கன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா?

கன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய கர்த்தரின் திருப்பெயரால்என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா?

Nun Lucy book

Sister Lucy Kalapura has been expelled from FCC nunnery. She was expelled despite warnings of not following the norms of the FCC and living a lifestyle not complying with the rules of the nunnery. A show cause notice was sent earlier pointing various issues to Lucy, teacher of Dwaraka Sacred Heart School in Wayanad. She was censured for giving interviews to T V Channels and for partaking in the protest against Bishop Franco Mulakkal. Action was taken now for ignoring the warnings. Along with the letter of expulsion, the confirmation of expulsion by Vatican has also been included. The letter sent has asked her to leave the nunnery within ten days.

Nun Lucy book-sister

கேரளாவில் கன்னியாஸ்திரிக்கள் அதிகமாக பாதிக்கப் படுவது: கேரளாவிலிருந்து கன்னியாஸ்திரிகளும், நர்சுகளும் ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள் என்று 1960களிலிருந்தே சொல்வதுண்டு. படிக்காத பெண்கள் துப்பரவு தொழில், ஆயா வேலை செய்ய வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வந்தனர். பிறகு கேரளாவிலேயே கன்னியாஸ்திரிக்கள் பலவிதங்களில் அவர்களுடைய தங்குமிடம் [nunnery], மடாலயங்கள், என்று பல இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றனர். அபயா கொலை வழக்கு இன்றும் இழுத்தடிக்கப் பட்டு வருகிறது. கற்பழிப்பு என்பது சகஜமாக இருக்கிறது. இப்பொழுது, இந்த வழக்கு உலக பிரசித்தமாகி விட்டது. கத்தோலிக்க அதிகரம், எப்படியாவது, மூடி மறைத்து, மறக்கடிக்க வேண்டும் என்று முயன்று வருகின்றது. அரசியல் அழுத்தம். மத யதேக்காரம், ஊடக முடக்கம் முதலியவை அதிகமாகவே கணப்படுகின்றன. இருப்பினும், சில விசயங்கள் தெரிய வருகின்றன. ஏனெனில், பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரிக்கள், வெளியே வந்து போராட்டம் நடத்தினர், தாங்கள் எவ்வாறு நடத்தப் படுகின்றனர் என்று வெளிப்படுத்தினர். இவற்றையெல்லாம், சர்ச்சினால் ஜீரணிக்க முடியவில்லை.

Kerala rape - Jalandhar bishop-2

பிஷப் மூலக்கல் கற்பழிப்பு விவகாரம்: கேரள சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முளக்கல் [Bishop Franco Mulakkal], 2014 முதல் 2016 வரை 13 தடவை, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த ஆண்டு கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறினார்[1]. இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்களுக்கு மேலாகியும் விசாரணை முடிவடையாத நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக, விடுதியில் அவருடன் தங்கியிருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்[2]. பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 5 கன்னியாஸ்திரிகளில் 4 பேரை கேரளாவில் உள்ள கான்வென்ட்டில் இருந்து வெளியேறும்படி அதன் தலைமை மிஷனரி உத்தரவிட்டது[3]. இதனை அடுத்து 5வது கன்னியாஸ்திரியான நீனா ரோஸ் மற்றும் பிற கன்னியாஸ்திரிகள், முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினர்.  இதில் நீனா ரோஸ், என்னை தனிமைப்படுத்தி, துன்புறுத்துவது அவர்களின் நோக்கம். இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் எனது வாழ்க்கை ஆபத்தில் சிக்கி விடும் என எழுதினார்[4].

Church accused Lucy

தொடர்ந்து கன்னியாஸ்திரிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது: இந்த நிலையில், சமூகத்தின் ஒரு பகுதியாக மற்றும் அன்றாட மத வாழ்க்கையில் இணைந்து செயல்பட நீனா ரோஸ் மறுக்கிறார் என குற்றச்சாட்டு கூறி அவரை இடமாறுதல் செய்து மிஷனரிகளுக்கான ஒருங்கிணைந்த தலைமை நிர்வாகம் உத்தரவிட்டது[5]. அந்தப் புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட பிஷப் பிராங்கோ, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்[6]. அந்த வழக்கில் பிராங்கோவுக்கு எதிராகச் சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா, கடந்த ஆண்டு 2018 அக்டோபரில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதன்பின்னர், “பிஷப் பிராங்கோ முளக்கல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. முதலில் கன்னியாஸ்திரி அனுபமா என்பவரை இடமாற்றம் செய்து சபை உத்தரவிட்டது. அடுத்தபடியாக பிஷப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக கலந்துகொண்ட கன்னியாஸ்திரி லூசி களப்புரா [Lucy Kalapura ] என்பவரைக் கடந்த மே மாதம் சபையை விட்டு நீக்கியுள்ளனர்[7]. மேலும், சபையைவிட்டு வெளியேற வேண்டும் எனக் கன்னியாஸ்திரி லூசிக்குப் பலவகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சபை குறித்த சில விஷயங்களை மீடியாக்களில் வெளிப்படுத்தி வந்தார் லூசி களப்புரா.

Nun Lucy debate on Times now

லூசி களப்புராகர்த்தரின் திருப்பெயரால்என்ற புத்தகத்தை எழுதியது: இந்த நிலையில், கன்னியாஸ்திரி லூசி களப்புரா குறித்து பத்திரிகையாளர் ராமதாஸ், “கர்த்தாவின்டே நாமத்தில்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். கன்னியாஸ்திரிகள் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவது, கிறிஸ்துவ கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மனக்குமுறல்களையும் அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்[8]. அடுத்தவாரம் – டிசம்பர் 10ம் தேதி. இந்த புத்தகம் வெளியாக உள்ளது[9]. இதனால், ஊடகங்களில் சர்ச்சைகள், விவாதங்கள் உருவாகியுள்ளன. பொதுவாக சர்ச் அதிகாரம் இவற்றை விரும்புவதில்லை. இருப்பினும், ஜான் தயாள், தில்லி பிஷப் முதலியோர் கலந்து கொண்டு, தங்களது அடிப்படைவாத வாதங்கள் வைக்கும் போது, சாதாரண இந்தியர்களுக்கு புரிகிறதோ இல்லையோ,  கிருத்துவர்களுக்கு நன்றாக புரிகிறது. ஜான் தயாளின் வாதம், “இவ்விசயம் கோர்ட்டுக்கு சென்று விட்டதால், அங்கு அது முடிவு செய்யப் படும். கத்தோலிக்க கெனான் சட்டத்தை விட்ட, இந்நாட்டின் சட்டம் பெரிது. அதனால் பொறுத்திருக்க வேண்டும், அதற்குள் சத்தோலிக்க சர்ச்சை குறைவாக பேசுவது கூடாது,” என்ற தொணியில் உள்ளது. தில்லி ஸ்டான்லி பிஷப்போ, திமிராகத்தான் பேசினார், “அந்த கன்னியாஸ்திரி, ஏதோ கிலுகிலுப்பு ஊட்டும் முறையில் அப்புத்தகத்தை எழுதியுள்ளார்……………………..,” என்றபோது, பெண்கள் கண்டித்தனர்.

Nun Lucy debate on Times now-2

புத்தகத்தில் உள்ள விவரங்கள்: அதில், கன்னியாஸ்திரி லூசி களப்புரா கடந்துவந்த வலிகளை விவரித்துள்ளார்[10]. அந்தப் புத்தகத்தில் லூசி களப்புரா கூறியுள்ளதாவது, “பாதிரியார் ஒருவர் நான்குமுறை பலவந்தமாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்[11].  பார்வையாளர் என்ற போர்வையில் மடத்துக்குள் நுழைந்து, இந்தத் தொல்லையைக் கொடுத்தார். மடத்தில் ஒரு கன்னியாஸ்திரிக்கு குழந்தை பிறந்தது. அதில், சம்பந்தப்பட்ட பாதிரியாரை சபை காப்பாற்றியது[12]. குழந்தைபெற்ற கன்னியாஸ்திரி மடத்திலிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அதற்குக் காரணமான பாதிரியார் இப்போது உயர் பதவியில் அமர்ந்திருக்கிறார். பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பாதிரியார் பல கன்னியாஸ்திரிகளுடன் தொடர்பில் இருந்தார்” என அதிர்ச்சித் தகவல்களை விவரித்துள்ள கன்னியாஸ்திரி லூசி, பார்வையாளர் என்ற போர்வையில் மடத்துக்குள் நுழைந்த அந்தப் பாதிரியார் பலவந்தமாக பாலியல் தொல்லையைக் கொடுத்தார். “இப்போதுள்ள வழக்கங்களை மாற்ற வேண்டும். திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பாதிரியார்களையும் கன்னியாஸ்திரிகளையும் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு சபை அனுமதிக்க வேண்டும்” எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல் குறித்த பல சம்பவங்களையும் புத்தகத்தில் கூறியிருக்கிறார் லூசி. `கர்த்தாவின்டே நாமத்தில்’ புத்தகம் கேரளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Lucy book release-Dinakaran cutting

டிசம்பர் 10ம் தேதி, இப்புத்தகம் வெளிவருமா?: லூசி எழுதிய புத்தகம் [‘Karthavinte Namathil’ (In the name of the Lord)] டி.சி. புக்ஸ் [D C Books] என்ற பதிப்பகத்டினரால், இம்மாதம் 10ம் தேதி வெளியிடுவதாக உள்ளது. அந்நிலையில், கன்னியாஸ்திரி லிஸியா ஜோசப் [Sister Lisiya Joseph  a nun with the Sisters of Mary Immaculate (SMI) congregation] என்பவர், இப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்று கேரளா உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்[13]. “அவருக்கு பிரச்சினைகள் இருந்தால், உரிய அதிகாரத்திடம் முறையிடலாம்,” என்றெல்லாம் கூறியுள்ளது வேடிக்கையாக இருந்தது[14].. ஆனால், நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆகஸ்ட் 2019ல் லூசி வாடிகனால், சர்ச்சிலிருந்து நீக்கப் பட்டார். இவ்விசயத்தில் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், பண்டிதர்கள், வித்வான்கள், ஜாம்பவான்கள், உரிமைக் காரர்கள் முதலியோர் பொங்கக் காணோமே? பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணுரிமை நாரீமணிகள், அம்மணிகள், யாரும் கண்டு கொள்ளவில்லையே? கன்னீயாஸ்திரிக்களை பிடிக்காது போலும்! கிருத்துவத்தைப் பெயர்த்து எடுத்து, பைபிளில் மூழ்கி, ஆராய்ச்சி செய்யும் இந்துத்துவ வாதிகளும் அமைதியாக இருக்கிறார்களே? போப் தடையா ?

© வேதபிரகாஷ்

04-12-2019

Nun rape case, pressure brught on witnesses 03-12-2019

[1] நக்கீரன், பாதிரியார்களின் ரகசிய உறவுகள்..’ – பரபரப்பை ஏற்படுத்தும் கன்னியாஸ்திரி புத்தகம், Published on 03/12/2019 (12:37) | Edited on 03/12/2019 (12:43), கதிரவன்

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/lucy-kalapura

[3] தினத்தந்தி, பேராயர்களின் பாலியல் துன்புறுத்தல்கள்; சுயசரிதை புத்தகத்தில் கேரள கன்னியாஸ்திரி தகவல், பதிவு: டிசம்பர் 03, 2019 13:55 PM

[4] https://www.dailythanthi.com/News/India/2019/12/03135516/Sister-Lucy-Kalappura-on-her-autobiography-states.vpf

[5] தினமலர், கேரள கன்னியாஸ்திரியின்கர்த்தாவின்டே நாமத்தில், Updated : டிச 02, 2019 19:30 | Added : டிச 02, 2019 19:27

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2424730

[7] Sister Lucy Kalapura has been expelled from FCC nunnery. She was expelled despite warnings of not following the norms of the FCC and living a lifestyle not complying with the rules of the nunnery. A show cause notice was sent earlier pointing various issues to Lucy, teacher of Dwaraka Sacred Heart School in Wayanad. She was censured for giving interviews to T V Channels and for partaking in the protest against Bishop Franco Mulakkal. Action was taken now for ignoring the warnings. Along with the letter of expulsion, the confirmation of expulsion by Vatican has also been included. The letter sent has asked her to leave the nunnery within ten days.

https://keralakaumudi.com/en/news/news.php?id=138900&u=sister-lucy-kalappura-expelled-from-nunnery-138900

[8] தினத்தந்தி, கன்னியாஸ்திரியின்கர்த்தாவின்டே நாமத்தில்‘ : பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் பற்றி விவரிப்பு, பதிவு : டிசம்பர் 03, 2019, 03:35 PM.

[9] https://www.thanthitv.com/News/India/2019/12/03153502/1060133/Nuns-Book-Sexual-Harassment.vpf

[10] விகடன், நான்குமுறை பாலியல் தொல்லை கொடுத்தார்!’ –கேரளாவை அதிரவைத்த `கர்த்தாவின்டே நாமத்தில்,’ சிந்து ஆர், Published:Today at 11 AMUpdated:Today at 11 AM.

[11] https://www.vikatan.com/news/crime/kerala-nun-lucy-explained-over-bishops-sexual-abuse-issue

[12]  https://www.vikatan.com/news/crime/kerala-nun-lucy-explained-over-bishops-sexual-abuse-issue

[13] Sister Licia Joseph, a nun with the Sisters of Mary Immaculate (SMI) congregation, on Wednesday approached the Kerala High Court seeking to stop further publication and distribution of the book, ‘Karthavinte Namathil’, written by Sr Lucy Kalappura. The petitioner said she has read the contents of the book, which she felt are highly defamatory to the clergy, nuns and the religious. “It says the priests and nuns are leading a very immoral life and indulging in indiscriminate sexual life. The book creates a sense of dejection and anger in the minds of the members of the Christian community. The book is a naked infringement on public order, decency and morality,” Sr Licia said in her petition. https://www.newindianexpress.com/states/kerala/2019/dec/04/nun-approaches-kerala-hc-seeking-to-stop-publication-of-sr-lucys-autobiography-2071396.html

[14] The Kerala High Court on Wednesday declined to ban the dismissed nun, Sister Lucy Kalapurakkal’s autobiography titled “Karthavinte Namethil (In the name of Christ)”. The high court, which heard the petition filed by Sister Lisiya Joseph seeking a ban on the book, said if the petitioner has any complaints about the contents, she can approach the appropriate authority.

https://www.newindianexpress.com/states/kerala/2019/dec/04/kerala-high-court-declines-to-ban-dismissed-nun-lucys-autobiography-2071548.html

குறிச்சொற்கள்: , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: