விஜிபி குழுமம் சகோதரர்களின் மீது நிலமோசடி புகார், எப்.ஐ.ஆர் பதிவு: முன்பு கைதான ராஜதாஸ் இதிலும் உள்ளது கவனிக்கத் தக்கது!

விஜிபி குழுமம் சகோதரர்களின் மீது நிலமோசடி புகார், எப்.ஐ.ஆர் பதிவு: முன்பு கைதான ராஜதாஸ் இதிலும் உள்ளது கவனிக்கத் தக்கது!

VGP sons involved in land scam 2019

விஜிபி மீது தொடர்ந்து புகார்கள் எழுவது: விஜிபி குழுமங்களுக்கு, நிலமோசடிகளுக்கும் இருக்கும் பந்தம் என்றும் நிலையானது போலும். வருடா வருட அவற்றின் மீது புகார்கள் கொடுப்பது, வக்ககுகள் தொடுப்பது, இயக்குனர்கள் கைதாவது என்பது வழக்கமான செய்திகள் ஆகிவிட்டன. சென்னையில் முக்கிய தொழில் குழுமங்களில் ஒன்றான வி.ஜி.பி பிரதர்ஸ் நிறுவனம், நிலமோசடிப் புகாரில் சிக்கியுள்ளது என்று செய்தி வந்திருபது ஏதோ பழைச செய்தி போன்றே உள்ளது. இதைத் தொடர்ந்து வி.ஜி.பி குழுமத்தில் உள்ள மூவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது எனு நின்றுள்ளது. ஆனா, முன்பு, அதியெல்லாம் மீறிவிட்டது என்று எடுத்துக் காட்டப் பட்டது. தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1] என்று ஒரு செய்தி குறிப்பிட்டாலும், அதில் ஒன்றும் பராரப்பு இல்லை எனலாம்.

VGP and scam-2

 வி.ஜி.எஸ் வினோத் கொடுத்த புகார்: வி.ஜி.பி சகோதரர்கள், சென்னையில் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்த நிலையில் சொத்துப் பிரச்னை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகக் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது[2] என்கிறது ஒரு செய்தி. உண்மையிலேயே அந்த நிருபருக்கு, ஒன்று விசயம் தெரியாது அல்லது தெரிந்தும் மறைத்திருக்கிறார் எனலாம். இதற்கிடையே வி.ஜி.பி சகோதரர்களில் ஒருவரான வி.ஜி.செல்வராஜின் மகன் வினோத் ராஜுக்குச் சொந்தமான நிலத்தை வி.ஜி. பன்னீர்தாஸின் மகன்கள் அபகரிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது[3] என்று செய்தி தொடர்கிறது. குடும்பச் சொத்தை பாகப் பிரிவினை செய்ததில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவைச் சேர்ந்த பி.எம்.கவால் கிராமத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் நிலம் வி.ஜி.எஸ் வினோத்துக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காலாவதியான பவர் பத்திரத்தைப் பயன்படுத்தி, அதன் மூலம் சுமார் 1 ஏக்கர் நிலத்தை வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் விற்பனை செய்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும் வினோத் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார்[4].

VGP and scam-1

வினோத் ராஜ் மோசடியை விளக்கியது: பெங்களூர் தெற்கு தாலுகா, கெங்கேரி ஹோப்ளி பகுதியில், உள்ள பி.எம்.காவல் என்ற இடத்தில், 131/1 சர்வே எண்ணில், 54 ஏக்கர் நிலம் வினோத் ராஜின் மொத்த குடும்பத்திற்கும் சொந்தமானதாக உள்ளது. இதில் சர்வே எண் 131/5 மற்றும் 131/6 ல் 7 ஏக்கர் மற்றும் 10 குண்டே வினோத் ராஜுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வினோத் ராஜ் ‘ஒன்இந்தியா தமிழிடம்’ கூறியதாவது: “நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான். விஜி பன்னீர்தாஸின் 2வது சகோதரர் விஜி செல்வராஜின் மகன். இப்போது பன்னீர்தாசின் மகன்கள் பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீதுதான் நான் புகார் அளித்துள்ளேன். 1994ம் ஆண்டு செய்த, குடும்ப செட்டில்மென்ட் மூலமாக எங்கள் குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கும் தலா 7 ஏக்கர், 10 குண்டா வந்தது. 1996ல், இந்த நிலங்களை பராமரிக்க பாபுதாஸுக்கு பவர் ஆப் அட்டார்னி கொடுத்தோம். அந்த பவரை பயன்படுத்தி, என்னுடைய பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை, எனக்கே தெரியாமல் விற்பனை செய்துவிட்டார். இந்த வருஷம்தான் இதுபற்றி எனக்கு தெரியவந்தது. எனவே பிப்ரவரி மாதம், பவரை ரத்து செய்தேன். ஆனால் அதன்பிறகும், எஞ்சிய 6 ஏக்கர் 6 குண்டாஸ் நிலத்தை அவர் பெயரில் பதிவு செய்துள்ளார். இதையடுத்துதான், நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். இது தவிர, எங்கள் குடும்ப மொத்த சொத்துக்களையும் பிரித்துக்கொள்ள கோரி, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவே இப்படி ஒரு பிரச்சினையும் உருவாகியுள்ளது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[5].

Rajadas arrested, VGP and scam-1

அமுக்கி வாசிக்கும் போலீஸார், நிறுவனத்தார்: இதுகுறித்து கஹ்கலிபுரா காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த விஷயத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதை உறுதி செய்தனர்[6]. பாபுதாஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ரவிதாஸ், ராஜாதாஸ் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மும்பையை சேர்ந்த, ராவுத் அமோல் என்ற அமோல் 4வது குற்றவாளியாகவும், பெங்களூரை சேர்ந்த பாக்யம்மா என்ற பெண் 5வது குற்றவாளியாகவும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ் ஆகிய மூவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை சைதாப்பேட்டையின் உள்ள வி.ஜி.பி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டோம். “இதுபற்றி நாங்கள் எந்தக் கருத்தையும் கூற முடியாது. அப்படிக் கூறினால் எங்களுக்குத்தான் தேவையற்ற சிக்கல் ஏற்படும்,” என்றதோடு முடித்துக் கொண்டனர். நில மோசடி புகார் தொடர்பாக, வி.ஜி.பி நிறுவனத்தார், உரிய விளக்கம் அளித்தால் தகுந்த பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

Rajadas arrested, VGP and scam-3 Indiann express

2010 கதையும், இதேபோலத்தான் உள்ளது: ஏ. எட்வின் கிரிஸ்டோபர் தனது மாமனார் எம். மரியதாஸ் கஸ்ரீஅப்பாக்கம் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை மூன்று லட்சத்திற்கு 1981ல் வாங்கியிருந்தார். அங்கு எறால் பண்ணை வைப்பதற்காக வங்கியிலிருந்து ரூ. 2.36 லட்சங்கள் கடன் வாங்கினார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால், சேர்ந்துவிட்ட ஐந்து லட்சம் கடனைத் திருமப் பெற முடியாத நிலையில் 3 லட்சம் கொடுத்து ஏலத்தில் மீட்டார். 2004ல் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டிற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தார்[7]. ஆனால், 27-04-2008 அன்று இறந்து விட்டார். அவ்வாறான நிலையில் பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது என்றபோதும், ராஜதாஸ் நிலத்தை தனது சித்தப்பாவான விஜி சந்தோஷத்திற்கு (75) “மார்க்கெட் விலைப்படி என்று ரூ.35 கோடிக்கு” விற்றிருக்கிறார்[8]. அவர் V G Panneerdas and Co Pvt Ltd ன் இயக்குனர் ஆவார். விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்[9]. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10].  இப்படி, இவர்கள் ஏதோ தமக்குள்ளே விற்றுக் கொள்கிறார்கள், அதிலேயே மோசடி புகார்கள் வருகின்றன என்றால், இந்நிலங்களை பிளாட் போட்டு, மற்றவர்களுக்கு விற்று, பணம் பெற்றிருந்தால், மிகப் பெரிய மோசடியாகிறது. இதனால் தான், இக்குழுமங்களின் மீது அதிகமான புகார்கள் எழுகின்றன. பதிவும் செய்யப் படுகிறது. ஆனால், கைது என்பதெல்லாம், ஒரு நாள் செய்தி என்றே தோன்ற்கிறது. ஏனெனில், முன்பு கைதான, அதே ராஜதாஸ், இப்புகாரிலும் சிக்கியுள்ளது நோக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

15-11-2019

Rajadas arrested, VGP and scam-2

 

[1] ஏசியா.நெட்..நியூஸ், விஜிபி குழும உரிமையாளர்கள் மீது நிலமோசடிப் புகார்… கர்நாடக காவல்துறை வழக்குப் பதிந்ததால் அதிர்ச்சி…, By Thiraviaraj RMKarnataka, First Published 15, Nov 2019, 1:30 PM IST…

[2]  https://tamil.asianetnews.com/crime/vgp-group-owners-complaint-q103kd

[3] விகடன், `காலாவதியான பத்திரம்; நில மோசடிப் புகார்!’- சர்ச்சையில் சிக்கிய வி.ஜி.பி பிரதர்ஸ், எம்.திலீபன், Published:Today at 6 PM; Updated:Today at 6 PM.

[4] https://www.vikatan.com/news/crime/karnataka-police-who-took-action-against-vgp-brothers-over-land-issue

[5] தமிழ்.ஒன்.இந்தியா, குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர் By Veerakumar | Updated: Friday, November 15, 2019, 14:31 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-land-fraud-complaint-filed-against-vg-panneerdas-sons-368596.html

[7] Indian Express, VGP’s son held in land grabbing case, Published: 24th September 2010 01:36 AM | Last Updated: 16th May 2012 10:12 PM

[8] https://www.newindianexpress.com/cities/chennai/2010/sep/24/vgps-son-held-in-land-grabbing-case-189528.html

[9] Times of India, Businessmand arrested for illegally selling property, TNN | Updated: Sep 24, 2010, 0:27 IST

[10] The police said VGP Rajadoss sold the property, worth Rs 35 crore and owned by his uncle Mariadoss, to VG Santhosam after Mariadoss’ death in 2008. A search is on for Santhosam, who was named in the First Information Report. The said property is located in Karambakkam village near Neelankarai on the ECR.

https://timesofindia.indiatimes.com/city/chennai/Businessmand-arrested-for-illegally-selling-property/articleshow/6616470.cms

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: