குமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்!

குமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்!

Pastor rape 50 in Kanyakumari Tamil Murasu 14-06-2019

கிருத்துவ சபை ஆரம்பித்து வசதி படைத்த, பெண்களை தன்வசப்படுத்தி கொண்ட பாதிரி[1]: குமரியில் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணத்தையும், கற்பையும் சூறையாடிய போலி மதபோதகர் வாகன தணிக்கையின் போது போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரசல் (பெயர் மாற்றம்). பெயர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதுவே, பாரபட்சமானது என்று வெளிக் காட்டுகிறது. 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மதபோதகருக்கு படித்துள்ளதாக கூறி, போலி சபையை தொடங்கி உள்ளார். அதாவது செய்தி தாள் அல்லது நிருபரே “போலி சபை” என்று குறிப்பிடுவது விசித்திரமாக உள்ளது. இதன்மூலம், போலி சபையின் மூலம், வசதி படைத்த, பெண்களை தன்வசப்படுத்தி கொண்டார். இப்படி தனது குடும்ப கஷ்டங்களை கூறும் பெண்களுக்கு ஆறுதல் கூறுவது வழக்கமாம். அதாவது, “பாவ மன்னிப்பு” இப்படி வேலைசெய்கிறது போலும். இதனை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளார்[2].

Mekka mandapam, Google map

பெண்களிடம் இருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணத்தை சுருட்டியது: மேலும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் இருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணத்தை சுருட்டியுள்ளார். இதற்கெல்லாம் பணம் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. இதே போல் திருமணம் ஆகாத இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியும், திருமணம் ஆன பெண்களின் கணவர்களுக்கு வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்களின் கற்பை சூறையாடி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதெல்லாம், ஒரே நாளில் நடந்து விடாது. எந்த பெண்ணும் அப்படி சுலபமாக சோரம் போக மாட்டாள். அப்படியென்றால், அந்நிலை ஏற்படும் வகையில், பாதிரியார்-பெண் என்ன விவகாரங்களில் ஈடுபட்டனர் என்பது தெரிய வேண்டும். இப்பகுதிகளில், இதைப் போன்ற செய்திகள் அடிக்கடி வெளி வருவதால், இதனை பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள முடியாது, சமூகத்தை சீரழிக்கும் முறையில், அங்கு என்ன வேலை செய்கிறது என்று ஆராய வேண்டும்.

Pastor rape 50 in Kanyakumari Tamil Murasu 14-06-2019.reconstructed
காவல் நிலையத்தில் சிலர் பல முறை புகார் தெரிவித்தும், போலி மதபோதகரை தப்பித்து வந்துள்ளார்[3]: இந்த போலி மத போதகரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டாலோ, அல்லது வேறு சபைக்கு சென்றாலோ அந்த பெண்களை கடுமையாக மிரட்டுவாராம். சம்பந்தப் பட்ட பெண்கள் தன்னுடன் இருந்த ஆபாச வீடியோக்களை உடனே சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் சிலர் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் பண பலம், ஆள் பலம் ஆகியவற்றை மூலதமான வைத்துள்ள போலி மதபோதகரை தப்பித்து வந்துள்ளார். இதிலிருந்து, போலீஸாருக்கும், இவனுக்கும் உள்ள உறவு நன்றாகவே தெரிந்துள்ளது. மேலும், இவன் எந்த சபையும் தொடர்பில்லாம், சபை நடத்த முடியாது. ஆகவே, மற்ற சபையினரும் கிருத்துவர்களின் பெயர் கெட்டு விடும் என்ற நிலையில் அமைதியாக இருந்தது காட்டுகிறது. சில பெண்களுக்கு திருமண வயது இருப்பதால் அவர்கள் புகார் கொடுக்க முன்வரவில்லையாம். இது மிகப் பெரிய கொடுமையாக உள்ளது. ஏனெனில், இது வாழ்க்கை முழுவதும் பிரச்சினையாக இருக்கப் போகிறது. இந்த நிலையில் போலி போதகரின் தொடர் மிரட்டல், ஆபாச அர்ச்சனை ஆகிய வற்றை தாங்காமல், எஸ்.பி.யிடம் 5 பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளித்தனர்.

Mekka mandapam, Google map-Tamil
பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளித்தும், போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக விசாரித்தனர்: இதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக விசாரித்தனர். இதில் ரகசியம் என்னவென்று தெரியவில்லை. பாதிக்கப் பட்ட பெண்கள் தான் ரகசியமாக இருக்க வேண்டும், ஆகவே, இங்கும் போலீஸாரின் செயல் திகைப்பாக இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே பாங்கரமானது. மாறாக இந்த விஷயம் வெளியே தெரிந்தால், உங்களுக்குத்தான் அசிங்கம். எனவே அமைதியாக இருங்கள். இனி பிரச்னைகள் எதுவும் வராது என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். இதெல்லாம், மிகப்பெரிய கேவலத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது, போலீஸாருக்கு, அப்பதிரியின் செயல்கள் நன்றாகத் தெரிந்திருக்கிறது. உண்மையில், பெண்களின் வாழ்க்கை கெடக் கூடாது என்றால், அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால், திசை மாறிப் போவது, சதியை, குற்றங்களை மறைக்கும் போக்கை எடுத்துக் காட்டுகிறது.

Pastor rape 50 in Kanyakumari Kathir cutting,15-06-2019

எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து வெளியே பெண்கள் தாக்கப் படுவது: இதற்கிடையே எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து வெளியே ஆட்டோவில் வந்த 3 பெண்களை பார்த்த போலி மதபோதகர் அவர்களை மடக்கினார். நடுரோடு என்றும் பாராமல் அந்த பெண்களை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். இது தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து, ஆனால், எந்த விவரங்களும் தெரிவிக்கப் படவில்லை. எந்த நாளிதழில் வந்தன என்று தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க எஸ்.பி. அதிரடியாக போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி தற்போது நாகர் கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, போலி மதபோதகர் மற்றும் 5 பெண்களிடமும் ரகசியமாக கடந்த சில நாட்களாக கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையும் இருக்கிறது. ஆகவே இதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Pastor rape 50 in Kanyakumari Tamil Murasu 30-05-2019. CD

பெயர் வெளியே வராது என்று உறுதியாகும் பட்சத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரலாம்: இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: “இந்த வழக்கை பொறுத்தவரை தகுந்த ஆவணங்கள் இருக்கின்றன. இருப்பினும் போலீசார் ஏன்? இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது தெரியவில்லை. எப்போது வழக்கு பதிவு செய்வார்கள் என்பதும் தெரியாது. இந்த விவகாரத்தில் தற்போது வரை 5 பெண்கள் மட்டுமே புகார் கொடுத்து இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பெயர் வெளியே வராது என்று உறுதியாகும் பட்சத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரலாம்”. இதில் என்ன சந்தேக என்று தெரியவில்லை. சட்டப் படி மற்றுன் உச்சநீதி மன்ற தீர்ப்புகளின் படி, பாதிக்கப் பட்ட பெண்கள் விவரங்கள் வெளிவரக் கூடாது என்பது தெரிந்த விசயம் தான். காவல்துறை அதிகாரி தொடர்ந்து சொன்னது, “ஆகவே இந்த போலியான மதபோதகர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் போலியான நபர்களுக்கு ஒருவித பயம் வரும். அவர்களும் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனினும் பெண்கள் தங்களது கணவர் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இதுபோன்ற போலியான நபர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். இது போன்ற நபர்க ளிடம் ஏமாறுவது தங்களை தாங்களே ஏமாற்றி கொள்வதற்கு சமம்,” என்றார்.

Pastor rape 50 in Kanyakumari Tamil Murasu complaint
எதிர்பாராமல் போலீசில் சிக்கிய பாதிரி: களியக்காவிளை எஸ்.ஐ. மோகன் அய்யர் நேற்று மாலை 13-06-2019 அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது போலி போதகர் தனது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். போலீசார் மதபோதகரின் பைக்கை நிறுத்திய போது, பைக்கை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை மடக்கி பிடித்து விசா ரித்தனர். அதைத் தொடர்ந்து அவரது செல் போனை ஆய்வு செய்ய மோகன் அய்யர் வாங்கியுள்ளார். ஆனால் செல்போனை ஓப்பன் செய்ய தவ றான பாஸ்வேர்ட்களை மாற்றிமாற்றி கூறியுள்ளார். இதனால் மேலும் சந் தேகமடைந்த எஸ்.ஐ. போனை களியக்காவிளை காவல் நிலையம் அல்லது வடசேரி காவல் நிலையத்தில் வந்து, வாங்கிக்கொள். போனை சோதனை செய்து தான் தருவோம் எனக் கூறியுள்ளார். செல்போனை திறந்து பார்க்ககூடாது என்று பிடிவாதம் காட்டிய போதகர், போனை சோதிக்காமல் தராவிட்டால், உங்கள் மீதே புகார் செய்வேன் எனக்கூறி எஸ்.ஐ.யை மிரட்டி உள்ளார். தற்போது மருத்துவமனையில், தன்னை போலீசார் தாக்கியதாக அட்மிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. செல்போ னில் போதகர் பெண்களுடன் இருக்கும் ஆபாச படங்கள் இருக்கலாமோ- என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Pastor rape 50 in Kanyakumari Tamil Murasu 15-06-2019
ஏடிஎஸ்பியை சந்திக்க முடிவு: இதற்கிடையே போலி மதபோதகரால் பாதிக்கப்பட்ட 5 பெண்களும் ஏடிஎஸ்பியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியது: மதத்தின் மேலான எங்களின் பற்றை தவறாக பயன்படுத்தி, பணத்தை பறித்து கொண்டார். பல பெண்களின் கற்பையும் சூறையாடி உள்ளார். அவர் மீது இறைவனின் ஆசீர்வாதம் இருக்கும் என நினைத்தோம். ஆனால் இவர் துன்மார்க்கர். இவரை சும்மா விடக்கூடாது. இதுபற்றி போலீசில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் செய்தால், போலீசார் பணம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். எஸ்பியிடம் புகார் தெரிவித்து விட்டு வெளியே ஆட்டோவில் வரும்போதே வழிமறித்து, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார். இது தொடர் பாக விசாரணை செய்த குற்றப்பிரிவு டிஎஸ்பியிடம் புகார் தெரிவித்தோம். எந்த பயனும் இல்லை . தற்போது அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து விட்டு, ஏடிஎஸ்பியை சந்திக்க கூறி உள்ளனர். எனவே ஏடிஎஸ்பியை சந்தித்து . புகார் தெரிவிக்க உள்ளோம். 30 முதல் 50 முதல் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுபற்றி பெயர் வெளியே விடாமல் இருந்தால், அனைத்து பெண்களும் புகார் தெரிவிப்பார்கள். இதன்மூலம் மேலும் பல பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்[4].

© வேதபிரகாஷ்

16-06-2019

Mekkamandapam, Kanyakumari

[1] கதிர்.செய்தி, ஆறுதல் சொல்வதாக கூறி 50 பெண்களின் கற்பை சூறையாடிய பாதிரியார்ஆபாச வீடியோவால் உடைக்கப்பட்ட குட்டுஅதிர்ச்சியில் குமரி மக்கள்.!, Anand , ஜூன்.15, 2019.

[2] http://kathirnews.com/2019/06/15/church-father-cheated-more-than-50-womens/

[3]  தமிழ் முரசு, குமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார், 14-06-2019, வெள்ளிக்கிழமை,

[4] ஆதாரம்: http://tm.dinakaran.com/m5/2198599/Nagercoil/14-06-2019#page/1/1

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: