Archive for the ‘ஆராய்ச்சி’ Category

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?

ஜூலை 14, 2017

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?

Hebron church dedmilition stayed by SC - CHN_2017-07-14_maip1_23

வீடு சர்ச் ஆகி, கல்யாண மண்டபம் ஆனது: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், கே.பி. எடிசன், தேவாலயம் – ஹெப்ரான் காஸ்டில் சர்ச் – மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டினார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி வீடு கட்டுவதற்காகத் தான் பெற்றார். ஆனால், வ்வறு செய்யாதலால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.  இந்நிலையில் தான், சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. அதற்குள் மேலே குறிப்பிடப்பட்ட ஆர்பாட்டங்கள் எல்லாம் நடைந்தேறின.

Hebron church dedmilition stayed by SC - TOI, chennai

உச்சநீதி மன்றத்தில் முறையீடு: சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. இதனால், கே.பி. எடிசன் அதனை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் அரியமா சுந்தரம் மற்றும் வி. பாலாஜி மூலம் முறையீடு செய்தார். 13-07-2017 வியாழக்கிழமை அன்று உச்சநீதி மன்றம் அந்த ஆணையை நிறுத்தியது[1].  2006லிருந்தே சென்னை உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கை இழுத்தடித்தது தெரிகிறது. இது வெறும் சென்னை பெருநகர் அபிவிருத்தி அணையத்தின் வரைமுறைகளை மீறியதற்கான வழக்கு என்பது போலில்லாமல், ஏதோ சர்ச் இடிப்பு என்ற தோரணையில் மாற்றியிருப்பதும் தெரிகிறது, ஏனெனில், டெக்கான் ஹெரால்டு, அவ்வாறுதான் தலைப்பிட்டு, “SC stays demolition of N’bakkam Hebron church” செய்தி வெளியிட்டுள்ளது. தமிழில் தேவாலயம் என்று குறிப்பிட்டது, புரியாமல் இருக்கலாம், ஆனால், இதில் சர்ச், அதிலு ஹெப்ரான் சர்ச் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளராகவும் பாஸ்டர் கே.பி. எடிசன் பொறுப்பாளராக இருக்கிறார். அரசியல் பின்னணியும் இருப்பதால், போராட்டத்தையும் முடுக்கி விட்டிருக்கிறார்.

hebron - protest - CHN_2017-07-13_maip5_12

சர்ச் முன்பு போராட்டம்: 12-07-2017 அன்று அந்த சர்ச் முன்பாக உறுப்பினர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். சத்தியம் டிவி, கிருத்துவ செனல் ஆதலால், பிரச்சார ரீதியில் செய்தி வெளியிட்டது. கே.பி. எடிசன் ஒன்றுமே தெரியாதது போல, பத்தாம் தேதி தான் தனக்கு ஆணை கிடைத்தது, அதைத்தவிர ஒன்றும் தெரியாது என்று பேசியது வேடிக்கையாக இருந்தது. மேலும் நான்கைந்து பெண்களிடம், ஒருவர் வீடுகள் இருக்கும் இடத்தில் சர்ச் இருக்கக் கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்பதைப் போலவும், அப்பெண்கள், இல்லை என்பது போலவும் காட்டியது. வேடிக்கை என்னவென்றால் அப்பெண்கள் எல்லோரும், நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டிருந்தது தான். சர்ச்சிற்குள் ஆர்பாட்டம் செய்த பெண்கள் வெள்ளையுடை அணிந்து கொண்டிருந்த போது, இவர்கள் ஏன் இந்துக்கள் போன்ற தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று புரியவில்லை. இருப்பினும் எவ்வாறு செக்யூலரிஸ ஆட்டில் தனிப்பட்ட பிரச்சினையை, பொதுப்பிரச்சினையாக ஆக்கலாம், உள்மத பிரச்சினையை, மதங்களூக்கு இடையேயுள்ள பிரச்சினையாக்கலாம் என்றெல்லாம் எப்படி திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ளல்லாம். அந்த பேட்டி எடுத்தவர், வீடுகள் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் இருக்கலாம், சர்ச் இருக்கக் கூடாது என்றும், ஏன் விபச்சாரமே நடக்கிறதே, அதெல்லாம் தொந்தரவாக இல்லை, சர்ச் இருப்பது தான் தொல்லையாக இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார்[2].

Hebron Castle chruch - protest-demo-politicizing issue

வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம்: போதாகுறைக்கு, இன்னொரு வீடியோவில், வள்ளுவர் கோட்டத்தில் சீல் வைத்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியது, அரசியல்கட்சிகள் சார்பில் தலைவர்கள் பேசியது முதலியவை காட்டப்பட்டது. ஜவாஹிருல்லா ஆதரித்து பேசுகிறார். இனிகோ இருதயராஜ், வன்னியரசு, விடுதலை சிறுத்தை கட்சி என்றெல்லாம் பேசுவதை காட்டியது. இதிலும், தமாஷா என்னவென்றால், ஜவாஹிருல்லா ஏற்கனவே கைது செய்யப்படாமல், பிணையில் இருக்கும் குற்றவாளி ஆவார். பிறகு, அவர் எப்படி எடிசனை ஆதரித்துப் பேசுகிறார் என்று தெரியவில்லை. அதாவது, சட்டமீறலைப் பற்றி கவலைப் படாமல், இதனை அரசியலாக்கி, பிரச்சினையை பெரிது படுத்த முயன்றது நன்றாகவே தெரிகிறது. மேலும், மதரீதியில் மற்றும் சிறுபான்மை கோணத்திலும் திசைத் திருப்ப முயற்சிகள் நடக்கின்றன.  இதற்கான பின்னணியும் கடந்த கால அரசியல் திட்டங்களில் வெளிப்படுகிறது.

Hebron Castle chuch - protest

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு [அக்டோபர் 2016]: இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் சட்ட ஆணையம் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. பாஜக அரசின் இத்தகைய முயற்சிக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், எஸ்.டி.பி.ஐ உட்பட பலவேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இவ்விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவும் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் –

  1. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,
  2. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்,
  3. திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,
  4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
  5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,
  6. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,
  7. தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,
  8. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளர் பாஸ்டர் கே.பி. எடிசன்,
  9. கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ்,
  10. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன்,
  11. இந்திய சுவிஷேச திருச்சபை தலைமை பேராயர் எஸ்றா. சற்குணம்

ஆகியோரை சந்தித்து பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கும் மத்திய பாஜக ஆட்சியின் முயற்சி குறித்து எடுத்துரைத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு தருமாறும், இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அணி திரளவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவ்விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Hebron Castle chruch - protest-demo

கே. பி. எடிசன் 2011ல் திமுகவை ஆதரித்தது[3]: கலைஞர் டிவி நடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது.  அதில், கே. பி. எடிசன் பேசியது, “மதம் மாற்றச் சட்டம் இருந்தபோது, பல அடக்குமுறைகள் செய்யப்பட்டன[4]. அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்தோம். மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறது. நான் கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போது, நிருபர் குறிப்பிட்ட விஷயத்திற்கு இழுக்கிறார்). சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதி வேண்டும் என்றமுறை இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லைபுரியவில்லை. ஆனால், சமீபத்தில் அவ்வாறு தேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்து, அதில் சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார். இந்துக்கள் காஷ்மீரத்தில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; பஞ்சாபில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப் பட்டால், என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்[5].

©  வேதபிரகாஷ்

14-07-2017

Hebron Castle chruch - Iniko - Jawahirullah--politicizing issue

[1]  Deccan Herald, SC stays demolition of N’bakkam Hebron church, J. Venkatesan, New Delhi, July 13, 2017.

[2]https://www.facebook.com/HebronCastleChurch/videos/pcb.1358924214161918/1358918130829193/?type=3&theater

[3] https://christianityindia.wordpress.com/2011/04/11/all-christians-should-vote-for-dmk/

[4] https://christianityindia.wordpress.com/2010/12/29/revocation-of-anti-conversion-act-appeasing-christians/

[5] இது ஏதோ இந்துக்களை மிரட்டுவது போல இருந்தது. அது மட்டுமல்லாது, இந்துக்கள் எல்லோரையும் மதம் மாற்றி, சிறுபான்மையினராக மாற்றி விடுவோன் என்ற தோரணையில் பேசியது தெரிந்தது.

Advertisements

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர் வழியில், ஜீசஸ்-கட்டுக்கதைய பரப்ப ஆரம்பித்து விட்டாரா?

பிப்ரவரி 5, 2017

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர் வழியில், ஜீசஸ்-கட்டுக்கதைய பரப்ப ஆரம்பித்து விட்டாரா?

rajini-at-book-release-function-3

ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர், ஜீசஸ்: நான் நடிகராக அறியப்படுவதைவிட, ஆன்மிகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார், என்று ஊடகங்கள் எதிர்பார்த்தபடி செய்திகளை வெளியிட்டன, ஆனால், “கிருஷ்ணர், ஜீசஸ்”, என்றெல்லாம் அளந்ததைப் பற்றிக் குறிப்பிடவில்லை. “பாபாஜி” பெயரில் ஆன்மீகத்தை தேடும் ரஜினிகாந்த, கடந்த வருடங்களில், கிருத்துவர்களின் வலையில் விழுந்துள்ளது தெரிகிறது. ஒரு பாதிரி இவரை ஆசிர்வதிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. பெங்களூரு வீட்டில், தனது அறையில் ஏசு கிருஸ்து படம் வைத்திர்ருப்பதை காண முடிந்தது. இப்பொழுது வெளிப்படையாகவே, “கிருஷ்ணர், ஜீசஸ்”, என்றெல்லாம் பேசியது, அந்த “தயா மாதா” (1914-2010) வலையில் விழுந்து விட்டார் என்று தெரிகிறது. யோகதா சத்சங்கத்தைப் பொறுத்த வரையில், பாபாஜி, ஏசு ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொண்டார்களாம். அதனால், ஏசுவையும் சேர்த்துதான், அவர்கள் தங்களது ஆசிரமங்களில் படங்களை வைத்திருக்கிறார்கள். போதாகுறைக்கு, “கிருஷ்ணர்-ஏசு” படங்களையும் வைத்துள்ளனர். கூட “ஏசு இந்தியாவிற்கு வந்தார்” என்ற கட்டுக்கதையினையும் பரப்பி வருகின்றனர். இதையெல்லாம், இந்த யோகதா சத்சங் மற்றும் யோகானந்த பரமஹம்சர் இவற்றை நம்புகிறவர்கள் நம்புகிறார்கள்.

rajini-at-book-release-functionதெய்வீகக் காதல்புத்தகத்தை ரஜினிகாந்த வெளியிடுதல் (04-02-2017): “யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா’ சார்பில் பரமஹம்ஸ யோகானந்தரின் “தி டிவைன் ரொமான்ஸ்” – எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “தெய்வீகக் காதல்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் 04-02-2017 (சனிக்கிழமை) அன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது[1]. நூலை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது[2]: “சிறு வயதிலேயே எனக்கு ஆன்மிக ஈடுபாடு இருந்தது. எனது அண்ணன் சத்யநாராயணன் ஆன்மிக கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்வார். அப்போதுமனித ஜென்மம் பெரியது. அதை பாழாக்காதீர்கள் பைத்தியக்காரர்களே…’, என்ற பக்தி பாடலை கேட்டிருக்கிறேன். எத்தனையோ ஜென்மங்களை கடந்துதான் மனிதனாக பிறக்கிறோம். இந்த மனித வாழ்க்கையில் சம்சாரம், பணம், சுகம், புகழ், சந்தோஷம் போன்றவற்றில் மூழ்கி விடுகிறோம். இதில் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? மரணத்துக்கு பிறகு என்ன? கடவுள் யார்? ஆத்மா என்றால் என்ன? என்ற கேள்விகள் வருவது அபூர்வம். ஒரு குரு கிடைப்பது அபூர்வம். அந்த குருவிடம் இருந்து போதனைகள் கிடைப்பதும் அபூர்வம்.”

rajini-at-book-release-function-2நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: ரஜினி தொடர்ந்து பேசியது, “நான்பவரை‘ (இறை சக்தியை) கொஞ்சம் விரும்புபவன். நீங்கள் நினைக்கும்பவர்‘ (அரசியல் அதிகாரம்) அல்ல. நான் நடிகர் என்று அறியப்படுவதைவிட, ஆன்மிகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்[3]. ஆன்மிகம்தான் வேண்டும்: பெயர், பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டுமென்று என்னிடம் கேட்டால், ஆன்மிகம்தான் வேண்டுமென்பேன்[4]. மனித ஜென்மம் கிடைப்பதே அரிது[5]. என்னுடைய முதல் குரு, எனது அண்ணன் சத்திய நாராயணா[6]. முதல் ஆன்மிக குரு சச்சிதானந்தர். அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு குருக்களை பின்பற்றி வந்திருக்கிறேன்[7]. ராகவேந்திரரிடம் பக்தியை கற்றுக்கொண்டேன்[8]. நான் யார் என்று எனக்குள் கேள்வி கேட்பதை ரமண மகரிஷி மூலம் கற்றுக்கொண்டேன்[9]. பரமஹம்ச யோகானந்தரின் சுய சரிதைப் புத்தகம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது[10]. ‘ரஜினிகாந்த் ஒவ்வொரு மத குருக்களின் பெயரை சொல்லி குழப்புகிறாரே…’, என்று மக்களும், ரசிகர்களும் நினைத்தது உண்டு. நான் குழப்பவாதி இல்லை. எனது ஆன்மிகத் தேடல் தொடந்து கொண்டே உள்ளது. இமயமலையில் ஏராளமான ஆன்மிக ரகசியங்கள் உள்ளன”, என்றார் நடிகர் ரஜினிகாந்த். விழாவில், யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்வாமி ஸ்மரணானந்தா, பொருளார் ஸ்வாமி சுத்தானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

rajini-with-vishveshwarananda-omkara-ashramஅர்ஜுனனைப் போல் இருங்கள்: ரஜினி தொடர்ந்து பேசியது, “பீஷ்மர் ஒருநாள் கிருஷ்ணனிடம், “கண்ணா! மனிதன் ஏன் பிறந்தான், வாழ்க்கையில் நல்லவை எவை? கெட்டவை எவை? போன்றவைகளை அர்ஜுனனுக்கு மட்டும் கற்றுக்கொடுக்காதே; துரியோதனனுக்கும் அவற்றை எல்லாம் கற்றுக் கொடுஎன்றாராம். அவரும் (கண்ணன்) துரியோதனனிடம் சென்று, “வாவாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதை கற்றுத் தருகிறேன்என்றாராம். அதற்கு துரியோதனன், “கண்ணா, நான் வாழ்க்கையின் நல்லவை, கெட்டவைகளை நன்கு அறிவேன். அர்ஜுனனுக்குத்தான் இதுகுறித்து ஒன்றும் தெரியாது. எனவே, இதையெல்லாம் அவனுக்கே (அர்ஜுனன்) கற்றுக் கொடுஎன்றாராம்இதையடுத்து, வாழ்க்கையின் தத்துவங்கள் அனைத்தையும் பகவத் கீதை மூலம் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் எடுத்துரைத்தார்”. நாம் துரியோதனனைப் போல் இருக்காமல், அர்ஜுனனைப் போல் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியதும் கூட்டம் சிரிப்பலையில் மூழ்கியது.

rajini-in-padappai-ashram-jesus-babaபாபா படம் உருவான கதை[11]: ரஜினி தொடர்ந்து பேசியது, “20 வருடங்களுக்கு பிறகுபடையப்பாபடத்தை முடித்ததும், ‘இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம்’, என்று முடிவு செய்தேன். அப்போது சச்சிதானந்தர் அமெரிக்காவுக்கு என்னை அழைத்தார். பாபா புத்தகத்தையும் உடன் எடுத்துச்சென்றேன். ‘சினிமா சக்தி வாய்ந்தது. ஆயிரம் சுவாமிகள் சொல்லாத விஷயங்கள் சினிமா மூலம் மக்களை எளிதாக சென்று சேரும். ஆன்மிக விஷயங்களையும் சினிமாவில் சொல்லலாம்’, என்று அறிவுறுத்தினார். அப்போது பாபாஜியின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்க முடியவில்லை. அதில் இருந்து ஒரு ஒளி வருவது போல தெரிந்தது. என் உடம்பு என்னவோ மாதிரி ஆனது. வியர்க்கவும் செய்தது. அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. உடனடியாக என் மனதில்பாபாபடத்தின் கதை தயாரானது[12]. அந்த கதையை நானே எழுதி, தயாரித்து படமாக்கினேன். வியாபார ரீதியில் அது நன்றாக போகாமல் நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டம் அடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தேன். அந்த படம் வியாபார நோக்கில் எடுக்கப்பட்டது அல்ல. அதன் பிறகுகிரியா யோகாகற்றேன். அது என் வாழ்க்கையையே மாற்றியது. ‘கிரியா யோகாசாதாரணமானது அல்ல. நமக்கு எது நல்லது? எது கெட்டது? என்று தெரியும். தியானம் சக்தி கொடுக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனாலும் அதை கேட்பது இல்லை.”

© வேதபிரகாஷ்

05-02-2017

rajini-in-babaji-cave-jesus-baba

[1] தினமணி, ஆன்மிகவாதி என்பதில் பெருமை அடைகிறேன்: நடிகர் ரஜினிகாந்த், Published on : 05th February 2017 04:03 AM.

[2]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/05/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2643996.html

[3] தினகரன், மனதை தூய்மையாக வைத்திருந்தால்தான் ஆன்மீகத்தின் பயன் கிடைக்கும் : ரஜினிகாந்த் பேச்சு, 2017-02-04@ 20:00:36

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=277490

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: ரஜினி, By: Karthikeyan,  Updated: Saturday, February 4, 2017, 21:10 [IST]

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/i-am-devotional-person-says-rajni-kanth-273309.html

[7] தினத்தந்தி, மனித ஜென்மம் கிடைப்பதே அரிது” – ‘தெய்வீக காதல்புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு, பிப்ரவரி 04, 08:08 PM

[8] http://www.dailythanthi.com/News/State/2017/02/04200833/TheiveegaKadhal-Rajinikanth–Speech.vpf

[9] தினமலர், ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த், பிப்ரவரி.4, 2017. 20.04.IST.

[10] http://cinema.dinamalar.com/tamil-news/55882/cinema/Kollywood/spritiualist:-rajini.htm

[11] மாலைமலர், நடிகன் என்பதை விட ஆன்மிகவாதியாக இருப்பதே எனக்கு பெருமை: ரஜினிகாந்த் பேச்சு, பதிவு: பிப்ரவரி 05, 2017 00:49.

[12] http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/05004909/1066361/I-am-proud-being-an-spiritualist-rather-than-an-actor.vpf

“கற்பழிப்புப் புகார்” – செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் – வல்சன் தம்பு, ஏன் எல்லோரிடத்திலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்?

ஓகஸ்ட் 1, 2015

“கற்பழிப்புப் புகார்”செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர்வல்சன் தம்பு, ஏன் எல்லோரிடத்திலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்?

Valsan Thampu with Mother Theresa in 1994

Valsan Thampu with Mother Theresa in 1994

கத்தோலிக்கப் பாதிரி, கல்லூரி முதல்வர், சிறுபான்மை கமிஷன் உறுப்பினர் என்று பல அவதாரங்களில் இருப்பவர்: வல்சன் தம்பு, ஒரு கத்தோலிக்க பாதிரி, இறையியல் வல்லுனர் மற்றும் இப்பொழுதைய செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர். இக்கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. 2008ல் முதல்வராவதற்கு முன்னர், இக்கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு கத்தோலிக்கக் கிருத்துவம் பற்றிய பல மொழிபெயர்ப்புகளை செய்து வந்தார். வடவிந்திய சர்ச்சில் ஒரு பாதிரி அந்தஸ்தில் உள்ளார் மற்றும் தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார். பிஎச்.டி மாணவி சதீஷ்குமார் என்ற பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்து, வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேலையில், அக்கல்லூரியின் இன்னொரு பெண்-பேராசிரியருடன் ஏன் தகராறில், வல்சன் தம்பு ஈடுபட்டுள்ளார் என்பது வியப்பாக இருக்கிறது.

Prof Nandita Narain taught 23 years st St. Stephen

Prof Nandita Narain taught 23 years st St. Stephen

ஜூலை.31, 2015: நந்திதா நாராயண் என்கின்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரி கணித பேராசிரியர் மற்றும் தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர், வல்சன் தம்பு தன்னை பழிவாங்க நினைக்கிறார் என்று எடுத்துக் காட்டியுள்ளார். வழக்கம் போல தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட விடுமுறை கேட்டபோது, அதனை மறுக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்[1].

ஜூலை.30, 2015: வல்சன் தம்பு, தங்களை ஆதரிப்பதற்காக பல்கலை மானிய குழுக்கு பேஸ்புக் மூலம் நன்றி தெரிவித்தார்[2]. பெரிய அற்புதம் நிகழ்ந்தது, ஆண்டவர் தம்மை காப்பாற்றினார் என்றேல்லாம் எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[3].

Valsan Thampu row with Prof Nandita Narain

Valsan Thampu row with Prof Nandita Narain

ஜூலை.30, 2015: பாதிக்கப்பட்ட மாணவி, அக்டோபர்.14 2014 முதல் ஜூன்.30 2015 வரை தனக்கு சேர வேண்டிய ரூ. 20,800/- மற்றும் ரூ.1,21,420/- போக்குவரத்து படியையும் சேர்த்துகொடுக்குமாறும், தான் ஆராய்ச்சி செய்து தயாரித்து வைத்துள்ள NY-6, 2NY-91, 2NY-92, 2NY-132 கூட்டுப்பொருட்களை, தன்னுடைய ஆரய்ச்சிக் குறிப்புகளுடன் திரும்பக் கொடுக்குமாறும் கடிதம் மூலம் வல்சன் தம்புவைக் கேட்டுக் கொண்டுள்ளார்[4].

Valsan Thampu envious of Nandita Narain

Valsan Thampu envious of Nandita Narain

ஜூலை.23, 2015: ஸ்மிருதி ராணி, பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து பேசினார். உடன் சிபிஎம்மின் போலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் இருந்தார். அம்மாணவிக்குரிய உதவித் தொகை, சோதனைக்கூடத்திற்கு செல்லும் அனுமதி முதலியவற்றை தொடர்ந்து கொடுக்குமாறு, தில்லி பல்கலஒக்கழகத்திற்கு உத்தரவிட்டார்[5].

ஜூலை.5, 2015: பல்கலை மானிய குழு, ஒரு பிரதிநிதியை செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு அனுப்பி வைத்தது[6].

ஜூலை.7, 2015: டெல்லி பல்கலைக்கழக பதிவாளருக்கும், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன[7]. ஸ்டீபன் கல்லூரியில், ஆராய்ச்சி படிப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவ்விகாரத்தை மூடி மறைக்க முயலும் முதல்வரை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் டெல்லி பல்கலை. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்[8].

St Stephen victim interview with NDTV

St Stephen victim interview with NDTV

ஜூன்.24 2015: பேராசிரியர் சதீஷ் குமார் மீது போலீசில் பாலியல் புகார் அளித்ததால், பாலியல் புகாரில் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலையில், இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது[9]. கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சதீஷ் தன்னை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது எதிர்காலம் பாதிக்கும் என்று அஞ்சி தான் இத்தனை ஆண்டுகளாக சதீஷ் குமார் மீது புகார் அளிக்கவில்லை என்று அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சதீஷ் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது[10]. இதற்கிடையே சதீஷ் கல்லூரியின் நிதி நிர்வாக அதிகாரி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கல்லூரி முதல்வர் வல்சன் தம்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருந்தால் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆனால் அது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. மகாத்மா காந்தி, யேசு நாதர், நபிகள் நாயகம் மீது கூடத் தான் புகார் எழுந்தது. அனைத்து சீர்திருத்தவாதிகள் மீதும் புகார் உள்ளது என்றார்[11].

Valsan Thampu fights through Facebook

Valsan Thampu fights through Facebook

2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி: டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரிபவர் சதீஷ்குமார். இதே துறையில் பி.எச்டி படித்து வரும் மாணவிக்கு, சதீஷ்குமார் வழிகாட்டியாகவும் இருக்கிறார். இந்நிலையில், சதீஷ்குமார் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக சம்பந்தப்பட்ட மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமும் (ஐசிசி), முதல்வரிடமும் புகார் தெரிவித்தார்[12].  இந்நிலையில், சத்தீஷ் தனது ஆசைக்கு இணங்கினால் மட்டுமே முனைவர் ஆய்வை முடித்துக் கொடுப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி வந்ததாக புகார் கூறியுள்ளார் அந்த மாணவி. இதுகுறித்து அம்மாணவி அளித்த புகாரில், இதற்கான முயற்சியில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி சத்தீஷ் தன்னிடம் முறை தவறி நடந்துகொண்டதாக கூறியுள்ளார். தனக்கு எதிராக புகார் செய்தால் முனைவர் பட்டம் பெறமுடியாது என்று சத்தீஷ் மிரட்டியதால் ஆய்வை முடிப்பதற்காக பொறுமை காத்ததாக அம்மாணவி கூறியிருக்கிறார்[13].

Valsan Thampu responds

Valsan Thampu responds

செக்ஸ் புகாரில் சர்ச்சைக்குள்ளான வல்சன் தம்பு: ஆனால், ஒழுங்கு நடவடிக்கை குழு, இந்த விவகாரத்தில் பாரபட்சம் பார்ப்பதாகவும், சதீஷ்குமாரை காப்பாற்ற முதல்வர் வல்சன் தாம்பு முயல்வதாகவும் கூறி மாணவி, ஐசிசியில் அளித்த புகாரை வாபஸ் பெற்றார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக சதீஷ்குமார் மற்றும் முதல்வருக்கு எதிராக மாணவி போலீசில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பேராசிரியர் சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், டெல்லி பல்கலையின் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கல்லூரியின் வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜினாமா செய்ய தயார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் வல்சன் தாம்பு கூறுகையில், ‘இது தொடர்பாக கல்லூரிக்குள்ளேயே விசாரணை நடந்து வருகிறது.  என் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கல்லூரியின் நலன் கருதி அடுத்த நிமிடமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Valsan Thampu and St.Stephen involved in controversies

Valsan Thampu and St.Stephen involved in controversies

பலவித சர்ச்சைகளில் சிக்கியுள்ள வல்சன் தம்பு: வசன் தம்பு, பொதுவாகவே பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பது தெரிகிறது. இதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

  1. 2008ல் அலஹாபாத் விவசாய நிறுவனத்திலிருந்து பெற்ற (தனிநிகர் பல்கலைக்கழகம்) தனது இறையியல் பிஎச்.டி செல்லாது என்பதால் ராஜினாமா செய்ய நேரிட்டது. ஆனால், அடே ஆண்டில் மறுபடியும் முதல்வராக நியமிக்கப்பட்டார். விவசாய நிறுவனத்திலிருந்து இறையியல் பிஎச்.டி பெற்றதே வினோதமாக இருக்கிறது.
  1. 2008ல் ஒரு சமஸ்கிருத ஆசிரியர், ஒரு அமெரிக்க மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவ்வழக்கு, தில்லி உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கிலும், அம்மாணவி வல்சன் தம்புவிடம் புகார் கொடுக்கச் சென்றபோது, அவர், அந்த சமஸ்கிருத ஆசிரியரோடு சேர்ந்து கொண்டு, தன்னை கல்லூரியிலிருந்து விலக்க முயற்சித்தார் என்று கூறியிருக்கிறார்[14].
  1. 2012ல் 19-வயதுக்கு கீழே போட்டியிடும் கிரிக்கெட் கேப்டனாக இருக்கும், உன்முக்த் சந்த், என்ற அக்கல்லூரி மாணவர் குறைந்த கல்லூரி வருகைப்பதிவு உள்ளது என்று பரீட்சை எழுதவிடாமல் வல்சன் தம்பு தடுத்தார். பிறகு ஒப்புக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

01-08-2015

[1] http://www.business-standard.com/article/pti-stories/stephen-s-maths-prof-accuses-principal-of-pursuing-personal-115073101312_1.html

[2] http://timesofindia.indiatimes.com/city/delhi/UGC-is-backing-him-claims-Thampu-on-FB/articleshow/48303658.cms

[3] “Shouldn’t we, my friends, as a community of ordinary people, rejoice at the extraordinary things that happen in our midst? [Eight] years ago, no one gave me a ghost of a chance to survive the ferocious, orchestrated attacks that a large number of highly feared agents had unleashed -de facto declaring a war-on the college. There were those who believed that the College would go six feet underground. By the mercy of the Almighty, it today stands towering several feet above all other institutions in excellence. If this is not a miracle, what is?”

[4] http://www.dnaindia.com/india/report-st-stephen-s-molestation-victim-sends-caution-note-to-valson-thampu-and-professor-2109631

[5] http://www.ndtv.com/delhi-news/had-a-great-time-valson-thampu-after-meeting-university-grants-commission-officials-1202280

[6] http://www.siasat.com/news/st-stephens-molestation-row-valson-thampu-meets-ugc-officials-says-had-great-time-803386/

[7]  தி-இந்து, டெல்லி கல்லூரி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு: அறிக்கை கோரியது மனிதவள அமைச்சகம், Published: June 24, 2015 13:11 ISTUpdated: June 24, 2015 18:20 IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1288189

[9] http://tamil.thehindu.com/india/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7350004.ece

[10] Read more at: http://tamil.oneindia.com/news/india/jesus-prophet-muhammad-mahatma-gandhi-have-faced-allegatio-229618.html

[11] http://tamil.oneindia.com/news/india/jesus-prophet-muhammad-mahatma-gandhi-have-faced-allegatio-229618.html

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=154571

[13] தினகரன், செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டம், மாற்றம் செய்த நேரம்:7/7/2015 6:28:09 AM.

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2617183/Case-against-St-Stephens-college-professor-Nandita-Narain-hold-principal-seeks-court-settlement.html

தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (2)!

மார்ச் 5, 2014

தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (2)!

இதன் முதல் பகுதியை இங்கு வாசிக்கவும்[1].

பாவமன்னிப்பு தண்டனை தீர்ப்பு - தினகரன்

பாவமன்னிப்பு தண்டனை தீர்ப்பு – தினகரன்

 

தலைமறைவாக  இருக்கும்  திருச்சபை  செயலாளர்  சார்லஸ்: சமூகத்திற்கு, சட்டத்திற்கு “தலைமறைவாக இருக்கும் திருச்சபை செயலாளர் சார்லஸ்” என்றால், தமிழக ஊடகக்காரர்களுக்கு அவருடைய இருப்பிடம் தெரிந்துள்ளது என்றாகிறது. “தொடர்பு கொண்டோம்” என்றால், நக்கீரன் சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பார்த்தது போல பார்த்தார்களா அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டார்களா என்று தெ ரியவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் கூட, தலைமறைவான ஒரு நடிகையின் கணவர், இவ்வாறுதான் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். எனவே, ஊடகக்காரகள் ஒன்று போலீசாரை விட புலனாய்வில் சீர-சூரர்களாக இருக்க வேண்டும் அல்லது போலீசாரே இப்படி நடந்தாலும், செய்திகள் வந்தாலும், கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் போலும்!

பாவமன்னிப்பு தண்டனை தீர்ப்பு - ஆங்கிலம்

பாவமன்னிப்பு தண்டனை தீர்ப்பு – ஆங்கிலம்

ஏசுவிடம்  மன்னிப்புக்  கேட்டால், செய்த  குற்றம்  நீங்கி  விடுமா  என்ற  கேள்வி  எழுந்துள்ளது (மார்ச் 2014): கூட்டம் கூட்டி சில விசயங்களை விவாதிக்க வேண்டும் என்று சார்லஸ் கேட்டு வந்தார். ஆனால், மார்ட்டின் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், சார்லஸ் மற்றவர்களுடன் சேர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் எச். ஏ. மார்ட்டின் [ Dr HA Martin], திருச்சியில் உள்ள தமிழ்நாடு இவாஞ்செலிகல் லூதரன் சர்ச்சின் [TN Evangelical Lutheran Church in Tiruchy] பிஷப் ஆவர். நீதிமன்றத்தின் ஆணைப்படி தேர்தல் நடத்துவதாக இருந்தது, ஆனால், ஏப்ரல் 26 மற்றும் 27, 2013 தேதிகளில் தன்னிச்சையாக பொதுக்குழுக் கூட்டி, மத்திய அலுவலத்தை மூடும்படி செய்து விட்டார். நீதிமன்றம் செப்டம்பர் 6, 2013 அன்று அவ்வாறு ஆணையிட்டிருந்தது[2]. 42வது டெரின்னியல் சைனாடு கூட்டமும் [the 42nd Triennial Synod] நடத்தப்படவில்லை. இதனால், தேர்தல் நடத்தப்படாதலால், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு உள்ளானார். இதனால், இ.டி. சார்லஸ் மற்றும் அறுவர் [ED Charles and six others] நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனால், கீழ்கோர்ட் அவர் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ். கே. அக்னிஹோத்ரி மற்றும் நீதிபதி கே. கே. சசிதரன் நிச்சயமாக பிஷப் , நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்குள்ளாகியிருக்கிறார். இருப்பினும், தனது தவறை உணர்ந்து கடவுளிடன் / ஏசுவிடன் இறைஞ்சி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி அவரை விட்டுவிட்டனராம்! ஏசுவிடம் மன்னிப்புக் கேட்டால், செய்த குற்றம் நீங்கிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது[3]. இதைப் பற்றி சில ஊடகங்களும் அத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளன[4].

Ziegenbalg myths floated in 2006 - The Hindu

Ziegenbalg myths floated in 2006 – The Hindu

தி  ஹிந்துவின்  அமுக்கலான  செய்திகள் (ஜூலை 2012): ஜூலை 2012ல், வழக்குகள் போட்டு, இவ்வாறு கலாட்டா செய்து வந்தவர்கள் ஒன்றுமே தெரியாதது போல, ஜீஜன்பால்கு [ Bartholomaeus Ziegenbalg], ஹென்ரிச் புளுட்சௌ [Heinrich Plutschau] முதலிய ஜெர்மானிய பாதிரிகள் இந்தியாவிற்கு வந்த 306வது ஆண்டு நினைவு கொண்டாடினார்கள். “தி ஹிந்து”வும் அமர்க்களமாக செய்தி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டது[5]. ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டுக் கொண்ட வழக்குகள், பிரச்சினைகள் பற்றி மூச்சு விடவில்லை. “சர்ச்சைக்குறிய பாதிரிகளின் கொண்டாட்டம்” என்றெல்லாம் தலைப்பிடவில்லை. 2006ல் கூட “தி இந்து” இதப் பற்றிப் பாட்டுப் பாடியுள்ளது[6].  ஒரு தபால்தலை வெளியிடப்பட்டதைப் பற்றிய செய்தியும் தடபுடலாக வெளியிட்டது[7]. புத்தக வெளியீட்டு நிகழ்சியும் போடப்பட்டது[8]. மாறாக, “ஸ்தாபகர்களின் உருவச்சிலைகள் திறந்து வைக்கப்பட்டன”, என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டது[9]. இந்து ராமுக்கு இப்படி கிருத்துவர்களின் மீதான பாசம், பந்தம் ஏன் என்று புரியவில்லை. இருப்பினும் ஒரு கத்தோலிக்க பெண்மணியை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் உள்ளதால், அந்த பிணைப்பு இருக்கக்கூடும். இவருடைய கம்யூனிஸ அன்புப்பொழிவுகளை, அக்கரையுடன் வெளிவரும் செய்திகளிலேயே கண்டு தெரிந்து கொள்ளலாம்.

ஜீஜன்பால்கு பங்கு 300 ஆண்டுவிழா

ஜீஜன்பால்கு பங்கு 300 ஆண்டுவிழா

சீகன்பால்கு  தரங்கம்பாடி  வந்த  307ம்  ஆண்டு  நினைவு  தினம்[10]: தரங்கம்பாடி: ஜெர்மன் நாட்டை சேர்ந்த சீகன்பால்கு தனது நண்பர் ஹென்றிக் புளுச்சோவுடன் 1706ம் ஆண்டு ஜூலை 9ம்தேதி கிறிஸ்தவ மத போதகராக கடல் மார்க்கமாக நாகை மாவட்டம் தரங்கம்பாடி வந்தார். தரங்கம்பாடியில் தங்கி மத பிரசாரத்துடன், பெண் கல்வியை  வலியுறுத்தி  கல்விப் பணியிலும், தமிழில்  அச்சுக் கலையை  உருவாக்கியும் தமிழ்  மக்களுக்கு சமுதாயப் பணி செய்து வந்தார். அவர் வந்த ஜூலை 9ம்தேதியை தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை மிசியோன் தோத்திரத் திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். அவர் வருகை தந்த 307ம் ஆண்டு தினவிழா தரங்கம்பாடி கடற்கரையில் கொண்டாடப்பட்டது. கடற்கரையில் உள்ள சீகன் பால்கு நினைவுத் தூணுக்கு பொறையார் டி.பி.எம்.எல். கல்லூரி முதல்வர் ஜோனாஸ் குணசேகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராஜவீதியில் உள்ள சீகன் பால்கு சிலைக்கு டி.இ.எல்.சி. பொருளாளர் ஞான ராஜ் மாலை அணிவித்தார். அப்போது தரங்கம்பாடியில் சீகன்பால்கு வாழ்ந்த இல்லம், ஜெர்மன் நாட்டு ஹல்லே பல்கலைக் கழகத்தின் பிராங்கெ பவுன்டேசனும், டி.இ.எல்.சி. திருந்சபையும் இணைந்து அருங்காட்சியமாக மாற்றப்படும் என்று கூறினார்.  விழாவில், கிறிஸ்டோபர் மாசிலாமணி, மறை மாவட்ட தலைவர் நவராஜ் ஆபிரகாம், தரங்கை சபை குரு ஜான்ஹென்றி, சீகன்பால்கு ஆன்மீக மன்ற பொறுப்பாளர் ஜஸ்டின் விஜயகுமார், திருச்சபை பொறியாளர் தமிழரசன் மற்றும் தரங்கம்பாடி, பொறையார் மறை மாவட்ட குருமார்கள் கல்வி நிறுவனங்கள் சபை மக்கள் உள்ளிட்ட 300க்கும்  மேற் பட்ட  கலந்து கொண்டனர்[11]. ஆனால், ஜீஜன்பால்கு இந்து விதவை ஒருத்தியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தது, சிறையில் அடைக்கப் பட்டது போன்ற சரித்திர உண்மைகள் மறைக்கப்பட்டன.

TELC 2012 July anniversary litigants together

TELC 2012 July anniversary litigants together

திருச்சபையின்  உரிமைகளை  பறிக்கும்  அரசாணையை  திரும்பப்  பெறவேண்டும்[12] (ஜனவரி 2013): தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் லுத்தரன் முன்னேற்ற இயக்க முதன்மை பொதுச் செயலர் இ.டி. சார்லஸ். நாகை மாவட்டம், பொறையாறில் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்களின் ஒருநாள் மாநாடு வெள்ளிக்கிழமை 25-01-2013 அன்று நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் இ.டி. சார்லஸ் மேலும் கூறியது: “திருச்சபையில் சபை குருமார்களுக்கு வாக்குரிமை கிடையாது; ஊதியம் கிடையாது; திருச்சபை ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் அடங்கிய ஆணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. இது திருச்சபையின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. இதை முதல்வர் மறுபரிசீலனை செய்து, திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து முதல்வருடனான சந்திப்பின்போது கோரிக்கை விடுக்கப்படும். நிகழாண்டில் தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எந்த நடைமுறையில் நடத்துவது என்பது குறித்து தமிழக அரசையும், நீதிமன்றத்தையும் அணுக உள்ளோம். கிறிஸ்தவர்களின் உரிமைகளை முன்னெடுத்து செல்லும் வகையிலும், அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்காலத்தில் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் ஒரு தேசிய அரசியல் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து தேசிய அளவில் கிறிஸ்தவ திருச்சபையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது”, என்றார்.

All are equal before law - Indian court says no

All are equal before law – Indian court says no

முன்னதாக  நடைபெற்ற  கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்[13] (ஜனவரி 2013): தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் மீது தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் பெரிய அளவில் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவது, ஆயர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவது, கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளின் உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 100 சபை குருமார்கள், 600-க்கும் மேற்பட்ட சபைத் தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இது இவர்கள் போட்டுக் கொண்ட வழக்குகளின் முடிவா அல்லது உண்மையிலேயே அரசு ஆணை வெளியிட்டதா என்று பார்த்தால், நிச்சயமாக செக்யூலரிஸ அரசுக்கு அந்த உரிமை கிடையாது. ஆகவே, இவர்களே வழக்குகள் போட்டு, இடைக்கால தடை உத்தரவு வாங்கி, அதனை இவ்வாறு திருத்திக் கூறுகிறார்கள் போலும்!

திருச்சபை வழக்குகள்

திருச்சபை வழக்குகள்

நீதிபதி  கிருத்துவ மதத்தலைவர்களையும்  விட  மிக்க  அதிகாரம்  கொண்டவரா?: நீதிமன்றங்கள், சட்டங்கள் முதலிவற்றின் முன்பு எல்லோரும் சமம் என்றால், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு மற்றவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கப் படுகிறதோ, அதே போலத்தான் கொடுக்க வேண்டும். ஆனால், இவ்வழக்கிலோ, ஏதோ பிஷப் என்றால் ஒரு பெரிய, இந்திய சட்டங்களுக்குப் புறம்பான, அதிவிசித்திரமான, விஷேசமான மனிதர் போல பாவித்து, இப்படி தீர்ப்பு அளிக்கப் பட்டிருப்பது, ஏதோ “செக்யூலரிஸ” போதையில் கொடுக்கப் பட்டிருப்பது போல தோன்றுகிறது. ஏற்கெனவே கிருத்துவர்களாக இருந்தும், விசுவாசிகளாக இருந்தும், இறையியலில் சண்டைப் போட்டுக் கொண்டுதான், இவர்கள் இருக்கிறார்கள். பிறகு, உள்ளுக்குள் ஆண்டவரே இவர்களை ஒற்றுமையாக வைக்க முடியாததால் தான், இவ்வாறு கீழ்கோர்ட், மேல்கோர்ட், ஹைகோர்ட் வரை வந்துள்ளார்கள். கர்த்தர், ஏசு இவர்கள் எல்லோருமே கை விட்டதால் தான், நீதிமன்றங்களுக்கு வந்திருக்கிறார்கள். பிறகு, நீதிபது எப்படி ஏதோ இவர்களுக்கும் மேலான கிருத்துவமதத்தலைவர் போல பாவமன்னிப்புக் கொடுக்க முடியும்? இதையே ஒரு சட்ட முன்மாதிரி போல மாற்றிக் கொண்டு, கிருத்துவர்கள் குற்றம் செய்து கொண்டிருந்தால், பாவமன்னிப்புக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களா?

© வேதபிரகாஷ்

05-03-2014


[3] Indian Express, Does Seeking Jesus’ Pardon Absolve One of Contempt Of Court Charges? HC Says ‘Yes’, By T S Sekaran – CHENNAI,Published: 02nd March 2014 07:37 AM, Last Updated: 02nd March 2014 07:37 AM.

http://www.newindianexpress.com/cities/chennai/Does-Seeking-Jesus-Pardon-Absolve-One-of-Contempt-Of-Court-Charges-HC-Says-Yes/2014/03/02/article2085616.ece#.UxVuHfQW2jk

[6] It is exactly three centuries ago that Bartholomaeus Ziegenbalg, the first Protestant missionary to visit India, landed at the Tranquebar coast. But he is being remembered by the entire Tamil community even now for his selfless service rendered for the uplift of the society in general and the Tamil language and literature in particular. The respect Ziegenbalg commands could be gauged from the good number of students and locals visiting the exhibition on his life and achievements organised by the Tamil Evangelical Lutheran Church (TELC) now in progress in the city. Ziegenbalg was sent to India to propagate Protestantism by the Danish King Frederick IV. He made Tranquebar his second home and implemented various progressive schemes. He had many firsts to his credit: the first to introduce printing press, produce Tamil dictionary, preach Tamil sermon, start the first girls’ school and introduce noon-meal scheme.

Translated Tamil works: Attracted by Tamil works such as `Konrai Venthan,’ `Neethi Venba’ and `Ulaga Neethi,’ he translated them for the benefit of the readers of the European countries, according to the Bishop, TELC, Rt. Rev. T.Arul Doss. The pictorial descriptions on Ziegenbalg attract both the young and old visiting the show. The giant model of the Bible printed by Ziegenbalg provides added attraction. The show also provides information on the visit of St. Thomas, one of the 12 Apostles of Jesus Christ, who landed in Kerala in 52 AD and other famous missionaries to visit the country, including Francis Xavier (15th century) and John De Britto (16th century). The Indian Postal Department has published stamps and cancelled special covers in recognition of the services rendered by Christian Missionaries.

Stamps: The stamps on St. Peter’s Basilica, Vatican, the 1,900th death anniversary of St. Thomas, 250th year of arrival of Ziegenbalg, Dr. William Carey, the second Protestant Missionary from England to India, Rev. Lal Bihari, the first Missionary to start a blind school in Kolkata — all these provide for some interesting information. The light and sound programme on the life and achievements of Ziegenbalg, staged in the evenings, also formed part of the exhibition.

http://www.hindu.com/2006/09/07/stories/2006090721550300.htm

[9] Staff Reporter, Founders’ busts unveiled to mark TELC anniversary, TIRUCHI, July 11, 2012; Updated: July 11, 2012 11:32 IST

[11] தினகரன், சீகன்பால்குதரங்கம்பாடிவந்த 307ம்ஆண்டுநினைவுதினம்,பதிவு செய்த நேரம்: 2013-07-13; 11:01:33,

[12] தினமணி, திருச்சபையின்உரிமைகளைபறிக்கு ம்அரசாணையைதிரும்பப்பெறவேண்டும், By பொறையாறுFirst Published : 26 January 2013 05:13 AM IST

நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன் – ரஷ்யாவில் பிறந்து, ஜெருசலேத்தில் குடியேறியவர்!

ஏப்ரல் 28, 2013

நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன் – ரஷ்யாவில் பிறந்து, ஜெருசலேத்தில் குடியேறியவர்!

Yeshua Ben Maryam Al-Masih

ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்தவர் வியாசேஸ்லவ் (49), தான் கடவுளின் மைந்தன், “மேசியா” என்று நினைத்துக் கொண்டு பெயரை மாற்றியுள்ளாராம்[1]. ஏனெனில் அவன் எப்பொழுதும் “பரிசுத்த ஆவி”யுடன் பேசிக்கொண்டு இருப்பானாம்[2]. அதனால் ஏசுவைப் போல தானும் ஜெருசலேம் சென்றால், அவ்வாறே மாறிவிடலாம் என்று நினைத்துக் கொள்கிறானாம். ஏசுவைப் போலவே தலைமுடு வளர்த்துக் கொண்டு, உடையை அணிந்து கொண்டு, பொது இடங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தனது பெயரை 4 முறை மாற்றி, குடும்பப் பெயர், தனிப்பெயர் முதலியவற்றைச் சேர்த்து பாஸ்போர்ட்டிலும் பதிவு செய்துள்ளார்.

Photo1011

அங்கு வந்து பதிவு செய்யும், போது, இருந்த பெண் அதிகாரி “என்ன பெயரை இப்படி எழுதியிருக்கிறீர்களே”, என்ற கேட்டபோது, “நான் தான் ஏசுகிருஸ்து, மேரியின் மைந்தன்”, என்று உறுதியாக சொன்னானாம். Photo1008

இம்முறை, அவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் தனது பெயரை ‘யஷுவா பென் மர்யம் அல்-மசி’ (Yeshua Ben Maryam Al-Masih) என்று மாற்றிக் கொண்டுள்ளார், அதாவது யூதராக பதிவு செய்துள்ளார். மேற்கண்ட எபிரேய பெயருக்கு தமிழில் ‘மேரியின் மகனும் கிருஸ்துவுமான இயேசு’ என்று பொருள்[3]. Photo1010இந்த தகவலை வெளியிட்ட உள்ளூர் செய்தி நிறுவனம், ‘வியாசேஸ்லவ் எப்போதுமே சுவிசேஷம் பற்றி பேசி வந்தார்[4]. Photo1015

ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் ஏசு கிருஸ்து வாழ்கிறார்” என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டது. இயேசு கிருஸ்து என்று பெயர் மாற்றிக் கொள்வதால், ஜெருசலேம் நகருக்கு புனிதப் பயணம் செல்லவும், இஸ்ரேல் நாட்டின் குடிமகனாகவும் வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் கருதி இருக்கக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது[5]. Photo1012

ஆனால் அவன் அவ்வாறே ஜெருசலேத்திற்குச் சென்று, ஒரு வீட்டில் மனைவி, மகன் உடன் வசித்துக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கும் பைபிளில் வரும் பெயர்களை வைத்துள்ளான். ஒரு கழுதையினையும் வாங்கி வைத்துக் கொண்டு, அதன் மீது சவாரி செய்து கொண்டு வருகிறான்[6], என்றும் செய்திகள் வந்துள்ளன. Photo1013உள்ளூர் மக்கள், யாத்திரிகள் அவரை தமாஷாகப் பார்க்கிறார்களாம். ஏனெனில், பண்டிகைகளின் போது, அவ்வாறு வேடமிட்டு நடித்துக் காட்டுவது சகஜமான விஷயம்தான். இருப்பினும், இவர் விஷயம் அப்படியில்லை, ஏனெனில், இவர் தம்மையே ஏசுகிருஸ்து என்று சொல்லிக் கொள்கிறார். அவ்வாறே மாறத்துடிக்கிறார். Appearing in Russin websiteஇதில் வேடிக்கை என்னவென்றால், ஏசுகிருஸ்துவும், தன்னை “மேசியா” என்றுக் காட்டிக் கொள்ள[7], இதே மாதிரி கழுதைக் குட்டி மீது உட்கார்ந்து கொண்டு, ஜெருசலேத்தில் நுழைந்தாராம்[8]. ஆனால், யூதர்கள் அவரை “ஒரு வேடதாரி, போலி” என்று சொல்லி ஒதுக்கி விட்டது[9], என்று பைபிள் கூறுகிறது. இவ்விவரங்கள் முழுவதையும் கீழ்கண்ட யூ-டியூப்பிலும் காணலாம்[10].

வேதபிரகாஷ்

28-04-2013


[5] மாலைமலர், இஸ்ரேலில்குடியேறவசதியாகஇயேசுகிருஸ்துஎன்றுபெயரைமாற்றிக்கொண்டரஷ்யர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2:19 AM IST

[8] Donkeys and mules were used by important persons and kings in the Old Testament (for example, Judg 10:4; 12:14; 2 Sam 13:29; 18:9), including David himself (1 Kings 1:33), but the contrast in this context in Zechariah 9 is between the warhorses (v. 10) and the donkey on which the king rides (v. 9) is a striking image of humility.

[9] Accursed – Margin, “Anathema” (ἀνάθημα anathēma); see the Acts 23:14 note; Romans 9:3 note; compare 1 Corinthians 16:22Galatians 1:8-9. The word is one of execration, or cursing; and means, that no one under the influence of the Holy Spirit could curse the name of Jesus, or denounce him as execrable and as an impostor.

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?

ஒக்ரோபர் 24, 2012

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?

“திராவிடர்கள்” என்று சொல்லிக் கொண்டு, “பெரியார்” பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு, வைகோக் கட்சிக் கொடியை தலைகீழாக வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் வேலையில், இந்து சாமியார் போல அல்லது நித்யானந்தா போல, தெய்வநாயகம் என்ற குழப்பவாதி, கிருத்துவ வெறியன், இந்த குட்டையில் மீன் பிடிக்க வந்துள்ளது வியப்பாக உள்ளது. “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார். இப்படி தருணம் வரும் என்று முன்னமே அச்சிட்டு தயாராக வைத்திருக்கிறார் போலும்! கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாஸ்திரீக்களையும், சிறுமிகள், சிறுவர்களை பாலியல் ரீதியில், வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி, குரூரமாக கொடுமைப் படுத்தி வரும் வேளையில், அவர்களை விடுத்து இந்த ஆல் எதற்கு ஸ்ரீரங்கத்தில் சுற்றி வர வேண்டும்? அந்த பிட்நோட்டீஸைப் படித்துப் பார்த்தால், அந்த “தாமஸ் கட்டுக்கதை”யை விட படு அபத்தமாக இருக்கிறது. “தமிழ்” பெயரை வைத்துக் கொண்டு இந்த ஆள் செய்யும் கலாட்டாவில் பல இந்துக்களும் ஏமாந்துள்ளனர்[1]. நக்கிரனின் “மாட்டிறைச்சி மாமி நான்” என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது[2].

வேதபிரகாஷ்

24-10-2012


[1] “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தில் தேவையில்லாமல், இந்த ஆளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்துக்கள் எழுதியிருப்பது ஒரு தகவல். அது மட்டுமல்லாது, முன்பு, தருமபுர ஆதீனத்தில் இந்த ஆளுக்கு கூட்டத்தை நடத்தி, அதில் இவர் சொன்னதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டியப்பிறகுக் கூட, அருணை வடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிய பிறகும் கூட, சில சைவர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.

[2]முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.

http://www.periyarthalam.com/2012/01/13/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்சில் நடப்பதென்ன – கிருத்துவ சாமியார்கள் கருப்பு ஆடுகளாக மாறி, கற்பழிப்பு, செக்ஸ்-வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவதேன்?

ஏப்ரல் 7, 2012

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்சில் நடப்பதென்ன – கிருத்துவ சாமியார்கள் கருப்பு ஆடுகளாக மாறி, கற்பழிப்பு, செக்ஸ்-வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவதேன்?

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச் [Tamil Evangelical Lutheran Church (TELC)] கத்தோலிக்கப் பிரிவை சாராத அதாவது புரொடெஸ்டென்ட் (Protestant Church)சர்ச் பிரிவைச் சேர்ந்தது. திருச்சியை தலைமையகமாகக் கொண்டு ஜனவரி 19, 1919 அன்று இது ஆரம்பிக்கப்பட்டது[1]. இருப்பினும் இதன் தோற்றம் ஜீஜன்பால்கு மற்றும் ஹென்ரிச் புளுட்சௌ முதலியோரது () காலத்திற்கு செல்கிறது. 28 குழந்தை காப்பகங்கள் நடத்தி வரும் இச்சர்ச்சின் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன[2].

14-10-2010 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி பிஷப் மற்றும் இதர சர்ச் கவுன்சில் அங்கத்தினர் முதலியோரது வழக்குகுகள் “தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்” என்பது தமிழ் எவாஞ்செலிகல் லிட்டிகேஷன் சர்ச்” என்றகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டச்சண்டைகள் போடும் / தேவையில்லாமல் வழக்காடும் கூட்டமாகி விட்டது என்று எடுத்துக் காட்டுகிறார். Disposing of a batch of petitions, Justice V. Ramasubramanian observed that a number of cases filed by Bishop of Tranquebar House and his supporters against the Church Council members and their supporters and vice-versa and a number of conflicting orders passed by the lower courts in those cases had unfortunately turned the 90-year-old TELC into “Tamil Evangelical Litigation Church” in the recent past.
இப்படி உள்ளூக்குள் ஒருவர் மீது மற்றவர்கள் குற்றாஞ்சாட்டியுள்ளது, நிர்வாக சீர்கேட்டினையே காட்டுகிறது. முறையான நிர்வாகம் இல்லாததினால், கோள் சொல்லும் அளவிற்கு வாதி-பிரதிவாதிகள் இறங்கியுள்ளனர். இடைக்கால உத்தரவுகள் வாங்குவது, காலந்தாழ்த்துவது போன்ற செயல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பலவீனத்தைக் காட்டுகிறது. “A careful scrutiny of the persons who had approached different courts, the nature of relief sought by them and the interim orders that they have obtained would show that the parties have thoroughly exploited the weaknesses in the procedural law relating to territorial jurisdiction, exposed the fragility of the system of administration of justice, indulged in forum shopping and abused the process of law.”

திர்ர்ப்பினை வாசிக்கும் போது, அவர்களில் சொத்து, பணம், அதிகாரம் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள போட்டி-பொறாமை முதலியவை உள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொருவரும் அடங்காமல் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. முழு தீர்ப்பை இங்கே வாசிக்கவும்[3].

 

டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி நிர்வாக செயல்பாடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது[4] புதுக்கோட்டை டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் என்பது “உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் போன்று’ உள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் பார்வதி குற்றஞ்சாட்டினார். பள்ளியின் 155வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிகளில் டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இங்கு படித்த பலர் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை புதுக்கோட்டை டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதைத் தான் விரும்புவர்.
இங்கு இடம் கிடைக்காவிட்டால் தான் இதர பள்ளிகளுக்கு செல்கின்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அஞ்சுகின்ற நிலை உள்ளது. இங்கு படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய இதுதான் காரணம்.
ஒரு நிர்வாகம் திறன்பட செயல்பட வேண்டுமானால் தலைமை நன்றாக இருக்கவேண்டும். தலைமைக்கு கட்டுப்பட்டு ஆசிரியர்கள் செயல்படவேண்டும். இங்கு தலைமையை ஆசிரியர்கள் மதிப்பதில்லை. ஆசிரியர்களை தலைமை மதிப்பதில்லை. இங்கு ஐந்தாண்டுக்கும் மேலாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆவதை எதிர்பார்த்து திருமணத்தை கூட தள்ளிப்போடுகின்ற பரிதாப நிலை உள்ளது.

 

தலைமைக்குக் கட்டுப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் முதலியோர்: அவர் தொடர்ந்து பேசினார்: “சுருங்கச் சொல்வதென்றால் டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு என்பது உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை போன்று உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். மாவட்ட கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தவறினால் கல்வித் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியது வரும்”, இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் பார்வதியின் தடாலடி பேச்சு மற்றும் எச்சரிக்கை பள்ளி ஆசிரியர்களை மட்டுமின்றி விழாவில் கலந்துகொண்ட எம்.பி., குமார் உள்ளிட்ட விருந்தினர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் தான் இந்த கர்பழிப்பு செய்தி வருகின்றது.

மாணவியிடம்சில்மிஷம்சாத்தூரில்டி..எல்.சி., விடுதிமுற்றுகை: தினமர் இப்படி தலைப்பிட்டு உள்ளே “மாணவி ஒருவரை, வார்டனின் கணவர் கற்பழித்ததாக” என்று விவரித்துள்ளது. அப்படியென்றால், “சில்மிஷம்” என்றால் “கற்பழிப்பது” என்று பொருளாகுமா? விருதுநகர் மாவட்டம், சாத்தூர் செல்லியாரம்மன் கோவில் தெருவில் உள்ள, டி.இ.எல்.சி., குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை, வார்டனின் கணவர் கற்பழித்ததாக வந்த செய்தியை அடுத்து, விடுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்[5]. டி.இ.எல்.சி., காப்பகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி, பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஹாஸ்டல் வார்டன் நிர்மலாவின் (58) கணவர் தேவநேசன் (61) என்பவர், அங்கு தங்கி படிக்கும் மாணவியரிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதியில் வசிக்கும் பெண்களிடம் மாணவியர் பலரும் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

திருச்சி பிஷப் பின்பற்றிய முறையை தேவநேசனும் பின்பற்றியுள்ளது: இந்நிலையில், விடுதியில் தங்கி படித்து வரும், 10ம் வகுப்பு மாணவி சுமதி (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தேவநேசனால் கற்பழிக்கப்பட்டு, கருதரித்து இருப்பதாகவும், இதை மறைக்க சுமதியை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டதாகவும், தகவல் பரவியது. இதை தொடர்ந்து, நேற்று இரவு 7 மணிக்கு, விடுதியை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், பெண் வார்டன், அவரின் கணவர், இருவரையும் கைது செய்யக்கோரி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்தூர் டி.எஸ்.பி., சின்னையா பேச்சு வார்த்தை நடத்தினார். பெண் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். ஹாஸ்டல் வார்டன் நிர்மலா, அவரின் கணவர் தேவநேசன், இருவரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிருத்துவக் கற்பழிப்பு, செக்ஸ்-வெறியாட்டங்கள் தடுக்கப்படவேண்டும்[6]: கிருத்துவக் கற்பழிப்பு ஏன் இப்படி தொடர்கிறது என்று கிருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யாமல் அல்லது செய்தும், அதனை வெளியிடாமல், தங்களது குற்றங்களை மறைத்துக் கொண்டிருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலே அந்த மாவட்ட கல்வி அலுவலர் பார்வதி குற்றஞ்சாட்டியுள்ளது கவனிக்க வேண்டும்: “இங்கு ஐந்தாண்டுக்கும் மேலாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆவதை எதிர்பார்த்து திருமணத்தை கூட தள்ளிப்போடுகின்ற பரிதாப நிலை உள்ளது”. அதாவது செக்ஸ் உணர்வுகள் அடக்குப்பட்டு வருகின்றன. , இல்லை மறைமுகமாக அவை தணிக்க வேறுமுறைகளைக் கையாளுகின்றன. பெண்கள் வலுக்கட்டாயமாக அல்லது கொத்தடிமைகள் போல கன்னியாஸ்திரீக்களாக்கப் படுவது, இறையியலைச் சொல்லி நியாயப்படுத்துவது, பிறகு அவர்கள் காம இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது முதலியன தவிக்கப்பட வேண்டும். காப்பகங்களைப் பொறுத்தவரைக்கும் வயது வந்த பெண்கள் இவ்வாறு செக்ஸ்-தொல்லைகளில் அநாவசியமாகச் சிக்கிக் கொள்வது, அவஸ்தைப் படுவது, வாழ்க்கையினை சீரழித்துக் கொள்வது என்பது தொடர்ந்து நடப்பதை சாதாரண நிகழ்வாக அல்லது கிருத்துவத்தின் உள்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளமுடியாது. கத்தோலிக்கத்தில் மட்டுமல்லாது மற்ற கிருத்துவப் பிரிவுகளில் இத்தகைய செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், வெறிச்செயல்கள், வன்புணர்ச்சிகள் முதலியவை அதிகமாக இருப்பதால், சமூகவியல், மனோதத்துவத் துறை வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் முதலியோர் ஆராய்ந்து, மறுபடி-மறுபடி நிகழாமல் ஆவண செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படி டீ-ஏஜ் பெண்கள் செக்ஸ் மற்றும் கற்ப்பழிப்புகளுக்கு ஊள்ளாவது, இந்திய சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வேதபிரகாஷ்

07-04-2012


[1] தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: Rev.Dr.H.A.Martin, Bishop-TELC P.O.Box 86 Tranquebar House Tiruchirappalli 620 001, Tel: +91 431 2414843, Fax: +91 431 2424843, Email: telc_bishop@yahoo.com, இணைத்தளம்: http://www.uelci.org/page.php?pid=29

[2] The Hindu, TELC: High Court restrains lower courts, Saturday, Dec 18, 2010,  http://www.hindu.com/2010/12/18/stories/2010121860350300.htm

[5] தினமலர், மாணவியிடம் சில்மிஷம் சாத்தூரில் டி.இ.எல்.சி., விடுதி முற்றுகை, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=443283

[6] இதைப்பற்றிய எனது பல இடுகைகளை https://christianityindia.wordpress.com/ என்றதில் பார்க்கலாம்.

ஒரு ராஜனை அடுத்து இன்னொரு ராஜன்: பைபிள் படிக்கிறார்களாம்!

ஏப்ரல் 5, 2012

ஒரு ராஜனை அடுத்து இன்னொரு ராஜன்: பைபிள் படிக்கிறார்களாம்!

கொலைக்காரன் கிருத்துவனாகி பைபிள் படித்தது: ஆட்டோ சங்கர் சிறைக்குச் சென்றப்பின்னர் தான், கிருத்துவனாகி பைபிள் படிக்க ஆரம்பித்தான்.

முருகன் அடிமை கிருத்துவ அடிமையாகி பைபிள் படித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது: ஏ.வி.எம். ராஜன் என்ற நடிகர், கிருத்துவர்கள் தனக்கு உதவினார்கள் என்று முருகனை விட்டு, பைபிள் படித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.

இப்பொழுது குற்றம் செய்து விட்டு சிறையில் பைபிள் படிக்கும் இன்னொரு ராஜன்: மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனராகப் பணியாற்றிய ராஜன், மொபைல்போன் வியாபாரியிடம் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டு, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு எப்படிப் பொழுதைக் கழிக்கிறார்? இதோ தகவல்:

* புழல் சிறையில், உயர் அடுக்கு பாதுகாப்புப் பிரிவில், ராஜன் அடைக்கப்பட்டுள்ளார். இவரது “செல்’லை சுற்றி, துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* “செல்’லை விட்டு, இதுவரை வெளியே வரவேயில்லை; வழக்கறிஞரை சந்திக்க மட்டுமே வெளியே வந்துள்ளார்.

*கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், சிறையில் புத்தகம் படிப்பதை மட்டும், சிறைக்காவலர்கள் பார்த்துள்ளனர். ஆனால், அது என்ன புத்தகம் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை.

ரகசியமாகப் படிக்கும் புத்தகம் என்ன? * சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., கிரிமினாலஜி படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர், கல்வி தொடர்பான ஆய்வுக்காக புழல் சிறைக்கு சென்றபோது, அவர்களிடம் மட்டும் பேசினார்.

* அப்போது தான், ராஜன், பைபிள் படிக்கிறார் என்பது தெரிய வந்தது[1]. [அப்படி பைபிளை ரகசியமாகப் படிக்க வேண்டிய அவசியம் என்ன?]

* மாணவர்கள்,”கடந்தாண்டு அதிக கடத்தல் சம்பவங்களைத் தடுத்ததாக உங்களுக்கு விருது வழங்கப்பட்டதாக அறிந்தோம். அப்படி இருக்கும்போது, உங்களைக் கைது செய்ததற்கு காரணம் என்ன?’ என, கேள்வி எழுப்பினர்.

“இந்தக் கேள்விக்கான பதிலை என்னை கைது செய்த அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ என, சற்று கோபமாகக் கூறினார். மெத்தப் படித்தவர்களுக்கு, தாம் குற்றம், சட்டமீறல் காரியங்களை செய்கிறோம் என்று தெரியாமலா செய்கின்றனர்?

ஏசுவிற்குத்தான் வெளிச்சம், கர்த்தருக்குத்தான் தெரியும் என்றால் என்ன செய்வது, பாவம்!

மதம் தனிப்பட்ட மனிதனின் விஷயம் என்றால், அது தெருவிற்கு வரக்கூடாது: செக்யூலரிஸத்தில் ஊறிதிளைத்தவர்கள், பல நேரங்களில், சிறு உண்மைகளையும் மறந்து விடுகிறார்கள். இப்பொழுது சி.ராஜன் கிருத்துவரா இல்லையா, அவர் ஜெயிலில் பைபிள் அல்லது குரான் படிக்கிறாரா இல்லையா, என்பதெல்லாம் பிரச்சினையில்லை. ஆனால், அத்தகைய செய்தியை வைத்துக் கொண்டு, விளம்பரம் செய்வது, ஆதாயம் தேடுவது, வலுக்கட்டாயமாக, சில கருத்துகளைத் திணிக்க முற்படுவது, முதலிய விஷயங்களில் தான் பிரச்சினை வருகிறது. ஆமாம், மதம் தனிப்பட்ட மனிதனின் விஷயம் என்றால், அது தெருவிற்கு வரக்கூடாது, இன்றோ, தெருக்களில் நம்பிக்கையாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு மதக்காரியங்களை செய்து வருகிறார்கள். இங்குதான் பிரச்சினை வருகிறது.

வாசகர்கள் நீதிபதியாக முடியாது, தண்டனையும் கொடுக்க முடியாது, இல்லை நிரபராதி என்று இன்றே தீர்மானித்து விடமுடியாது: சி. ராஜன் குற்றாவாளியா இல்லையா[2]. என்று “தி ஹிந்து” படிப்பவர்கள், ஒரு பட்டிமன்றத்தையே நடத்தி வருகிறார்கள்[3]. நீதிமன்றங்களே தேவையில்லை என்ற அளவிற்கு போட்டி[ப் போட்டுக் கொண்டு பரிந்துரைக்கிறார்கள். பேஸ்புக்கைப் பற்றி கேட்கவே வேண்டாம்[4]. சாமான்ய மக்கள், படித்த மக்கள் செய்திகளை வைத்துக் கொண்டு தான், நம்புகிறார்கள். செய்திகள் உண்மையா-பொய்யா, அச்செய்திகளில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் சரியா-தவறா, கைது செய்ய்யப்பட்டுள்ளவர் குற்றவாளியா-இல்லையா என்ற விஷயங்களைப் பற்றி, கருத்துருவாக்கம் ஏற்படும் முறையில் ஈடுபட்டால், ஊடகங்களின் ஒரு சார்புள்ள நிலையும், இப்போக்கும் ஒன்றேயாகிவிடும்.

ஒருவர் நல்லவரா-கெட்டவரா, குற்றாவாளியா இல்லையா, குற்றம் செய்திருப்பாரா-,மாட்டாரா, இல்லை அவர் நல்லவர்தாம், அவ்வாறு செய்திருக்க மாட்டார்; ஆ, அங்கிருக்கும் போது எப்படி செய்யாமல் இருப்பார், சுற்றியிருக்கும் அனைவரும் செய்யும்போது, இவர் செய்யாமல் இருப்பாரா என்று சாத்தியக்கூறுகளை வைத்துக் கொண்டு விவாதிப்பது, பலவீனத்தைத்தான் காட்டுகிறது. தனிமனிதனுக்கு தான் ஒரு காரியத்தைச் செய்யும் போது, அது ஆனுக்கு ந்ன்றாகவேத் தெரியும். அதனை அவன் மனதறியும், மற்றவர்கள், அதற்கு எந்தவிதமான வியாக்யானங்கள், விளக்கங்கள் கொடுக்க முடியாது.


[1]தினமலர், சிறையில்பைபிள்படிக்கிறார்ராஜன்!, 05-04-2012, சென்னைப்பதிப்பு,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=441030

[2] A raid at Rajan’s house home by the team of officials yielded details of many bank accounts and sensitive documents regarding properties purchased during the last five years. A top CBI source told DNA that the operation was collecting clinching evidence against the official. “We went by the adage Mistrust the Obvious Rajan never had a good reputation and we followed the leads,” said the officer. But his friends claim that Rajan has been victimized as per the directions of a political bigwig from Tamil Nadu. “The politician with big connections in New Delhi had been trying to get rid of Rajan once and for all,” said his friend.http://www.dnaindia.com/india/report_tamil-nadu-s-anti-smuggling-mascot-arrested-for-graft_1659825

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

பிப்ரவரி 18, 2012

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

 

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு[1]: நள்ளிரவில், கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த பாதிரியாரை கண்டித்து, இந்து முன்னணியினரும், பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குருசுக்குப்பம் சர்ச் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கிருத்துவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் உள்ள தொடர்பும் வெளிப்பட்டுள்ளது. மார்ச் 13, 2003 அன்று ஜோஸப் என்பவன், திருமாவளவன் குரலில் பேசி பணம் கேட்டதும், இந்த சர்ச்சிலிருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது[2]. பிறகு அது மோசடி என்று தெரியவந்தது. இருப்பினும், திருமாவளவன் என்று கேட்டால் பணம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. திருமாவளவன் கிருத்துவர் என்று அவர் நண்பர்கள் கூறுவதுண்டு. கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு, குல்லா போட்டு கஞ்சி கொடுக்கும் போது, கிருஸ்துவர்களுக்கு பலமுறை சங்கடமாகியுள்ளது. இருப்பினும், திருமாவளவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்.

152 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் சர்ச்: புதுச்சேரி, குருசுக்குப்பத்தில், 152 ஆண்டுகள்[3] பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் உள்ளது. 2009ல் 150 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது[4]. இங்கு, திண்டிவனத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் பீட்டர்[5]  (45), பாதிரியாராக உள்ளார். நேற்று முன்தினம் (16-02-2012), நள்ளிரவு 12 மணியளவில், கல்லூரி மாணவியுடன், பாதிரியார் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்க்லள் அம்மாணவி உள்ளே சென்றதை பார்த்து விட்டு மற்றவர்களிடத்தில் சொன்னதால், கையும் களவுமாக பிடிபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆலயம் எதிரே திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பாதிரியார் பெர்க்மான்ஸ்[6], பேராயர் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆலயத்தில், நேற்று காலை திருப்பலி நடக்கவில்லை.

இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்: இந்நிலையில், கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாரை கைது செய்ய வேண்டும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், திருச்சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணியினர், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குவிந்தனர். தலைவர் சனில்குமார், பொதுச் செயலர் முருகையன் ஆகியோர் தலைமையில், இந்து முன்னணியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். அதற்குள் விஷயம் அறிந்த மற்ற இயக்கத்தினர் வந்துவிட்டனர்.

பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பிய மற்ற இயக்கங்கள்: தகவலறிந்த அனைந்திந்திய மாணவர் கூட்டமைப்பு, பெற்றோர்-ஆசிரியர் கழகம், இந்திய மாணவர் சங்கம், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் அருகில் உள்ள பள்ளி முன் திரண்டனர். பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் முன், நாம் தமிழர் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக, சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி., மோனிகா பரத்வாஜ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிரியார் மீதான குற்றத்தை, கல்லூரி மாணவி மறுத்தார். இதனால், அனைவருக்கும் வியப்பானது.

புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு நள்ளீரவில் மாணவி வந்துள்ளாராம்: இதுகுறித்து, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறுகையில், “தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தனிமையில் இருந்த பாதிரியார் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பெண், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.சி.ஏ., படித்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு, பாதிரியார் தான் பாதுகாவலராக உள்ளார். ஹாஸ்டலில் கணிப்பொறி வசதி இல்லாததால் எம்.சி.ஏ., புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை என, எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால், பகலில் கூட சென்றிருக்கலாம், ஆனால் நள்ளிரவில் ஏன் செல்ல வேண்டும் என்று தான் மக்களுக்கு புரியவில்லை. இல்லை, பாதிரியாரே காலையில் வரசொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம். அவ்வாறில்லாதலால், மக்களுக்கு சந்தேகம் வந்தத்தில் வியப்பில்லை. மேலும் சமீபகாலங்களில் கிருத்துவப் பாதிரிகள் இத்தகைய பாலியல், செக்ஸ் விஷயங்களில் ஈடுபட்டுள்ளது, மாட்டிக் கொண்டுள்ளது சகஜமாகி விட்டதாலும், டிவி-நாளிதழ்களில் சில விஷயங்கள் வெளிவந்து விட்டதாலும் மக்கள் அவ்வாறே நினைத்திருக்கலாம்.  குருசுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தேவலாயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு என்று “இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” அறிவித்ததும் ஆச்சரியமான விஷயம் தான்!


[2] Chennai youth held for `cheating’ Pondy Church heads By Our Staff Reporter, Saturday, Mar 15, 2003

Pondicherry March 14. Joseph alias Ravi (32) of Vyasarpadi, Chennai, was arrested here yesterday for allegedly cheating heads of a few churches in Pondicherry. The youth had allegedly spoken over phone to the church authorities mimicking the voice of the DPI convener, Tirumavalavan.

The Superintendent of Police, V.J. Chandran, said today that the youth had allegedly called the Bishop House on February 24 over phone mimicking the tone of the DPI leader. He told them that he wanted to hold a function to present tricycles to the handicapped children. Hence, he sought their contribution. Believing that it was only the DPI leader contacting them, the Bishop House assured that Rs. 10,000 would be given for the project. As requested, a cheque was prepared in the name of Ravi and handed over to the youth.

The same youth contacted the head of another church at Kurusukuppam on March 3 seeking Rs. 5,000 for the same project. This time also he spoke in the voice of Mr. Tirumavalavan. The head of the church reportedly gave Rs. 5,000 to the youth. When the Bishop House contacted Mr. Tirumavalavan, the cheating came to light. The management of the Bishop House filed a police complaint

http://www.hindu.com/2003/03/15/stories/2003031504890300.htm

[3] Peace meet to mark 150th year of church Staff Reporter, The Hindu, Thursday, Sep 24, 2009

PUDUCHERRY: A three-day conference on peace will launch the 150th year celebrations of the St. Francis of Assisi church at Kurusukuppam. The feast will start on September 25 and will go on till October 4. Parish Priest Fr. P. Arul Dass said the church was built in 1858 in honour of St. Francis of Assisi. The feast will seek to spread his spiritual views of love, peace and harmony and it is with this objective that the conference on peace has been organised from September 25 to 27, he said. Archbishop of Pondicherry-Cuddalore Anandarayar will celebrate the mass at 11 a.m on Sunday, September 27. He said about 500 persons from Puducherry,

http://www.hindu.com/2009/09/24/stories/2009092451090200.htm

[4] St.Francis of Assisi Church, Kurusukuppam, Pondicherry, Pin : 605 012,Tel.Ph: 0413- 2227626.

[6] இந்த பெர்க்மான்ஸ் வேறு மற்றும் பாட்டுப் பாடி ஆடும் பெர்க்மான்ஸ் வேறு என்று தெரிகிறது.

ஆண்டவராகிய ஏசு கிறுஸ்துவின் வங்கியிலேயே கிருத்துவர்கள் பணம் கையாடல்!

செப்ரெம்பர் 23, 2010

ஆண்டவராகிய ஏசு கிறுஸ்துவின் வங்கியிலேயே கிருத்துவர்கள் பணம் கையாடல்!

“புனிதமாகிய கடல்” ஆண்டவராகிய ஏசு கிறுஸ்துவின் வங்கியிலேயே கிருத்துவர்கள் பணக்கையாடல் செய்வதைக் கண்டு மிகவும் குழம்பிபோய் வியப்பில் அதிர்ச்சியில் உள்ளதாம்!

வாடிகனில் உள்ளது வாடிகனின் வங்கி, அதாவது ஆண்வனின் வங்கி.

கடவுளின் காசின் மீது கை வைப்பார்களா?

வைப்போம் என்கிறார்கள், வாடிகன் வங்கியின் தலைமை அதிகாரி!

Holy See ‘perplexed’ by probe against Vatican Bank chief

2010-09-21 23:20:00

Rome, Sep 21 (DPA) The Vatican said it was ‘perplexed’ and ‘astonished’ by reports Tuesday that Italian authorities are investigating the chairman of the Vatican Bank in connection with a money laundering probe. Institute for Works of Religion (IOR) chairman Ettore Gotti Tedeschi and another, unidentified, top official of the bank were among those being investigated by prosecutors in Rome, the ANSA news agency said.

Tax police have also ‘preventively’ seized some 23 million euros ($30.2 million) deposited by IOR in an account of a Rome branch of the Milan-based bank, Credito Artigiano, ANSA said. Prosecutors are examining the alleged contravention of anti-money laundering provisions introduced in 2007.

These require banks to notify authorities of transactions involving non-European Union financial institutions such as the IOR. But in a statement, the Vatican said it had given ‘full transparency,’ with regards to IOR operations including regular contacts with Italy’s central bank authorities.

‘The Holy sees thus expresses perplexity and astonishment for the initiative by Rome’s prosecutor’s office,’ the Vatican statement said. It particular it stressed that the information on the transaction allegedly being investigated had already been provided to Italy’s central bank. ‘The Holy See hence expresses its full trust in the chairman and director general of the IOR,’ the statement added.

The IOR handles accounts of the religious orders and other Catholic associations using the offshore status of the Holy See. In 1982 the IOR was embroiled in the collapse of an Italian bank the Banco Ambrosiano, of which it was the major shareholder. The IOR’s then head, Archbishop Paul Marcinkus, was under consideration for indictment in 1982 in Italy as an accessory of the bankruptcy, but was protected by his diplomatic immunity as a Vatican prelate.

http://sify.com/news/holy-see-perplexed-by-probe-against-vatican-bank-chief-news-international-kjvxucaefaj.html