கேரளாவில் இன்னொரு பிஷப் கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்துள்ளானாம்! பரஸ்பர புகார்கள் கற்பினை மீட்டுத் தராது!

கேரளாவில் இன்னொரு பிஷப் கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்துள்ளானாம்! பரஸ்பர புகார்கள் கற்பினை மீட்டுத் தராது!

Kerala rape - Jalandhar bishop

பிஷப், கன்னியாஸ்திரியை தொடர்ந்து கற்பழித்தது: கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது, என்று தினமலர் இப்பொழுது கூறுகிறது[1]. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தொடந்து அத்தகைய குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்பொழுது, ஊடகங்களில் செய்திகளாக வருவதால், இவ்விவகாரங்கள் தெரிய வருகின்றன. கிறிஸ்தவ மதகுருவான பிஷப் ஒருவர் தன்னை இரண்டு ஆண்டுகளில் 13 முறை கற்பழித்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளார்[2]. அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை 5 பாதிரியார்கள் மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அதே கேரள மாநிலத்தில் ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பிராங்க் முல்லக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்[3]. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. அங்குள்ள தேவாலயத்தில் பணியாற்றியபோது, கடந்த 2014 ஆம் ஆண்டில் தன்னை பிஷப் பிராங்க் முல்லக்கல் [Frank Mullakkal] முதல் முறை கற்பழித்ததாக அந்த கன்னியாஸ்திரி கூறியுள்ளார்[4].

Kerala rape - Jalandhar bishop-2

சர்ச் மறுபடியும் செக்ஸ் விவகாரங்களை மறைக்கப் பார்ப்பது: இதுகுறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, மேஜர் ஆர்ச் பிஷப் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரியிடம் புகார் அளித்துள்ளார்[5]. சர்ச் நிர்வாகம் விசாரணை நடத்தியிருக்கிறது. இதற்கிடையில் கன்னியாஸ்திரியை சமாதானப்படுத்த பிஷப் தரப்பு முயற்சி செய்திருக்கிறது[6]. இதுவே கேவலமான செயலாக இருக்கிறது. 30-40 ஆண்டுகளில் தொடர்ந்து கற்பழிப்பு குற்றங்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், சர்ச்சை சுத்தப் படுவதை விட்டு, மறைத்து, இத்தகைய செக்ஸ் குற்றங்களை மூடி மறைப்பது படுகேவலமாக இருக்கிறது. கன்னியாஸ்திரி சமாதானம் ஆகாததால் பிஷப்தரப்பு காவல்துறை மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறது. பொறுமையிழந்த கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை குறித்து கோட்டயம் எஸ்.பியிடம் புகார் அளித்தார். அதாவது, கன்னியாஸ்திரிக்களை அந்த அளவுக்கு, செக்ஸுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது தெரிகிறது. விபச்சாரியாக இருந்தால், காசு வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்திருப்பாள். ஆனால், பிஷப் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவன், இவ்வாறு, கன்னியாஸ்திரிக்களை வைப்பாட்டிப் போல நடத்திக் கொண்டிருப்பது, அசிங்கமாக இருக்கிறது.

Kerala rape - Jalandhar bishop-4

2014ல் முதன்முதலாக கற்பழித்தது: 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்காக, தன்னை பிஷப் பிராங்க் முல்லக்கல் அழைத்ததாகவும் அப்போது தன்னை மிரட்டி அறை ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்[7]. கற்பழித்ததை வெளியில் சொன்னால், உடலுறவுக்கு தன்னை அழைத்ததாக, உன் மீது புகாரளிப்பேன் அப்போது பிஷப் மிரட்டியதால் யாரிடமும் புகார் அளிக்கவில்லை என்று கன்னியாஸ்திரி கூறியுள்ளார்[8]. அதுமட்டும் இல்லாமல் அடுத்தடுத்து அவருக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் தன்னை அழைத்து பலாத்காரம் செய்ததாகவும் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்[9]. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் 13 முறை தன்னை பிஷப் கற்பழித்ததாக கன்னியாஸ்திரி கூறியுள்ளார்[10].  இங்குதான், விவகாரம் சிக்கலாகிறது. ஒருதடவைக்க்கு மேலாக, கற்பழித்தாலே, விருப்பப்பட்டுதான் உடலுற்றவு கொண்டாள் என்பது போல, சில தீர்ப்புகள் உள்ளன. ஆனால், மனைவியே ஆனாலும், விருப்பம் இல்லாமல், வற்புருத்தி உடலுறவு கொண்டால், அது கற்பழிப்பு என்றும் தீர்ப்புகள் உள்ளன.

Kerala rape - Jalandhar bishop-5

கன்னியாஸ்திரி விருப்பத்தை மீறி, பிஷப் பலமுறைக் கற்பழித்தது: எப்படியாகிலும், கன்னியாஸ்திரி எதிர்த்த போது, அவளது விருப்பத்தை மீறி, பிஷப் செயல் பட்டது தெரிகிறது. மெலும், பொறுப்புள்ள பிஷப் அவ்வாறு, ஒரு கன்னியாஸ்திரியைக் கற்பழித்திருக்கக் கூடாது. ஒரு கட்டத்தில் பிஷப் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறை மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டதாக கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் மறைமாவட்ட நிர்வாகம், தனக்கு வழங்கிய பணிகளையும் பறித்து வேறு இடத்திற்கு மிரட்டி அனுப்பிவிட்டதாகவும் கன்னியாஸ்திரி கூறியுள்ளார். கன்னியாஸ்திரி புகாரை தொடர்ந்து, பிஷப் பிராங்க் முல்லக்கல் மீது கோட்டயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்[11]. இதனிடையே, தனக்கு உரிய நியாயம் கிடைக்காவிட்டால், போப் ஆண்டவரிடம் முறையிடப் போவதாக பாதிக்கப்பட்ட அந்த கன்னியாஸ்திரி கூறியுள்ளார்[12]. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பிஷப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பணியிடமாற்றம் வழங்கப்பட்டதால் தன்னை பழி வாங்க அபாண்டமான புகார்களை கூறுவதாக பிஷப் தெரிவித்துள்ளார்[13]. அதன்படி, அவரும், கன்னியாஸ்திரி மீது போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்[14]. இதனிடையே பிஷப் – கன்னியாஸ்திரி இடையிலான பழக்கம் பரஸ்பரம் ஒப்புக்கொண்டே நடைபெற்றதாகவும், தற்போது பிஷப்புடன் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் உவந்து நிகழ்ந்த உடலுறவை பலாத்காரம் என்று கன்னியாஸ்திரி கூறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kerala rape - Jalandhar bishop-3

சர்ச்சுகள் ஒழுக்கத்தைப் பேணுமா, இல்லை விபச்சார விடுதிகளாக மாறுமா?: பிஷப் – கன்னியாஸ்திரி இடையிலான பழக்கம் பரஸ்பரம் ஒப்புக்கொண்டே நடைபெற்றது, இல்லை என்ற ரீதியில் வாதிப்பது, படு கேவலமாக இருக்கிறது. ஏனெனில், பிறகு, கன்னியாஸ்திரியாக சர்ச்சுகளில் இருக்க வேண்டிய அவசியம் என்ற கேள்வி எழுகின்றது. கன்னியாஸ்திரிக்கள் என்ன, எல்லா பிஷப்புகள், பாஸ்டகள் முதலியோருக்கு, இச்சைத் தீர்க்க நியமிக்கப் பட்ட விபச்சாரிகளா அல்லது இறைப்பணியில் ஈடுபடுத்தப் படவேண்டிய நம்பிக்கையுள்ள சேவகிகளா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால், சர்ச்சுகள், கான்வென்டுகள் முதலிய விபச்சாரக் கூடங்களா என்ற கேள்வியும் எழுகின்றது. தொடர்ந்ந்து, ஆயிரக்கணக்கான, இத்தகைய செக்ஸ் குற்றங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதால், இவற்றை, இந்ந்நாட்டு சட்டப்படி, முறையாக விசாரித்து, நீதிமன்றத்தில், தகுந்த தண்டனை அளிக்கப் பட வேண்டும். இல்லையென்றால், பெண்மையினை சீரழிக்கும் நிறுவனமாக சர்ச்சுகள் கருதப் படும் மற்றும், இந்நாட்டின் பெண்மையும் கெட்டு, சீரழிந்த்து நாறிவிடும்.

வேதபிரகாஷ்

01-07-2018

Kerala priest rape 30-06-2018

[1] தினமலர், கேரளாவில் தொடரும் பாலியல் புகார்கள்பாலியல் தொந்தரவு செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார், பதிவு: ஜூன் 30, 2018 12:08

[2] https://www.maalaimalar.com/News/National/2018/06/30120824/1173541/complaint-filed-by-a-nun-alleging-she-was-sexually.vpf

[3] TamilAsianetNews, தேவாலயத்தில் விபரீதம்! கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்த பிஷப்!, 7/1/2018 2:31:55 PM.

[4] http://tamil.asianetnews.com/india/kerala-nun-alleges-bishop-raped-her-13-times-in-two-yea

[5] விகடன், கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் வன்கொடுமை..! பிஷப் மீது வழக்குப்பதிவு, சிந்து ஆர், Posted Date : 16:01 (01/07/2018)Last updated : 16:01 (01/07/2018)

[6] https://www.vikatan.com/news/tamilnadu/129410-rape-case-filed-against-bishop-in-kerala.html

[7] தினமலர், பிஷப் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார், Added : ஜூன் 30, 2018 11:04.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=2052116

[9] தமிழ்.வெப்துனியா,என்னை மிரட்டி 13 முறை கற்பழித்தார்பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார், Last Modified சனி, 30 ஜூன் 2018 (12:58 IST)

[10] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/kerala-nun-complaint-against-bishop-118063000021_1.html

[11] puthiyathalaimurai.com, மாறி மாறி பாலியல் புகார்: குழம்பி நிற்கும் காவல்துறை, செ.ஏக்நாத் ராஜ், Published : 30 Jun, 2018 10:48 am

[12] The nun said that if she doesn’t get justice from church authorities, she will move the Pope against the accused. Bishop Mullakkal, hailing from Kottayam, was appointed as the Auxillory Bishop of Delhi diocese in 2009 and made the bishop of Jalandhar in 2013.

http://www.puthiyathalaimurai.com/news/india/47708-nun-says-kerala-bishop-sexually-abused-her-multiple-times.html

[13] At the same time, Bishop Mulakkal has also filed a complaint against the nun to Kottayam SP, alleging that nun was blackmailing him after he initiated disciplinary action against her, including transferring her from the present institution. Refusing to obey the orders, she was raising baseless allegations, the Bishop said in his complaint.

Indian Express, Kerala: Nun files rape complaint against Catholic bishop, Published: 30th June 2018 01:58 AM | Last Updated: 30th June 2018 08:14 AM

[14] http://www.newindianexpress.com/states/kerala/2018/jun/30/kerala-nun-files-rape-complaint-against-catholic-bishop-1835850.html

 

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: