Archive for the ‘ஈரோடு’ Category

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்

மார்ச் 20, 2015

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்

Franklin christian priest murders March 2015.DM

Franklin christian priest murders March 2015.DM

தனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதுடன், தனது 2-வது திருமணத்திற்கும் இடையூறாக, கள்ளக்காதல் விவகாரத்தில் போட்டியாக இருந்த கல்லுாரி மாணவரை கொலை செய்த வழக்கில், மதபோதகர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளிவந்துள்ள செய்திகள் வழக்கம்போல உள்ளதேயன்றி, அதிலுள்ள தீவிரமான பிரச்சினைகளைப் பற்றி யாரும் அலசுவதாகத் தெரியவில்லை. வழக்கம் போல கொலைக்குற்றத்தில் சிக்கியுள்ளவர்களின் மத அடையாளங்களை மறைக்கவும், தமிழ் ஊடகங்கள் முயன்றுள்ளன. இதில் கொலை செய்யப்பட்டுள்ள மாணவன், வேன் டிரைவர் கிருத்துவர்கள் தான். சர்ச்சுகளில் பகுதிநேர ஊழியத்தில் கிருத்துவர் அல்லாதவர் ஈடுபடமுடியாது. டிரைவரும் கிறிஸ்தவப் பெயரை சும்மா வைத்துக் கொள்ளமுடியாது. இனி அந்த மூன்று 21வயதிற்கு கீழானவர்களின் அடையாளம் குறிப்பிடப்படவில்லை.

Franklin christian priest murders March 2015

Franklin christian priest murders March 2015

அழுகிய நிலையில் வாய்க்காலில் கிடந்த பிணம்: ஈரோடு மாவட்டம், கோபி, பங்களாப்புதுார் சாலையில், தடப்பள்ளி வாய்க்கால் அருகே, சந்தனத்துறை என்ற இடத்தில், கடந்த, 8ம் தேதி, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல், அழுகிய நிலையில் கிடந்தது. தனை கோபி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[1].  அருளாளனின் உடற்கூறு ஆய்வில் விஷத்தினால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், டி.என்.பாளையம், கொங்கர்பாளையம் அருகே, திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ராஜன் மகன் அருளாளன், 25, என்பவர், கொலையானதை உறுதி செய்தனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலையுண்ட அருளாளனின் மொபைல் போனை வைத்து துப்பு துலக்கினர். அருளாளனின் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். நீச்சல் நன்கு தெரியும் என்பதால் அவர் வாய்க்காலில் விழுந்து இறந்திருக்க முடியாது என்று போலீசார் கருதினார்கள். போலீசார் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால்

மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால்

அருளாளனும் கிருத்துவர் தாம், மதஊழியர் தாம்: கொலைசெய்யப்பட்ட மாணவனின் பெயர் அருளாளன். அவர், கோபி அரசு கலைக் கல்லுாரியில் எம்.ஏ., முதலாமாண்டு படித்து கொண்டே, பங்களாப்புதுாரில், விவேகானந்தா டியூசன் சென்டரில், டியூசன் எடுத்து வந்து உள்ளார். டி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாலையில் ஆங்கில மொழியும் கற்பித்து வந்தார். அதுமட்டுமின்றி கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பகுதிநேர ஊழியராகவும் வேலை செய்துவந்தார்[2]. அதாவது அவர் கிறிஸ்தவர் என்று தெரிகிறது, இருப்பினும் தமிழ் ஊடகங்கள் அதைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளன. செக்யூலரிஸ போதையில் அவ்வாறு மறைத்தது, அப்பட்டமாகத்தான் தெரிகிறது.

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்.2

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்.2

பாஸ்டர் குடும்பத்தாருடன் பழகிய ஊழியன் அருளாளன்: கோபிசெட்டிபாளையம் அண்ணாவீதியை சேர்ந்தவர் பாஸ்டர் பிராங்கிளின்பால் (37). இவர் கோபி மற்றும் கொங்கர்பாளையத்தில் உள்ள சியோன் முதலிய கிறிஸ்தவ ஆலயங்களில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுரி என்கிற மனைவியும், கார்த்திக்பால் என்கிற மகனும் உள்ளனர். அப்போது, கோபி மற்றும் பாஸ்டர் பிராங்கிளின் பால், 37, என்பவருடன் அருளாளனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன. சரி, மணமாகி, ஒரு மகனும் உள்ள ஒரு கிறிஸ்த பெண் எப்படி, இன்னொரு ஆணுடன் பழகலாம் என்பது பற்றி விளக்கவில்லை. கணவன் – மனைவி பந்தத்தைதாண்டி, தொடர்ந்து கிருத்துவர்கள் எப்படி இத்தகைய கள்ள-பாலியல் உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள் என்று சர்ச்சோ, மற்ற கிருத்துவ பாஸ்டர்களோ, பிஷப்புகளோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அருளாளனின் பெற்றோர், கௌரி மற்றும் பிராங்க்ளினின் பெற்றோர் எப்படி சம்மதித்தார்கள் என்று புரியவில்லை. மாறாக, ஊடகங்கள், “திருச்சபைக்கு வந்து சென்றதால், அருளாளன், மதபோதகர் பிராங்கிளின் பால் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பழகினார்[3]. அப்போது அருளாளனுக்கும், கவுரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது[4]. சில மாதங்களுக்கு முன், திருச்சபை பணியாக வெளியூர் சென்றபோது, அவரது மனைவியுடன், அருளாளன் உல்லாசமாக இருந்ததை அறிந்து, பிராங்கிளின்பால் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவருக்கும், கவுரிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. தவிர, பிராங்கிளின் பாலின் மனைவி, அவரை பிரிந்து கோவைக்கு சென்று விட்டார்”, என்று முடித்துள்ளனர்.

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்

பிராங்கிளின் கைது- கோபிசெட்டிப்பாளையம்

பேபிராணியை காதலித்த அருளாளனும், பிராங்கிளினும்: இந்நிலையில், கொங்கர்பாளையத்தை சேர்ந்த பேபிராணி, 23, என்ற பெண்ணுடன், பிராங்கிளின் பாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது[5]. மதபோதகர் விரும்பிய பெண்ணை, அருளாளனும் விரும்பியது, பிராங்கிளின் பாலுக்கு தெரியவந்தது. இதை அறிந்த பிராங்கிளின்பால் தனது மனைவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை காதலிக்கிறாயா? என்று ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவர் கோபத்தை வெளிக்காட்டாமல் அருளாளனுடன் பழகி வந்தார், என்கிறது ஒரு ஊடகம், அதாவது, தெரிந்தே அமைதியாக இருந்தார் என்றால், விசயம் என்ன சொல்லவில்லை. இன்னொரு ஊடகமோ, “இதற்கிடையே அருளாளனின் காதலிக்கும், பிராங்கிளின்பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் பிராங்கிளின்பால் தன் மனைவியிடம் விவகாரத்து பெற்ற பிறகு காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்[6] என்கிறது. இதற்கு அருளாளன் தடையாக இருப்பதாகவும் அவர் எண்ணினார். அதனால், அருளாளனை தீர்த்துக்கட்ட பிராங்கிளின் பால் முடிவு செய்தார்[7].

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்

விஷம் கொடுத்து / பூச்சி மருந்து கொலை[8]: பங்களாப்புதுார் தனியார் கல்லுாரியில் படிக்கும் மூன்று மாணவர்களை, மதபோதகர் உதவிக்கு அழைத்து உள்ளார். இவர்களுக்கும் அருளாளனுக்கும் டியூஸனுக்கும் வருவதால் பழக்கம் இருக்கிறது. ஆனால், பிராங்கிளின் கூப்பிட்டதும், அதுவும் கொலைசெய்யக் கூப்பிட்டதும், அம்மாணவர்கள் எப்படி ஒப்புக்கொண்டனர் என்பது புதிராக இருக்கிறது. அம்மாணவர்கள் என்ன அந்த அளவுக்கு குற்றமனப்பாங்கு கொண்டவர்களா அல்லது மூளைசலவை செய்து கொல்லத்தூண்டிவிட்டார் என்றால், தூண்டுதல் (Motive) முறை என்ன என்படும் தெரியவில்லை. ஆனால், பிராங்கிளின் சொல்லியபடி, கோகோ கோலாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்தனர்.  அதை குடித்த அருளாளன் ‘‘என்ன இந்த குளிர்பானம் ஒரு மாதிரியாக உள்ளதே..’’ ரொம்ப நாள் ஆகிவிட்டதா.. என்று கேட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அருளாளன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

கிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்

அருளாளன் உடலை வாய்க்காலில் போட்டது: பிறகு, “இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதபோதகர் பிராங்களின் பால் மகிழ்ச்சியுடன் அங்கு வேனுடன் வந்தார்”, என்று ஊடகங்கள் சொல்கின்றன. அப்படியென்றால், அம்முன்று மாணவர்கள் போன் செய்து அறிவித்தார்கள் என்றாகிறது. அதாவது, அந்த அளவுக்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்றாகிறது. மயங்கிய நிலையில் கிடந்த அருளாளனை, டெம்போ டிராவலர் மூலம் கடத்திச் சென்று, வழியில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதை கண்டு தண்ணீரில் போட்டால் தவறி விழுந்து இறந்திருப்பார் என போலீசார் கருதி விடுவார்கள் என எண்ணி அருளாளன் பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர். பிறகு யாருக்கும் எதுவும் தெரியாததுபோல் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். போலீஸ் பிடியில் சிக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் அவர்கள் வசமாக சிக்கிக்கொண்டனர்[9].

21 வயதுக்கு கீழான மூன்று பேர் கைது:  கொலைக்கு உடந்தையாக இருந்ததாக,

  1. டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி,
  2. மதபோதகர் பிராங்கிளின்பால் (37),
  3. அருண்குமார் (18),
  4. நாகராஜ் (18),
  5. கார்த்திகேயன் (20),

மற்றும் கல்லுாரி மாணவர்கள் மூவர் என, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்[10]. இங்கு “டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி” என்று ஒரு நாளிதழ்தான் குறிப்பிடுகிறது. விசாரணையில் அவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிகிறது[11]. மாணவர்கள் 3 பேரும் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்[12].இன்று 21 வயதுக்குக் கீழானவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது, அவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாமல் இருப்பது, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற விசயங்கள் இன்றைக்கு விவாதிக்கப் படுகின்றன. அதனால், கிருத்துவர்கள் இளைஞ்சர்களை இவ்வாறு ஈடுபடுத்தி பரிசோதனை செய்கிறார்களா அல்லது குற்றங்களை மறைக்க புதிய வழிகளை உருவாக்குகிறார்களா என்று தெரியவில்லை. சில நேரங்களில் மத-அடையாளங்கள் குறிப்ப்டப்படுவதில்லை, சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. இதெல்லாம் எதற்கு என்றும் நோக்கத்தக்கது.

வேதபிரகாஷ்

© 20-03-2015

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=136281

[2] http://www.dailythanthi.com/News/State/2015/03/17005209/The-missionary-who-killed-5-people-including-college.vpf

[3] தினமலர், மாணவர் கொலை வழக்கு மதபோதகர் உட்பட 5 பேர் கைது, மார்ச்.6, 2015.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/illicit-love-love-clash-murder-5-people-arrested-including-preacher-college-students-115031700016_2.html

[5]  தினத்தந்தி,  மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: கல்லூரி மாணவரை கொலை செய்த மதபோதகர் உள்பட 5 பேர் கைது , பதிவு செய்த நாள்:

செவ்வாய், மார்ச் 17,2015, 12:52 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 17,2015, 4:00 AM IST.

[6]  வெப்துனியா, கள்ளக்காதல், மோதல், கொலை: மதபோதகர், கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது, செவ்வாய், 17 மார்ச் 2015 (13:49 IST).

[7] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pastor-Among-Four-Held-for-Killing-Student/2015/03/17/article2717021.ece

[8]  தினகரன், குளிர்பானத்தில் விஷம் கலந்து கல்லூரி மாணவனை கொன்ற கிறிஸ்தவ மதபோதகர் கைது, 16-03-2015; 00:08:49; திங்கட்கிழமை.

[9] http://www.maalaimalar.com/2015/03/16165150/College-student-who-killed-a-p.html

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1207108

[11] http://www.business-standard.com/article/pti-stories/pastor-and-4-others-held-for-murder-115031600407_1.html

[12] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/illicit-love-love-clash-murder-5-people-arrested-including-preacher-college-students-115031700016_1.html

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (2)?

ஒக்ரோபர் 22, 2013

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (2)?

Girl missing from Hasthampatti

அஸ்தம்பட்டியில் பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவர்களின் வழக்குகள், புகார்கள், சண்டைகள் எல்லாமே வருகின்றன. முதல் பதிவிற்குப் பிறகு[1] தொடர்கின்றது “அஸ்தம்பட்டி புராணம்”!

Police personnel warning footboard travellers in a private bus at Hasthampatti Roundtana in Salem

அரசுக்கு சொந்தமான நிலத்தை “புறம்போக்கு” என்ற சாக்கில் வளைத்துப் போட்டு கட்டிய சிஎஸ்ஐ சர்ச்சின் சுவர் இடிக்கப்பட்டது (ஜூன் 2013):. சிஎஸ்ஐ அஸ்தம்பட்டியில் மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு என்று ஒரு பள்ளி நடத்துவதற்காக அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. இதனால், சிஎஸ்ஐ மீது புகார் செய்யப்பட்டது. சேலம் தாசில்தார் சுரேஷ், சர்ச் அதிகாரிகளை நில ஆவணங்களைக் காட்டுமாறு ஆணையியட்டார். ஆனால், அவர்களால் தகுந்த ஆவணங்களைக் காட்ட முடியவில்லை. மேலுமனவை கோயம்புத்தூர் டையூசிஸில் உள்ளது, தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், அரசுக்கு சொந்தமான நிலத்தை “புறம்போக்கு” என்ற சாக்கில் வளைத்துப் போட்டு கட்டிய சிஎஸ்ஐ சர்ச்சின் சுவர் வருவாய்துறை அதிகாரிகளின் பார்வையில் இடிக்கப்பட்டது. உடனே கிருத்துவர்கள் இதனை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர்[2]. கிருத்துவர்கள் விசயம் என்றதும், அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர்.

பிஷப் மாணிக்கம் பிரார்த்தனை நடத்த வந்தபோது அனுமதிக்கப் படவில்லை 2012

பிஷப் மாணிக்கம் பிரார்த்தனை நடத்த வந்தபோது அனுமதிக்கப் படவில்லை 2012

ஓரினசேர்க்கைகிறிஸ்தவபாதிரிகைது (04-12-2004): சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மாணவரைக் கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியாரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த “பீடோபைல்கள்” பற்றியும் அதிகமாகவே பதிவு செய்துள்ளேன். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் கிறிஸ்தவ மிஷன் மையம் உள்ளது. இதன் இயக்குநராக பாதிரியார் “ஜெயராஜ் கிருஷ்ணன்” என்பவர் உள்ளார். கேடுகெட்டவர்களுக்கு இப்படியெல்லாம் பெயர்கள் வேறு! இந்த மையத்திற்குச் சொந்தமாக மாணவர் விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பாதிரியார் தன்னை மிரட்டியும், வற்புறுத்தியும் கடந்த 4 ஆண்டுகளாக ஓரினச் சேர்க்கை நடத்தி வருகிறார். மறுத்தால் உடலில் சூடு போட்டு கொடுமைப்படுத்துகிறார் என்று கூறியிருந்தார். இதையடுத்து பாதிரியார் ஜெயராஜ் கிருஷ்ணன், அவரது விடுதிக் காப்பாளர் மகாலிங்கம் மற்றும் பாதிரியாரின் உதவியாளர் அன்பு ஆகியோரிடம் போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் இறுதியில் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர். 3 பேரும் பின்னர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்[3]. இதற்கு பிறகு மறுபடி இவரே அல்லது இன்னொரு பாதிரி / பாஸ்டர் சிக்குவார், இதே முறை பின்பற்றப் படும்.

பிஷப் மாணிக்கம் துரை மீது அஸ்தம்பட்டியில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

பிஷப் மாணிக்கம் துரை மீது அஸ்தம்பட்டியில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

சேலம் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு தள்ளுமுள்ளு[4] (செப்டம்பர் 2009): சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள அடைக்கல நகரில் சிஎஸ்ஐ இம்மானுவேல் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் போதகராக ஜெயபாலன் இருந்து வந்தார். இவரை சில நாட்களுக்கு முன்பு கோவை திருமண்டல பேராயரின் பிரதிநிதி தாமஸ் கே. ஓமன் தர்மபுரிக்கு மாற்றி விட்டார், சர்ச்சுகளில் இடம் மாற்றம் என்பது பணம் கையாடல், செக்ஸ், கற்பழிப்பு போன்ற ஏடாகூடமான குற்றங்களை மறைக்கத்தான் என்று கடந்த ஆண்டு நிகழ்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் ஜெயபாலன் தர்மபுரிக்கு செல்லவில்லை. அட்ஹாவது இடமாற்றம் ஆணை வந்தாலும்,ஆங்கேதான் வேலை செய்வேன் என்று அடம் பிடித்தார் போலும்! இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த பர்னபாஸ், ஸ்டீபன் மற்றும் சிலர் இதுபற்றி ஜெயபாலனிடன் சென்று ஏன் இன்னும் தர்மபுரிக்கு செல்லவில்லை என கேட்டனர். அப்போது அவர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயபாலனும், அவரது ஆட்களும் சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையம் சென்று சிலர் மீது புகார் கொடுத்தனர். கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து இருந்த முக்கிய ஆவணங்களை சிலர் எடுத்து சென்று விட்டனர் என்றும் புகார் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசினார். பிறகு இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Hastham patti location map

இடமாற்றம் செய்யப் பட்ட போதகர் பிரார்த்தனை செய்தாராம் (செப்டம்பர் 2012): இந்த நிலையில் 09-2012 அன்று காலை சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் போதகர் ஜெயபாலன் வந்து சிறப்புரையாற்றினார். இதனால் சிலர் ஆத்திரம் அடைந்து உங்களைத்தான் தர்மபுரிக்கு மாற்றி விட்டார்களே  பிறகு ஏன் சிறப்புரையாற்றுகிறீர்கள் என கேட்டு அவரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர். பின்னர் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தள்ளிக்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, குணசேகரன் மற்றும் போலீசார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானம்செய்து வைத்தனர். பின்னர் கூட்டம் அமைதியாக நடந்தது. வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க கிறிஸ்தவ தேவாலயம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Complaints on-line in Salem City Police say

காணிக்கை வசூலுக்காக பாதிரிகள் சண்டை: இந்த சம்பவம் குறித்து பர்னபாஸ் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறியதாவது[5]: “போதகர் ஜெயபாலனும், அவரது ஆட்களும் ஆலயத்திற்கு வரும் வருமானத்தை எடுத்து கொள்கிறார்கள். இதை பொதுமக்கள் கேட்டனர். பின்னர் ஜெயபாலன் தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் தர்மபுரிக்கு செல்லாமல் இங்கேயே இருந்து ஆலயத்தை கைப்பற்ற பார்க்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரூ.50ஆயிரம் ரூ.60ஆயிரம் வரை பொதுமக்கள் காணிக்கையாக தருகிறார்கள். இந்த பணத்திற்கு கணக்கு ஏதும் இல்லை. நாங்கள் இதுபற்றி கேட்டால் எங்கள் மீது போலீசில் பொய் புகார் தருகிறார். சேலம் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் இனியும் தவறு நடக்க விடமாட்டோம். ஆலயத்தை காப்பாற்றி பழையபடி ஆராதனை செய்வோம்”, இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி இவர்கள் ஆர்டிஓ கோர்ட்டில் பேசி தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

21-10-2013


[2] The compound wall of a church near here was on Saturday partially demolished by revenue officials, triggering protests by people. Revenue officials said they demolished the wall of the Church of South India at Hasthampatty as it was constructed on ‘poramboke’ (government) land. However, church officials said the wall was constructed on land belonging to the church.  About 50 feet of the wall was demolished using an earth mover, but the operations were stopped following protests by people. In addition to a church, the CSI is running a school for the mentally challenged, teachers’ training school and a home for poor in the area. Officials led by Salem Tahsildhar Suresh demanded they be shown the land records, to which church authorities said they needed few days’ time as documents were at the Coimbatore diocesan office.

http://zeenews.india.com/news/tamil-nadu/compound-wall-of-church-partially-demolished_855330.html

[4] மாலை மலர், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2009, 6:26 PM IST

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (1)?

ஒக்ரோபர் 22, 2013

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (1)?

Hasthampatti church

தொடர்ந்து ஒரு குறிப்பிட்டப் பகுதியிலேயே, கிருத்துவர்கள் அதிகமாக குற்றங்களில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாகி விட்டது. அதிலும் செய்த குற்றங்களையே திரும்ப-திரும்ப செய்வது என்ற போக்கும் காணப்படுகிறது. இதனால், சட்டம், நீதி, நியாயம் முதலியவற்றிற்கு இவர்கள் சிறிதும் பயப்படுவதில்லை என்று தெரிகிறது. மேலும் அத்தகைய சட்ட மீறல்களுக்கு யார் ஊக்கம், ஆதரவு மற்றும் செய்விக்கும் கட்டளைகளைக் கொடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை[1]. இவ்விசயத்தில் “அஸ்தம்பட்டி” அடிக்கடி செய்திகளில், வழக்குகளில், சட்டமீறல்களில் வருவது நோக்கத்தக்கது. “அஸ்தினாபுரம்” எப்படி ஒரு பெரிய போருக்கு வழிவகுத்ததோ, அதுபோல “அஸ்தம்பட்டி” பல கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்களிடையே உள்ள சண்டைகளுக்குக் காரணமாக உள்ளது. ஏனெனில் இங்கு பல கிருத்துவக் குழுக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்து வருகின்றன என்றும் தெரிகிறது[2]. மாணிக்கம் துரை மற்றும் அஸ்தம்பட்டு சிஎஸ்ஐ-காரர்களுக்கு இடையே நடந்துள்ள / நடக்கும் வழக்குகளே அவர்களின் நில அகபரிப்பு, மோசடி முதலியவற்றை எடுத்துக் காட்டுகின்றன[3]. அஸ்தம்பட்டியிலிருந்து 18 வயதிற்கு கீழுள்ள இளம் பெண்கள் / சிறுமிகள் காணவில்லை என்று தேசிய குற்ற ஆவணம் கூறுகிறது[4]. ஜனவரி 2013ல் கூட சேலத்தில் ஒரு ஆசிரியரின் இத்தகைய திருவிளையாடல்கள் வெளிவந்தன[5].ஆகவே, இங்கு என்ன நடக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும்.

