுத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் குறுக்கீடும் செய்கிறது:  “இலவச, கட்டாயக் கல்விச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த விதிகள், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது[6]. சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில், இது குறுக்கிடுகிறது. மாணவர்கள் சேர்க்கை, பள்ளிகளை நிர்வகிப்பதற்கான குழு அமைப்பது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, நியாயமான கட்டணம் நிர்ணயிப்பது ஆகிய உரிமைகளில், இந்த விதிகள் தலையிடுகின்றன. இந்தச் சட்டமானது, கல்வித் தரத்தை கீழே கொண்டு வருவது மட்டுமல்லாமல், கல்வித் தரத்தை மேம்படுத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் குறுக்கீடும் செய்கிறது. எங்கள் ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை, எங்களிடம் இருந்து பறிக்கிறது. அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், 25 சதவீத இடங்களை அடித்தட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, சட்டத்தில் நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமையை, சிறுபான்மை நிறுவனங்களிடம் இருந்து, அரசு பறிக்க முடியாது.

உச்சநீதி மன்றத்தைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்திலும் எதிர்ப்பு: மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது. எனவே இந்த சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள விதிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்து, மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வக்கீல் சேவியர் அருள்ராஜ், தமிழக அரசு சார்பாக கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய் காந்தி ஆஜரானார்கள். விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

“மைனாரிட்டி” என்ற போர்வையில் சர்வாதிகாரப் போக்குடன் இருக்க விரும்புகிறார்கள்: சாதாரணமாக, கிருத்துவ மற்றும் இதர சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஏதோ அவர்கள் தாம் இந்தியர்களுக்கு கல்வி கொடுக்கிறர்கள், நல்லது செய்கிறார்கள் என்று பிரமிப்பை ஏற்படுத்துவார்கள். ஆனால், மைனாரிட்டியாக இருந்தால் மட்டுமே சீட் கொடுக்கப் படும் என்ற உண்மையை அவர்கள் மறைப்பர். இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, வெளியில் ஏமாற்றி, கிருத்துவர்கள் என்று சலுகையைப் பெற்று கிருத்து பள்ளிகளில் சேர்ந்து கொள்வர். இவ்வாறு அரசாங்கத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி வருவர். ஆனால், இப்பொழுது, அவர்கள் தங்களது சுய உருவத்தைக் காட்டி விட்டார்கள் என்று தெரிகிறது:

  1. 1. விதிமுறைகளின்படி  25 சதவீதம்இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும் என கூறுகிறார்கள். இது நடைமுறை சாத்தியமல்ல: அதாவது, நாங்கள் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கல்வி கொடுக்க முடியாது. பணம் தான் பிரதானம், பணம் இல்லாமல் சீட் கொடுக்க முடியாது, கல்வியும் கொடுக்க முடியாது.
  1. 2. பெற்றோர்கள், அந்தப் பகுதி கவுன்சிலர்கள் இடம் பெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு கமிட்டி அமைத்தால் பள்ளியின் நிர்வாகம் அந்த கமிட்டி வசம் சென்று விடும். பள்ளி நடத்துபவர்களுக்கு எந்த உரிமையும் இருக்காது; அதாவது எங்களுக்குத் தான் எல்லா உரிமைகளும் வேண்டும். நாங்கள் செய்வதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. எங்களை எந்த சட்டதிட்டங்களும் பிணைக்க முடியாது. அதனால், வெளியார் யாரையும் நாங்கள் எங்கள் அதிகாரத்தில் தலையிட விடமாட்டோம்.
  1. 3. இந்தச் சட்டமானது, கல்வித்தரத்தை கீழே கொண்டு வருவது மட்டுமல்லாமல், கல்வித்தரத்தை மேம்படுத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் குறுக்கீடும் செய்கிறது: அதாவது எங்களல் தான் சிறந்த கல்வியைத் தரமுடியும். அரசாங்கத்தால் முடியாது, என்று திமிராகக் கூறுவதைக் காணலாம். அது மட்டுமல்லாது, கல்வித் தரமே குறைந்து விடும் என்றும் வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.
  1. 4. எங்கள் ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை, எங்களிடம் இருந்து பறிக்கிறது: எங்களது ஊழியர்களை, ஆசிரியைகளை நாங்கள் எப்படி வேண்டுமானாகும் நடத்டுவோம், ட்ரான்ஸ்பர் செய்வோம், வேலையை விட்டே தூக்குவோம், வழக்குகள் போட்டாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது[7]. நாங்கள் “சிறுபான்மையினர்”, எங்கள் மீது எந்த சட்டமும் செல்லாது என்று விரட்டி விடுவோம் என்கிறார்கள்.
  1. 5. எந்த பிரச்சினையிலும் யாரும் தலையிட முடியாது: எங்கள் நிர்வாகத்தையும் யாரும் கேட்க முடியாது. பணக்கையாடல்[8], அதிகார துஷ்பிரயோகம்[9], என என்ன நேர்ந்தாலும் யாரும் ஒன்றும் கேகக்கூடாத நிலையை வைத்திருக்க விரும்புவோம்.

வேதபிரகாஷ்

31-12-2011


[3] Father Babu Joseph, spokesperson of CBCI, said: “We have filed a writ petition in the Supreme Court. Since the matter is sub judice, our schools shall follow the old pattern of admission.”

http://www.indianexpress.com/news/catholic-schools-decide-to-follow-pointbase/722359/

[4] he CBCI had filed the writ petition in the Supreme Court about a month ago. Father Joseph said, “The HRD Minister had said minority institutions shall be exempted from the RTE. Nothing has come up. As the matter is sub-judice, nothing can be done in this regard. Catholic schools will follow last year’s admission criteria.”

http://www.financialexpress.com/news/catholic-schools-decide-to-follow-pointbased-system/722359/0

[7] G.Menaka vs The Chief Educational Officer on 20 July, 2011 – http://www.indiankanoon.org/doc/155854239/

[8] Thoothukudi Nazareth Diocese vs Osa 357 &Amp; 358 on 27 August, 2009 – http://www.indiankanoon.org/doc/935887/

[9] The Executive Committee Of The … vs Rt.Rev.Dr.V.Devasahayam on 14 September, 2009; http://www.indiankanoon.org/doc/20870/

S.Devasigamani vs E.W.Christopher on 23 July, 2008 – http://www.indiankanoon.org/doc/666588/