திருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்! [1]

திருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்! [1]

Prasanth committed sucide in Trichy seminary 19-11-2019

குருத்துவ கல்லூரி [Theological college, seminary] மாணவன் தற்கொலை: எந்த படிப்புப் படித்தாலும், மாணவர்களுக்கு பிரச்சினை, மனவுலைச்சல், மற்ற சிக்கல்கள் வரும் போலிருக்கிறது. பாஸ்டர் படிப்பில், இறையியல், தத்துவம், சித்தாந்தம் முதலியவைப் படித்து, இவர்கள் மற்ற விசுவாசிகளுக்கு போதனை செய்வார்கள். ஆனால், இவர்களுக்கே, மனவுறுதி இல்லை, தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது, ஆபத்தான விசயமாகிறது. வழக்கம் போல தமிழ் நாளிதழ்கள் மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் செய்தி வந்ததாகத் தெரியவில்லை. “தி இந்து” ஓரளவிற்கு உண்மையான தகவல்களை சேகரித்து செய்தியாக வெளியிட்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகரைச் சோ்ந்த மரியசூசை மகன் பிரசாந்த் (25) [1]. இவா் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரிலுள்ள குருத்துவக் கல்லூரியொன்றில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்[2].  “திருச்சியிலுள்ள தூய பவுல் இறையியல் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்த மாணவர் தனது மரணம் குறித்து ஓவியம், கவிதை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்,” என்கிறது[3] “தி இந்து”. மாணவரின் பெயர் “பிரசாத்” என்று குறிப்பிடுகிறது.

St Paul seminary- M. Prasath-3

பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் தற்கொலை: 19-11-2019, செவ்வாய்க்கிழமை காலை வகுப்புக்குச் சென்ற அவா், பிற்பகலில் அறைக்குத் திரும்பினார். பின்னா் பிரசாந்த் வகுப்புச் செல்லவில்லை. சக மாணவா்கள் அறைக்கு வந்து பார்த்தபோது அறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்[4].  “மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்,” என்கிறது “தி இந்து”. .இதுகுறித்த தகவலின் பேரில், கண்டோன்மென்ட் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்த கன்டோன்மென்ட் சப் இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீஸார் அங்கு சென்று, அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று உடலைக் கைப்பற்றினர், என்கிறது[5] “தி இந்து”.  மாணவரின் தற்கொலைக்கான காரணம் தெரிவில்லை. இது குறித்து கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

St Paul seminary oppositite to Trichy HPO-STUDENT SUICIDE

தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என அவர் மரணக்குறிப்பு எழுதி வைத்துள்ளார்: பின்னர் அவரது அறையில் சோதனையிட்டபோது, ஒரு நோட்டில் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதி வைக்கப்பட்டு இருந்தது. அதை போலீஸார் கைப்பற்றினர். இதற்கிடையே, கல்லூரி அதிபர் ஆன்ட்ரூ டி ரோஸ் (58) அளித்த புகாரின்பேரில் இ.த.ச 174-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பிரசாத்தின் அறையில் இருந்து கைப்பற்றிய நோட்டில் தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என அவர் மரணக்குறிப்பு எழுதி வைத் துள்ளார். மேலும், 8 வயதிலிருந்தே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் காத்திருந்ததாகவும், இதுகுறித்து யாரிடமும் கூறியதில்லை எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, அந்த நோட்டின் முன் பக்கத்திலேயே மரணம் எனத் தலைப்பிட்டு, ஒவ்வொரு மதமும் மரணம் குறித்து என்ன சொல்கிறது என வரிசையாக எழுதி வைத்திருந்தார். அதாவது தத்துவார்த்த ரீதியில் அவன் சிறுவனாக இருக்கும் பொழுதே அத்தகைய உயர்ந்த சிந்தனை கொண்டுள்ளான் என்றே தெரிகிறது. ஆனால், வளர்ந்து, தத்துவம் படிக்கின்ற நிலையில், அதிகம் பாதித்து, இந்நிலைக்குத் தள்ளப் பட்டான் போலும். இருப்பினும், திடீரென்று அத்தகைய உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தைய நிகழ்வுகள் தான் அவனை அவ்வாறு தூண்டி இருக்க வேண்டும்.

St Paul seminary- M. Prasath-2

தற்கொலை பற்றி நீண்டநாள் சிந்தனைமாணவரின் குடும்பத்தினர் எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை: அடுத்தடுத்த பக்கங்களில் மரணம் குறித்த சில கவிதைகளும் எழுதப்பட்டிருந்தன. இதுதவிர தனது அறையின் உள்பகுதி, அதில் தூக்கில் தொங்கும் விதம் ஆகியவை குறித்தும் பிரசாத் அந்த நோட்டில் ஓவியமாக வரைந்திருந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குள் தற்கொலை எண்ணம் இருந்து வந்துள்ளது. அது மன நோயாக மாறி, தற்போது அவரது உயிரையே பறித்து உள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, மாணவரின் குடும்பத்தினர் எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை. திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது” என்றனர். திருச்சியில் கடந்த 13-ம் தேதி அய்மான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி விடுதி அறையில் ஷபாரா பர்வீன் என்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அடுத்த ஒருவாரத்துக்குள்ளாக கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் பிரசாத் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, என்று “தி இந்து” முடிக்கிறது. ஆனால், யாரும் இதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!

St Paul seminary- students

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 174 (IPC Section 174 in Tamil) விளக்கம்[6]: எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையில், ஒரு அழைப்பாணை, அறிவிப்பு, உத்தரவு அல்லது பொது அறிவிப்பு ஆகியவற்றை வெளியிட, சட்டப் படி அதிகாரம் கொண்ட அத்தகைய பொதுப் பணியாளர் பிறப்பிக்கும் அவற்றிற்குக் கீழ்ப்படிந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில், தான் நேரடியாகவோ அல்லது ஒரு முகவர் மூலமாகவோ முன்னிலையாக சட்டப்படி கடப்பாடு கொண்டிருக்கையில், உள்ளநோக்கத்துடன் அவ்விடத்தில் அல்லது அந்நேரத்தில் ஆஜராகத் தவறினால் அல்லது ஆஜராக கடப்பாடு கொண்ட அவ்விடத்திலிருந்து சட்டப் படி வெளியேற வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே வெளியேறினால், ஓரு மாதம் வரை நீட்டிக்கக் படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரணச் சிறைத்தண்டணையுடன் அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது அவ்வழைப்பாணை, அறிவிக்கை, உத்தரவு அல்லது பொது அறிவிப்பு, ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில், தான் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ ஆஜராவதற்காக இருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரணச் சிறைத்தண்டணையுடன் அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

St Paul seminary- M. Prasath sucide, Andrew De Rose, rector

எடுத்துக்காட்டுகள்-

(a): கொல்கத்தா உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட நீதிப்பேராண்மைக்குக் கீழ்ப்படிந்து, அந்நீதிமன்றம் முன்பு முன்னிலையாக சட்டப்படி கடமை கொண்டுள்ள A என்பவர் உள்நோக்கத்துடன் அவ்வாறு முன்னிலையாகத் தவறுகிறார்.  இச்சட்டப் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்தவராகிறார்.

 (b). ஒரு மாவட்ட நீதிபதி பிறப்பித்த அழைப்பாணையின்படி அதற்கு கீழ்ப்படிந்து, ஒரு சாட்சியாக அந்த மாவட்டநீதிபதி முன்பு முன்னிலையாகக் கடமைப்பட்ட A என்பவர் உள்நோக்கத்துடன், அவ்வாறு முன்னிலையாகத் தவறுகிறார். இச்சட்டப் பிரிவின்படி வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A புரிந்தவராகின்றார்.

St Paul seminary- M. Prasath-tied to tree

குழந்தைப் பருவத்திலிருந்தே பாதிக்கப் பட்ட மாணவன்: டைரியில் இரண்டு பக்கங்களில் எழுதி வைத்துள்ளதில், “என் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை.  வயது  முதல் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. அம்மா என்னை மன்னித்து கொள்ளுங்கள்…..,” என்றுள்ளது. அத்துடன், அவன் பிணமாக தொங்குவது போல் படம் வரைந்து இருந்தான். இன்னொரு புறம், அவன் குழந்தையாக இருக்கும் போது, இவனை கட்டிப் போட்டு விட்டு, பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விடுவார்களாம். அந்த காட்சியை சித்தரிக்கும் வகையில் குழந்தையை கயிற்றில் கட்டி போட்டிருப்பது போலவும் ஒரு படம் வரைய்ப் பட்டிருந்தது. ஆக, ஐ.ஐ.டி விவகாரத்தில், பேராசிரியர்கள் மீது குற்றம் சட்டப் படுவது போல, இங்கும் குற்றம் சாட்ட வேண்டும் என்றால், பெற்றோர், வார்டன், கல்லூரி அதிகாரிகள் என்று எல்லோரையும் பொறுப்பாக்கி, குறை கூறலாம். ஆர்பாட்டம் செய்யலாம். ஆனால், “சிறு வயதிலிருந்தே அவருக்குள் தற்கொலை எண்ணம் இருந்து வந்துள்ளது. அது மன நோயாக மாறி, தற்போது அவரது உயிரையே பறித்து உள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, மாணவரின் குடும்பத்தினர் எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை,” என்றுள்ளது. அதாவது, பிரச்சினை ஆக்க வேண்டாம் என்று விசயத்தை முடித்து விட்டனர் என்றாகிறது. எனவே, இங்கு எந்த அரசியல்வாதியோ, போராட்ட-ஆர்பாட்டக் காரர்கள் வரப் போவதில்லை. விசயம் அப்படியே மறக்கப் பட்டு, மறைக்கப் படும் என்றே தெரிகிறது.

St Paul seminary oppositite to Trichy HPO

கிருத்துவர்கள் தங்களை பரிசீலினை செய்து கொள்ளவேண்டும்: கிறிஸ்தவர்கள் இந்தியாவில் பற்பல பிரச்சினைகளைக் கிளப்பி வருகிறார்கள். அவர்கள் செய்யும் குற்றங்கள், சமூக சீர்ப்பழிப்பு விவகாரங்கள், பாலியல் அசிங்கங்கள் முதலியவை மறைக்கப் படுகின்றன. பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரித்திர ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், சிறுவர் மீதான குற்றங்கள் என்று ஆய்வுக் கட்டுரைகளை படித்தால், பிடோபைல் / குழந்தை கற்பழிப்பாளர்கள் பற்றி மூச்சே விடுவது இல்லை. பெண்கள் விவகாரம் என்றால், கன்னியாஸ்திரிக்கள் கொல்லப் படுவது, கற்பழிக்கப் படுவது, முதலியவை மறைக்கப் படும். ஓரின சேர்க்கை என்று விவாதம் வந்தாலும், அவர்களது அந்நியாயங்கள், வழக்குகள், குற்றங்கள் மறைக்கப் படும். அத்தகைய மறைப்பு சித்தாந்தம் [negationism] மூலமாக, தாங்கள் ஏதோ தேவதைகள்-தேவர்கள் போலக் காட்டிக் கொண்டு ஏமாற்றி வருகிறார்கள். ஆனால், இத்தகைய குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே, கிருத்துவர்கள் முதலில், அவற்றில் கவனம் செல்லுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

21-11-2019.

St Paul seminary oppositite to Trichy HPO-google

[1] தினமணி, குருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை, By DIN | Published on : 20th November 2019 08:11 AM |

[2] http://www.stpaulsseminary.in/BachelorofPhilosophyStudents.htm

[3] தமிழ்.இந்து, மரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை, Published : 21 Nov 2019 09:38 AM; Last Updated : 21 Nov 2019 09:38 AM.

[4] https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/nov/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3284975.html

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/526339-student-suicide-at-trichy.html

[6] https://tamil.lawrato.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-174

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: