Archive for the ‘அசிஸி’ Category

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலை செய்யப்பட்டது ஏன் (1)?

செப்ரெம்பர் 18, 2015

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு கொலை செய்யப்பட்டது ஏன் (1)?

Kerala nun -Amla-murdered September 2015

Kerala nun -Amla-murdered September 2015

அம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பாலாவில்   கத்தோலிக்க கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான கன்னியர்மடம் உள்ளது. இதில் பல கன்னியாஸ்திரிக்கள் தங்கி வருகிறார்கள். இம்மடத்தில் அறையில் 17-09-2015 வியாழக்கிழமை அன்று ஒரு கன்னியாஸ்திரி இறந்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இதிலுள்ள கார்மல் கான்வென்ட்டில், ஒரு சகோதரி (வயது 69) உடலில்  காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்[2]. பிறகு அவர் அம்லா என்று அடையாளம் காணப்பட்டார்[3]. இவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார்[4]. இவர் தினமும் காலையில் கன்னியர்மட ஜெபக்கூடத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் பங்குபெறுவார். காலையில் நடந்த பிரார்த்தனைக்கு கன்னியாஸ்திரி அமலா வரவில்லை. பிற்பகலில் நடந்த பிரார்த்தனையிலும் பங்குபெறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கன்னியர் மட நிர்வாகிகள் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். தொட்டதும் கதவு திறந்து கொண்டது. அங்கு கன்னியாஸ்திரி அமலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருக்கவில்லை[5]. அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய காயம் காணப்பட்டது. அறையில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன[6]. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[7].

Amla-murdered September 2015 - Lisieux Carmelite Convent

Amla-murdered September 2015 – Lisieux Carmelite Convent

கொலைதான் என்று போலீஸார் கூறியது: டாவின்சி கோட் படத்தில் வருகின்ற காட்சி போல இது உள்ளது. இறந்த / கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் வருந்தத்தக்கது. ஆனால், கன்னியாஸ்திரிக்கள் இவ்வாறு பாதுகாப்பு இல்லாமல், கான்வென்டில் வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் கூறும் போது அம்லா தனது ஓய்வு நாட்களை இங்கு கழித்து வந்தார்.  அமலா 17-09-2015 அன்று காலை நேர பிரார்த்தனையில் பங்கேற்கவில்லையென்றும், கடந்த 2 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது[8]. உடல் சரியாகவில்லை என்றபோது, எப்படி அவர் தனி அறையில் இருந்தார், யாரும் அவரைக் கவனித்துக் கொள்ளவில்லையா அல்லது அவரே மருத்துவமனையில் வேலை செய்ததால், மருந்து எடுத்துக் கொண்டு தனியாக இருந்தாரா போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றான. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்[9]. இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது என கூறினர். சம்பவ இடத்திற்கு கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சதீஷ் பினோ மற்றும் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்[10]. அவர் யாரோ கூரிய ஆயுதத்தால் பின்புறமாக தலையில் தாக்கியுள்ளார் என்றார்.[11] ஆனால், ஆயுதம் அல்லது அந்த கருவி பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. போலீஸ் மோப்ப நாயும் வரழைக்கபட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து கன்னியர் மடத்தின் பின்புறம் வரை சென்றது. பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள அரசு பஸ் நிலையம் வரை ஓடி விட்டு மீண்டும் கன்னியர் மடம் வந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர்[12]. இதையடுத்து கன்னியாஸ்திரி அமலாவை கொலை செய்தவர்கள் கன்னியர்மடத்தின் பின்புற சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்[13].

Lisieux Carmelite Convent-Sr Amala murdered

Lisieux Carmelite Convent-Sr Amala murdered

அம்லா அதிகாரம் கொண்ட கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்: அம்லா, ராமாபுரத்தில் உள்ள வாலுமேலில் வீட்டைச் சேர்ந்த [Vaalummelil House, Ramapuram], காலஞ்சென்ற வி.டி.அகஸ்தி [V.D. Aughasthy] மற்றும் ஏலி [Eli] தம்பதியருக்குப் பிறந்தவர்[14]. லூஸி மேரியா – கேமெலைட் பிரிவு, ஹில்டா, அஸிஸி முறை மற்றும் சிசிலி, முதலியோர் இவரது சகோதரிகள் ஆவர்[15]. அம்லா சைரோ-மலபார் சர்ச்சை சேர்ந்த, தமரசேரி டையோசிஸின் தலைவரான பிஷப் ரெமிகியோஸ் இஞ்சனனியில் என்பவரது மைத்துனியும் ஆவர்[16]. ஆக மொத்த குடும்பமே கத்தோலிக்க நம்பிக்கையில் ஊறித்திளைத்த நிலை வெளிப்படுகிறது. அதிகாரம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் புலப்படுகிறது. ஆகவே, அத்தகைய நிலை மற்றும் வயதான  கன்னியாஸ்திரி ஏன் கொலை செய்யப்படவேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. இத்தகைய பெரிய குடும்பத்தைச் சேர்ந்த, வயதான இவர், ஓய்வு பெற்ற பிறகும் கன்னியாஸ்திரி மடத்தில் தங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் தெரியவில்லை.

Kerala nun -Amla-murdered September 2015 - Lisieux Carmelite Convent

Kerala nun -Amla-murdered September 2015 – Lisieux Carmelite Convent

பொதுவாக பிடிஐ செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டுள்ளன: ஓய்வு பெற்ற பிறகு, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார், இரண்டு நாட்களாக உடம்பு அசௌகரியமாக இருந்தார் என்று மற்ற கன்னியாஸ்திரிகள் கூறினர்[17]. அதற்கு மேலாக, வேறு எந்த விவரத்தையோ, தகவலையோ கொடுக்கவில்லை. அவரது உடல் அரசு மருத்துவமனை, கோட்டயத்திற்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மற்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்ச் தரப்பில், எதையும் சொல்ல மறுக்கின்றனர். போலீஸ் விசாரணையில் வழக்கு உள்ளதால், தாங்கள் கருத்து எதையும் சொல்ல விரும்பவில்லை என்கிறார்கள். ஆனால், ஊடக தாக்கங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள கத்தோலிக்க சர்ச்சிக்கு இது கைவந்த கலையாகவும் இருந்து வருகிறது. மேலும் இந்த பாலா இடம், கத்தோலிக்கர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்[18]. அதனால், இங்கிருந்து செய்தியை சேகரிப்பது என்பது கடினமாகும். என்.டி.டிவி[19], உள்ளூர் மலையாள ஊடகங்களைத் தவிர  மற்றவை இ.டி.ஐ கொடுத்த செய்தியை அப்படியே போட்டுள்ளன. அதாவது, ஊடகக்காரர்கள் தங்களது புலனாய்வு திறமை முதலியவற்றை இங்கு பிரயோகிப்பதில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

Lisieux Carmelite Convent fathers and nuns Amla murder

Lisieux Carmelite Convent fathers and nuns Amla murder

லிசியுக்ஸ் கார்மெலைட் கான்வென்ட்டின் [Lisieux Carmelite Convent] தோற்றம்: எலிஜா என்ற தீர்க்கதரிசி மற்ற ஆன்மீக துறவிகள் இப்பொழுது ஹைபா எனப்படுகின்ற கார்மெல் மலைப்பகுதிகளில் உள்ள குகைகளில் வாழ்ந்தனர். மேரியின் சகோதரர்கள் என்ற குழுமத்தை 13ம் நூற்றாண்டில் சிலர் ஏற்படுத்தினர். இவ்வாறுதான் கேர்மலைட் பிரிவு உருவானது. 16ம் நூற்றாண்டில், அவிலாவைச் சேர்ந்த தெரஸா மற்றும் சிலுவை ஜானும் சேர்ந்து, இதனை மாற்றியமைத்தனர். அதன்படி, இம்முறையினை பின்பற்றுகிறவர்கள், தனியாக இருந்து பிரார்த்தனை செய்வது, பாட்டுப் பாடுவது முதலியவை பரிந்திருக்கப்பட்டன. அவர்கள் உலகத்தின் மீட்சிக்கு பிரார்த்தனை செய்தனர்[20]. இந்த பாலா சர்ச் வளாகம் / கான்வென்ட் முதலியன லிசியுக்ஸ் கார்மெலைட் கான்வென்ட்டைச் சேர்ந்தவை ஆகும். அதே முறையில் கன்னியாஸ்திரிக்களை பின்பற்ற வைக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம். சிரிய கிருத்துவர்கள் கேரளாவில் பற்பல கட்டுக்கதைகளை உருவாக்கி வருகின்றனர். அவ்வகையில், இவ்விசயத்திலும் ஏதாவது நம்பிக்கை என்று உருவாக்கிகின்றனரா என்றும் ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

18-09-2015

[1] Indian Express, Kerala: Catholic nun found dead inside convent in Kottayam, Written by Shaju Philip, Thiruvananthapuram, Updated: September 18, 2015 2:03 am.

[2] தினத்தந்தி, கேரளாவில் கத்தாலிக்க கன்னியாஸ்திரி கொலை ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார், மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 17,2015, 3:14 PM IST, பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 17,2015, 3:14 PM IST

[3] http://indianexpress.com/article/india/india-others/kerala-catholic-nun-found-dead-in-carmel-convent-in-kottayam/

[4] மாலைமலர், கோட்டயத்தில் நள்ளிரவு மடத்துக்குள் புகுந்து கன்னியாஸ்திரி படுகொலை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18, 10:41 AM IST.

[5] http://www.ndtv.com/kerala-news/nun-found-dead-in-convent-in-kerala-murder-not-ruled-out-police-1218621

[6] http://www.maalaimalar.com/2015/09/18104149/nun-murdered-in-Kottayam-midni.html

[7] தினமணி, கோட்டயத்தில் கன்னியாஸ்திரி கொலை, By dn, கேரள, First Published : 17 September 2015 06:45 PM IST.

[8]http://www.dinamani.com/india/2015/09/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article3033272.ece

[9] http://www.dailythanthi.com/News/India/2015/09/17151406/Kerala-Nun-found-dead-in-convent-room-in-Kerala.vpf

[10] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் கத்தாலிக்க கன்னியாஸ்திரி தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்பு: கொலையா என போலீஸ் சந்தேகம், Posted by: Jayachitra Updated: Friday, September 18, 2015, 10:54 [IST].

[11] Hindustan Times, Kerala: Nun found dead in convent room, police suspect murder, By PTI, Updated: Sep 17, 2015 19:35 IST.

[12] http://tamil.oneindia.com/news/india/nun-found-dead-kerala-police-suspect-murder-235875.html

[13] http://www.maalaimalar.com/2015/09/18104149/nun-murdered-in-Kottayam-midni.html

[14] The Hindu, Catholic nun found murdered at convent, Updated: September 18, 2015 05:41 IST.

[15] Sr. Lucy Maria, head of the Pala province of the Carmelite Order, Sr. Hilda, member of the congregation of the Assisi Sisters, and the late Cicily are her siblings.

[16] Sr. Amala is the niece of Bishop Remigiose Inchananiyil, head of Thamarassery diocese of the Syro-Malabar Church. http://www.thehindu.com/news/national/kerala/catholic-nun-found-murdered-at-convent/article7663733.ece

[17] Mid-day, Kerala: Nun found dead in convent room, police suspect murder, By PTI, Posted 5 hours (acessed by 12.25 pm on 18-09-2015).

[18] http://www.mid-day.com/articles/kerala-nun-found-dead-in-convent-room-police-suspect-murder/16542159

[19] http://www.ndtv.com/kerala-news/nun-found-dead-in-convent-in-kerala-murder-not-ruled-out-police-1218621

[20] http://www.therese-de-lisieux.catholique.fr/The-Carmel-of-Lisieux,303.html