Archive for the ‘இச்சை’ Category

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சி-தலித் என்றும் கூறி மிரட்டியது (2)

நவம்பர் 7, 2017

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சிதலித் என்றும் கூறி மிரட்டியது (2)

Pastor Didde Ebenezer,victim- modus operandi-TV9 video

2015ல் ஜாமீனில் வெளியே வந்து, தனது செக்ஸ்குற்றங்களை தொடர்ந்து செய்தது: தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தார். இதுகுறித்து ஜக்கையாபேட்டா கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன். ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார். அதாவது, இத்தகைய கற்பழிப்புகளுக்கு, அத்தகைய சட்டங்களும் துர்பிரயோகம் சேய்யப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளது போல காட்டிக் கொண்டதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்,’’ என்றார். மேற்கு கோதாவரி, எஸ்.பி எம். ரவி பிரகாஷ், அந்த பாஸ்டரை உடனடியாக கைது செய்து, அடைத்து வைக்கப் பட்டுள்ள நான்கு பெண்களை விடுவிக்க ஆணையிட்டார். இதனை, ராஜகுமாரி, மக்களிடம் தெரிவித்தார்[1]. உதவி கலெக்டரும் சம்பந்தப் பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்[2].

Pastor Didde Ebenezer, victim complains - many-TV9 video

மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொதுகூட்டத்தில் வெளிவந்த உண்மைகள்: நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொது விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், பெற்றோர், உறவினர் வந்து, போலீஸ், அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில், எபனேசர் செய்த செக்ஸ்-குற்றங்களை வெளிப்படையாக கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் என்று முறையிட்டனர். ஒரு தாய், தனது மகளின் வாழ்க்கை சீர்ழிந்தது என்று அழுது கொண்டே, ராஜகுமாரியின் கால்களில் விழுந்து முறையிட்டது, காண்பவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது[3]. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், எப்படி தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றினான் என்பதை விவரித்து, புகைப்படங்களையும் காட்டினாள்[4]. அதே போல இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், மற்றும் அவளது தாய், தமது சோகக் கதையினை தெரிவித்தனர்[5]. அவர்களது கூறிய விவரங்களிலிருந்து, அவன் எப்படி, மதபோதனை, பிரச்சாரம், பணம், அதிகாரம், ஆசைக் காட்டுதல், போன்றவற்றால் பெண்களை ஏமாற்றி, தனது காம இச்சைக்கு பலியாக்கிக் கொண்டுள்ளான் என்று தெரிந்தது.

Edde Ebenezer- woman-explains-how-she was cheated-3

இரட்டை வேடம் போட்ட செக்ஸ் குற்றவாளி: இதற்குள், அந்த பாஸ்டருக்கு ஆதரவாக உள்ளவர்கள், அவன் மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டப்படுகிறது, அவன் குற்றமற்றவன் என்று கோஷமிட்டது வேடிக்கையாக இருந்தது. அதாவது, அந்நிலையில் கூட தனது பணபலத்தினால், ஆட்களை வைத்து, அத்தகைய அழுத்தத்தை உண்டாக்குவதை அறிந்து கொள்ளலாம். ஆனால், தனது கிருத்துவ மண்டலம் மற்றுமல்லாது, அடுத்தவர் மண்டலத்து பெண்களையும் அவ்வாறு செக்ஸ்-புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியுள்ளான் என்று “ஏசியா நெட்” என்ற ஊடகம் கூறுகிறது[6]. அதாவது, இதனால், கிருத்துவர்களுக்குள்ளேயே பிரசினை வரும் போன்றுள்ள நிலையை எடுத்துக் காட்டுகிறது[7]. இந்த செக்ஸ்-குற்றவாளி பாஸ்டர், தான் HIV/AIDS போன்றவற்றிற்கு பாடு படுவதாக இணைதளத்தில் பிரலடனப் படுத்திக் கொண்டிருக்கிறான்[8].

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- Nirodh recovered

நிரோத் உபயோகப் படுத்தியது அதனால் போலும். இதையும் கடவுள் ஸொல்லிக் கொடுத்தாரா அல்லது பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரா என்று தெரியவில்லை. பல பெண்களைக் கற்பழித்து, வரும் இவன் இத்தகைய பிரச்சாரத்தையும் செய்து வந்தது, தமாசாகத்தான் இருக்கிறது.

Nude worship allowed in Christianity - Mail online

கிருத்துவத்தில் ஏன் நிர்வாண பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது?: ஆகவே, இந்த 21ம் நூற்றாண்டிலும், “நிர்வாண பிரார்த்தனை” எல்லாம், எப்படி கிருத்துவத்தில் அனுமதிக்கப் படுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். பாஸ்டர் ஆலன் பார்கர் [Pastor Allen Parker, the leader of White Tail Chapel in the town of Southampton, Virginia, USA], “முற்றும் துறந்த நிலை வேண்டுமானால், உடைகளையும் துறக்க வேண்டும்,” என்று விளக்குகிறார்[9]. கிருதுவைறையியலின் படி பார்த்தால் கூட, ஏசு நிர்வாணமாகத்தான் பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், அப்படியே நிர்வாணமாகத்தான் உயிர்த்தெழுந்து மேலே சென்றார், ஆகவே கடவுள் தவறு செய்தார் என்று சொல்லமுடியாது, என்று மேலும் விளக்கினார்[10]. ஆதாம்-ஏவாள் நிர்வாணமாகத்தான் இருந்தனர், தங்களுடைய நிர்வாணத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்படவில்லை, ஆனால், பிறகு உடை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக ராபர்ட் மற்றும் கட்டே என்பவர்கள் சொன்னதும் கவனிக்கத்தக்கது, “சமீபத்தில் திருமணமான சில தம்பதியர் இந்த நிர்வாண பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அவர்களுடைய குடும்பத்தினரும் உடைகளை விட ஊக்குவிக்கிறோம். இந்த தம்பதியர், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்புகின்றனர், கடவுளின் வர்த்தையை பேச விரும்புகின்றனர்”, [Several couples have recently been married in fully nude services, in which all members of both families are encouraged to shed their clothing before the couple take their vows. Robert and Katie Church were one couple to have a naked wedding at the White Tail Chapel, with Mr Church saying attendees were far more interested in ‘hearing the word of God and speaking the word of God’ than analysing the naked bodies on display] என்று விளக்கம் கொடுத்தனர். ஆகவே, இவனும் அதே நிர்வாணப் பாதையினை பின்பற்றி, சுகமாக பெண்களை கற்பழித்து வருகிறான் போலும்!

Nude worship allowed in Christianity - theology

எட்டி எபனேசர். தான் எஸ்.சி / தலித் என்ற ஆயுதத்தையும் பிரயோகித்தது: முன்பு, கர்நாடகாவில், சிமோகா மாவட்டத்தில், பல்லாண்டுகளாக “நிர்வாண வழிபாட்டை” பெண்கள் செய்து வந்தபோது, 1984ல் அதற்கு தடை விதிக்கப் பட்டது[11]. சொராப் தாலுக்கா, சந்திரகுட்டி கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு, வருடா வருடம், மார்ச் 9 முதல் 14 வரையிலான காலத்தில், ஜாத்ரா செல்வது வழக்கம். அப்பொழுது, பெண்கள் நிர்வாணமாக பூஜை செய்வது வழக்கமாக இருந்தது. ஊடகங்களில் அதிக அளவு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது[12]. ஆனால், இந்த “நிர்வாண பிரார்த்தனை” பற்றி எந்த ஊடகமோ, செக்யூலரிஸ / பெண்ணிய எழுத்தாளரோ புகைப்படம் எடுத்து, நாளிதழில் / சஞ்சிகையில் புகைப் படம் போட்டு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த, எதையும் எழுதவில்லை. அந்த ஜாத்ராவில் பங்கு கொண்டவர்களும், எஸ்.சி / தலித்துகள் தாம். இதில் – “நிர்வாண பிரார்த்தனை”யில் பங்கு கொண்டவர்கள் அல்லது பாஸ்டரால் மானபங்கம் படுத்தப் பட்டவர்களும் எஸ்.சி / தலித்துகள் தாம். அவனே ஒரு எஸ்.சி / தலித் என்பதால் தான், அதை வைத்தும், மிரட்டினான் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது, “கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன்ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார்”.

© வேதபிரகாஷ்

07-11-2017

Pastor Didde Ebenezer,makes publicity himself.

[1] TheNewsMinute, Women tell tales of abuse by village church pastor to Andhra women’’s commission chief, Thursday, October 19, 2017. 09.16 IST.

[2] http://www.thenewsminute.com/article/women-tell-tales-abuse-village-church-pastor-andhra-womens-commission-chief-70211

[3] https://www.youtube.com/watch?v=5p3ckYfGaXE

 

[4] https://www.youtube.com/watch?v=vCIHBMqY2zw

[5] https://www.youtube.com/watch?v=lbIgpYe75PQ

[6] Asianet-newsable, Andhra pastor sexually abused women in the name of church, By Team Asianet Newsable | 01:47 PM October 19, 2017.

[7] http://newsable.asianetnews.com/andhra-pradesh/andhra-pastor-sexually-abused-women-in-the-name-of-evil-church

[8] https://in.linkedin.com/in/pastor-d-ebenezer-didde-5796a414

[9] Mail.online, ‘And they were naked – and not ashamed’: Church allows nude worship, by John Hall, Published: 09:34 BST, 11 Feb.2014, updated: 13.46 BST, March 6, 2016.

[10]  http://www.dailymail.co.uk/news/article-2556548/And-naked-not-ashamed-Church-allows-nude-worship.html

[11] The Hindu,  Nude worship banned, By Our Special Correspondent, Wednesday, Mar 05, 2003

SHIMOGA March 4. The Deputy Commissioner and District Magistrate, Tushar Girinath, has imposed ban orders in connection with the annual jatra of Renukamba at Chandragutti in Sorab taluk. The jatra is scheduled to be held from March 9 to 14. The ban has been imposed to prevent “bettale seve” (worship in the nude). The order bans the congregation of people during the jatra within a radius of 5 km. of the temple under the provisions of the Section 35 of the Karnataka Police Act. Mr. Girinath has allowed the performance of rites during the jatra. He has passed an order banning sale of liquor during the jatra time in a radius of 5 km. of the temple. The Chandragutti jatra was marred in 1986 when enthusiastic activists tried to stop the devotees from worshipping in the nude. The angry devotees retaliated. In the melee, volunteers and police personnel were attacked and paraded naked.

[12] http://www.thehindu.com/2003/03/05/stories/2003030501410400.htm

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது (1)

நவம்பர் 7, 2017

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது (1)

Ebenezaer, nude worship - AP Dinakaran

இந்தியாவில் கிருத்துவ சாமியார்களின் செக்ஸ் குற்றங்கள், கொலைகள் முதலியன[1]: இந்தியாவில் கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் மற்றும் பிஷப்புகளின் பாலியல் வன்புணர்ச்சிகள், செக்ஸ்-மீறல்கள் மற்றும் காம-கொக்கோக லீலைகள் அதிகமாகிக் கொணிருக்கின்றன. இவை திகைப்படைய செய்வது மட்டுமல்லாது, சமூகத்தை அதிகமாக பாதித்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்து வருகின்றன. மேலும், இந்த கற்பழிப்புகளில், செக்ஸ்-குற்றங்களில் கொலைகள் கூட நடந்து வருகின்றன. இருப்பினும், சிலவற்றிலேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றங்களுக்குச் சென்று, தண்டனை பெறும் நிலைவரை செல்கின்றன, ஆனால், பெரும்பான்மையான வழக்குகள், நடக்காமல் கிடக்கின்றான அல்லது கிடப்பில் போடப்பட்டு மறக்கப்படுகின்றன. சில நேரங்களில், அவர்களின் அங்கிகள் அவிழ்க்கப்பட்டன (பதவி நீக்கம் செய்யப்பட்டனர்) என்று அறிவித்தாலும், வேறு வண்ண உடைகளில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். ராம்-ரஹீம் பற்றி சமீபத்தில் அதிகமான செய்திகள் வெளியிடப் பட்டன, இருப்பினும், அவர் “செக்யூலார் சாமியார்” போல சித்தரிக்கப் பட்டு, அடங்கி விட்டன. ஆனால், அவனே ஒரு “இந்து சாமியார்” என்றிருந்தால், உலகம் முழுவதும் முக்கியமான செய்திகளாகி இருக்கும். அவனுக்குப் பிறகு தான் இந்த எட்டி எபநேசர் நிர்வாண பிரார்த்தனை, கற்பழிப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவில், உள்ளூர் செய்திகளில் இவ்விவரங்கள் வந்தாலும், அவன், கைதாகாமல் உலா வந்து கொண்டிருக்கிறான். ஏனெனில், அவனுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்றாகிறது[2].

Pastor Didde Ebenezer, women commission chief

தீபாவளி அன்று ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி போலீஸாரிடம் புகார் பதிவு செய்தார்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடேபல்லிக்கூடம் அடுத்த ஜெகன்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டிட்டி எபனேசர் [Didde Ebenezer]. இவர் அங்குள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். மேலும் பிரகாஷ்ராவ்பாளையம், ஜெக்கன்னாபேட்டை, மஸ்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சர்ச்சுகளுக்கு காப்பாளராகவும் உள்ளார். எபிநேசர் நிச்சயமாக பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து துன்புருத்தியதால், அவனால் பாதிக்கப் பட்ட பெண்கள் அவனை வெளிப்படுத்தினர். நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, 18-10-2017, புதன்கிழமை, மேற்கு கோதாவரி மாவட்டம், தாடெபள்ளிகுடம் மண்டலம், ஜகன்னாதபுரம் கிராமத்திற்கு சென்று நிலையை நேரிடையாக அறிந்தார்[3]. பிறகு, தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் எனக்கூறி பாலியல் தொல்லை செய்த பாதிரியார் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப் பட்ட பெண்கள் கூறியது[4], “முதலில் தனியாக வா என்பார், பிறகு, சிறுசிறு வேலைகளை செய்ய வைத்தார். நாளாடைவில் கை-கால்களை பிடித்து விடு என்றார்….அதற்கும் பிறகு, மார்பு தோள் …..தேய்த்து விடு என்றார்….அந்நிலையில் எங்களை கட்டிபிடித்து …….படுக்கையில்……இவ்வாறாக எங்களை பயன்படுத்திக் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்…..,” என்று விளக்கியது பரிதாபகரமாக இருந்தது.

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal

மனம் மற்றும் உடல் ரீதியில், பெண்களை வசியப் படுத்தி வைத்திருந்தது: கடவுளிடம் நேரிடையாக பேச வைக்கிறேன் என்று ஆசைக் காட்டி, அவ்வாறான கிருபை கிடைக்க வேண்டுமானால், ஆதாம்-ஏவாள் போன்று நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்தால் தான் நடக்கும் என்று வந்த பெண்களிடம் தொடர்ந்து சொல்லி வந்தான். நடு இரவில், மெழுகு வர்த்தி ஏற்றிவைத்து, அத்தகைய பிரார்த்தனையை செய்தால், பலன் கிடைக்கும் என்று நம்பவைத்து அவ்வாறே செய்து வந்தான். அல்லேலுயா, அல்லேலுயா,  என்று அத்திக் கொண்டும், இதோ வந்து விட்டார், அருகில் வந்து விட்டார், பேசப் போகிறார்…… என்றெல்லாம் கத்தி, உணர்ச்சிப் பூர்வமான இலையை உண்டாக்கினான். அவனது செக்ஸ்-சில்மிஷத்தை அப்பொழுது ஆரம்பிப்பான். நிர்வாணம், அவனது கொக்கோக விளையாட்டுகள் படுக்கையில் பெண்களை வீழ்த்தி விடும். இவ்வாறு மனோரீதியில் மற்றும் உடல்ரீதியில் அவர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தான். பெற்றோர் அழைத்தும் அவர்கள் செல்லாமல் இருந்தனராம். ஒருமுறை அவன் பெண்களுடம் இருக்கும் வீட்டை சோதனையிட்ட போது, “நிரோத்” பாக்கெட்டுகள் கிடைத்தன. தவிர, ஏதோ மருந்தும் கொடுத்து கட்டுக்குள் வைத்திருந்தான் என்று மருத்துவர் கூறுகிறார்[5].

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- TV9 video

ஊரை மாற்றினாலும், செக்ஸ்சில்மிஷத்தை மாற்றாத பாஸ்டர்: 2015ல் கைதுக்குப் பிறகு, நீதிமன்றம் வரை வழக்கு சென்றபோது, தனது ஆதிக்கத்தினால், அதிலிருந்தும் விடுபட்டான் என்று, டிவி-9 கூறுகிறது[6]. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று புகாரை வாபஸ் வாங்கச் செய்தான். ஆனால், பிறகு, அவளை வேறு மாதிரி சரிசெய்தான். ஜகன்னாதபுரத்திலிருந்து, தனனு வீட்டை மதூர் என்ற இடத்திற்கு மாற்றினான். இதுவும் சட்டரீதியாக “போலீஸ் கட்டுப்பாட்டு எல்லைகளை” கடக்கத்தான் செய்தான். அங்கும் தனது வேலையை ஆரம்பித்தான் என்று பெண்கள் கூறினர்[7]. இளம் பெண்கள் மற்றும் விதவைகளைத் தான் உறி வைத்தான். தமிழில், தினகரன் மட்டும் தான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது[8]. இது “டெக்கான் ஹெரால்டு” நாளிதழிலிருந்து தொகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆனால், மற்ற ஊடகங்கள் இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை[9]. மேலும், “நிர்வாண பூஜை” ஏன் என்றும், அதன் மகத்துவத்தையும் விளக்கவில்லை.

Pastor Didde Ebenezer, a victim complains-TV9 video

கணவனின் அடாவடி, அநியாய செக்ஸ்குற்றங்களைத் தாங்காமல் மனைவி புகார் கொடுத்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும்: இவரது மனைவி ஜீவன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். எபிநேசர் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி அவரது மனைவி ஜீவன் தனியாக வசித்து வருகிறார். எபிநேசர் தேவாலயத்திற்கு வரும் விதவைகள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் உள்ளிட்டவர்களை சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் எனக்கூறி இரவு நேரத்தில் தனியாக வரும்படி கூறி, அவ்வாறு வருபவர்களை நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொள்வார் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுப்பதை அறிந்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டி உள்ளனர். அதனால் இவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதுபற்றி தகவலறிந்த அவரது மனைவியே பெத்தையாபேட்டை போலீசில் புகார் செய்தார்.  ஆனால், அவன் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- Police enquiry

2015ல் புகாரின் மீது, வழக்குப் பதிவு செய்து, கைதாகி, ஜாமீனில் வெளிவந்த காமுகன்: எபினேசர் தனது பணபலத்தினால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவிடாமல் செய்தான். நிலையை அறிந்து, எப்படியாவது, அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், புகார் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்ததால், பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து, புகார் கொடுக்க ஊக்குவித்தார். போலீசார் எபிநேசர் மீது நடவடிக்கை எடுக்காததால், மாநில மகளிர் நல ஆணைய தலைவி நன்னப்பநேனி ராஜகுமாரியிடம் புகார் செய்தனர். இந்த புகாரை பெற்ற அவர், இது போன்றவர்களை சமூகத்தில் விட்டு வைக்கக்கூடாது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, எபிநேசரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ஐந்து பெண்கள் எபிநேசர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், எபிநேசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எபிநேசர் மீது ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால்,முன்னர் குறிப்பிட்ட படி, பிணையில் வெளியே வந்துவிட்டான்.

© வேதபிரகாஷ்

07-11-2017

Didde Ebenezer case, AP pastor sex- 22-10-2017

[1]  இது அக்டோபர் 20, 2017 அன்று ஆங்கிலத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.

Vedaprakash, Didde Ebenezer, pastor sexploits women from 2015 onwards – Victims come out, complaint filed, but escaped, secular media, women activists and tolerant groups keep quite!, October 20, 2017.

[2] https://indiainteracts.wordpress.com/2017/10/20/didde-ebenezer-pastor-sexploits-women-from-2015-onwards-victims-come-out-complaint-filed-but-escaped-secular-media-women-activists-and-tolerant-groups-keep-quite/

[3] DECCAN CHRONICLE. Rajahmundry: Arrest pastor for abusing girls, Published Oct 19, 2017, 6:32 am IST; UpdatedOct 19, 2017, 6:32 am IST.

[4] http://www.deccanchronicle.com/nation/crime/191017/rajahmundry-arrest-pastor-for-abusing-girls.html

[5] Rapist Pastor || Victims demands stringent action || TV9 Effect, for details, see at: https://www.youtube.com/watch?v=lkhL41mu3d8

[6] AP Pastor’s dirty secrets exposed || TV9 Special Focus, For details, see at: https://www.youtube.com/watch?v=kNE4bkt6B44

[7] Church Pastor sexual harassment on Women at West Godavari | CVR News, for details se at:  https://www.youtube.com/watch?v=CkWfPFiwQZ8

[8] தினகரன், ந்திர மாநிலத்தில் பரபரப்பு நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் என பாலியல் தொல்லை, 2017-10-20@ 00:59:03.

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=344197

தன்னைவிட வயதில் மூத்த விதவையுடன் உடலுறவு கொண்டு ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த கிருத்துவப் பாதிரி கைது!

திசெம்பர் 25, 2016

தன்னைவிட வயதில் மூத்த விதவையுடன் உடலுறவு கொண்டு ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த கிருத்துவப் பாதிரி கைது!

roslin-raped-by-arul-prakash-dm-chennai-23_12_2016_007_023

கற்பழிப்புகளில் ஈடுபடும் பாதிரிகளின் எண்ணிக்கை அதிகமாதல்: கிருத்துவப் பாதிரிகளின் கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பொறுப்புள்ள கிருத்துவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பிஷப்புகள் முதல், பாஸ்டர் வரை கூட்டுக் கொள்ளைப் போல, கூட்டு காமக்களியாட்டங்களில் ஈடுபட்டு வருவதால், பரஸ்பர கொள்கைகளில் அவ்வாறு சமரசத்துடன் இருக்கிறார்கள் போலும். தூத்துக்குடியில் இத்தகைய விவகாரங்கள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், உருத்துவதாகத் தெரியவில்லை. ஜேஹோவா, ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து, மேரி என்று எவரைப் பற்றியும் கவலைப்படாமல் கொக்கோகத்தில் ஈடுபட்டு சல்லாபித்து வருகிறார்கள். சர்ச்சுக்கு பெண்கள் செல்வதற்கே பயமாக இருக்கிறது. எந்த பாதிரி எப்பொழுது வலை வீசுவானோ என்று அச்சமாக இருக்கிறது. கன்னிப்பெண்கள் சென்றால், கர்ப்பமாகி விடுவார்களோ என்று பதட்டமாக இருக்கிறது.

arul-prakasam-arrested-for-raping-andrew-rosaln-22-12-2016

எம்.டெக் படித்த பெண் வேலைக்குப் போகாமல், சர்ச்சுக்குச் சென்று காமவலையில் சிக்கிக் கொண்டது: துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பிரகாசபுரம் பரலோக மாதா சர்ச் பாதிரியார் அருள் பிரபாகரன், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசம் செய்துள்ளார்[1] என்று மறுபடியும் செய்தி வந்துள்ளது. அவரை திருச்செந்துார் அனைத்து மகளிர் போலீசார் புதன் கிழமை இரவு (21-12-2016) கைது செய்தனர்[2] என்று அமுக்கமாக செய்தி வெளியிட்டுள்ளனர்.  திருச்செந்துார் அருகேயுள்ள நாசரேத் பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகள் ஆண்ட்ரூஸ் ரோஸ்லின் (37). இவர் எம்.டெக் பட்டதாரியாவார். இவருக்கும் மதுரையை சேர்ந்த சைமன் என்பவருக்கும் 1999ல் திருமணம் நடந்தது. கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். 2009ல் சட்டப்படி விவவாகரத்து செய்து கொண்டனர். ஒரு பெண் எம்.டெக் படித்தும் பக்குவம் ஏற்படவில்லையா என்று தெரியவில்லை. படித்த பெண் வேலைக்குச் சென்று ஒழுங்காக இருந்திருக்கலாமே? பிரகாசபும் தந்தை வீட்டில் ஆண்டரூஸ் ரோஸ்லின் வசித்து வந்தார். பிரகாசபுரத்தில் பரலோக மாதா சர்ச் உள்ளது. அதனால், வேலைக்கு போவதை விட, சர்ச்சுக்கு செல்லலாம் என்று சென்றிருப்பார் போலும்!

arul-prakasam-arrested-for-raping-andrew-rosaln-22-12-2016-the-hindu

ரோஸ்லினுக்கு வலைவீசிய அருள் பிரகாசம்: அங்குதான் வினையே ஏற்பட்டுள்ளது. இங்கு பாதிரியாராக தட்டார்குளம் சொக்கன்குடியிருப்பை சேர்ந்த சிலுவை மகன் அருள் பிரகாசம் (33), இருந்து வந்தார்[3].  ரோஸ்லினைப் பார்த்தவுடன், எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார். ஆறுதலாக பேசும் போர்வையில் பேச்சை ஆரம்பித்துள்ளான். இவ்வாறுதான் சர்ச்க்கு செல்லும் போது பாதிரியார் அருள் பிரகாசத்திற்கும், ஆண்ட்ரூஸ் ரோசலினுக்கும் பழக்கம் ஏற்பட்டது[4]. இனி அடுத்தது படுக்க வருவாளா என்று சோதிக்கும் முறையில், பாதிரியார் அருள் பிரகாசம் மொபைல் போனில் ஆண்ட்ரூஸ் உடன் ஆபாசமாக பேசுதல், ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்[5]. அதை பார்த்து எதிர்க்காமல், ரசித்துள்ளார் போலும் ரோஸ்லின். இதனால், பேச்சு, காமரசத்தில் ஊறி, போதை ஏறி படுக்கை வரை சென்றுள்ளது. பாதிரியார் அருள் பிரகாசம், ஆண்ட்ரூஸ் ரோசலினை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து அவருடன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்[6]. ரோஸ்லினும் ஒப்புக் கொண்டுள்ளாள்.

roslin-raped-by-arul-prakash-pastor-arrested-dm-23_12_2016_007_029

ஜெசுவைட் கொள்கைகளைப் பின்பற்றும் பாதிரிகள்: ஜெசுவைட்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைகள் கொண்ட புத்தகத்தில், பெண்களை கவருவது எப்படி, குறிப்பாக விதவைகளை கவருவது எப்படி போன்ற விவரங்கள் உள்ளன. ஒருவேளை, இப்பாதிரிகள் அவற்றைப் படித்து இவ்வாறு காமக்களியாட்டங்களில் ஈடுபடுகின்றனரா என்று எண்ணாத் தோன்றுகிறது. தொடர்ந்து இத்தகைய கற்பழிப்புகள் நடந்து வருவதாலும், அவற்றை ஊடகங்கள் ஏனோ-தானோ முறையில் செய்திகளை வெளியிட்டாலும், அவற்றைக் கண்டித்து யாரும் குரல் எழுப்பாதது கவனிக்கத்தக்கது. அதாவது குற்றங்களை மறைக்க மற்றவர்களும் துணைபோகிறார்கள் என்று தெரிகிறது. இன்று ஊழல் என்று பலவிசயங்களை, பலகோணங்களில் அலசுகிறார்கள், ஆனால், கிருத்துவர்களின் இத்தகைய ஆபாச பாலியல், அச்சிங்கமாக செக்ஸ் மற்றும் கொக்கோகக் கற்பழிப்புகளை, இறையியல் ஊழல், சமூக ஊழல் என்றெல்லாம் அலசுவதில்லை. இனி ரோஸ்லின் விவகார்த்திற்கு வருவோம்.

arul-prakasam-arrested-for-raping-andrew-rosaln-22-12-2016-the-hindu-updated

திருமணத்திற்கு மறுத்து, கொலை மிரட்டல் விடுத்த பாதிரி: ஒரு நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிரியாரை ரோஸ்லின் வற்புறுத்தியுள்ளார். உசாரான பாதிரியார் மற்ற பாதிரிகளைப் போல, “நான் பாதிரி, என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது, உனக்கு என்ன வேண்டுமோ கொடுக்கிறேன், அவ்வப்போது, அப்படி ஜாலியாக இருந்து கொள்ளலாம்”, என்று பாடுயுள்ளான். புரிந்து கொண்ட ரோஸ்லின் வற்புருத்தியுள்ளால். இதனால், கொலை மிரட்டல் விடுத்து திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்[7]. இதனால், ரோசலின் போலீஸாரிடம் புகார் கொடுக்க தீர்மானித்தார். வழக்கம் போல, இந்நிலையிலும் சர்ச் இருவரிடமும் சமரசம் செய்து வைக்க முயற்சிகள் நடந்ததா என்று தெரியவில்லை. ஏனெனில், இப்பொழுதெல்லாம் சர்ச்சிற்குள் நடக்கும் விவகாரங்களை, அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற வேலைகளில் பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் இறங்கியுள்ளார்கள்.

jesuite-sex-women-targeted

போலீஸாரிடம் புகார் கொடுத்த ரோஸ்லின்: தன்னை விட வயது அதிகமான பெண்ணுடன் உறவு கொள்கிறோமே என்ற உணர்வு அந்த பாதிரியாரிடமும் இல்லை, அவ்வாறு செய்யலாமா என்று ரோஸ்லினும் எண்ணவில்லை எனும் போது, வியப்பாக உள்ளது. திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி, தன்னுடம் உறவு கொண்ட பாதிரி, திசைமாறியதும், பாதிக்கப்பட்ட ரோஸ்லின் திருச்செந்துார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்[8]. வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கனகாபாய் பாதிரியார் அருள்பிரகாசத்தை புதன் கிழமை இரவு (21-12-2016)கைது செய்தார்[9].  இந்திய குற்றவிய சட்டத்தின் பிரிவுகள் [Sections 376, 417, 354 (a), 420 and 506 (ii) of the Indian Penal Code] கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[10]. ஒரு விதவையுடன் கூட பாதிரிகள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கும் போது, புறையோடியிருக்கும் சர்ச்சின் நிலை வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

25-12-2016

jesuite-sex

[1] The Hindu, Pastor arrested, STAFF REPORTER,  DECEMBER 22, 2016 20:25 IST

UPDATED: DECEMBER 23, 2016 07:54 IST

Thoothukudi: Fr. Arul Prabhakaran (33), Pastor of Paraloga Matha Church in Prakasapuram in Nazareth, was arrested by Tiruchendur All Women Police on Wednesday night (21-12-2016). Sources said he allegedly developed an illicit relationship with a widow, A. Andrew Roseline (37) of Prakasapuram, on the promise of marrying her.

[2] http://www.thehindu.com/news/national/tamil-nadu/Pastor-arrested/article16926232.ece

[3] தினமலர், பெண் பலாத்காரம்: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.22 2016. 22.49.

[4] http://www.dinamalar.com/special_detail.asp?id=1674698

[5] தினமலர், திருமண ஆசை காட்டி பெண்ணை மோசம் செய்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.23 2016. 04.20.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1675120

[7] தினமலர், பெண் பலாத்காரம்: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.22 2016. 22.49.

[8] http://www.nyoooz.com/madurai/693364/pastor-arrested

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1674698

[10] Based on a complaint lodged by Ms. Roseline, the police registered a case against the pastor under Sections 376, 417, 354 (a), 420 and 506 (ii) of the Indian Penal Code. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Pastor-arrested/article16926232.ece

 

“சர்ச் ஆப் பெதஸ்தா”வின் பாஸ்டர் ஐஸக் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, கைதானது – கிருத்துவ செக்ஸ்-தீவிரவாதமும் ஆபத்தானது!

பிப்ரவரி 11, 2016

சர்ச் ஆப் பெதஸ்தாவின் பாஸ்டர் ஐஸக் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, கைதானது – கிருத்துவ செக்ஸ்-தீவிரவாதமும் ஆபத்தானது!

Church priest arrested for harassing wown - TOI - 1

பலாத்காரம் நடந்த அடுத்த நாளில் பெண் போலீஸாரிடம் புகார் அளித்தது: இரவானபடியால், வீட்டிற்கு சென்று, அடுத்த நாள் செவ்வாய் கிழமை 09-02-2016 அன்று மதியம் போலீஸில் புகார் கொடுத்தார். இச்செய்தி அறிந்ததும், சுமார் 100 இந்து முன்னணியினர் கூடி, அந்த பாதிரியைத் தாக்க சர்ச்சிற்கு சென்றுள்ளனர்[1]. பலாத்காரம் செய்த பிறகு, மக்கள் வந்து தாக்க வேண்டும் என்ற அளவுக்கு நிலைமை உருவானது ஏன் என்று தெரியவில்லை. “தி இந்து” அப்பெண் இந்து முன்னணியினரிடம் சொல்லி, அவர்கள் ஆர்பாட்டம் செய்ய வந்தனர் என்றுள்ளது. ஆனால், விவரம் அறிந்த போலீஸார் உடனடியாக வந்து, ஐஸக்கை போலீஸ் ஷ்டேசனுக்கு கூட்டிச் சென்று, வழக்கைப் பதிவு செய்தனர். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்டி வெளியிடுகிறது. அப்படியென்றால், போலீஸாருக்கு தகவல் கொடுத்தது யார் என்ற கெள்வி எழுகின்றது.

Church priest arrested for harassing wown - TOI - 2

இந்து முன்னணியரின் ஆர்பாட்டம், போலீஸார் ஐஸக்கை பத்திரமாக கொண்டு சென்றனர்: தமிழ்.ஒன்.இந்தியா இவ்வாறு கூறுகிறது, “அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது[2]. இதையடுத்து பாதிரியார் ஐசக் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பொதுமக்கள் மற்றும் இந்து முண்ணனியினர் ஜபகூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது[3]. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாதிரியாரை பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்[4]. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்[5]. இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், அனுமதியின்றி இயங்கி வரும் ஜப கூடங்களை தடை விதிக்க வேண்டுமெ னவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்[6]. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”.

Evangelical sex

பாலியல் குற்றங்களினால், இந்திய சமூகம் மனோதத்துவ ரீதியில் பாதிக்கப்படுவது: இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் செக்ஸ் விசயத்தில் தாராளமாக இருப்பதினால், அவர்களுக்கு அத்தகைய உணர்ச்சிகள் 60-80 வயதுகளில் கூட இருப்பது தெரிகிறது. இதனால், தங்களின் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அறியாத பருவத்தில் உள்ள குழந்தைகளை, சிறுவர்களை, சிறுமிகளை தங்களது காமப்பசிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலும். வயதுக்கு வராத சிறுமியை புணர்வதினால், கர்ப்பம் ஏற்படாது என்ற நிலையில் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறர்கள் போலும். வயதுக்கு வந்த நிலையில், கர்ப்பம் ஆனாலும், பணம், வேலை மற்ற உதவிகளை செய்து கர்ப்பத்தைக் கலைத்து விடுகின்றனர். சிறுவர்கள் என்று வரும்போது, பெரும்பாலும் ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்கிறார்கள். அறியாத வயதில், அவர்கள் அது ஏதோ விளையாட்டாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நாளாக-ஆக, மனத்தளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், குற்றவாளிகளாகக் கூட மாறுகிறார்கள். மனோதத்துவரீதியில் அவர்கள் அடையும் கொடுமைகளை, வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது, விவாதிக்கப்படுவதும் இல்லை. மேலும், இத்தகைய காமப்பிறழ்ச்சிகள், கொக்கோக கோணாங்கித்தனங்கள் இந்திய சமூகத்திற்கு புதியதாக இருக்கிறது எனலாம்.

Victor Arden Barnards reign of sexual terror dates back to 2000, when, as the head of a religious community in Minnesota

இடைக்காலத்திலிருந்து, ஐரோப்பியர் ஆட்சியில் தொடர்ந்து, சுதந்திர இந்தியாவிலும் நடந்து கொண்டிருப்பது: இடைக்காலத்தில், முகமதியர்களின் காமத்தொல்லையால், கொக்கோகக் குற்றங்களினால், இந்திய சமூகம் அதிகமாகவே பாதிக்கப்பட்டது. போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் சரியாக ஆராயப்படவில்லை. ஆனால், விளைவுகள் மூலம் சமூகப்பிறழ்ச்சிகளை அறிய நேர்கிறது. “ஆங்கிலோ-இந்திய சமூகம்” என்று சொல்லிக் கொண்டாலும், அது அத்தகைய கலவையினால் உண்டாக்கப்பட்டதேயாகும். போர்ச்சுகீசியர்களின் குரூரம் அவர்களது அடிமை வியாபாரம், செக்ஸ்-விவகாரங்கள் முதலியவற்றின் மூலம் தெரிய வருகின்றது. இப்பொழுது, செக்ஸ்-டூரிஸம், போன்ற போர்வைகளை வைத்துக் கொண்டு அதேபோன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைக்கு, எம்.என்.சி கம்பெனிகளில் உள்ள அந்நியநாட்டவர்களுக்கு எல்லாவற்றையும் சப்ளை செய்யவேண்டியுள்ளது.

sexual atheism and christianity

நவீனகாலத்தில் நடந்து வரும் கொக்கோக விவகாரங்கள், மறைக்கப்படும் முறைகள்: பெங்களூரு, புனே, மும்பை அவர்களுக்கு மாறியுள்ளது போல, எல்லா இடங்களும் மாறவில்லை. அதனால், மிஷினரிகளின் பள்ளிகள், கல்லூரிகள், அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கான்வென்டுகள் முதலியவை, இவர்களது இச்சைகளுக்கு பூர்த்திசெய்ய அனுப்பும் இடங்களாக மாறியுள்ளன. ஏதோ பொதுப்படையாக, எல்லாவற்றையும் ஒன்றாக பாவிப்பது போல, எந்தவித தப்பெண்ணத்தினால், இவ்வாறு கூறவில்லை. தொடர்ந்து நடந்து வரும் செக்ஸ் குற்றங்களின் ஆதாராமாக, அதன் பின்னணியை வைத்துக் கொண்டு சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களின் வழக்குகள் மற்றும் தீர்ப்ப்புகளில் இவ்விவரங்கள் பதிவாகியுள்ளன. அதனால் தான், அத்தீர்ப்புகளில் பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; தீர்ப்புகள் அச்சில் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; மறைக்கப்படுகின்றன; சில காலத்தில் மறைக்கப்படுகின்றன; பிறகு மறக்கப்படுகின்றன. இவ்வாறு உண்மை குழித்தோண்டிப் புதைக்கப்படுகிறது.

sexual baptismand christianity

செக்ஸ்தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும்: செக்ஸ் இறையியல், ஆன்மீக பாலியல், செக்ஸுவல் எவாஞ்சலிஸம் அதாவது பாலியல் மூலம் மதப்பிரச்சாரம் மற்றும் மதமாற்றம், என்றெல்லாம் கிருத்துவர்கள் ஆரம்பித்திருப்பது தெரிகிறது[7]. இதெல்லாம் முஸ்லிம்களின் “லவ்-ஜிஹாத்”, “செக்ஸ்-ஜிஹாத்” போன்றவற்றிற்கு சமமாகும். கடந்த ஆண்டுகளில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள், செக்ஸ்-வன்மங்கள் முதலியவற்றை கூர்ந்து கவனித்து வந்தால், கிருத்துவர்கள் வேண்டுமென்றே அத்தகைய பாவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ரு தெரிகிறது. கிருத்துவர்கள் எப்பொழுதுமே பற்பல இயக்கங்களை வைத்துக் கொண்டு பலவழிகளில் ஒவ்வொரு நாட்டிலும் செயல்படு, அந்நாடுகளை சீர்குலைப்பதில் ஈடுபட்டிருப்பதால், அவர்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உச்லிம்களைப் போல, இத்தகைய செக்ஸ்-தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள கிருத்துவர்கள் “ஸ்லீப்பர்-செல்” போல வேலை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், அத்தகைய தீவிரவாதங்களை எந்த காரணத்திற்கும், எந்நிலையிலும் நியாயப்படுத்தப் முடியாது. மனிதத்துவத்தை, மனிதத்தன்மையினை, மனித சமுதாயத்தை அழிவுக்குக் கூட்டி செல்வதால், அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். எந்தவித ஆதரவும், கிருத்துவர்கள் கொடுக்கக் கூடாது. இன்று “எயிட்ஸ்”க்குப் பிறகு, “சிகா” அச்சுறுத்தும் போது, போப்பே, காண்டம் உபயோகித்து அதனை எதிர்த்து போராட வேண்டும் என்கிறார்[8]. கத்தோலிக்கச் சர்ச் பொறுத்த வரையில் கான்டம் உபயோகிப்பது, அபார்ஸன் முதலிய விவகாரங்களில் இறையியல் உதைப்பதால், “வழவழ-கொழகொழ” நிலையில் உபதேசம் செய்து வருகிறது[9]. ஒரு நிலையில் இதெல்லாம் கத்தோலிக்க-கத்தோலிக்கர் அல்லாத இறையியல் போராட்டம் என்று கூட விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், உலகத்தில் உள்ள மற்ற மக்கள் அத்தகைய போலித்தனத்தை ஒப்புக் கொள்ள முடியாது. இவர்களது இறையியல் சோதனை, பரிசோதனைகளுக்காக, மனிதர்கள் பலிக்கடா ஆக்க முடியாது.

© வேதபிரகாஷ்

11-02-2016

[1] More than 100 Hindu Munnani members had gone to the church to attack the priest on Tuesday. However, Thudiyalur police got information and rushed to the spot. Immediately, the police escorted the priest to the police station and registered a case against him under section 354 A (sexual harassment) of the Indian Penal Code. He was arrested and later remanded to judicial custody. Further investigation is on. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Church-priest-arrested-for-harassing-woman/articleshow/50926323.cms

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/young-woman-sexual-harassment-compliant-on-christian-priest-246504.html

[3] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=195225

[4] நக்கீரன், சிறப்பு பிரார்த்தனை என்று இளம்பெண்ணிடம் பலாத்காரம்:கோவை பாதிரியாரிடம் போலீசார் விசாரணை, பதிவு செய்த நாள் : 9, பிப்ரவரி 2016 (21:12 IST) ; மாற்றம் செய்த நாள் :9, பிப்ரவரி 2016 (21:12 IST).

[5] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=160397

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=160397

[7] http://www.christianitytoday.com/ct/2014/december-web-only/evangelical-sex-talk-about-much-more-than-sex.html

[8] http://www.ndtv.com/world-news/catholic-group-urges-pope-to-allow-contraception-to-fight-zika-1276094

[9] http://www.cruxnow.com/church/2016/02/06/like-aids-before-it-zika-virus-exposes-weakness-in-catholic-moral-teaching/

இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீது புகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம்!

ஒக்ரோபர் 19, 2013

இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீது புகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம்!

Manikandan-Rekha-complained about Christian teacher

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கிருத்துவ மதபோதகர்களுக்கு இதே வேலையாகி விட்டது போலும்!

Hasthampatti sex pastor Jeyaseelanசேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், கட்டிட தொழிலாளி.இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 18-10-2013 காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் கார்-செட்டுக்கு அழைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது[1]. பள்ளியின் முதல்வர், ஏன் அவரும் ஒரு கிருத்துவப் பாதிரியாகத்தானே இருப்பார், அவர் இப்படி கருப்பு ஆடுகளை வளர்த்து, வைத்துக் கொண்டு, மேய விடலாமா?

ஏறெகெனவே, இப்படி ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று மேய ஆரம்பித்து விட்டார்களே? ஏன் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை?

முன்னர் பெங்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்

முன்னர் பெங்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்

பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார். பிறகு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்[2]. அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்[3].

இது ஏதோ சாதாரண விசயமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், கற்பழிப்புகளில் ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்[4]. illegal-adoptionவழக்கம் போல புகார்கள் கொடுக்கப் படுகின்றன. சில விசயங்களில் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. தில்லி-மும்பை போன்று, இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை.

Christian-priest-sex-Ayanavaram

Christian-priest-sex-Ayanavaram

பலமுறை இத்தகைய புகார்கள் வந்துள்ளன

Pastor-sexploitation-Ayanavaram

Pastor-sexploitation-Ayanavaram


கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்?

ஒக்ரோபர் 11, 2013

கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்?

வருடம் போறும், மாதம்-மாதம் இவ்வாறு கிறிஸ்தவ மதபோதர்கள் பலவித குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது[1]. பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், உடலுறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்கிறேன் என்று அனுபவித்து விட்டு ஏமாற்றுதல்[2], ஏன் கற்பழித்தல் என்றெல்லாம் ஈடுபட்டுள்ளனர். 2012ல் பிரபலமான ஏஞ்சல் டிவியின் வின்சென்ட் செல்வக்குமார் மீது பாலியல் புகார்கள் செய்யப்பட்டன[3]. சேலம் இந்திய கிருத்துவ மிஷன் மையத்தில் நடக்கும் பாலியல் வன்மங்களைப் பற்றி இங்கே படிக்கவும்[4].

பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை[5]: சிறுவர்சிறுமியர்களைவன்புணர்தல், ஓரினபுணர்ச்சிமுதலியன[6], நள்ளிரவில் பாதிரியுடன் இருந்த கல்லூரி மாணவி[7], பி.பி. ஜாப்[8] போன்றோர்களின் காம லீலைகள்[9], உறவு கொள்ள மறுத்தவளை கொலை செய்த பாதிரி[10], பலதார[11] திருமணங்கள்[12], செய்து வைத்த பாஸ்டர்கள்[13] என்று நீண்டு கொண்டே போகின்றன.

பணம் கேட்டு மிரட்டுகிறார்: மதபோதகர் மீது மனைவி புகார்[14] (அக்டோபர் 2013): வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, மதபோதகர் மீது, அவர் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர், பியூலா மெர்சி பிரீத்தி, 25. இவர், கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் விவரம்: அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த, ஜெசுரன் ராய் நைட். சென்னை “சர்ச் ஆப் கிரைஸ்டில்’, மதபோதகராக உள்ளார். கடந்த, 2007ல், எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 18 சவரன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும், எங்கள் தரப்பில் இருந்து வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. குழந்தை இல்லாததால், கடந்த, 2009ல், ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தோம்.

பல பெண்களுடன் தொடர்பு: பின், என் கணவருக்கு, செல்வியா என்ற பெண் உட்பட, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதை நான் கண்டித்தது முதல், என்னை கொடுமைப்படுத்த துவங்கினார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள், அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த நிலையில், மேலும், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, என்னை அடித்து கொடுமைப்படுத்தி, தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். என்னை கொடுமைப்படுத்திய கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது[15].

முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி விட்டார்: கிறிஸ்தவ மதபோதகர் மீது  2-வது மனைவி புகார்[16](செப்டம்பர் 2012) : வளசரவாக்கம் சாஸ்திரி நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் கிறிஸ்தவ மத போதகர் ஒருவருக்கும் 9.2.96-ல் மதுரையில் திருமணம் நடந்தது. முதலில் சென்னையில் அவர் நடத்தி வந்த இல்லத்தில் தங்கி குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாக கூறி என்னையும் குழந்தைகளையும் லாட்ஜில் தங்க வைத்தார்.

ஏற்கெனவே திருமணமானர், பல பெண்களுடன் தொடர்பு: அதன் பிறகு விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் திலகவதி என்ற மனைவியும், குழந்தையும் இருப்பதும் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதை தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தினார். தனி அறையில் பூட்டி வைத்தார். 9 வருடமாக சைக்கோ போல் நடந்து கொண்டார். அவர் என் பெயரில் கூட்டாக சொத்துக்களும் பல நிறுவனத்தில் பங்குதாரராகவும் சேர்த்துள்ளார். இந்த சொத்துக்களை அடைய அவர் என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்[17]. ஆட்களை வைத்தும் மிரட்டுகிறார். அவரிடம் இருந்து தப்பி வந்து விட்டேன். எனக்கு பாதுகாப்பு வழங்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்[18].

இந்தியா முழுவதும் இவர்களின் தொடரும் லீலைகள்: தமிழகத்தில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களில் கிறிஸ்தவ போதகர்கள் இப்படுத்ட்ர்ஹான் நடந்து கொண்டு வருகின்றனர்.  ஆகஸ்ட் 2011ல் சந்தனராஜு என்ற பாஸ்டரை, இதே காரணங்களுக்காகக் கைது செய்யப் பட்டான்.

Dowry harassment: pastor held[19]: A pastor of a Jalahalli church, who had been absconding after his wife filed a dowry harassment complaint with the police, was arrested on Saturday evening. Police arrested K. Shantaraju (45) of the Bethel Church and Bethel Student Centre in Siddharthanagar, near Jalahalli Cross.Priyanka, his wife, had filed charges of harassment and criminal intimidation against him at the Gangammagudi Police Station. She had also accused her husband of sexually exploiting young girls of his parish and that he and his family had threatened her into silence.Meanwhile, police said as no girl had come forward with a complaint against Shantaraju, they were not investigating that angle[20].

புகார், கைது என்ற நிலையோடு செய்திகள் நின்று விடுகின்றன. படித்தவர்களும் மறந்து விடுகின்றனர். ஆனால், பிறகு என்னவாயிற்று, பாதிக்கப் பட்ட பெண்களின், சிறூமிகளின் கதி என்ன என்பவற்றைப் பற்றி ஊடகங்கள் கவலைப்படுவதாக இல்லை.

© வேதபிரகாஷ்

11-10-2013


[14] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2013,23:49 IST

[16] மாலைமலர், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 24, 2012, 4:03 PM IST