நோட்ரே டேம் சர்ச் தீக்கிரையாகியதும், மூன்று தலை கடவுள் கோவிலும், இடைகாலத்தில் திரியேகத்துவம் நுழைக்கப்பட்டதும்!

நோட்ரே டேம் சர்ச் தீக்கிரையாகியதும், மூன்று தலை கடவுள் கோவிலும், இடைகாலத்தில் திரியேகத்துவம் நுழைக்கப்பட்டதும்!

Celtic horned god Cernunnos in France

ஐரோப்பாவில் கிருத்துவத்திற்கு முன்னர் இந்திய மதம் இருந்தது: இடைக்காலம் வரையில், ஐரோப்பிய நாடுகளில் முதலில் இந்து பிறகு ஜைனம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கம் அதிகமாகவே இருந்திருக்கின்றன[1]. கிருத்துவத்திற்கு முன்பான சிற்பங்கள் இந்தியத் தாக்கத்தைக் கொண்டிருந்ததை, ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கண்டு கொண்டனர். கிருத்துவ விக்கிர-எதிரிகள் அத்தகைய கோவில்கள் சிற்பங்கள் முதலியவற்றை அடித்து, உடைத்து, அழித்தனர். சில இடங்களில், கோவில்களை மாற்றிக் கட்டிக் கொண்டபோது, சிலவற்றை தகவமைத்துக் கொண்டனர். எஞ்சியவை பல நாடுகளின் அருங்காட்சியகங்ளில் தஞ்சம் அடைந்தன. அயர்லாந்தின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் இந்தியாவை ஒத்தே இருந்தன. இதனால் தான், பல அயர்லாந்து சிந்தனையாளர்கள் இந்தியாவுக்கு வந்து உண்மை அறிய ஆவலாக இருந்தனர். முதலில், ஐரோப்பியர், இந்திய நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் முதலியவற்றை ஆதரித்தாலும், பிறகு எதிர்க்க ஆரம்பித்தனர்.

Cernnunnos and Pasupathi

முதல் நூற்றாண்டிலிருந்து இடைகாலம் வரை மூன்றுதலை கடவுள் சிற்பங்கள் இருந்தது[2]: மூன்று தலை கொண்ட கடவுளின் தாக்கத்தில் அது காணப்படுகிறது. ஐரோப்பாவில் பல இடங்களில் கிடைத்துள்ள, இருக்கும் மூன்று தலை, மூவர் கொண்ட உருவங்களின் விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன[3]:

எண் மூன்று தலை, மூவர் கொண்ட உருவங்கள் கிடைத்த / இருக்கும் இடம் காலம்
1 தூணில் இருக்கும் மூன்று தலை சிற்பம் ரீய்ம்ஸ் முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தது
2 மூன்று தலை சிற்பம், இடுப்பளவில் கொன்டாட், டோடோக்னே முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தது
3 மூன்று தலை கொண்டவர் மற்றும் இருவர் சேர்ந்த மூவர் சிற்பம் டென்னெவே, எஸ்பெரன்டியூ முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தது
4 மூன்று தலை கொண்டவர் மற்றும் இருவர் சேர்ந்த மூவர் சிற்பம் பியாயுன், கோடே டி’ஓர், எஸ்பெரன்டியூ முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தது
5 பிளைஜென்பர்க் பாத்திரம் டிரோயிஸ்டோர்வ் முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தது
6 தங்கத்தினால் செய்யப் பட்ட கொம்பு காலெஹுஸ், டென்மார்க் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தது
7 சிற்பங்கள் செதுக்கப் பட்ட தூண்கள் ஸ்ருச் நதிக்கரை
8 தார்சிய குதிரையோட்டி கிரிவிஞ்ச, ராஸ்இராட் 2-3ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது
9 மரச் சிற்பங்கள் ஓப்டோர்ஸ்க், சைபீரியா
10 செயின்ட் பியட்ரோ சர்ச்சின் முகப்பில் இருக்கும்சிற்பங்கள், டுஸ்கானியா 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது
11 வெண்கல பாத்திரம் குலிஸ்தான் அரண்மனை, டெஹ்ரான் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது
12 மூன்று தலை ஏசு மியூஸியோ டி சான் எமிஇனானோ 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தது
13 மூன்று தலை ஏசு மியூஸியோ டி எட்னோகிராபியா இடாலியானா 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தது

இதிலிருந்து எவ்வாறு முதல் நூற்றாண்டுகளிலிருந்து, இடைக்காலம் வரை ரோமானிய தாக்கம் கொண்ட சிற்பங்கள் இருந்து, பிறகு அவை கிருத்துவமயமாக்கப் பட்டதை அறியலாம்.

Celtic horned god Cernunnos

ஆராய்ச்சியாளர்கள் உண்மையினை எடுத்துக் காட்டியது: ஆகவே, கிரேக்க-ரோமானிய மதங்களுக்கு முன்னர் எந்த மதம் இருந்தது என்று ஆராய்ந்தால், அது வேதமதம் என்று தெரிகிறது. ஆனால், ஜைன-பௌத்தத் தாக்கங்களினால், அவை உள்ளே மறைந்து, தகவமைத்துக் கொண்ட சிற்பங்களில் மறைந்தன. இருப்பினும், டோனால்ட் ஏ. மெக்கன்ஸி, வேடல் போன்ற அறிஞர்கள் ஆதாரங்களுடன் 150 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக் காட்டினர். ஆனால், ஆங்கில மற்றும் ஐரோப்பிய காலனிய ஆதிக்கம், இந்தியா விடுதலை பெற்றாலும், சோஸியலிஸம் போர்வையில், பலதரப் பட்ட கம்யூனிஸ சித்தாந்திகள், வரலாறு எழுதுதல் மற்றும் சரித்திரவரைவியல் போறவற்றில், தமது சார்புடைய ஆதிக்கத்தினால், இவ்வுண்மைகளை மறைத்தே எழுதினர். அதற்கேற்றப் படியே, பல்கலை, கல்லூரி-பள்ளி  பாடதிட்டங்கள் இருந்தன. இதனால், சரித்திர உண்மைகள் மறைக்கப் பட்டன. இருப்பினும், இத்தகைய விபத்துகள், இயற்கை சீற்றங்கள் முதலியவற்றின் மூலம் வெளிப்படும் போது, தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது[4]. நோட்ரே டேம் தீகிரையானதில் அத்தகைய விசயங்கள் வெளிப்பட்டுள்ளன[5]. அதுமட்டுஅல்லாது, தெய்வநாயகம் போன்ற போலி கிருத்துவவெறி பிடித்த அடிப்படைவாத கட்டுக்கதைகளும் வெளியாகின்றன, முகமூடிகள் கிழிகின்றன.

Cerununnos, three-headed sculpture-pillar

பேகன், ஹெதன் என்றெல்லாம் சொல்லி அவற்றின் சின்னஙள், சிற்பங்கள், பண்டிகைகள் முதலியவற்றை தகவமைத்துக் கொண்டது: யூத, கிருத்துவ மற்றும் துலுக்க மதங்களில், தம் மதம், கடவுள் மற்றும் நம்பிக்கைகளை ஏற்காதவர்களை எதிரிகள், சைத்தான், சாத்தான், பேய்-பிசாசை வணங்குபவர் என்றெல்லாம் சொல்லி, கொல்ல முனைவர்:

  1. pagan, heathen, gentile, என்றால் बुतपरस्त = பேகன், ஹெதன், ஜென்டைல் என்று இழிவாகப் பேசப் படுகிறது.
  2. atheist, skeptic, unbeliever, disbeliever, pagan, secularist = நாத்திகன், நம்பிக்கை இல்லாதவன், கடவுளை எதிர்ப்பவன் என்றெல்லாம் नास्तिक =அர்த்தம் கொடுக்கப்படுகிறது.
  3. Pagan = प्रतिमापूजक = விக்கிர ஆராதனையாளன் அதனால், मूर्तिपूजक = pagan, idolatrous, Gentile, heathenish, பாவி, பாவம் செய்தவன், தூய்மை இல்லாதவன், தீட்டுப் பட்டவன்,
  4. काफिर = infidel, pagan = மதவிரோதி, பகிஷ்கரிக்கப் பட வேண்டியவன், கொல்லப் பட வேண்டியவன் என்றெல்லாம் பொருள் கொடுத்து, வெறுப்பயும், துவேசத்தையும், கொலைவெறியினையும் வளர்த்து வந்தது, வருவது கிருத்துவதுலுக்க மதங்கள் தாம்.

ஆனால், இவையெல்லாம் தானாகவே வந்து விடவில்லை. இவர்களுக்கு முன்னால், கடவுள், நம்பிக்கையாளர்கள் இருந்ததால் தான், அவை பொய், தம்முடையது மெய் என்று சொல்கிறார்கள்.

Cerununnos, three-headed sculpture

திரித்துவம் / திரியேகத்துவம் இடைகாலத்தில் நுழைக்கப் பட்டது: கிருத்துவத்தில் தனக்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, இறையியலோ, புராணமோ இல்லை. அந்தந்த நாடுகளில், அங்கங்குள்ள புராதன, பிரபலமான சின்னகள், பழக்க-வழக்கங்கள், பண்டிகைகள் முதலியவற்றை தகவமைத்துக் கொண்டு, 13-14ம் நூற்றாண்டுகளில் ஒரு மதமாக உருவெடுக்க ஆரம்பித்தது. அந்நிலையில், திரியேகத்துவம் / திரித்துவம் என்ற தத்துவம் இல்லாதிருந்தது. ஆனால், பழங்கால ஐரோப்பிய நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியங்களில் அது முக்கியமாக இருந்தது. இதனால், பைபிள் திருத்தப் பட்டு, அது உள்ளே நுழைக்கப் பட்டது. 1560 உருவ ஆராதனைக்கு எதிரான போராட்டங்களையும் எதிர்த்து, கத்தோலிக்கக் கிருத்துவத்தால், அது ஏற்றுக் கொள்ளப் பட்டுப் பரப்பப் பட்ட்டது. திரித்துவம் / திரியேகத்துவம், மறுமலர்ச்சி போராட்டங்களுக்குப் பிறகு, உயிர்பெற்று, மறுபடியும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இடம் பெற்று பர ஆரம்பித்தன. இதனால்,, இறையியலும் வலுப்பெற்றது. காலனிய ஆதிக்கத்தில், நாடுகளைப் பிடித்த காலத்திலும், அதனை ஆயுதமாக பயன்படுத்தினர். உள்ளூர் கடவளர்களை காப்பியடித்து, அவற்றையே, கிருத்துவின் மறு உருவம், அவதாரம் அல்லது மூத்தேவர், முக்கடவுள் என்றெல்லாம், திரித்துப் பேசி, மக்களை கவர்ந்தனர்.

வேதபிரகாஷ்

20-04-2019

Denevey, three-headed sculpture

[1] MacKenzie, Donald A. Buddhism in Pre-Christian Britain. (1929).

[2] Pettazzoni, Raffaele. The pagan origins of the three-headed representation of the Christian TrinityJournal of the Warburg and Courtauld Institutes (1946): 135-151.

[3] Pettazzoni, Raffaele. The Gaulish Three-faced God on Planetary Vases.in Essays on the History of Religions. BRILL, 1967. 125-135.

[4] வேதபிரகாஷ், நோட்ரே டேம் சர்ச் எரிந்து வீழ்ந்ததும், மூன்று தலை கடவுளின் பற்றிய விவரங்கள் தெரிய வருதலும்!, Posted on ஏப்ரல் 18, 2019.

[5] https://ancientindian.wordpress.com/2019/04/18/notre-dam-church-gutted-revealed-that-it-was-built-on-a-pagan-temple/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: