இன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]

இன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]

Salvation Army, tsunami relief

2004 சுனாமியும், அடுத்து வந்த சுனாமி-மோசடிகளும்: 2004ல் சுனாமி பலத்த பேரழிவை ஏற்படுத்தியது, ஆனால், அதையும் வைத்துக் கொண்டு, கிருத்துவ நிறுவனங்கள், மதமாற்றம், அந்நிய நிதியுதவி மோசடி, வீட்டி கட்டித் தரும் பிராடு என்று பலவிதங்களில் இறங்கியது திகைப்பாக, விசித்திரமாக, வருத்தமாக இருந்தது. இவற்றில் பல மொசடிகள் நீதிமன்றங்களுக்கும் சென்றன. ஆனால், அந்நிய கிருத்துவ நிறுவனங்கள், பிஷப்புகள் என்று பலர் ஈடுபட்டதாலும், வகையாக மாட்டிக் கொண்டதாலும், அப்படியே செய்திகள், ஆவணங்கள், வழக்குகள் என்று அனைத்தையும் மறைக்க பாடுபட்டன.  மீட்பு ராணுவம் [Salvation Army] என்கின்ற கிருத்துவ அமைப்பின் விவகாரங்கள் அப்பையே அமுக்கப் பட்டன. இன்றைக்கு, மொத்தமாக துடைத்து விட்டது போலத்தான் உள்ளது. நான் www.indiainteracts.com போன்ற தளங்களில் பதிவு செய்தவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. “Google Group” போன்றவற்றில் பதிவு செய்தவை சில காணப் படுகின்றன. இப்பொழுதும், இந்த “ஜாப் சரவணன், யோபு சரவணன்” பற்றி செய்தி வராமல் இருந்தால், எல்லோருமே மறந்திருப்பர்.

MLM, Church, Yobu

பல அடுக்கு வியாபார யுக்தி [MLM – Multi level marketing] மூலம் மோசடியில் இறங்கிய முறை: பல அடுக்கு வியாபார யுக்தி [MLM – Multi level marketing] மூலம் 2005லிருந்து, பல கிருத்துவ நிறுவனங்கள், சர்ச்சுகள், பாஸ்டர்கள், பிஷப்புகள் என்று இந்த யுக்தியை கடைபிடித்து மோசடியில் இறங்கின. முதலில், தங்களுக்கு தெரிந்தவஎகளை வைத்து, ஒரு அளையை உண்டாக்கி, தமக்கு ஒழுங்காக பணம் வருமாறு செய்து கொள்வார்கள். இதற்கு வேண்டிய பணம் தான் நிதியுதவி, கள்ள பணம் போன்ற வகையில் வரும். பிறகு, வெளியாட்களை சேத்து மாட்டி விடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஆட்களைப் பிடித்து மாட்டி வைத்தால் தான் அவர்களுக்கு பணம் கிடைக்கும், இல்லையென்றால் காலிதான், ஒரு ரூபாய் கூட கிடைக்காது. விசயம் அறியாத அப்பாவிகள், பலர் தங்களது கஷ்டப் பட்டு உழைத்தப் பணத்தைப் போட்டு மாட்ட்க் கொண்டனர். இவர்கள் போட்டது உண்மையான பணம் என்பதால், அவர்கள் புகார் கொடுப்பதும், ஆர்பாட்டம், பொராட்டம் செய்வதும், விசயம் வெளியே வந்தன. வசதி படைத்த ஆட்கள், நீதிமன்றங்களுக்குச் சென்ற போது, மேலும் விவரங்கள் வெளிவந்தன.

Yobu saravanan 2007, Vedaprakash postings disappeared

2006ல் கைதானது, 2008ல் விடுவிக்கப் பட்டது[1]: வேலூர் மாவட்டம், அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜாப் சரவணன் / யோபு சரவணன் [Job Saravanan], பாதிரியார்[2]. இவன் “இன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட்” [M/s.International Calvary Mission Trust]  என்ற ஒரு அறக்கட்டளை நடத்தினான். 2005ம் ஆண்டு அறக்கட்டளை மூலம் வீடுகள் கட்டித்தருவதாக அவனும், அவனதுன் கூட்டாளிகளும் பிரபல நாளிதழ்களில் விளம்பரம் செய்தான்[3]. இதனை கண்ட குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்த பில்டர்கள் ராஜேந்திரன், நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த தயாளன் ஆகியோர், அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் வீடு கட்டித்தருவதாக கூறி பலரிடம் பணத்தை வசூலித்து கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் ₹4 லட்சத்தை யோபு சரவணனிடம் கொடுத்தனர்[4]. ஆனால், யோபு சரவணன் வீடு கட்டி தராமல் காலம் கடத்தினான். இதையடுத்து பணத்தை திருப்பிக்கேட்டபோது 2006ம் ஆண்டு யோபு சரவணன் ₹4 லட்சத்திற்கான காசோலையை ராஜேந்திரன், தயாளனிடம் கொடுத்தான். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் 2007ம் ஆண்டு குடியாத்தம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. அவனது கூட்டாளிகள் [Soundararajan and Paalravi Sanjeevi] பல தேதிகளிலும், இவன் 06.12.2006 அன்றும் கைது செய்யப் பட்டான்[6].  போலீஸார் 11 விலையுயர்ந்த கார்கள், ரூ2.5 கோடிகள். 4 கோடி மதிப்புள்ள அவனது சொத்துகளும் கைதின் மீது பரிமுதல் செய்தனர்[7].  பிறகு, இவன் போன்ற பாதிரிகள் பலர், “மல்டி-லெவல்-மார்க்கெடிங்” போன்ற முறையில், பலரை ஏமாற்றி பணம் பறித்தது தெரிந்தது. இதில் பலர் சம்பந்தப் பட்டதால், வழக்குகளை மறைக்க பலரும் பாடு பட்டனர். இதனால், பழைய செய்திகள் கூட இணைதளங்களிலிருந்து மாயமாகின. இருப்பினும் 22-01-2008 அன்று அவன் போட்ட மனு மீதான விசாரணையில், சென்னை உயர்நீதி மன்றம் அவனை விடுவித்தது[8]. ஊடகங்கள் இவனைப் பற்றிய செய்திகளை முரண் பட்ட விதங்களில் வெளியிட்டன[9]. போலீஸாரும் வழக்கை ஏனோ-தானோ என்று தான் பதிவு செய்தனர். அதனால், அவன் விடுவிக்கப் பட்டான்[10].

MLM, Church, Yobu sentenced in 2019

2006 வழக்கிற்கு 2019 தீர்ப்பு: இவ்வழக்கு கிடப்பில் கிடந்ததால், பாண்டியன், வாசு மற்றும் ஆனந்தன் மனு போட்டதால், சென்னை உயர்நீதி மன்றம், குடியாத்தம் கோர்ட்டை, இவ்வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு 21-12-2018 அன்று ஆணையிட்டது[11]. இலவச வீடுகள் கட்டித்தருவதாக கூறி ₹8 லட்சம் மோசடி செய்த பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து குடியாத்தம் கோர்ட் தீர்ப்பளித்தது.  இந்த வழக்கு கடந்த மாதம் நவம்பர் 28ம் தேதி 2019 விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி செல்லபாண்டியன் விசாரித்து யோபு சரவணனுக்கு 2 ஆண்டு சிறை, ₹8 லட்சம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு, பணம் வழங்க தவறினால் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். இதேபோல், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன், வாசு, ஆனந்தன் ஆகியோரிடமும் வீடு கட்டித்தருவதாக கூறி யோபு சரவணன் ₹4 லட்சம் ஏமாற்றியதாக குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, 2 ஆண்டு சிறை, ₹8 லட்சத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி தர வேண்டும் தவறும் பட்சத்தில் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஒரு வருடம் கழித்து, இத்தீர்ப்பு வழங்கப் படுகிறது.

Messsaiah

பிஷப், சர்ச் நடத்தி பண வேட்டையில் இறங்கியது: ஊடகங்கள், எப்படி ஒரு கிருத்துவ பிஷப், மடாதிபதி, ஏமாற்றலாம், பல மனைவிகள் வைத்திருக்கலாம், நடிகைகளுடன் ஆட்ட போடலாம் என்றெல்லாம், ஆராச்சி செய்து, வீடியோ போடவில்லை, ஊடகங்களில் விவாதம் நடத்தவில்லை. வேலூர் காட்பாடியை சேர்ந்த யோபு சரவணன், கல்வாரி இன்டர்நேஷனல் மிஷன்டிரஸ்ட் என்ற பெயரில் சென்னை முகப்பேரி அலுவலகம் வைத்துக் கொண்டு ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்து அதன் மூலம், காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை வசூலித்துவிட்டு தலைமறைவானான்[12]. இவன் மீது ஏராளமான காணடிராக்டர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். போலி பிஷப் ஆனந்தராஜ் பாணியில், ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறிகாண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தேடப்பட்டு வந்த பிஷப் யோபு சரவணன் மோசடிமூலம் சம்பாதித்த பணத்தை வைத்து அழகிகளுடன் குஜால் வாழ்க்கை வாழ்ந்தான்[13], என்று தான் 2006ல் வர்ணித்தன. இப்பொழுது 2019ல் தீர்ப்பு வந்தும் கண்டு கொள்ளாமல் அமுக்கி விட்டன.

© வேதபிரகாஷ்

07-12-2019

Salvation Army, symbol

[1] HE HONOURABLE MR.JUSTICE P.D.DINAKARAN AND THE HONOURABLE MR.JUSTICE P.R.SHIVAKUMAR, H.C.P.No.436 of 2007

Job Saravanan…..  Petitioner Vs. 1.  The State of Tamilnadu rep. by its Secretary to Government, Prohibition & Excise Department, Fort St.George, Chennai-9.

  1. The Commissioner of Police, Greater Chennai………..Respondents

[2] தினகரன், இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை குடியாத்தம் கோர்ட் தீர்ப்பு, 12/4/2019 12:11:09 AM.

[3] விகடன், பணம் கொடுத்தால் மொட்டை!, Vikatan Correspondent, Published:05 Oct 2008 5 AM; Updated:05 Oct 2008 5 AM. https://www.vikatan.com/news/crime/48316–2

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=972127

[5] https://indiankanoon.org/doc/105129926/

[6] One India, Police to move court to freeze ‘fake’ Bishop’s property, Written by: Staff| Published: Saturday, March 17, 2007, 17:18 [IST].

[7]  https://www.oneindia.com/2007/03/04/police-to-move-court-to-freeze-fake-bishops-property-1174132076.html

[8] A perusal of the detention order discloses that the detenu was arrested on 6.12.2006. However, in the representation dated 16.2.2007 made on behalf of the detenu, it is clearly stated that he was arrested on 12.11.2006 and not on 6.12.2006 and that he was kept under illegal custody of the respondents for a period of 24 days. This grievance of the detenu as to his illegal detention from 12.11.2006 to 5.12.2006 was not at all considered by the Government, while disposing of the representation dated 16.2.2007 by proceedings dated 7.3.2007. In our considered opinion, the non-consideration of the said vital aspect of the case, viz., as to the date of the arrest, when a serious dispute is raised, vitiates the detention order. For the reason aforesaid, the impugned order of detention is vitiated and as such, the same is liable to be set aside and accordingly, the order of detention dated 24.1.2007 is set aside and this petition is allowed. The petitioner/detenu is directed to be set at liberty forthwith unless his presence is required connection with in any other crime. No costs. Consequently, M.P.Nos.1 and 2 of 2007 are closed. https://indiankanoon.org/doc/187088/

[9] One India, Fake Bishop’s aide held in multi-crore cheating case, Written by: Staff| Published: Monday, June 11, 2007, 19:41 [IST]

[10] https://www.oneindia.com/2007/06/11/fake-bishops-aide-held-in-multi-crore-cheating-case-1181571058.html

[11] Madras High Court, B.Pandian vs Mr.J.Job Saravanan @ Yobu … on 21 December, 2018,   IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 21.12.2018, CORAM:  THE HONOURABLE MR.JUSTICE N.ANAND VENKATESH, Crl.O.P.No.30224 of 2018,  1.B.Pandian, 2.Mr.A.Vasu அன்ட் 3.Mr.S.Anandan …petitioners..Vs…..Mr.J.Job Saravanan @ Yobu Saravanan, (Founder and President Vellore Calvari Mission Trust), Arriur, Near Railway Gate, Vellore.  …Respondent, https://indiankanoon.org/doc/105129926/

[12] https://tamil.oneindia.com/news/2006/09/04/yobu.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, குஜால் மன்னனாக வாழ்ந்த போலி பிஷப் யோபு, By Staff | Published: Monday, September 4, 2006, 5:30 [IST]

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: