தஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்!

தஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்!

Christians oppose temple building

கிருத்துவர்கள் புகார் கொடுத்ததால், போலீஸார் வந்து பணிகளைத் தடுத்தது: தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ளது நிர்மலா நகர். இந்த பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த குடியிருப்போர்களுக்காக அங்கு பொது இடம் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் நிர்மலா நகர் குடியிருப்போர் சங்கத்தினர் கற்பக விநாயகர் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக அங்கு இரண்டு மாதத்துக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான பொருட்களையும் கொண்டு வந்து இறக்கினர். இந்த நிலையில் 12-06-2019 அன்று கட்டிடம் கட்டுவதற்காக குழிதோண்டும் பணி நடைபெற்றது[1]. அப்போது ஒரு சமூகத்தினர், அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது. அதில் அனுமதி இல்லாமல் கோவில் கட்டுவதாக போலீசில் புகார் செய்தனர். பின்னர் போலீசாருடன அங்கு வந்து கட்டிட பணியை தடுத்து நிறுத்தினர்[2].

Niramanagar Residents, Tanjore

உரிய ஆவணங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும் தடுப்பது எப்படி?: இதையடுத்து குடியிடிருப்போர் நல சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சிவசாமி பிரகதீஸ்வரர், துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சக்திவேல் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த மோகனசுந்தரம், ஈசானசிவம், பாலமுருகன் மற்றும் குடியிருப்பு வாசிகளும் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாசில்தார் அருணகிரி சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இருதரப்பினரிடமும் அந்த இடம் தொடர்பான ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்தார். அப்போது குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அந்த இடம் தொடர்பான ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்தனர். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினர், அதாவது கிருத்துவர், மாலையில் ஆவணங்களை கொண்டு வந்து காண்பிப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார், செங்குட்டுவன் மற்றும் போலீசார், அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

Niramanagar Residents, Tanjore-with police

மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்கு தொடர்ந்தும் அந்த இடம் குடியிருப்போர் நல சங்கத்துக்கு சொந்தமானது என உத்தரவிடப்பட்டது: இது குறித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- நிர்மலா நகர் பகுதியில் குடியிருப்பவர்களுக்காக பொதுவான இடமாக மூன்று இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு இடமான 2,800 சதுரஅடி உள்ள இடத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்ட முயற்சி செய்தோம். அதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தங்களுக்கு சொந்தமான இடம் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்கு தொடர்ந்தும் அந்த இடம் குடியிருப்போர் நல சங்கத்துக்கு சொந்தமானது என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த இடத்துக்கான முறையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thanjavur Diocese Society, Pastors object

பாதிரியார்கள் முற்றுகை: நாங்கள் இப்பிரச்சனையை சும்மா விடப்போவதில்லை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளையும் பொது மக்களையும் திரட்டி மாபெரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போகிறோம் என்றும் அறிவித்துள்ளனர்[3],, அதிகாரிகளின் முடிவு சரியில்லை என்றால் மிகப் பெரிய மத கலவரம் உண்டாகும் சூழ்நிலை தஞ்சையில் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை[4]…இவ்வாறெல்லாம் அவர்கள் மிரட்டுவது திகைப்பாக இருக்கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளே இல்லாதது போன்று பேசுவதும் திகைப்பாக இருக்கிறது. “பெரிய மத கலவரம் உண்டாகும் சூழ்நிலை” என்று பேசுவதும், செய்தி போடுவதும் ஏன் என்று தெரியவில்லை. இதைப் படிப்பவர்களுக்கு, உண்மை தெரியாதா என்ன? மேலும், போலீஸாருக்கு, இவ்விசயங்கள் தெரியாது என்பது விசித்திரமாக உள்ளது. உண்மையில் அவர்கள், தீர்ப்புகளில் வென்றவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

Thanjavur Diocese Society, Joseph Lionel

இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியது: தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர‌ரை போலீசார் கைது செய்ததால், அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை நிர்மலா நகரில் கோவில் கட்ட அனுமதி கோரி இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த‌து[5]. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க வந்த இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர‌ரை வரும் வழியிலே போலீசார், கைது செய்த‌னர்[6]. அவரது கைதை கண்டித்து, இந்து முன்னணியினர் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.தஞ்சையில், விநாயகர் கோவில் கட்ட அனுமதிக்கக் கோரி 2 இடங்களில் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[7]. அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 82 பேரை போலீசார் கைது செய்தனர்[8].

Niramanagar Residents, Tanjore-with police discussing

நீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள் முதலியவற்றையும் மீறி போராட்டம் நடத்தும் போக்கு, தைரியம் முதலியஅ எதனைக் காட்டுகிறது?: 2008ல் அந்த இடத்தில், கோவில் கட்டிக் கொள்ளலாம், என்று மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின், மதுரைக் கிளை தீர்ப்பளித்தது[9]. குறிப்பிட்ட இடம் ஏற்கெனவே காய்கறி மார்க்கெட், தண்ணீர் குழாய் முதலியவற்றிற்கு உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. அதற்கெல்லாம், கிருத்துவர்கள் அதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை[10]. 2009ல் தஞ்சாவூர் டையோசிஸ் சங்கம், மறு-ஆய்வு பெடிஷன் போட்டது[11]. ஆனால், 2017ல் அது தள்ளுபடி செய்யப் பட்டது[12]. நிச்சயமாக, தஞ்சை பிஷப் ஆம்புரோஸ் அனுமதி இல்லாமல், ஜோசப் லையோனல் வழக்குப் போட்டிருக்க முடியாது[13]. ஆகையால், சர்ச் இவ்விசயத்தில், அராஜகமாக செயல்படுகிறது என்று தெரிகிறது[14]. “நாங்கள் இப்பிரச்சனையை சும்மா விடப்போவதில்லை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளையும் பொது மக்களையும் திரட்டி மாபெரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போகிறோம் என்றும் அறிவித்துள்ளனர்[15],, அதிகாரிகளின் முடிவு சரியில்லை என்றால் மிகப் பெரிய மத கலவரம் உண்டாகும் சூழ்நிலை தஞ்சையில் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை[16]…” என்று பாதிரிகள் மிரட்டுவதும் சரியில்லை.

© வேதபிரகாஷ்

20-06-2019

Niramanagar Residents, Tanjore-with members

[1] தினந்தந்தி, விநாயகர் கோவில் கட்ட ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு; பணிகள் நிறுத்தம் போலீசார் குவிப்பால் பரபரப்பு, பதிவு: ஜூன் 13, 2019 04:15 AM.

[2] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/13004748/A-community-protest-to-build-Vinayagar-Temple-Stops.vpf

[3] தமிழ்நாடு.24.நியூஸ், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு மிரட்டும் சர்ச் நிர்வாகம்?, By Tnnews24 – June 15, 2019

[4] https://tnnews24.com/rrnewtemplebuild/

[5] தினமணி, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம், By DIN | Published on : 20th June 2019 06:37 AM

[6] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/jun/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3174955.html

[7] தினந்தந்தி, தஞ்சையில், கோவில் கட்ட அனுமதிக்கக் கோரி இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம் 82 பேர் கைது, பதிவு: ஜூன் 20,  2019 04:45 AM.

[8] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/19235553/In-the-asylum-they-demanded-permission-to-build-the.vpf

[9] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT, DATED: 27/02/2008, CORAM

THE HONOURABLE MR.JUSTICE K.K.SASIDHARAN

S.A.No.645 of 2003 and C.M.P.No.6105 of 2003
The President, Thanjavur Diocese Society, Joseph Lionel, S/o.Stephen, Bishop House, having office at Trichy Road

Thanjavur Town and Munsif … Appellant

Vs.

Nirmala Nagar, Thanjavur by its Representatives  1.Subramanian, 2.G.Balasubramanian, 3.P.Rajendran

4.S.Manian, 5.S.Thiagarajan … Respondents

[10] The Madurai district bench of the Madras High Court in 2008 had delivered a judgement in favour of the Nirmala Nagar residents. It said that the disputed plot has been clearly used for several public purposes such as the opening of a vegetable market and the drinking water arrangements made by the Municipality. The Church knew of this fact and never objected to it before. The court also noted that as per Article 21 “Right to live with human dignity” of the Indian Constitution, which includes protection of health and right to clean environment, the disputed plot should be kept open for community use so that the children and other residents of Nirmal Nagar may have a healthy life. https://indiankanoon.org/doc/423371/

[11] Madras High Court, The President vs Subramanian on 6 September, 2017, BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT, DATED: 06.09.2017 , CORAM , THE HONOURABLE MR.JUSTICE K.K.SASIDHARAN Review Application (MD).No.82 of 2009

The President, Thanjavur Diocese Society, Joseph Lionei : Petitioner

Vs.

Nirmala Nagar, Thanjavur, by its Representatives, 1.Subramanian , 2.G.Balasubramanian, 3.P.Rajendran, 4.S.Manian , 5.S.Thiyagarajan : Respondents

[12] Following this, the Thanjavur Diocese Society had filed a review petition in 2009. The High Court in 2017 had dismissed the petition saying that the courts had come to a clear finding that “the petitioner made an attempt to convert the plot reserved for community purpose for a private purpose”. https://indiankanoon.org/doc/185477391/

[13] Op.India, Church in Thanjavur prevents residents of Nirmala Nagar from constructing a Ganesha temple on community land, JUNE 17, 2019

[14] https://www.opindia.com/2019/06/church-in-thanjavur-prevents-residents-of-nirmala-nagar-from-constructing-a-ganesha-temple-on-community-land/

[15] தமிழ்நாடு.24.நியூஸ், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு மிரட்டும் சர்ச் நிர்வாகம்?, By Tnnews24 – June 15, 2019

[16] https://tnnews24.com/rrnewtemplebuild/

குறிச்சொற்கள்: , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: