Archive for the ‘அச்சரப்பாக்கம்’ Category

அச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்! [1]

மார்ச் 22, 2020

அச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்! [1]

Hillock encroached, The Hindu 02-2020

ஆக்கிரமிப்பில் சர்ச்சைக் கட்டி, கட்டுக்கதை உருவாக்குதல்[1]: பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யை வைத்தே ஒரு மதத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் அது கிருத்துவம் தான். நாட்டுக்கு நாடு, ஒரு கட்டுக் கதையினை உருவாக்கி, மதம் மாற்றியவர்களுக்கு அக்கதைகளை சொல்லி நம்ப வைத்து, வியாபாரம் செய்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் உண்மையினை பிறகு அறிந்தாலும், தமது பிழைப்பு போய்விடுமோ என்று திமிருடன், வெட்கத்தை விட்டு, அதே பொய்யினை திரும்ப-திரும்ப சொல்லி, எழுதி பரப்பவதிலும் வல்லவர்கள். இதற்கெல்லாம் பணம் செலவழிப்பதிலும் தயக்கம் காட்டுவதில்லை. போதாகுறைக்கு அரசியல் செல்வாக்கு, அதிகார அழுத்தம், அதர்ம சக்திகள் துணை முதலியவற்றையும் வைத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களில் வழக்குகளை முடக்கி, காலம் கடத்துவதிலும் திறமைசாலிகளாக இருக்கின்றனர். அந்நிலையில், அவகளை எதிர்க்க யாருக்கும் பலம் இல்லை எனலாம்.கிருத்துவர்கள் கட்டுக் கதைகளை உருவாக்குவதில் சிறிது கூட வெட்கப் படாதவர்கள். அச்சரப்பாக்கம் நடவடிக்கைகளை திண்டிவனம் தாண்டி போகும் அனைத்துப் பிரயாணிகளும் கவனித்துள்ளார்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று விட்டுவிட்டார்கள். ஆனால், இந்த அளவுக்கு அக்கிரமம், அநியாயம், அதர்மம் செய்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

Mazhai Madha Church - myth floated, Fr. Backiya Regis

மழைமாதா சர்ச் கட்டுக்கதை: இதோ, அவர்கள் கட்டியுள்ள மாய்மாலக் கதை[2], “1967 முதல் 1969 வரை தமிழகத்தை ஒரு கடும் வறட்சி ஆட்கொண்டது. 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18 ம் நாள் மழை வேண்டி அன்னையின் திரு உருவத்தை ஒரு தேரில் வைத்து அருள் பணி புஷ்பம் அடிகளார் ஏறக்குறைய 30 மைல் தொலைவு வரை எடுத்துச் சென்றார். மக்கள் மிகுந்த மரியாதையோடும் அன்போடும் அன்னையை வரவேற்று கூடி செபித்தனர் அம்மா தாயே! முழை[மழை]யின்றி தவிக்கும் எங்களுக்கு நல்ல மழை தாரும் என்று மத பேதம் பாராமல் மன்றாடினர். செப்டம்பர் 27 ஆம் நாள் தேரானது பங்கு ஆலயத்தை வந்தடைந்தவுடன் முன்று ஆண்டுகளாகக் கடும் வறட்சியை சந்தித்த மக்களின் மனம் குளிரும் வண்ணம் பெருமழை பெய்தது. ஆதை கண்ட மக்கள் திரளாகப் பங்கு ஆலயத்தை நோக்கி மழை மாதாவே என்று குரலெழுப்பி மகிழ்ந்தனர். முழை [மழை] நின்ற பின் அன்று மாலையே ஆயிரக்கணக்கானோர் புடை சூழ ஆரோக்கிய அன்னையின் சுருபத்தை பவனியாக எடுத்துச் சென்று தற்போது அன்னையின் கெபி உள்ள அதே இடத்தில் (நடு மரையில்) நிர்மாணித்து திருப்பலி நிறைவேற்றினார் அருள் தந்தை. புஷ்பம் அடிகளார் அவர்கள். மீண்டும் பெருமழை பொழிய மக்கள் குதூகளத்தோடு மலையில் வீற்றிருந்து மழையைத் தரும் தாய் என்று பொருள்படும் வண்ணம் அந்த அன்னைக்கு மழை மலை மாதா என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்”.

Mazhai Madha Church - massive constructions.suppoted by the bishops

மேல்மருவத்தூர் மழைமாதாவுக்கு துணை போகிறதா?” அருகில் மேல்மருவத்தூர் கோவில் இருப்பதும், அது லட்சக் கணக்கில் மக்களை ஈர்த்து வருவதும் தெரிந்த விசயமே. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கில் பக்தர்கள் பேருந்தில் வந்து செல்கிறார்கள். பக்கத்தில் மலைமீது சர்ச் இருக்கிறது என்றால், பொழுது போக்காக அதையும் காட்டுவார்கள். ஆனால், கடந்த ஆண்டுகளில், அதன் நிறுவனர் பங்காரு அடிகள், அவரது மகன், உறவினர் முதலியோர் கிருத்துவ சார்பாக நகர்ந்து வருகின்றனர். கிருஸ்துமஸ் கொண்டாட்டம், முதலிய பல நிகழ்ச்சிகள் அவற்றை மெய்ப்பித்து வருகின்றன. இங்கிருந்து பக்தர்கள் அச்சரப்பாக்கம் சர்ச்சிக்கு செல்வதும், அங்கிருந்து இங்கு வருவதும், இரு அம்மாக்களும் ஒன்று என்று பிரச்சாரம் செய்வதும் வெளிப்படையாகி விட்டது. மேல் மருவத்தூர் அம்மனை மேரியாக அலங்காரம் செய்வது, பாதிரிகள் வந்து போவது சகஜமாகி விட்டது. இனி மேல்மருவத்தூர் அம்மனும், மழைமாதாவும் சகோதரிகள் என்று கதை கட்டுவார்கள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பு செய்வார்கள். புத்தகங்கள் போடுவார்கள். அதற்கெல்லாம் அமெரிக்க பல்கலைக் கழகங்கள் துணையிருக்கும். போதா குறைக்கு. நம்மாட்களும் சேர்ந்து கொள்வார்கள். ஆகவே, இதை இனிமேலும் வளர்ப்பது ஆபத்தான விசயமே ஆகும்.

Mazhai Madha Church contact details

அச்சறப்பாக்கம் ஆக்கிரமிப்பு (2009)[3]: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள வஜ்ஜிரகிரி வடிவேலன் மலை என்றழைக்கப்படும் குன்றில் சுமார் 1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அந்நிலையில், 2004ல் கிருத்துவர்கள் முதலில், ஒரு சிலுவைவை நட்டு வைத்தனர். பிறகு விளக்குகள் வைக்க ஆரம்பித்தனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிறிய கட்டிடம் என்று ஆரம்பித்து, சர்ச்சை முழுமையாகக் கட்டினர். பிறகு, அந்நிய உதவி எல்லாம் கிடைக்க, அதை இடித்து,  பெரிய சர்ச்சாக கட்டினர்.  இதனால், அச்சிறுப்பாக்கத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் குன்று புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக கிராம நிர்வாக அலுவலர், போலீசில் புகார் செய்துள்ளார்[4]. அச்சிறுப்பாக்கத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இதன் உச்சியில் பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று புறம்போக்கு நிலம், வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில், மழைமலை மாதா என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் எழும்பியுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆலயத்தை விரிவுபடுத்தி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆலய நிர்வாகம், பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரச்னை ஏற்பட்டது.

Mazhai Madha Church - myth floated-arputa nagar

அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் 2009 முதல் நடக்கும் சட்டமீறல்கள்: வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து அவ்வப்போது அமைதி கூட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு 2009 நடந்த அமைதி கூட்டத்தின்போது மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர்[5]. தற்போது அதையும் மீறி தொடர்ந்து கட்டடம் கட்டி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, குன்று புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அத்துமீறி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கக் கோரி அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Mazhai Madha Church - myth floated-complex

சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தல்: இவ்வாறுதான் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்துள்ள அச்சரப்பாக்கத்தில் மலைக்குன்று ஒன்றில் மலைமாதா தேவாலயம் அமைக்கப்பட்டது[6]. அப்பகுதியில் உள்ள 55 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தை அகற்றக்கோரி, காஞ்சிபுரம் மாவட்டம், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்[7]. அந்த மனுவில், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்[8]. மலையை வெடிவைத்து தகர்த்து படிக்கட்டுகளையும், கடைகளையும் அமைத்துள்ளதால், இயற்கையை நம்பியுள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன[9]. அதனால், அவை நகருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது[10]. மலைமாதா தேவாலயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்[11]. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு, தமிழக அரசு, தொல்லியல் ஆய்வுத்துறை, மலை மாதா தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தது[12]. அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதாக்கோயில் ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் 25.2.2020 அன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

© வேதபிரகாஷ்

21-03-2020

The 31st Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India (CCBI) of the Latin Church held in January 2019

[1] மழைமாதா புறம்போக்கு சர்ச்சின் இணைதளம் –  http://malaimadha.org/index.html

[2]  மழைமாதா புறம்போக்கு சர்ச்சின் இணைதளம் கொடுக்கும் கட்டுக் கதை- http://malaimadha.org/About.html – history

[3] தினமலர், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் மீது புகார், அக்டோபர் 02,2010 , http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97459&Print=1

[4] வேதபிரகாஷ், கிருத்துவர்களின் நிலம் அபகரிப்பு தொடர்கிறது!, பிப்ரவரி 2, 2010.

[5] https://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/

[6] நக்கீரன், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம்!- அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!, அதிதேஜா, Published on 25/02/2020 (17:26) | Edited on 25/02/2020 (17:36).

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/government-land-church-chennai-high-court

[8] தினத்தந்தி, மலைக்குன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயம்அரசு, தொல்லியல் துறை, தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு, பதிவு : பிப்ரவரி 25, 2020, 06:24 PM.

[9] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/25182449/1119929/Church-built-against-rules.vpf

[10] NEWS18, அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டதா? தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!,  LAST UPDATED: FEBRUARY 25, 2020, 3:35 PM IST

[11] https://tamil.news18.com/news/tamil-nadu/hc-orders-tn-govt-to-answer-on-case-seeking-removal-of-a-church-built-in-public-land-vin-md-259065.html

[12] நியூஸ்.ஜே, மலையை ஆக்கிரமித்து தேவாலயம் அமைப்பு : தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, Feb 25, 2020 06:18 PM

https://www.newsj.tv/view/tructure-of-the-church-occupying-the-mountain-:-High-Court-orders-response-of-the-Government-of-Tamil-Nadu-36956