Archive for the ‘எச்.ஐ.வி’ Category

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது (1)

நவம்பர் 7, 2017

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது (1)

Ebenezaer, nude worship - AP Dinakaran

இந்தியாவில் கிருத்துவ சாமியார்களின் செக்ஸ் குற்றங்கள், கொலைகள் முதலியன[1]: இந்தியாவில் கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் மற்றும் பிஷப்புகளின் பாலியல் வன்புணர்ச்சிகள், செக்ஸ்-மீறல்கள் மற்றும் காம-கொக்கோக லீலைகள் அதிகமாகிக் கொணிருக்கின்றன. இவை திகைப்படைய செய்வது மட்டுமல்லாது, சமூகத்தை அதிகமாக பாதித்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்து வருகின்றன. மேலும், இந்த கற்பழிப்புகளில், செக்ஸ்-குற்றங்களில் கொலைகள் கூட நடந்து வருகின்றன. இருப்பினும், சிலவற்றிலேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றங்களுக்குச் சென்று, தண்டனை பெறும் நிலைவரை செல்கின்றன, ஆனால், பெரும்பான்மையான வழக்குகள், நடக்காமல் கிடக்கின்றான அல்லது கிடப்பில் போடப்பட்டு மறக்கப்படுகின்றன. சில நேரங்களில், அவர்களின் அங்கிகள் அவிழ்க்கப்பட்டன (பதவி நீக்கம் செய்யப்பட்டனர்) என்று அறிவித்தாலும், வேறு வண்ண உடைகளில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். ராம்-ரஹீம் பற்றி சமீபத்தில் அதிகமான செய்திகள் வெளியிடப் பட்டன, இருப்பினும், அவர் “செக்யூலார் சாமியார்” போல சித்தரிக்கப் பட்டு, அடங்கி விட்டன. ஆனால், அவனே ஒரு “இந்து சாமியார்” என்றிருந்தால், உலகம் முழுவதும் முக்கியமான செய்திகளாகி இருக்கும். அவனுக்குப் பிறகு தான் இந்த எட்டி எபநேசர் நிர்வாண பிரார்த்தனை, கற்பழிப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவில், உள்ளூர் செய்திகளில் இவ்விவரங்கள் வந்தாலும், அவன், கைதாகாமல் உலா வந்து கொண்டிருக்கிறான். ஏனெனில், அவனுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்றாகிறது[2].

Pastor Didde Ebenezer, women commission chief

தீபாவளி அன்று ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி போலீஸாரிடம் புகார் பதிவு செய்தார்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடேபல்லிக்கூடம் அடுத்த ஜெகன்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டிட்டி எபனேசர் [Didde Ebenezer]. இவர் அங்குள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். மேலும் பிரகாஷ்ராவ்பாளையம், ஜெக்கன்னாபேட்டை, மஸ்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சர்ச்சுகளுக்கு காப்பாளராகவும் உள்ளார். எபிநேசர் நிச்சயமாக பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து துன்புருத்தியதால், அவனால் பாதிக்கப் பட்ட பெண்கள் அவனை வெளிப்படுத்தினர். நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, 18-10-2017, புதன்கிழமை, மேற்கு கோதாவரி மாவட்டம், தாடெபள்ளிகுடம் மண்டலம், ஜகன்னாதபுரம் கிராமத்திற்கு சென்று நிலையை நேரிடையாக அறிந்தார்[3]. பிறகு, தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் எனக்கூறி பாலியல் தொல்லை செய்த பாதிரியார் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப் பட்ட பெண்கள் கூறியது[4], “முதலில் தனியாக வா என்பார், பிறகு, சிறுசிறு வேலைகளை செய்ய வைத்தார். நாளாடைவில் கை-கால்களை பிடித்து விடு என்றார்….அதற்கும் பிறகு, மார்பு தோள் …..தேய்த்து விடு என்றார்….அந்நிலையில் எங்களை கட்டிபிடித்து …….படுக்கையில்……இவ்வாறாக எங்களை பயன்படுத்திக் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்…..,” என்று விளக்கியது பரிதாபகரமாக இருந்தது.

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal

மனம் மற்றும் உடல் ரீதியில், பெண்களை வசியப் படுத்தி வைத்திருந்தது: கடவுளிடம் நேரிடையாக பேச வைக்கிறேன் என்று ஆசைக் காட்டி, அவ்வாறான கிருபை கிடைக்க வேண்டுமானால், ஆதாம்-ஏவாள் போன்று நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்தால் தான் நடக்கும் என்று வந்த பெண்களிடம் தொடர்ந்து சொல்லி வந்தான். நடு இரவில், மெழுகு வர்த்தி ஏற்றிவைத்து, அத்தகைய பிரார்த்தனையை செய்தால், பலன் கிடைக்கும் என்று நம்பவைத்து அவ்வாறே செய்து வந்தான். அல்லேலுயா, அல்லேலுயா,  என்று அத்திக் கொண்டும், இதோ வந்து விட்டார், அருகில் வந்து விட்டார், பேசப் போகிறார்…… என்றெல்லாம் கத்தி, உணர்ச்சிப் பூர்வமான இலையை உண்டாக்கினான். அவனது செக்ஸ்-சில்மிஷத்தை அப்பொழுது ஆரம்பிப்பான். நிர்வாணம், அவனது கொக்கோக விளையாட்டுகள் படுக்கையில் பெண்களை வீழ்த்தி விடும். இவ்வாறு மனோரீதியில் மற்றும் உடல்ரீதியில் அவர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தான். பெற்றோர் அழைத்தும் அவர்கள் செல்லாமல் இருந்தனராம். ஒருமுறை அவன் பெண்களுடம் இருக்கும் வீட்டை சோதனையிட்ட போது, “நிரோத்” பாக்கெட்டுகள் கிடைத்தன. தவிர, ஏதோ மருந்தும் கொடுத்து கட்டுக்குள் வைத்திருந்தான் என்று மருத்துவர் கூறுகிறார்[5].

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- TV9 video

ஊரை மாற்றினாலும், செக்ஸ்சில்மிஷத்தை மாற்றாத பாஸ்டர்: 2015ல் கைதுக்குப் பிறகு, நீதிமன்றம் வரை வழக்கு சென்றபோது, தனது ஆதிக்கத்தினால், அதிலிருந்தும் விடுபட்டான் என்று, டிவி-9 கூறுகிறது[6]. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று புகாரை வாபஸ் வாங்கச் செய்தான். ஆனால், பிறகு, அவளை வேறு மாதிரி சரிசெய்தான். ஜகன்னாதபுரத்திலிருந்து, தனனு வீட்டை மதூர் என்ற இடத்திற்கு மாற்றினான். இதுவும் சட்டரீதியாக “போலீஸ் கட்டுப்பாட்டு எல்லைகளை” கடக்கத்தான் செய்தான். அங்கும் தனது வேலையை ஆரம்பித்தான் என்று பெண்கள் கூறினர்[7]. இளம் பெண்கள் மற்றும் விதவைகளைத் தான் உறி வைத்தான். தமிழில், தினகரன் மட்டும் தான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது[8]. இது “டெக்கான் ஹெரால்டு” நாளிதழிலிருந்து தொகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆனால், மற்ற ஊடகங்கள் இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை[9]. மேலும், “நிர்வாண பூஜை” ஏன் என்றும், அதன் மகத்துவத்தையும் விளக்கவில்லை.

Pastor Didde Ebenezer, a victim complains-TV9 video

கணவனின் அடாவடி, அநியாய செக்ஸ்குற்றங்களைத் தாங்காமல் மனைவி புகார் கொடுத்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும்: இவரது மனைவி ஜீவன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். எபிநேசர் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி அவரது மனைவி ஜீவன் தனியாக வசித்து வருகிறார். எபிநேசர் தேவாலயத்திற்கு வரும் விதவைகள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் உள்ளிட்டவர்களை சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் எனக்கூறி இரவு நேரத்தில் தனியாக வரும்படி கூறி, அவ்வாறு வருபவர்களை நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொள்வார் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுப்பதை அறிந்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டி உள்ளனர். அதனால் இவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதுபற்றி தகவலறிந்த அவரது மனைவியே பெத்தையாபேட்டை போலீசில் புகார் செய்தார்.  ஆனால், அவன் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- Police enquiry

2015ல் புகாரின் மீது, வழக்குப் பதிவு செய்து, கைதாகி, ஜாமீனில் வெளிவந்த காமுகன்: எபினேசர் தனது பணபலத்தினால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவிடாமல் செய்தான். நிலையை அறிந்து, எப்படியாவது, அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், புகார் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்ததால், பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து, புகார் கொடுக்க ஊக்குவித்தார். போலீசார் எபிநேசர் மீது நடவடிக்கை எடுக்காததால், மாநில மகளிர் நல ஆணைய தலைவி நன்னப்பநேனி ராஜகுமாரியிடம் புகார் செய்தனர். இந்த புகாரை பெற்ற அவர், இது போன்றவர்களை சமூகத்தில் விட்டு வைக்கக்கூடாது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, எபிநேசரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ஐந்து பெண்கள் எபிநேசர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், எபிநேசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எபிநேசர் மீது ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால்,முன்னர் குறிப்பிட்ட படி, பிணையில் வெளியே வந்துவிட்டான்.

© வேதபிரகாஷ்

07-11-2017

Didde Ebenezer case, AP pastor sex- 22-10-2017

[1]  இது அக்டோபர் 20, 2017 அன்று ஆங்கிலத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.

Vedaprakash, Didde Ebenezer, pastor sexploits women from 2015 onwards – Victims come out, complaint filed, but escaped, secular media, women activists and tolerant groups keep quite!, October 20, 2017.

[2] https://indiainteracts.wordpress.com/2017/10/20/didde-ebenezer-pastor-sexploits-women-from-2015-onwards-victims-come-out-complaint-filed-but-escaped-secular-media-women-activists-and-tolerant-groups-keep-quite/

[3] DECCAN CHRONICLE. Rajahmundry: Arrest pastor for abusing girls, Published Oct 19, 2017, 6:32 am IST; UpdatedOct 19, 2017, 6:32 am IST.

[4] http://www.deccanchronicle.com/nation/crime/191017/rajahmundry-arrest-pastor-for-abusing-girls.html

[5] Rapist Pastor || Victims demands stringent action || TV9 Effect, for details, see at: https://www.youtube.com/watch?v=lkhL41mu3d8

[6] AP Pastor’s dirty secrets exposed || TV9 Special Focus, For details, see at: https://www.youtube.com/watch?v=kNE4bkt6B44

[7] Church Pastor sexual harassment on Women at West Godavari | CVR News, for details se at:  https://www.youtube.com/watch?v=CkWfPFiwQZ8

[8] தினகரன், ந்திர மாநிலத்தில் பரபரப்பு நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் என பாலியல் தொல்லை, 2017-10-20@ 00:59:03.

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=344197

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்-ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்-வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (1)

செப்ரெம்பர் 5, 2015

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (1)

May George, Zonta Research Centre, Madambakkam

May George, Zonta Research Centre, Madambakkam

திருமதி மே ஜார்ஜ் துவங்கிய இல்லங்கள் (2003-2007): தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பகுதியில் அமெரிக்க  உதவியுடன் திருமதி மே ஜார்ஜ் என்பவர் மகளிருக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வந்தது[1]. யார் இந்த மே ஜார்ஜ் என்று கூகுளில் தேடிய போது சில விவரங்கள் கிடைத்தன. மே ஜார்ஜ் [May George] என்ற பெண்மணி 1963 முதல் 1969 வரை பெண்கள் பாலிடெக்னிக்கில் முதல்வராக பணியாற்றினார். 1983 வரை தமிழக அரசு வேலை பார்த்து வந்தார். தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் முதல் பெண் எஞ்சினியர் என்று குறிப்பிடத்தக்கது. 1991ல் பெண்களுக்காக வேலைபயிற்சி நிலையத்தை பல்லாவரத்தில் ஆரம்பித்தார். அமெரிக்காவில், சிகாகோவில் உள்ள ஜோன்டா இன்டெர்நேஷனல் [Zonta International, a not-for-profit organisation based in Chicago] என்ற நிறுவனத்தின் உதவியுடன் அதனை ஆரம்பித்தார்[2]. அதில் பெரும்பாலும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தனர். பிறகு 2003ல் மாடம்பாக்கத்தில் இன்னொரு பெண்கள் பயிற்சி மையத்தை, டச்சு நாட்டின் “அமைதி பௌண்டேஷன்” [Amaidhi Foundation, a Dutch philanthropic foundation] நிதியுதவியுடன் தொடங்கினார்[3].

அமைதி ஜோன்டா ரிசோர்ஸ் மையம்,, மாடம்பாக்கம் - படங்கள்

அமைதி ஜோன்டா ரிசோர்ஸ் மையம்,, மாடம்பாக்கம் – படங்கள்

எச்..வி.மகளிர் குறுகியகால தங்கும் இல்லம்என்று மாடம்பாக்கத்தில் ஆரம்பித்தது (2007): “எச்.ஐ.வி.மகளிர் குறுகியகால தங்கும் இல்லம்” என்று ஆரம்பித்தபோது, உள்ளூர் மக்கள் எதிர்த்த போது, அது நிரந்தரமான அமைப்பல்ல, பெண்கள் அங்கு வந்து, தங்கி சென்றுவிடுவர் என்று சமாதானம் சொல்லப்பட்டது. டிசம்பர் 6, 2007 அன்று அது, அப்பொழுதைய சமூகநல அமைச்சர், பூங்கோதை ஆலடி அருணாவால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், பத்து நாட்களில் அவ்விடத்தின் மதிற்சுவர் உடைக்கப்பட்டது மற்றும் ஜன்னல் கதவுகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4], என்று “தி இந்துவில்” செய்தி வந்தது. முன்னர் மாணிக்கம் நகர மக்கள் அந்த “எச்.ஐ.வி.மகளிர் குறுகியகால தங்கும் இல்லம்” அங்கு ஆரம்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கபட்ட பெண்கள் அங்கு வந்து செல்வதால் மற்றும் நடமாடுவதால், ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கவலை தெரிவித்தனர்[5]. இருப்பினும், “மக்கள் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்”, என்று சொல்லி, மே ஜார்ஜ் தொடர்ந்து செயல்பட்டார்[6]. அதாவது, உள்ளூர் மக்களின் உணர்வுகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்றாகிறது. ஜனவரி.25, 2014 சனிக்கிழமை அன்று காலமானார்[7]. இவர் எல்.டி.சுவாமிகண்ணுப் பிள்ளை [L.D. Swamikannu Pillai (1865-1925)] என்பவரின் பேத்தி என்றும் குறிப்பிடத்தக்கது[8]. இந்த சுவாமிக்கண்ணுப் பிள்ளை இந்திய காலக்கணக்கியலைக் குறைப்பதற்காக பணியில் ஆங்கிலேயரால் அமர்த்தப்பட்டவர் என்பதும் கவனிக்கத்தக்கது[9]. சரி, அதென்ன “ஜோன்டா” என்று பார்ப்போம்.

Zonta Research Centre, India and si Lanka with truncated Indian map

Zonta Research Centre, India and si Lanka with truncated Indian map

ஜோன்டா ரிசோர்ஸ் மையம்”, “ஜோன்டா அமைதி ரிசோர்ஸ் மையம்ஆனது எப்படி? (2004-2007): அமைதி பௌண்டேஷன் [Amaidhi Foundation] இணைதளம் கொடுக்கும் விவரங்களை இங்கு கவனிக்க வேன்டியுள்ளது. “ஜோன்டா ரிசோர்ஸ் மையம்” [Zonta Resourrce Centre] 2004ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அங்கிருந்த பழைய கட்டிடம் மோசமாக இருந்ததால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு பணம் கொடுக்கப்பட்டது. இதற்கான நிதியுதவி “வைல்ட் கேன்ஸன்”[10] மற்றும் ஐ.சி.சி.ஓ அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டது[11]. ஆனால், அந்த சொத்து வாடகைக்கு விட்டதில் பிரச்சினை இருந்தது. 2004ல் ஜோன்டா மையத்திற்கான கட்டிடம் ஏற்கெனவே கட்டியாகி விட்டது. ஆனால், “ஜோன்டா அமைதி ரிசோர்ஸ் மையம்” [Zonta “Amaidhi” Resource Centre] என்ற பெயரில் சில ஆண்டுகள் இயங்கியப் பிறகு தான், ஜோன்டாவிற்கு சொந்தமானது. புதிய கட்டிடத்தைச் சுற்றியிருந்த கிராம மக்கள், பழைய கட்டிடத்திலிருந்து, புதிய கட்டிடத்திற்கு மாற தடுத்தனர். அதாவது, 2004 முதல் 2007 வரை இருந்த பிரச்சினையை, இது விளக்குகிறது என்று தெரிகிறது. அந்த சொத்து வாடகைக்கு விட்டதில் பிரச்சினை இருந்தது என்றால், அமைதி மற்றும் ஜோன்டா பௌண்டேஷன்களுக்கு இடையே இருந்த பிரச்சினை என்ன என்று தெரியவில்லை. இல்லை, வேறு எவருக்காவது வாடகைக்குக் கொடுத்தனரா என்றும் தெரியவில்லை.

அமைதி ஜோன்டா ஆய்வு மையம்,, மாடம்பாக்கம் - கூறுவது - நெதர்லாந்து இணைதளம்

அமைதி ஜோன்டா ஆய்வு மையம்,, மாடம்பாக்கம் – கூறுவது – நெதர்லாந்து இணைதளம்

ஜோன்டா ரிரோர்ஸ் மையம் வளர்ந்த விதம் (2007-2012): 2012ம் வருடத்தில், “உரையாடல் – சமூக நீரோட்டங்களின் கால தொகுப்பு” என்ற இதழ் சில விவரங்களைக் கொடுக்கிறது[12]. சென்னையில் ஜோன்டா கிளப் 1966லேயிலிருந்து வேலைசெய்து வந்தது. 1989ல் “ஜோன்டா ரிசோர்ஸ் மையம்” ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்து, 1990ல் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கீழ்கண்டவர்கள் அதன் போர்ட் மெம்பர்களாக நியமிக்கப்பட்டனர்:

  1. திருமதி மே ஜார்ஜ், தொழிற்துறை வல்லுனர்.
  2. திருமதி சம்பூர்ண கரைன், ஆலோசக மனோவியல் வல்லுனர்.
  3. திருமதி கல்பனா ஷண்முகம், கட்டிடவியல் வல்லுனர்.
  4. திருமதி மைதிலி பாபு, கட்டிடவியல் வல்லுனர்.
  5. லதா ரமேஷ், சி.எஸ்.ஐ.எம், டைரக்டர்.

1990ல் மும்பையிலிருந்து விபச்சாரத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கைவேலைகள் சொல்லிக்க்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் வாடகைக்கு எடுத்த கட்டிடத்தில் பாலவாக்கத்தில் இருந்தனர். ஏனெனில், அவர்களுக்கு இ.சி.ஆர். சாலையில் இடம் கொடுப்பதாக இருந்தது. ஆனால், அரசியல் போட்டிகளால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடம் ரத்தானது. இதனால், மாடம்பாக்கத்தில் சொந்தமாக இடம் வாங்கி கட்ட்டம் கட்ட ஆரம்பித்தனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கட்டிடத் தொழிலாளிகளாக வேலைசெய்தனர். இந்த மையத்தின் தினசரி விசயங்களுக்காக திருமதி ஜானகி கிருஷ்ணன் என்பவர் நிறைய செய்திருக்கிறார். ஆர். அர்ச்சனா என்பவர் மே ஜார்ஜிடம் பேட்டி எடுத்து இவ்விவரங்களை பதிவு செய்துள்ளார்.

Zonta Research Centre, Madambakkam- donors, May george, Janaki

Zonta Research Centre, Madambakkam- donors, May george, Janaki

வேதபிரகாஷ்

© 05-09-2015

[1] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/07/06034648/With-fake-documents3-arrested-for-property-seized.vpf

[2] Vidya Venkat, Featured in Harmony Magazine, February 2007.

[3] The first woman chief engineer of the Tamil Nadu Housing Board (she retired in 1983), 81 year-old May George has always bucked convention. Hailed as ‘a people’s technocrat’ for her low-cost housing designs, she defied contractors and threw in her lot on the side of the poor. From 1963 to 1969, George served as principal at the Polytechnic College for Women in Chennai, which taught her the importance of vocational training. In 1991, she opened a short-stay home and vocational training centre for needy women, most of whom are HIV positive. Zonta Resource Centre, in Pallavaram in Chennai, is run by Zonta International, a not-for-profit organisation based in Chicago. In 2003, George built another home in Madambakkam in Chennai with funds from Amaidhi Foundation, a Dutch philanthropic foundation. The home has been vandalised by people who don’t want HIV-infected people in their neighbourhood – George is standing firm.

http://www.harmonyindia.org/hportal/VirtualPrintView.jsp?page_id=4296

[4] The Hindu, Short stay home foer women in Madambakkam damaged, December.20, 2007.

[5] Ten days after it was dedicated by Social Welfare Minister Poongothai Aladi Aruna, a short stay home for women in Manickam Nagar, Madambakkam, near Tambaram, was damaged by a section of the residents of the area on Tuesday. The Zonta Resource Centre was opened with a simple function on December 6,2007. Run with assistance from the Central government through the Central Social Welfare Board and monitored by the Tamil Nadu Social Welfare Board, the home’s objective was to provide shelter, counselling, care and food to adolescent girls and women who required them. The inmates would include woman affected by HIV/AIDS. Residents of the Manickam Nagar objected to it on the grounds that they would be exposed to health hazards if they come into contact with women taking shelter in the home. They had earlier approached officials of the Madambakkam town panchayat . Officials promptly told them that the home was functioning legally and it was not within their powers to initiate action against it in any form. And on Tuesday, a few dozen men and women surrounded the short stay home and damaged its compound wall. Using wooden logs and stones, they broke the window panes. May George, chairperson, Zonta Resource Centre, said they were upset at the incident and regretted that such forms of stigma still persisted. Those living near the home would not be exposed to any forms of health hazard or risks as feared by the residents, she said.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/short-stay-home-for-women-in-madambakkam-damaged/article1971287.ece

[6] http://www.thehindu.com/news/cities/chennai/may-george-womens-rights-activist-passes-away/article5620955.ece

[7] http://www.mylaporetimes.com/2014/01/may-george-woman-chief-engineer-who-created-housing-for-common-people-in-city-passes-away/

[8] http://www.thehindu.com/features/metroplus/first-woman-chief-engineer/article5642908.ece

[9]  ஜான் பென்லி போன்றோரின் விருப்பங்களுக்கேற்ப, இந்திய சரித்திர நொகழ்வுகளைலக் குறைத்து மதிப்பீடு செய்ய, இவரை வைத்து புத்தகங்களை எழுத வைத்தனர். அவரும் தமது எஜமானர்களுக்கு விசுவாசமாக எழுதினார்.

[10] http://www.wildeganzen.nl/home/

[11] Aids is a big problem in India. Zonta Resource Centre is a shelter in Chennai for women with hiv and aids. They get a roof over their head, medical guidance and a practical way of spending the day. Amaidhi Foundation – supported by the funds Wilde Ganzen and ICCO– has subscribed money to build a new building for the women. The old building was too old and in a bad state.  Another disadvantage was that the property in question was rented. A new building was already built for the Zonta Resourrce Centre in 2004. But it was only put into use some years later under the name Zonta “Amaidhi” Resource Centre. Villagers who live around this new building impeded the move from the old to the new place for a few years. They also destroyed the surrounding wall and part of the building. They were against the arrival of women with aids to their village. In the meantime peace has returned and the women have been living in the house for a number of years .

http://www.amaidhi.nl/en/zonta-resource-centre#overlay-context=en/projects

[12] R. Archana, A Story of Toil and Rejuvenation, in “Conversations – A Chronicle of social Currents”, Volume 3,  Issue 12, December 2012, For Free Circulation Only.