அர்மகெதான் யுத்தம், உலக முடிவு, எண்ணை தீவிரவாதம்: யூத-கிருத்துவ-துலுக்க இறையியல் உலக மக்களுக்கு நன்மை விளைவிக்கிறதா? [1]

அர்மகெதான் யுத்தம், உலக முடிவு, எண்ணை தீவிரவாதம்: யூதகிருத்துவதுலுக்க இறையியல் உலக மக்களுக்கு நன்மை விளைவிக்கிறதா? [1]

Battle of Armageddon

ஹர் மெஹதோ, அர்மகெதான், ஹர் மஹாதேவ், எது உண்மை? அது எங்குள்ளது?: அர்மெகெதான் [(/ˌɑːrməˈɡɛdən/, from Ancient Greek: Ἁρμαγεδών Harmagedōn, Late Latin: Armagedōn, from Hebrew: הר מגידו Har Megiddo[1]] என்பது ஒரு கற்பனையில் உதித்த அல்லது பைபிளில் வரும் தீர்க்க தரினம் என்ற அத்தியாயத்தில் [Revelation 16:14] வரும் ஒரு இடமாக பாவிக்கப்படுகிறது[2]. ஹீப்ரூ மொழியின் படி, “மலைத் தொடர்ச்சியில் படைகள் கூடும் இடம்” என்ற பொருளில் வருகிறது. உண்மையில் மெடிகோ மலையில்லை, கலிலி கடல் மற்றும் மத்தியத் தரைக்கடல் இடையுள்ள ஜெஹ்ரீல் பள்ளத்தாக்கில் உள்ள இடம் ஆகும். யூத புராணங்களின் படி, இது யித்த பூமியாகும். har məgiddô (הר מגידו‎) என்பது “ஹர் மஹாதேவ்” என்பது போலவும் இருக்கிறது. இது, இந்திய ராணுவத்தினரால் போர்க் குரலாக கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடம் எங்கு இருக்கிறது என்று தெளிவாக வில்லை. கிரேக்கத்தில், இஸ்ரேலில்[3] இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். இருப்பினும், யூதர்கள் இதில் இறையியல் ரீதியில், சிரத்தை கொள்ளாமல் இருந்தாலும், கிருத்துவர்கள் வேறுவிதமான விளக்கத்தைக் கொடுத்து, உலகம் முடிவுக்கு வரவேண்டும் என்று திட்டம் போடுகின்றனர், பிரச்சாரம் செய்கின்றனர்.

Messsaiah

வருகின்ற அவதாரம் என்ற இறையியல், அடிப்படைவாதமாக்கி, திவிரவாதத்திற்கு உபயோகப் படுத்துவது: ஒவ்வொரு மதமும், கடைசி காலத்தில் அல்லது உலகம் அழியும்நாளில், கடவுள் தோன்றி கெட்டவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பர் என்று பொதுவாக நம்புகின்றனர்.

  1. யூத மதத்தில் மேசியா [Messiah],
  2. கிருத்துவ மதத்தில் ஏசுகிருஸ்து [Jesus Christ].
  3. இஸ்லாமில் மஹதி [Mehdi],
  4. இந்து மதத்தில் கல்கி (விஷ்ணு) அவதாரம் [Vishnu / Kalki],
  5. புத்த மதத்தில் மைத்ரேயா (கல்கி அவதாரம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது),
  6. சீக்கிய மதத்தில் கல்கி அவதாரம் எழுதப்பட்டுள்ளது.

கடைசி காலம் என்பதற்கான அடையாளங்கள் என்றும் இந்த பிரச்சாரகர்கள், சித்தாந்திகள், இறையியல் வல்லுனர்கள் சொல்லிக் கொண்டு, தீவிரவாதிகளை தூண்டி வருகிறார்கள். ஜையானிஸம் [Zionism] என்ற யூத அடிப்படைவாதமும் பேசப் பட்டு வருகிறது. பாலஸ்தீனத்திற்கு முடிவு இல்லாமல், இஸ்ரேல் பிரச்சினையை இழுத்து வருகிறது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் விட்டுத் தராமல், பயங்கரவாதத்தை வளர்த்து, தீவிரவாதத்தில் இறங்கி விட்டதால், அப்பிரச்சினை, மற்ற உலக நாடுகளையும் பாதிக்கின்றது. இஸ்ரேலும், இரானும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு, அணு ஆயுத உற்பத்தியைச் செய்து வருவதாக சந்தேகிக்கப் படுகிறது[4]. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில், முஸ்லிம் நாடுகள் இரானுக்கு ஆதரவு கொடுக்கின்றன[5].  அர்மகதானைப் பொறுத்த வரையில், அதை, சித்தாந்தமாகவும் செயல்படுத்தும் போது, தீவிரவாதத்திற்குத் துணை போகிறது[6].

second coming, terrorism, oil

எண்ணை வியாபாரம், இறையியலுடன் இணைத்து, வளரும் நாடுகளை மிரட்டுவது: UAE அமெரிக்காவின் ஆதரவு உள்ளதால், இரானின் எண்ணை வியாபாரத்தை முடக்கப் பார்க்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகளை, இறையியலுடன் இணைத்து, அடிப்படைவாத-பயங்கரவாத-தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகின்றன. எண்ணையை வைத்துக் கொண்டு, சித்தாந்த ரீதியில் பிரச்சினையை அமெரிக்கா செய்து வருவதால், அது தீவிரவாதமாகி விட்டது. எண்ணை தீவிரவாதம் என்ற சொல்லாடலும் ஏற்பட்டு விட்டது. எண்ணையும் தீவிரவாதமும் இணைந்து விட்டப் பிறகு[7], பாதிக்கப் படுவதுவளரும் நாடுகள் தான். பொர் உளாதாரப் பிரச்சினை அமெரிக்கா இறையியல் சித்தாந்தத்துடன் இணைத்து, வளைகுடா நாடுகளுடான நட்பை மாற்றி வருவதால், பலவிதங்களில் தீவிரவாதம் பெருகி வருகிறது. அரபு-இஸ்ரேல் போர் மட்டுமல்ல, அமெரிக்கா தாக்கப் பட்டது, ஐரோப்பிய நகரங்கள் குண்டுவெடிப்புகளுக்கு உண்டானது எல்லாம் இதில் அடங்கும். இன்றைக்கு, இந்தியாவை, இரானிடைருந்து எண்ணையை வா—-ங்காதே என்று மிரட்டுவது இதில் அடங்கும்.

Gold, oil, diamond

இடைகாலத்தில் உருவாக்கப் பட்ட அர்மகெதான் கட்டுக்கதை: இடைகாலத்தில் உண்டாக்கப் பட்ட கட்டுக்தகைகளில் இதுவும் ஒன்றாகும். ஜேஹோவா சாட்சிகள், செவந்த் டே அட்னென்டிஸ்ட்ஸ் போன்ற கிருத்துவப் பிரிவுகள் பலவிதமான திரிபு விளக்ககள் கொடுத்து வருகின்றன. அந்த நாளில், ஏசு இரண்டாம் முறை, வானத்திலிருந்து படைகளுடன் வருவார். பூமியிலுள்ள எதிரிகளைக் கொன்று, வென்று, நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தைக் கொடுப்பார் என்று நம்புகின்றனர். வெள்ளைக் குதிரைகளில் ஏசுவின் ராணுவ வீரர்கள் வந்து குவிவார்கள். நம்பிக்கையாளர்களுக்கு இறுதி தீர்ப்புக் கொடுக்கும் முறையில், கையில் கத்தியுடன் வருவார். கிருஸ்து-விரோதி [Antichrist] யிடமிருந்து, இஸ்ரேலை மீட்பார். உலக் நாடுகள், மக்கள் எல்லோரும் சேர்ந்து ஏசுவை எதிர்ப்பர், ஆனால், ஏசு எல்லோரியும் வெற்றி கொள்வர் என்றும் பெந்த கோஸ்தே பிரிவுகள் கதை விடுகின்றனர். எல்லோரும் சீக்கிரம் சாக வேண்டும் என்றால், அணு ஆயுத போர் போன்று நடக்க வேண்டும், அப்பொழுது தான், பெரிய எண்ணிக்கையில் மக்கள் கொல்லப் படுவர். கிறித்தவத்தில், இயேசு கிறிஸ்து திரும்ப வரும் நிகழ்வு சில அறிகுறிகளால் விளக்கப் படுகிறது.

Krishna or Christ
கொள்கையைக் காப்பியடித்து தயாரிக்கப் பட்ட கட்டுக் கதைகள்: இதெல்லாம், கல்கி அவதாரம் புராணங்களை படித்து, அது போலவே, உருவாக்கப் பட்ட கதைகள் என்று தெரிந்து கொள்ளலாம். இந்திய கல்கி கடவுள், வெள்ளை குதிரையின் மீது அமர்ந்து, தீயவர்களக் கொன்று, எல்லோரையும் காப்பார் என்றுள்ளது. இந்துக்களை மட்டும் காப்பார் என்றில்லை. இதில் தான் துலுக்கர்களும் சேர்ந்து கொண்டு, வேறு விதமான விளக்கம் கொடுக்கின்றனர். ஷியா முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், மெஹதி வெள்ளைக் குதிரையில் வந்து, தங்களை மீட்பார் என்று நம்புகின்றனர். இங்கு தான் கிருத்துவ-துலுக்கர்களின் அடிப்படைவாதம் வெளிப்படுகிறது.

Prohecy, end etc

தீர்க்க தரினங்கள் நடந்தன, நடக்கவில்லை என்று பட்டியலிடும் கூட்டங்கள்: சில அதிசயங்கள் நடந்தது, நடப்பது, எதிர்பார்க்கப்பட்ட நபி / தூதர் பைபிளை வருவதற்கான அறிகுறிகள் என்கிறார்கள். பாபிலோன் அழிக்கப்படல், அந்தி கிறிஸ்துவின் முன்னாள் தலைமையிடம் அதாவது அர்மகெதோன் சண்டையிடையே அந்தி கிறிஸ்து இஸ்ரவேலுக்கு வரும் முன்பு. (வெ.வி. 18; தானி 11: 20:21). அர்மகெதான் சண்டை தொடக்கம்: (எசக்கியேல் 38- 39 தொடர்ச்சியில்) உபத்திரவ காலமான 3½ வருட நடுவில். இயேசுவும் சேனைகளும் மெகிதோன் மலைக்கு வரும்போது நிறைவடையும். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. (மத் 24: 27-31; வெ.வி.19:11-21); சாத்தான் 1000 வருடங்களுக்கு பாதாளத்திலே தள்ளி அடைக்கப்படல், அர்மகெதான் சண்டை தொடக்கம்: (எசக்கியேல் 38- 39 தொடர்ச்சியில்) உபத்திரவ காலமான 3½ வருட நடுவில். இயேசுவும் சேனைகளும் மெகிதோன் மலைக்கு வரும்போது நிறைவடையும், இப்படியெல்லாம் பட்டியல் போட்டு, அடிப்படைவாதத்தை வளர்த்து வரும் கிருத்துவக் கூட்டங்களும் இருக்கின்றன.

End of the world

உலகமுடிவை சீக்கிரம் துரித படுத்த அர்மகதான்: திட்டம் உண்மையில் கிருத்துவர்களைப் பொறுத்த வரையில் உலகமுடிவை சீக்கிரம் துரித படுத்தவே அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அணுகுண்டு மூலம் உலகம் அழிந்தால், ஏசு கிருஸ்து உடனடியாக வந்து விடுவார் என்பது அவர்களது நம்பிக்கை. இதற்காக கிருத்துவர்கள் “அர்மகதான்” திட்டம் என்று வைத்துள்ளனர். எப்படியாவது உலகத்தில் பெரியபோர் வர வேண்டும், உலகம் அழியவேண்டும், அப்படி உலகம் அழிந்தால், ஏசு வந்து விடுவார் (இரண்டாவது வரவு) என்று “பாஸ்ட் புட்” போன்று இத்தகைய நாசவேலைகளை செய்து வருகிறார்கள். பிலிப்பைன்ஸ், இலத்தீன் அமெரிக்க நாடுகளில், சில மதவெறி பிடித்த கிருத்துவ மதத்தலைவர்கள் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்ளவும் அப்பாவி மக்களைத் தூண்டி, அவ்வாறே அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்[8]. ஆனால், பாவம், ஏசு வரவில்லை, கிருஸ்து ரட்சிக்கவில்லை, எல்லோரும் பரிதாபமாக, கோரமாக இறந்தது தான் மிச்சம்].

வேதபிரகாஷ்

26-04-2019

End of the world - 2060

[1]  The word “Armageddon” is difficult; the Hebrew equivalent would be har megiddon – the mountain of Megiddo. The problem is that Megiddo is not a mountain, but a plain located between the Sea of Galilee and the Mediterranean, part of the valley of Jezreel (Esdraelon). It was a famous battleground in the history of Israel. At Megiddo, Barak and Deborah overthrew the Canaanite Jabin (Jud 5: 19); Ahaziah was slain by Jehu (I1 Kings 23:29; I1 Chr 35:22). Why John calls it the mountain of Megiddo is not clear; R. H. Charles says that no convincing interpretation has yet been given of the phrase, it is unknown in Hebrew literature. . . . Whatever the derivation of the name, it is clear that John means by Armageddon the place of the final struggle between the powers of evil and the Kingdom of God.

  1. Ladd, A Commentary on the Revelation of John (Grand Rapids, Mich., 1972), p. 21 6.

[2] Shea, William H. The Location and Significance of Armageddon in Rev 16: 16., Andrews University Seminary Studies (AUSS) 18.2 (1980): 14.

[3] Because the sixth plague of Rev 16: 12- 16 contains specific references to geographical loci – the Euphrates and Armageddon -it has received more attention than the preceding plagues that deal more generally with sores, blood, heat, and darkness. In view of the great interest in these geographical references, their location and the OT imagery.

An actual battle is not described in this sixth-plague passage; only the preparation for it is noted. In preparation for the coming battle “on the great day of God Almighty” (vs. 14), the forces of the threefold coalition of evil are to assemble “at the place which is called in Hebrew Armageddon” (vs. 16).

[4] Freilich, Chuck. The Armageddon Scenario: Israel and the Threat of Nuclear Terrorism. Begin-Sadat Center for Strategic Studies, Bar-Ilan University, 2010.

[5] Haija, Rammy M. The Armageddon lobby: Dispensationalist Christian Zionism and the shaping of US policy towards Israel-Palestine., Holy Land Studies 5.1 (2006): 75-95.

[6] Sharpe, Tanya Telfair. The identity Christian movement: Ideology of domestic terrorismJournal of Black Studies30.4 (2000): 604-623.

[7] Walvoord, John F., and Mark Hitchcock. Armageddon, Oil, and Terror: What the Bible Says about the Future. Tyndale House Publishers, Inc., 2007.

[8] http://www.religioustolerance.org/dc_jones.htm

http://www.stelling.nl/simpos/heavgate.htm

http://goodcreditsecrets.com/armageddon-international-cult-exposed-stop-a-mass-suicide/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=armageddon-international-cult-exposed-stop-a-mass-suicide

http://www.freerepublic.com/focus/f-news/2736083/posts

Bernard Atuhaire, Uganda Cult Tragedy – a private investigation,  Janus Publishing Company Ltd, London, 2003. www.januspublishing.co.uk

The full, horrible story of the Movement for the Restoration of the Ten Commandments of God, a Ugandan millenarian cult responsible for the largest death toll linked to a doomsday cult in recent human history. The three cult leaders, a half-insane failed politician, a defrocked Catholic priest and a former prostitute, proclaimed the end of the world on December 31, 1999 as a message from the Virgin Mary.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: