Archive for the ‘ஆர்.டி.மாறன்’ Category

செக்ஸ், கற்பழிப்பு, வன்புணர்ச்சி பற்றி ஒன்றும் கூறாமல், கிறிஸ்தவ திருமணங்கள் பதிவில் சட்ட வரையறைகளை நீக்க வேண்டும் என்று கிறிஸ்தவ ஒன்றிப்பு கோரிக்கை!

நவம்பர் 7, 2010

செக்ஸ், கற்பழிப்பு, வன்புணர்ச்சி பற்றி ஒன்றும் கூறாமல், கிறிஸ்தவ திருமணங்கள் பதிவில் சட்ட வரையறைகளை நீக்க வேண்டும் என்று கிறிஸ்தவ ஒன்றிப்பு கோரிக்கை!

இந்திய கிருத்துவத்திற்கு வேறு வேலயில்லையா? பாலியல், வன்புணர்ச்சி, கலவி, காமம், ஃபிடோஃபைல், ……….என்று நாறிவரும் வேலையில், இப்படி திருமண, கல்லறை, உரிமைகள் ………….என்றெல்லாம் பேசுவது வேடிக்கைதான்! முதலில் பிஷப்புகள், பாதிரியார்கள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவ சாமியார்கள் ஒழுங்காக, ஒழுக்கமாக இருக்க வழி பார்க்க வேண்டும். அவர்களால் அப்படி ஒழுங்காக, ஒழுக்கமாக இருக்கமுடியாது என்ற பட்சத்தில் அவர்களுக்கு முதலில் கல்யாணம் செய்து வைத்து வீட்டிற்கு அனுப்பி ஒழுங்காக மனைவியிடம் குடித்தனம் செய் என்று அறிவுறுத்த வேண்டும்.

கிறிஸ்தவ திருமணங்களில் என்ன பிரச்சினை? கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்வதில், தேவையற்ற சட்ட வரையறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, மதுரையில் நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது[1]. மதுரையில் கிறிஸ்துவ ஒன்றிப்பு சார்பில், எடின்பரோ மாநாடு நூற்றாண்டை முன்னிட்டு, கலந்தாய்வு நரிமேடு சி.எஸ்.ஐ., கதீட்ரல் சர்ச்சில் நடந்தது. டி.இ.எல்.சி., பிஷப் மாட்டீன் வரவேற்றார். மதுரை, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., திருமண்டில துணை தலைவர் ஆப்ரகாம் ரொனால்ட் தலைமை வகித்தார். ரோமன் கத்தோலிக்க பிஷப் பீட்டர் பெர்ணான்டோ கலந்தாய்வை துவக்கி வைத்தார். தலித் ஆதார மைய இயக்குனர் துரைராஜ், மரியன்னை சர்ச் நெறியாளர் ஜெபமாலை ராஜா, திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் அந்தோணி, இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரம், சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் பேசினர்.

தீர்மானங்கள் குறித்து ஆப்ரகாம் ரொனால்ட் கூறியதாவது: சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்[2]. சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைந்து வருகின்றன[3]. தேவையானவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்[4]. கிறிஸ்தவ சர்ச், கல்லறைகள், நிலங்களை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[5]. தொடர்ந்து கல்லறைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. பெரியகுளத்தில் போராட்டத்திற்கு பின், கல்லறை திரும்ப பெறப்பட்டது. கல்லறைக்கு கூடுதல் இடங்களை அரசு ஒதுக்கித்தர வேண்டும்[6]. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளை நிறைவேற்ற, நீதிபதி மிஸ்ரா ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்[7].

கிறிஸ்தவ ஆதரவற்றவர்களுக்கான நிறுவனங்கள் மீது பொய் புகார்: கிறிஸ்தவ ஆதரவற்றவர்களுக்கான நிறுவனங்கள் மீது பொய் புகார் சுமத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[8]. கிறிஸ்தவ திருமணங்களை ஆயர்கள் பதிவு செய்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பதிவு துறையினருக்கு அனுப்புகின்றனர். தற்போது அரசு பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இரு முறை புதுமண தம்பதிகளும், சாட்சிகளும் சர்ச் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்வதில் ஏற்படும் சட்ட வரையறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார்[9].

கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்:. இப்பொழுதுள்ள கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப் பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில்[10] கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது. உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும். பிறகு அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும்[11]. இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த “திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ்” (No Objection Certificate) வழங்கப்படும். இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் திருமணம் நடத்தி வைக்கப்படும், அதற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு, அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும். ஆக, இப்பொழுது இவர்களுக்கு என்ன பிரச்சினை?

தெய்வத்துவ இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற விழாவில், கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை[12]: “கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்ய விலக்கு அளிக்க வேண்டும்,” என இந்திய தேசிய அப்போஸ்தல பேராயர் பால் ஆர்.டி.மாறன் கேட்டு கொண்டார். மதுரையில் அவர் கூறியதாவது: “அப்போஸ்தல பேராயத்தின் கீழ் இயங்கும் இறையியல் பல்கலை சார்பில் 10வது பட்டமளிப்பு விழா, இன்று மதுரையில் நடக்கிறது. 20 மாநிலங்களில் நான்காயிரம் போதகர்களுக்கு, முதற்கட்டமாக இறையியல் பட்டயக்கல்வி, குருத்துவ பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்தாண்டு தெய்வத்துவ இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 465 பேருக்கு, இன்றைய விழாவில் பட்டம் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், அந்தந்த மத குருக்களுக்கு தேசிய மனித நேய நல்லிணக்க வகுப்புகளை நடத்த வேண்டும். கிராம பூஜாரிகள், இஸ்லாமிய உலமாக்களுக்கு இருப்பது போல, கிறிஸ்தவ ஊழியர்களுக்கும், நல வாரியம் ஏற்படுத்த வேண்டும்”, என்று இப்படி கூறிவிட்டு, இல்லறத்தைப் பற்றி பேசுகையில், “கிறிஸ்தவர்கள், ஏற்கனவே திருச்சபைகளில் இந்திய கிறிஸ்துவ திருமண பதிவு சட்டம் 1872ன்படி, அரசு பதிவு துறையில் பதிவு செய்கின்றனர். தற்போது அரசு கட்டாய திருமண பதிவு சட்டம் 2009 கொண்டு வந்துள்ளது. இதனால், கிறிஸ்தவர்கள் இரு முறை திருமணத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளது. கட்டாய திருமண பதிவு சட்டத்திலிருந்து கிறிஸ்தவ திருமணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்”, என்றார்[13].

வேதபிரகாஷ்

© 06-11-2010


[1] தினமலர், கிறிஸ்தவ திருமணங்கள் பதிவில் சட்ட வரையறைகளை நீக்க வேண்டும்: கிறிஸ்தவ ஒன்றிப்பு கோரிக்கை, நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121169

[2] அதாவது அவர்களது செக்ஸ் குற்றங்களில் தலையிடக்கூடாது என்கிறார்களா? செக்ஸ் உரிமை கேட்கவும் செய்வார்களோ என்னமோ?

[3] சின்னப்பா போன்ற பிஷப்புகள் வழக்கில் ஆசிரியைகளை சிக்க வைத்தால், எப்படி ஆரிரியைகள் தைரியமாக கிருத்துவப் பள்ளிகளுக்கு வருவர். அதுமட்டுமா இந்த செக்ஸ் தொல்லை வேறு ஜாஸ்தியாகி விட்டதே? கேட்டால் நிருபர்களையே ரூமில் வைத்து அடிக்கிறார், ஆசிரியைகள் கதி என்னாவது?

[4] அதாவது தேவையானவர்களை இனிமேலும் நியமிக்க அவர்களால் முடியவில்லை போலும். இதுவும் நாடகம் தான், ஏனெனில், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், அவர்களது விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று சொல்லிவிட்டு இப்படி கேட்கும் ரகசியம் என்னவோ?

[5] தீண்டாமை சுவர்களைக் கட்டி, உடைக்க வந்தவர்களை கைது செவிக்க வைத்து, நன்றான காரியங்கள் செய்து வரும் இவர்களா இப்படி கேட்பது?

[6] தங்களது நில ஆக்கிரமிப்பு வேலையை தொடர்ந்து நடத்த இப்படியொரு உபாயோத்தோடு கோரிக்கை வைக்கிறார்கள் போலும். வெளிநாடுகளில் இப்பொழுது, கிருத்துவர்கள் இறந்த உடல்களை எரிக்க ஆரம்பித்து விட்டார்கள், ஆகையால் இங்கும் அவ்வாறு தாராளமாக செய்யலாம்.

[7] இங்கும் அவர்களுடைய இரட்டை வேடம் வெளிப்படுகிறது. அகில இந்திய அளவில் பிஷப்புகளே இவ்விஷயத்தில் பிளவு பட்டுள்ளனர். ஏற்கெனவே பல பிரிவுகள் மிஸ்ட்ரா அறிக்கையை எதிர்துள்ளனர். ஆனால் இவர்களோ பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

[8] இதென்ன புது பிரச்சினை? யார் இப்பொழுது “கிறிஸ்தவ ஆதரவற்றவர்களுக்கான நிறுவனங்கள்” மீது பொய் புகார்களை சுமத்துகின்றனர்? மறைமுகமாக பாலியல், வன்புணர்ச்சி, கலவி, காமம், ஃபிடோஃபைல்,.முதலியவை எல்லாம் நடக்கவே இல்லை என்கிறார்களோ?

[9] திருமணத்தைப் பற்றி கவலைப் படாமல், இவர்களே பல கற்பழிப்புகள், பாலியல், வன்புணர்ச்சி, கலவி, காமம், ஃபிடோஃபைல், வேலைகளை செய்து வரும் நிலையில் எல்லா அதிகாரங்களும் அவர்கள் கைகளில் விட்டுவிட்டால், நாளைக்கு ஆவணங்களை எப்படி வேண்டுமானாலும் திருத்தி விடுவார்களே?

[10] இப்படி ஒருதலைப் பட்சமாகவே திருமணங்கள் செய்யப்பட்டு, அதில் இந்துக்கள் ஏமாற்றப்படுகின்றனர் மற்றும் தொடர்ந்து துன்புறுத்தப் படுகின்றனர். குறிப்பாக இந்து பெண்கள் பலர் இந்த பிரிவில் ஏமாற்றப்படுகின்றனர்.

[11] ஆனால், பெரும்பாலும், பெண்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. குறிப்பாக கிருத்துவர்கள் இந்துக்களை திருமணம் செய்து கொள்ளும் போது பெண்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.

[12] தினமலர், கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை, செப்டம்பர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=94640

[13] கத்தோலிக்கர்கள் தாம் திருமணம் செய்து கொள்ளாமல் பிஷப், பாதிரி என்றும் கன்னியாஸ்திரி என்றும் அலைவதால் செக்ஸ் , போலியல் என்று ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் ஓரளவிற்கு குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. ஆனால், கத்தோலிக்கர்-அல்லாத கூடத்தினர் தாம் இப்பொழுது அளவிற்கு அதிகமாக செக்ஸில் இறங்கியுள்ளனர், ஆகவே, இது அவர்களுடைய பெரிய பிரச்சினையே ஆகும்.