Archive for the ‘ஊழியம்’ Category

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?

ஜூலை 14, 2017

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?

Hebron church dedmilition stayed by SC - CHN_2017-07-14_maip1_23

வீடு சர்ச் ஆகி, கல்யாண மண்டபம் ஆனது: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், கே.பி. எடிசன், தேவாலயம் – ஹெப்ரான் காஸ்டில் சர்ச் – மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டினார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி வீடு கட்டுவதற்காகத் தான் பெற்றார். ஆனால், வ்வறு செய்யாதலால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.  இந்நிலையில் தான், சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. அதற்குள் மேலே குறிப்பிடப்பட்ட ஆர்பாட்டங்கள் எல்லாம் நடைந்தேறின.

Hebron church dedmilition stayed by SC - TOI, chennai

உச்சநீதி மன்றத்தில் முறையீடு: சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. இதனால், கே.பி. எடிசன் அதனை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் அரியமா சுந்தரம் மற்றும் வி. பாலாஜி மூலம் முறையீடு செய்தார். 13-07-2017 வியாழக்கிழமை அன்று உச்சநீதி மன்றம் அந்த ஆணையை நிறுத்தியது[1].  2006லிருந்தே சென்னை உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கை இழுத்தடித்தது தெரிகிறது. இது வெறும் சென்னை பெருநகர் அபிவிருத்தி அணையத்தின் வரைமுறைகளை மீறியதற்கான வழக்கு என்பது போலில்லாமல், ஏதோ சர்ச் இடிப்பு என்ற தோரணையில் மாற்றியிருப்பதும் தெரிகிறது, ஏனெனில், டெக்கான் ஹெரால்டு, அவ்வாறுதான் தலைப்பிட்டு, “SC stays demolition of N’bakkam Hebron church” செய்தி வெளியிட்டுள்ளது. தமிழில் தேவாலயம் என்று குறிப்பிட்டது, புரியாமல் இருக்கலாம், ஆனால், இதில் சர்ச், அதிலு ஹெப்ரான் சர்ச் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளராகவும் பாஸ்டர் கே.பி. எடிசன் பொறுப்பாளராக இருக்கிறார். அரசியல் பின்னணியும் இருப்பதால், போராட்டத்தையும் முடுக்கி விட்டிருக்கிறார்.

hebron - protest - CHN_2017-07-13_maip5_12

சர்ச் முன்பு போராட்டம்: 12-07-2017 அன்று அந்த சர்ச் முன்பாக உறுப்பினர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். சத்தியம் டிவி, கிருத்துவ செனல் ஆதலால், பிரச்சார ரீதியில் செய்தி வெளியிட்டது. கே.பி. எடிசன் ஒன்றுமே தெரியாதது போல, பத்தாம் தேதி தான் தனக்கு ஆணை கிடைத்தது, அதைத்தவிர ஒன்றும் தெரியாது என்று பேசியது வேடிக்கையாக இருந்தது. மேலும் நான்கைந்து பெண்களிடம், ஒருவர் வீடுகள் இருக்கும் இடத்தில் சர்ச் இருக்கக் கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்பதைப் போலவும், அப்பெண்கள், இல்லை என்பது போலவும் காட்டியது. வேடிக்கை என்னவென்றால் அப்பெண்கள் எல்லோரும், நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டிருந்தது தான். சர்ச்சிற்குள் ஆர்பாட்டம் செய்த பெண்கள் வெள்ளையுடை அணிந்து கொண்டிருந்த போது, இவர்கள் ஏன் இந்துக்கள் போன்ற தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று புரியவில்லை. இருப்பினும் எவ்வாறு செக்யூலரிஸ ஆட்டில் தனிப்பட்ட பிரச்சினையை, பொதுப்பிரச்சினையாக ஆக்கலாம், உள்மத பிரச்சினையை, மதங்களூக்கு இடையேயுள்ள பிரச்சினையாக்கலாம் என்றெல்லாம் எப்படி திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ளல்லாம். அந்த பேட்டி எடுத்தவர், வீடுகள் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் இருக்கலாம், சர்ச் இருக்கக் கூடாது என்றும், ஏன் விபச்சாரமே நடக்கிறதே, அதெல்லாம் தொந்தரவாக இல்லை, சர்ச் இருப்பது தான் தொல்லையாக இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார்[2].

Hebron Castle chruch - protest-demo-politicizing issue

வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம்: போதாகுறைக்கு, இன்னொரு வீடியோவில், வள்ளுவர் கோட்டத்தில் சீல் வைத்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியது, அரசியல்கட்சிகள் சார்பில் தலைவர்கள் பேசியது முதலியவை காட்டப்பட்டது. ஜவாஹிருல்லா ஆதரித்து பேசுகிறார். இனிகோ இருதயராஜ், வன்னியரசு, விடுதலை சிறுத்தை கட்சி என்றெல்லாம் பேசுவதை காட்டியது. இதிலும், தமாஷா என்னவென்றால், ஜவாஹிருல்லா ஏற்கனவே கைது செய்யப்படாமல், பிணையில் இருக்கும் குற்றவாளி ஆவார். பிறகு, அவர் எப்படி எடிசனை ஆதரித்துப் பேசுகிறார் என்று தெரியவில்லை. அதாவது, சட்டமீறலைப் பற்றி கவலைப் படாமல், இதனை அரசியலாக்கி, பிரச்சினையை பெரிது படுத்த முயன்றது நன்றாகவே தெரிகிறது. மேலும், மதரீதியில் மற்றும் சிறுபான்மை கோணத்திலும் திசைத் திருப்ப முயற்சிகள் நடக்கின்றன.  இதற்கான பின்னணியும் கடந்த கால அரசியல் திட்டங்களில் வெளிப்படுகிறது.

Hebron Castle chuch - protest

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு [அக்டோபர் 2016]: இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் சட்ட ஆணையம் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. பாஜக அரசின் இத்தகைய முயற்சிக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், எஸ்.டி.பி.ஐ உட்பட பலவேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இவ்விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவும் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் –

  1. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,
  2. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்,
  3. திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,
  4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
  5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,
  6. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,
  7. தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,
  8. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளர் பாஸ்டர் கே.பி. எடிசன்,
  9. கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ்,
  10. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன்,
  11. இந்திய சுவிஷேச திருச்சபை தலைமை பேராயர் எஸ்றா. சற்குணம்

ஆகியோரை சந்தித்து பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கும் மத்திய பாஜக ஆட்சியின் முயற்சி குறித்து எடுத்துரைத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு தருமாறும், இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அணி திரளவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவ்விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Hebron Castle chruch - protest-demo

கே. பி. எடிசன் 2011ல் திமுகவை ஆதரித்தது[3]: கலைஞர் டிவி நடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது.  அதில், கே. பி. எடிசன் பேசியது, “மதம் மாற்றச் சட்டம் இருந்தபோது, பல அடக்குமுறைகள் செய்யப்பட்டன[4]. அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்தோம். மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறது. நான் கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போது, நிருபர் குறிப்பிட்ட விஷயத்திற்கு இழுக்கிறார்). சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதி வேண்டும் என்றமுறை இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லைபுரியவில்லை. ஆனால், சமீபத்தில் அவ்வாறு தேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்து, அதில் சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார். இந்துக்கள் காஷ்மீரத்தில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; பஞ்சாபில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப் பட்டால், என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்[5].

©  வேதபிரகாஷ்

14-07-2017

Hebron Castle chruch - Iniko - Jawahirullah--politicizing issue

[1]  Deccan Herald, SC stays demolition of N’bakkam Hebron church, J. Venkatesan, New Delhi, July 13, 2017.

[2]https://www.facebook.com/HebronCastleChurch/videos/pcb.1358924214161918/1358918130829193/?type=3&theater

[3] https://christianityindia.wordpress.com/2011/04/11/all-christians-should-vote-for-dmk/

[4] https://christianityindia.wordpress.com/2010/12/29/revocation-of-anti-conversion-act-appeasing-christians/

[5] இது ஏதோ இந்துக்களை மிரட்டுவது போல இருந்தது. அது மட்டுமல்லாது, இந்துக்கள் எல்லோரையும் மதம் மாற்றி, சிறுபான்மையினராக மாற்றி விடுவோன் என்ற தோரணையில் பேசியது தெரிந்தது.

Advertisements

பிஜு காஸ்ட்ரோ, அனு கென்ஸியைக் கத்தியால் குத்தியது: ஒருதலை காதலா, காதல் போதையா, சினிமா போதனையா, மதசோதனையா – எது? (2)

ஜனவரி 2, 2017

பிஜு காஸ்ட்ரோ, அனு கென்ஸியைக் கத்தியால் குத்தியது: ஒருதலை காதலா, காதல் போதையா, சினிமா போதனையா, மதசோதனையாஎது? (2)

fisherman-youth-stabbed-polytechnic-faculty-for-refusing-love-31-12-2016

மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அனு கென்சி: அனுகென்சியின் வயிற்றில் ஆழமாக கத்திக்குத்து விழுந்தது. வலி தாங்க முடியாமல் அனுகென்சி அலறி துடித்தார்[1]. அவருடன் வந்த பெண்கள் சத்தம் போட்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்[2]. இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது[3]. சுதாரித்துக் கொண்ட சிலர் பிஜூ காஸ்ரோவை துரத்தி பிடித்தனர்[4]. அந்த இடத்திலேயே அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்[5]. பின்னர் அவர் நித்திரவிளை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். கத்திக்குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த அனுகென்சியை உறவினர்கள் மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள / திருவனந்தபுரத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்[6]. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளது[7] என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “புதிய தலைமுறை” டிவிக்குப் பேட்டி கொடுத்துள்ள, அனுகென்சியின் உறவினர் விவரங்களை கூறுகிறார். பிறகு, அவை மற்றவர்களுக்கும் தெரிந்துள்ளது என்றாகிறது. அந்நிலையில், பிஜு காஸ்ட்ரோ சரியாக கண்காணிக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை என்றாகிறது.

jilted-lover-stabs-woman-outside-tami-nadu-church-02-01-2017

சர்ச்சுகளில் கத்திக் குத்துகள், கொலைகள் ஏன் அதிகமாகி வருகின்றன?: 31-08-2016 அன்று கீகன் ஜோஸ் கோம்ச் என்பவன், பிரான்சினாவை சர்ச்சில் கொலைசெய்த சம்பவத்தைப் போன்றே, இந்நிகழ்ச்சியும் உள்ளது. இதனைப் பற்றி விவரமாக அலசியுள்ளதை இங்கே படிக்கலாம்[8]. அதே பகுதியில், சர்ர்சுக்குள் நடந்த அந்த கொலை கிருத்துவர்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆக அதையெல்லாம் மறந்து பிஜு காஸ்ட்ரோ அதே முறையில் அனு கென்சியின் பின்னால் எப்படி சென்றிருக்க முடியும்? கிருத்துவர்களுக்கு இதெல்லாம் சகஜமாகி விட்டதா, அல்லது, இதனை ஒரு பொதுப் பிரச்சினையாக எடுத்துக் கொள்வதா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மீனவன் பேராசியையை காதலிக்கலாமா-கூடாது என்று யாரும் கட்டுப்பாடு, விதிமுறைகள் அல்லது சரத்துகள் போட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.  அக்கொலை சர்ச்சுகுள்ளேயே நடந்தது எனும்போது, இக்கொலை முயற்சி சர்ச்சுற்கு வெளியில் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால், தெவம் மற்றும் தெவஸ்தலங்கள், அவற்றின் புனிதம் முதலியனவும் மக்களின் தீய குணங்களினால், கெட்டுப் போகிறது என்று தெரிகிறது.

biju-castro-jilted-lover-stabs-anu-kenzie-puthiathalaimurai-tvசினிமா காரணம் என்றால், சினிமாகாரர்கள் பொறுப்பேற்க வேண்டும் அல்லது அத்தையோர் தண்டிக்கப்பட வேண்டும்: சினிமாவில் எல்லாமே சகலம் என்றால், நிஜவாழ்க்கையிலும், அப்படி சகஜம்தான் என்று தீர்மானித்து காதலில் இறங்கி விடுகிறார்கள் என்றுதான் தெரிகிறது. காசில்லாதவன் எப்படி பணக்காரியை காதலிக்கிறான், அவளை வளைத்துப் போட, கவர மற்றும் காதலிக்க என்னவெல்லாம் செய்கிறான் என்றுதான், இப்பொழுதைய சினிமாக்கள் காட்டி வருகின்றன. அவற்றை குடும்பத்தோடு உட்கார்ந்து கொண்டு ரசித்து வருகின்றனர். அந்த நடிகர்-நடிகைகளுக்கு விருதுகள் எல்லாம் வேறு கொடுக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளையும் காட்டினால், அவற்றையும் பார்த்து ரசிக்கிறார்கள். தங்களது மகள்களை, பெண்-குழந்தைகளை, பெண்களை  அவ்வாறே, “மானாட, மயிலாடா” போன்ற நிகழ்ச்சியிலிருந்து, “சூப்பர் ஜோடி”, போன்ற ஆட்டம்-பாட்டம் கூத்துகளுக்கு தயார் செய்து அனுப்பி வைக்கின்றனர். சினிமாக்காரர்கள் தான் காரணம் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு “நுகர்வோர்” என்ற ரீதியில், அவர்களுக்கு வேண்டியதை நாங்கள் கொடுக்கிறோம் என்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் சுராஜ் என்ற இயக்குனரும் அப்படித்தான் ஒப்புக் கொண்டார். ராம்கோபால் வர்மா போன்ற ஆட்கள், அடுத்தவரது சோகம், இறப்பு, சீரழவு, தீவிரவாதம்,முதலியவற்றை வைத்துக் கொண்டு, சினிமா எடுத்து சம்பாதித்து வருவது தெரிந்த விசயமே. 1950களில் இந்தியாவின் வறுமையை வைத்தே சினிமா எடுத்து பெயர் வாங்கியவர்களும் இருக்கிறார்கள்.

love-me-or-else-i-kill-you-jilted-love-bloodபிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், போதகர்கள் காரணம் என்றால், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: சர்சுகளில், ஆண்கள்-பெண்கள் எதற்காக ஒன்றாக சேரவேண்டும், என்னென்ன காரணங்களுக்காக அவர்கள் அவ்வாறு நெருக்கமான நிலையில் சேர்ந்து வேலைசெய்வது அல்லது சேவை செய்வது போன்ற தேவைகள், அவசியங்கள் அல்லது நிர்பந்தங்கள் ஏற்படுகின்றன என்று கவனிக்க வேண்டும். தொடர்ந்து இத்தகைய காதல்-கொலைகள், கோர-சாவுகள் நிகழ்ந்து வருவதால், சர்ச்சுகளில் ஆண்கள்-பெண்களை பிரித்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், கத்தோலிக்க “பாவ மன்னிப்பு” போன்ற முறைகளைக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், காலங்காலமாக கத்தோலிக்கக் கிருத்துவத்தில் “பாவ மன்னிப்பு” விசயங்களில் தான் பல பெண்களை பாதிரிகள் சீரழித்துள்ளானர். மற்ற கிருத்துவப் பிரிவுகள் பைபிள் வகுப்பு, பாட்டுப் பாடுதல், ஆடுதல் போன்ற போர்வையில் பெண்களை வரவழைத்து, தங்களது காமப்பசிக்கு உபயோகித்துக் கொள்கிறார்கள். இந்நிலைகளை, கிருத்துவர்கள் கண்காணித்து மாற்ற வேண்டும்.

murder-in-church-keegan-francina

பெற்றோர், உற்றோர், மற்றோர் தங்களது பெண்பிள்ளைகளை கவனித்து, கண்காணித்து போற்றவேண்டும்: பெற்றோர் தமது மகள்களை, பென்களை எந்த காரணத்திற்கும், தனியாக, யாருடனும் அனுப்பி வைக்க்கக் கூடாது, போன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும். ஏற்கெனவே, பிஷப் முதல் பாஸ்டர் வரை இத்தகைய காதல்-காமக்களியாட்டங்களில் ஈடுபட்டு, கற்பழிப்பு, கொலை போன்ற விவகாரங்கள் தமிழகத்திலேயே அதிகமாகவே நிகழ்ந்துள்ளன. அவர்களைத் தொடர்ந்து, விசுவாசிகளும் இப்படி ஆரம்புத்துள்ளனர். முன்பே குறிப்பிட்டப்படி,  யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம், ஆனால், பெண் மறுத்தால், கொலை செய்யலாம் போன்ற கொலைவெறி ஏற்பட்டுள்ளதை சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மனோதத்துவரீதியில், வியாதி என்றெல்லாம் விளக்கி தப்பித்துக் கொள்ள முடியாது. மனத்தில் வக்கிரமான எண்ணங்கள், எண்ணங்களின் உக்கிரம், அந்த உக்கிரத்தத் தூண்டும் அல்லது தூண்டிவிட்டுக் கொண்டு, செயலில் ஈடுபடும் தீவிரவாதம் முதலியவற்றை, பெரிய குற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-01-2017

love-me-or-else-i-kill-you-jilted

[1] http://www.maalaimalar.com/News/State/2017/01/01120431/1059390/Nithiravilai-near-professor-knife-stab.vpf

[2] mattersindia.com, Jilted lover stabs woman outside Tamil Nadu church, Published on: 12:53 am, January 2, 2017.

[3] http://mattersindia.com/2017/01/jilted-lover-stabs-woman-outside-tamil-nadu-church/

[4] குமரி.ஆன்.லைன், பேராசிரியைக்கு கத்திக்குத்து : காதலிக்க மறுத்ததல் வாலிபர் வெறிச்செயல், ஞாயிறு 1, ஜனவரி 2017 6:37:15 PM (IST)

[5] http://www.kumarionline.com/view/31_131164/20170101183715.html

[6] புதியதலைமுறை, ரு தலைக்காதலால் விபரிதம்கல்லூரி பேராசிரியைக்கு கத்திக்குத்து, பதிவு செய்த நாள் : January 01, 2017 – 04:53 PM; மாற்றம் செய்த நாள் : January 01, 2017 – 06:55 PM.

[7]  http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/74056/professor-attacked-by-love

[8] https://christianityindia.wordpress.com/2016/09/07/love-depiction-in-perverted-way-has-led-to-lust-rape-murder-and-other-sexual-crimes/

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

ஒக்ரோபர் 22, 2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

joshua-immanuel-raj-raper-and-priest

மறுபடியும் கிருத்துவ மதபோதகர் கற்பழிப்பில் ஈடுபட்டதும், செய்தி வெளியீடும்: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர்[1].  அவரது உதவியாளர் வினோத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போதகர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்[2]. இந்த செய்தியை ஏறத்தாழ வழக்கபோல பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைதள நாளிதழ்கள் அப்படியே வெளியிட்டுள்ளன[3]. புதிதாக இணைதளங்களில் செய்திகளை வெளியிடும் தளங்களும் அப்படியே “காபி அன்ட் பேஸ்ட்” ரீதியில் செயல்படுகின்றன[4]. ஏனிப்படி கிருத்துவப் பாதிரிகள், மதபோதகர்கள் இப்படி பல பெண்களைக் கற்பழிக்கிறார்கள், பெண்கள் எப்படி மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பது பற்றி விளக்குவதில்லை. கிருத்துவர்களும், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால், அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று தெரியவில்லை. இவையெல்லாம் செய்திகளாகப் படித்து மறந்து விடும் தகவல்கள் அல்ல, சமூகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும்.

joshua-immanuel-raj-xian-problem-or-social

கல்யாணம் ஆகாமல் இருந்து, பைபிள் படித்து, மதபோதகர் ஆகி, அறக்கட்டளை வைப்பது: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கருப்பூரை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் ஜோசுவா இமானுவேல் ராஜ் (வயது 35). திருமணமாகாத இவர் பைபிள் வகுப்பு படித்தார் என்று ஒரு நாளிதழ் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  பைபிள் படிப்பதற்கு திருமணம் ஆகாமல் இருக்க வேண்டுமா அல்லது கல்யாணம் ஆகாத கிருத்து பையன்கள் பைபிளைப் படிக்கலாமா என்று தெரியவில்லை கிறிஸ்தவ மத போதகரான இவர், தனியாக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். ஆக, பைபிள் படித்து மதபோதகர் என்றாகி விட்டால், நல்ல காசு-பணம்-துட்டு எல்லாம் கிடைக்கும் போல, உடனடியாக, அறக்கட்டளை வைத்து விடலாம் போல! பிறகு, இவர் ஊர், ஊராக சென்று கிறிஸ்தவ பிரசங்கம் மற்றும் ஜெபம் செய்து வருகிறார், என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஊர்-ஊராக செல்வது எதற்கு என்றால், அவர்களே இப்படி செய்திகளைக் கொடுத்துள்ளாற்கள்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016-dinathanthi

இவர் ஊர், ஊராக சென்றுஅழகான இளம் பெண்களை காதல் விலையில் வீழ்த்தி கற்பழிப்பழிக்கும் போதகர்: ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவார். மதபோதகர் இப்படி செய்யலாமா அல்லது கிருத்துவ இளம் பெண்கள் அப்படி மாட்டலாமா என்று தெரியவில்லை. பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்வார். எப்படி அப்பெண்களின் பெற்றோர் ஒப்புக் கொள்வர், ஒப்புக் கொண்டனர் என்று தெரியவில்லை. சென்று விட்டனர் என்பதால், சம்பதித்துள்ளனர் என்றாகிறது. பின்னர் லாட்ஜில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அப்பெண்கள் எப்படி ஜோசுவா இமானுவேல் ராஜுடன் ஒத்துழைப்பார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. ஆக, அப்பெண்கள் காமத்திற்கு, கொக்கோக இச்சைக்கு, உடலுறவு கொள்ளும் அளவுக்கு, இவன் எப்படி ஊக்க்குவிக்கிறான் என்பது தெரியவில்லை. ஆபாசப்படம் எடுக்கிறான் என்றால், கேமரா எல்லாம் இருக்க வேண்டும். பிறகு, அப்பெண்களுக்கு அறிவில்லாமல், அந்த அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்றால், என்ன விசயம் அது?

joshua-immanuel-raj-xian-porn-dangerous-trend-in-tamilnadu

மானம் கெட்டப் பிறகு புகார் கொடுத்த பெண்கள்: மத போதகரால் பாதிக்கப்பட்ட தாழையூத்து சேர்ந்த ஒரு இளம் பெண், கொடியன்குளத்தில் கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண், பாப்பாக்குளத்தை சேர்ந்த ஒரு பெண் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் தீன்குமார் ஆகியோர் மத போதகரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர் ஆசை வார்த்தை காட்டி பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ஜோசுவா இமானுவேல் ராஜை போலீசார் 17-10-2016 அன்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:

  1. “தாழையூத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் வீட்டுக்கு அடிக்கடி ஜெபம் செய்வதற்காக செல்வேன். [அதே பகுதியை சேர்ந்த உஷா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அவரை திருமணம் செய்வதாக 10 சவரன் நகையை வாங்கி மோசடி செய்து பாலியல் பாலத்காரம் செய்துள்ளார் என்கிறது நக்கீரன்[5]] உனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும். வெளியூர்களில் நடக்கும் கூட்டங்களை வந்தால் அரசு வேலை கிடைக்கும் என அந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி வெளியூருக்கு அழைத்து சென்றேன். வெளியூர்களில் வைத்து பல முறை அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தேன். அதை செல்போன் மூலம் படம் எடுத்தேன். என்னை பற்றி வெளியே கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர் நெட்டில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவோன் என்று மிரட்னேன். பயந்த போன அந்த இளம் பெண் நடந்த விசயத்தை யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை ஏமாற்றி அபகரித்து கொண்டேன்.
  2. கொடிங்குளத்தில் ஒரு பெண் [கொடியன்குளத்தை சார்ந்த அனுஷ்யாவிடமும் பணம் மற்றும் நகைகளை பறித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி  உள்ளார் என்கிறது நக்கீரன்] தனது கணவரை பிரிந்து இருப்பதை தெரிந்து கொண்ட நான், அவர் வீட்டுக்கு சென்றேன். சிறப்பு ஜெயம் மூலம் கணவனுடன் சேர்ந்து வைப்பதாக கூறி அந்த பெண்ணை மயங்கி உல்லாசம் அனுபவித்தேன். அந்த பெண்ணையும் செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி, அவரிடம் இருந்த 15 பவுன் தங்க சங்கிலியையும் அபகரித்தேன்.
  3. பாப்பான்குளத்ரை சேர்ந்த ஒரு பெண்ணை [நெல்லை மாவட்டம் பாப்பன்குளம் பகுதியை சார்ந்த சீமாகுமாரியிடம் கணவரை சேர்த்துவைப்பதாக கூறி மத போதனை செய்து. சேர்த்து வைப்பதற்கு நகை மற்றும் பணம் பெற்றுள்ளார் என்கிறது நக்கீரன்[6]] வசதியாக வாழ வைப்பதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தேன். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்து கொண்டேன்,” இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

22-10-2016

joshua-immanuel-raj-xian-porn-dangerous-way

[1] தினத்தந்தி, பிரார்த்தனை செய்வதாக கூறி லாட்ஜூக்கு அழைத்து சென்று இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்; நகைபணம் பறிப்பு நெல்லையில் கைதான மத போதகர் குறித்து பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 6:42 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , அக்டோபர் 20,2016, 3:00 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/19184213/Go-pick-up-latjuFrights-pornographyRecreation-intimidate.vpf

[3] ஒன்.தமிழ்.நியூஸ், ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணமோசடி செய்து உல்லாசமாக இருந்தவர் கைது, அக்டோபர்.19, 2016.

[4] http://www.onetamilnews.com/News/arrested-KTRAF7

[5] நக்கீரன்,  இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : 19, அக்டோபர் 2016 (20:11 IST); மாற்றம் செய்த நாள் :19, அக்டோபர் 2016 (22:34 IST)

[6] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=175723

ரவுடி ஆசீர்வாதத்தின் மீது, முதல் கல்லை எரிந்தது பாஸ்டர் இம்மானுவேல் பிரகாஷா – இறையியல் பிரச்சினையை எழுப்பிய ஆங்கில ஊடகங்கள்!

ஜூலை 8, 2016

ரவுடி ஆசீர்வாதத்தின் மீது, முதல் கல்லை எரிந்தது பாஸ்டர் இம்மானுவேல் பிரகாஷா – இறையியல் பிரச்சினையை எழுப்பிய ஆங்கில ஊடகங்கள்!

Ashirvadam killed - TOI- pastor hurled the first stone

பாஸ்டர் முதல் கல்லை எரிந்தாரா, பெரிய கல்லை எரிந்தாரா?: முதல் கல்லை விட்டெறிந்தது பாஸ்டர்தான் என்றது டைம்ஸ் ஆப் இந்தியா. அதாவது, பைபிளில், பாவம் செய்யாமலிருப்பவன் முதல் கல்லை எரிவானாக, [“May he who has no sin cast the first stone” ] என்கிறது[1]. அதுபோல, இந்த பாஸ்டர், முதல் கல்லை எரிந்துள்ளார்[2]. பின்னர், தனக்கு முன்னால், எல்லாமே கட்டுக்குள் அடங்காமல் போகும் வேளையில் ஒரு பெரிய கல்லை எடுத்து, அந்த புண்ணியமற்ற பாவி நம்பிக்கையாளர்களை வாட்டி வதைக்கும் போது, அவன் மீதி எரிந்தார் [Things had by now passed the preacher’s threshold. He looked about him, saw a big stone and hurled it at the sacrilegious one attempting to fleece the faithful] என்று விவரித்தார்[3]. இந்த நிருபருக்கு பைபிள் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. இல்லை, இவ்விசயத்தில் மதம் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒருவேளை அவ்வாறு சூசகமாக சொல்லப்பட்டதோ என்னமோ. மேற்கத்தை மதங்களில் கற்களால் அடித்து கொல்வது என்பது சகஜமான விசயம். மோசஸ்அப்படித்தான் போதித்துள்ளார். ஆனால், ஏசு உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர் முதல் கல்லை எரியுங்கள் என்றாராம். அக்கதையின் படி, ஒரு விபச்சாரியே பிழைத்துக் கொண்டாள் என்றுள்ளது. இங்கோ, இந்த மாமூல் கேட்ட ரௌடி கொல்லப்பட்டான். ஆனால், தி இந்து, மிரட்டி பணம் கறக்கும் விசயத்தில் ஒரு ரவுடி ஒலைசெய்யப்பட்டான் என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டது[4].

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - உடல் - 19-06-2016சண்டை, கைகலப்பு, கட்டி வைத்து அடித்தல், கொலையில் முடிந்த நிலை: அப்படியென்றால், ஆசீர்வாதத்தின் போக்கு அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எல்லோரும் கிருத்துவர்கள் என்ற பட்சத்தில் அவனை மனம் மாற்றம் ஏன் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. எதோ தீராத நோய்கள் எல்லஆம் தீர்க்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது, ஆசீர்வாதத்தின் குடியை நிறுத்தி, அவனது மனதை மாற்றி, பாவத்தைப் போக்கி, நல்லவனாக திருத்த ஏன் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. வாய்பேச்சு, சண்டை, அடிக்க வருவது என்ற நிலை ஏற்பட்டது. உடனே, போதகர் இம்மானுவேல் பிரகாஷின் மகன் மணப்பால் பிரகாஷ், அவரை தடுத்துள்ளார். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த போதகரின் தம்பி ஜோயல் பிரகாஷ் மற்றும் சபை ஊழியர் கருணாகரன், லோகிதாசன் ஆகியோர் போதகருக்கு ஆதரவாக ஆசீரிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ரவுடி ஆசீரை அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்து, அங்கிருந்த சிமென்ட் கல் மற்றும் செங்கற்களை கொண்டு முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கினர்.

Ashirvadam killed - NIE- unforgiving church dramaபோலீஸாரிடம் புகார் கொடுக்காமல், இவர்களே அவனை கட்டிப்போட்டு அடித்ததேன்?: அதுதான் மரத்தில் கட்டி வைத்து விட்டார்களே, உடனே போலீஸுக்கு புகார் கொடுத்து, அவனை அங்கிருந்து எளிதாக அப்புறப்படுத்தியிருக்கலாமே. மேலும், இப்பொழுதுதான், சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறான், வந்தவுடன், வேலையை ஆரம்பித்து வுட்டான் என்றால், உடனே போலீஸார் அள்ளிக் கொண்டு போயிருப்பார்களே? பிறகு ஏன் அத்தகைய வன்முறையில் ஈடுபடவேண்டும்? இதில் ரவுடி ஆசீர் முகம் சிதைந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் என்கிறது தினகரன். ஆத்திரமடைந்த பாதிரியார் மற்றும் அவர் மகன், தம்பி ஆகியோர், ஆசீரை மரத்தில் கட்டிப்போட்டு, தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது என்கிறது தினமலர்[5]. ஆசீரை கடுமையாக தாக்கி, மரத்தில் கட்டிப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது, என்று பிறகு முடிக்கிறது[6]. ஆனால், ஆங்கில ஊடகங்களின் படி, ஜெபகூடத்தவர், அவனை சூழ்ந்து கொண்டு பிடிக்க முயன்றனர், ஆனால், அவன், கத்தியை வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டிருந்ததால், கல்லெடுத்து அடிக்க ஆரம்பித்தனர், பாஸ்டர் தான் முதல் கல் எரிந்தது, ஒரு பெரிய கல்லை எரிந்தார் என்றெல்லாம் அவை விவரித்தது எடுத்துக் காட்டப் பட்டது.

 Zion church, Chengalpattuபோலீஸார் வந்து விசாரணை செய்தது, பாதிரி மற்றும் இதர நபர்களை கைது செய்தது முதலியன: இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசீர் தாய் சுசீலா அளித்த புகாரை அடுத்து, தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜ் ஜோர்ஜ், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்[7]. அங்கு முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த ரவுடி ஆசீரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[8]. இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடியை கொலை செய்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் (50), மகன் மணப்பால் / மனோபால் பிரகாஷ் (21), போதகரின் தம்பி ஜோயல் பிரகாஷ் (44) மற்றும் சபை ஊழியர் கருணாகரன் (32), லோகிதாசன் (29) ஆகியோரை கைது செய்தனர்[9]. பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போதகர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].

May he who has no sin cast the first stone -Ashirvadam killedபட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை ![11]: செங்கல்பட்டு நகரில் பிரபல ரவுடி ஆசிர்வாதம் என்பவர் இன்று பட்டப்பகலில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு கே.கே. நகரில் ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்[12]. கொல்லப்பட்ட ஆசிர்வாதம் மீது பல கொலை,கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். “வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்”, என்று லைவ்.டே என்ற இணைதளம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்தம் மூன்றுவிதங்களில் அவன் இறந்தான் / கொலைசெய்யப்பட்டான் என்றுள்ளது:

  1. மரத்தில் கட்டி வைத்து கற்களால் அடித்ததால் இறந்தான்.
  2. ஜெபகூடத்திலிருந்து விரட்டிய போது, வெளியே அவனைச் சுற்றிப் பிடிக்க முயன்றனர். அப்பொழுது, கற்களால் அடித்த போது இறந்தான்.
  3. ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்.