அஸ்தம்பட்டி சர்ச்சில் ஒரு மதபோதகர் உரையாற்றுகிறார்

அஸ்தம்பட்டி சர்ச்சில் ஒரு மதபோதகர் உரையாற்றுகிறார்

இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீதுபுகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம் (அக்டோபர் 2013): சமீபத்தில் இப்படியொரு தலைப்பில் ஒரு பதிவு செய்தேன்[6]. ஆனால், இதில் பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன. கார் செட்டுக்குத் தூகிச் சென்று சில்மிஷம் செய்தானா அல்லது கற்பழித்தானா என்பது தெரியவில்லை. ஊடகங்கள் கொஞம்-கொஞமாக அல்லது ஒரு நாளிதழ் போட்டதை அப்படியேதான்ம போட்டனவேயன்றி, நேரிலே சென்று பேசி கண்டு, விசாரித்து ஒன்றும் பிரமாதமாக செய்துஇவிட வில்லை. தில்லி, மும்பை போன்று எந்த பெண்ணிய வீராங்கனைகளும் எதிர்க்கவில்லை, போராட்டங்கள் நடத்தவில்லை. ஆங்கில செனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புலன்விசாரணை செய்து விடவில்லை. செய்திகளை உடக்கவில்லை, உங்கள் செனல் என்று வீரம் பேசவில்லை.

Manikandan-Rekha-complained about Christian teacher

கிருத்துவமத போதகர் மீதுபுகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம்  (அக்டோபர் 2013): பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. சேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 18-10-2013 காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் கார்-செட்டுக்கு அழைத்து சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது[7]. பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார். பிறகு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், வெள்ளிக்கிழமை மாலையிலேயே மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்[8]. வழக்கம் போல மாவட்ட சிறார் பாதுகாப்பு அதிகாரி தேவகி வந்து விசாரித்துச் சென்றார்[9]. அஸ்தம்பட்டி போலீஸார் பாலியல் குற்றங்களினின்று சிறார்களை காக்கும் சட்டம் 2012, பிரிவுகள் 8 மற்றும் 9 களின் கீழ் [Section 8 and 10 of the Protection of Children from Sexual Offences Act, 2012] வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இது ஏதோ சாதாரண விசயமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், கற்பழிப்புகளில் ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்[11]. வழக்கம் போல புகார்கள் கொடுக்கப் படுகின்றன. சில விசயங்களில் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. தில்லி-மும்பை போன்று, இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், என்னுடை தொகுப்பில் உள்ள கட்டுரைகள், நியூஸ் கட்டிங்கள் பார்க்கும் போது “அஸ்தம்பட்டி” அடிக்கடி தோன்றி கண்களைச் சிமிட்டுகின்றன. இதனால், உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.

© வேதபிரகாஷ்

21-10-2013


[1] விவரங்களுக்கு www.christianityindia.wordpress.com என்ற தளத்தில் என்னால் பதிவு செய்யப் பட்டுள்ள பல கட்டுரைகளைப் பார்க்கவும்.

[2] Schoen staff Sisters of Mary, 35/2A, Johnsonpet, Palanioppo Nagar, Hasthampatty, Salem – 636 007.

[3] Church Of South India Trust … vs The District Revenue Officer on 30 March, 2010 DATED: 30.03.2010; http://indiankanoon.org/doc/1228297/

[5] Invoking for the first time the stringent provisions of the Protection of Children from Sexual Offences Act, 2012, which came into force on November 14 last, the Salem City Police on Thursday arrested a 51-year old school teacher of the Salem Government School for Blind on various charges of sexual abuse and harassment of visually challenged girls, all aged between 6 and 8 studying in the school, here.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/more-sexual-abuse-cases-teacher-mason-held/article4271402.ece

[9] A Class VIII student was sexually assaulted by a church priest at a school in Hasthampatti here on Friday. The incident came to light after the girl complained to her mother after returning home in the evening. The mother lodged a complaint with the Hasthampatti police late Friday night. On Saturday, District Child Protection Officer Devaki conducted an inquiry. Ms. Devaki said the priest, Jeyaselan (64), was residing on the school premises. He took the girl to a car shed on the premises and allegedly assaulted her. Though the girl informed her teachers of the incident, no action was taken. Police registered a case under Section 8 and 10 of the Protection of Children from Sexual Offences Act, 2012.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/girl-sexually-assaulted-by-priest/article5253113.ece