மார்ட்டீன் சௌரியப்பன், ரசாயனத்தில் பிஎச்டி செய்யும் மாணவன், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?” கிருத்துவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது நல்லது!

மார்ட்டீன் சௌரியப்பன், ரசாயனத்தில் பிஎச்டி செய்யும் மாணவன், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?” கிருத்துவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது நல்லது!

Pastor -Martin, committed suicide vyasar padi, 22-10-2019.

இன்னொரு பாஸ்டர் தற்கொலை செய்து கொள்வது: மறுபடியும், இன்னொரு பாஸ்டர் சர்ச்சில், சர்ச்-வளாகத்தில் இறந்திருக்கிறார். இது இயற்கையாகவே இருக்கலாம், தனிப்பட்ட விசயமாகக் கூட இருக்கலாம். ஆனால், அடிக்கடி நடப்பது கவலையாக, திகைப்பாக மற்றும் வித்தியாசமாக இருக்கிறது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் புனித அந்தோணியார் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது[1]. இந்த தேவாலயத்தில் கிளிம்டன் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார்[2]. இவருக்கு உதவியாக ஸ்ரீபெரும்புதூர் பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான மார்ட்டின் சௌரியப்பன் (Fr C Martin Sowriyappan வயது 37), என்பவர் உதவி பாதிரியாராக இருந்து வந்தார்[3]. M.Sc chemistry பட்டம் கொண்டவர், சென்னை பல்கலைக் கழகத்தில் மேற் படிப்பு பிஎச்.டி படித்து வந்தார்[4]. சர்ச்சில் உள்ள ஒரு அறையில் தங்கி படித்து வந்தார்.  விஞ்ஞானம் படிக்கும் மாணவனுக்கு, இறையியலில் நம்பிக்கையா அல்லது, சர்ச்சில் அறை இருக்கிறது என்று தங்கி இருந்தாரா என்று தெரியவில்லை.

Pastor -Martin, committed suicide vyasar padi, 22-10-2019.News7

இரவு தூங்கச் சென்றவர் எழவில்லை: அக்டோபர் 21, 2019 அன்று இரவு தேவாலயத்தில் வழக்கம்போல் பிரார்த்தனை முடிந்து, அனைவரும் சென்ற பிறகு தேவாலய வளாகத்தில் உள்ள அறையில் மார்ட்டின் தூங்கச்சென்றார்[5]. இதையடுத்து 22ம் தேதி காலை சர்ச்சில் நடக்கும் பூஜைக்கு வரவில்லை[6]. ஆக சர்ச்சில் இருப்பதால், துணை பாதிரியாராக இருப்பதால், எல்லா சடங்குகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கடமை இருப்ப்சது தெரிகிறது. நீண்டநேரமாகியும் மார்ட்டின் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த கிளிம்டன் அறைக்கு சென்று பார்த்தார். கதவு உட்பக்கமாக தாழிடப் பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த கிளிம்டன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். வேறு ஒரு சாவியை வைத்து / மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தனர் என்று “புதிய தலைமுறை” கூறுகிறது[7]. அங்கு மார்ட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கிளிம்டன் வியாசர்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாகவே மார்டின் அனைவரிடத்திலும் சகஜமாக பேசாமல் மனச்சோர்வுடன் இருந்ததாகவும், எதனால் இந்த முடிவுக்கு வந்தார் என தெரியவில்லை எனவும் அவருடன் பழகியவர்கள் தெரிவித்தனர்[8]. உடல் ஆரோக்கிய விசயமாக என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” கூறுகிறது. தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன் பின்னர், மார்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[9]. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மார்ட்டின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. உதவி பாதிரியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Pastor committed suicide vyasar padi, 22-10-2019

எல்லா வசதிகளையும் கொண்ட கிருத்துவர்கள் எப்படி மாணவர்களை இந்நிலைக்கு செல்ல விடுகிறார்கள்?: கிருத்துவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், போன்ற இடங்களில் மனோதத்துவ ரீதியில் செயல்பட்டு வருகிறார்கள். சர்ச்ச்சுகளிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்- ஆலோசனை கூறுதல் போன்ற காரியங்களில் கிருத்துவ மதக்குருக்கள், பாஸ்டர்கள் மற்றும் பாதிரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அது போன்றே மற்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பாவமன்னிப்பு விஷயங்களிலும் அவர்கள் ஆலோசனை என்ற பெயரில் அறிவுரை வழங்கி வருகிறார்கள். ஆரோக்கியம், உடல்நிலை அல்லது மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து இருந்தாலும் அவர்களுக்கு பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இருப்பதாலும், அவர்களே பெரிய மருத்துவர்களாகவும் இருப்பதால், அம்மாணவனுக்கு, உரிய ஆலோசன, மர்ய்த்துவ சிகிச்சை அளித்திருக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி தற்கொலை கொண்டான் என்பது விசித்திரமாக இருக்கிறது.

Pastor -Martin,preventing pastor suicide

கிருத்துவர் தங்களை சரிசெய்து கொண்டு கட்டுக் கோப்பாக இருக்கலாம்: கிருத்துவர்கள் தங்களுக்கு இவ்வாறான சகல வசதிகளும், வாய்ப்புகளும், இருக்கின்ற நிலையில் மெத்தப் படித்லொரு மாணவனை காப்பாற்ற முடியவில்லை என்ற நிலையில், அவர்கள் மற்ற மதத்தினரை மாற்ற வேண்டும், மதமாற்ற வேண்டும் என்ற செயல்களில் ஈடுபடுவது எதற்காக என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவர்கள் தமது கொள்கைகளில் விசுவாசம், நம்பிக்கை கொண்டவர்களை, அவர்களது மனநிலை உடல்நிலை முதலியவற்றை அவர்களால் சரி செய்ய முடியவில்லை அல்லது கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்று நிலையில், மற்றவர்களை மதமாற்றி, மேலும் தங்களது ஜனத்தொகையை பெருக்கிக் கொள்வதில் என்ன பலன், இதனால் அவர்களது விசுவாசம்-நம்பிக்கை வளர்கிறதா அல்லது வெறெந்த பலன் உள்ளதா போன்ற கேள்விகள் எழுகின்றன. அவர்களுக்கு வேறு திட்டம் ஏதாவது இருக்கின்றதா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆகவே, தன்களது நம்பிக்கை-விசுவாசத்தைக் காப்பது தான் நல்லது என்று தெரிகிறது. இது எல்லா மதங்களிலும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. உலகம் முழுவதும் அதிகம் ஆதிக்கம், பண-பலம் கொண்ட கிருத்துவர்கள், தங்களது மத நிறுவனங்கள், மடாலயங்கள் மற்ற அவற்றின் நிர்வாகத்தில் உள்ளவர்களை. ஒழுக்கமாக வைத்துக் கொள்வது தான் சால சிறந்தது என்று தெரிகிறது.

Pastor -Martin,preventing pastor suicide-2

சர்ச்சுகளுக்கு, பாஸ்டர்களின் தற்கொலையை தடுக்க பொறுப்புள்ளது: இதை பற்றி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, அவர்கள் தற்கொலை தடுக்க வழிமுறைகள் என்ன என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர் அவற்றிலும் சில முக்கியமான முடிவுகள் எடுத்துக் காட்டப் படுகின்றன-

 1. முதலில் விசுவாசம் என்று எப்படி தனக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோமோ, அதேபோல அந்த பாஸ்டருக்கும் அவனுடைய குடும்பத்தினர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
 2. ஏதாவது விமர்சனம் வந்தால் அதை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
 3. குறைந்த பட்சம் மூன்று வாரம் ஒரு முறை அதாவது சம்பளத்துடன் கூடிய விடுமுறை ஒரு வருடத்தில் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவன் தனியாகவோ அல்லது தனது குடும்பத்தாருடனோ பொழுதை கழிக்க முடியும்.
 4. அதேபோல ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நான்கு மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்பட வேண்டும்.
 5. அவர்களுக்கும் ஆலோசனை கொடுக்கப் பட வேண்டும் அதாவது மனம்-உடல் ரீதியில் ஆலோசன மற்றும் ஆஹரவு கொடுக்கப் படவேண்டும்.
 6. சடங்குகள் முதலியவற்றில் அவருக்கே உரித்தான பணம் கிடைக்க வழிசெய்ய வேண்டு.

மேலே கூறியபடி சர்ச்சுகள் தங்களது விசுவாசிகளை ஒழுங்காக வைத்துக் கொண்டால் போதும்.  இந்தியாவில் மற்ற பிரச்சனைகளை தலையிட வேண்டிய அவசியமில்லை.

 

© வேதபிரகாஷ்

23-10-2019.

Pastor -Martin,preventing pastor suicide-3

[1] தினத்தந்தி, வியாசர்பாடியில் தேவாலய வளாகத்தில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை, பதிவு: அக்டோபர் 23, 2019 04:00 AM

[2] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/23005728/At-the-church-complex-in-Vyasarpadi-The-priest-commits.vpf

[3] Times of India, Pastor found hanging on church premises, tnn | Updated: Oct 23, 2019, 4:13 IST.

[4] https://timesofindia.indiatimes.com/city/chennai/pastor-found-hanging-on-church-premises/articleshow/71712356.cms

[5] News7, தேவாலய வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட பாதிரியார் !, October 22, 2019, By : Niruban.

[6] https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/22/10/2019/suicide

[7] புதியதலைமுறை, பாதிரியார் தூக்கிட்டு தற்கொலைபோலீசார் விசாரணை, Web Team Published : 22 Oct, 2019 08:11 pm.

[8] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73714-chennai-based-church-father-commits-suicide.html

[9] தினகரன், சர்ச் அறையில் தூக்கிட்டு பாதிரியார் தற்கொலை: போலீஸ் விசாரணை, 2019-10-23@ 00:32:31

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535498

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

2 பதில்கள் to “மார்ட்டீன் சௌரியப்பன், ரசாயனத்தில் பிஎச்டி செய்யும் மாணவன், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?” கிருத்துவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது நல்லது!”

 1. திருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியி Says:

  […] [7] https://christianityindia.wordpress.com/2019/10/23/martin-sowriyappan-christian-pastor-committed-sui… […]

 2. திருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியி Says:

  […] [7] https://christianityindia.wordpress.com/2019/10/23/martin-sowriyappan-christian-pastor-committed-sui… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: