ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அகமதுவும், மாரியா சோபுவும் – புகார் கொடுத்ததில் கைது செய்யப்பட்டனர்!
ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை (03-07-2016): கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு கணவன், மனைவி தங்களது குழந்தையுடன் வேளாங்கண்ணிக்கு சென்றனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த ரெயில் 02-07-2016 அன்று அதிகாலை கோழிக்கோடு அருகே வடக்கேங்குளம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த இளம் பெண்ணிடம் ஒரு வாலிபர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்[1]. இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகள் விழித்துக் கொண்டு அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர். அந்த சமயம் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியதால் அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்[2]. இதை பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அவரை மடக்கிப்பிடித்தனர். பிறகு அவர் ரெயில்வே பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸார் விசாரணையில் அவரது பெயர் முகம்மது (வயது 28) திருச்சூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது[3]. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது[4].
முகம்மது பற்றிய இச்செய்தியின் இறுதியில் சோபு பற்றி குறிப்பிட்டது: கடந்த சில நாட்களுக்கு முன்பு (01-07-2016?) குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த மதபோதகர் சோபு என்பவர் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கைது செய்யப்பட்டார். எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி ரெயிலில் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு போட வேண்டும். இரவு நேரத்தில் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், எப்படி பொறுப்புள்ள மதபோதகர், பாஸ்டர் என்ற நிலையில் இருப்பவர்கள் அப்படி செய்யலாம் போன்ற கேள்விகள் எழுப்பப்படவில்லை. சுவாதி, வினுப்பிரியா, சந்தியா என்று பல பெண்கள் தினம்-தினம் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது என்ற நிலையில், இத்தகைய செய்திகள் அமுக்கி வாசிக்கப்படுவது, கவனிக்கத்தக்கது. பெண்களுக்கு எப்படியெல்லாம், எந்த உருவத்தில் எமன், காலன், காமுகன், சாத்தான் போன்றவர்கள் என்றும் நோக்கத்தக்கது.
கத்தோலிக்கப் போதகரும் கன்னிப்பெண்ணும் தனியாக ஒரே கம்பார்ட்மென்டில் பயணித்தது: கேரள மாநிலம் திருச்சூர் வடக்கேகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறையையொட்டி மும்பை – கன்னியாகுமரி நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சூர் புறப்பட்டார்[5]. அந்த ரெயிலில் குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறையை சேர்ந்த சோபு (வயது 29) என்பவரும் பயணம் செய்தார். சோபு கப்பியறை பகுதியில் மதபோதகராக பணியாற்றி வருகிறார்[6]. தன்னை மதபோதகர் என்று அவர் அந்த மாணவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சு கொடுத்துள்ளார்[7]. மதபோதகர் என்பதால் அந்த மாணவியும் சகஜமாக அவரிடம் பேசி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சோபு அந்த மாணவியிடம் ‘செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்[8]. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்[9]. ஒரு பாதிரியாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் செய்வது சரியில்லை என்று கூறியிருப்பார் போலும்!
தினகரன் கொடுக்கும் அதிக தகவல்: மார்த்தாண்டத்தில் ஒரு சர்ச்சில் போதகராக உள்ளார் என்று தினகரன் கூறுகிறது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்றார். பின்னர் நேற்று முந்தினம் மும்பை-திருவனந்தபுரம் நேத்ரவதி எக்ஸ்பிசஸ் ரயிலில் ஊருக்கு புறப்பட்டார். ரயில் 01-07-2016 அன்று இரவு கோவா அருகே மட்காவு பகுதியை அடைந்தபோது, கீழ் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையெடுத்து இளம்பெண் கூச்சலிட்டார். இதனால், ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து சக பயணிகள் போதகரை எச்சரித்துவிட்டு இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ரயில்வே போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையெடுத்து 02-07-2016 அன்று காலை அந்த இளம்பெண் திருச்சூர் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டதால், புகார் கொடுக்க சோபு கைது செய்யப்பட்டது: காமம் தலைக்கேறும் போது என்ன செய்ய முடியும். கர்த்தரோ, பரிசுத்த ஆவியோ, மேரியோ, ஏசுவோ, கிரறிஸ்துவோ தடுக்கவில்லை போலும்! அந்த ரெயில் பெட்டியில் இவர்கள் பயணம் செய்த பகுதியில் வேறு பயணிகள் யாரும் இல்லாததால் சோபுவின் சில்மிஷம் தொடர்ந்து உள்ளது[10]. இதனால், வேறு வழியின்றி, பாலக்காடு பகுதியில் அந்த ரெயில் வந்தபோது அந்த மாணவி போன் மூலம் ரெயில்வே போலீசுக்கு இந்த தகவலை தெரிவித்தார். ஆனால் போலீசார் வருவதற்குள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விட்டது. இதனால் அந்த மாணவி திருச்சூர் ரெயில்வே போலீசுக்கு இதுபற்றி மீண்டும் தகவல் தெரிவித்தார். திருச்சூர் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் வந்தடைந்ததும் அங்கு தயாராக நின்ற போலீசார் சோபுவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு திருச்சூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். திருச்சூர் போலீசார் சோபு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சூர் ஜெயிலில் அடைத்தனர்.
யார் இந்த மதபோதகர் சோபு?: மரியா சோபு (29) என்ற இந்த போதகர் செயின்ட் மேரிஸ் மலங்காரா செமினரியில் படித்து, செயின்ட் மேரிஸ் மலங்காரா கத்தோலிக்க சர்ச்சில் வேலை செய்து வருபவர். இறையியல் பட்டத்தை இத்தாலியில் உர்பேனியா பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்[11]. அப்பொழுது பலநாடுகளுக்கு சென்று வந்துள்ளது தெரிகிறது. இப்பொழுது மார்த்தாண்டம் சர்ச்சில் வேலைசெய்து வருகிறார். முகநூலில் பல ஆண்-பெண் நண்பர்களுடன் சுமுகமாக பழகிக் கொண்டிருக்கிறார். அதிலுள்ள உரையாடல்களிலிருந்து, ஒரு சாதாரண இளைஞன் எப்படி இருப்பானோ, அதே நிலையில் உள்ளது தெரிகிறது[12]. நண்பர்களின் திருமண புகைப்படங்கள் பேஸ்புக்கில் காணப்படுகிறது. இதனால், இகவுலக ஆசைகளைக் கொண்ட மனிதர் என்றுதான் எடுத்டுக் காட்டுகிறது. ஆனால், கத்தோலிக்கக் கிருத்துவத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் பணியாற்ற வேண்டிய நிலையுள்ளது. இதனால், இல்லறம்-துறவறம் போராட்டங்களில் சோபு சிக்கியிருக்கக் கூடும். இதனால், ரயிலில் பயணம் செய்தபோது, தனியாக இருந்த நிலையில், சோபு, உணர்ச்சிகளுக்கு அடங்காத நிலையில், அந்த இளம்பெண்ணிடம் நெருங்கியுள்ளார். பிறகு நடந்தது செய்தியாக வந்துள்ளது. வழக்கம் போல ஓரிரு தமிழ் ஊடகங்களில் மட்டும் தான் இச்செய்தி வந்துள்ளது.
கிறிஸ்தவமத குற்றங்கள் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும்: கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தைப் பொறுத்த வரையில், இந்த பாலியல் வக்கிரங்கள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது, பல விவகாரங்களில், வழக்குகுகளில் எடுத்துக் காட்டப்பட்டு விட்டது. 90% வழக்குகள் சர்ச்சுகளில் நடக்கும் போது, சமரசத்தில் முடித்துவிடுகிறார்கள். “டையோசிஸ் நீதிமன்றம்” என்ற “கட்டப்பஞ்சாயத்து” பாணியில் தீர்த்து வைத்து, சமரசங்களில் முடித்து வைக்கப்படுவதால், பலவித பாலியல் விவகாரங்கள், சல்லாபங்கள், ஏன் கற்பழிப்புகள் கூட மூடி மறைக்கப்படுகின்றன. இந்த கட்டுப்பட்ட இறையியல் எல்லைகளை மீறும் போது, போலீசாரிடம் புகார் கொடுக்கும் போது, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் போது தான், உண்மைகள் வெளிவருகின்றன. இங்கு கூட, தனியாக உள்ள நிலையில், வேறு வழியில்லை, தன்னுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட போதுதான், அவள் புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் கைது செய்தாலும், சர்ச் தனது அதிகாரித்தைப் பயன்படுத்தி, இவ்வழக்கை அமுக்கி விடுமா அல்லது தொடர்ந்து நடத்தவிடுமா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
06-07-2016
[1] மாலைமலர், கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது, பதிவு: ஜூலை 05, 2016 09:56.
லங்கபுரி.காம், பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது!, July 5, 2016
[2] http://www.maalaimalar.com/News/National/2016/07/05095624/1023521/young-man-arrested-for-running-train-women-harassment.vpf
[3] லங்கபுரி.காம், பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது!, July 5, 2016
[4]http://lankapuri.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/
[5] மாலைமலர், ஓடும் ரெயிலில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: மத போதகர் கைது, பதிவு: ஜூலை 03, 2016 16:33.
[6] http://www.maalaimalar.com/News/National/2016/07/03163324/1023138/Priest-arrested-for-moving-train-girl-molestation.vpf
[7] வெப்.துனியா, மாணவியிடம் சில்மிஷம் செய்த மத போதகர், ஞாயிறு, 3 ஜூலை 2016 (19:06 IST)
[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/preacher-given-harassment-to-girl-at-train-116070300027_1.html
[9] அததெரண, ஓடும் ரயிலில் பாலியல் சில்மிஷம் – ஒருவர் கைது!, July 4, 2016 09:10 am
[10] http://tamil.adaderana.lk/news.php?nid=81296
[11] Rev. Fr. Maria Sobu, Christuraja Cathedral, Christurajapuram, Marthandam – 629 165, Kanyakumari District, Seminarian at Syro Malankara Catholic Church; Worked at St.Mary’s Malankara Seminary; Studied Theology at pontifica università urbaniana.