இந்த நிருபர்கள் எல்லாம், எப்படி செய்திகளை சேகரிக்கின்றனர், பிறகு செய்தியாக வெளியிடுகின்றனர் என்பதே வியப்பாக இருக்கின்றது. ஒன்று-இரண்டு வித்தியாசங்கள் இருந்தால் பரவாயில்லை ஆனால், இப்படி பல வித்தியாசங்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது. உண்மையிலேயே அத்தகைய வேறுபாடுகள் பிழையா, அல்லது வேண்டுமென்றே திசைத்திருப்ப அவ்வாறு பதிவு செய்கின்றனரா அல்லது குற்றவாளிகளுக்கு உதவுவதற்கான, அத்தகைய மாறுபட்ட, முரண்பாடான செய்திகளை வெளியிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

08-07-2016

Zion church - Immanuel Prakash- The Hindu way of reporting

[1] The Times of India, Pastor hurls first stone, goon dies, TNN | Jun 20, 2016, 04.51 AM IST.

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/Pastor-hurls-first-stone-goon-dies/articleshow/52825585.cms

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/Thug-tried-to-extort-money-from-pastor/articleshow/52825565.cms

[4] The Hindu, Man killed after extortion bid, Chennai, June 20, 2016.

A person who allegedly tired to extort money from a religious preacher was reportedly killed by residents in the neighbourhood. Asirvatham, a resident of Thirumani near Chengalpattu, tried to extort money from Immanuel Prakash, who is a preacher in the neighbourhood. Asirvatham was reportedly attacked by a few residents. The police have registered a case and are investigating.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/man-killed-after-extortion-bid/article8750137.ece

[5] தினமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்து கொலை:பாதிரியார் உட்பட 5 பேர் கைது

பதிவு செய்த நாள். ஜூன் 19,2016 23:04; மாற்றம் செய்த நாள். ஜூன் 19,2016. 04:11.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1546384&

[7] பத்திரிக்கை.காம், ரவுடி கொலை:பாதிரியார் கைது!, டி.வி.எஸ்.சோமு, ஜூன்.20, 2016. 11.24.

[8] https://www.patrikai.com/rowdy-killed-christian-priest-arrested/

[9] தமிழ்.நியூஸ்.களஞ்சியம், பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கல்லால் அடித்து கொலை செய்த பொது மக்கள் !, By தொகுப்பாளினி நலினி, June 19, 2016.

[10]http://news.southdreamz.in/1/2016/06/19/%E2%80%8B%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%B5/

[11] லைவ்டே, பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை !, Jun 19, 2016 at 3:06 PM : By LIVEDAY

[12] http://liveday.in/chennai-online-tamil-news/criminal-murder/

ஆசீர்வாதம் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று, கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டியதால், பாதிரி உட்பட பலர் கற்களால் அடித்து கொலையுண்டது – ஊடகங்களில் முரண்பட்ட செய்தி வெளியீடு!

ஜூலை 8, 2016

ஆசீர்வாதம் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று, கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டியதால், பாதிரி உட்பட பலர் கற்களால் அடித்து கொலையுண்டதுஊடகங்களில் முரண்பட்ட செய்தி வெளியீடு!

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - போலீஸ் விசாரணை - 19-06-2016

பல வித்தியாசங்களுடன் வெளி வந்தரவுடி/ரௌடி கொலைசெய்தி (19-06-2016): மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக கற்களால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. வழக்கம்போல, பொறுமையாகப் படித்தபோது, நிறைய வேறுபாடுகள் காணப்பட்டன. இதுதொடர்பாக, கிறிஸ்தவ போதகர், மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டாலும், அதற்குண்டான சம்பந்தத்தை விளக்காமல் சாதாரண “ரௌடி மிரட்டல்” என்றதில் முடித்து விட்டன. ஆசீர்வாதத்தின் வயது, கலாட்டா செய்த விதம் (குடித்து வந்தானா-இல்லையா), வயது 35 அல்லது 40 என்று வேறுபாடுகள் காணப்படுகின்றன. செங்கல்பட்டு கே.கே. நகரில் ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர் என்று லைவ்.டே என்ற இணைதளம் கூறுகிறது[1].  சரி, இனி விவகாரத்தைப் பார்ப்போம்[2].

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - ஆசிர் போட்டோ- 19-06-2016ஆசிர் என்ற ஆசிர்வாதம் யார்?: செங்கல்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் ஆசீர் (எ) ஆசீர்வாதம் (35) என்கிறது தினகரன். வயது 40 என்கிறது மாலைமலர்[3]. செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் ஆசீர் என்ற ஆசீர்வாதம், 35; ரவுடி என்கிறது தினமலர். இவரது தாய் சுசீலா. மனைவி மேரி. பிரபல ரவுடியான ஆசீர் மீது கொலை முயற்சி வழக்கு, கொள்ளை, மிரட்டல், ஆள் கடத்தல்,   கடைகளில் சென்று, மாமூல் கேட்டு மிரட்டியதாக,உள்ளிட்ட 11 வழக்குகள் உள்ளன[4]. செங்கல்பட்டு தாலுகா போலீஸ் மற்றும் செங்கல்பட்டு நகர போலீசில், 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கடந்த, 2015ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்துவிட்டு, தற்போதுதான் வெளியே வந்திருந்தார்[5].  ஆக, ஆசீர்வாதம் ரௌடி, ஜெயிலுக்கு போய் வந்தவன்…….என்றாலும் கிருத்துவன். பிறகு, அவன், சர்ச்சிடமே வந்து எப்படி மாமூல் கேட்டான் என்று தெரியவில்லை. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படவில்லை போலும்.

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - சர்ச், - 19-06-2016ராஜ்டிவியின் பேட்டியின் படி, மக்கள் அவன் எப்படியாவது பணத்தைக் கறக்கும் பேர்வழி என்று தெரிகிறது: அந்த பகுதியில் யாரிடத்தில் அதிகமாக பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வான், பிறகு, அவர்களிடத்தில் சென்று மிரட்டி பணம் கேட்பான். இப்படி மாமூல் கேட்பதையே வேலையாகக் கொண்டிருந்தான். எல்லோரிடத்திலும் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்பான். சிறுவர்கள் என்று கூட பார்க்க மாட்டான், கத்தியால் கீறி பயமுறுத்தி பணம் பரிப்பான். பெண்களாக இருந்தால், அசிங்கமாக-ஆபாசமாக பேசி மிரட்டுவான். ஏன் நிர்வாணமாக கூட இருந்து தொல்லைக் கொடுத்து பணம் கறப்பான், என்று அங்குள்ள பெண்கள் கூறுவதை “ராஜ்டிவி” பதிவு செய்துள்ளது[6]. ஒரு ஆண் பேசும்போது, பணத்திற்காக மிரட்டுவதை விளக்கி விட்டு, இப்படி அடிக்கடி வந்து கேட்டால் கோபம் வரும், அப்பொழுது அடிக்க பார்ப்பார்கள், பலர் சேரும் போது, இவ்வாறு ஆகிவிடுகிறது, ஆனால், அவன் இறந்து விடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண்களையும் சேர்த்து தான், போலீஸார் கூட்டி செல்ல முயன்றனர். ஆனால், பிறகு, அவர்களை விட்டுவிட்டு ஐந்து பேரை கூட்டி சென்றனர் என்று விவரித்தார்[7]. ராஜ்-டிவியின் “ரவுடிகள் உருவாகும் விதம்” அலசல் நண்ராக இருக்கிறது.

 செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - பொது மக்கள் விளக்கம் 19-06-2016

ஞாயிற்றுக் கிழமை சர்ச்சில் பிரார்த்தனை நேரத்தில் வந்து மிரட்டிய ஆசிர்வாதம்: இம்மானுவேல் பிரகாஷ் [Immanuel Prakash] என்ற பாஸ்டர் / மதபோதகர் தனது வீட்டின் அருகில், இந்த ஜெபகூடத்தை நடத்தி வந்தார். இடம் – மேலமை ஊராட்சி, கே.கெ.நகர், அம்பேத்கர் 2வது தெரு, வார்டு எண். 9. இந்நிலையில், 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணியளவில் (தினகரன்) / 10.15 மணிக்கு (தினமலர்) ஆசீர் செங்கல்பட்டு அடுத்த கேகே நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு கே.கே., நகர் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று (தினமலர்) / திடீரென சென்றார்[8]. சாதாரணமாக சென்றார், திடீரென்று சென்றார், குடித்து விட்டு சென்றார் – என்று காணப்படுகிறது. பின்னர் போதகர் இம்மானுவேல் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளார்[9]. அதற்கு போதகர், ‘வார வாரம் வந்து மாமூல் கேட்கிறாய், தர முடியாது’ என்று கூறியுள்ளார்[10]. உடனே ஆசீர், ‘நான் பிரபல ரவுடி. எனக்கு மாமூல் தரமாட்டியா. நீ எப்படி சபை நடத்துகிறாய் என பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஆவேசமாக கூறி அடிக்க பாய்ந்துள்ளார்[11]. இதனை கண்டித்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் மற்றும் பிரார்த்தனைக்கு வந்தவர்களை ஆசீர்வாதம் கத்தியை காட்டி மிரட்டினார்[12]. மேலும் போதகர் இம்மானுவேல் பிரகாசிடம் மாமூல் கேட்டு எச்சரித்தார்[13].

Ashirvadam killed - Deccan chronicle ஊடகங்கள் விவரித்தது (20-06-2016): ஆசிர்வாதம் கத்தியுடன் ஜெபகூடத்திற்குள் சென்றான் இம்மானுவேலை கத்தி காட்டி மிரட்ட ஆரம்பித்து பணம் கேட்டான். ஜெபகூட்டத்தில் இருந்த சுமார் 50 பக்தர்களுக்கு[14] எதிராகவே கத்தி காண்பித்து சுழற்றி மிரட்டினான். இவ்வாறு, தினமும் மாமூல் கேட்டு வந்தான்[15]. இதனால், அவனை வெளியே போகும்படி சொன்னார்கள். ஆனால், அவனோ, எல்லோரையும் கத்தி காட்டி மிரட்டினான்[16]. பிறகு அப்படியே வெளியே சென்றான். அப்பொழுது, பக்தர்கள் அவன் மீது பாய்ந்து, கற்களால் அடித்து, வளைத்துப் பிடிக்க முயன்றனர்[17]. ஆனால், அவனோ கத்தியை வைத்து, சுற்றி வந்து, குத்தி விடுவது போல பாய்ந்து, பாய்ந்து நடந்து கொண்டிருந்தான். ஆனால், கற்கள் அவனது மார்பு மற்றும் தலைமீது தாக்கப்பட்டதில் மயங்கி விழுந்தான். ஒரு பெரிய கல் அவன் தலையில் பட்டதில், அங்கேயே இறந்து விழுந்தான்[18]. அவ்வாறு டெக்கான் குரோனிகல் விவரித்தது[19].

© வேதபிரகாஷ்

08-07-2016

[1] http://liveday.in/chennai-online-tamil-news/criminal-murder/

[2]  விவரங்களை அலசி இதனை பதிவு செய்ய வேண்டும் என்று தாமத்தித்தில், மற்ற விவகாரங்கள் வந்துவிட, இதனை மறக்கும் படி ஆகிவிட்டது. இருப்பினும், முக்கியத்துவம் குறித்து, இப்பொழுது பதிவு செய்யப்படுகிறது.

[3] மாலைமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்மகன் உள்பட 5 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2016 12:38

[4] தினகரன், மாமூல் கேட்டு மிரட்டியதால் பயங்கரம் பட்டப்பகலில் மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து ரவுடி படுகொலை போதகர், மகன் உள்பட 5 பேர் கைது, Date: 2016-06-20 12:51:29

[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=586671&cat=504

[6] கோப்பியம் (ராஜ் டிவி), Koppiyam – Rowdy Hacked To Death In Chengalpattu – பாதிரியார் உட்பட 5 பேர் கைது !!, Published on Jun 24, 2016

[7] https://www.youtube.com/watch?v=B2sIXu35CtQ

[8] நியூஸ்.7.டிவி, பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கல்லால் அடித்து கொலை செய்த பொது மக்கள் !, June 19, 2016

[9] http://ns7.tv/ta/rowdy-nabbed-public-threatening-father-money.html

[10] தினகரன், பட்டப்பகலில் மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து ரவுடி படுகொலை, Date: 2016-06-20@ 01:16:19.

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=225349

[12] மாலைமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்மகன் உள்பட 5 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2016 12:38

[13] http://www.maalaimalar.com/News/District/2016/06/20123825/1020145/Rowdy-struck-and-killed-in-Chengalpattu.vpf

[14] The Times of India, Thug tried to extort money from pastor, TNN | Jun 20, 2016, 04.44 AM IST

[15] http://timesofindia.indiatimes.com/city/chennai/Thug-tried-to-extort-money-from-pastor/articleshow/52825565.cms

[16] New Indian Express, Unforgiving: Church drama leaves former convict dead in Chengalpet, By Express News Service, Published: 20th June 2016 04:07 AM, Last Updated: 20th June 2016 10:21 AM.

[17] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Unforgiving-Church-drama-leaves-former-convict-dead-in-Chengalpet/2016/06/20/article3490680.ece

[18] Ashirvadam allegedly went inside the prayer hall with a knife and started threatening the preacher, demanding money. He demanded mamool daily at knifepoint in front of devotees, who suggested that he get out of the prayer hall. Paying no heed, he continued to threaten the preacher. He said that if Immanuel Prakash failed to give him money daily he would be forced to use the knife. When Ashirvadam refused to listen to the request of the devotees to get out, some of them tried to overpower him. He then pointed knife at them. Swinging knife at them in a threatening manner, he came out of the prayer hall. While devotees were shocked over the incident, Immanuel Prakash, his son, brother and two others surrounded Ashirvadam and attacked him by pelting big stones at him as he continued his stabbing actions with knife. He collapsed after he was hit on his head and chest.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/200616/chennai-preacher-kin-stone-ex-convict-to-death.html

[19] Deccan chronicle, Chennai: Preacher, kin stone ex-convict to death, Published Jun 20, 2016, 6:40 am IST; Updated Jun 20, 2016, 6:40 am IST.

ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அகமதுவும், மாரியா சோபுவும் – புகார் கொடுத்ததில் கைது செய்யப்பட்டனர்!

ஜூலை 6, 2016

ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அகமதுவும், மாரியா சோபுவும்புகார் கொடுத்ததில் கைது செய்யப்பட்டனர்!

Maria Sobu, Kappiyarai.arrested

ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை (03-07-2016): கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு கணவன், மனைவி தங்களது குழந்தையுடன் வேளாங்கண்ணிக்கு சென்றனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த ரெயில் 02-07-2016 அன்று அதிகாலை கோழிக்கோடு அருகே வடக்கேங்குளம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த இளம் பெண்ணிடம் ஒரு வாலிபர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்[1]. இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகள் விழித்துக் கொண்டு அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர். அந்த சமயம் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியதால் அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்[2]. இதை பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அவரை மடக்கிப்பிடித்தனர். பிறகு அவர் ரெயில்வே பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸார் விசாரணையில் அவரது பெயர் முகம்மது (வயது 28) திருச்சூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது[3]. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்களிடம் சில்மி‌ஷம் செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது[4].

Maria Sobu, Kappiyarai.arrested-train molestationமுகம்மது பற்றிய இச்செய்தியின் இறுதியில் சோபு பற்றி குறிப்பிட்டது: கடந்த சில நாட்களுக்கு முன்பு (01-07-2016?) குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த மதபோதகர் சோபு என்பவர் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்ததாக கைது செய்யப்பட்டார். எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி ரெயிலில் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு போட வேண்டும். இரவு நேரத்தில் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், எப்படி பொறுப்புள்ள மதபோதகர், பாஸ்டர் என்ற நிலையில் இருப்பவர்கள் அப்படி செய்யலாம் போன்ற கேள்விகள் எழுப்பப்படவில்லை. சுவாதி, வினுப்பிரியா, சந்தியா என்று பல பெண்கள் தினம்-தினம் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது என்ற நிலையில், இத்தகைய செய்திகள் அமுக்கி வாசிக்கப்படுவது, கவனிக்கத்தக்கது. பெண்களுக்கு எப்படியெல்லாம், எந்த உருவத்தில் எமன், காலன், காமுகன், சாத்தான் போன்றவர்கள் என்றும் நோக்கத்தக்கது.

Maria Sobu, Kappiyarai with other priestsகத்தோலிக்கப் போதகரும் கன்னிப்பெண்ணும் தனியாக ஒரே கம்பார்ட்மென்டில் பயணித்தது: கேரள மாநிலம் திருச்சூர் வடக்கேகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறையையொட்டி மும்பை – கன்னியாகுமரி நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சூர் புறப்பட்டார்[5]. அந்த ரெயிலில் குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறையை சேர்ந்த சோபு (வயது 29) என்பவரும் பயணம் செய்தார். சோபு கப்பியறை பகுதியில் மதபோதகராக பணியாற்றி வருகிறார்[6]. தன்னை மதபோதகர் என்று அவர் அந்த மாணவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சு கொடுத்துள்ளார்[7]. மதபோதகர் என்பதால் அந்த மாணவியும் சகஜமாக அவரிடம் பேசி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சோபு அந்த மாணவியிடம் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு உள்ளார்[8]. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்[9]. ஒரு பாதிரியாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் செய்வது சரியில்லை என்று கூறியிருப்பார் போலும்!

Sobu pastor arrested 03-07-2016தினகரன் கொடுக்கும் அதிக தகவல்: மார்த்தாண்டத்தில் ஒரு சர்ச்சில் போதகராக உள்ளார் என்று தினகரன் கூறுகிறது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்றார். பின்னர் நேற்று முந்தினம் மும்பை-திருவனந்தபுரம் நேத்ரவதி எக்ஸ்பிசஸ் ரயிலில் ஊருக்கு புறப்பட்டார். ரயில் 01-07-2016 அன்று இரவு கோவா அருகே மட்காவு பகுதியை அடைந்தபோது, கீழ் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையெடுத்து இளம்பெண் கூச்சலிட்டார். இதனால், ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து சக பயணிகள் போதகரை எச்சரித்துவிட்டு இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ரயில்வே போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையெடுத்து 02-07-2016 அன்று காலை அந்த இளம்பெண் திருச்சூர் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.

Maria Sobu, Kappiyaraiதொடர்ந்து கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டதால், புகார் கொடுக்க சோபு கைது செய்யப்பட்டது: காமம் தலைக்கேறும் போது என்ன செய்ய முடியும். கர்த்தரோ, பரிசுத்த ஆவியோ, மேரியோ, ஏசுவோ, கிரறிஸ்துவோ தடுக்கவில்லை போலும்! அந்த ரெயில் பெட்டியில் இவர்கள் பயணம் செய்த பகுதியில் வேறு பயணிகள் யாரும் இல்லாததால் சோபுவின் சில்மி‌ஷம் தொடர்ந்து உள்ளது[10]. இதனால், வேறு வழியின்றி, பாலக்காடு பகுதியில் அந்த ரெயில் வந்தபோது அந்த மாணவி போன் மூலம் ரெயில்வே போலீசுக்கு இந்த தகவலை தெரிவித்தார். ஆனால் போலீசார் வருவதற்குள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விட்டது. இதனால் அந்த மாணவி திருச்சூர் ரெயில்வே போலீசுக்கு இதுபற்றி மீண்டும் தகவல் தெரிவித்தார். திருச்சூர் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் வந்தடைந்ததும் அங்கு தயாராக நின்ற போலீசார் சோபுவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு திருச்சூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். திருச்சூர் போலீசார் சோபு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சூர் ஜெயிலில் அடைத்தனர்.

Maria Sobu, Kappiyarai in churchயார் இந்த மதபோதகர் சோபு?: மரியா சோபு (29) என்ற இந்த போதகர் செயின்ட் மேரிஸ் மலங்காரா செமினரியில் படித்து, செயின்ட் மேரிஸ் மலங்காரா கத்தோலிக்க சர்ச்சில் வேலை செய்து வருபவர். இறையியல் பட்டத்தை இத்தாலியில் உர்பேனியா பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்[11]. அப்பொழுது பலநாடுகளுக்கு சென்று வந்துள்ளது தெரிகிறது. இப்பொழுது மார்த்தாண்டம் சர்ச்சில் வேலைசெய்து வருகிறார். முகநூலில் பல ஆண்-பெண் நண்பர்களுடன் சுமுகமாக பழகிக் கொண்டிருக்கிறார். அதிலுள்ள உரையாடல்களிலிருந்து, ஒரு சாதாரண இளைஞன் எப்படி இருப்பானோ, அதே நிலையில் உள்ளது தெரிகிறது[12]. நண்பர்களின் திருமண புகைப்படங்கள் பேஸ்புக்கில் காணப்படுகிறது. இதனால், இகவுலக ஆசைகளைக் கொண்ட மனிதர் என்றுதான் எடுத்டுக் காட்டுகிறது. ஆனால், கத்தோலிக்கக் கிருத்துவத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் பணியாற்ற வேண்டிய நிலையுள்ளது. இதனால், இல்லறம்-துறவறம் போராட்டங்களில் சோபு சிக்கியிருக்கக் கூடும். இதனால், ரயிலில் பயணம் செய்தபோது, தனியாக இருந்த நிலையில், சோபு, உணர்ச்சிகளுக்கு அடங்காத நிலையில், அந்த இளம்பெண்ணிடம் நெருங்கியுள்ளார். பிறகு நடந்தது செய்தியாக வந்துள்ளது. வழக்கம் போல ஓரிரு தமிழ் ஊடகங்களில் மட்டும் தான் இச்செய்தி வந்துள்ளது.

Maria Sobu, Kappiyarai in train - illustrativeகிறிஸ்தவமத குற்றங்கள் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும்: கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தைப் பொறுத்த வரையில், இந்த பாலியல் வக்கிரங்கள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது, பல விவகாரங்களில், வழக்குகுகளில் எடுத்துக் காட்டப்பட்டு விட்டது. 90% வழக்குகள் சர்ச்சுகளில் நடக்கும் போது, சமரசத்தில் முடித்துவிடுகிறார்கள். “டையோசிஸ் நீதிமன்றம்” என்ற “கட்டப்பஞ்சாயத்து” பாணியில் தீர்த்து வைத்து, சமரசங்களில் முடித்து வைக்கப்படுவதால், பலவித பாலியல் விவகாரங்கள், சல்லாபங்கள், ஏன் கற்பழிப்புகள் கூட மூடி மறைக்கப்படுகின்றன. இந்த கட்டுப்பட்ட இறையியல் எல்லைகளை மீறும் போது, போலீசாரிடம் புகார் கொடுக்கும் போது, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் போது தான், உண்மைகள் வெளிவருகின்றன. இங்கு கூட, தனியாக உள்ள நிலையில், வேறு வழியில்லை, தன்னுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட போதுதான், அவள் புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் கைது செய்தாலும், சர்ச் தனது அதிகாரித்தைப் பயன்படுத்தி, இவ்வழக்கை அமுக்கி விடுமா அல்லது தொடர்ந்து நடத்தவிடுமா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

06-07-2016

[1] மாலைமலர், கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது, பதிவு: ஜூலை 05, 2016 09:56.

லங்கபுரி.காம், பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது!, July 5, 2016

[2] http://www.maalaimalar.com/News/National/2016/07/05095624/1023521/young-man-arrested-for-running-train-women-harassment.vpf

http://lankapuri.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/

[3] லங்கபுரி.காம், பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது!, July 5, 2016

[4]http://lankapuri.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/

[5] மாலைமலர், ஓடும் ரெயிலில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: மத போதகர் கைது, பதிவு: ஜூலை 03, 2016 16:33.

[6] http://www.maalaimalar.com/News/National/2016/07/03163324/1023138/Priest-arrested-for-moving-train-girl-molestation.vpf

[7] வெப்.துனியா, மாணவியிடம் சில்மிஷம் செய்த மத போதகர், ஞாயிறு, 3 ஜூலை 2016 (19:06 IST)

[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/preacher-given-harassment-to-girl-at-train-116070300027_1.html

[9] அததெரண, ஓடும் ரயிலில் பாலியல் சில்மிஷம்ஒருவர் கைது!, July 4, 2016  09:10 am

[10] http://tamil.adaderana.lk/news.php?nid=81296

[11] Rev. Fr. Maria Sobu, Christuraja Cathedral, Christurajapuram, Marthandam – 629 165, Kanyakumari District, Seminarian at Syro Malankara Catholic Church; Worked at St.Mary’s Malankara Seminary; Studied Theology at pontifica università urbaniana.

[12] https://www.facebook.com/mariasobu

குலசேகரத்தில் திருமணமான பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு பட்டயத்தோடு மோதிக் கொண்டு, காதலர் தினத்திற்கு முன்பாக சமாதானமானது!

பிப்ரவரி 15, 2016

குலசேகரத்தில் திருமணமான பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு பட்டயத்தோடு மோதிக் கொண்டு, காதலர் தினத்திற்கு முன்பாக சமாதானமானது!

kumari murasu - two pastors fight for lover

செல்போன் பிரார்த்தனை, பேச்சு, கள்ளக்காதல்: கூட்டம் முடிந்தவுடன் அந்த இளம்பெண் பிரகாஷிடம் சென்று தனது செல்போன் எண்ணை கொடுத்து, தனது குடும்ப சூழலையும் கூறி, பிரார்த்தனை செய்யுமாறு கூறியுள்ளார். ஒரு பெண் இவ்வாறு செய்யலாமா என்று தெரியவில்லை. இருப்பினும் இப்பொழுதெல்லாம், கிருத்துவம் நவீனப்படுத்தி விட்டப்படியால், இம்முறையும் கையாளப்படுகிறது போலும்! அதன்பின் இருவரும் செல்போனில் பேசத் துவங்கினர். பிரார்த்தனையில் இறங்கி, போதனையில் சென்று, பிறகு பாதிப்பினால், காதல் பிறந்து விட்டது போலும்! அப்போது அந்த இளம்பெண் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதையும், கணவர் தன்னை விட்டு பிரிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரிந்து வாழும் பெண்கள் இவ்வாறு மாட்டிக் கொள்கிறார்களா அல்லது பாஸ்டர்கள் அத்தகையோருக்கு வலைவீசுகிறார்களா என்று தெரியவில்லை. பிரகாஷும் அந்த இளம்பெண்ணிற்கு ஆறுதல் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். மனைவி இதையெல்லாம் கண்டுகொள்லவில்லை போலும். இந்த சந்திப்பு அவர்களுக்குள் கள்ளக்காதலை வளர்த்தது. என்ன இப்படி சோரம் போவதை கர்த்தர் கண்டிக்க மாட்டாரா என்று அந்த பெண்ணுக்கு ஏன் தோனறவில்லை? அது பல மாதங்களாக தொடர்ந்துள்ளது.

குலசேகரம் சி.எஸ்.ஐ.சர்ச் - பாடுதல்

பிரகாஷ் கல்யாணமாகி காதல் என்றால், போட்டிக்கு திருமணமான சந்திரன்: தினமும் பலமணி நேரம் செல்போனில் பேசும் அந்த பெண், கடந்த ஒரு வாரமாக பிரகாஷிடம் செல்போனில் பேசுவதை நிறுத்தி கொண்டார். இதனால், மனம் வெதும்பிய பிரகாஷ், அந்த பெண்ணின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தார். இதில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை உறுதி செய்த பிரகாஷ், அந்த நபரின் முகவரியையும் கண்டுபிடித்தார். பாஸ்டர் துப்பறிவதிலும் நிபுணர் போலும்! அவர் திட்டுவிளை பகுதியை சேர்ந்த சந்திரன் (40 பெயர் மாற்றம்) என்பது தெரியவந்தது. சந்திரனுக்கு திருமணமாகி 13, 12 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் மனைவி உயிரிழந்துள்ளார். அதனால், சந்திரன் தைரியமாக ஜோடி தேடி புறப்பட்டு விட்டார் போலும்! மேலும், சந்திரன் கடந்த மூன்றாண்டு காலமாக குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு பகுதியில் ஜெபக்கூட்டம் ஒன்றில் போதகராகவும் இருந்து வருகிறார். வெளியூரில் நடந்த ஜெபக்கூட்டம் ஒன்றில் பாடகியாக வந்த அந்த இளம்பெண்ணிற்கும், போதகர் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், அந்த பெண்ணிற்கும், பிரகாஷுக்கும் இடையே பிரிவு ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இதனால், பிரகாஷுக்கு சந்திரன் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

குலசேகரம் செயின்ட் அகஸ்டின் .சர்ச் - பாடுதல்

பாஸ்டர்களின் போட்டிக்காதல், நேரிடையான மோதலில் முடிந்தது: தனக்குப் போட்டியாக, இன்னொரு பாஸ்டரா என்று கொதித்த பிரகாஷ், அதே நிலையில் 12-02-2016 காலை பிணந்தோடு பகுதியில் உள்ள சந்திரனின் ஜெபக்கூட்டத்திற்கு சென்றுள்ளார். கூட்டம் நிறைவடைந்ததும் சந்திரனிடம் சென்ற பிரகாஷ், தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். இதனால், சந்திரன் தான் தங்கியுள்ள அறைக்கு பிரகாஷை அழைத்து சென்றார். “கன்பெஸன்” இப்படித்தான் செய்வார்கள் போலும்! அங்கு பிரகாஷ் எப்படி அவளுடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டது, இருவரும் அந்நியோந்நியமாக பழி வருகிறோம் என்றெல்லாம் விவரித்தார். தன் கள்ளக்காதலியுடன் உள்ள தொடர்பை சந்திரன் துண்டித்து கொள்ள வேண்டும்; அவளில்லாமல் தான் இல்லை எனவும் கூறி அழுதுள்ளார். ஆனால், சந்திரனும் இதே பல்லவியை பாடியுள்ளார். தானும் அவ்வளுடன் அவ்வாறே இருப்பதாகவும், அதனால், அவளை விட முடியாது என்று கூறியிருக்கிறார். அடடா, பரிசுத்த ஆவி இப்படியா இருவரையும் பாடு படுத்தும்? இருவருக்கும் உள்ள மனைவிகளை அந்த ஆவி ஏன் உஷார் செய்யவில்லை? பிரகாஷின் மனைவிதான் உயிரோடு இருக்கிறாள், ஆனால், சந்திரன் மனைவி இறந்து விட்டாளே? ஆவி, ஆவியோடு சுலபமாக பேசியிருக்கலாமே? எப்படியோ, பாஸ்டர்கள் பேச-பேச, இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

திருமணமான பாஸ்டர்கள் கள்ளக்காதலிக்காக சண்டையில் இறங்கியது: பிரகாஷ் தன் கள்ளக்காதலியை கேரள மாநிலம் அழைத்து செல்ல இருப்பதாக கூறியுள்ளார். சந்திரனுக்கு கொதிப்பு அதிகமாகியது. இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த சந்திரன் பிரகாஷை அடித்து உதைத்துள்ளார். இருவரும் கட்டிப் பிரண்டனர். இதனால் பிரகாஷ் தன்னிடம் இருந்த கத்தியால் சந்திரனை குத்திவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். கத்தி வைத்துக் கொள்ளும் அளவுக்கு பாஸ்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது போலும். “பூமியில் சமாதானத்தை கொண்டுவர வந்துள்ளதாக நினைக்க வேண்டாம், பட்டயத்தை எடுத்து வந்துள்ளேன்”, என்று பைபிள் சொல்கிறதாம். அதனை நம்பிய பாஸ்டரும் பட்டயத்தை ஏந்தி விட்டார் போலும்! அதனால், சமாதானம் போய் சண்டை ஆரம்பித்து விட்டது.

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

பாஸ்டர்களின் சண்டையை பொதுமக்கள் அடித்து நிறுத்தியது: சண்டை போட்டுக் கொண்டிருந்த பாஸ்டர்களைப் பார்த்து கூட்டம் கூடியது. கத்தியோடு மோதிக் கொண்டதால், பொறுமையாக கவனித்து சந்திரனை வளைத்துப் பிடித்தனர். அதற்குள் அங்கு கூடியிருந்த மற்றவர்களும், பிரகாஷை சுற்றிவளைத்து பிடித்து நையப் புடைத்தனர். அடப்பாவமே, பாஸ்டர்கள் இப்படி தர்ம-அடிகளையும் பெற வேண்டுமா? இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடம் வந்து கத்திகுத்தில் காயமடைந்த சந்திரனை குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், பிரகாஷை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அடடா போலீஸார் அப்பகுதியில் பாஸ்டர்களுக்கு என்னமாக உதவி செய்கிறார்கள்? சட்டப்படி வழக்கு பதிவு செய்தல், முதலியவற்றையெல்லாம் விட்டு விட்டு, இத்தகைய சேவைகளில் இறங்கிவிட்டார்களே? நன்காக கவனிக்கப்படுவார்கள் போலிருக்கிறது.

போதகர்கள் மோதல் - காத்லிக்காக பிப்ரவரி 2016

சண்டைக்குப் பிறகு சமாதானத்தில் இறங்கிய பாஸ்டர்கள்: என்னது, நமது விவகாரம் இப்படி நாறிவிட்டதே என்று பாஸ்டர்கள் நினைத்தார்கள் போலும். பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக போவதாக கூறியதை அடுத்து போலீசார் வழக்குபதிவு செய்யாமல் விட்டனர். ஓஹோ, விசயம் இங்குதான் வெளிப்படுகிறது போலும்! கத்தி எடுத்துக் குத்திய பின், போலீஸார் வந்த பிறகு தான், சமாதான எண்ணம் வந்தது போலும்! தகவல் அறிந்து குலசேகரம் போலீஸ் ஸ்டேஷன் வந்த பிரகாஷின் மனைவி, கணவனை தன்னுடன் அழைத்து சென்றார். அப்படியென்றால், பிரகாஷின் மனைவிக்கு, தன் கணவன் எப்படி போலீஸ் ஷ்டேசனில் உள்ளார் என்று தெரியும்? ஆஸ்பத்திரிலேயே பார்த்து அழைத்துச் சென்றிருக்கலாமே? கர்த்தருக்குத் தான் தெரியும் போலிருக்கிறது! எப்படியோ, செய்திகளும் அதோடு நின்று விட்டது போலும்! சரி, அந்த கள்ளக்காதலி எங்கு போனாளோ? “மிஸ்டு கால்” ஏதாவது வருமா, வராதா?

© வேதபிரகாஷ்

15-02-12016

குலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா?

பிப்ரவரி 15, 2016

குலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா?

Kulasekharam S of Pechiparai, N of Kulachel

குலசேகரம் கிருத்துவ அறுவடை போராட்ட பூமி: குலசேகரம் கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, மார்த்தாண்டத்திற்குப் பிறகு, ஒரு முக்கியமான வியாபார நகரமாகும். இதைச் சுற்றி பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி, தக்களை, கொளச்சல், மார்த்தாண்டம் என்று பல முக்கிய நகரங்கள் உள்ளன. இங்கு வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் உள்ளது. ரப்பர் தோட்டங்கள் அதிகமாகவுள்ளதால், அதில் முதலீடு செய்துள்ளவர்களின் நலன்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் மற்றும் பங்கீட்டுக் காரகள். இங்கு கத்தோலிக்க, புரொடெஸ்டென்ட், பெந்தகோஸ்தே என்று பலதரப்பட்ட டினாமினேஷன் சர்ச்சுகள் அறுவடைகளில் ஈடுபட்டுள்ளன. இதனால், ஜெபகூட்டம் என்ற பெயரில், இக்குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இங்குள்ள சர்ச்சுகளுக்குடையே பல விவகாரங்களில் சண்டை-சச்சரவு இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து, சிறுவர்-சிறுமிகளைக் கடத்திக் கொண்டு வந்து, அனாதை இல்லங்கள் நடத்தும் சாக்கில் பிடோபைல்-செக்ஸ் குற்றங்களில் பாதிரியார்கள் அதிகமாகவே ஈடுபட்டு வந்துள்ளனர். போதாகுறைக்கு, ஜெபகூட்டங்களில் பெண்களைக் கூட்டி வந்து பேச வைப்பது, பாட வைப்பது போன்ற  நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. எல்லைக்கருகில் இருப்பதினால், இங்கிருப்பவர்கள் கேரளாவுக்குச் சென்று மறைந்து கொள்வதும், அங்கிருப்பவர்கள், இங்கு வந்து மறைந்து வாழ்வதும் சகஜமாகவே இருக்கின்றன. சர்ச்சுகளுக்குள் பிரச்சினைகள் என்றால், மதமாற்றத்தில் இவை போட்டிப் போட்டுக் கொண்டு ஈடுபடுவதால், இந்துக்களோடும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

 சர்ச் விழா மோதல் - ஜனவரி 2016

ஜெபக்கூட்டங்கள் நடத்துவதில் போட்டி, அத்துமீறல்கள் முதலியன (07-02-2016): குலசேகரம் அருகே அண்டூரில் மத வழிபாடு செய்வதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை 07-02-2016 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்[1]. அண்டூர் புல்லை பகுதியில் ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு அப்பகுதியிலுள்ள மற்றொரு மதப்பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குலசேகரம் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீஸார் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர். முறையான அனுமதி பெற்று ஜெபக்கூட்டத்தை நடத்துமாறு ஜெபக்கூட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் கூறினர்[2].

மார்த்தாண்டம் பிரச்சினை - நியூஸ்.7. போட்டோ

மார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ

விழா நடத்துவதில் இரு கிருத்துவக் குழுக்களுக்குள் போட்டி, சண்டை, சச்சரவு: திருவட்டார் அருகே கோஷ்டிமோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இரு கிருத்துவப் போட்டிக் குழுக்களில் மோதல் உண்டானது என்பதை ஊடகம் அப்படி நாஜுக்காகச் சொல்லியுள்ளது. நாகர்கோவில் அருகே திருவட்டார் ஆற்றூர் பள்ளிகுழிவிளை பகுதியில் சர்ச் மற்றும் காவு உள்ளது[3]. இங்கு விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாளாக பிரச்னை இருந்து வருவதாக தெரிகிறது. ஆமாம், விழா, கொண்டாட்டம் என்றாலே, பணம், பெண்கள், பாட்டு, ஆட்டம் எல்லாமே இருக்கும் அல்லவா? இந்நிலையில் ஒரு பிரிவினர் பொங்கல் விழா நடத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மண் நிரப்பியதோடு, செங்கற்கள் இறங்கியும் வைத்துள்ளனர்[4]. “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற வாடிகனின் திட்டப்படி இப்படியெல்லாம் பண்டிகைகள் கொண்டாடி, கூட்டம் சேர்த்து வரும் பென்கள்-ஆண்கள் முதலியோரை வளைத்துப் போடுகின்றனர்.

 குலசேகரம் சர்ச்சுகள்

விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம்(ஜனவரி 2016)[5]: இன்னொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் பணியை தடுத்து நிறுத்தினர். இன்னொரு பிரிவினர் பிரச்னைக்குரிய இடத்தில் தங்களது பகுதிக்கான எல்லையை சரி செய்யத் தொடங்கினர். எந்த பணியும் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சர்ச்சின் உதவி போதகர் அகினாஸ் (34), ஜாஸ்வின் (22), லிகோ (22) காயம் அடைந்தனர். இதனிடையே நேற்று இரவு திடீரென ஏராளமானோர் சர்ச் முன்பு திரண்டனர். நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்து என்று கோரி கோஷம் எழுப்பினர். கல், மண் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்றும் கூறினர். போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சென்று சமாதானப்படுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பிரச்னைக்குரிய இடத்தில் குவிக்கப்பட்டுள்ள கல், மணல் அகற்றப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்[6].

குலசேகரம் சர்ச் - ஹீலிங் அதிசய நிகழ்ச்சி

பளுகல் காவல் சரக பகுதியில் பெந்தெகோஸ்தெ சபை மதில் சுவரை இடித்து சேதப்படுத்தியதாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு (நவம்பர் 2014)[7]: குலசேகரம் அருகேயுள்ள மலவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வில்சன் மகன் ராப்சன் (40). இவர் பளுகல் அருகே தேவிகோடு பகுதியில் ஆதிபெந்தேகொஸ்தெ சபையை நிறுவி, அதில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த ர. ஜாண்லிவிங்ஸ்டன் (55), ஆடோட்டுகோணம் ச. டைட்டஸ் (55), பொ. சுந்தரதாஸ் என்ற பிரான்சீஸ் (45), தோலடி ரா. ராபின்சன் (46), ராமவர்மன்சிறை நே. ஷாஜி (40), காரக்கோணம் பா. அருண்குமார் (24), மேல்பாலை இ. சந்தோஷ் (23), தோலடி சோ. ஜோஸ் (35), ஜேசிபி எந்திர உரிமையாளர் கண்ணுமாமூடு தே. அனிஷ் (23), ஆடோட்டுகோணம் தங்கராஜ், டெ. ஷைஜு (23) உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலையில் ஜேசிபி எந்திரத்துடன் பெந்தெகோஸ்தெ சபைக்கு சென்று, அங்கிருந்த மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம். இது குறித்து தட்டிக்கேட்ட சபை ஊழியர்களை மிரட்டினராம். இது குறித்து போதகர் ராப்சன் அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[8].

Sexy christianity - pastor sex India.3

ஜெபத்தில் பாட்டில் ஈடுபட்ட ஆண்-பெண் ஈர்க்க்கப்பட்டு காதலிக்க ஆரம்பித்தல்: இப்படி போதகர்கள், பாஸ்டர்கள் சண்டை போட்டு வரும் நிலையில், ஒரு பெண்ணிற்கு இரண்டு மதபோதகர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குலசேகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை, பெரும்பழதுார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (35 பெயர் மாற்றம்) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 மற்றும் 7வயதுகளில் இரண்ட பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர், அந்த பகுதியில் உள்ள ஜெபக்கூட்டம் ஒன்றிற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அதன் பின் உடல்நலம் பெற்றதாக கூறப்படுகிறது. உடனே இந்துவான அவர் கிருத்துவராக மாறிவிட்டாராம்! அதன் பின் மதம் மாறிய அவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சாட்சி சொல்வதுடன் வீட்டில் பிரார்த்தனை கூட்டமும் நடத்தி வந்துள்ளார். அந்த அளவுக்கு பரிசுத்த ஆவி அவர் மீதேறி வேலை செய்து வருகிறது போலும்! கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாகர்கோவிலில் நடந்த ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் இவர் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் மனம் கவரும் குரலில் பாடல்கள் பாடியுள்ளார். இதனால் பிரகாஷுக்கு அந்த இளம்பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதுபோல, பிரகாஷின் சாட்சியுடன் கூடிய பிரசங்கம் அந்த இளம்பெண்ணையும் கவர்ந்து விட்டது[10].

© வேதபிரகாஷ்

15-02-12016

[1] தினமணி, குலசேகரம் அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு: மறியல், By குலசேகரம், First Published : 08 February 2016 12:50 AM IST.

[2]http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2016/02/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/article3266127.ece

[3] குமரி முரசு, விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம், 05-01-2016.2.20:13 pm.

[4] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=86187

[5] தினகரன், விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம், ஜனவரி.7, 2016, 07.06 pm.

[6]http://m.dailyhunt.in/news/india/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-epaper-karan/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-newsid-48117867

[7] தினமணி, பளுகல் அருகே சர்ச் மதில் சுவர் இடிப்பு: 11 பேர் மீது வழக்கு, By களியக்காவிளை, First Published : 06 November 2014 12:29 AM IST.

[8]http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2014/11/06/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/article2509586.ece

[9] குமரி.ஆன்.லைன், கள்ளக்காதலிக்காக 2 போதகர்கள் பயங்கர மோதல் : குலசேகரம் அருகே பரபரப்பு சம்பவம், சனி 13, பிப்ரவரி 2016 5:23:48 PM (IST).

[10] http://kumarionline.com/view/31_110932/20160213172348.html

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்

மார்ச் 20, 2015

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்

Franklin christian priest murders March 2015.DM

Franklin christian priest murders March 2015.DM

தனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதுடன், தனது 2-வது திருமணத்திற்கும் இடையூறாக, கள்ளக்காதல் விவகாரத்தில் போட்டியாக இருந்த கல்லுாரி மாணவரை கொலை செய்த வழக்கில், மதபோதகர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளிவந்துள்ள செய்திகள் வழக்கம்போல உள்ளதேயன்றி, அதிலுள்ள தீவிரமான பிரச்சினைகளைப் பற்றி யாரும் அலசுவதாகத் தெரியவில்லை. வழக்கம் போல கொலைக்குற்றத்தில் சிக்கியுள்ளவர்களின் மத அடையாளங்களை மறைக்கவும், தமிழ் ஊடகங்கள் முயன்றுள்ளன. இதில் கொலை செய்யப்பட்டுள்ள மாணவன், வேன் டிரைவர் கிருத்துவர்கள் தான். சர்ச்சுகளில் பகுதிநேர ஊழியத்தில் கிருத்துவர் அல்லாதவர் ஈடுபடமுடியாது. டிரைவரும் கிறிஸ்தவப் பெயரை சும்மா வைத்துக் கொள்ளமுடியாது. இனி அந்த மூன்று 21வயதிற்கு கீழானவர்களின் அடையாளம் குறிப்பிடப்படவில்லை.

Franklin christian priest murders March 2015

Franklin christian priest murders March 2015

அழுகிய நிலையில் வாய்க்காலில் கிடந்த பிணம்: ஈரோடு மாவட்டம், கோபி, பங்களாப்புதுார் சாலையில், தடப்பள்ளி வாய்க்கால் அருகே, சந்தனத்துறை என்ற இடத்தில், கடந்த, 8ம் தேதி, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல், அழுகிய நிலையில் கிடந்தது. தனை கோபி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[1].  அருளாளனின் உடற்கூறு ஆய்வில் விஷத்தினால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், டி.என்.பாளையம், கொங்கர்பாளையம் அருகே, திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ராஜன் மகன் அருளாளன், 25, என்பவர், கொலையானதை உறுதி செய்தனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலையுண்ட அருளாளனின் மொபைல் போனை வைத்து துப்பு துலக்கினர். அருளாளனின் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். நீச்சல் நன்கு தெரியும் என்பதால் அவர் வாய்க்காலில் விழுந்து இறந்திருக்க முடியாது என்று போலீசார் கருதினார்கள். போலீசார் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால்

மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால்

அருளாளனும் கிருத்துவர் தாம், மதஊழியர் தாம்: கொலைசெய்யப்பட்ட மாணவனின் பெயர் அருளாளன். அவர், கோபி அரசு கலைக் கல்லுாரியில் எம்.ஏ., முதலாமாண்டு படித்து கொண்டே, பங்களாப்புதுாரில், விவேகானந்தா டியூசன் சென்டரில், டியூசன் எடுத்து வந்து உள்ளார். டி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாலையில் ஆங்கில மொழியும் கற்பித்து வந்தார். அதுமட்டுமின்றி கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பகுதிநேர ஊழியராகவும் வேலை செய்துவந்தார்[2]. அதாவது அவர் கிறிஸ்தவர் என்று தெரிகிறது, இருப்பினும் தமிழ் ஊடகங்கள் அதைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளன. செக்யூலரிஸ போதையில் அவ்வாறு மறைத்தது, அப்பட்டமாகத்தான் தெரிகிறது.

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்.2

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்.2

பாஸ்டர் குடும்பத்தாருடன் பழகிய ஊழியன் அருளாளன்: கோபிசெட்டிபாளையம் அண்ணாவீதியை சேர்ந்தவர் பாஸ்டர் பிராங்கிளின்பால் (37). இவர் கோபி மற்றும் கொங்கர்பாளையத்தில் உள்ள சியோன் முதலிய கிறிஸ்தவ ஆலயங்களில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுரி என்கிற மனைவியும், கார்த்திக்பால் என்கிற மகனும் உள்ளனர். அப்போது, கோபி மற்றும் பாஸ்டர் பிராங்கிளின் பால், 37, என்பவருடன் அருளாளனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன. சரி, மணமாகி, ஒரு மகனும் உள்ள ஒரு கிறிஸ்த பெண் எப்படி, இன்னொரு ஆணுடன் பழகலாம் என்பது பற்றி விளக்கவில்லை. கணவன் – மனைவி பந்தத்தைதாண்டி, தொடர்ந்து கிருத்துவர்கள் எப்படி இத்தகைய கள்ள-பாலியல் உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள் என்று சர்ச்சோ, மற்ற கிருத்துவ பாஸ்டர்களோ, பிஷப்புகளோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அருளாளனின் பெற்றோர், கௌரி மற்றும் பிராங்க்ளினின் பெற்றோர் எப்படி சம்மதித்தார்கள் என்று புரியவில்லை. மாறாக, ஊடகங்கள், “திருச்சபைக்கு வந்து சென்றதால், அருளாளன், மதபோதகர் பிராங்கிளின் பால் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பழகினார்[3]. அப்போது அருளாளனுக்கும், கவுரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது[4]. சில மாதங்களுக்கு முன், திருச்சபை பணியாக வெளியூர் சென்றபோது, அவரது மனைவியுடன், அருளாளன் உல்லாசமாக இருந்ததை அறிந்து, பிராங்கிளின்பால் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவருக்கும், கவுரிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. தவிர, பிராங்கிளின் பாலின் மனைவி, அவரை பிரிந்து கோவைக்கு சென்று விட்டார்”, என்று முடித்துள்ளனர்.

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்

பேபிராணியை காதலித்த அருளாளனும், பிராங்கிளினும்: இந்நிலையில், கொங்கர்பாளையத்தை சேர்ந்த பேபிராணி, 23, என்ற பெண்ணுடன், பிராங்கிளின் பாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது[5]. மதபோதகர் விரும்பிய பெண்ணை, அருளாளனும் விரும்பியது, பிராங்கிளின் பாலுக்கு தெரியவந்தது. இதை அறிந்த பிராங்கிளின்பால் தனது மனைவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை காதலிக்கிறாயா? என்று ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவர் கோபத்தை வெளிக்காட்டாமல் அருளாளனுடன் பழகி வந்தார், என்கிறது ஒரு ஊடகம், அதாவது, தெரிந்தே அமைதியாக இருந்தார் என்றால், விசயம் என்ன சொல்லவில்லை. இன்னொரு ஊடகமோ, “இதற்கிடையே அருளாளனின் காதலிக்கும், பிராங்கிளின்பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் பிராங்கிளின்பால் தன் மனைவியிடம் விவகாரத்து பெற்ற பிறகு காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்[6] என்கிறது. இதற்கு அருளாளன் தடையாக இருப்பதாகவும் அவர் எண்ணினார். அதனால், அருளாளனை தீர்த்துக்கட்ட பிராங்கிளின் பால் முடிவு செய்தார்[7].

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

விஷம் கொடுத்து / பூச்சி மருந்து கொலை[8]: பங்களாப்புதுார் தனியார் கல்லுாரியில் படிக்கும் மூன்று மாணவர்களை, மதபோதகர் உதவிக்கு அழைத்து உள்ளார். இவர்களுக்கும் அருளாளனுக்கும் டியூஸனுக்கும் வருவதால் பழக்கம் இருக்கிறது. ஆனால், பிராங்கிளின் கூப்பிட்டதும், அதுவும் கொலைசெய்யக் கூப்பிட்டதும், அம்மாணவர்கள் எப்படி ஒப்புக்கொண்டனர் என்பது புதிராக இருக்கிறது. அம்மாணவர்கள் என்ன அந்த அளவுக்கு குற்றமனப்பாங்கு கொண்டவர்களா அல்லது மூளைசலவை செய்து கொல்லத்தூண்டிவிட்டார் என்றால், தூண்டுதல் (Motive) முறை என்ன என்படும் தெரியவில்லை. ஆனால், பிராங்கிளின் சொல்லியபடி, கோகோ கோலாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்தனர்.  அதை குடித்த அருளாளன் ‘‘என்ன இந்த குளிர்பானம் ஒரு மாதிரியாக உள்ளதே..’’ ரொம்ப நாள் ஆகிவிட்டதா.. என்று கேட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அருளாளன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

அருளாளன் உடலை வாய்க்காலில் போட்டது: பிறகு, “இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதபோதகர் பிராங்களின் பால் மகிழ்ச்சியுடன் அங்கு வேனுடன் வந்தார்”, என்று ஊடகங்கள் சொல்கின்றன. அப்படியென்றால், அம்முன்று மாணவர்கள் போன் செய்து அறிவித்தார்கள் என்றாகிறது. அதாவது, அந்த அளவுக்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்றாகிறது. மயங்கிய நிலையில் கிடந்த அருளாளனை, டெம்போ டிராவலர் மூலம் கடத்திச் சென்று, வழியில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதை கண்டு தண்ணீரில் போட்டால் தவறி விழுந்து இறந்திருப்பார் என போலீசார் கருதி விடுவார்கள் என எண்ணி அருளாளன் பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர். பிறகு யாருக்கும் எதுவும் தெரியாததுபோல் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். போலீஸ் பிடியில் சிக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் அவர்கள் வசமாக சிக்கிக்கொண்டனர்[9].

21 வயதுக்கு கீழான மூன்று பேர் கைது:  கொலைக்கு உடந்தையாக இருந்ததாக,

  1. டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி,
  2. மதபோதகர் பிராங்கிளின்பால் (37),
  3. அருண்குமார் (18),
  4. நாகராஜ் (18),
  5. கார்த்திகேயன் (20),

மற்றும் கல்லுாரி மாணவர்கள் மூவர் என, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்[10]. இங்கு “டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி” என்று ஒரு நாளிதழ்தான் குறிப்பிடுகிறது. விசாரணையில் அவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிகிறது[11]. மாணவர்கள் 3 பேரும் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்[12].இன்று 21 வயதுக்குக் கீழானவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது, அவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாமல் இருப்பது, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற விசயங்கள் இன்றைக்கு விவாதிக்கப் படுகின்றன. அதனால், கிருத்துவர்கள் இளைஞ்சர்களை இவ்வாறு ஈடுபடுத்தி பரிசோதனை செய்கிறார்களா அல்லது குற்றங்களை மறைக்க புதிய வழிகளை உருவாக்குகிறார்களா என்று தெரியவில்லை. சில நேரங்களில் மத-அடையாளங்கள் குறிப்ப்டப்படுவதில்லை, சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. இதெல்லாம் எதற்கு என்றும் நோக்கத்தக்கது.

வேதபிரகாஷ்

© 20-03-2015

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=136281

[2] http://www.dailythanthi.com/News/State/2015/03/17005209/The-missionary-who-killed-5-people-including-college.vpf

[3] தினமலர், மாணவர் கொலை வழக்கு மதபோதகர் உட்பட 5 பேர் கைது, மார்ச்.6, 2015.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/illicit-love-love-clash-murder-5-people-arrested-including-preacher-college-students-115031700016_2.html

[5]  தினத்தந்தி,  மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: கல்லூரி மாணவரை கொலை செய்த மதபோதகர் உள்பட 5 பேர் கைது , பதிவு செய்த நாள்:

செவ்வாய், மார்ச் 17,2015, 12:52 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 17,2015, 4:00 AM IST.

[6]  வெப்துனியா, கள்ளக்காதல், மோதல், கொலை: மதபோதகர், கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது, செவ்வாய், 17 மார்ச் 2015 (13:49 IST).

[7] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pastor-Among-Four-Held-for-Killing-Student/2015/03/17/article2717021.ece

[8]  தினகரன், குளிர்பானத்தில் விஷம் கலந்து கல்லூரி மாணவனை கொன்ற கிறிஸ்தவ மதபோதகர் கைது, 16-03-2015; 00:08:49; திங்கட்கிழமை.

[9] http://www.maalaimalar.com/2015/03/16165150/College-student-who-killed-a-p.html

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1207108

[11] http://www.business-standard.com/article/pti-stories/pastor-and-4-others-held-for-murder-115031600407_1.html

[12] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/illicit-love-love-clash-murder-5-people-arrested-including-preacher-college-students-115031700016_1.html